siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 28 ஜூலை, 2017

துன்னாலை பகுதியில்பொலிஸ் அதிகாரி மீது இளைஞர் குழு தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரி மீது இளைஞர் குழுவொன்று 27.07.2017 தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ். துன்னாலை பகுதியில் வைத்து 3 இளைஞர்கள் கொண்ட குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொடிகாமம் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக
 தெரியவந்துள்ளது.
இதேவேளை. இத் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது கடமையை முடித்து விட்டு பொலிஸ் அதிகாரி வீடு திரும்பும் போதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக 
குறிப்பிடப்படுகின்றது.
மேலும், தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 27 ஜூலை, 2017

மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேரூந்து விபத்து

இன்று அதிகாலை மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசுப் பேருந்து ஒன்று கல்லாறு பாலத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பயணிகள் எவருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை. ஆனால் பாலமும் பேருந்தும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
சாரதியின் கவலையீனமே இவ் விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 19 ஜூலை, 2017

இனந்தெரியாதோர் யாழ். ஆசிரியர் மீது தாக்குதல்!!

வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியரொருவரை வழிமறித்து இனந்தெரியாதோர் சிலர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று பகல் 1.45 மணியளவில் செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணா எனும் 29 வயதான ஆசிரியர் பாடசாலை நிறைவடைந்ததும் செட்டிக்குளம் ஆசிரியர் விடுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் 
சென்றுள்ளார்.
இதன்போது 25 முதல் 30ற்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு இளைஞர்கள் செட்டிக்குளம் முதலியார்குளம் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் மீது இரும்புக்கம்பியால் கடுமையாக தாக்குதல்
 நடத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள், அந்த ஆசிரியர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்த ஆசிரியர் உடனே தனது சக ஆசிரியர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பினை ஏற்படுத்தி நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
அத்துடன், தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 
மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் கல்லூரிக்குள் பிரவேசிப்பதற்கு தடை!

பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் அண்மையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் மறு அறிவித்தல் வரை கல்லூரிக்குள் பிரவேசிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள முடிவினை ஏற்றுக் கொள்வதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் 
தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இது தொடர்பாக முழுமையான விசாரணைகளின் பின்பு குற்றம் நிரூபிக்கப்படுகின்ற மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தவும், ஒழுக்காற்று குழுவினரின் பரிந்துரைகளையும் நான் 
ஏற்றுக் கொள்கின்றேன்.
இந்த ஒழுக்காற்று குழுவின் தீர்மானத்திற்கு நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றேன். அதே நேரம் குற்றம் நிரூபிக்கப்படுகின்ற மாணவர்கள் தொடர்பாக எந்தவிதமான தயக்கமும் இன்றி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நான் தயாராக
 இருக்கின்றேன்.
ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாக கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைவதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது” என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்
 தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>

பாடசாலை சிறுமியின் உடலை சிதைத்த டிப்பர்; மக்கள் கொந்தளிப்பு!

.தலைமன்னார் பிரதான வீதி கரிசல் சந்தியில் இன்று மாலை இடம் பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
தலைமன்னாரில் இருந்து கரிசல் வீதியூடாக மன்னார் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதியே குறித்த மாணவி உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவி பெரிய கரிசல் கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும்,புதுக்குடியிருப்பில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5ல் கல்வி கற்கும் ஜிப்ரி பாத்திமா றிஸ்னா (வயது-10) என 
தெரிய வந்துள்ளது.
குறித்த மாணவி பாடசாலை முடிந்து பேருந்தில் பெரிய கரிசல் கிராமத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீடு நோக்கிச் சென்றுள்ளார்.
பேருந்தில் இருந்து இறங்கி வீடு நோக்கி சக மாணவனுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது இன்று மாலை 3 மணியளவில் தலைமன்னார் வீதியூடாக மன்னார் நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனம் குறித்த சிறுமி மீது மோதியுள்ளது.
இந்நிலையில் குறித்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
சம்பவ இடத்தில் மக்கள் ஒன்று கூடிய நிலையில் அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதோடு, குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதியையும்,உதவியாளரையும் மக்கள் கடுமையாக தாக்கிய நிலையில் குறித்த இருவரையும் மீட்ட பொலிஸார் மன்னார் வைத்தியசாலையில் 
அனுமதித்தனர்
மன்னார்-தலைமன்னார் வீதி கரிசல் சந்தியில் மக்கள் ஒன்று கூடியமையினால் நீண்ட நேரம் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருந்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் மற்றும் பேசாலை பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் 
கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சடலத்தை பார்வையிட்டு மரண விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர் சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இடம்பெற்ற இ போ.சபைக்கு சொந்தமான பஸ் விபத்தில் 10 மாணவர்கள் படுகாயம்!

கண்டி பிரதான வீதியின் பகதொழுவ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த விபத்து பகதொழுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பகதொழுவையிலிருந்து நோட்டன் பிரிட்ஜ் வரை சேவையில் ஈடுபடும் இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த போது, நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேன நோக்கி பயணிகளை ஏறிவந்த தனியார் பஸ் முந்திச்செல்ல முற்பட்டபோதே இவ் விபத்து 
ஏற்பட்டுள்ளது.
விபத்தில் இ.போ.ச பஸ்ஸில் பயணித்த கடவளை வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம்-6 மற்றும் தரம்-7 சேர்ந்த மாணவ மாணவிகள் 10 பேர் கயமுற்ற நிலையில் கினிகத்தேன வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக இரண்டு மாணவர்களும் 1 மாணவியுமாக மூவர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தனியார் பஸ் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணையை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






திங்கள், 10 ஜூலை, 2017

நேற்றய துப்பாக்கிச்சூட்டால் பருத்தித்துறை பகுதியில் சாலையில் எரியும் ரயர்கள்!

கலிகைச் சந்திக்கும், துன்னாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் சாலையில் ரயர்களைக் கொழுத்தி மக்கள் போக்குவரத்தைத் தடை செய்துள்ளனர்.
பருத்தித்துறை – கொடிகாமம் சாலையூடான போக்குவரத்து இதனால் தடைப்பட்டுள்ளன.
நேற்று பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் துன்னாலை மேற்கைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதனை அடுத்து அப்பகுதியில் சற்று பதற்றமான நிலை எழுந்துள்ளதுடன் அதிகளவான பொலிசார் குவிக்கப் பட்டுள்ளமையும் 
குறிப்பிடத் தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஜனாதிபதித் தேர்தல் 2019இல் நிச்சயமாகியுள்ளதாம் ?

அரசமைப்புத் திட்டத்தின்படி அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2019ஆம் ஆண்டில் நடைபெறவேண்டும் என்பது  நிச்சயமாகியுள்ளது என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அரசமைப்புத் திட்டத்தின் 7ஆவது பிரிவின் 30 (1)ஆம் ஷரத்தின்படி ஜனாதிபதியொருவரின் உத்தியோகபூர்வ காலம் ஐந்து வருடங்களாகும். அதன் 31 (3)ஆம் ஷரத்தின்படி ஜனாதிபதியொருவரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒருமாத காலத்துக்குக் குறையாததும் இரண்டு மாத காலத்துக்கு மேற்படாததுமான கால எல்லைக்குள் புதிய தேர்தல் நடத்தப்படவேண்டும்.
தற்போதைய ஜனாதிபதி 2015 ஜனவரி 8ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்தார். அதன்படி அவரது ஐந்து வருடப் பதவிக்காலம் 2020 ஜனவரி 8இல் முடிவடைகிறது. அதனால் அடுத்த தேர்தல் 2019 நவம்பர் 8இற்கும் டிசம்பர் 8இற்கும் இடையில் நடைபெறவேண்டும். எனவே, 2020 வரை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது என அரசு பகிரங்கமாகக் கூறிவருவது அரசமைப்புக்கு முரணானது.
அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மைத்திரிபால சிறிசேனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டு வருகின்றது.
பொது எதிரணியான மஹிந்த அணி  சார்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்குவார் என பரவலாகப் பேசப்பட்டு வந்தாலும், அரசியலில் இறங்கும் உத்தேசம் தனக்கு இல்லையென அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


யாழ் வடமராட்சி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; பொலிஸார் இருவர் அதிரடி கைது

  பருத்தித்துறை வடமராட்சி கிழக்கு பகுதியில் லொறியின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணல் காடு பிரதேசத்தில் பொலிஸார் உத்தரவை மீறி சென்ற லொறியின் மீது நேற்று பொலிஸார் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் 24 வயதுடைய ஒருவர் பலியானார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல் திரு காங்கேசு சிவராஜா 08.07.17

தோற்றம் : 10 சனவரி 1956 — மறைவு : 8 யூலை 2017 
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காங்கேசு சிவராஜா அவர்கள் 08-07-2017 சனிக்கிழமை
 அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காங்கேசு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை மணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிலா அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சிகா, தசிகரன், தனுசியா, சிதுர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அம்பிகாவதி, நல்லம்மா, பழனி, விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிறஞ்சன், ராகவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதவன், அர்யுனன் ஆகியோரின் 
அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் .
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திப்போம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 11/07/2017, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Friedhof Rosenberg Cemetery, Am Rosenberg 5, 8400 Winterthur, Switzerland. 
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 12/07/2017, 02:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Friedhof Rosenberg Cemetery, Am Rosenberg 5, 8400 Winterthur, Switzerland. 
கிரியை
திகதி: திங்கட்கிழமை 17/07/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Friedhof Rosenberg Cemetery, Am Rosenberg 5, 8400 Winterthur, Switzerland. 
தொடர்புகளுக்கு
தசிகரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797522858
சந்திரபவன்(நண்பர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787510221
கனிஸ்டன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797055809
ராகவி(மருமகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797536323
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல் திருமதி குணரட்ணம் கருணா

தோற்றம் : 28 டிசெம்பர் 1960 — மறைவு : 9 யூலை 2017
யாழ். அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கருணா குணரட்ணம்
 அவர்கள் 09-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று
 இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகராஜா,(அருணா ரான்ஸ் போட்)  இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
கெவின்(Kevin), புளொறா(Flora) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தனுஷன் அவர்களின் அன்பு மாமியாரும்,
அருணா, சுகுணா, றுகுணா, பூபாஜினி, திலோத்தமை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவபாலசிங்கம், குணசேகரம், புஷ்பராணி, பிருந்தா, ஞானசேகரம், விவேகானந்தன், யோகேந்திரன், மோகனகாந்தன், ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திலக்சன், வித்தகி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
நிஷாந்தன், நிரோஷன் ஆதவன், சுருதி, ஆர்த்தி, அபிநயன், ஆதிரை, ஜஸ்ரின் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் 
அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் .
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திப்போம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராசா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447861756006
கேந்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447718396974
மோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447900256696
கணவர் — பிரித்தானியா
தொலைபேசி: +442085521553
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி

புதன், 5 ஜூலை, 2017

சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 9 வது ஆண்டு குருபூஜை

யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் முன்னாள் பெருந்தலைவர் சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் ஒன்பதாவது ஆண்டு குருபூஜை வைபவம் இடம்பெற்வுள்ளது.
குறித்த நிகழ்வு நாளை 04) காலை 09 மணியளவில் தேவஸ்தானத்தில் நடைபெறவுள்ளது
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் விஷேட பூஜை, அன்னையின் நினைவாலயத்தில் வழிபாடு, அன்னையின் உருவச் சிலை வழிபாடு, திருமுறை மடத்தில் விஷேட பூஜை வழிபாடு என்பன
 இடம்பெற்றவுள்ளது.
இதனை தொடர்ந்து காலை 09.40 அளவில் அன்னபூரணி மண்டபத்தில் குருபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகவுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


கேரள கஞ்சா தலைமன்னார்- கொழும்பு புகையிரத்தில் இருந்து மீட்பு

தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த நேற்று முன்தினம் பயணித்த புகையிரதத்தில் இருந்து சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப் பொதிகளை மடு பொலிஸார்
 மீட்டுள்ளனர்.
தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதத்தில் கஞ்சாப்பொதிகள் கடத்தப்படுவதாக மடு பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு தலைமன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கமைய, குறித்த கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக மடு 
பொலிஸார் தெரிவித்தனர்.
மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.மடவல தலைமையில் விரைந்து செயற்பட்ட விசேடபொலிஸ் குழுவினர், மடு புகையிரத தரிப்பிடத்தில் பரிசோதனையை மேற்கொண்டபோது இரண்டு பையில் சுமார் 20 கிலோ 585 கிராம் எடை கொண்ட கஞ்சா போதைப் பொருளை
 மீட்டுள்ளனர்.
இந்த கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் என்று இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 4 ஜூலை, 2017

மரணஅறிவித்தல் திரு இராசரட்ணம் அரியரட்ணம் (செட்டி) (03-07-17)

யாழ் நவற்கிரி புத்தூரைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  பின்பு  வவுனியாவில்  வசித்து வந்த   
திரு  இராசரட்ணம் அரியரட்ணம் (செட்டி) அவர்கள் 
 (03-07-2017) அன்று காலமானார்  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் .
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திப்போம்
தகவல்
குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>