siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 28 மார்ச், 2018

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

நாளை மறுதினம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும் என கல்வி
 அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக 06 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இந்நிலையில் இம்மாணவர்களில் 969 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு
 தெரிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 24 மார்ச், 2018

இலங்கைத் தமிழ் யுவதி ரம்யா இந்தியாவில் பலி


தமிழ்நாடு - பெரம்பலூர் அகதிகள் முகாமில் இருந்து காணாமல் போன இலங்கைப் பெண் ஒருவர் சென்னையில் இடம்பெற்ற விபத்தொன்றில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் அடிப்படையில் பல உண்மைகள் அம்லமாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ரம்யா என்ற 24 வயதான குறித்தப் பெண் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி முதல் காணாமல் போய் இருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை(20) டெல்லியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 
உயிரிழந்தார்.
விபத்தை அடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் படியே குறித்தப் பெண் பெரம்பலூர் முகாமைச் சேர்ந்தவர் என்பதும், அவர் காணாமல் போய் இருப்பதாக முறைப்பாடு பதிவாகி இருக்கின்றமையும் டெல்லி பொலிஸாருக்கு தெரியவந்தது.
இதற்கிடையே ரம்யா டெல்லிக்கு எதற்காக சென்றார்? என்பது குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்தன.
ரம்யாவின் காதலன் இலங்கையில் இருந்து சட்ட விரோத படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
அவரை சந்திக்க ரம்யா முடிவு செய்து இதற்காக அகதிகள் முகாமில் இருந்து வெளியேறி சென்னை சென்றுள்ளார்.
அங்கு ஒரு முகவர் மூலம் தனது பெயரை ஸ்ரீமதி ஹமீரா என மாற்றி போலியாக கடவுச்சீட்டு எடுக்க முயற்சித்துள்ளார்.
பின்னர், டெல்லி சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியா செல்லவும் 
தயாராகி இருக்கிறார்.
இந்த நிலையில், டெல்லியில் காரில் சென்று கொண்டிருந்த போதுதான் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 22 மார்ச், 2018

திருமண நிகழ்வு நடைபெற்ற வீடில் குப்பிளான்னில் திருட்டு

யாழ். குப்பிளான் தெற்குப் பகுதியில் திருமண நிகழ்வு நடைபெற்ற வீடொன்றில் திங்கட்கிழமை(19) இரவு விசித்திரத் திருட்டு இடம்பெற்றுள்ளது.
குப்பிளான் பகுதியைச் சேர்ந்த மணமகனுக்கும், பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த மணமகளுக்கும் பெரியோர்கள் திருமணம்
 நிச்சயித்திருந்த நிலையில் திங்கடகிழமை முற்பகல் சுபவேளையில் சுழிபுரத்திலுள்ள ஆலய மண்டபமொன்றில் திருமண நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.
குறித்த திருமண நிகழ்வு பெருமளவானோர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற நிலையில் திருமண நிகழ்வின் போது
 மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் திருமணப் பரிசாக வழங்கிய பெருந்தொகைப் பணம் குப்பிளானிலுள்ள மணமகளின் வீட்டிலுள்ள சுவாமி அறையில் பையொன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் இனம் தெரியாதோர் குறித்த பணத்தை முழுமையாக கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மணமக்கள் உள்ளிட்டோர் திருமண நிகழ்வில் பங்கேற்ற அசதியிலிருந்த வேளையிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. 
குறித்த வீட்டில் பெறுமதியான வேறு 
பொருட்கள் காணப்பட்ட போதும் திருமணத்தில் சேர்ந்த பணத்தை மாத்திரம் கொள்ளையடித்துச் சென்றமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு 
குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





புதன், 21 மார்ச், 2018

ஆணின் சடலம் யாழ் வடமராட்சி கடற்கரையில் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடற்கரையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மத்திய வயதுடைய ஆண் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளது.
அண்மையில் நயாரு பிரதேசத்தில் கடலுக்கு சென்ற 3 மீனவர்கள் காணாமல் போயுள்ளமையினால்
குறித்த மீனவர்களில் ஒருவடைய சடலமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும்
அதற்கும் இதற்கும் தொடர்பில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 20 மார்ச், 2018

அமரர் திரு கந்தையா. சுப்பிரமணியம். 7ம் ஆண்டு நினைவஞ்சலி..20.03.18

மண்ணில் : 06- பெப்ரவரி  1932 — விண்ணில் : 06 ஏப்ரல்  2011
திதி : 20 மார்ச்.2018.இன்று 
யாழ். மாவிடடபுரத்தை  பிறப்பிடமாகவும், நவற்கிரி  புத்தூரை  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த.அமரர்  திரு .(ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணியம்.மணி அண்ணர்.மணிஐயா ) அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏழாண்டு போயும் என்றும் எம்மோடு இருக்கும் ஏந்தலே!!
எம்மை விட்டேகி ஏழாண்டு போனதையா! 
ஏங்கியே அழுகின்றோம் ஏந்தலே!! 
தாங்கியே பிடிக்க தலைவனின்றி 
தவிக்கின்றோம் ஐயா!
வாங்கியே நீ வைத்தவற்றில் 
உன் வண்ணவதனம் கண்டு 
ஒங்கியே அழுது ஒவ்வொரு நாளும் 
இருக்கின்றோம் ஐயா!
உறவி தந்து! உணர்வு தந்து!! 
எம்மோடு ஒன்றாய் இருந்த உத்தமனே! 
உன்னால் விளைந்த வித்துகள் 
இப்போ விருட்சமாய் வெளிவரும் வேளையில்
உன் வெப்பம் தணிக்கும் இவ் விருட்சத்தை விலக்கி 
விண்ணுலகு ஏன் தான் 
விரைந்திட்டாய் ஐயா!
வளங்கள் எதுதான் வாழ்வில் இருந்தாலும் 
வாழ்க்கை எமக்குத்தந்த வள்ளல் நீர் 
வாணுலகு போய் ஏழாண்டு வந்தும் 
வாடிவதங்கி வாட்டமுடன் 
வையமிங்கு வாழ்கின்றோம் 
மணி ஐயா!
வாய்ப்புக் கிடைத்தால் வாண் விட்டு 
வையம் வந்து உன் வண்ணமுகம் காட்டி 
உன் கன்றுகளோடு கைகோர்த்து 
களி கொள்ள மாட்டாயா எங்கள்
 தலைவனே!
ஏழாம் ஆண்டில் நினைத்து நீர் மல்கும்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை 
 பிரதிக்கின்றோம் ..ஓம் சாந்தி ..ஓம் சாந்தி..ஓம் சாந்தி
 என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்
 வாழும்   மனைவி, பிள்ளைகள் 
,மருமக்கள்  சகோதரர்கள்
      தகவல் குடும்பத்தினர் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




சனி, 17 மார்ச், 2018

இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுப்பிட்டிப் பகுதியில் ஒருவர் பலி


யாழ். சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில்(16-03-2018) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்தலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து இரவு சுமார் 8.45 மணியளவில் சிறுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம் எதிரே சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் அச்சுவேலி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மற்றயவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதுக்குடியிருப்பில் இளம் பெண் தூக்கில் தொங்கி மரணம்!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில்.16.03.2018. நேற்றுப் பிற்பகல் இளம் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.புதுகுடியிருப்பு 10ஆம் வட்டாரம் புதிய குடியிருப்பை சேர்ந்த 24 வயதுடைய கபிதரன் துர்க்கா என்னும் இளம் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் புதுக்குடியிருப்பு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


யாழில் பாடசாலையில் விழுந்த மாணவன் ஸ்தலத்திலேயே மரணம்!!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலையில் தடுக்கி விழுந்த சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த இச் சம்பவத்தில் சுளிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கும் சுளிபுரம் மத்தி சுளிபுரத்தை சேர்ந்த பிரபாகரன் கரிகரன் எனும் 8 வயது பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவர்.

குறித்த சிறுவன் நேற்றைய தினம் பாடசாலைக்கு சென்ற போது அங்கு புத்தகப்பை தடுக்கி கீழே வீழ்ந்துள்ளார். இதன்போது மயக்கமடைந்ததால் பாடசாலை ஆசிரியர்கள் குறித்த மாணவனை உடனடியாக சங்கானை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.எனினும், சிறுவன் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் போதே வழியில் உயிரிழந்து விட்டதாக சங்கானை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மாணவனது சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பிரேத பரிசோதனைகளின் பின்னர் மாணவனின் சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மூன்று நாட்களாக அநாதரவாக வீதியில் நின்ற சிறுவன் பொலிஸாரால் மீட்பு!!

பெற்றோரால் வெறுக்கப்பட்ட சிறுவன் மூன்று தினங்களாக தம்புள்ளை பேருந்து நிலையத்தில் தங்கியிருந்த நிலையில், குறித்த சிறுவனை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.12 முதல் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் பேருந்து நிலையத்தில் இருப்பதாக
 தம்புள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட தொலைபேசிக்கு கிடைத்த தகவலையடுத்தே பொலிஸார் சிறுவனை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு 
அழைத்துச் சென்றுள்ளனர்.
தம்புள்ளை பேருந்து நிலையத்திற்கு பின்னால் வசித்து வந்த இளைஞர்கள், உணவு கொடுத்து, பொலிஸார் வரும் வரை சிறுவனை கவனித்துள்ளனர்.சிறுவனை அவரது பெற்றோர் பல முறை சிறுவர் இல்லங்கள் மற்றும் விகாரைகளுக்கு அழைத்துச் சென்று விட்டுள்ளதாக சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்
 தெரியவந்துள்ளது.
தாயும், தந்தையும் தன்னை தாக்கி வீட்டை விட்டு விரட்டுவதாகவும் மது போதைக்கு அடிமையான தந்தையிடம் இருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சிறுவன் பொலிஸாரிடம்
 கூறியுள்ளார்.இதன்போது சிறுவன் அணிந்திருந்த கிழிந்த ஆடைகளுக்கு பதிலாக பொலிஸ் பரிசோதகர் சம்பத் விக்ரமரத்ன தனது பணத்தில் புதிய ஆடைகளை கொள்வனவு செய்து கொடுத்துள்ளார். விகாரை அல்லது சிறுவர் இல்லத்தில் வசிக்க விரும்புவதாக சிறுவன்
 தெரிவித்துள்ளார்.
சிறுவனின் பெற்றோரை அழைத்து வாக்குமூலம் பெற்ற பின்னர், நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தி, சிறுவனின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல் திருமதி கதிர்காமநாதன் முத்தம்மா.16.03.18

பிறப்பு : 7 ஓகஸ்ட் 1934 — இறப்பு : 16 மார்ச் 2018
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வயாவிளானை வசிப்பிடமாகவும், நவக்கிரியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் முத்தம்மா அவர்கள் 16-03-2018 வெள்ளிக்கிழமை 
அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன்(கிளியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிறிதரன், ரஞ்சினி, கோதை, செல்வி, கலா, காலஞ்சென்ற ஈழத்தமிழன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பராசக்தி, நடேசலிங்கம், நாகபூசனி, குமரகுரூபரன், காலஞ்சென்ற கனகராஜா, தவராஜா, செல்வராஜா, தற்பராதேவி, இந்திராதேவி, ரேணுகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சத்தியதேவி, கருணானந்தன், சந்திரகாந்தன், சிவகுமார், தங்கதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுமங்கலி, வித்தகி, மூகாம்பிகை, யசனி பிரபாகரன், தர்சினி அமுதீசன், தர்சன், கோபுரன், சுபீட்சன், சுபாங்கினி, லக்சன், அபிராமி, கஜிதா, கஜானா, சாருகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிநயா, சஞ்சய், அக்‌ஷயா, அனேகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நவக்கிரி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி: +94212232083
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 15 மார்ச், 2018

திருமதி பரமலிங்கம்.புஸ்பமலர் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 15.03.18

....உதிர்வு:15.03.2017  
யாழ்  நீர்வேலியை பிறப்பிடமாகவும்  கனடாவை   வசிப்பிடமாகக்கொண்ட  திருமதி:பரமலிங்கம்.புஸ்பமலர். 
....அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 15.03.2018.இன்று 
எங்கள் வாழ்வில் ஒளியேற்றி 
பிரகாசிக்க வந்துத்த அம்மாவே  
என்றென்றும் நீர் எம்முடனே 
வாழ்ந்திருப்பீர் என்றிருந்தோம் 
இடைநடுவில் எமைவிட்டு 
இறைவனடி சென்றீரோ

நாம் நிலைகுலைந்து நிற்கையிலே 
வாழ்க்கைப் படகிற்கு துடுப்பாக நின்றீரே
எல்லோருக்கும் வழிகாட்டி 
எமை வாழ வைத்தீரே 
பண்பிலே உயர்ந்தவராய்  
பழகுவோர்க்கு இனியவராய் 
பாசமுள்ள சகோதரியாய் 
அன்பிலே சிறந்தவராய் 

உற்றார் உறவுகளை உன் பக்கம் ஈர்த்தவனே 
எமை விட்டு சென்றின்று ஓராண்டு ஆனதுவே 
ஓராண்டென்ன ஓராயிரம் 
ஆண்டானாலும்
மறவாதையா உங்கள் நினைவு 
ஓராண்டென்ன உயிருள்ளவரை 
அஞ்சலிப்போம் உம் ஆத்மா சாந்திபெற
ஓம், சாந்தி, சாந்தி.
உன் பிரிவால் துயறுரும் பிள்ளைகள் ,மருமக்கள் 
பேரப்பிள்ளைகள் உற்றார்  உறவினர்கள்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
தகவல்.
குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 12 மார்ச், 2018

சைக்கிளுடன் சேர்த்து கரவெட்டியில் ஆலய கேணியில் சடலம் மீட்ப்பு

ஆலயக் கேணி ஒன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப்பொலிஸார் தெரிவித்தனர்.
 வெள்ளிக்கிழமை காலையில் சடலமாக மீட்கப்பட்டவர் கரணவாய் கிழக்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி பாலசுப்பிரமணியம் (வயது 56) எனப் பொலிஸார் கூறினர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதா வது,
நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை மேற்படி குடும்பஸ்தர் மாடு அவிழ்ப்ப த ற்காக வயலுக்குச் சென்றவர் இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் அவ ரைத்
 தேடியுள்ளனர்.
இந்நிலையில் கரவெட்டி கிராய் பிள்ளை யார் கோவில் கேணியில் மோட்டார் சைக்கி ளுடன் குடும்பஸ்தர் சடலமாக காணப்பட்ட தையடுத்து நெல்லியடிப் பொலிஸாருக்கு தக வல் வழங்கப்பட்டது.
தடயவியல் பொலிஸார் தடயம் பெற்றது டன் கரவெட்டி மரணவிசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை 
மேற்கொண்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தர விட்டார்.மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஞாயிறு, 11 மார்ச், 2018

நாட்டில் பேஸ்புக், வட்ஸ் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டம்

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டமுறைகளை நடைமுறைப்படுத்தஅரசாங்கம் தயாராவதாக சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரதெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசிய போது அவர் குறித்தவலைத்தளங்கள் ஜெர்மன் மற்றும் பிரித்தானியாவில் எவ்வாறு இயக்கப்படுகின்றன என்பதைஆராயுமாறு தம்மை பணித்துள்ளதாக
 அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையிலேயே புதிய சட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் மத்தும பண்டாரதெரிவித்துள்ளார்.
இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலேயே அமைச்சர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சின்னத்தம்பி (புளுவப்பா )அப்புவின் இறுதி நிகழ்வு(11/03/18)

நேற்று முன்தினம் மாலை உந்துருளியால் மோதப்பட்டு உயிரிழந்த "புளுவப்பா" என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி அப்புவின் இறுதி நிகழ்வு(11/03/2018)
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




சனி, 10 மார்ச், 2018

காரைநகர், அச்சுவேலி, செட்டிக்குளம் வாகன விபத்துக்களில் மூவர் பலி

காரைநகர், அச்சுவேலி, செட்டிக்குளம் ஆகிய பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவின் காரைநகர் அம்மன் கோயில் வீதியில், அம்மன் கோயில் சந்தி பகுதியில் நேற்று மாலை நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது காரைநகர் பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான மகாலிங்கம் மாணிக்கம் என்ற நபர் காயமடைந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 
உயிரிழந்துள்ளார்.
அதேவேளை அச்சுவேலி பொலிஸ் பிரிவின் நிலாவரை நாவகிரி பாடசாலைக்கு அருகில் வீதி கடவையில் சென்ற பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பாதசாரி மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் காயமடைந்து அச்சுவேலி வைத்தியசாலையில்
 அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் இருந்த பாதசாரி மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நாவகிரி - புத்தூர் மேற்கு பிரதேசத்தை சேர்ந்த 83 வயதான சுதன் சின்னத்தம்பி என்ற முதியவரே சம்பவத்தில் 
உயிரிழந்துள்ளார்.
சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று மரண விசாரணைகள் நடைபெறவுள்ளன. அச்சுவேலி பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் விபத்து; நால்வர் படுகாயம்

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நாலவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற ஜா எல பிரதேசத்தை சேர்ந்த டொல்பின் ரக வாகனமும் மெனிக்பாம் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுமே மெனிக்பாம் கல்லாறு பாலத்திற்கு அருகில் நேருக்க நெர் மோதிக்கொண்டதில் இவ் விபத்து 
ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் வானில் சென்ற இருவருமான நால்வர் படு காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை 
அளிக்கப்பட்டு வருகின்றது.
இவ் விபத்து தொடர்பாக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 8 மார்ச், 2018

சம்பவத்தில் உயிரிழந்ததெல்தெனிய இளைஞனின் குடும்பம் எதிர்நோக்கும் நிலை

தற்போது ஒட்டுமொத்த இலங்கையும் முகம்கொடுத்திருக்கும் பாரிய பிரச்சனைக்கு காரணமாக இருந்தது குமாரசிங்க என்ற அப்பாவி இளைஞனின் மரணம் தான்.கண்டியில் ஒரு சிங்கள இளைஞனை
 முஸ்லிம் இளைஞர்கள் நால்வர் தாக்கியதில் அந்த இளைஞன் 10 நாட்களுக்குப்பின் உயிரிழந்திருந்தார்.அதையடுத்து 
குறித்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த 4 பேரும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கண்டி – திகன, தெல்தெனிய பிரதேசத்தில் 
ஆரம்பித்த பிரச்சினை இன்று நாடளாவிய ரீதியில்
 அவசரகால சட்டம் அமுல்படுத்தும் நிலைக்கு சென்று விட்டது. குறித்த இளைஞனின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்கள், அவரின் குடும்பத்தை நினைத்து பார்த்திருப்பார்களா? அவர்களது குடும்பத்தின் நிலை என்ன? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த குமாரசிங்க என்ற இளைஞனின் குடும்பத்தாரின் கோரிக்கை, அவர்களது கண்ணீர், கவலை சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.இவருக்கு தாய், தந்தை, உடல்நலம் குறைவான மகன் மனைவி மற்றும் சகோதரி உள்ளனர்.உயிரிழந்த இளைஞனின் மனைவி கருத்து தெரிவிக்கும் போது;
‘நான் வெளியில் எங்கும் வேலைக்கு செல்லவில்லை. எனக்கு சுகமில்லாத மகன் ஒருவர் உள்ளார். அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும்.’ என குறிப்பிட்டுள்ளார்.கணவனை இழந்த நாளில் இருந்து தனது குடும்பத்தை பாதுகாக்கும் பொறுப்பை இவர் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அமெரிக்கா பிரஜை ஒருவர் கிளிநொச்சியில் அடித்துக் கொலை

அமெரிக்கா நாட்டின் குடியுரிமை பெற்ற தமிழர் ஒருவர் கிளிநொச்சியில் தாக்கப்பட்டு படுககொலை செய்யப்பட்டுள்ளார்.அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று இரவு குறித்த நபர்
 தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சிபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி – கனகபுரம், செல்வாநகரை பிறப்பிடமாகக் கொண்ட 71 வயது இரத்தினம் துரைசிங்கம் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர் அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெற்றவர் எனவும், அவரது பிள்ளைகள் கனடாவில் வாழ்வதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் அவரது காணியில் அமைந்துள்ள வீட்டினைப் பார்வையிட வருவதாகவும், அவ்வாறு வந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 7 மார்ச், 2018

பேஸ்புக், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடை

வன்முறையின் உச்சம் இலங்கை பூராகவும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பேஸ்புக், வட்ஸ்அப், பேஸ்புக் மெசன்ஜர் ஆகிய பிரான சமூக வலைத்தளங்கள்
 உடன் அமுலுக்கு
 வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளன.இலங்கையில் பல பகுதிகளில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் வேகமாக தகவல் பரவி வருவதால் நிலைமை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து சமூக வலைத்தளங்களை உடன் நிறுத்த நடவடிக்கை
 எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் வைபர், ஐ.எம்ஓ போன்ற உரையாடல் செயலிகள் வழமை போன்று செயற்பட்டு வருகின்றன.பேஸ்புக், வட்ஸ்அப் நிறுத்தப்பட்டமையால் இலங்கை பயனர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக 
தெரிய வருகிறது.
வன்முறையை தூண்டும் கருத்துக்கள் வெளியிடுவதன் காரணமாக பேஸ்புக் முடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கைக்களுக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர்
 குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் 
கருத்து வெளியிட்டார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


இணைய சேவைகள் கண்டியில் துண்டிப்பு!

கண்டி மாவட்டத்தில் அலைபேசிகளினூடான இணைய சேவைகளை இடைநிறுத்துமாறு தொலைத்தொடர்புகள்
 ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.மறு அறிவிப்பு வரும் வரை குறித்த இணைய சேவைகள் இடைநிறுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 3 மார்ச், 2018

வயது முதிர்ந்தவர் யாழ் கொட்டடிப் பகுதியில் ஒருவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் வயது முதிர்ந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலையே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த நபர் யாழ்ப்பாணம் கொட்டடிப்பகுதியிலுள்ள இரும்புக்கடை ஒன்றின் உரிமையாளர் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது இரும்புக் கடையின் பின்புறமாகவே அன்னார் சடலமாக
 மீட்கப்பட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>