siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 21 அக்டோபர், 2013

இரும்புக்கடையில் வெடிப்பு : ஒருவர் படுகாயம்


மாதம்பை சுதுவெல்ல பகுதியிலுள்ள இரும்புக்கடையொன்றில் இன்று திடீரென இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழைய இரும்புப் பொருளொன்றை வெட்டும் போது இவ்வனர்த்தம் பதிவானதாகவும் ஆட்லெறிக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகை ரவைகள் சில வெடித்ததிலேயே குறித்த வெடிப்புச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவம் பதிவான இடத்துக்கு அருகில் இரும்பு - உருக்கு தொழிற்சாலையொன்றும் உள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சனி, 19 அக்டோபர், 2013

புகைத்தலினால் நாளாந்தம் 60 பேர் உயிரிழக்கின்றனர்:


 புகைத்தலுடன் தொடர்புபட்ட சுகாதார பிரச்சினைகளினால் தினமும் ஏறக்குறைய 60 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொற்றா நோய்கள் பலவற்றின் முக்கிய காரணியாக விளங்குவது புகைப்பிடித்தல் செயற்பாடாகும். புகைப்பிடித்தலுடன் சம்பந்தப்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளினால் தினமும் ஏறக்குறைய 60 பேர் மரணிப்பதுடன் வருடமொன்றுக்கு 20 ஆயிரம் பேர் வரை உயிர் துறக்கின்றனர்.
புகைத்தலினால் ஏற்படும் பாதிப்புகளின் தன்மைகளை மாணவர்கள்

நேரடியாக காண்பதற்காக மஹரகம புற்று நோய் வைத்தியசாலையை பார்வையிட அனுமதிக்க வேண்டும். மேலும், கொழும்புக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும் சிரேஷ்ட தர வகுப்பு மாணவர்களை அங்கொடை தேசிய உளச் சுகாதார நிறுவனத்திற்கும் மஹரகம புற்று நோய் வைத்தியசாலைக்கும் அழைத்துச் செல்ல வேண்டும்.

மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் புற்று நோயாளர்களில் அதிகமானோர் 35 வயதுக்கும் 45 வயதுக்குமிடைப்பட்டவர்கள். இவர்களில் அதிகமானோர் தீவிர புகைப்பிடித்தல் பழக்கமுடையவர்களாக காணப்படுகின்றனர்.

வாய் மற்றும் நுரையீரல் புற்று நோய்ச்சிகிச்சைக்காக அரசாங்கம் வருடமொன்றுக்கு 15 மில்லியன் ரூபாவை செலவு செய்கிறது. புகைத்தலால் பாதிக்கப்படுவோரை மருந்துகளினால் பாதுகாக்க முடியாது. ஒரு புற்றுநோயாளருக்கு ஊசி ஏற்றுவதற்காக 3 இலட்சம் ரூபா செலவிடப்படுகிறது. இருந்தும் புற்று நோயாளர்களை மருந்துகளினால் காப்பாற்ற முடியாமல் இருக்கிறது என்றார்.

புதன், 16 அக்டோபர், 2013

இணையத் தொடர்பு சேவைகள் மூலம் தகவல் திரட்டும் அமெரிக்க !


 
யாஹூ, ஜீமெயில், பேஸ்புக், ஹாட் மெயில் போன்ற இணையத்தள சேவைகள் மூலம் லட்சக்கணக்கானவர்களின் தொடர்புகளை அமெரிக்க உளவுப்பிரிவுகளில் ஒன்றான தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்எஸ்ஏ) சேகரித்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், இதுகுறித்து என்எஸ்ஏ அமைப்பு செய்தி தொடர்பாளர் கூறுகையில், சாதாரண அமெரிக்கர்களின் விவரங்களை சேகரிப்பது எங்கள் நோக்கம் இல்லை. பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களை மட்டும்தான் நாங்கள் கண்காணிக்கிறோம். குறிப்பிட்ட முகவரிகளை மட்டுமே நாங்கள் கையகப்படுத்தி, தகவல்களை சேகரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
   
அமெரிக்காவில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது. இதைத் தடுக்க அமெரிக்க அரசின் கீழ், பல உளவுப் பிரிவு அமைப்புகள் இயங்கி வருகின்றன. பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் மற்றும் ஊடுருவல்களை இந்த அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இந்நிலையில் என்எஸ்ஏ, இணையதள சேவைகள் மூலம்

அமெரிக்கர்கள் உள்பட லட்சக்கணக்கானவர்களின் விவரங்களை சேகரித்து வைத்துள்ளதாக அமெரிக்காவின் "வாஷிங்டன் போஸ்ட்' செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
யாஹூ, ஜீமெயில், பேஸ்புக், ஹாட் மெயில் போன்ற இணையத்தள சேவைகள் மூலம் அனுப்பப்படும் தகவல்களை கொண்டு

 லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் விவரங்களை என்எஸ்ஏ சேகரித்து வைத்துள்ளது. இதுபோல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.அமெரிக்க உளவுப் பிரிவுகளின்

செயல்பாடுகளை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்னோடென் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் இதுகுறித்து தெரியவந்துள்ளது.
அவ்வாறு சேகரித்த மக்களின் விவரங்களை கொண்டு சர்வதேச அளவில் ஏதேனும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பதை

என்எஸ்ஏ அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. கடந்த ஆண்டு 4,40,000க்கும் அதிகமான இ-மெயில் தொடர்புகளை என்எஸ்ஏ சேகரித்துள்ளது. இதுபோன்ற செயல்பாடுகளை பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்புடன் என்எஸ்ஏ செய்து வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

திங்கள், 14 அக்டோபர், 2013

யானையிடமிருந்து தப்பியவர் முதலையிடம் சிக்கி


மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மோதலில் தன்னை பாதுகாப்பதற்காக ஆற்றில் குதித்த விவசாயியொருவர் முதலையிடம் சிக்கி படுகாயமடைந்துள்ளார்..
போருக்கு பின்னர் மீள்குடியேற்ற கிராமமான உறுகாமம் கிராமத்தில் நேற்று இந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதே கிராமத்தில் சம்பவத்திற்கு முதல்நாள் சனிக்கிழமை யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மோதலில் 12வயது டைய் ஜெமில் தஸ்லிம் என்ற மாணவன்; யானையின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளான்.

தமது கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை வேண்டி பிரார்;த்தனை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்த மாணவன் சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது..

குறித்த சம்பவம் இடம்பெற்று 24 மணி நேரத்திற்குள் யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மற்றுமோர் மோதலில் தப்பி முதலையின் பிடியில் சிக்கி காயமடைந்த விவசாயி 27வயதான பி. செல்வக்குமார்

தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தனது கால்நடை பண்ணையில் பால் கறப்பதற்காக சென்றவேளை எதிர்கொண்ட யானையால் துரத்தப்படடு ஆற்றில் பாய்ந்ததாக இந்த சம்பவம் தொடர்பாக கூறப்படுகின்றது.

காட்டு யானைகளின் தொல்லை தற்போது இரவில் மட்டுமல்ல பகலிலும் அதிகரித்து வருவதாவே உறுகாமம் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமது கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த சம்பவங்களையடுத்து சில குடும்பங்கள் தற்போது வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும்

வனஜீவராசிகள் தினைக்களத்திற்கு அறிவிக்கும் போது வருகை தந்து யானைகளை காடுகளுக்குள் விரட்டினாலும் பழக்கப்பட்ட யானைகள் போன்று அவை மீண்டும் அதேயிடங்களுக்கு வருவதாகவும் உள்ளுர் மக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதேவேளை செங்கலடி- பதுளை நெடுஞ்சாலையை அண்மித்த காடுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் முழுவதும் காணப்பட்ட யானைக் கூட்டமொன்று வனஜீவராசிகள் தினைக்கள அதிகாரிகளினாலும் காவல் துறையினராலும் பகல் முழுவதும் கண்காணிக்கப்பட்டு மாலையில் சத்த வெடிகள் மூலம் காடுகளுக்குள் விரட்டப்பட்டன.

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

மாலியில் படகு விபத்து: 20 பேர் பலி - 200 பேர் மாயம்


மத்திய மாலியில் சுமார் 400 பயணிகளுடன் சென்ற படகு ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர்.

மாலியில் உள்ள கொன்னா என்ற இடத்தில் இருந்து சுமார் 400 பயணிகளை ஏற்றிக்கொண்டு திம்புக்டு நகரை நோக்கி நைஜர் ஆற்றில் சென்ற படகு திடீரென்று நீரில் மூழ்கியது. படகில் பயணித்த பலருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி தத்தளித்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் 210 பேரை உயிருடன் மீட்டனர். மிதந்து வந்த 20 பிரதேங்களையும் கைப்பற்றினர். காணாமல் போன மேலும் 200 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாலைவன பிரதேசமான வடக்கு மாலியில் சரியான சாலை வசதி இல்லாததால் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு செல்லும் மக்கள் பெரும்பாலும் படகு போக்குவரத்தையே நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சனி, 12 அக்டோபர், 2013

அமெரிக்க படைகளிடம் சிக்கிய தலிபான் தளபதி


கிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளிடம் தலிபான் இயக்கத்தின் முக்கிய தளபதி லத்தீப் மசூத் சிக்கியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தங்கியுள்ள தலிபான், அல்கொய்தா தீவிரவாதிகளை ஒழித்து கட்டும் நோக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ளன.

சமீபத்தில் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத தலைவர் லத்தீப் மசூத் என்பவர் அமெரிக்க படையிடம் பிடிபட்டார். இவர் கிழக்கு ஆப்கானிஸ்தான் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இத்தகவலை அமெரிக்க செய்தி தொடர்பாளர் மேரி ஹெர்ப் உறுதி செய்தார்.
அல்கொய்தா மற்றும் முல்லா ஓமர் தலைமையிலான தலிபான் இயக்கங்களுடன் லத்தீப் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

வெள்ளி, 11 அக்டோபர், 2013

கடுமையான பனிப்பொழிவு முதன் முறையாக ஜேர்மனில்


 முதன் முறையாக கடுமையான அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனில் குளிர்காலங்களில் பனிப்பொழிவு ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில் தெற்கு ஜேர்மனியின் பவேரியா பகுதியில் பனிப்பொழிவு ஆரம்பித்துவிட்டது.

இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் சிறுகுழந்தைகளுக்கு விளையாட்டுக் கூடம் போன்றவைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் மக்களுக்கும், வாகன ஓட்டுனர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெர்லினில் வெப்பநிலை ஆறு டிகிரி C முதல் 14 டிகிரி C  வரை காணப்படும் என்றும், முனிச்சில் 8 டிகிரி C-க்கு மேல் தாண்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

வியாழன், 10 அக்டோபர், 2013

சுற்றுலா பயணிகளுக்கு விசா விதிகள் தளர்வு !


 இந்திய அரசு இந்தியாவுக்கு சுற்றுலா வர விரும்பும் பயணிகளுக்கு விசா வழங்குவதில் சில விதிகளை தளர்த்தியிருக்கிறது.

அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் ஆஸ்திரேலியா சீனா போன்ற 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் இந்தியாவுக்கு சுற்றுலா விசா பெற அவர்களின் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை அணுகாமலேயே இணையத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பிவிட்டு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவுடன் விமான நிலையத்தில் அவர்களுக்கு விசா வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பில் தெற்காசிய நாடுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.ஆனால் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள 60வயதுக்கு மேற்பட்ட அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் விமான நிலையத்தில் வந்து சேர்ந்தவுடன் விசா வழங்கும் வசதி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

செவ்வாய், 8 அக்டோபர், 2013

இதோ உங்களுக்கான உணவுகள்!! எடை அதிகரிக்க


ஆரோக்கியமான உடலை அடைய வேண்டுமெனில் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளையே உண்ண வேண்டும்.
பருமனாக உள்ள பல பேர் உடல் எடையை குறைக்க வேண்டி பாடுபடுவதை போல, ஒல்லியான தேகம் கொண்டவர்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்புகின்றனர்.

உடல் எடையை அதிகரிப்பது சுலபம் என்று நீங்கள் நினைக்கலாம்.
எண்ணெயில் பொரித்த கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அது ஆரோக்கியமானது அல்ல.
உடல் எடை அதிகரிக்கும் போது ஆரோக்கியமாக இருப்பது பெரிய சவாலாக விளங்கும். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு கடினமானது கிடையாது.
போதுமான கலோரிகள் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளையே உண்ணுங்கள்.
புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால், உடல் தசைகள் பெரிதாகி உடல் எடையும் அதிகரிக்கும்.
உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்
உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்களில் கலோரிகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் வளமையாக உள்ளது.
அதனால் உலர் திராட்சை, பாதாம், வால்நட் மற்றும் முந்திரி பருப்புகளை உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு கப் உலர் திராட்சையில் 449 கலோரிகளும், ஒரு கப் பாதாமில் 529 கலோரிகளும் அடங்கியுள்ளது.
அவைகளை ஐஸ்க்ரீம் அல்லது தயிரின் மேல் தூவி விட்டு உண்ணலாம். வேண்டுமானால், சாலட் மற்றும் உணவு தானியங்களிலும் கலந்து உண்ணலாம்.
சீஸ்
மற்ற அனைத்து பால் பொருட்களை போல சீஸிலும் (பாலாடை கட்டி) அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உள்ளது.
இதில் ஆரோக்கியமான நல்ல கொழுப்பு அதிகமாக உள்ளதால், வேகமாக உடல் எடை கூட விரும்புபவர்கள் இதனை உட்கொள்ளலாம்.
கலோரிகள் மட்டுமின்றி, இதில் புரதம், கால்சியம், மற்றும் கொலஸ்ட்ராலும் அதிகமாக உள்ளது.
அதனால் உணவுகளில் கொஞ்சம் சீஸை தூவி விட்டால் போதும், உணவின் சுவை இன்னமும் அதிகரித்துவிடும். ஒரு முறை பரிமாறப்படும் சீஸில் 69 கலோரிகள் உள்ளது.

வேர்க்கடலை வெண்ணெய்
வேர்க்கடலை வெண்ணெயில் புரதமும், கொழுப்பும் அதிகளவில் உள்ளது. உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
ஒரு ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெயில் தோராயமாக 100 கலோரிகள் உள்ளது. மேலும் இதில் அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில்

அடங்கியுள்ளது. இதில் உள்ள கொழுப்பு தெவிட்டாத வகையை சேர்ந்ததாகும்.
அதனால் இது இதயத்திற்கு மிகவும் நல்லது. வேர்க்கடலை வெண்ணெயை முழுதானிய ரொட்டியில் தேய்த்து உண்ணுங்கள் அல்லது ஆப்பிள் உண்ணும் போது இதனை தொட்டுக் கொள்ளுங்கள்.
கொழுப்பு நீக்காத முழுமையான பால்
கொழுப்பு நீக்காத முழுமையான பாலை ஓட்ஸ் அல்லது தானியங்களுடன் கலந்து உண்ணலாம்.

வேண்டுமென்றால் ஒரு டம்ளர் பாலையும் அப்படியே குடிக்கலாம். வேண்டுமென்றால் அதனுடன் கொஞ்சம் சாக்லெட் பொடியையும் சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம்.
கலோரிகள் அதிகமுள்ள இதில் வைட்டமின் டி மற்றும் ஏ சத்துக்களும் அடங்கியுள்ளது.
கொழுப்பு நீக்கிய பாலுக்கு பதில், கொழுப்பு நீக்காத பாலையே தேர்ந்தெடுங்கள்.

இது தான் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும். கொழுப்பு நீக்காத ஒரு டம்ளர் பாலில் 120-150 கலோரிகள் அடங்கியுள்ளது.
உருளைக்கிழங்கு

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பொதுவாக தவிர்க்கும் ஒரு காய் தான் உருளைக்கிழங்கு.
ஆனால் ஏன் அதை விட்டு ஓடி போகிறீர்கள்? அதற்கு காரணம் அ
தில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட். இது வேகமாக உடல் எடையை அதிகரித்துவிடும்.

அதே போல் இதில் ஸ்டார்ச், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. உருளைக்கிழங்கின் தோளில் புரதச்சத்து அதிகமாக உள்ளதால், தோலோடு சேர்த்தே உண்ணுங்கள்.
மேலும் அதனை மற்ற காய்கறிகளுடன் கலந்தும் உண்ணலாம். ஒரு இடைநிலை உருளைக்கிழங்கில் 150 கலோரிகள் அடங்கியிருக்கும்.
பாஸ்தா

கலோரிகள் நிறைந்த சுவைமிக்க உணவு தான் பாஸ்தா. மேலும் இதில் கார்போஹைட்ரேட் கூட அதிக அளவில் உள்ளது.
பல காய்கறிகளை இதனுடன் சேர்த்தால் அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களும் இதில் சேர்ந்துவிடும். ஒரு கப் மக்ரோனியில் 300 கலோரிகள் உள்ளது. இதுவே சமைத்த உணவில் 22 கலோரிகள் இருக்கும்.
வெண்ணெய்

தெகட்டாத கொழுப்பு வகையை சேர்ந்தவை வெண்ணெய். சமையலுக்கு அதனை சிறிதளவு பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதனை பிரட்டில் தேய்த்து உண்ணலாம் அல்லது நொறுக்குத் தீனியை வறுக்கும் போதும் இதனை கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.
பொதுவாக உணவுகளுக்கு சுவையை கூட்ட வெண்ணெயை சேர்ப்பது

வழக்கமான ஒன்று தான். வெண்ணெய் மற்றும் நெய்யில் நல்ல வாசனையும், சுவையும், உடல் எடை அதிகரிக்க தேவையான கலோரிகளும் உள்ளது.
ஆரோக்கியமான இனிப்பு பழங்கள்
மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம் மற்றும் அன்னாசிப்பழம் போன்ற பழங்கள் உடல் எடையை அதிகரிக்க உதவும்.

இவைகளில் இயற்கையான சர்க்கரை உள்ளது. அவைகள் உடலின் ஆற்றல் திறனை அதிகரிக்கும்.
குறிப்பாக உடல் எடை கூடுவதற்கு சரியான தேர்வாக விளங்குவது தான் அவகேடோ என்னும் வெண்ணெய் பழம்.
கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்த இந்த பழத்தில் 300 கலோரிகள் அடங்கியுள்ளது.

அதனால் இவை இனிப்பாகவும், ஆரோக்கியமாகவும் விளங்கும். இதனை பழங்களை கொண்டு தயாரிக்கும் சாலட், டெசர்ட் மற்றும் ஜூஸ்களில் கலந்து உண்ணலாம்.
முட்டைகள்

கலோரிகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது தான் முட்டை. ஒரு முட்டையில் தோராயமாக 70 கலோரிகளும் 5 கிராம் கொழுப்பும் உள்ளது.
அதனால் தான் உடலை வளர்க்கும் ஆண் மகன்கள் முட்டையை விரும்பி உண்ணுகிறார்கள். இதில் ஒமேகா-3 கொழுப்பமிலங்களும் அதிகமாக உள்ளது.
முட்டையின் மஞ்சள் கருவில் ஆரோக்கியமில்லாத கொலஸ்ட்ரால் உள்ளதால் அதனை தவிர்த்திடுங்கள்.

ஆனால் இந்த முட்டையை முட்டை பொறியல், அவித்த முட்டை அல்லது ஆஃப்-பாயில் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும்.
கொழுப்பில்லா இறைச்சி

கொழுப்பில்லா இறைச்சி கலோரிகளால் நிறைந்துள்ளது. அதனால் அதனை உட்கொண்டால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
ஆரோக்கியமான உடலை பெற இதனை ஆரோக்கியமான உணவுடன் சேர்த்து உட்கொள்ளுங்கள். இவைகளில் புரதமும் அதிகமாக உள்ளதால், தசைகள் வளர்ச்சியடைய உதவும்.

அதிலும் அதனை வறுத்து அல்லது வேறு விதமாக சமைத்தும் உண்ணலாம். இதனால் உடல் எடையும் வேகமாக அதிகரிக்கும்.

 

திங்கள், 7 அக்டோபர், 2013

அட்டகாசம் 6 வயது இரட்டை குழந்தைகளின்


இங்கிலாந்தில் 6 வயது இரட்டை குழந்தைகள் செய்த அட்டகாசத்தால் தந்தை அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இங்கிலாந்தின் செயின்ட் ஈவ்ஸ் நகரைச் சேர்ந்த அஷ்லே கிரிபித் என்பவருக்கு 6 வயதில் ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர்.
இரட்டை குழந்தைகளான இவர்கள் செய்த அட்டகாசத்தால் தந்தை அதிர்ச்சியில் உறைந்துள்ளாராம்.

அதாவது, கடந்த வார இறுதியில் அப்பிள் இணையத்தள நிறுவனத்தில் இருந்து கிரிபித்துக்கு தபால் ஒன்று வந்துள்ளது.
இதனை பிரித்த பார்த்த போது, 4 பக்க அளவுக்கு பில்கள் இருந்துள்ளது.
அதில் ரூ.97,010 கட்ட வேண்டும் என்றும், பாஸ்வேர்டுகளுக்காக ரூ.7,425 கட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

தவறாக பில் அனுப்பிவிட்டார்களோ என்று ஆச்சரியமாக பார்த்தபோது, தன் பெயருடன் முகவரியும் சரியாகத்தான் இருந்தது.

தன்னுடைய குழந்தைகள் தான் சுட்டியாச்சே, அவர்கள் இதை வாங்கினார்களா என்று கேட்டபோதுதான் உண்மை தெரியவந்தது.
அவரது குழந்தைகள் தந்தையின் ஐபேடை தங்களுடைய படிப்புக்காக பயன்படுத்திக் கொள்வது வழக்கம்.

அதில் இருந்த தந்தையின் பாஸ்வேர்டை நினைவில் வைத்து கொண்டு, இன்டர்நெட்டில் இவ்வளவையும் வாங்கியுள்ளனர்.
உடனடியாக இணையத்தள நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு நடந்ததை எடுத்துக்கூறவே, அவர்களும் பில்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து தன்னுடைய பாஸ்வேர்டை மாற்றி விட்டாராம்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

நாங்கள் என்ன பாவம் செய்தோம்! 11 வயது சிறுவனின் கதறல்


சிரியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.
இதில் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் பலியாகி உள்ளதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உட்பட பலரும் கொடூரமாக கொலை செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சிரியாவில் நடந்த இரசாயன தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் தாக்குதல் நடத்த திட்டமிட்டன.

ஆனால் இதற்கு தொடர்ந்து ரஷ்யா மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் ரஷ்யாவின் கோரிக்கையின் படி, தங்களிடம் உள்ள இரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க சிரியா சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்படி அமெரிக்காவின் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முகாம்களில் சிரியா அகதிகளின் நிலை குறித்து பிபிசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்குள்ள மக்களின் நிலை சற்றே கண்கலங்க வைக்கிறது.

பசியில் துடிக்கும் பிஞ்சுக் குழந்தைகள், கையில் எதுவுமே இல்லாத நிலையில் அடுத்த என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் விழி பிதுங்கி இருக்கும் பெற்றோர்கள்.
11 வயது சிறுவன் ஒருவன், கடுமையான வலி வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நான் பள்ளிக்கூடத்தில் இருக்கும் போது ஏன் குண்டு போட்டார்கள்? ஏன் அவ்வாறு செய்தார்கள்? என அழுது கொண்டே கூறியிருப்பது நெஞ்சை உருக்குவதாய் உள்ளது.
 

சனி, 5 அக்டோபர், 2013

பேர்மிங்ஹாமில் இலங்கைப் பெண் மரணம்:


 
இலங்கைப் பெண்ணொருவர் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். நேற்று காலை 6.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
அவர் பயணித்த சைக்கிள் லொறியொன்றுடன் மோதியமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
முத்துமனகா பின்ஹாமி என்ற 55 வயதான பெண்ணே விபத்தியில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் 5 பிள்ளைகளின் தாயெனவும் அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் இலங்கையில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்  பேர்மிங்ஹாமில்  ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிபவரெனவும் காலையில் தொழிலுக்கு செல்லும்  போது ஹே மில்ஸ் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் லொறி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், லொறி சாரதியிடம் விரைவில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இலங்கைப் பெண்ணொருவர் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். நேற்று காலை 6.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
அவர் பயணித்த சைக்கிள் லொறியொன்றுடன் மோதியமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

முத்துமனகா பின்ஹாமி என்ற 55 வயதான பெண்ணே விபத்தியில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் 5 பிள்ளைகளின் தாயெனவும் அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் இலங்கையில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்  பேர்மிங்ஹாமில்  ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிபவரெனவும் காலையில் தொழிலுக்கு செல்லும்  போது ஹே மில்ஸ் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் லொறி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், லொறி சாரதியிடம் விரைவில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வியாழன், 3 அக்டோபர், 2013

பிரான்ஸ் நாடு நியூயார்க் அல்ல! தொழிற்சங்க தலைவர்


பிரான்ஸ் நாட்டில் உள்ள கடைகள் அதிக நேரம் திறந்திருக்க கூடாது என்று அந்நாட்டு அரசாங்கம் சட்டம் விதித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகரான பாரீசில் உள்ள செப்போரா (Sephora) ஒப்பனை தயாரிப்பு நிறுவனத்தில் இரவு 9.00 மணிக்கு மேலும் கூடுதல் சம்பளத்திற்கு பணியாளர்கள் வேலை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கடைகள் கூடுதல் நேரம் திறந்து வைக்க கூடாது என்று சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சட்டமானது முட்டாள்தனமானது என்றும் பணியாளர்கள் குறைந்த அளவு வேலையை செய்துவிட்டு அதிக சம்பளம் வாங்குகின்றனர். மேலும் நாங்கள் இதற்காக அதிகமாக வரி செலுத்துகிறோம் என்று ஒரு வாசகர் டுவிட் செய்துள்ளார்.

புதிதாக விதிக்கப்பட்டுள்ள சட்டம் குறித்து தொழிற்சங்கங்களின் தலைவர் எரிக் செர் கூறுகையில், பிரான்சில் கடைகளானது அதிகாலை 4.00 மணிக்கு திறந்து பின்பு இரவு 11.00 மணிக்கு மூடுவதையே ஒரு சட்டமாக கொண்டுள்ளது.

ஆனால் இந்த நேரத்தினையும் மீறி தொழிலாளர்கள் வேலை செய்வது சட்டத்தை மீறுவதாகும். மேலும் பணியாளர்களையும் நாம் மதிக்கவேண்டும்.
ஏராளமான நாடுகளில் குழந்தை தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து

சட்டங்கள் உள்ளன. நாமும் அந்த சட்டத்தினை பின்பற்ற வேண்டும்.
மேலும் சில தொழிலாளர்கள் அதிக நேர உழைப்பினை விரும்புகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதற்கான நேரத்தினை நீட்டித்தால் நாட்டில் மற்றவைகளுக்கும் விதிவிலக்குகள் செய்யவேண்டும்.
எனவே இது சட்டத்தினை மீறுவதாகும், ஆகவே பிரான்ஸ் நாட்டின் சட்டத்தினை பின்பற்றுவது நம் கடமையாகும்.

நியூயார்க் போன்ற நாடுகளில் கடைகள் நீண்ட நேரம் திறந்திருக்கின்றன என்றும் ஆனால் நாம் வாழ்வது பிரான்ஸ் நாட்டிலேயே தவிர நியூயார்க்கில் அல்ல எனவும் கூறியுள்ளார்.

புதன், 2 அக்டோபர், 2013

இளம் பெண் மரணம் கணவர் படுகாயம்


   
 
யாழ். தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் இராணுவ வாகன விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளம் குடும்பப் பெண் பஸ் சில்லில் நசியுண்டு உயிரிழந்தார். கணவன் படுகாய மடைந்தார். இராணுவ வாகனம் மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். யாழ். தட்டாதெருச் சந்தியில் நேற்றிரவு 10.15 மணியளவில் இந்த விபத்து

இடம்பெற்றது. இராச வீதி, கோப்பாயைச் சேர்ந்த திருமதி சதீஸ்குமார் கீர்த்தனா (வயது 20) என்ற இளம் குடும்பப் பெண்ணே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார். இவரது கணவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு கே.கே.எஸ். வீதி வழியாக பயணித்த இராணுவ பஸ், முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை தட்டாதெருச் சந்தியில் வைத்து மோதித்தள்ளியது.
இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற பெண் வீதியில்

விழுந்தார். அவர் மீது பஸ் சில்லு ஏறியதில் அதில் நசியுண்டு அவர் உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் விபத்துக்குள்ளான பஸ்ஸையும் அவ்விடத்திலிருந்து எடுத்துச்செல்ல அனுமதித்தனர் என்று கூறப்பட்டது. சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது