siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

பாடசாலைகளுக்கு நாட்டின் 6 ஆம் திகதி வரை விடுமுறை

எதிர்வரும் 29ம் திகதி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள், மே மாதம் 6ம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளன.அத்துடன் அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் மே மாதம் 6ம்
 திகதி மீள ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி தலைமையில் நேற்று கூடிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் வைத்து, இதுவரையில் 
பாரிய அளவான வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான பலர் கைதாகியுள்ளமை குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.அத்துடன் இந்த முறை தொழிலாளர் தின நிகழ்வுகளை நடத்தாதிருக்க அனைத்து தரப்பிடமும் கோருவதற்கும் தேசிய பாதுகாப்பு சபையில்
 தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரச நிறுவனங்கள், முக்கிய சுற்றுலா விருந்தகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடுகின்ற இடங்களில் பாதுகாப்பினை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 25 ஏப்ரல், 2019

மரண அறிவித்தல் அமரர் இராசரத்தினம்,.பரிமளம்.,24.04.19

 
யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாக்கொண்ட                 
திருமதி இராசரத்தினம்.பரிமளம்  பரிமளம்  அவர்கள் 24-04-2019 புதன் கிழமை அன்று காலமானார். அன்னார், 
  காலஞ்சென்ற அமரர்  இராசரத்தினம்  அவர்களின் அன்பு மனைவியும்   காலஞ்சென்றவர்களான
மாரிமுத்து   தம்பதிகளின் புத்திரியும்   காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை,பாலா ,சிங்கம்   மற்றும் 
சின்னத்துரை, பேத்தச்சி   பார்க்கியம் ஆகியோரின்  
அன்புச்சகோதரியும்  
 வசந்தகுமார்    மலர்வதான  சுகந்தி   ஆகியோரின் அன்புத் தாயாரும் , 
சரிதா  கீர்த்தன் கீர்த்தி லவன்சி  ஆகியோரின்அன்புப் பேத்தியம் ஆவார் 
 அன்னாரின் இறுதிக்கிரியை 26,-04-2019 வெள்ளிக் கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
வீட்டு முகவரி: 
(எல்லாளன் வீதி ) 
நவற்கிரி .புத்தூர் 
-----------
தொடர்புகளுக்கு

0094,771179415,

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>திங்கள், 22 ஏப்ரல், 2019

போக்குவரத்துசேவைகல் யாழ்.குடாநாட்டில் முடக்கம்

யாழ்.குடாநாட்டில் இன்று பிற்பகல் நான்கு மணியுடன் இலங்கை போக்குவரத்துச்சபையின் அனைத்து பகுதிகளுக்குமான சேவைகள் நிறுத்தப்படுவதாக யாழ்.நகரப்பகுதியில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே தனியார் சேவைகள் நிறுத்தப்பட்டநிலையில் இலங்கை போக்குவரத்துச்சபையும் தனது சேவையை நிறுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6 மணிவரை ஊரடங்குச்சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 16 ஏப்ரல், 2019

குப்பிளாநில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி

யாழ்  குப்பிளான், மயிலங்காடுப்பகுதியில்  மின்னல் தாக்கத்தால் இரண்டு பெண்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போதே இந்த இடர் இடம்பெற்றது என்றும் பொலிஸார் கூறினர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில இடங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில்
சுன்னாகம் குப்பிளான், மயிலங்காடு பகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது


யாழில் புதுவருட தினத்தில் 2 இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

யாழ் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் ஒருவர் கவலைக்கிடமாகவுள்ளதாக மேலும்
 அறியமுடிகிறது.
குறித்த விபத்து 15,04,2019, மாலை சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது,
இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

போக்குவரத்து ஒழுங்கு விசேட பஸ் சேவையின் இரண்டாம் கட்ட சேவைகள்

புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் நகரங்களுக்கு வருவதற்காக போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் உபாலி மாரசிங்ஹ தெரிவித்துள்ளார். 
பண்டிகைக்கால விசேட பஸ் சேவையின் இரண்டாம் கட்ட சேவைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். 
இதேவேளை, கிராமப்புறங்களில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தரும் மக்களின் வசதிகள் கருதி விசேட போக்குவரத்துகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாராச்சி 
தெரிவித்துள்ளார். 
விசேட இலங்கை போக்குவரத்து மற்றும் தனியார் பஸ் சேவைகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின், அவை தொடர்பில் பொதுமக்களால் தொலைபேசியின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும். இதற்கான தொலைபேசி இலக்கங்கள் 
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு உட்பட்ட பஸ்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை 0117 555 555 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் முறையிட முடியும். இதற்கென கையடக்கத் தொலைபேசியும் பயன்படுத்த முடியும். அதற்கான இலக்கம் 0771 056 032 ஆகும். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பஸ்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிப்பதற்கு 1955 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தை 
அறிமுகப்படுத்த முடியும். 
அங்கீகரிக்கப்பட்ட அனுமதிப் பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் பஸ்கள் தொடர்பாகவும், பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் தொடர்பாகவும் இந்தத் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக முறைப்பாடுகளை 
மேற்கொள்ள முடியும். 


கஸ்தானகஹவத்தயில் இசை நிகழ்விற்கு செல்ல முற்பட்ட இளைஞன் பலி

கொலன்ன, கஸ்தானகஹவத்த பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்விற்கு செல்வதற்காக தயாராக இருந்த இருவரை மோட்டார் சைக்கிள் வந்த இருவர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
இதன்போது பலத்த காயமடைந்த இளைஞன் கொலன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 
உயிரிழந்துள்ளான். 
17 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். 
சம்பவம் தொடர்பில் கொலன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பெண் ஒருவர் உட்பட இருவர் வெளிநாட்டு சிகரட்களுடன் கைது

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது 
செய்யப்பட்டுள்ளார். 
அவர்களில் ஒருவர் வேவல்தெனிய பகுதியை சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. 
குறித்த பெண்ணிடம் இருந்து 43,480 சிகரட்டுக்கள் 
கைப்பற்றப்பட்டுள்ளது.
அடுத்த நபர் மாத்தறை பகுதியை சேர்ந்த 25 வயதுடையவர் எனவும் அவரிடம் இருந்து 39,900 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
குறித்த இருவரிடம் இருந்து 83,380 சிகரட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 4,169,000 ரூபாய் என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 
சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வெள்ளி, 12 ஏப்ரல், 2019

விரைவில் காணி சுவீகரிப்பு !!!!!பாதுகாப்புச் செயலருடன் பேச்சு

யாழ்ப்­பா­ணம்,  மண்­டை­தீவு உட்­பட வடக்­கில் படை­யி­ன­ரின் தேவைக்­காக சுவீ­க­ரிக்­கத் திட்­ட­மிட்ட நிலங்­கள் தொடர்­பில் எதிர்­வ­ரும் 29ஆம் திகதி பாது­காப்பு அமைச்­சின் செய­லர் மற்­றும் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் ஆகி­யோ­ருக்கு இடை­யில் யாழ்ப்­பா­ணத்­தில் சந்­திப்­பொன்று 
இடம்­பெ­ற­வுள்­ளது.
மண்­டை­தீ­வில் நேற்­றை­ய­தி­னம் இடம்­பெற்ற காணி அள­வீட்டு முயற்சி கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னால் பாது­காப்பு அமைச்­சின் செய­ல­ரின் கவ­னத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.
இதன்­போது மண்­டை­தீவு உட்­பட யாழ்ப்­பா­ணத்­தில் மட்­டும் 45 இடங்­க­ளில் படை­யி­ன­ருக்கு நிலம் சுவீ­க­ரிக்க மேற்­கொள்­ளப்­ப­டும் முயற்­சி­கள் குறித்து இரா.சம்­பந்­தன் பாது­காப்­புச் செய­ல­ரின் கவ­னத்­துக்­குக் கொண்டு சென்­றார். இதை­ய­டுத்தே எதிர்­வ­ரும் 29ஆம் திகதி இந்­தச் சந்­திப்பு 
இடம்­பெ­ற­வுள்­ளது.
இந்­தச் சந்­திப்பு இடம்­பெ­றும் வரை­யில், அதா­வது எதிர்­வ­ரும் 29ஆம் திகதி வரை வடக்­கில் காணி சுவீ­க­ரிப்பு எது­வும் இடம்­பெ­றக்­கூ­டாது என்று சம்­பந்­த­னால் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்கை பாது­காப்பு அமைச்­சின் 
செய­ல­ரால் ஏற்­கப்­பட்­டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>மரண அறிவித்தல், திருமதி விஸ்வலிங்கம் பூபதி..11-04-19

தோற்றம்--31.03.1948  –  மறைவு ,11.04.2019 
யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும்,  உடுப்பிட்டி இமையாணனை வசிப்பிடமாகவும் கொண்ட பூபதி விஸ்வலிங்கம் அவர்கள் 11-04-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னவன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகன் தெய்வி தம்பதிகளின் 
அன்பு மருமகளும்,
விஸ்வலிங்கம்(சிவக்கொழுந்து- உரிமையாளர் எரிபொருள் விற்பனை நிலையம் சிறுப்பிட்டி) அவர்களின் 
அன்பு மனைவியும்,
கௌதமன்(ஜேர்மனி), கௌதீசன், கௌசலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற கௌரூவன் மற்றும் கௌசியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பிள்ளையம்மா, நாகலிங்கம், இரத்தினம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரியதர்ஷினி(ஜேர்மனி), தாட்சாயினி, கிருத்திகா(ஜேர்மனி), நிமலன்(ஆசிரியர் மு/மாங்குளம் மகா வித்தியாலயம்) ஆகியோரின்
 பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற நாகம்மா, மகா, திருநாமம்(கடவுள்), காலஞ்சென்ற மாணிக்கம், அன்னபாக்கியம், தவனேஸ்வரி, புஷ்பராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற செல்லத்துரை, சிறீஸ்கந்தராசா, நேசமணி ஆகியோரின் பாசமிகு சகலியும்,
அஸ்வின், ரோஸ்வின், பிரனீத், ருதிஷா, பவதாரணி, ஐரிஷ், ஆருஷ், றனீத், ஆருத்திரா ஆகியோரின் பாசமிகு 
பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம்
 செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
.எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் .
தகவல்: குடும்பத்தினர்

புதன், 10 ஏப்ரல், 2019

மரண அறிவித்தல், திரு கனகசபை நல்லையா .09.04.19

                                 தோற்றம்-  05 ,08 1933  --  மறைவு -09, 04 2019                                     
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை நல்லையா (ஓய்வுபெற்ற காவற்துறை உத்தியோகத்தர்)அவர்கள் 09-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், 
தவமணி அவர்களின் அன்புக் கணவரும், 
பாஸ்கரன்(லண்டன்), மாலினி(லண்டன்), பவானி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான பொன்னையா, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜானகி(அவுஸ்திரேலியா), ஏகாம்பரம்(லண்டன்), பிரதாபன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், பாலசுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்ற கணேசமூர்த்தி, சிவஞானம்(லண்டன்), வள்ளிநாயகி(லண்டன்), சுந்தரமூர்த்தி(லண்டன்), அருளானந்தம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 
காருண்யா, ஸ்ரீநிதி, சாம்பவி, அஞ்ஞனா, மேதா, மதுரா, கணாதிபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் .

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 பாஸ்கரன் Mobile : +447438027017  மாலினி Mobile : +447404531322 Phone : +442036097094  பவானி Mobile : +447493238095 Phone : +442084268167  தவமணி Mobile : +94769059892 Mobile : +94776160437
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>செவ்வாய், 9 ஏப்ரல், 2019

அனல் காற்று கொழும்பை தாக்கும் அபாயம்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
வளிமண்டவியல் திணைக்களம் இது தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டள்ளது
அதற்கமைய கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் இன்று கடும் வெப்பமான காலநிலை நிலவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
38 தொடக்கம் 40 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையின் பல பாகங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சோர்வு, களைப்பு என்பனவற்றிலிருந்து 
பாதுகாத்து கொள்வதற்கு பொது மக்கள் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
வடமேற்கு, வட மத்திய, கிழக்கு மாகாணம், கம்பஹா, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் கடும் வெப்பமான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் இலங்கையின் பல பாகங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என
                                               எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நவற்கிரி நிலாவரைப் பகுதியில் கைகுண்டு வெடித்து சிறுவன் காயம்

யாழ் நவற்கிரி புத்தூர் மேற்கு நிலாவரைப் பகுதியில் சிறுவனொருவன்
 கைக்குண்டொன்றை எடுத்து விளையாடியதில் அது வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் இன்று 09,04,2019,செவ்வாய்க்கிழமை(09)பிற்பகல் 
நடைபெற்றுள்ளது
இந்தச் சிறுவன் தோட்டத்திற்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வெற்றுக் காணியொன்றிலிருந்து கைக்குண்டொன்றை எடுத்து அதனை ஏதோ விளையாட்டுப் பொருள் என நினைத்து வீதியில் எறிந்து 
விளையாடியுள்ளான்.
இதன்போது குறித்த கைக்குண்டு வெடித்தது. சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுப் பின் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவத்தையடுத்து அப்பகுதியில் அச்சுவேலிப் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பாக பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து தீவிர விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஹோன்களை பயன்படுத்துவது இலங்கையில் வரும் புதிய தடை

இலங்கையில் வாகனங்கள் சத்தமாக ஹோன்களை பயன்படுத்துவது தடை செய்யப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஜூலை முதலாம் திகதியில் இருந்து இந்த தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த தடையின்கீழ் வாகனங்களில், தேவையற்ற மின்குமிழ் அலங்காரமும் தடைசெய்யப்படவுள்ளது.
எனினும் அவசரசேவை வாகனங்கள், பொலிஸாரின் வாகனங்கள், தீயணைப்பு படை வாகனங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்களிக்கப்படவுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 8 ஏப்ரல், 2019

அமரர் திரு க.சுப்பிரமணியம்.8ம் ஆண்டு நினைவஞ்சலி.08,04,19

மண்ணில் : 06- பெப்ரவரி 1932 — விண்ணில் : 06 ஏப்ரல் 2011
திதி : 08 ஏப்பிரல் .2019.இன்று
யாழ். மாவிடடபுரத்தை பிறப்பிடமாகவும், நவற்கிரி புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த.அமரர் திரு .(ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணியம் ) அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எட்டாண்டு போயும் என்றும் எம்மோடு இருக்கும் ஏந்தலே!!
எம்மை விட்டேகி ஏழாண்டு போனதையா!
ஏங்கியே அழுகின்றோம் ஏந்தலே!!
தாங்கியே பிடிக்க தலைவனின்றி
தவிக்கின்றோம் ஐயா!
வாங்கியே நீ வைத்தவற்றில்
உன் வண்ணவதனம் கண்டு
ஒங்கியே அழுது ஒவ்வொரு நாளும்
இருக்கின்றோம் ஐயா!
உறவி தந்து! உணர்வு தந்து!!
எம்மோடு ஒன்றாய் இருந்த உத்தமனே!
உன்னால் விளைந்த வித்துகள்
இப்போ விருட்சமாய் வெளிவரும் வேளையில்
உன் வெப்பம் தணிக்கும் இவ் விருட்சத்தை விலக்கி
விண்ணுலகு ஏன் தான்
விரைந்திட்டாய் ஐயா!
வளங்கள் எதுதான் வாழ்வில் இருந்தாலும்
வாழ்க்கை எமக்குத்தந்த வள்ளல் நீர்
வாணுலகு போய் ஏழாண்டு வந்தும்
வாடிவதங்கி வாட்டமுடன்
வையமிங்கு வாழ்கின்றோம்
எங்கள்  ஐயா!
வாய்ப்புக் கிடைத்தால் வாண் விட்டு
வையம் வந்து உன் வண்ணமுகம் காட்டி
உன் கன்றுகளோடு கைகோர்த்து
களி கொள்ள மாட்டாயா எங்கள்
தலைவனே!
எட் டாம்  ஆண்டில் நினைத்து நீர் மல்கும்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை
பிரதிக்கின்றோம் ..ஓம் சாந்தி ..ஓம் சாந்தி..ஓம் சாந்தி
என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்
வாழும் மனைவி, பிள்ளைகள்
,மருமக்கள் சகோதரர்கள்
தகவல் குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>சனி, 6 ஏப்ரல், 2019

திருமதி சபாரத்தினம் 3ஆண்டு .நினைவஞ்சலி 08-04-2019

உதிர்வு .08.04.2016
திதி. 06-04-2019 இன்று 
யாழ் நவற்கிரியை   பிறப்பிடமாகவும் தற்காலிக வதிவிடமாக உரும்பிராயில் வசித்து வந்த  
அமரர். திரு திருமதி சபாரத்தினம்  ஞானமணி ( ஞானம் )அவர்களின் 2ஆண்டு நினைவஞ்சலி  06-04-2019 இன்று 
காலச்சுழற்சியில் மூன்றாம்  ஆண்டுகள்   கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
எங்கள் அம்மா   
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
 அன்னாரின்
 ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் நவற்கிரி நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் , பிள்ளைகள் 
. தகவல் குடும்பத்தின
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 3 ஏப்ரல், 2019

எதிர்வரும்-15 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கையில் அரச விடுமுற

சித்திரைப் புத்தாண்டுக்கு மறுநாளான எதிர்வரும்-15 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கையில் அரச விடுமுறை தினமாக 
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி
 கூறியுள்ளார். 
இதேவேளை,இந்த வருடம் தமிழ்- சிங்களப் புதுவருடப் பிறப்பு சனி மற்றும் ஞாயிறு தினங்களில்  கொண்டாடப்படுகின்றமையால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
 தெரிவித்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 2 ஏப்ரல், 2019

மூத்த தமிழ் திரையுலக பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்.

மூத்த தமிழ் திரையுலக இயக்குநரும், நடிகருமான மகேந்திரன் 2.4.19 (செவ்வாய்க்கிழமை) சென்னையில் காலமானார்.
கடந்த சில நாட்களாக அவர் உடல் நலக்குறைவு காரணமாக‌ சென்னை அப்போலோ மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளிவந்த ‚பேட்ட‘ திரைப்படத்தில் மகேந்திரன் நடித்திருந்தார். மேலும் தெறி, சீதக்காதி,மிஸ்டர் சந்திரமௌலி போன்ற பல அண்மை திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.
தமிழ் திரையுலகில் மிகவும் சிலாகிக்கப்பட்ட திரைப்படமான ‚உதிரிப்பூக்கள்‘ திரைப்படம் மகேந்திரன் இயக்கிய சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை உள்பட பல திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படங்களில் மகேந்திரனின் இயக்கும், ரஜினிகாந்தின் நடிப்பு மற்றும் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவரது மகனான ஜான் மகேந்திரனும் சச்சின் உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அமரர் தம்பு செல்வராஜா 5ம் ஆண்டு நினைவஞ்சலி.02.04.19

.>மண்ணில் 12, ஆகட்ஸ்.1933. — விண்ணில் :2 ஏப்ரல் 2014
திதி -.02.04.2019
யாழ்.நவற்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடா– நவற்கிரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் தம்பு செல்வராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமக்கு  உயிர் தந்தஉங்கள்  உயிா் மனறந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் எனது மனதில் வாழூம் தெய்வத்தின் நினைவு நாள்  02,0419,இன்று
எங்கள் வாழ்வில் ஒளியேற்றி
ஐந்தாண்டு   போயும் என்றும் எம்மோடு இருக்கும் ஏந்தலே!!
எம்மை விட்டேகி ஏழாண்டு போனதையா!
ஏங்கியே அழுகின்றோம் ஏந்தலே!!
தாங்கியே பிடிக்க தலைவனின்றி
தவிக்கின்றோம் ஐயா!
வாங்கியே நீ வைத்தவற்றில்
உன் வண்ணவதனம் கண்டு
ஒங்கியே அழுது ஒவ்வொரு நாளும்
இருக்கின்றோம் ஐயா!
உறவி தந்து! உணர்வு தந்து!!
எம்மோடு ஒன்றாய் இருந்த உத்தமனே!
உன்னால் விளைந்த வித்துகள்
இப்போ விருட்சமாய் வெளிவரும் வேளையில்
உன் வெப்பம் தணிக்கும் இவ் விருட்சத்தை விலக்கி
விண்ணுலகு ஏன் தான்
விரைந்திட்டாய் ஐயா!
வளங்கள் எதுதான் வாழ்வில் இருந்தாலும்
வாழ்க்கை எமக்குத்தந்த வள்ளல் நீர்
வாணுலகு போய் ஏழாண்டு வந்தும்
வாடிவதங்கி வாட்டமுடன்
வையமிங்கு வாழ்கின்றோம்
எங்கள்  ஐயா!
வாய்ப்புக் கிடைத்தால் வாண் விட்டு
வையம் வந்து உன் வண்ணமுகம் காட்டி
உன் கன்றுகளோடு கைகோர்த்து
களி கொள்ள மாட்டாயா எங்கள்
தலைவனே!
ஐந்தாம்  ஆண்டில் நினைத்து நீர் மல்கும்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை
பிரதிக்கின்றோம் ..ஓம் சாந்தி ..ஓம் சாந்தி..ஓம் சாந்தி
என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்
வாழும் மனைவி, பிள்ளைகள்
,மருமக்கள் சகோதரர்கள்
தகவல் குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>திங்கள், 1 ஏப்ரல், 2019

அதிகூடிய வெப்பநிலை எதிர்வரும் 5 தொடக்கம் 15 ம் திகதி வரை

எதிர்வரும் வாரம் அதிகூடிய வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்ப்படுவதால், பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் 
கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரையான காலப்பகுதியில் இலங்கையில் சூரியன் உச்சம் கொடுக்கும் என்பதால், இக்காலப்பகுதயில் பகல் மற்றும் இரவுவேளைகளில்  அதிகூடிய வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.
தென் மாகாணத்தில் திக்வெல்ல, கக்கணதுர, கொட்டவில ஆகிய பகுதிகளில் எதிர்வரும் 5ஆம் திகதி சூரியன் உச்சம் கொடுக்கும் என்பதோடு, வட மாகாணத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி சூரியன் உச்சம் கொடுக்கும்.

மேலும், அதிகூடிய வெப்பநிலை குருநாகல் மாவட்டத்தில் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
குருநாகல் மாவட்டத்தில் சாதாரணமாக நிலவும் 32பாகை செல்சியஸ் வெப்பநிலை, தற்போது 38.8பாகை செல்சியசாக அதிகரித்துக் காணப்படுகின்றது எனவும் வளிமண்டலவியல்
 திணைக்களம் தெரிவித்தது.
இவ்வெப்பமான காலப்பகுதியில் தண்ணீரை அதிகளவில் அருந்தி தங்களைப் பாதுகாக்குமாறும் பொதுமக்களிடம் சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் வட மேல் மாகாணம் மற்றும் அம்பாறை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை, அம்பாந்தோட்டை, கம்பஹா மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை சுட்டி எனப்படும் உடல் வெப்பநிலை பாரிய அளவில் அதிகரிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல், திரு வல்லிபுரம் செல்லத்துரை (தனையா).01.04.19

தோற்றம் : 02,12,1934, — மறைவு : 01 ,04 2019
யாழ். தோப்பு ,அச்சுவேலியை   பிறப்பிடமாகவும். (தோப்பு ,ராஜா வீதி யை), வதிவிடமாகவும் கொண்ட   திரு வல்லிபுரம் செல்லத்துரை (தனையா)  அவர்கள் .01.04.19  திங்கள்க் கிழமை அன்று
 இறைபதம் அடைந்தார். அன்னார்சரஸ்வதி அவர்களின்  
அன்புக்கணவரும் 
 திரு,சிவரறன்சன் (சுவிஸ்)  காலஞ்சென்ற  தவறன்சன்  ( ஜெர்மனி )    சிவறன்சினி  (இலங்கைஆகியோரின் 
பாசமிகு தந்தையும் ஆவர் 
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம்  தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, சின்னாச்சி தம்பதிகளின்  அன்பு மருமகனும்,  காலஞ்சென்ற அமரர் ஆறுமுகசாமியின் அன்புச் சகலனும் காலஞ்சென்ற அமர சின்னம்மா 
    (ஜெர்மனி )அவர்களின் மைத்துனரும் ஆவார் 
அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் தோப்பு   இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்ப ட்டது .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்...
குடும்பத்தினர்
 வீட்டு முகவரி: 
(இராசவீதி,வீதி ) 
தோப்பு ,அச்சுவேலி
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
சிவரறன்சன்
,செல்லிடப்பேசி,
077 5406368,,,
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>