siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

மனைவிக்கும் மகனுக்கும் எமனான தந்தை


 வன் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியபோது மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு ஆற்றில் பாய்ந்ததால் இரண்டரை வயது ஆண் குழந்தையும் மனைவியும் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று இரவு 7.30 அளவில் அரகங்வில பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்திய கணவர் அதிகமான போதையில் இருந்துள்ளார். கட்டுப்படுத்த முடியாத நிலையில் பாதையின் அருகிலுள்ள ஆற்றில் பாய்ந்து நீரில் மூழ்கியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த அவரது மனைவியும் இரண்டரை வயது ஆண் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.
இவர்களது சடலங்கள் அரகங்வில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

கோக்கோ கோலா' 127 ஆண்டுகால தயாரிப்பு ரகசியத்தை பெட்டகத்தில் வைத்து


18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைவலிக்காக நிவாரணம் தேடி மருந்துக் கடைகளுக்கு வந்தவர்களுக்கு கடைக்காரர்கள் ஒரு ரகசிய பொருளை தண்ணீரில் கரைத்து தந்தனர்.
இதை சாப்பிட்ட பலருக்கு உடனடியாக தலைவலி பறந்தே போனது. அந்த 'ரகசிய மருந்து' தான் நாளடைவில் போத்தல்களில் அடைக்கப்பட்டு 'கோக்கோ கோலா' என்ற வணிகப் பெயருடன் உலக நாடுகளில் உள்ள விற்பனை கூடங்களில் பிரபலமடைந்தது.
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கோக்கோ கோலாவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் உச்சகட்ட பாதுகாப்புடன் 127 ஆண்டுகால பழமை வாய்ந்த கோக்கோ கோலாவின் தயாரிப்பு ரகசியம் வைக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர், இந்த தயாரிப்பு ரகசியம் தொடர்பான குறிப்புகள் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை வெளியிடாமல் இருக்க ஒர் பெருந்தொகையை கோக்கோ கோலா நிறுவனம் தனக்கு தர வேண்டும் என்றும் ஒருவர் மிரட்டல் விடுத்தது நினைவிருக்கலாம்.
1886ம் ஆண்டு தொழில் முறையாக தொடங்கப்பட்ட அட்லாண்டாவில் உள்ள கோக்கோ கோலா நிறுவனம் 1910ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் பெரும் பாதிப்பை சந்தித்தது.
மெல்ல, மெல்ல அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு குளிர்பானங்களின் தயாரிப்பில் முடிசூடா மன்னனாக கோக்கோ கோலா இன்றளவும் திகழ்கிறது. உலகளாவிய அளவில் சிறந்த வர்த்தக அடையாளப் பெயராக 2011ம் ஆண்டு கோக்கோ கோலா தேர்வு செய்யப்பட்டது.
கோக்கோ கோலாவின் தயாரிப்பு ரகசியம் எங்கோ ஓரிடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது என்பது பலரும் அறிந்த சங்கதிதான்.
ஆனால், அட்லாண்டாவில் உள்ள தொழிற்சாலையில் உச்சகட்ட லேசர் விளக்குகளின் பாதுகாப்பில் அந்த ரகசியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அந்த பாதுகாப்பு பெட்டகத்தை தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான கோக்கோ கோலா பிரியர்கள் கண்டு களைப்பு நீங்கி, களிப்படைந்து வருகின்றனர்.

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

இதுவரை இலங்கையர்கள் 720 0பேர் நாடுகடத்தல்

 

சட்டவிரோத இலங்கைப் பணியாளர்கள் 7200 பேர் இதுவரையில் சவுதி அரேபியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பணியாளர்களை திருப்பி அனுப்புவதற்கான பொது மன்னிப்புக் காலத்தினை சவுதி அரசாங்கம் வழங்கியிருந்தது. எனவே இக் காலப்பகுதியினை பயன்படுத்தி இலங்கையைச் சேர்ந்த 7 ஆயிரத்து 200 சட்டவிரோத பணியாளர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சவுதி அரேபியாவின் தொழில் உறவு அமைச்சருக்கும் சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் வீ. கிருஷ்ணமூர்த்திக்குமான சந்திப்பொன்றும் நடைபெற்றிருந்தது.
அதன் போது சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் இலங்கைப் பணியாளர்கள் அங்கு தொடர்ந்தும் இன்னல்களுக்கு உட்படுவதற்கான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவர்களின் தொழில் உரிமைகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதோடு இலங்கை பணியாளர்களுக்கான தொழில் உரிமைகள் குறித்து அவதானம் செலுத்தப்படுவதாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

இரு வாரங்களில்மரணமான பெண் உயிருடன் வந்த


அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த ஷரோலின் ஜாக்சன் (50), என்ற பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார்.
அவர் காணாமல் போனது குறித்து ஷரோலினின் தாயார் கேர்ரி மின்னி பொலிஸில் புகார் அளித்தார்.
புகார் அளிக்கப்பட்டு சில நாட்கள் கழிந்த நிலையில் பிலடெல்பியா பகுதியின் சாலையோரம் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வந்தது. அந்த பெண்ணின் உடலை அருகிலுள்ள வைத்தியசாலையின் பிணவறையில் வைத்திருந்த பொலிஸார் இதுபற்றி ஊடகங்களில் விளம்பரம் வெளியிட்டனர்.
விளம்பரத்தைப் பார்த்த கேர்ரி மின்னி அந்த பிணம் தனது மகள் ஷரோலின் ஜாக்சன்தான் என்று கூறி பிணத்தை பெற்றுக் கொண்டார்.
உரிய மரியாதைகளுடன் பிணமும் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஒருவாரத்திற்கு முன்னர் ஷரோலின் ஜாக்சன், திடீரென வீட்டு வாசலில் வந்து நின்றார். மகளின் கால்கள் தரையில் பதிந்திருக்கிறதா? என்று உற்றுப் பார்த்த கேர்ரி மின்னி தனது கையையும் கிள்ளிப் பார்த்துக் கொண்டார்.
வந்திருப்பது ஷரோலின் ஜாக்சன்தான் என்பதை உறுதி செய்து கொண்ட அவர், நாம் அழுது புலம்பி அடக்கம் செய்தது யாருடைய பிணத்தை? என்று சிந்திக்கத் தொடங்கினார். இவ்விவகாரம் மீண்டும் பொலிஸாரின் காதுகளுக்கு எட்டியது.
உயிருடன் வந்த பெண்ணின் கை ரேகையை ஷரோலினின் பழைய கை ரேகை பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த பொலிஸார், இது ஷரோலின்தான் என்பதை உறுதி செய்தனர்.
புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து அது யாருடைய பிரேதம்? என்பதை கண்டறியும் முயற்சியில் தற்போது பிலடெல்பியா பொலிஸார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்

சனி, 24 ஆகஸ்ட், 2013

அச்சுவேலியில்முஸ்லிம் பெண்ணைப்போல் வேடமணிந்து கொள்ளையிட்ட இராணுவம் -


இராணுவ பொது சேவை படையணியை சேர்ந்த கப்டனான ஏ.எம்.யூ. சமரகோன் என்பவரே இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.

பொலிஸார் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பாதிவு செய்துள்ள நிலையில், இராணுவ அதிகாரி ஒருவருக்கு எதிராக முதன் முறையாக இராணுவ நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிவில் சமூகத்தில் குற்றங்களை செய்யும் இராணுவத்தினருக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் அவர்களை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனவும் இராணுவத தளபதி தயா ரத்நாயக்க , இராணுவத்தின் சட்ட ஆலோசனை குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

அச்சுவேலியில் துவிச்சக்கர வண்டி கொள்ளையிட்ட படைவீரர் கைது

அண்மையில் அச்சுவேலி மக்கள் வங்கிக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக் கரவண்டி ஒன்று காணாமல் போனது தொடர்பாக குறித்த வங்கியில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டதுடன், இராணுவ வீரர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

வங்கிக்கு முன்னாள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமராவின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இராணுவவீரர் துவிச்சக்கர வண்டி திருடியது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அவரைக் கைது செய்து விசாரித்ததில் செல்வநாயகபுரம் பகுதியில் 2 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக குறித்த வீரருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்

று ஆடை அணிந்து கண்டியில் தேசிய சேமிப்பு வங்கியில் கொள்ளையிட முயற்சித்த இராணுவ கப்டன் ஒருவர் இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

புதன், 21 ஆகஸ்ட், 2013

ஆப்பிளை விட சக்தி வாய்ந்த ஸ்ட்ராபெர்ரி!


தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
ஏனெனில் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்துள்ளது.
ஆனால் ஆப்பிளின் சக்தியையே ஸ்ட்ராபெர்ரி பழம் மிஞ்சும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இப்பழம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதுடன், சர்க்கரை நோய், புற்று நோயை தடுக்கும் திறன் படைத்தது.
அத்துடன் எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும் பிலேவனாய்டு என்ற பொருள் இப்பழத்தில் உள்ளது.
மேலும் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும் உள்ளது.
செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.
இதில் ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை உள்ளது.
இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.
மேலும் இது ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. ஸ்ட்ராபெர்ரி பழச்சாற்றை குடித்தால் பற்களில் கறை ஏற்படுவதை தவிர்க்கலாம். இதில் உள்ள அமிலங்கள் பல் கறையையும் நீக்குகின்றன.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

வெடித்துச் சிதறியது ஜப்பானிய எரிமலை! -


5000 மீற்றர் உயரத்துக்கு சாம்பலைக் கக்கியது.
ஜப்பானின் ககோஷிமா நகர் அருகே உள்ள 1117 மீற்றர் உயரமுடைய சகுரஜிமா எரிமலை நேற்று வெடித்து சிதறியது. சுமார் 5,000 மீற்றர் தூரத்திற்கு மேலே சாம்பலை கக்கியது.எரிமலை சாம்பல் அந்த நகரின் பெரும்பாலான பகுதியில் பறந்ததால் ரயில், பஸ் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் விளக்குகளை ‌போட்டுதான் செல்ல முடிந்தன.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

கப்பல் வெடிப்பிற்கு பாதுகாப்பு விதிமுறை மீறல் காரணம்: ரஷ்யா


மும்பையில் கடந்த புதன்கிழமையன்று அதிகாலை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்தியக்கப்பற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் தமிழக வீரர் வெங்கட்ராஜூ உள்பட 18 பேர் இறந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்த கப்பலானது ரஷ்யாவில் பழுதுபார்த்து புதுப்பிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று இந்தியா வந்ததாகும்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ரஷ்ய துணை பிரதம மந்திரி டிமிட்ரி ரோகோசின், ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ரஷ்யாவில் 1997-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஐ.என்.எஸ். சிந்து ரக்‌ஷக் என்ற இந்திய கடற்படை கப்பலானது வெடித்து சிதறியது என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த கப்பலில் உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறேன்.
அந்த கப்பலானது சமீபத்தில்தான் ரஷ்யாவில் முழுமையாக பழுதுபார்க்கப்பட்டு அனுப்பப்பட்டதாகும். 15,000 கடல் மைல்களுக்கு மேல் அந்த கப்பல் பயணம் செய்துள்ளதால், இந்த விபத்திற்கு தொழில்நுட்பக்கோளாறு காரணமாக இருக்க முடியாது.
இதற்கான காரணம் குறித்து ஆராயப்படுகிற வேலையில், கப்பலில் உள்ள கருவிகள் காரணம் என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கவில்லை. இந்த விபத்துக்கு காரணம் தொழில்நுட்ப கோளாறு காரணம் என்று இந்தியா இதுவரை கூறவில்லை. பாதுகாப்பு விதிமுறைகள் மீறலே இந்த நீர்மூழ்கி கப்பல் விபத்துக்கான காரணமாக இருக்க முடியும்.
இந்த கப்பலில் பேட்டரிகள் ரீசார்ஜ் செய்யப்படுகிற பகுதியில் வெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. இந்த பகுதியானது கப்பலில் உள்ள அனைத்து பாதுகாப்பு கருவிகளுடனும் இணைக்கப்பட்டுள்ள மிகவும் பாதுகாப்பான பகுதியாகும். 18 கடற்படை வீரர்கள் இறந்திருக்க அஞ்சப்படுகிற இந்த விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது

சனி, 17 ஆகஸ்ட், 2013

மறைத்து இரத்தினக் கற்களை கடத்திய??

 
 
ஆசன வாயிலில் மறைத்து இரத்தினக் கற்களை கடத்திய இலங்கையர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது- தங்கம் கடத்திய இருவர் இந்தியாவில் கைது
ஆசன வாயிலில், 80 லட்ச ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் வந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு இரத்தினக் கற்களை கடத்தியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
பேருவளையைச் சேர்ந்த 56 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலப் பவளம், வைடூரியம உள்ளிட்ட பெறுமதி மிக்க இரத்தினக் கற்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஆணுறைகளில் இரத்தினக் கற்களை நிரப்பி, ஆசன வாயிலில் வைத்து கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையிலிருந்து தங்கம் கடத்திய இருவர் இந்தியாவில் கைது
இலங்கையிலிருந்து தங்கம் கடத்திய இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோடிக்கரையைச் சேர்ந்த ஒருவரும் மற்றுமொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து மூன்றரை கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட தங்கம் திண்டுகல் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 21.5 கிலோ கிராம் எடையுடைய தங்கத்தை கடத்திய அறிவழகன் என்பவரின் சகோதரரான சுப்ரமணியம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
படகு மூலம் இந்த தங்கம் கடத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

கடும் நிலநடுக்கம்! - ரயில், விமானப் ரத்து.


நியூசிலாந்து தலைநகர் வெலிங்டன் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் ஆரம்பக்கட்டத்தில் 6.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். வேலைக்குச் சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் வீதியில் நின்றுவிட்டனர்.நியூசிலாந்தின் தெற்குத் தீவின் வடக்கு முனைப் பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் 6.0 என்ற அளவில் முதலில் நிலநடுக்கம் பதிவானது. இதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக கணிக்க முடியவில்லை என்று அந்நாட்டின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே துறை அனைத்து ரயில் பாதைகளையும் சோதனை இட்ட பிறகே ரயில் சேவை தொடங்கும் என்று தெரிவித்தது.

இள வயது திருமணங்கள் அதிகரிப்பு -


இலங்கையில் இள வயதில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதிய (யுனிசெப்) நிபுணர் குழு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இள வயது திருமணங்கள் நடைபெறுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழி வகைகள் குறித்த சிறந்த புரிந்துணர்வை எட்டும் வகையில் ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியம் (யுனிசெப்) தரம் தழுவிய விசாரணையொன்றை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்கென குழுவொன்றை நியமித்திருந்தது.
இலங்கையில் குறிப்பாக அபிவிருத்தி குன்றிய மாவட்டங்களில் இள வயது திருமணங்களும் சட்டபூர்வமான கற்பழிப்புச் சம்பவங்களும் அதிகரித்துக்காணப்பட வாய்ப்புக்கள் உள்ளதெனச் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வொன்றை அடிப்படையாகக் கொண்டே மேற்படி விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
இத்தகைய இள வயதுத்திருமண முறையானது சிறுமியர் தங்கள் கல்வியைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புக்களை மட்டுப்படுத்தி வருவது மட்டுமின்றி, கர்ப்ப காலத்திலும் பிரசவ காலத்திலும் தாய் மற்றும் குழந்தைக்கு அபாயம் ஏற்படக்கூடிய நிலை, குழந்தைகள் மத்தியில் காணப்படும் போஷாக்கின்மை மற்றும் பிந்திய அறிவு வளர்ச்சி உள்ளிட்ட எதிரிடையான தேகாரோக்கிய விளைவுகளுடனும் அது அடிக்கடி தொடர்புடையதாக விளங்கி வருவது குறித்தும் கண்டறியப்பட்டுள்ள இத்தகைய விடயங்கள் யுனிசெப் நிறுவனத்தை கரிசனை செலுத்த வைத்துள்ளன.
இது குறித்து இலங்கையில் உள்ள யுனிசெப் நிறுவனப் பிரதிநிதி ரெஸா ஹொசெய்னி தெரிவிக்கையில், இள வயது திருமணம் செய்யும் சிறுமியரும் அதிகரித்த வகையிலான வன்முறை, அவதூறு மற்றும் சுரண்டல் ஆகியவற்றுக்கு உள்ளாகி வருவதாக குறிப்பிட்டார்.
இத்தகைய இள வயது திருமணங்களால் பாதிக்கப்பட்டுள்ள 71 பேர் குறித்த பகுப்பாய்வொன்றை அடிப்படையாக கொண்டு தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் மேற்கெள்ளப்பட்டுள்ள தரம் சார் விசாரணைகள் மூலம் இள வயது திருமணங்கள் அதிகரித்த நிலையில் நிகழ்ந்து வருவதாகவும்  பராயம் அடையாதவர் பாலியல் தொடர்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வி காணப்பட்டிருந்த 71 சிறுமியருள் 21 பேர் (30%) பதினெட்டு வயதை அடைவதற்கு முன்னரே கர்ப்பம் தரித்திருந்தமை தெரிய வந்துள்ளது. இது தேசிய சராசரியை விட 20 சதவீத உயர்வாகும்.
நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகளில் இளம் பருவத்தினருக்கான பயன் தரும் இன விருத்தி சுகாதார சேவைகள் மற்றும் தகவல் வழங்கல் சேவைகள், இள வயது திருமணத்தின் விளைவு பற்றிய தெளிவூட்டல் பற்றிய இயக்க செயற்பாடுகள் பலவந்தமாக திருமணம் செய்தல் மற்றும் இளம் வயதில் கர்ப்பம் தரித்தல் சம்பந்தமான சட்டத்தை மீளாய்வு செய்தல் என்பன அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

விமானத்தை விட வேகமான வாகனம்: அமெரிக்காவில் புதிய ,,


போக்குவரத்து முறைகள் காலத்துக்கேற்ப மாற்றம் கண்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் எத்தகைய போக்குவரத்து முறைகள் எப்படி இருக்கும் என்பதற்கான அடையாளங்களும் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் (Elon Musk), ஹைபர் லூப் (Hyperloop) என்ற பெயரில் புதிய போக்குவரத்து முறை குறித்த செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரயிலை போன்றே தோற்றம் கொண்ட இந்த வாகனம் ஒலியை விட வேகமாக பறக்கும் கன்கார்டு விமானத்தின் தொழில் நுட்பத்தை கொண்டதாக இருக்கும் என எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்தார்.
மின்காந்த அலைகளை கொண்டு இயங்கும் இந்த வாகனம் தரையை தொடாமல் காற்றின் மேல் வழுக்கிக் கொண்டும் செல்வதாக இருக்கும். அமெரிக்காவின் முக்கிய நகரங்களான சான் ஃபிரான்சிஸ்கோவுக்கும் லாஸ் ஏஞ்சலிசுக்கும் இடையிலான 600 கிலோ மீட்டர் தூரத்தை இந்த வாகனம் அரை மணி நேரத்தில் கடக்கும் என எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்தார்.
இது விமான பயணத்தை விட இரு மடங்கு வேகமானதாக இருக்கும் என்றும் எலான் மஸ்க் (Elon Musk) கூறினார். மணிக்கு 800 மைல் வேகத்தில் செல்லும் இந்த வாகனம் செலவு குறைவானதாகவும் பாதுகாப்பு மிக்கதாகவும் இருக்கும் என்றும் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்தார்
 

புதன், 14 ஆகஸ்ட், 2013

விடுமுறையில் உச்சப் பாதுகாப்பு!!


தனது விடுமுறை வாசஸ்தலமான villa du Cap Nègre (Var) இற்கு விடுமுறைக்குச் சென்றுள்ள முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்சோலா சார்க்கோசிக்கு அதி உச்சப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர் பிரபலங்களின் பாதுகாப்புச் சேவையான (Service de protection des hautes personnalités) SPHP யின் சிறப்புப் படையினர் பத்துப் பேரும் 15 குடியரசுப் பாதகாப்புப் படை வீரர்களும் (CRS) ஓகஸ்ட் மாதம் முதல் நிக்சோலா சார்க்கோசிக்குச் சிறப்புப் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இதை உறுதி செய்த நிக்சோலா சார்க்கோசி முன்னைய ஜனாதிபதிகள் போல் தனக்கும் இந்தச் சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இச் சட்டமானது 1985ம் ஆண்டு பிரதமரின் ஒரு சுற்றறிக்கை மூலம் உள்துறை அமைச்சினால் நிறைவேற்றப்பட்டது. பிரபலமானவர்கள் வெளிவரும் போது அவர்களிற்கு ஏற்படக்கூடிய உயிராபத்தினைக் கருத்திற் கொண்டே இச்சட்டம் நடைமுறைப்படுத்ப்பட்டது

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

நீரில் நச்சுத்தன்மை காணப்பட்டமை கண்டு பிடிப்பு


வெலிவேரிய நீரில் நச்சுத்தன்மை காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வெலிவேரிய தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள நீர் மற்றும் மண்ணில் நச்சுப் பதார்த்தம் உள்ளடங்கியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டள்ளது.

பூவியியல் மற்றும் கனிமவள ஆய்வு மையத்தினால் குறித்த பிரதேச நீர் மற்றும் மண் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நீர் மற்றும் மண் வகைகளில் ஒரு வகை நச்சுப் பதார்த்தம் காணப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையை அண்டிய 25 சதுர கிலோ மீற்றர் பரப்பிலும், தொழிற்சாலைக்கு வெளியில் 35 சதுர கிலோ மீற்றர் பரப்பிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மண் மற்றும் நீரில் அமிலத்தின் செறிவு அதிகாமாகக் காணப்படுவதுடன் ஐட்ரஜன் மற்றும் பி.எச் பெறுமானங்கள் குறைவாககக் காணப்படுவதாக பூவியியல் மற்றும் கனிமவள ஆய்வு மையத்தின் தலைவர் செனரத் ஜயசுந்தர தெரிவித்தள்ளார்

இதேவேளை, குறித்த பிரதேச நீர் தொடர்பில் கூடுதலான ஆய்வுகள் நடத்தப்பட உள்ளதாக நீர் வளச் சபை அறிவித்துள்ளது.

நிதானமின்றி வீதியில் நின்ற கனடா மேயர்கனடாவின் ரொறான்ரோ நகரின் மேயர் Rob Ford குடித்து விட்டு நிதானமின்றி வீதியில் செல்வது பாதசாரி ஒருவரால் வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு Taste of Danforth என்கின்ற வீதி நிகழ்வுக்கு சென்றிருந்த மேயர் அங்கே நன்கு குடித்துவிட்டு வீதியால் செல்லுவோருடன் புகைப்படங்கள் எடுத்தும், தான் வண்டி ஓட்டவில்லை என்றும் சொல்லுவது, வேறு பல விடயங்களை முணுமுணுப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

இன்னுமொரு வீடியோவில் மேயர் கோப்பியினை குடித்தவண்ணம் (பெரும்பாலும் குடிபோதையை குறைக்க) பாதசாரிகளுடன் படமெடுப்பது படமாக்கப்பட்டுள்ளது.(வீடியோ இணைப்பு)


வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

34 பேர் கைது வெளிநாட்டுக்கு செல்லவிருந்த


வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக செல்லும் நோக்கில் இருந்ததாக கூறப்படும் 34 பேர் ராகம - தெல்பே - குருகுலாவ பகுதியில், ஹோட்டலொன்றில் தங்கியிருந்தபோது நேற்றிரவு மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 3 பெண்களும், 21 ஆண்களும் 4 சிறுவர்களும் 6 சிறுமிகளும் உள்ளடங்குவதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் யாழ்ப்பாணம் பிரதேசததை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை கடல் மாரக்கமாக அனுப்புவதற்கு அழைத்து வந்ததாக கூறப்படும் இருவரையும் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படத்தப்பட்டுள்ள குறித்த நபர்களை நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 49 பேர் இந்தியா, நாகை மாவட்டத்தின் வேளாங்கண்ணி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

புருவ பராமரிப்பில் செய்யக் கூடாதவை


பொதுவாக பல ஆண்கள் முகத்தை சீர் செய்யும் போது புருவத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.
முக அலங்காரம் மற்றும் முக பராமரிப்பு என்று வந்தால், ஆண்கள் புருவத்தை கணக்கிலேயே எடுத்துக் கொள்வதில்லை.
அதற்கு காரணம் நம்முடைய சமுதாயத்தில் பெரும்பாலான ஆண்கள் தங்களின் நேரத்தை சலூனில் செலவிட விரும்புவதில்லை. சொல்லப்போனால், புருவ பராமரிப்பு என்பதை மெட்ரோ செக்ஷுவல் வகை ஆடவர் மட்டுமே விரும்புவார்கள்.
அப்படிப்பட்ட ஆண்கள் ஆடை அலங்காரம், மேக்-கப் மற்றும் முக பராமரிப்பில் அதிக அக்கறை எடுத்துக் கொள்பவர்கள். முக வசீகரத்தை கொண்டு பிறரை ஈர்க்க வேண்டுமென்றால், அதற்கு புருவங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது.
கண்டிப்பாக புருவ பராமரிப்புக்கான காரணங்கள் ஆண்களிடமும், பெண்களிடமும் வேறுபடுகிறது. ஆண்களை பொறுத்த வரை புருவ பராமரிப்பு என்பது இயற்கை அழகை தக்க வைக்கவும், சீராக இல்லாத ரோமத்தை நீக்குவதற்கு மட்டுமே.
இது சற்று குழப்பமாக இருந்தாலும், கீழ்கூறிய செய்யக்கூடியவையையும் செய்யக்கூடாதவையையும் படித்தால், புருவ பராமரிப்பைப் பற்றி தெளிவாக புரிந்துக் கொள்ளலாம்.
* ரேசரை பயன்படுத்தி புருவத்தை பராமரிக்க கண்டிப்பாக பரிந்துரைக்க மாட்டோம். அதனை பயன்படுத்தினால், அதன் விளைவு விபரீதமாக கொண்டு போய் முடியும்.
* ரேசரை வைத்து புருவத்தை ட்ரிம் செய்யும் போது, அதிகமாக எடுத்து விட வாய்ப்பு உள்ளது. அதனால் தாடியை போல புருவம் அதிகமாகவும், அடர்த்தியாகவும் வளரும் அபாயம் உள்ளது.
இது போக சீரான திசையில் அதன் வளர்ச்சி இருக்காது. இதனால் அது அழகை பாதிப்பதோடு மட்டுமல்லாது, வெட்டுக்காயங்களையும் ஏற்படுத்தும்.
* பொறுமை இல்லாத சமயம் புருவத்தை பராமரிக்கும் போது, அதிக அளவில் புருவத்தை எடுத்துவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே நேரத்தை எடுத்துக் கொண்டு, பொறுமையாக ஒவ்வொரு முடியாக உருவ வேண்டும்.
* நடுவில் எப்படி இருக்கிறது என்று பார்க்காமல் அவசரம் அவசரமாக முடியை நீக்கிக் கொண்டே போனாலும், அளவுக்கு அதிகமான முடியை நீக்க வாய்ப்பு உள்ளது. ஒரு முறை போனால் போனது தானே. அதனால் பொறுமையுடன் செயல்பட்டு, சங்கடத்தில் இருந்து காத்துக் கொள்ளுங்கள்.
* நீளமான முடிகளை புடுங்க வேண்டும் என்ற அவசியமில்லை. காடுகளை போன்ற தோற்றத்தை தடுக்க, அவைகளை ட்ரிம் செய்தால் மட்டுமே போதுமானது. அதிலும் புருவத்தை மேல்நோக்கி சீவினால், அது நீளமான முடியை காட்டிவிடும்.
* மேலும் சிறிய சீப்பை பயன்படுத்த வேண்டும் அல்லது புருவங்களை மேல்நோக்கி தேய்த்தால், அவைகள் ஒரே திசையை நோக்கி இருக்கும். புருவத்தை ட்ரிம் செய்ய சிறிய கத்தரிகோலைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் கண்டிப்பாக ட்ரிம் செய்ய வேண்டும்.
* புருவ ரோமங்களை புடுங்குவதற்கு முன் அல்லது வேக்சிங் செய்வதற்கு முன், அந்த இடத்தை சுத்தமாகவும் அழுக்கு இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* மேலும் அவ்விடத்தில் எண்ணெயையும் தேய்த்துக் கொள்ள வேண்டும். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சுத்தமாகவும், துவாரங்கள் திறந்தும் ரோமங்கள் மென்மையாகவும் இருக்கும். அதனால் ரோமங்களை புடுங்கும் போது வலி இல்லாமல் இருக்கும்.
* ரோமங்களை புடுங்கவும், வேக்சிங் செய்யவும் நல்ல தரமுள்ள கருவிகளில் முதலீடு செய்ய வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தாமல், மலிவான பொருட்களை பயன்படுத்தினால் விளைவு மோசமாக இருக்கும்.
* மேலும் ரோமங்கள் சீராக வளராமல் போகலாம். அதனால் நல்ல படியாக புருவங்களை பராமரிக்க, நல்ல பொருட்களில் முதலீடு செய்ய வேண்டும்.
* புருவங்களுக்கு மத்தியில் வளரும் முடிகள் ஒரு போதும் நாகரீகமாக இருந்ததில்லை, இருக்க போவதுமில்லை. மேலும் அது ஈர்க்கும் வண்ணம் இருப்பதில்லை.
அதனால் அதை உடனே நீக்குங்கள். அருகில் இருக்கும் சலூனுக்கு சென்று முதலில் அதை த்ரெட்டிங் மூலமாக நீக்குங்கள். இப்படி வளரும் முடியை வைத்திருப்பதை விட, அதனை நீக்க த்ரெட்டிங் செய்வது ஒன்றும் பெரிய அவமானம் கிடையாது.
* மூக்கின் மேல் முடிகள் உள்ள ஆண்களை எந்த பெண்ணும் வலை வீசி தேடுவது கிடையாது. இதனை நீங்களே நீக்க வேண்டும் என்று எண்ணினால், வேக்சிங் அல்லது புடுங்குதல் மூலம் செய்யுங்கள்.
* மாறாக ஷேவ் செய்யாதீர்கள். பெண்கள் மட்டும் தான் புருவங்களை பராமரிக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். அதனை உடைத்தெறியுங்கள். மேற்கூறிய செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளை மனதில் வைத்துக் கொண்டு, புருவ பராமரிப்பில் ஈடுபடுங்கள்