siruppiddy

18

siruppiddy

unkal

unkal
தாயக செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாயக செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 நவம்பர், 2024

நாட்டில் மட்டக்களப்பில் வெள்ளத்தால் வயலுக்குள் சிக்கியுள்ள ஏழு விவசாயிகள்

நாட்டில்  மட்டக்களப்பு புல்லுமலை தம்பட்டி மற்றும் மாவடிஓடை வண்ணாத்தி ஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை 
நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து வெளியேறி வீடு திரும்ப முடியாமல் சிக்குண்டுள்ளதாக
 மாவட்ட விவாசய அமைப்பின் தலைவர் ரமேஸ் தெரிவித்தார.
அப்பகுதியில் உள்ள வயல்களில் வேளாண்மை காவலுக்குச் சென்ற மற்றும் வேளாண்மை நடவடிக்கைகளுக்காக புல்லுமலை தம்பட்டி 
வயல் பிரதேசத்தில் 3 விவசாயிகளும் மாவடி ஓடை வண்ணாத்தி ஆறு வயல் பிரதேசத்தில் 4 பேர் உட்பட 7 விவசாயிகள் சென்றிருந்தனர்.
இந்நிலையில், கடும் மழை காரணமாக அந்த பகுதியிலுள்ள குளங்களின் வான்கதவு திறக்கப்பட்டதையடுத்து, வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து, அந்த விவசாயிகள் தமது வாடிகளிலிருந்து வீடுகளுக்கு வெளியேற முடியாமல் சிக்குண்டுள்ளனர்.
இவர்களை மீட்பதற்காக கடற்படையினர் மற்றும் விமானப் படையினரின் உதவி கோரியுள்ளதாகவும் வெள்ள நீர் அதிகமாக 
பாய்ந்தோடுவதால் படகில் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் மேகம் இருள் சூழ்ந்து காற்று வீசுவதால் விமானப்படையின் ஹெலிகொப்டரில் பயணிக்க முடியாதவாறு காலநிலை பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியிருப்பதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், வயல் பகுதிகளில் சிக்குண்டிருப்பவர்களுடனான தொடர்பு தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் இவ்விடயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும்
 வயல் பகுதியில் சிக்ண்டிருப்பவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது 


புதன், 21 ஆகஸ்ட், 2024

வைத்தியரின் அலட்சியத்தால் வவுனியாவில் உயிரிழந்த குழந்தைக்கு தந்தை பொலிசில் முறைபாடு

வவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தினால் தனது குழந்தை பிறந்து இறந்துள்ளதாக குழந்தையின் தந்தையினால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மரணித்த சிசுவின் தந்தையார் தெரிவிக்கும் போது, தனது மனைவியினை பிரவசத்திற்காக கடந்த 17 ஆம் திகதி வவுனியா வைத்தியசாலையின் 7 ஆம் விடுதியில் 
அனுமதித்திருந்தேன்.
மறுநாள் அவருக்கான மருந்துகள் வழங்கப்பட்ட நிலையில் அவரது பன்னீர்குடம் உடைந்துள்ளது. இதனை தாங்கமுடியாத எனது மனைவி அங்குள்ள தாதி ஒருவருக்கு விடயத்தினை 
தெரிவித்திருந்தார். 
இதன்போது அங்கு கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் தொலைபேசியினை பயன்படுத்திக்கொண்டு, அது தொடர்பாக கவனமெடுக்காமல் அது ஒரு பிரச்சனையுமில்லை என தெரிவித்திருந்தார். 
பின்னர் வலிக்குரிய மருந்தினை மனைவிக்கு தந்துவிட்டு உறங்குமாறு தெரிவித்துள்ளனர். மறுநாள் வைத்தியசாலைக்கு
 வந்த வைத்திய அதிகாரி ஒருவர் சீசர் செய்து குழந்தையினை எடுத்திருக்கலாம் தானே என கடமையில் இருந்த 
வைத்தியரை பேசியிருந்தார். 
பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு எனது மனைவியை சிகிச்சைகூடத்திற்கு அழைத்துச்சென்றனர். பலமணி நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. இதற்குள் 7ஆம் விடுதியில் குளிரூட்டி இயங்கவில்லை 
என தெரிவித்து 5 ஆம் விடுதிக்கு எனது மனைவியை மாற்றியுள்ளனர். பின்னர் தாதி ஒருவர் தொலைபேசி அழைப்பை எடுத்து என்னை வைத்தியசாலைக்கு வருமாறு அழைத்திருந்தார். 
அங்கு சென்றபோது அதிதீவிர சிகிச்சைபிரிவில் எனது குழந்தையினை அனுமதித்திருந்தார்கள். அங்குள்ள வைத்தியரிடம் கேட்டபோது 5 ஆம் விடுதியில் இருந்து குழந்தையினை இங்கு அனுமதிக்கும் போதே உயிரில்லாத நிலைமையிலேயே தந்தனர். இருப்பினும் குழந்தையின் இதயத்துடிப்பினை நாம் மீட்டுள்ளோம். 
எனினும் குழந்தையின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்து குழந்தையினை எனக்கு காட்டினர். பின்னர் நேற்றயதினம் இரவு எனது குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எனவே 
வைத்தியர்களின் அசமந்தபோக்கினால் எனது மனைவிக்கு நடந்த கொடுமைக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். எனக்கு நீதி கிடைக்காமல் நான் சிசுவின் சடலத்தினை பொறுப்பெடுக்கமாட்டேன் என்று
 தெரிவித்தார். 
இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக சிசுவின் தந்தையால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடும் பதிவுசெய்யப்பட்டது.
 இது தொடர்பாக வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் கேட்டபோது உள்ளக விசாரணை இடம்பெற்றுவருவதாக
 தெரிவித்தார்.
மேலும் இச்சம்பவம் குறித்து பிரதேச மக்களின் தெரிவித்ததாவது - இது ஒன்றும் வவுனியாவிற்கு புதிதானவை அல்ல நான் நினைக்கின்றேன் கிட்டத்தட்ட 21 அல்லது அதற்கு மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளது பல சம்பவங்களை ஊடகங்களும் மூடி மறைத்துள்ளன.
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு கனகராயன் குளத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு குழந்தை பிறந்து கிட்டத்தட்ட 18 மணித்தியாளங்களின் பின் பிள்ளை இறந்த பின்பும் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு பிள்ளையை நோயாளர்காகவண்டியில் அனுப்பி 
நாடகம் ஆடினார்கள்.
அதனை போலீசில் முறைப்பாடு செய்தும் எந்தப் பயனும் இல்லை அதன்பின் யாழில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு 
இறந்த குழந்தையின் தாயினை பரிசோதிப்பதற்காக
 அங்கு சென்றபோது கூட இந்த மாபியாக்கள் அந்தத் தாயினை பரிசோதித்து 
சரியான அறிக்கையினை கொடுக்கவில்லை என்பதை இங்கே 
கவலையான விடயம்.
 இந்த விடயத்தில் தனியாறும் சரி அரச வைத்தியசாலையும் சரி தங்களது காரியங்களை சரியாக செய்து பிழைகளை
 மூடி மறைப்பதே இவர்களுடைய செயற்பாடாக தொடர்ந்த வண்ணம் உள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது



புதன், 24 ஜூலை, 2024

நாட்டில் துணுக்காய் பிரதேசத்தில் நெல்லு காவலுக்கு இருந்தவர் மீது துப்பாக்கிசூடு

நாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்லினை வீதியில் காயப்போட்டு காவல்காத்து உறங்கிக்கொண்டிருந்த விவசாயியும் கமக்கார அமைப்பின் செயலாளருமான குடும்பஸ்தர் ஒருவர் மீது இன்று அதிகாலை துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது.
 இதில் காயமடைந்த கமக்கார அமைப்பின் செயலாளர் மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில் 24.07.2024 இன்று துணுக்காய் பிரதேசத்தில் கல்விளான் பகுதியில் இந்த சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
 தனது நெல்லினை அறுவடை செய்து வீதியில் காயவைத்துவிட்டு இரவு காவல் காத்து வந்துள்ள நிலையில் வீதி ஓரமாக உறங்கிக்கொண்டிருந்துள்ளார் இன்று (24) அதிகாலை 3.00 மணியளவில் இனம் தெரியாத
 நபர்களால் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 கல்விளான்குளம் பகுதியினை சேர்ந்த கமக்கார
 அமைப்பின்
 செயலாளரான 42 அகவையுடைய செல்லையா கிருஸ்ணராஜா என்பவர் 
படுகாயமடைந்து மல்லாவி ஆதாரமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவுமனைக்கு
 மாற்றப்பட்டுள்ளார்.
 கல்விளான் கமக்கார அமைப்பின் செயலாளராக இவர் இருப்பதாகவும் அங்கு இடம்பெறும் குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் இடம்பெற்று வரும் போட்டி காரணமாகவே இந்த துப்பாக்கிசூடு
 நடத்தப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள். மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது 




 

செவ்வாய், 2 ஜூலை, 2024

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் உடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் உடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அன்னாரின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும் தனியார் மலர் சாலைக்கு நேற்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் பூதவுடலுக்கு 
இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, அன்னாரின் குடும்பதினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், எஸ். ராசமாணிக்கம் ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!





வெள்ளி, 29 டிசம்பர், 2023

அதிகரிக்கும் டெங்கு தொற்று:மன்னாரில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை

மன்னாரில் கழிவகற்றல் செயன்முறை ஸ்தம்பிதம் அடைந்துள்ளமையினாலும் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றமையினாலும் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாகவும் எனவே பொதுமக்கள் அவதானமாக செயல்படுவதுடன் டெங்கு அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 மன்னாரில் வைத்து இன்று (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

 நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு நோயினுடைய தாக்கம் அதிகரித்துள்ளது. முழு இலங்கையும் எடுத்துக் கொண்டால் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 மன்னார் மாவட்டத்தை பொருத்தவரையில் கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை 111 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். அதேவேளை டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுவரையில் 88 நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். 

 குறிப்பாக இந்த நோயாளர்களில் பலர் கொழும்பு கண்டி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் இருந்து அல்லது அந்த பகுதிகளுக்கு சென்று வந்தவர்களாக காணப்படுகிறார்கள்.

 ஆகவே இவர்கள் இந்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் இங்கு வரும்போது அவர்களை கடிக்கும் நுளம்புகள் தொற்றுதல் அடைந்து உள்ளூரிலும் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக விடத்தல் தீவு மற்றும் மன்னார் நகரத்தின் சில பகுதிகளிலும் பேசாலை பகுதிகளிலும் அதிகளவான டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 டெங்கு நோயைப் பொறுத்தவரையில் சாதாரண டெங்கு காய்ச்சல் ,குருதி பெருக்குடனான டெங்கு காய்ச்சல் என இருவகையான டெங்கு காய்ச்சல்கள் நிலைமைகள் உருவாகலாம். 
டெங்கு காய்ச்சலில் இந்த காய்ச்சல் ஒரு நோயாளருக்கு உருவாக போகிறது என்பது நோயாளியின் உடலில் உள்ள நீர்பீடன தன்மை அதே போல டெங்கு வைரஸ் பிற பொருட்கள் ஆன்டிஜன் எனப்படும் பிற பொருட்கள் மற்றும் ஏனைய நீர்பீட காரணிகள் தீர்மானிக்கின்றது.

 எது எவ்வாறாக இருக்கின்ற போதும் டெங்கு காய்ச்சலினுடையதும், குருதிப் பெருக்குடனான காய்ச்சலினுடையதும் ஆரம்ப அறிகுறிகளாக நெற்றி பொட்டை அண்டிய தலையடி, கண்ணின் பின்புறம் நோவு, சிலருக்கு தொண்டை நோவு,தசை நோவு சிலருக்கு வயிற்றில் நோவு போன்ற குணங்குறிகள் காணப்படும்.

 எவ்வாறு இருப்பினும் டெங்கு குருதி பெருக்குடனான காய்ச்சலாக மாற்றமடையும் சந்தர்ப்பத்தில் அவர்கள் அதிக கலப்படைந்தவர்களாக உடல் பகுதியில் குளிர்ந்தும் வலது பக்க வயிற்றின் மேல் பகுதி நோவுடனும் காணக்கூடியதாக இருக்கும்.

 இவர்கள் கசிவு என்ற நிலைக்கு உள்ளாகின்ற போது அபாயகரமான கட்டத்தை அடைகிறார்கள். இந்த கசிவு என்பது எமது குருதி நாடிகளில் இருந்து பிரிந்து செல்கின்ற குருதி மைத்துளை குழாய்களூடாக அதிகளமான நீர்பாயம் கலங்களுக்கும் குருதி மைத்துளைகளுக்கும் இடையில் வெளியேறுவதால் ஏற்படுகிறது .

 இந்த கசிவு நிலை ஏற்படுகின்ற போது உடலில் அதிர்ச்சி நிலை ஏற்படும். இந்த அதிர்ச்சி நிலைமை காரணமாக உடலினுடைய குருதி அமுக்கம் குறையும், மூளை இருதயம் போன்றவற்றுக்கு செல்கின்ற குருதியின் அளவு குறையும் இது சிலவேளை மரணத்தை ஏற்படுத்தும். 

 அதே நேரம் இவ்வாறு வெளியே செல்கின்ற நீர்பாயம் மீண்டும் உள் வருவதற்கான தன்மை காணப்படுகின்ற போது அந்த அலர்ஜி காரணமாக அதிகமாக வெளியேறிய குருதி மயிர்த்துளை குழாகளினுடைய துவாரங்கள் மூடுவதன் காரணமாக வெளியேறி திரவம் சில சந்தர்பங்களில் மீண்டும் உள்ளே வர முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்படுகின்றபோது அவர்கள் இதயம் சுற்றும் மென்சவ் அலர்ஜி சுவாசப்பை அலர்ஜி மற்றும் மூளை வீக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைய கூடிய சாத்தியம் இருக்கின்றது. 

 ஆகவே இந்த டெங்கு குருதி பெருக்குடன் காய்ச்சல் நோயாளிகள் கட்டாயமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும். அவர்களுடைய குருதியின் சிறுதட்டுக்கள் எண்ணிக்கை குறைவடையும். ஆனால் குருதி சிறு தட்டுக்கள் உடைய எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் விட குறைவடைவதற்கு முன்பதாக சிலருக்கு கசிவு நிலை ஏற்படலாம்.

 ஆகவே சில குணங்குறிவுகளை அடிப்படையாகக் கொண்டு உடலில் அதிகளவு களைப்பு, வயிற்றில் நோவு, தொடர்ந்து சத்தி, இப்படியான குணங்குறிகள் இருப்பின் அவர்கள் கட்டாயம் வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற வேண்டும் . 

 அவர்களுக்கு வழங்கப்படும் திரவமானது அவர்களுடைய உடலுக்கு தேவையானது சரியானதும் அளவில் கொடுக்கப்பட வேண்டும். அதிகமாகவும் வழங்கக்கூடாது. குறைவாகவும் வழங்க கூடாது. அது வைத்தியசாலையில் தான் சரியான முறையில் அளவிட்டு தீர்மானிப்பார்கள் ஆகவே அவர்கள் வைத்திய சாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவது கட்டாயமாகும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது








 

திங்கள், 18 டிசம்பர், 2023

கிளிநொச்சியில் இடைவிடாது தொடரும் மழையால் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி அக்கரையான் செல்லும் பிரதான பாதையில் வீதியை 
குறுக்கரத்து வெள்ளம் பாய்வதினால் அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 
 அத்துடன் இரணைமடு குளத்தின் வான் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் பெரியகுளம், கண்டாவளை, நாகேந்திரபுரம், முரசுமோட்டை, ஜயங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 
உள்ள மக்கள் 
பாதிக்கப்பட்டுள்ளனர். தமது வாழ்விடங்களை விட்டு இடைக்கால தங்குமிட முகாம்களுக்கு பயணிக்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் முதலைகளின் அட்டகாசமும்
 அதிகரித்து 
கால்நடைகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. பிரமந்னாறு பகுதியில்  17.12.2023.நேற்றைய தினம் இரவு முதலைக்கடிக்கு
 இலக்கான ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அத்துடன் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட மக்களுக்கான 
சமைத்த உணவு வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு
 வருவதுடன், வெள்ள அனத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் தொடர்ச்சியாக கிராம சேவையாளர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வியாழன், 14 டிசம்பர், 2023

கிளிநொச்சியில் உள்ள பிரபல உணவகத்திற்கு சீல் வைத்த சுகாதார பிரிவினர்

உணவுக்குள் இலையான் இருந்த காரணத்தினால் கிளிநொச்சியில் உள்ள உணவகம் ஒன்றிக்கு சுகாதார பிரிவினர் 
சீல் வைத்துள்ளனர்.
 சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குற்றச்சாட்டில் குறித்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவுப்படி சுகாதார பிரிவினர் சீல்வைத்து
 பூட்டிள்ளனர்.
 ஏ9 வீதி பரந்தனில் உள்ள பிரபல உணவகமே இவ்வாறு  13-12-2023.அன்று 
 சீல் வைத்து மூடப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் உணவகத்தில் வழங்கிய உணவுக்குள் இலையான் இருந்துள்ளது.
 இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பால் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தவே, பார்வையிட்ட பொது சுகாதார பரிசோதகர் குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

திங்கள், 30 அக்டோபர், 2023

வேகக் கட்டுப்பாட்டையிழந்து சாந்தசோலை சந்தியில் பாலத்திற்குள் பாய்ந்த சொகுசு கார்

வவுனியா - ஏ9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து. .30-10-2023.இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
வவுனியாவில் இருந்து கனகராயன்குளம் 
நோக்கி ஏ9 வீதியால்
 சென்ற சொகுசு காரானது பிறிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து 
சாந்தசோலை சந்தியில் அமைந்துள்ள பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த காரில் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த நபர் ஒருவரும், சாரதியும் பயணித்த நிலையல், அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
அதேநேரம் பாலத்திற்குள் விழுந்த காரை பாரம் தூக்கியின் துணையுடன் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



ஞாயிறு, 29 அக்டோபர், 2023

நாட்டில் புத்தளத்தில் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட யுவதி உயிரிழந்துள்ளார்.

நாட்டில் புத்தளத்தில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் நடைபெற்ற திருமண விருந்தில் கலந்து கொண்ட யுவதி ஒருவர் திடீர் சுகவீனமடைந்து 
உயிரிழந்துள்ளார். 
புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
ஆனமடுவ நகரைச் சேர்ந்த 20 வயதுடைய எச்.எம் அயோத்தி தேஷானி விஜேவர்தன என்பவரே உயிரிழந்துள்ளார். திருமண 
விருந்தில் உணவுக்காக கிடைத்த இறைச்சி வகையை 
சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையே மரணத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. 
யுவதியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை வழங்கிய புத்தளம் ஆதார வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி 
குலேந்திர பிரேமதாச, மரணம் தொடர்பான மேலதிக 
பரிசோதனைகளுக்காக
 உடல் உறுப்புகளை அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்க  ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 1 செப்டம்பர், 2023

கண்ணியா பகுதியில் விபத்தில் சிக்கி சுற்றுலா பயணிகள் மூவர் காயம்

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி கண்ணியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாகத்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.01-09-2023
இன்று காலை 11.30 மணியளவில் இவ் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற அரச பேருந்தானது சுற்றுலா வந்த பேருந்து ஒன்றுடன் மோதியில் 
இந்த விபத்து
இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்விபத்தில் கம்பஹா பிரதேசத்தில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகள் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



ஞாயிறு, 23 ஜூலை, 2023

தாண்டிக்குளம் பகுதியில் புகையிரதத்துடன் லொறி மோதி விபத்து இருவர் படுகாயம்

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் லொறி ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் .23-07-2023.இன்று .பிற்பகல் 
விபத்து ஏற்பட்டுள்ளது.
 யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில், லொறியுடன் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

 வடக்கு புகையிரத பாதை நவீனமயமாக்கப்பட்டதன் பின்னர் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் புகையிரதங்கள் இயங்கினாலும் தாண்டிக்குளம் நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.

 இதனால் நடக்கவிருந்த அசம்பாவிதம் ஓரளவு தவிர்க்கப்பட்டதாகவும் நமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

 விபத்தில் லொறியின் சாரதி மற்றும் துணை சாரதி படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 லொறியின் முன் பகுதி மாத்திரம் புகையிரதத்துடன் மோதியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 23 ஜனவரி, 2023

முருகண்டி கோவிலில் மாமிச உணவு..உண்டதை கண்டுகொள்ளாத சில பக்த்தர்கள்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க முருகண்டி கோவிலுக்கு அருகிலே மாமிசம் சாப்பிடும் சகோதர இனத்தவர்கள்..!கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் போது முருகண்டியில் கும்பிட்டு செல்வது சாதாரண வழக்கமாக அனைத்து பிரயாணிகளும் இறங்கி கும்பிடுவது வழக்கம்.
இரவு 10.30மணியளவில் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாக்கு வந்த சகோதர இனத்தவர்கள் பலர் சுற்றுலாவினை முடித்து விட்டு ஊருக்கு புறப்படுகின்ற வேளையில் இரவுச் சாப்பாட்டினை சாப்பிடுவதற்காக முறிகண்டி 
கோவிலுக்கு வருகை
தந்து தங்கள் சமைத்து வைத்த உணவினை தண்ணீர் தொட்டிக்கு அருகாமையில் எல்லோரும் சேர்ந்து சோறு இறால் கறிகளுடன் சாப்பாடினை பரிமாறி சாப்பிட்டு கொண்டிருந்தனர். அவ் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மனதுக்குள் திட்டி தீர்த்த படியே அவ் இடத்தினை கடந்து 
சென்று விட்டனர்.
அதுமட்டுமல்லாமல் அருகில் கடை வைத்திருப்பவர்கள் கூட அதனை தெரியப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் அதில் வந்த இளைஞர்கள் அதனை தட்டி கேட்ட போது அவ் சகோதர இனத்தவர்கள் தங்களுக்கு இதில் மாமிசம்
சாப்பிடுவது பற்றி தெரியதென்றும் எங்களை தயவு செய்து மன்னித்துவிடுங்கள் என்று மிகவும் தயவுடன் கேட்டு அவ்இடத்தில் சாப்பிட வந்த எல்லோரும் சேர்ந்து அவ் இடத்தினை நன்கு சுத்தம் செய்துவிட்டு அவ் இடத்தினை விட்டு உடனே விலகியுள்ளனர். ( தயவு செய்து முடிந்தவரை உங்கள் சகோதர இனத்தவர்களுக்கு
 இவ்வாறான எமது சைவ பழக்க வழக்கங்களினை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.!

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





வியாழன், 17 நவம்பர், 2022

முகமாலை பகுதியில் தூக்கில் தொங்கிய மாணவனால் பரபரப்பு

கிளிநொச்சி முகமாலை பகுதியில் உள்ள றோமன் கத்தோலிக்க பாடசாலை ஒன்றில், 21 வயது இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது
. ஒரு வகுப்பறையில் உள்ள மேசை மீது கடிதம் ஒன்றை 
எழுதி வைத்து விட்டு. அதே வகுப்பறையில் அவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார் என்று மேலும் அறியப்படுகிறது. 
தற்கொலைக்கான காரணம் என்னவென்று சரியாகத் 
தெரியவில்லை





 

சனி, 12 நவம்பர், 2022

முறிகண்டி பிள்ளையாரில் வாகனங்கள் நிறுத்தப்படாமையால் விபத்துக்களாம்

யாழ் – கொழும்பு சொகுசு பேருந்து பயண விபத்து கொலைகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி 
வலியுறுத்தியுள்ளார். 
முகப்புத்தக பதிவொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 
“பல வருடங்களாக தொடர்ச்சியாக இவ்வாறு விபத்துகள் ஏற்பட்டு விபத்தில் சிக்குண்டவர்கள் பலர் சாவடைந்துள்ளனர்.
விபத்துக்குள்ளானவர்களின் குடும்பங்கள் வாழ்நாள் சோகங்களையும் கஷ்டங்களையும் சுமக்கின்றார்கள்
யார் பொறுப்பை ஏற்பது?1. பொலிஸார் ?
2. வாகன உரிமையாளர்கள்?
3. வாகனச் சாரதிகள்?
இருப்பினும் விபத்தொன்றின் பின்னர் விசாரணைகள் நடைபெறுவதாகவும் ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்க போவதாகவும் செய்தி வருகின்றமை நகைப்பிற்குரியது.
ஒரு நாள் இரவு பத்து மணிக்கு இவ்வாறான பேருந்து ஒன்றில் பயணத்தை ஆரம்பித்தேன். கண் விழித்துப் பார்த்தபோது பேருந்து காலை 4 மணியளவில் கொழும்பை அடைந்ததை உறுதிப்படுத்திக் கொண்டேன். இவ்வளவு விரைவாக பயணம் செய்வது மிக ஆபத்தானது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான பாதையில்
1. பல இடங்களில் பாதைகளில் வளைவுகள் காணப்படுகின்றது. 2. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரையான பகுதிகளில் கால்நடைகள் எப்போதும் வீதிக்கு வரும் அபாயம் 
காணப்படுகின்றது.
3. நாய்கள் எப்போதும் வீதியை கடக்கலாம்.
4. பல இடங்களில் குறுகிய அகலத்திலான பாலங்கள் காணப்படுகின்றது.
5. பல நகரங்களை கடந்து செல்ல வேண்டி 
இருக்கின்றது.
6. திடீரென பிரதான வீதிக்கு இரு பக்கங்களிலும் இருந்து வாகனங்கள் வருகின்ற நிலை காணப்படுகின்றது. ( பலரும் பயணம் முடியும் வரை பதட்டமான மனநிலையில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது)
ஆகவே யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை 
வாகனத்தை செலுத்துவது இலகுவான காரியம் அல்ல. அதிலும் 70 km/hrற்கு அப்பால் வாகனத்தை செலுத்தினால் வாகனம் விபத்தொன்றில் சிக்கிக் கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
பேருந்து விபத்துகளை எவ்வாறு தவிர்க்க முடியும்? 
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்றடைய இரண்டரை மணி நேரம் (2 மணி 30 நிமிடங்கள்) தேவை. வவுனியாவில் இருந்து புத்தளம் சென்றடைய இரண்டரை மணி நேரம் (2 மணி 30 நிமிடங்கள்) தேவை.
புத்தளத்தில் இருந்து கொழும்பு சென்றடைய சென்றடைய இரண்டரை மணி நேரம் (2 மணி 30 நிமிடங்கள்) தேவை.
ஆகவே பொலிஸார் பிரதான நகரங்களை கடக்கும் நேரங்களை அனுமதித்து கண்காணித்தால் போதும்.
வாகன உரிமையாளர்கள் இந்த நீதியை விளங்கிக் கொண்டால் போதும் சாரதிகள் தமது உயிர் மற்றும் தங்கள் கைகளில் பல உயிர்கள் தங்கி இருக்கின்றது என்பதை எப்போதும் நினைவில் 
கொள்ள வேண்டும்.
யாழ் – கண்டி (A9) வீதியில் விபத்துக்கள்
யாழ் – கண்டி (A9) வீதியில் விபத்துக்கள் அதிகரிக்க முறிகண்டி பிள்ளையார் கோயிலில் வாகனங்கள் நிறுத்தப்படாமையும் ஒரு காரணம். 
வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் ஏறக்குறைய 150 KM 
தூரத்தில் உள்ளது.
வவுனியாவிலிருந்து முறிகண்டி பிள்ளையார் ஆலயம் ஏறத்தாழ 75 KM தூரத்திலுள்ளது.
அதாவது முறிகண்டி வவுனியாவுக்கும் யாழ். நகருக்கும் இடையே ஏறைக்குறைய மத்தியில் அமைந்த பிரதேசம்.
எனவே வாகன சாரதிகள் அதிக தூக்கத்தை போக்கி களைப்பு, சோர்வு, அசதி, மன உளைச்சல் இவைகளை களைந்து முகம் கழுவி பிராத்தனை செய்து உணவுண்டு செல்லும்போது, மீண்டும் புத்துணர்ச்சியுடன் களைப்பின்றி தமது பயணத்தை புதிய உத்வேகத்ததுடன் 
தொடர முடியும்.
இதற்குத்தான் எமது முன்னோர்கள் இது போன்ற வழிபாட்டு தலங்களை ஆங்காங்கே நிறுவினார்கள். மோட்டார் வாகன பாவனைகள் அதிகரித்துள்ள இக்காலத்தில், இவ்வழிபாட்டு தலங்களுடன் கூடிய நிறுத்துமிடங்கள் வீதி விபத்துக்களை பெருமளவு குறைக்க உதவும்.
நமது முன்னோர்களது எந்தவோர் செயலும், மிகநுட்பமான காரணகாரியத்துடன், மனிதனது ‘நன்மை’ ஒன்றை மட்டுமே கருத்திற்கொண்டு செய்யப்பட்டவையாகும். இது வெறும் பதிவு மட்டும் என்று எண்ணவேண்டாம்” என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதன், 2 நவம்பர், 2022

புத்தளம் மாவட்டத்தில் சில பகுதிகளில் கடலில் திடீர் மாற்றம்

புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளில்.02-11-2022. இன்று  காலை முதல்  கடல் நீர் பச்சை நிறமாக மாறியுள்ளது.
புத்தளத்தின் கற்பிட்டி முதல் வென்னப்புவ வரையிலான கடல் கொத்தளிப்புடன் காணப்பட்டதுடன், கடல் நீரும் பச்சை நிறமாக மாறியுள்ளதாக மீனவர்கள் குறிப்பிட்டனர்.
நுண்ணுயிர் தாவரங்கள் அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடல் மாசடையும் போது இவ்வாறான நிலைமை ஏற்படுவதாகவும், இதற்கு முன்னர் காலி முகத்திடல் உள்ளிட்ட சில பகுதிகளில் கடல் நீரின் நிறம் மாறியதை காண முடிந்ததாகவும் நாரா நிறுவனம்
 குறிப்பிட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 30 அக்டோபர், 2022

நாட்டில் வடமாகாணத்தில் 4 ஆம் திகதி வரை மழைவீழ்ச்சிக்கு கூடிய சாத்தியக் கூறுகள்

 வங்கக்கடலில் தற்போது நிலவி வருகின்ற தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மழைவீழ்ச்சி வடமாகாணத்தில் கிடைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து 
எதிர்வரும் 9ஆம் திகதி அளவில் ஒரு பலமான
 தாழமுக்கம் ஒன்று உருவாவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதுடன், இதனால் பலத்த மழை வீழ்ச்சி இலங்கையின் பல பகுதிகளுக்கு கிடைக்கலாம். எனஅனர்த்தமுகாமைத்துவமத்தியநிலையம் தகவல் 
வெளியிட்டுள்ளது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 3 அக்டோபர், 2022

நொச்சிக்குளத்தில் கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வைத்தியசாலையில்

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதி நொச்சிக்குளம் பகுதியில் டிமோ பட்டா வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 15 பேர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து நேற்றிரவு (02) 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் கஹடகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளதாகவும், அதில் 
எட்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு பகுதிக்கு நிகழ்வொன்றிற்கு சென்று வீடு திரும்பும் போது இவ்விபத்து இடம்பெற்றதாகவும், விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 26 பிப்ரவரி, 2022

கிளிநொச்சியில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கிளிநொச்சியில் பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.இந்நிலையில் 2 நாட்களாக தமது வாழ்வாதாரம் இழந்த நிலையில் இருப்பதாக முச்சக்கரவண்டி சாரதிகள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக சாரதிகள் மேலும் தெரிவிக்கையில்,எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள்
 தட்டுப்பாடு காரணமாக
தனியார் விற்பனை நிலையங்களில் அதிக விலைக்கு எரிபொருள் கொள்வனவு செய்து முச்சக்கரவண்டியினை வாடகைக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், அப்படி செலுத்தப்படும் ஆயில் முன்னைய விட அதிகமான வாடகை பணம் அறவிடவேண்டிய நிலைக்கு முச்சக்கரவண்டியின் சாரதிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே முற்சக்கரவண்டியில் தற்பொழுது மக்கள் முச்சக்கரவண்டியில் செல்ல முடியாத 
நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் முச்சக்கரவண்டி சாரதிகள் தமது வாழ்வாதாரத்தினை இழந்த நிலையிலுள்ளதுடன், இவ்வாறான நிலை தொடருமாயின் தமது முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலை விட்டு வேறு ஏதும் தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என சாரதிகள் கூறுகின்றனர்.இந்நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரிபொருளை மீண்டும் விரைவாகப் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
 என தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




செவ்வாய், 11 மே, 2021

மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்கு கிளிநொச்சியில் நடமாடும் வர்த்தக நிலையங்கள்

நடமாடும் வர்த்தக நிலையங்களை எடுத்து செல்வதன் ஊடாக கிராமத்தில் மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்கு முடியுமான சூழல் இருக்கும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் 
தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில்  இடம்பெற்ற கோவிட் தடுப்பு விசேட கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும்
 தெரிவிக்கையில்,
பிரதம மந்திரி அலுலகத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள சுற்று நிருபத்திற்கு அமைவாக தற்பொழுது நிலவி வருகின்ற கோவிட் தொற்றி னுடைய தாக்கம் காரணமாக எமது மாவட்டத்தில் ஏதாவது ஒரு பிரதேசம் முடக்கப்படும் சந்தர்ப்பத்தில் அத்தியாவசிய சேவைகளை வழங்குவது தொடர்பான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டிய
 தேவை இருக்கின்றது.
அந்த வகையிலே, அவ்வாறான சேவையில் ஈடுபட வேண்டிய உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்களிற்கிடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.அதன் அடிப்படையில் மாவட்டத்தில் அவ்வாறான சூழ்நிலை ஏற்படுகின்ற போது, மக்களுக்கு 
அத்தியாவசிய தேவைகள் கிடைக்கக்கூடிய வகையில் கூட்டுறவு சங்கங்கள், சதோச மற்றும் வர்த்தக சங்கங்களிற்கு அறிவுறுத்தல்கள் 
வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் மக்களிற்கு நடமாடும் வர்த்தக நிலையங்களை எடுத்து செல்வதன் ஊடாக கிராமத்தில் மக்களின் நடமாட்டத்தை குறைப்பதற்கு முடியுமான சூழல் இருக்கின்றது என்பதையும் இன்று கலந்துரையாடியிருந்தோம். அத்துடன் அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட ஆளணிகளுடன் பணிகளை முன்னெடுப்பதற்கும், குறிப்பாக அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுகின்ற அலுவலர்களைக் கொண்டு பணிகளில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கின்றோம்.
கிளிநொச்சியில் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருக்கின்றவர்கள் இனங்காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நிலைமையிலும் இருக்கின்றார்கள். அந்த வகையில் இரண்டு மாணவிகள் தொற்றுக்குள்ளாகியிருந்தார்கள். அவர்களுடன் தொடர்புள்ள மேலும் 6 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அடையாளம் 
காணப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் 14 பொலிஸார் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தான் இப்பொழுது வைக்கப்பட்டுள்ளனர். வர்த்தக நிலையங்களில் பணியாற்றுவோர் எந்த சந்தர்ப்பத்திலும் முகக்கவசங்களை அணிந்தவாறே வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும், அதேவேளை நுகர்வோரும் அவ்வாறான செயற்பாட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் நாங்கள்
 கேட்டிருக்கின்றோம்.
இது தொடர்பாக சுகாதார திணைக்களம் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட இருக்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் எடுக்கப்படும் பி .சி .ஆர் மாதிரிகளை பரிசோதனைகளிற்காக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
தற்பொழுது இருக்கின்ற சூழலில் அதிகளவான பி.சி.ஆர் பதிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதனால் தேக்க நிலை காணப்படுகின்றது. பரிசோதனையை மேற்கொள்வதற்கு தேவையான உபகரணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை தற்பொழுது காணப்படுகின்றது என்றும்
 தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 20 ஏப்ரல், 2021

தம்பலகாமத்தில் தாய்ப்பால் புரைக்கேறி 25 நாள் சிசு பலி


தம்பலகாமத்தில் தாய்ப்பால் புரைக்கேறி 25 நாள் கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் திருகோணமலை தம்பலகாமத்தில் .19-04-2021.நேற்றிரவு 
இடம்பெற்றுள்ளது
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொற்கேணி பகுதியில் தாய் பிள்ளைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்குவதற்காக போட்டுவிட்டு பின்னர் 12 மணியளவில் குழந்தையை பார்த்த போது 
குழந்தையின் வாய் மற்றும் மூக்கு பகுதியில் இருந்து நுரை வழிந்த நிலையில் கிடந்ததாகவும் இதனையடுத்து தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து குழந்தை 
உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கைக்குழந்தையின் சடலத்தை திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம். ரூமி பார்வையிட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு காவல் துறைக்கு 
கட்டளையிட்டார்.
இதேவேளை, இச் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை முடிவடைந்தவுடன் உறவினர்களிடம் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தம்பலகாமம் காவல் துறைக்கு 
தெரிவித்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>