siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

நாட்டில் திரிபோஷா தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கை அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா தொடர்பில் எந்தவித சந்தேகமும் இன்றி.30-09-2022. இன்று முதல் அதனை பயன்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
திரிபோஷாவை உணவாக கொள்வதற்கு தேவையற்ற அச்சத்தை கொண்டிருக்க வேண்டாம் என்றும் இது தொடர்பான உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் குடும்ப சுகாதார சேவை அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா 
தெரிவித்துள்ளார்.
Aflatoxin அடங்கியிருப்பதாக பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்ட திரிபோஷா பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக சிகிச்சை சேவை நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள திரிபோஷாவை பயன்படுத்த முடியும் என்றும் பணிப்பாளர் தெரிவித்தார்.
அதேசமயம் 3 மாதங்களுக்கு முன்னர் திரிபோஷா
 நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட திரிபோஷாவில் Aflatoxin அளவு கூடுதலாக இருந்தமை ஆய்வின் மூலம் உறுதி 
செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு Aflatoxin இருந்ததாக உறுதி செய்யப்பட்ட திரிபோஷா தற்பொழுது அழிக்ககப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மற்றும் திரிபோஷா நிறுவனம் உறுதி செய்துள்ளன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 29 செப்டம்பர், 2022

நடந்த கோர விபத்தில் யாழில் சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் உந்துருளி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியை சேர்ந்த அன்ரன் தினுஜன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் சந்திக்கு அருகில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற உந்துருளி விபத்தில் வீதியோர கால்வாய்க்குள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் 
அனுமதிக்கப்பட்டார்.
வைத்திய சாலையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 
நிலையில் .28-09-2022.நேற்றைய தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி
 உயிரிழந்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>புதன், 28 செப்டம்பர், 2022

இலங்கையில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் புதிய நடைமுறை

நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் தர ஆய்வுக்காக எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க 
தெரிவித்துள்ளார்.
நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தரம் குறைந்த எரிபொருள் இல்லாது சீரான எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தெரிவிக்கையில்,“கடந்த மாதத்தில் மட்டும் 
பெட்ரோல் மற்றும் டீசல் தரம் குறைவாக இருப்பதாக, நுகர்வோரிடமிருந்து 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் எமக்கு
 கிடைத்துள்ளது.
நாட்டில் எங்களிடம் 1,200 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன. 100 இடங்களில் இருந்து 100 முறைப்பாடுகளை பெற்றிருப்பின், நாட்டின் 10 சதவீத நிரப்பு நிலையங்களில் தரம் குறைந்த எரிபொருள் உள்ளதென 
கருத முடியும்.
எரிபொருளில் இருந்து துர்நாற்றம் வருவதாகவும் லீட்டருக்கு பயணிக்கும் தூரத்தின் எண்ணிக்கை வழமையை விட குறைந்துள்ளது மற்றும் ஒக்கீட்டுக்கு ஏற்ப எரிபொருள் விநியோகிக்கப்படுவதில்லை என பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதற்கமைய, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நுகர்வோர் ஆலோசனைக் குழு, குறித்த முறைப்பாடுகளை விசாரிக்க தீர்மானித்துள்ளது.
எனவே எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்படும்.”என கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 27 செப்டம்பர், 2022

நாட்டில் மீண்டும் அதிகரித்த மின்வெட்டு நேரம்..வெளியான புதிய அறிவிப்பு

நாட்டில்  நாளாந்த மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதற்கமைய,27-09-2022. இன்று 03 மணித்தியாலங்களாக மின்வெட்டு நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் 
ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மூன்றாவது மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.இதன் காரணமாக 
மின்வெட்டு நேரம்
நீடிக்கப்பட வேண்டியிருக்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.இதற்கமைய நாளாந்த மின்வெட்டு நேரம் 03 மணித்தியாலங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க 
விடயமாகும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>மரண அறிவித்தல் திரு சிவா சிவலிங்கம் (கட்டை சிவா)26.09.22

பிறப்பு-09 031967-இறப்பு-26 09 2022.
யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவா சிவலிங்கம் அவர்கள் 26-09-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம் கணபதிப்பிள்ளை, நாகம்மா(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி இரவீந்திரன் அவர்களின் அன்பு மருமகனும்,சியாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,ஆர்த்திகா, ஆருத்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,சறோஜினிதேவி(சுவிஸ்), வசந்தகுமாரி(இலங்கை), ராசகுமாரி(இலங்கை), சிவரஞ்சினி(இலங்கை), சிவாசினி(இலங்கை), சிவாசன்(ஜேர்மனி), சுதாசினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 30 Sep 2022 2:00 PM - 4:00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Saturday, 01 Oct 2022 8:30 AM - 11:30 AM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 02 Oct 2022 8:30 AM - 11:30 AM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
கிரியை
Get Direction
Monday, 03 Oct 2022 9:00 AM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தகனம்
Get Direction
Monday, 03 Oct 2022 12:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
 ஆருத்திரன் - மகன்Mobile : +41779247634 சியாந்தினி - மனைவிMobile : +41783205499 சோபனா - மைத்துனிMobile : +41787527881

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 26 செப்டம்பர், 2022

நாட்டில் எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் ஐ.ஓ.சி நிறுவனம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி

   இலங்கையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு எரிபொருள் விலையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச சந்தையில் தற்போது எண்ணெய் விலை ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ள நிலையில், விலை குறைப்பு குறித்து மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் பரிசீலிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“எண்ணெய் விலையை குறைப்பது தொடர்பான இறுதி முடிவு எரிசக்தி அமைச்சரிடம் உள்ளது. உலகளாவிய எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் விலையைக் குறைப்பது குறித்து அவர் பரிசீலிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ”
என்று குப்தா கூறியுள்ளார்.
விலை திருத்தம் ஏதேனும் இருந்தால், அக்டோபர் 1ம் திகதி அறிவிக்கப்படும்.கடந்த 30 நாட்களாக கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படுகின்றது.கடந்த 30 நாட்களின் எரிபொருள் விலையின் அடிப்படையில் விலை திருத்தம் மதிப்பீடு செய்யப்படும், எனவே இந்த விலை குறைப்பினை அமைச்சர் முடிவு செய்வார்” என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

களுத்துறையில் ஆபத்தாக மாறிய வரும் டொபி வகை. பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தியசாலையில்

இலங்கையில் களுத்துறை – புலத்சிங்கள கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் கல்விபயிலும் ஏழு மாணவர்கள் இனிப்பு (டொபி ) வகையொன்றை சாப்பிட்ட நிலையில்
 அகலவத்தை பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பமிலா நிஷாந்தி தெரிவித்துள்ளார்.
மேலதிக வகுப்பொன்றில் பங்கேற்ற ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் குழுவொன்று கடையொன்றில் ஒரு வகையான இனிப்பு டொபியை வாங்கி உட்கொண்ட நிலையில், திடீரென நோய்வாய்ப்பட்டு 7 பேர் அகலவத்தை பிம்புர எல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10-12 வயதுடைய ஏழு சிறுவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இருப்பினும் சிறுவர்களின் உடல் நிலைமை மோசமடையவில்லை எனவும் பிம்புர வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 24 செப்டம்பர், 2022

நாட்டில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

நுரைச்சோலையில் உள்ள நிலக்கரி ஆலைக்குத் தேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்ள பணம் கிடைக்காததால் நவம்பர் முதல் வாரத்தில் தினமும் பத்து மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாகத் தெரிய 
வந்துள்ளது.
நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான பணத்தை பெற்றுக் கொள்வதற்காக மத்திய வங்கியுடன் கலந்துரையாடிய போதிலும் இதுவரை வெற்றிகரமான பதில் கிடைக்கவில்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க
 கூறியுள்ளார்.
ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட 21 நிலக்கரிக் கப்பல்கள் உடனடியாக வரவில்லை என்றால் மின்வெட்டு தவிர்க்க முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை நிலக்கரி கிடைக்காவிட்டால் பத்து மணித்தியாலங்களுக்கு மேல் மின்சாரத்தை துண்டிக்க வேண்டியது கட்டாயம் என இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கத்தின் தலைவர்
 அனில் ரஞ்சித் கூறியுள்ளார்
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாட்டில் 40 வீதமான மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து வருவதாலும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வரட்சியான காலநிலை நிலவுவதாலும், மின்சார விநியோகத்தில் தீவிரமான நிலைமை ஏற்படும் என அவர் மேலும்
 தெரிவித்துள்ளார்..

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 23 செப்டம்பர், 2022

நாட்டில் கோதுமை மாவின் விலை குறைகிறது புதிய விலை தொடர்பான அறிவிப்பு

அடுத்த வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தையில் கோதுமை மாவின் விலை கடுமையான உயர்வினை எட்டியுள்ளதாலும், கோதுமை மா பற்றாக்குறையினாலும் பொதுமக்கள் மற்றும் பேக்கரி தொழிற்துறையுடன் ஈடுபடுவோர் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில் முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை மா துறைமுகத்திற்கு வந்துள்ளதன் காரணமாக அடுத்த வாரம் முதல் கோதுமையின் விலை குறைவடையும் என இறக்குமதியாளர்கள் 
தெரிவித்துள்ளனர்.
துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை மா கடந்த வாரம் நாட்டிற்கு 
வந்துள்ளது.
மேலும் கடந்த மாதங்களில் கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் முன்பதிவு செய்யாமையினால், நாட்டில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 – 400 ரூபா வரை அதிகரித்தது.
எவ்வாறாயினும், கொழும்பு 4ஆம் குறுக்குத் தெரு
 இறக்குமதியாளர்கள் கோதுமை மாவை முன்பதிவு செய்து கையிருப்பு பெறுவதால் கிலோ ஒன்றின் விலை 300 ரூபாவிற்கும் குறைவடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 22 செப்டம்பர், 2022

நாட்டில் மின்கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வழிபாட்டு தலங்கள்

இன்று மின்சாரக் கட்டணம் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், இது தொடர்பில் சமூகத்தில் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
குறிப்பாக மதத் தலைவர்கள் குழுவை தாம் சந்தித்ததாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பில் சமய ஸ்தலங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பாரதூரமானது என்றும் 
தெரிவித்தார்.
நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ள போதிலும், உரிய முறையில் திட்டமிடப்பட்டால் நாட்டின் அத்தியாவசியமான இடங்களுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட ஆதாரங்களைப் பெறுவதற்கு சர்வதேசத்தின் ஆதரவைப் பெற முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் 
நினைவு கூர்ந்தார்.
ஆனால் இது தொடர்பில் அரசாங்கத்திடம் பணிப்புரை இல்லை என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், மாறாக அரசாங்கம் மதத் தலைவர்களையும் ஏனைய மக்களையும் விமர்சித்து வருவதாகக் 
கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில், ஜனரஞ்சக, மக்களை மையமாகக் கொண்ட மறுசீரமைப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>புதன், 21 செப்டம்பர், 2022

இலங்கையில் திரிபோஷவில் நச்சுத்தன்மை என அச்சத்தை ஏற்படுத்தும் செயற்பாடு.

குழந்தைகள் மற்றும் தாய்மாருக்கு வழங்கப்படும் திரிபோஷ உணவில் எஃப்லடொக்சின் எனும் புற்றுநோய் உண்டாக்கும் நச்சுப்பொருள் உள்ளடங்கியிருப்பதாக பகிரப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல 
தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை
 குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “ திரிபோஷ உணவில் புற்றுநோய் உருவாக்கும் நச்சுப்பொருள் இருக்கின்றது என்பது முற்றிலும் பொய்யான விடயம் என்பதை மிகுந்த உத்தரவாதத்துடன் நாடாளுமன்றத்தில் 
கூறுகின்றேன்.
இந்த பிரச்சினைகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நான் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
இது மிகவும் அசாதாரண செயல். புற்றுநோய் உருவாக்கும் நச்சுப்பொருள் இருப்பதாக கூறி சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் 
ஒரு செயற்பாடு.
ஒருவருக்கு இடம்பெற்ற சம்பவத்தை வைத்து அனைத்தையும் கணக்கிடக் கூடாது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 20 செப்டம்பர், 2022

இலங்கையில் அரிசியின் விலை அதிகரிக்கும் சாத்தியமாம்

நாட்டில் அரிசியின் விலையானது அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒரு கிலோகிராம் அரிசிக்கு நூற்றுக்கு இரண்டரை வீதம் சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதின் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அரிசியின் விலையானது மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரிசிக்கு விலையினை அதிகரிக்காது விற்பனை செய்யப்பட வேண்டுமாயின் நெல்லினை குறைந்த விலைக்கு விவசாயிகளிடமிருந்து கொள்வனவு 
செய்ய வேண்டும்.
நாட்டில் மக்களுக்கு தேவையான அரிசி கையிருப்பில் காணப்படுகையில் அரசாங்கம் சர்வதேசத்திலிருந்து அரிசியை இறக்குமதி செய்கின்றது.
அத்துடன் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியில் இரண்டு இலட்சம் மெட்றிக் தொன் அரிசியினை 
அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள் களஞ்சியப்படுத்தி வைத்துள்ளனர்.
இதேவேளை இரசாயன உரம் பயன்படுத்தப்படாமையினால் அறுவரை குறைவடைந்துள்ளது. அதனால் அரிசியை இறக்குமதி செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அறுவடையானது குறைவடைந்தமையினால் அரிசி இறக்குமதியானது மேற்கொள்ளப்படவில்லை. மாறாக தரகு பணம் (கமிசன்) குறைவடைந்துள்ளமையினாலேயே இறக்குமதி 
செய்யப்படுகிறது.
பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் மோசடியும் அதனை எதிர்த்து கேள்வி எழுப்புவதற்கு விவசாய திணைக்கள அதிகாரிகளிடம் காணப்படும் இயலாமையுமே அரிசியின் விலை அதிகரிப்பிற்கு
 காரணமாகும்.
வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதனால் 700 இற்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகள் தற்போது மூடப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>

திங்கள், 19 செப்டம்பர், 2022

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்ட மாற்றம்.

அண்மைக்காலமாக சர்வதேச சந்தையில் குறைவடைந்த தங்கத்தின் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 12.53 அமெரிக்க டொலர்களால் அதிகரித்து 1,675.22 அமெரிக்க டொலராக 
பதிவாகியுள்ளது.
இதேவேளை, கடந்த 30 நாட்களில், தங்கத்தின் விலை 95.88 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.ரஷ்ய -உக்ரைன் போர் காரணமாக உலகளாவிய ரீதியில் 
ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தங்கத்தின் 
விலையிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

வட்டுக்கோட்டை சந்தியில் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பிய இரு பெண்கள்

யாழ்.வட்டுக்கோட்டை சந்தியில் 17-09-2022.அன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மாதகலை சேர்ந்த சித்தியும்
(வயது 39) பெறா மகளும் (வயது 20) அராலியில் உள்ள உறவினர்களது வீட்டிற்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம்
 நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனம் வட்டுக்கோட்டை சந்தியில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார் சைக்கிள் சேதமாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பெண்களுக்கும் காயங்கள் எதுவுமின்றி தெய்வாதீனமாக
தப்பியுள்ளனர். விபத்தினை ஏற்படுத்திய டிப்பர் சாரதி வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் 
மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 17 செப்டம்பர், 2022

இலங்கை பேலியகொடை சந்தையில் வீழ்ச்சி அடைந்த மீன்களின் விலை

இலங்கை சந்தையில் மீன்களின் விலை குறைந்துள்ள போதிலும், நுகர்வோர் மீன்களை கொள்வனவு செய்யாத நிலை உள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
பேலியகொடை சந்தையில் பெரும்பாலான மீன்களின் விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மீன் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக 1,000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட மீன்கள் 500 ரூபா வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் விசனம்
 தெரிவிக்கின்றனர்.
சந்தையில் தற்போது ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 1,600 ரூபாவாக உள்ளதாக அவர்கள் 
குறிப்பிடுகிகனிற்னர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 16 செப்டம்பர், 2022

யாகொட தொடருந்து நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதுண்ட கார்

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விரைவு தொடருந்தினால் மகிழுந்து ஒன்று மோதப்பட்டுள்ளது.கம்பஹா – யாகொட தொடருந்து நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின்போது மகிழுந்து சாரதி மாத்திரம் பயணித்ததாகவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.தொடருந்தினால் மோதப்பட்ட மகிழுந்து தொடருந்து நிலைய மேடை வரை இழுத்துவரப்பட்டிருந்தது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 15 செப்டம்பர், 2022

அமரர் ஐயம்பிள்ளை சந்திரசேகரம் (சந்திரன் ) 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.16.09.22

தோற்றம் -07-12-1955-மறைவு-19.08.2022 
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர் ஐயம்பிள்ளை சந்திரசேகரம் அவர்களின் 31ம் நாள்  நன்றி நவிலலும்
 வீட்டுகிருத்திகை  கிரீமலை அழைப்பிதழ்
எதிர்வரும் 16-09-2022. வெள்ளிக்கிழமை  அன்று காலை 07,மணியளவில் கிரீமலை  தித்தக்கரையில் ஆத்மா   சாந்திப்பிரத்தனை   நிகழ்வுகள் நடைபெற்று 18-09-2022, அன்று ஞாயிற்றுகிழமை  பிற்பகல்,11,மணி அளவில்  அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் அத்தருணம் தாங்கள் தங்கள் குடுபசகிதம்  வருகைதந்து அன்னாரின்  ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்  தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும்  கலந்து கொள்ளும்  வண்ணம்  அன்புடன் அழைக்கின்றோம்
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான துரைராஜா சிதம்பரம்(பூரணம் ) தம்பதிகளின் பாசமிகு மருமகனும் சந்திரசேகரம் கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும் சந்திரசேகரம் பண்ணீர்தாஸ் ((பண்ணீர்)(பிரான்ஸ் )
காலஞ்சென்ற சுகதீபா(தீபா)    மற்றும் டர்சிகா (லண்டன்)  (தரிசி)ஆகியோரின் பாசமிகு தந்தையும்ஆவர் 
 இங்கனம் -குடும்பத்தினர் .நன்றி 
எமக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.எம்மையெல்லாம் நீங்காத நினைவில் தவிக்கவிட்டு
எம்மை விட்டு பிரிந்து 31 நாள் ஆகிவிட்டதே அப்பா!
இறைவனின் பாதவடிவில் நிரந்தர இளைப்பாற்றிக்காகச்
சென்ற எங்கள் அன்புத் தெய்வமே எங்கள் அப்பாவே - 31 நாள் அல்ல ஓர் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்
நாம் உம்மை மறவோம் அப்பா !
தாங்காத துயரோடு தவிக்கின்றோமே அப்பா! 
தரணியில் உம்மை எப்போ காண்போம் அப்பா! உம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். உம்மை மறக்க முடியாமல் உங்கள் பிரிவால் வாடும்
பாசமிகு மனைவி அன்புப் பிள்ளைகள்,சகோதரர்கள். ,மைத்துனர் மைத்துனி மருமக்கள் பேரப்பிள்ளைகள், 
 அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், வெளிநாட்டில் இருந்து 
எமது துக்கத்தில் பங்கெடுத்த அனைத்து உள்ளங்களுக்கும்,  கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும், 
தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் வாகனஉதவி செய்தவர்களுக்கும்  இறுதிக்கிரியையில் இருந்து அந்தியேட்டி கிரியைவரை  சகல ஒழுங்குகளையும் நடத்தியவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
>>>>> 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!! 
தகவல்-
குடும்பத்தினர்
  வீட்டுமுகவரி  
நவற்கிரி புத்தூர் மேற்கு 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 13 செப்டம்பர், 2022

மரண அறிவித்தல் அமரர் சிவகுமார் கஜானி13.09.2022

மலர்வு  - 06.10.2003   உதிர்வு-13.09.2022
சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கஜானி சிவகுமார்  13.09.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காரைநகர் கோவளத்தை சேர்ந்த சிவகுமார் நாகரூபி தம்பதிகளின் அன்பு மகளும் ஆவார் இவர்அபிராமி
கவிசா ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலம் சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் இந்திராணி  அம்மா காலம் சென்ற முருகேசு மற்றும்
விசயசறோஜினிதேவி அவர்களின்
பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
பார்வைக்கு
புதன்கிழமை 14.09.2022 
முற்பகல் 07:30 -10:00 வரை
பிற்பகல் 14:00-16:30 வரை
முகவரி
Krematorium Nordheim
Kaferholz strasse -101
8057 Zürich.
கிரியை
வியாழக்கிழமை 15.09.2022
     08:00-11:30 வரை
முகவரி Friedhofkapelle, Schwanden holz
Seebacher Strasse _ 130
8052 Zürich.
இந்த அறிவித்தலை உற்றார் , உறவினர்
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு-வீ ட்டு தொலைபேசி 
043-960 02 73
செல்பேசி-  
079 -488 94 43
079-777 81 37
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

மரண அறிவித்தல் அமரர் ஜெகநாதன் ஜேகீஷன் ( ஜெகி )12.09.22

விண்ணில்--12 .09.2022
சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டஅமரர் ஜெகநாதன் ஜேகீஷன் ( ஜெகி )அவர்கள் 12-09-2022-திங்கள்கிழமை அன்று அன்று சிவபதம் அடைந்தார்  இவர் 
திரு திருமதி ஜெகநாதன் ஜெயகௌரி தம்பதிகளின் சிரேஷ் ட   புத்திரனும் கெருடாவிலைச் சேர்ந்த 
காலம்சென்ற பெரியதம்பி  சரஸ்வதி காலம்சென்ற கனகரத்தினம் மற்றும் பற்குணராத்தினம்மா தம்பதிகளின் 
 பேரனும் அனுத்திகா அபிசாந்  அவர்களின் அன்புச் சகோதரனும் தணி கையான் வரதராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் மனோகரன் ஜெயாலக்சுமிதேவி  (கனடா ) சங்கர்குமார் ஜெயந்திராதேவி (கனடா ) ஜெகநாதன்
பிரதீபா(இலங்கை)தம்பதிகளின் மருமகனும் ஜேயதேவன் ஜெயந்தி  (கனடா )நவநாதன் துஸ்யந்தி காலம்சென்ற
 (கனடா ) ஜெபநாதன்  காமினி   (அமெரிக்கா )ஜெயஸ்ரீதேவி (இலங்கை )ஆகியோரின் பெறாமகனும் 
  ஹசசிலா கபிலன்   ஹஜிதா  விநோதன் குமரன் மீனா சங்கவி ஆதர்ஷா ஆகியோரின்  மைத்துனரும் 
ஜேனுத்தன்   ஜேனுஷன்   ஜெயகோபன்  சரிகா  லக் ஷன்   கன்னிகா அஞ்சலி  சஜீனா  தேஜஸ் ஆகியோரின் 
ஒன்டவிட்ட  சகோதரனும் ஆவர்  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள் கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
புதன்கிழமை -14-09- 2022 9:00 PM - :16.00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
ஈமக்கிரியை-
Get Direction
வியாழக்கிழமை.15-09-2022-  8:30 AM - 1:00 PMவரை  
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தகனம்
Get Direction
வியாழக்கிழமை-15-09 -2022 1:00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு-வீ ட்டு தொலைபேசி -044 480500-
செல்பேசி-079 6369574- 078 7729215

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 12 செப்டம்பர், 2022

இறுதிசடங்கு செலவு பிரிட்டன் ராணிக்கு எவ்வளவு தெரியுமா.

பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். பிரிட்டன் மகாராணி ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் தங்கி இருந்தபோது திடீர் உடல் நலக்குறைவால் 
பாதிக்கப்பட்டார் .தொடர் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு
 வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 96 வயது வரை வாழ்ந்த எலிசபெத் தனது வாழ்நாளில் 70 ஆண்டுகாலம் ராணி பட்டம் பெற்று ஆட்சி நடத்தியுள்ளார்.
இந்த நிலையில் நிர்வாக ரீதியான சில மாற்றங்களும் பிரிட்டனில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக ராணி எலிசபெத்தின் இறுதி சடங்குக்காக மட்டும் சுமார் 6 பில்லியன் பவுண்டுகள் செலவாகும் என எதிர்பார்கப்படுகிறது. அதவாது இந்திய ரூபாய் மதிப்பில் 55 ஆயிரம் கோடி ருபாய் என்று
 கணக்கிடப்படுள்ளது.
1952 ஆண்டு பதவி ஏற்றது முதல் ராணி எலிசபெத் பல்வேறு காரணங்களுகாக புகழ்பெற்றவராக விளங்குகிறார். அவர் பெயரும் உலகம் முழுவதும் புகழ் பெற்றதாக விளங்குகிறது. தற்பொழுது உள்ள பிரிட்டன் நாட்டு பணத்தாள்களில் ராணி எலிசபெத்தின் படங்கள் இடம் பெற்றுள்ளன
. இந்த பணத்தாள்கள் படிப்படியாக மாற்றப்பட்டு அதில் புதிதாக பதவி ஏற்றுள்ள பிரிட்டன் பிரதமர் சார்லஸ் படம் இடம் பெற உள்ளது. இதற்காக 10 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் செலவாகும் என எதிர்பார்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சம் கோடி என்கின்றனர்.
ஆனால் இது முழுமையாக மாற்றம் பெற்ற பல ஆண்டுகள் ஆகலாம் என்று கூறுகின்றனர். அதே போல் பிரிட்டன் பாஸ்போர்ட்டிலும் அவரது பெயருக்கு பதிலாக புதிய மன்னர் சார்லஸ் பெயர் இடம் பெரும் என்கின்றனர். இந்த மாற்றங்கள் இங்கிலாந்து பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

ஐந்தாம் ஆண்டு-நினைவஞ்சலி-அமரர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் (குட்டி) 11.09.22

இறப்பு-11-09-2017.-ஐந்தாம்  ஆண்டு-நினைவஞ்சலி-11-09-2022.
யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட   (குட்டி கடை உரிமையாளர்) அமரர் சுப்பிரமணியம்   இராமச்சந்திரன்  (குட்டி)   அவர்களின் .ஐந்தாம்  ஆண்டு-நினைவஞ்சலி-11-09-2022.-இன்று 
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்.(மணியம்.) தங்கரத்தினம் (செல்லம்மா)    தம்பதிகளின் அன்பு மகனும் ,  
    அமிர்தகௌரி அவர்களின் அன்பு கணவரும் 
    தினேஸ்ராஜ்  திலக்சன்  சதுசா  ஆகியோரின் அன்புத்தந்தையும்  
  காலஞ்சென்ற  கருணாநிதி .மற்றும்  சரஸ்வதி  (செல்வராணி) புஸ்பராயா  சௌந்தரராஜா  ரவிச்சந்திரன்   
 ஆகியோரின்  அன்புச்சகோதரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.ஐந்து ஆண்டுகள்  ஒரு நிமிடமாக
கரைந்துவிட்டது தீராத ஏக்கத்துடன்
இன்னமும் துடிக்கின்றது
 எம் இதயம் உங்கள் இனிய
 புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...தரணியில் எங்களை தவிக்கவிட்டு
 தனியாக நீங்கள் மட்டும்
எங்கு சென்றீர்கள்... நடந்தது
கனவாகாதா என ஏங்குகின்றோம்
 இல்லாளுக்கு தலைவன் இல்லை
 பிள்ளைகளுக்கு தந்தை இல்லை
 சூரியனே! நீ இன்றி
 எங்களுக்கு ஒளியே இல்லை...இறைவனோடு நீங்கள்
கனத்த இதயத்தோடு நாங்கள்...
 உங்களை இழந்து வாழும் எங்கள்
 வலி காலத்தாலும் ஆற்ற முடியாதது..
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
..உங்கள் ஆத்ம சாந்திக்காக
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி !!!
தகவல்
குடும்பத்தினர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>மடோல பிரதேசத்தில் காணி தகராறில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

இலங்கையில் அக்குரஸ்ஸ, மடோல பிரதேசத்தில் 10-09-2022.அன்றிரவு நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
காணி தகராறில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, கூரிய ஆயுதத்தால் நபரின் மூத்த சகோதரர் தாக்கியதாக காவல்துறையினர்
 தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் 
தெரிவித்தனர்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ காவல்துறையினர் மேற்கொண்டு 
வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 10 செப்டம்பர், 2022

கடலில் படகு கவிழ்ந்து பிரேசில் விபத்து பரிதாபமாக 14 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் மராஜோ தீவில் பாரா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலிருந்து  பிலிம் நகரம் நோக்கி இன்று படகு சென்று கொண்டிருந்தது. 
இந்த படகில் 40 பேர் பயணித்தனர். கொடிஜுபா தீவு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடலில் மூழ்கியவர்களை மீட்கும்
 பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் இந்த விபத்தில் கடலில் மூழ்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 26 பேர் மாயமாகியுள்ளனர். இதனை அடுத்து கடல் நீரில் மூழ்கி மாயமான 26 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று 
வருகின்றது. 
இந்த விபத்துக்குள்ளான படகில் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>