siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 28 டிசம்பர், 2019

வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த யாழ் இந்துவின் மைந்தர்கள்

நேற்றைய தினம்(.28.12,19) வெளியாகியுள்ள 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் கணிதம், உயிரியல், வர்த்தகம் ஆகிய துறைகளில் சாதனை படைத்துள்ளனர்.கணிதம், 
உயிரியல், வர்த்தகம் ஆகிய துறைகளில் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் முதலிடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர்.உயிரியல் பிரிவில் கிருசிகன் ஜெயனாந்தராசா 3 ஏ சித்திகளைப் பெற்று யாழ். மாவட்டத்தில் 1ஆம் இடத்தினையும் தேசிய ரீதியில் இரண்டாவது
 இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.கணிதப்பிரிவில், ரவீந்திரா யதுசன் எ3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட 
மட்டத்தில் 1ம் இடத்தினையும், தேசிய ரீதியில் 12ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.வர்த்தக துறையில், 
சிவானந்தம் ரகுராஸ் 3 ஏ சித்திகளைப் பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 107ஆவது இடத்தினையும் பெற்றுள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 26 டிசம்பர், 2019

மரண அறிவித்தல் அமரர் ஆறுமுகம் முத்தம்மா (பெத்தாச்சி) -25,12.19

தோற்றம்--06.02.1923 (96 வயது)  மறைவு ,25.12-2019 
யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாக்கொண்ட                 
அமரர் ஆறுமுகம் முத்தம்மா  (பெத்தாச்சி) அவர்கள் 25-04-2019 புதன் கிழமை அன்று காலமானார். அன்னார், 
  காலஞ்சென்ற அமரர்  ஆறுமுகம்  அவர்களின் அன்பு மனைவியும்   காலஞ்சென்றவர்களான
மாரிமுத்து   தம்பதிகளின் புத்திரியும்   காலஞ்சென்றவர்களான பரிமளம்.வேலுப்பிள்ளை,சின்னத்துரை.பாலா ,சிங்கம்   மற்றும் பார்க்கியம் ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவர் நவரத்தினம்.ஞானமணி (சின்னக்கிளி) ஆகியோரின் 
அன்புத்தாயாரும் ஆவர் 
 வசந்தகுமார்    மலர்வதான  சுகந்தி   ஆகியோரின் அன்புச் சித்தியாரும்  , 
சரிதா  கீர்த்தன் கீர்த்தி லவன்சி  ஆகியோரின்அன்புப் பேத்தியம் ஆவார் 
 அன்னாரின் இறுதிக்கிரியை 27,-12-2019 வெள்ளிக் கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
வீட்டு முகவரி: 
(எல்லாளன் வீதி ) 
நவற்கிரி .புத்தூர் 
-----------
தொடர்புகளுக்கு

0094,771179415,

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 24 டிசம்பர், 2019

இரணைமடுவின் 10 வான் கதவுகள் திறப்பு கிளிநொச்சி மக்களுக்கு எச்சரிக்கை

வட மாகாணத்தின் மிகப்பெரும் நீர்ப்பாசன குளமான கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 14 வான்கதவுகளில் 10 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சீரற்ற காலநிலை
 நிலவி வருகின்றது.இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த 18.12.19,ஆம் திகதி இரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறந்து விடப்பட்டன.இந்த நிலையில், தற்போது பத்து வான்கதவுகள்
 திறக்கப்பட்டுள்ளதுடன், தாழ் நிலப்பகுதிகளில் வசிப்போரை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 20 டிசம்பர், 2019

மரண அறிவித்தல் அமரர் கேது சிகாமணி பாக்கியம் -18,12.19

 உதிர்வு -18,12.2019
யாழ் சுழிபுரத்தைப்  பிறப்பிடமாகவும்,சுதுமலைதெற்கு மானிப்பாயை  வசிப்பிடமாகக்கொண்ட அமரர்  கேது சிகாமணி பாக்கியம் அவர்கள் ,18,12.2019.புதன் கிழமை அன்று இறைபதம் அடைந்தார் அன்னார்,காலஞ்சென்ற
ராமுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும் காலஞ்சென்ற வெற்றிவேலு கேது சிகாமணி (கேதீஸ்வரம்)அவர்களின்  அன்பு மனைவியும் காலஞ்சென்ற வெற்றிவேலு செல்லாச்சி 
தம்பதியினரின் மருமகளும் 
நகுலேஸ்வரன் (கனடா )முத்துலக் ஷ் மி  (பிரான்ஸ்)  விமலேஸ்வரன் (சுதுமலை) புஸ்ப லக் ஷ்மி  (சுதுமலை) 
இராஜ லக் ஷ் மி(லிங்கம் வசந்தி.சுவிஸ் ) ஜெதீஸ்வரன் (வவனியா ) அவர்களின் பாசமிகு தாயாரும்.
பராசக்தி (கனடா ) நீதிராசா. (பார்த்தசாரதி பிரான்ஸ்) இராசநாயகி (சுதுமலை)  கனகலிங்கம்(லிங்கம் .சுவிஸ் ) 
நந்தினி (வவனியா ) காலஞ்சென்ற தேவதாசன் அவர்களின் பாசமிகு  மாமியாரும் ஆவார் 
அன்னாரின்  இறுதிக்கிரிகைகள் 23.12.2019.திங்கட்கிழமை அன்று காலை 10.மணியளவில் 
சுதுமலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடன் தகனக்கிரிகைக்காக  
தாவடி இந்து மயானத்தில் நல்லடக்கம் 
செய்யபப்டும்  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 19 டிசம்பர், 2019

மயிலிட்டி கடலில் கடற்படையிடம் சிக்கிய பெரும் தொகையான கேரளக் கஞ்சா

யாழ் மயிலிட்டி மற்றும் வல்வெட்டித்துறை இடையேயான கடற்பகுதியில் இன்றையதினம் பெருமளவு கேரள கஞ்சாப் பொதிகளை கைப்பற்றியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.முன்னதாக மயிலிட்டி மற்றும் வல்வெட்டித்துறை கடற்பரப்புக்கிடையில் மூன்று பொதிகள் அடங்கிய கேரள கஞ்சாவை கடற்படை 
கைப்பற்றியிருந்தது
.இதனையடுத்து வல்வெட்டித்துறை கடற்பகுதியில் மிதந்து 
சென்ற ஐந்து பார்சல்கள் அடங்கிய கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றியது. இவை ஒவ்வொன்றும் 70 கிலோ நிறையுடையவை என்றும் 15 சிறிய பொதிகளில் சுற்றப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்தது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.இதேவேளை இந்த சம்பவத்தில் எவரும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் 
எதுவும் இல்லை.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 17 டிசம்பர், 2019

கரிக்கட்டை பகுதியில் பவுஸர் வண்டியுடன் நேருக்கு நேர் மோதிய கார்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் கரிக்கட்டை பகுதியில் ​நேற்று (16.12.19) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.எரிபொருள் ஏற்றிச் செல்லும் பவுஸர் ஒன்றுடன், கார் ஒன்று மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முந்தல்
 பொலிஸார் தெரிவித்தனர்.கொழும்பு மாலபே, தலவத்கொட பகுதியைச் சேர்ந்த நிசாந்த மன்சுல சில்வா (வயது 43) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்
 குறிப்பிட்டனர்.கொழும்பில் இருந்து பாலாவி சீமெந்து தொழிற்சாலைக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுஸரும், அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசுக் கார் ஒன்றும் மோதிக்கொண்டதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.விபத்து 
இடம்பெற்ற போது குறித்த காரில் ஐவர் பயணித்துள்ளதுடன், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஏனைய நால்வரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்
 பொலிஸார் ௯றினர்.குறித்த காரை செலுத்திச் சென்ற சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையே விபத்துக்கு காரணமென 
மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்துச் சம்பவம் தொடர்பில் பவுஸர் வண்டியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம்செய்தி >>>


மரண அறிவித்தல் திரு குணராஜசிங்கம் சிவகஜன்.15,.12.19

மலர்வு  -10 09 1987- உதிர்வு -15 12. 2019
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு குணராஜசிங்கம் சிவகஜன் அவர்கள் 15-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார்,திரு திருமதி  குணராஜசிங்கம் சிவமலர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சிவகணேஸ், பஞ்சவர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், டமித்தா அவர்களின் அன்புக் கணவரும், சிந்துஜா(ஜேர்மனி), சிவசுதன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சிவகரன், சுதாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: மனைவி
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு19th Dec 2019 5:00 PMபார்வைக்கு Get DirectionThursday, 19 Dec 2019 5:00 PM - 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canadaகிரியை Get DirectionFriday, 20 Dec 2019 8:00 AM - 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
 குணராஜசிங்கம் - அப்பா.Mobile : +9475090569 சிந்துஜா - சகோதரி-Mobile : +4915218724325 .டமித்தா - மனைவி.Mobile : +16475719879 பிரபாகரன் - மாமா.Mobile : +14165204221- செல்வரத்தினம் - 
(தாத்தா)Mobile : +14169384118
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஞாயிறு, 15 டிசம்பர், 2019

கோர விபத்து.சாவகச்சேரியில் காரை மோதித் தள்ளிய ரயில்

யாழ் சாவகச்சேரி – சங்கத்தானைப் பகுதியில் ரயில் பாதையைக் கடக்க முயற்சித்த கார் மீது, ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.பொறுப்பற்ற விதமாக ரயில் கடவையை கடக்க முயற்சித்த
 நிலையில் கொழும்பிலிருந்து வந்த ரயில் மோதியே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் 
காரில்பயணித்த
  இருவர் சிறிய காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு
 வருகின்றனர்.

வெள்ளி, 13 டிசம்பர், 2019

திருநாவற்குளத்தில் கார்.மோதி மூவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்

வீதியோரத்தில் நின்றவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.குறித்த சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில்
 இடம்பெற்றுள்ளது.வவுனியா, தாண்டிக்குளம் பகுதியிலிருந்து, காளி கோவில் வீதியில் குருமன்காடு நோக்கிச் சென்ற கார் திருநாவற்குளம் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானது.ஆலயத்துக்கு அருகிலிருந்த 
மரக்கறிக் கடை முன்பாக மூன்று மோட்டர் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டது. இதன்போது அவ்விடத்தில்
 நின்ற மூவரும் படுகாயமடைந்தனர்.குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாபாரி மூலையில் பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த மாணவன் தோட்டக் கிணற்றில் தவறி வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் நேற்று (12.121.19.) மாலை இந்த துயரச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது.பருத்தித்துறை வியாபாரி மூலையைச் சேர்ந்த பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலய மாணவணான ஜெகன் ஆனந்த் (17) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
மாணவன் பட்டம் ஏற்றச் சென்றிருந்த போதும் நீண்ட நேரமாகியும் காணவில்லை என பெற்றோர், உறவினர்களும், நண்பர்களும் பல இடங்களிலும் தேடியுள்ளனர். ஆயினும் மாணவன் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.இந்நிலையில், தோட்டக் காணியொன்றில் இருந்த கிணற்றில் மாணவன் விழுந்திருப்பதை அவதானித்து அவசரநோயாளர் காவு வண்டிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மாணவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவனின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பிரிசோதனைகளின் பின்னர் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


தாயார் மீது மோதிய காரை ஆவேசத்துடன் தாக்கிய சிறுவன்

தனது தாய் மீது மோதிய காரை கடும் கோபத்துடன் தாக்கும் சிறுவனின் காணொளி  தீயாகப் பரவி வருகின்றது.குறித்த சம்பவத்தினை அருகில் இருந்து பார்த்தவர்கள் காணொளி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.இது தற்போது 
வைரலாகப் பரவி வருகின்றது. தாய் மீது அதிக பாசம் கொண்ட சிறுவனின் செயலும் அனைவரையும் மனம் உருக வைத்துள்ளது.இறுதியில் காரில் மோதிய நபரே அவர்களை அழைத்து சென்றுள்ளர். குறித்த 
கார் ஓட்டுனரை சமூகவாசிகள் 
திட்டி வருகின்றனர்.
சிறுவனும், அவரின் தாயும் பாதசாரி கடவையில் கடக்கும் போதே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

செவ்வாய், 10 டிசம்பர், 2019

பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரித் தயாரிப்புகளின் விலைகள் குறைப்பு

ஜனவரி 1ம் திகதி தொடக்கம், பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரித் தயாரிப்புக்களின் விலைகளை 10 சதவீதத்தினால் குறைக்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன அனைத்து பேக்கரி உரிமையாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.இதற்கு முன்னர், 17 சதவீதமாக இருந்த வற் வரி 
டிசம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் குறைக்கப்பட்டது. இதன் பலன்களின் ஒரு பகுதி பாவனையாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.இதற்கு முன்னர், 10 இலட்சம் ரூபாவாக அறவிடப்பட்ட வரித்தொகை
 தற்போது இரண்டு கோடி 50 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 99 சதவீதமான பேக்கரி 
உரிமையாளர்கள் வற் வரியிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன
 மேலும் தெரிவித்தார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 1 டிசம்பர், 2019

உருத்திரபுரம் பகுதியில் மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாப மரணம்

கிளிநொச்சி சிவநகர் உருத்திரபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி யாழ். பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சியை சேர்ந்த 22 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிவநகர் பகுதியில் அமைந்துள்ள தந்தைக்குச் சொந்தமான
 அரிசி ஆலைக்கு இன்று காலை வெள்ள நீரை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்ற முற்பட்டபோது மின்சாரம்
 பாய்ந்ததில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின் தாக்கத்திற்குள்ளான குறித்த இளைஞனை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதே, இவ்வாறு உயிரிழந்துள்ளார். 
குறித்த சம்பவம் தொடர்பாக, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>