siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

மரண அறிவித்தல் திருமதி வீரசிங்கம் தில்லையம்மா 31-08-2021

தோற்றம்  11-05-1928 -மறைவு  31-08-2021 
யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி வீரசிங்கம் தில்லையம்மா.31-08-2021. அன்று  காலமாகி விட்டார். அன்னார் (காலம் சென்ற போலீஸ் உத்தியோகத்தர்) வீரசிங்கம்  அவர்களின் அன்பு மனைவியும்,  சூரியகுமாரன்  வீரசிங்கம், விமலாதேவி 
வேலும்மயிலும்,சந்திராதேவி கணேஸ்வரன், இந்திரகுமாரன்  வீரசிங்கம்  மற்றும் ரஞ்சினிதேவி ஜெயராஜா ஆகியோரின் அன்புத்தாயாரும்,  வேலும்மயிலும் கந்தையா (நல்லையா ), சிவமங்கை சூரியகுமாரன் , கணேஸ்வரன் வைரமுத்து, திரு (லதா) இந்திரகுமாரன், ஜெயராஜா வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மாமியாரும்  ஆவார். 
மற்றும் பிரகாஷ் வேலும்மயிலும், வாகீஷ் 
வேலும்மயிலும், சதீஸ் கணேஸ்வரன், ரதீசன் கணேஸ்வரன், சிந்துஷா சூரியகுமாரன்  செந்தூரன் சூரியகுமாரன், பத்மரதி ஜெயராஜா, பிரணவன் இந்திரகுமாரன் , ஷியாமளன் இந்திரகுமாரன்  ஆகியோரின் பாசமிகு பாட்டியும், சேவியர் பிரகாஷ், லாரா பிரகாஷ், ரெய்னர் பிரகாஷ்  மற்றும்  ஆரன் சதீஸ், எழினி சதீஸ் ஆகியோரின் பூட்டியும்  ஆவார். அன்னாரின்
 இறுதிக்கிரியை 31-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில்   அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் தோப்பு  இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெறும்   இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 தொடர்புகளுக்கு    
சந்திராதேவி கணேஸ்வரன் – மகள்    
    இலங்கை +94777140859
சூரியகுமாரன் – மகன்    
    கனடா +14505101613
விமலா – மகள்    
  கனடா  +19054722549
இந்திரகுமாரன் – மகன்    
    கனடா +15146830209
ரஞ்சினி – மகள்    
    கனடா +14166150386
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால்
  துயருறும்  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை ,பூட்டப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!

நிலாவரை.கொம் செய்திகள் >>>உறவினர்களுக்கு பாணந்துறை போதனா வைத்தியசாலையில் மாற்றி கொடுத்த சடலங்கள்

பாணந்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சடலங்கள் மாறுபட்டுள்ளன.
குறித்த வைத்தியசாலையின் விடுதி எண் 7 இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 89 மற்றும் 93 வயதுடைய இரண்டு பெண்களின் உடல்கள் ஒருவருக்கொருவர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
வர்களின் மொரட்டுவ, பகுதியை சேர்ந்த 89 வயது முஸ்லிம் பெண் கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிரிழந்தார். அவரது உடல் 26ம் திகதி பாணந்துறை வீரசிங்க மாவத்தையில் அவரது உறவினர்களிடம்
 ஒப்படைக்கப்பட்டது.
எனினும், அவரது சடலத்திற்கு பதிலாக பாணந்துறை பகுதியை சேர்ந்த 93 வயதுடைய பெண்ணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு குறித்த சடலம் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் அடக்கம்
 செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், 93 வயதான பெண்ணின் மகள்.30-08-2021. திங்கள்கிழமை (28) தனது தாயின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக பொது சுகாதார ஆய்வாளருடன் வைத்தியசாலைக்கு
 சென்றிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த சடலம் அங்கிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து குறித்த பகுதியில் சற்று பதற்றமான நிலை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
இந்த சம்பவத்தை மூடிமறைக்க வைத்தியசாலை அதிகாரிகள் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொண்டதாகவும், அந்த பெண் தனது தாயின் உடலை கோரி உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், பல்வேறு தரப்பினரின் தலையீட்டிற்குப் பிறகு, வைத்தியசாலை மட்டத்தில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டதில் பிரச்சினை தீர்க்கப்பட்டதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று 
செய்தி வெளியிட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>
திங்கள், 30 ஆகஸ்ட், 2021

நாட்டில் இதுவரை 2,000 ரூபாவை பெறாதவர்ககளுக்கு வெளியான செய்தி

வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிர்வரும் தினங்களில் வழங்க பிரதேச செயலாளர் மட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளபப்படும் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,இதுவரையில் 5 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இத்தொகை வழங்கப்பட்டுள்ளது.இதேவேளை, யாழ் மாவட்டத்தில் 36 ஆயிரம் குடும்பங்களுக்கு தற்போது 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேஷன் கூறினார்.
மொனராகலை மாவட்டத்தில் 48 ஆயிரத்து 602 குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்தார்.இதுவரை மாவட்டத்தில் 6 கோடி 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட நிதி வழங்கப்பட்டிருப்பதாக 
அவர் கூறினார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

நாட்டில் அடுத்த மாதம் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை உச்சம் கொடுக்கும் சூரியன்

நாட்டில் அடுத்த மாதம் அதாவது செப்டெம்பர் 7ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
இந்த விடயத்தை வானிலை ஆய்வு மையம் 28-08-2021.அன்று 
தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று மதியம் 12.11 அளவில் சூரியன் சங்குப்பிட்டி, யாழ்ப்பாணம் பலாலி போன்ற இடங்களில் சூரியனின் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனின் தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் 28-08-2021.அன்று முதல் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது மேலும் அதிகளவில் நீர் அருந்துமாறும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>
சனி, 28 ஆகஸ்ட், 2021

நாட்டில் சீனியின் விலை அதிகரித்ததால் தேநீர் மற்றும் பால் தேநீர் விலை அதிகரிப்பு

இலங்கையில் மூன்று வாரங்களுக்கு போதுமான சீனியே கையிருப்பில் உள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உபதலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் சீனி தட்டுப்பாடு ஏற்பட கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் சீனியின் விலையை குறைக்க முடியாதென சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் 
தெரிவித்திருக்கின்றது.
இதேவேளை, ஒரு கிலோ சீனியின் விலை 200 ரூபாவை கடந்துள்ள நிலையில், தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் 
தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, எதிர்வரும் நாட்களில் சீனியின் விலை மேலும் உயரக்கூடும் எனவும், இதனால் கேக் ஒரு கிலோவின் விலையை 150 ரூபாவால் அதிகரிக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சீனி, பால்மா, முட்டை, உருளை கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான விலைகள் அதிகரித்துள்ளமை, தற்போது பாரிய பிரச்சினைகளை தோற்று வித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>குடும்ப முரண்பாடு காரணமாக பாரிஸில் தந்தையால் மகன் படுகொலை

பாரிஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் குடும்ப முரண்பாடு காரணமாக தந்தை ஒருவரால் மகன் படுகொலை செய்தமை அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.
பாரிஸின் புறநகர் பகுதியான செய்ன்-சன்-துனி மாவட்டத்திற்கு Villemomble பகுதியில் இந்த சம்பவம் கடந்த 20ஆம் திகதி
 இடம்பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் அங்குள்ள வீடு ஒன்றில் கெவின் என அழைக்கப்படும் ஏழு வயது சிறுவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சோபா இருக்கையில் சடலமாக கிடந்துள்ளதை அவதானித்துள்ளனர்.
தலையில் சுடப்பட்டு சிறுவன் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 34 வயதுடைய சிறுவனின் தாயார் கோயிலுக்குச் சென்று வீடு திரும்பிய நிலையில், சிறுவனின் சடலத்தை கண்டு அதிர்ச்சியில் பொலிஸாரை அழைத்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>சம்பூர் நாவலடியில் கோர விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் நாவலடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளும் – பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 
இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர்-சம்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சிவராசா நவநீதன் வயது (28) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்த நபரின் சடலம் தற்போது சம்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பட்டா வாகனத்தைச் செலுத்திச் சென்ற நபரை சம்பூர் பொலிஸார் 
கைது செய்துள்ளனர்.
அத்தோடு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை நாட்டில் உயர்வு புதிய விலை விபரங்கள்

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாகவே, சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
சதொச மொத்த விற்பனை நிலையத்தில் 115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சிவப்பு சீனியின் விலை, தற்போது 120 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு விலை 250 ரூபா வரை அதிகரித்துள்ளது.
இதன்படி புதிய விலை விபரங்கள்
சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 250 ரூபா
சீனி ஒரு கிலோகிராம் 215 ரூபா
உருளை கிழங்கு (இலங்கை) ஒரு கிலோகிராம் 300 ரூபா
உருளை கிழங்கு (இந்தியா) ஒரு கிலோகிராம் 240 ரூபா
பெரிய வெங்காயம் (வெளிநாடு) ஒரு கிலோகிராம் 135ரூபா
சிவப்பு பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 400 ரூபா
 வரை அதிகரித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


மரண அறிவித்தல் வாரித்தம்பி நடராஜா ( பஞ்சட்ச்சரம்) 27.08.21

தோற்றம்-29 04 1940--மறைவு-27 08 2021
கிளிநொசசி பெரியகுளம் கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், கண்டாவளை நவற்கிரி, கொழும்பு  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாரித்தம்பி நடராஜா( பஞ்சட்ச்சரம்)
 அவர்கள் 27-08-2021 வெள்ளிக்கிழமை அன்று கிளிநொசசி யில் 
இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி  தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவலிங்கமணி (சிவலிங்கம் ) அவர்களின் அன்புக் கணவரும்,ஜெபா (இலங்கை ) றதி (லண்டன் ) றஞ்சினி (கனடா) மைதிலி  (லண்டன் ) 
 ஆகியோரின் பாசமிகு தந்தையும், 
 காலஞ்சென்றவர்களான துரைராஜா செல்வராஜா ஜெயரத்தினம் ஞானமணி   வித்திலாமணி  மற்றும் பாலசிங்கம் சின்னமணி ( இலங்கை ) ஆகியோரின் அன்பு மைத்துனரும் காலஞ்சென்றவர்களான பூரணம் சுப்பிரமணியம்  திலகவதி சபாரத்தினம் ஐயாத்துரை கமலாதேவி மற்றும் பூமணி (கனடா) ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால்
  துயருறும்  மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை ,உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!

நிலாவரை.கொம் செய்திகள் >>வியாழன், 26 ஆகஸ்ட், 2021

நாட்டில் தனமல்வில பகுதியில் உணரப்பட்ட நில அதிர்வு குறித்த தகவல்!

தனமல்வில பகுதியில் உணரப்பட்ட நில அதிர்வானது, குறித்த பகுதியின் நிலத்தில் ஏற்பட்டதல்ல என பேராதனை பல்கலைகழகத்தின் புவியியல் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரட்ன தெரிவித்துள்ளார்.இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என 
அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்நில அதிர்வானது இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலையில், நாட்டில் உணரப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இவ்வாறான நில அதிர்வுகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருப்பது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நில அதிர்வு உணரப்பட்டதால், இலங்கைக்கு அருகில் உள்ள பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வுகளுடன் தொடர்புப்படுத்தி ஆராயப்பட்டது.இந்திய மற்றும் அவுஸ்திரேலிய கடற்பகுதிகளில் அந்த சந்தர்ப்பத்தில் பல நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் ஒன்றே இலங்கையிலும் உணரப்பட்டுள்ளது.

இவ்வாறான நில அதிர்வுகள் அரிதாகவே உணரப்படும் என பேராதனை பல்கலைகழகத்தின் புவியியல் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>
புதன், 25 ஆகஸ்ட், 2021

இலங்கை பெண் சுவிஸ் சிறையில் தற்கொலை நான்கு சிறை அதிகாரிகள் மீது வழக்கு

சுவிஸ் சிறையில் தற்கொலைக்கு முயன்று பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இலங்கை பெண் வழக்கில் நான்கு சிறை அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது
இச்சம்பவம் சுவிஸில் ரிமாண்ட் சிறையில் உள்ள ஒரு அறையில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
பேசல் பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த 2018 ஜூன் மாதம் 29 வயதான இலங்கை பெண் ஒருவர் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக மரணமடைந்தார்.
இது தொடர்பான சம்பவம் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் கூற்றுப்படி,
வாகோஃப் ரிமாண்ட் சிறையில் உள்ள ஒரு அறையில் நடந்துள்ளது. டப்ளின் நடைமுறையின்படி குறித்த இலங்கையர் மால்டாவுக்கு வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அவரது புகலிட நடைமுறைக்கு மால்டா தீவு நாடுதான் பொறுப்பு என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜூன் 12ம் திகதி கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்ட அறை ஒன்றில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரது பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிக்கவே இந்த ஏற்பாடு 
எனவும் கூறப்பட்டது.
ஆனால் குறித்த இலங்கையர் அன்று இரவு தமது மேல்சட்டையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சுமார் 4 நிமிடங்களுக்கு பின்னரே இச்சம்பவம் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிய வந்ததுடன், அவர்கள் மேற்பார்வை ஊழியர்களை சிறையின் குறிப்பிட்ட அறைக்கு 
அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் இரு சிறை காவலர்கள் குறித்த இலங்கையரை மீட்டதுடன், மருத்துவ உதவிகளை செய்ய தவறியதாகவே கூறப்படுகிறது. மேலும், அந்த மூவரும் நான்காவது ஒரு பெண் காவலரை உதவிக்கு அழைத்துள்ளனர். இவர்கள் நால்வரும் குறித்த இலங்கையரை நிர்வாண கோலத்தில் விட்டுச் சென்றதாகவே கூறப்படுகிறது.
இதன் பின்னர் சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகே கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவசர மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் சென்றுள்ளது. சுமார் 18 நிமிடங்களுக்கு பிறகு அவசர மருத்துவ உதவிக்குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பித்த 2 நாட்களுக்கு பிறகு அந்த இலங்கையர் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக 
மரணமடைந்துள்ளார்.
தற்போது குறித்த இலங்கையரை மீட்கத்தவறிய அந்த நான்கு மேற்பார்வையாளர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இலங்கையரின் மரணத்தை தடுத்திருக்கலாம் எனவும், அந்த நால்வரும் தங்கள் கடமையை செய்யத் தவறியதால் ஒரு உயிர் பரிதாபமாக பறிபோயுள்ளது என அரசு தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

இலங்கைத் தமிழ்க் குடும்பஸ்தர் அவுஸ்ரேலியாவில் தீ மூட்டித் தற்கொலை

அவுஸ்ரேலியாவில் இலங்கைத் தமிழ்க் குடும்பஸ்தர் தீ மூட்டித் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவத்தில் திருகோணமலையை சேர்ந்த 38 வயதான மூன்று பிள்ளகளின் தந்தை ஒருவரே இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். உள்நாட்டு போர் காரணமாக அவர் சிறு குழந்தையாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாக 
அறியப்படுகிறது.
அதன்பின்னர் 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து புகலிடம் கோரினார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்பன் நகரில் உள்ள Sunshine என்ற இடத்தில் வசித்து வந்த குறித்த நபர் தன்னைத் தானே தீ மூட்டித் தற்கொலை கொண்டதாக கூறப்படுகின்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>நாட்டில் இன்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப. 2மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்
காணப்படும்.
நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

தேவையின்றி யாழில் சுற்றித்திரிபவர்களுக்கு துரித அன்டிஜன் பரிசோதனை

ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் போது யாழ்.நகரில் நடமாடியோருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் தற்போதுள்ள கொரோனா நிலைமையினை 
கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்குச் சட்டம் 
நடைமுறைப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ் நகரில் நடமாடி யோருக்கு யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினரால் அன்டிஜன் பரிசோதனை
 மேற்கொள்ளப்படுட்டது.
யாழ்ப்பாண பிரதேச செயலர் யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினர், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நகரப்பகுதியில் பயணிப்போரை வழிமறித்து அன்ரிஜன் பரிசோதனையை மேற்கொண்டமை
 குறிப்பிடதக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

இலங்கையில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது என தெரிவிப்பு

நாட்டில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என வெளியான தகவல்களை அடுத்து பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
எனினும், நாட்டில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு எதுவும் கிடையாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் அது குறித்து தாமே மக்களுக்கு முதலில் கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.
தாம் மக்களுக்கு நேர்மையாக இருப்பதாகவும், எரிபொருள் விலை உயர்வு குறித்து கூட தாம் முன்கூட்டியே அறிவித்ததாகத் 
தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி நெருக்கடி நிலைமை குறித்தும் தாமே முதலில் நாட்டு மக்களுக்கு அறிவித்ததாகக் 
குறிப்பிட்டுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>
செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

யாழ் சுப்பர் மட பகுதியில் சடலம் அடையாளம் காணப்பட்டது

யாழ்  பருத்தித்துறை சுப்பர் மட பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 
கரவெட்டி இராஜ கிராமம் பகுதியை சேர்ந்த வைரவ நாகரத்தினம் (வயது 78) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  
சுப்பர் மட பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டது.  
குறித்த சடலத்தை அடையாளம் காணும் முயற்சியில் விசாரணைகளை முன்னெடுத்த போது , குறித்த நபர் நெல்லியடி  இராஜ கிராமம் பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் 
காணப்பட்டுள்ளது.  
இதேவேளை குறித்த நபர் 16-08-2021.
அன்றுய தினம் இரவு
 அவ்விடத்திலிருந்து சத்தமாக பாடல்களை பாடிக்கொண்டு இருந்ததாகவும், காலையில் சடலமாக காணப்பட்டதாகவும் அயலவர்கள்
 தெரிவித்தனர். 
நிலாவரை.கொம் செய்திகள் >>>யாழ் வல்வெட்டித்துறையில் குடும்பத்தகராற்றில் குடும்பஸ்தர் கொலை

வல்வெட்டித்துறையில் 16-08-2021.அன்று குடும்பத்தகராறு காரணமாக இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தந்தையான இளங்குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறையில் 16-08-2021.அன்று 
 நள்ளிரவு 12.30 மணிக்கு  இடம்பெற்ற இச்சம்பவத்தில் , அப்பகுதியை சேர்ந்த  சுப்பிரமணியம் கிருசாந்தன் (30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்ககு அழைத்துச் சென்று அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>காத்தான்குடியில் போலியான இலக்கத்தகடு பொறிக்கப்பட்ட கார்கள் கண்டுபிடிப்பு.

போலியான ஒரே இலக்கத்தகடு பொறிக்கப்பட்ட இரு கார்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.
இதில் ஒரு காரை காத்தான்குடியில் வைத்து மட்டக்களப்பு விஷேட பொலிஸ் பிரிவினர் 16-08-2021.அன்று  கைப்பற்றியுள்ளனர். CP CAI .9272 . இலக்கங்கங்கள் பொறிக்கப்பட்ட காரையே காத்தான்குடியில் வைத்து மட்டக்களப்பு விஷேட பொலிஸ் பிரிவினர் கைப்பற்றி காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த போலி இலக்கம் இரண்டு கார்களுக்கு பொறிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதுடன் இதில் ஒரு கார் காத்தான்குடியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றைய கார் வேறு ஒரு பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்
குறித்த காரின் ஆவணங்கள் காரை வைத்திருந்த காத்தான்குடி நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் தலைமையில் விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும்
 தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் துரிதமாக விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

கைதடி வீதியில் வடமாகாண கல்வி அமைச்சின் பணியாளர் விபத்தில் மரணம்

இன்று கோப்பாய் வீதி விபத்தில் வடமாகாண கல்வி அமைச்சின் பணியாளரான சாந்தி கருணேஸ் என்பவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் கோப்பாய் – கைதடி வீதியில் இடம்பெற்ற கோர விபத்திலேயே குறித்த இளம் குடும்ப பெண் ; உயிரிழந்துள்ளார்.
குறித்த வீதியூடாக மோட்டார் சைக்கிளில் தம்பதியினர் சென்றுகொண்டிருந்த வேளை,  பின்னால் வந்த டிப்பர் வாகனம் அவர்களை முந்தி செல்ல முற்பட போது , மோட்டார் சைக்கிளுடன்  மோதி  விபத்து
 இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது பின் இருக்கையில் இருந்த பெண் டிப்பர் பக்கம் விழுந்தமையால் டிப்பரின் சில்லுக்குள் அகப்பட்டு சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். பெண்ணின் கணவன் மற்றைய பக்கம் விழுந்ததால் , சிறு காயங்களுடன் தப்பியுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 
உயிரிழந்த பெண்ணின் கணவர் இளவாலை காவல்நிலையத்தில் பணியாற்றிவந்த தமிழ் காவல்துறையினரென 
தெரியவந்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 14 ஆகஸ்ட், 2021

அமரர்கள் சுரேஸ்குமார் சுகதீபா 10ம் ஆண்டு நினவஞ்சலி ,14.08.21

திதி 14-08-2021 இன்று  
யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாக்கவும் கோண்டாவில் மற்றும் நவற்கிரியைஆகியோரின்  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  அமரர்கள்( வீரசிங்கம்,தம்பதிகளின் புதல்வன்)  சுரேஸ்குமார்,(சந்திரசேகரம் தம்பதியினரின் புதல்வி) சுகதீபா ( சுரேஸ்குமார்கோண்டாவில்- சுகதீபா.நவற்கிரி )-ஆகியோரின் 
பத்தாம் ஆண்டு நினவஞ்சலி திதி 14-08-2021 இன்று  

அவர்களின்.திதி 14-08-2021 சனிக்கிழமை இன்று   இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள்
காலங்கள் பத்து ஆண்டுகள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்களின்  உருவம் தான் கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்

எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி 1 ஓம் சாந்தி

நிலாவரை.கொம் செய்திகள் >>>