siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

வவுனியாவில்13 வயது மாணவி தூக்கிலிட்டு மரணம்!!

வவுனியா ஆச்சிபுரம் 8 ஆம் ஒழுங்கையில் நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயதுடைய மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது$$
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது; கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவி (வயது – 13) மருந்து
 குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் பெற்றோரினால் காப்பாற்றப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
 மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டு குணமடைந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் வீடு திரும்பியுள்ளார்.
இந் நிலையில் இன்று மாலை வீட்டில் எவருமற்ற சமயத்தில் தூக்கில் தொங்கியுள்ளார்.வெளியே சென்றிருந்த தாய் வீடு திரும்பிய போது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட தனது 
மகளை அவதானித்துள்ளார். எனினும், மகள் இறந்த நிலையிலிலேயே காணப்பட்டுள்ளார். அயலவர்களின் உதவியுடன் சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
தற்போது சடலம் பிரதேச பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 26 பிப்ரவரி, 2018

தாயார் மகன் வெளிநாடு சென்ற விரக்தியில் தூக்கிலிட்டு தற்கொலை

கோண்டாவில் மேற்கில் வளவு ஒன்றில் இருந்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது மகன் வெளிநாடு சென்றதால் சிலநாட்களாக இவர் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டார். மாமரத்தில் இவர் தூக்கில் தொங்கியுள்ள நிலையில் இவரது கணவரும் பிள்ளைகளும் இவரை முதலில் கண்டு பொலிஸாருக்கு தகவல் 
வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தினர். இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

மரண அறிவித்தல் நடிகை ஸ்ரீதேவி காலமானார்

அவருக்கு வயது 54
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரையுலகில் கோலோச்சியவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். பின்பு இந்தி திரையுலகம் வரை சென்று தன்
 காலடியைப் பதித்தவர். 
ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நேற்று இரவு 11.30 மணியளவில்
 அவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இந்தத் தகவலை அவருடைய உறவினர் சஞ்சய் உறுதி செய்தார். இந்த மரணம் நிகழ்ந்தபோது 
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்துள்ளனர். மரண செய்தியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனமும் உறு செய்துள்ளது. 
ரஜினி, கமல் போன்ற தமிழின் உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீதேவி. அவர் நடித்த 16 வயதினிலே,
 மூன்றாம் பிறை போன்றவை முக்கியமானப் படங்கள். திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகிய அவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தின் 
மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆனார். பத்மஸ்ரீ, ஃபிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார். அவருடைய மரணம்  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இது திரையுலகுக்கு மிகப்பெரும் இழப்பாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


மரண அறிவித்தல், ¨திருமதி சுந்தரலிங்கம் குகனேஸ்வரி.23.02.18

அன்னை மடியில் : 1 நவம்பர் 1950 — ஆண்டவன் அடியில் : 23 பெப்ரவரி 2018
யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் குகனேஸ்வரி.(வவா) அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்வராசா தம்பதிகளின் அன்பு மருமகளும், சுந்தரலிங்கம் அவர்களின் 
பாசமிகு மனைவியும்,
யோகானந்தேஸ்வரி, ஆறுமுகசிகாமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவகி(லண்டன்), அஜிதரன், தினேஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெயதேவன்(லண்டன்), விக்னுதன் ஆகியோரின் 
அன்பு மாமியாரும்,
சுதர்ஷசன், சுதாகரன், சுசிந்திரன், சசிகரன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
குலேஸ், கிதுஸ், தானியா, தஸ்வினா ஆகியோரின் பாசமிகு 
பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயதேவன்(வேல்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939019831
விக்னுதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775039649
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல்,செல்வி லக்‌ஷி சசிகுமார்.22.02.18

மலர்வு : 3 யூலை 2005 — உதிர்வு : 22 பெப்ரவரி 2018
சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லக்‌ஷி சசிகுமார் அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று காலமானார். 
சசிகுமார்(நயினாதீவு), பக்தமீரா(உசன்) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
லவ்சிகா அவர்களின் அன்புச் சகோதரியும்,
முத்துலட்சுமி(கனடா), காலஞ்சன்றவர்களான ஏகாம்பரம், தாமோதரம்பிள்ளை சின்னதங்கம் ஆகியோரின் 
அன்புப் பேத்தியும்,
தயாபரன் அம்பிகா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சதீஸ்குமார் நிவேதிகா(கனடா) தம்பதிகளின் அன்புப் பெறாமகளும்,
சசிகலா, ஆனந்தன்(கனடா), விஜயகலா, ததீஸ்வரன்(இந்தியா), சந்திரகலா, தவேந்திரன்(சுவிஸ்), மேனகா, பிரதீபன்(கனடா) ஆகியோரின்
 பாசமிகு மருமகளும்,
கர்ஷான், காவித்யன் ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும்,
திருஷா, அருண், மேகவி, ஆதுஷன், தர்சிகா, சிவிகா, யாழவன், சஜீத், ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
தகவல்
சசிக்குமார், பக்தமீரா
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 24/02/2018, 04:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: UKBB Spitalstrasse 33, 4056 Basel, Switzerland 
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/02/2018, 03:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: UKBB Spitalstrasse 33, 4056 Basel, Switzerland 
கிரியை
திகதி: புதன்கிழமை 28/02/2018, 10:00 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Friedhof Hörnli, Hirtenweg 10, 4125 Riehen, Switzerland 
123
தொடர்புகளுக்கு
சசிகுமார் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792782361
தவேந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796968239
சந்திரா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786873361
சதீஸ் — கனடா
செல்லிடப்பேசி: +16478856356
உதயன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41788463635
ஜோன்சன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794249831
றஞ்சன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763461132
பாலா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763795100
தயாபரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +947760533947
சக்தி — சுவிட்சர்லாந்து
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 24 பிப்ரவரி, 2018

அமரர் மகாலிங்கம் செல்வகுமார் 31ம் நாள் நினைவஞ்சலி.25-02-18

மண்ணில் : 17 யூன் 1963 — விண்ணில் : 26 சனவரி 2018
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் செல்வகுமார் .(சுவிஸ் குமார்) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
வாழ்வியல் தத்துவம் நாங்கள் 
அறியாது தவிக்கின்றோம் 
பிறப்பும் இறப்பும் உலக 
இயக்கத்தின் கட்டாயம், 
ஆனால் பாசமும் பந்தமும் 
பிரிவில்லாத் தொடர் வலைகள்!

ஆண்டவன் படைப்பினை 
ஆழமாய் பார்த்தாலும்! 
பாசமாய் உங்களின் 
பண்பினை நினைகின்றோம்! 
நேசமாய் உங்களின் 
புன்னகையை ரசிக்கின்றோம்!

கனவுகள் நிறைவேறும் காலமதில் 
காலனவன் உங்களை அழைத்துவிட்டான் 
உங்கள் கனவுகளை கலைத்து விட்டான் 
காலத்தின் மடியில் துயில் கொள்ளும் 
உங்களை தினம் தினம் நினைத்து 
ஒன்று கூடி நாங்கள் உறவாடும் போது 
எங்கள் மத்தியில் நீங்களும் வந்து 
உறவாடுவீர்கள் என்று நம்புகின்றோம்! 
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை Paroisse de Bellevaux / st luc Aloys Fauquez 21 Case Postale129, 1000 Lusanne18, Switzerland எனும் முகவரியில் நடைபெறவுள்ளது. எங்கள் அன்புத் தெய்வம் நோயுற்றிருந்த
 வேளை ஓடோடி வந்தவர்களுக்கும் எமக்கு 7
ஆறுதல் கூறி உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள் பல கூறி நிற்கின்றோம். இந்த அழைப்பிதழை ஏற்று தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சாந்தி(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216467302
இராசகுமார் சேகர் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41784035850
இந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763667463
சிங்கன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798548726
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

அதிகாரிக்கு கொலை அச்சுறுத்தல் முகநூல் நட்பு: பெண் னை

யாழ். தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தரொருவரால் கொழும்பு வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றும் பெண் அதிகாரிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இந்த சம்பவத்தை தொடர்ந்து கொழும்பு வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றும் பெண் அதிகாரி உடல் நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அச்சுறுத்தல் விடுத்த குறித்த சமுர்த்தி உத்தியோகத்தரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர், வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றும் உத்தியோகத்தருடன் முகநூல் 
மூலம் நட்பாகியுள்ளார்.
இதனையடுத்து சமுர்த்தி உத்தியோகத்தரின் உறவினர் ஒருவர் கனடா செல்ல விசா எடுப்பதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளார்.
எனினும் அமைச்சின் உத்தியோகத்தர், அவரது கோவைகளை யாழில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம் கொடுத்து அனுப்புமாறும், அமைச்சின் கணக்குக்கு உரிய தொகையை வைப்பிலிடுமாறும் 
பணித்துள்ளார்.
இவையனைத்தையும் உடனடியாக நிறைவேற்றிய சமுர்த்தி உத்தியோகத்தர் சட்ட ரீதியாக அமைச்சின் அலுவலர் இவரது விடயத்தை கையாண்டு, உரிய கனடா தூதுவராலயத்திற்கு அமைச்சினூடாக ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
எனினும் தூதுவராலயம் இவரது ஆவணங்கள் தவறானவை, போலியானவை என கூறி ஆவணங்களை தூதுவராலயம் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீட்டு விலாசத்திற்கு திருப்பி அனுப்பியது.
இதனையடுத்து முகநூலில் நட்பாக இருந்த வெளிவிவகார அமைச்சு உத்தியோகத்தரை தொலைபேசியூடாக அச்சுறுத்தியதோடு, தனது உறவினர் மற்றும் நண்பர்கள் மூலமும் பல தடவைகள் கொலை அச்சுறுத்தலையும் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணை நடத்த அமைச்சு அதிகாரிகள் சமுர்த்தி உத்தியோகத்தரை கொழும்பு அமைச்சுக்கு அழைத்த போதும் அவர் கொழும்பிற்கு வராது தொடர்ச்சியாக அந்த உத்தியோகத்தரை அச்சுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து வெளிவிவகார அமைச்சின் அதிகாரியினால் சமுர்த்தி உத்தியோகத்தரை கைது செய்யுமாறு கோரி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல்,திரு அம்பலவாணர் தில்லைநாதன்.19.02.18

பிறப்பு : 28 பெப்ரவரி 1938 — இறப்பு : 19 பெப்ரவரி 2018

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் தில்லைநாதன் (ஓய்வுநிலை பிரதி அதிபர்- யாழ்/  யாழ். நடராஜராமலிங்க வித்தியாலயம், தலைவர்- ஆவரங்கால் சிவன் தேவஸ்தான தர்மகர்த்தா சபை) அவர்கள் 19-02-2018 திங்கட்கிழமை அன்று 
இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், செளந்தரியப்பிள்ளை(தெய்வானை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுகந்தி, தேவநாதன், ஸ்ரீரங்கநாதன், காலஞ்சென்ற சிவகெளரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சரஸ்வதிப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார், இந்திராதேவி, நிஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதர்சனா, பிரிசா, ரிசிகா ஆகியோரின் 
அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2018 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணியளவில் கரதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 

வீட்டு முகவரி:- 
சிவன் வீதி,
ஆவரங்கால், 
புத்தூர்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
தொலைபேசி: +94212058023
செல்லிடப்பேசி: +94718151764

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 15 பிப்ரவரி, 2018

சிலாபத்தில் மனைவியை கொலை செய்தவர் 26 வருடங்களின் பின் கைது


தனது மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற நபர் ஒருவர், 26 வருடங்களின் பின்னர் கைது
 செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் பகுதியிலேயே கடந்த 1992 ஆம் ஆண்டு இந்த கொலைச்  சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்  தமது பிள்ளைகளை பார்வையிடுவதற்காக வரு​கைத்தந்திருந்த போதே, சிலாபம் பொலிஸாரால் கைது 
செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

தோட்டபகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்கள் வைத்தியசாலையில்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா மணிக்கவத்தை தோட்டபகுதியில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 12 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார்
 தெரிவித்தனர் .
குறித்த பெண் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த வேலையில் மரம் ஒன்றில் இருந்த குளவி கழைந்து பெண் தொழிலாளர்களை தாக்கியதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் 
தெரிவித்தனர்.
காயங்களுக்கு உள்ளானவர்கள் தொடர்ந்தும் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை 
குறிப்பிடத்தக்கது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 10 பிப்ரவரி, 2018

மரண அறிவித்தல் அமரர் .ஆறுமுகம் நடராசா 10.02.18

இறப்பு : 10 02  2018 
கெருடாவிலை பிறப்பிடமாகவும்,ஏழாலையை வாழ்விடமாகவும்  யாழ்.  நவற்கிரி  புத்தூரைய் வசிப்பிடமாகவும்  கொண்ட .லயன். திரு ஆறுமுகம். நடராசா.(இளைபாறிய ஆசிரியர் ) அவர்கள் 10-02-2018 சனிக் கிழமை  அன்று   காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற  ஆறுமுகம்,சரஸ்வதி   தம்பதிகளின் அன்பு மகனும் ,திருமதி  மனோன்மணி   . 
 அவர்களின் அன்புக்  கணவரும் 
       பகிதரன்  நோர்வே    பகிறதி அமெரிக்கா .வளர்மதி  இலங்கை . ஆகியோரின் அன்புத்தந்தை யும்  ஆவர்    
   காலஞ்சென்ற சிவபாக்கியம்  சுப்பிரமணியம் .வெள்ளைத்தம்பி.  தங்கராஜா ஆகியோரின்  அன்பு  சகோதரனும்  ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை.12- 02-01-2018 . திங்கக்கிழமை அன்று  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நவற்கிரி நிலாவரை   இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
முகவரி .நவற்கிரி, புத்தூர் 
தகவல்
குடும்பத்தினர
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 8 பிப்ரவரி, 2018

மரண அறிவித்தல் மயில்வாகனம் மனோகரன் 06.02.18

பிறப்பு 07.06.1951  இறப்பு 06.02.2018
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் அவர்கள் 06.02.2018
செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், பாலராணி(வதனி) அவர்களின் கணவனும்
(காலஞ்சென்ற சுஐிதன் )  மதுரிகாவின் தந்தையும்,  மயில்வாகனம்பூரணம்(கோப்பாய்) தம்பதிகள் மகனும்,மற்றும்  காலஞ்சென்ற சுப்பிரமணியம் பரமேஸ்வரி(சிறுப்பிட்டி) தம்பதிகளின்அன்புமருமகனும்
(கனடா)நாகராணி பாலசிங்கம்  .நாகேந்திராஜா (சிறுப்பிட்டி)ஶ்ரீபாலகிருஷ்ணன் (யேர்மனி)ஶ்ரீகாந்தன் (லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னார் இமைகிரியைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை
 இடம்பெறும்
தொடர்புகளுக்கு   — வதனி கனடா தொலைபேசி: +19052010489 கேசவன் — கனடா தொலைபேசி: +16473083938
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 5 பிப்ரவரி, 2018

ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மரணம் !

யாழில் ஊஞ்சல் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் கோப்பாய் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், ஊஞ்சல் கயிறு சிறுமியின் கழுத்தில் இறுகியதால் 
சுவாசத்தடை ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சிவநேசன் அக்சயனி என்ற குறித்த சிறுமி நித்திரை செய்து கொண்டிருந்த போது பெற்றோர் சந்தைக்கு 
சென்றுள்ளனர்.
சந்தைக்கு சென்று அவர்கள் வீட்டிக்கு வந்த போது சிறுமி கட்டிலில் காணப்படாத நிலையில் அவரை பெற்றோர் தேடியுள்ளனர்.
இதன்போது கழுத்து பகுதி ஊஞ்சல் கயிற்றில் இறுகிய நிலையில் அக்சயனி காணப்பட்டதை அவதானித்த பெற்றோர் அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு
 சென்றுள்ளனர்.
எனினும் சிறுமி வைத்தியசாலைக் கொண்டு வரும் முன்பே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது சிறுமியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்..


ஆண்கள் இருவரின் சடலங்கள் மட்டக்களப்பில் மீட்பு!மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு வேறு இடங்களில் ஆண்கள் இருவரின் சடலங்கள் நேற்று (சனிக்கிழமை) மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பிளாந்துறை வடக்கைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான குமாரசிங்கம் செந்தில்குமரன் (வயது 36) மற்றும் மட்டக்களப்பு 
- நகர பொலிஸ் பிரிவிலுள்ள இரத்தினம் வீதி கருவேப்பங்கேணியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான கிறிஸ்டி ஜோயல் ஜோதிராஜ் (வயது 38) ஆகியோரின் சடலங்களே தத்தம் வீடுகிளிலிருந்து
 மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த இருவரும் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவங்கள் பற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் சமீப காலமாக வயது வித்தியாசமின்றி தற்கொலைகளும் அகால மரணங்களும் அதிகரித்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 3 பிப்ரவரி, 2018

மரண அறிவித்தல், திரு கார்த்திகேசு பாலசிங்கம்.03.02.18

தோற்றம் : 14 சனவரி 1939 — மறைவு : 3 பெப்ரவரி 2018
யாழ். தோப்பு ,அச்சுவேலியை   பிறப்பிடமாகவும். (தோப்பு ,சங்கக்கடை வீதி யை ), வதிவிடமாகவும் கொண்ட( பிரபல லொறிச் சாரதி )   கார்த்திகேசு பாலசிங்கம் அவர்கள் 03-02-2018 சனிக்கிழமை அன்று
 இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திரவியம்(சின்னமணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
வளர்மதி(கனடா), தங்கலிங்கம்(சுவிஸ்), சர்வானந்தம், சதானந்தம், திகழ்மதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, சின்னராசா, தங்கம்மா மற்றும் பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரட்ணராஜா, ஜெயவதனி, விஜிதா, பரிமளா, சிவகுமார் ஆகியோரின்
 அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, கனகம்மா, தங்கமணி, இரத்தினராசா மற்றும் தெய்வேந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அருமைநாதன், ஜெகநாதன்(சுவிஸ்), மைகிறிநாதன்(இத்தாலி) ஆகியோரின் சிறிய தந்தையும்,
கிசோர், றம்மியா, டிவாகர், டிவேகா, டிஷானன், கீர்த்திகா, திசானன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2018 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
 வீட்டு முகவரி: 
இராசவீதி, 
( தோப்பு ,சங்கக்கடை வீதி ) 
தோப்பு ,அச்சுவேலி
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர் 
சர்வானந்தம்(மகன்)
தொடர்புகளுக்கு
தங்கலிங்கம்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789097361
திரவியம்(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94769821391
சர்வானந்தம்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +491787641573
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

மாதகல் பகுதியில் இளம் பெண் மர்மமான முறையில் படுகொலை?

யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை இந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
22 வயதான அன்டன் உதயராஜா டிலக்ஸி திருமணமான பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
சம்பவம் இடம்பெற்ற தினமான இன்று தனது கணவரும் பெற்றோரும் கோயிலுக்குச் சென்றிருந்த சமயம் இவர் மட்டும் வீட்டில் தனித்திருந்துள்ளார்.
வெளியே சென்றிருந்தவர்கள் வீடு வந்து பார்த்தபோது, டிலக்ஸி இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.
அதேசமயம், அவர்களது வீடு கொள்ளையடிக்கப்பட்டிருந்ததையும் அவர்கள் கவனித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டைக் கொள்ளையடிக்கும் நோக்கில் வீடு புகுந்த மர்ம நபர்கள், சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான டிலக்ஸியைக் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




யாழில் பிறந்து 2 மணி நேரத்தில் இறந்த ஆண் குழந்தை

யாழ்ப்பாணத்தில் பிறந்து இரண்டே மணித்தியாலங்களான சிசு வொன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மல்லாகம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் கல்பனா என்பவ ருக்கு நேற்று முன்தினம் மாலை 6 மணியள வில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
எனினும் குறித்த குழந்தையானது சுவாசிக்க முடியாது சிரமப்பட்டதையடுத்து உடனடியாக இரவு 8 மணியள வில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டிருந்தது
ஆனால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போதே குறித்த குழந்தை உயிரிழந்துவிட்டதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. 
இதனை தொடர் ந்து குறித்த மரணம் தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற் கொண்டதையடு த்து சிசுவின் சடல மானது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>