siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 30 ஜூன், 2022

கேரளாவில் பல் துலக்காமல் முத்தம் கொடுத்த மனைவியை கொலைசெய்த கணவன்

இந்திய கேரளா மாநிலத்தில் பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவன் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை
 ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ். இவரது மனைவி தீபிகா. இவர்களுக்கு ஒன்றைரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் காலை எழுந்ததும் அவினாஷ் குழந்தையை கொஞ்சுவது வழக்கம்.
நேற்றும் அதுபோல் குழந்தைக்கு முத்தம் கொடுத்து கொஞ்சியுள்ளார். இதை பார்த்த தீபிகா பல் துலக்காமல் குழந்தைக்கு ஏன் முத்தம் 
கொடுத்தீர்கள் என கேட்டுள்ளார்.
இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு ஆத்தரமடைந்த அவினாஷ் மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த தீபிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அவினாசை கைது செய்துள்ள நிலையில் இச்சம்பவம் அங்கு பரபரப்பை
 ஏற்படுத்தியுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

புதன், 29 ஜூன், 2022

நாட்டில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சில வர்த்தக வங்கிக் கிளைகள் பரிவர்த்தனைகளுக்கான திறக்கும் நேரத்தை மாற்றியமைத்துள்ளன.
தனால், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை முடிந்தளவு இணையவழியில் வங்கி பரிவர்த்தனை (Digital or Internet Banking) நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு கோரிக்கை 
விடுத்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக துறைமுகம், சுகாதாரம், அத்தியவசிய உணவுப்பொருள் விநியோகம் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகளுக்காக எரிபொருளை விநியோகிக்குமாறு அரசாங்கம் 
அறிவித்திருந்தது.
அத்துடன் ஏனைய அனைத்து துறையினரும் வீடுகளில் இருந்து பணியாற்றி, எரிபொருள் நெருக்கடியை தீர்க்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும், இல்லையெனில் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் வசமுள்ள
 எரிபொருளை பங்கீடு செய்வதில் சிக்கல் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே எதிர்வரும் 10ஆம் திகதிவரை 
அத்தியவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு ஏனைய செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன 
தெரிவித்திருந்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
செவ்வாய், 28 ஜூன், 2022

நாட்டில் லங்கா ஐஓசி நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

தாம் அனைவருக்கும் எரிபொருளை தொடர்ந்து விநியோகிப்பதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமையாளர் குப்தா அறிவிப்பொன்றை
 வெளியிட்டுள்ளார்.
அத்தியாவசிய சேவைகளுக்கே எரிபொருள் விநியோகிக்கப்படும் என நேற்றைய தினம் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்தக் கட்டுப்பாடுகளின் கீழ் நேற்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை 
முன்னெடுத்துள்ளது.
இந்த நிலையில், தாம் அனைவருக்கும் எரிபொருளை தொடர்ந்து விநியோகிப்பதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமையாளர்.27-06-2022. இன்று தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>ஞாயிறு, 26 ஜூன், 2022

மரணஅறிவித்தல் திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா) 26.06.22

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாககொண்ட திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்கள் 26-06-2022.ஞாயிற்றுக்கிழமை இன்று  இறைபதம் அடைந்தார் அன்னார் காலம்சென்ற  திரு சுப்பிரமணியம்
 அவர்களின் பாசமிகு மாணவியரும் காலம் சென்றவர்களான  தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும் 
காலம்சென்றவர்களான ஆறுமுகம் கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும் 
சென்றவர்களான  துரைராஜா செல்வராஜா ஞானமணி வித்திலமணி ஜெயரத்தினம் மற்றும் 
பாலசிங்கம் சிவலிங்கமணி ஆகியோரின் அன்புச்சகோதரியும் தர்மசிறி (இலங்கை )தர்மபூபதி (சுவிஸ் )தர்மதேவி((ஜேர்மன் ) தர்மதேவன்(கனடா )
 தர்மசாந்தினி (நோர்வே )காலம்சென்றதர்மகுமார் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2022. ஞாயிற்றுக்கிழமை அன்று 
அவரது இல்லத்தில் 
 மு.ப 01:00 மணியிலிருந்து  02-00மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெறும்
தகவல் குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை ,பூட்டப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!


இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>வெள்ளி, 24 ஜூன், 2022

தென்னமெரிக்கா வெனிசுலாவில் விமானம் விபத்து: 6 பேர் உயிரிழப்பு

தென்னமெரிக்கா நாடான வெனிசுலாவில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
லியர்ஜெட் 55சி என்ற தனியார் விமானம் வெனிசுலா தலைநகர் நோக்கி சென்ற போது விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.
தொடர்பு துண்டிப்பதற்கு 29 நிமிடங்கள் முன் வரை விமானம் வானில் பறந்ததாகவும், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
4 பயணிகள் உள்பட 6 பேர் விமானத்தில் பயணித்துள்ளனர்.   
இது தொடர்பான மேலதிக செய்திகளை 
உள்ளடக்கி வருகின்றது 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
வியாழன், 23 ஜூன், 2022

நாட்டில் மீண்டும் சத்தம் சந்தடி இன்றி உச்சம் தொட்ட விலைவாசி

 

நாட்டில் மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீண்டும் சடுதியாக உயர்ந்துள்ளன.நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகளே சத்தம் சந்தடி இன்றி 
அதிகரித்துள்ளன.
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 135 ரூபாவாக காணப்பட்ட சவர்க்காரத்தின் விலை, தற்போது 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நடுத்தர அளவான பற்பசை ஒன்றின் விலை 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் 160 கிராம் நிறைக் கொண்ட பற்பசையின் புதிய விலை 310 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய நூடில்ஸ் பொதியொன்று 120 ரூபாவாக அதிகரித்துள்ளது. முன்னதாக அந்த நூடில்ஸ் பொதி 55 முதல் 60 ரூபாவிற்கு விற்பனை 
செய்யப்பட்டது.
அத்துடன் பிஸ்கட் வகைகளின் விலைகளும் மீண்டும் 
அதிகரித்துள்ளன.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

புதன், 22 ஜூன், 2022

மரணஅறிவித்தல் திரு சண்மும் றங்கேசேஸ்வரன்(வரன் ) 22.06.22

தோற்றம் -02-06-1976-மறைவு -22-06-2022.
யாழ் தோப்பு அச்சுவேலியைப்  பிறப்பிடமாகவும் தற்போது  பிரான்சில் வசித்து வந்த திரு சண்மும் றங்கேசேஸ்வரன் (வரன் )
அவர்கள் 22-06-2022. புதன்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார். 
அன்னார் திரு ஐயம்பிள்ளை சண்முகம் காலம் சென்ற இராசலட்சுமி  (சின்னவள் )அவர்களின் பாசமிகு மகனுமாவார் காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை தங்கம்மா  செல்லத்துரை பார்வதியின் பேரனும் பமிலாவின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற (ஜெனீபர்)ஜானிஸ். 
 சோபிகன் ஆகியோரின் அன்புத்தந்தையும்  சுதநந்தினி (நந்தினி )சதீஸ்வரன் (வாவா) கௌரி (கவி )  ஆகியோரின்  சகோதனும்  ஆவார்அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் இதே இணையத்தில் (இணக்கப்படும்) அறியத்தரப்படும்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
. எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>ஞாயிறு, 19 ஜூன், 2022

ரொறன்ரோவில் தீ வைப்புச்சம்பவம் உயிருடன் கொளுத்தப்பட்ட இளம் பெண்

கனடா – ரொறன்ரோவில் இடம்பெற்ற தீ வைப்புச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.பகல்வேளை பேருந்து ஒன்றில் பயணித்த இளம் பெண் ஒருவர் உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனுடன் தொடர்புடைய 35 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு தற்செயலான தாக்குதல் சம்பவம் எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர், இது கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ளனர்.நபர் ஒருவர் குறித்த பெண் மீது திரவப் பொருளை ஊற்றி பற்ற வைத்ததாகவும், இதனால் தீ மூண்டதாகவும் காவல்துறையினர்
 தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், குறித்த பெண்ணுக்கும் அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
சனி, 18 ஜூன், 2022

மரண அறிவித்தல் திரு விஜயாலயன் மதியழகன் 14.06.22

மண்ணில்-18 01 1994-விண்ணில்-14-06-2022
முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa நகரை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயாலயன் மதியழகன் அவர்கள் 14-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், மதியழகன் இராஜதுரை, விஜயராணி மதியழகன் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,கார்த்திகா கதீசன் அவர்களின் 
அன்புச் சகோதரரும்,கதீசன் அருளானந்தம் அவர்களின் மைத்துனரும், கவினிகா அவர்களின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற இராஜதுரை பொன்னம்பலம்(Srilankan parliament hansard recorder), இரத்தினேஸ்வரி இராஜதுரை தம்பதிகள் மற்றும் நாகரத்தினம் கந்தையா இராஜலட்சுமி நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,சற்சுதன்(ஜவான்)- நந்தினி, சந்திராதரன்- தண்மதி(இலங்கை), மோகனதாஸ்(கெங்கா)- கௌரி(Toronto), மாவீரராகிய இன்பதாசன்(பரணி), சந்திரரூபன்- சிவலோசினி,
 சதீசன்- செந்தூரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,மேகநாதன்- ரஞ்சினி, மணிவண்ணன்- குகாயினி ஆகியோரின் பெறாமகனும்,மதிவதனி- சண்முகநாதன், மேகலா- சாந்திகுமார் ஆகியோரின் அன்பு மருமகனும்,ஆதிரையன், எழில்நிலா, சாம்பவி, அருண்நிலா, ஆரணிகா, இளந்திரையன், சுடர், சயூரி, சரிதன் ஆகியோரின் பாசமிகு மச்சானும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!

 Mr. Vijayalayan Mathiyalaghan was born in Mulliyavalai, Mullaitheevu, Srilanka and lived in Ottawa, Canada passed away peacefully on 14th June 2022. Beloved son of Mathiyalaghan Rajadurai- Vijayarani Mathiyalaghan,Beloved brother of Karthiga,Loving cousin brother of Katheesan,Loving Uncle of Kavinika,Loving grandson of late Rajadurai Ponnampalam(Srilankan Parliament Hazard Recorder)- Rathineswary Rajadurai and Nagaratnan Kandiah- Rajaludchumy Nagaratnam,Loving cousin of Satsuthan(Jawan)- Nanthini(France), Santhiraatharan- Thanmathy(Srilanka), Mohanathas(Genga)-Gowry(Toronto), Maveerar Inpathasan(Parani), Santhiraruban- Sivalosiny(France), Satheesan- Senthury(France),Loving Grandson of Meganathan- Ranjini, Manivannan- Kuhayini,Loving cousin of Mathivathany- Shanmuganathan, Megala- Shanthikumar,Loving nephew of Aathirayan, Elilnila, Sambavy, Arunnila, Aaranika, Elanthirayan, Sudar, Sayuri, Sarithan.This notice is provided for all family and friends.23-06-2022:- Memorial speeches : 4:30 pm to 5:30 pmFuneral Procession:  5:45 pm (Police, Army & Community)Location: Capital Funeral Home 3700 Prince of Wales Dr, Ottawa K2C 3H2 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 19 Jun 2022 5:00 PM - 9:00 PM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada
பார்வைக்கு
Get Direction
Thursday, 23 Jun 2022 3:30 PM - 4:30 PM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada
தகனம்
Get Direction
Thursday, 23 Jun 2022 6:00 PM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada
தொடர்புகளுக்கு
 மதியழகன் - தந்தைMobile : +16136204488 விஜயராணி - தாய்Mobile : +16477833466 கங்கா - மாமாMobile : +14169304577 கார்த்திகா - சகோதரிMobile : +16132625735 கதீசன் - மைத்துனர்Mobile : +16132626227

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


வெள்ளி, 17 ஜூன், 2022

இடம்பெற்ற விபத்தில் கனடாவில் இலங்கை தமிழ் இளைஞன் பலி

கனடாவில் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர்((15-06-2022) நேற்றுமுன்தினம் இடம்பெற்ற விபத்தில் 
உயிரிழந்துள்ளார்.
28 வயதான விஜயாலயன் மதியழகன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் 
தெரிவிக்கின்றன.
இவர் கனேடிய இராணுவத்தில் பல வருடங்கள் பணியாற்றிய நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் சேவையில்
 இணைந்துள்ளார்.
விபத்தில் படுகாயங்களுக்குள்ளான அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் இலங்கையில் பிறந்து ஒட்டாவாவில் வளர்ந்தவர் 
எனக் கூறப்படுகிறது.
இந்த விபத்து அவர் கடமையில் இல்லாதபோது நிகழ்ந்ததாக ஒட்டாவா பொலிஸார் அறிவித்துள்ளனர்.
எனினும், இவரது மறைவு காரணமாக அனைத்து ஒட்டாவா காவல்துறை கட்டிடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க
 விடப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பில் ஒன்ராறியோ மாகாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>வியாழன், 16 ஜூன், 2022

உந்துருளியில் சென்ற இரு பெண்களை யாழில் மோதித் தள்ளிய வாகனம்

யாழ். நகரில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு பெண்களை மோதித் தள்ளிவிட்டு வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளது. இதில், அந்தப் பெண்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
16-06-2022.இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் யாழ். நகரின் மார்ட்டின் வீதிக்கு அண்மையாக உள்ள பிரதான வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
படுகாயங்களுக்கு இலக்கான இரு பெண்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மோதிய வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அதன் இலக்கத் தகடுகளில் ஒன்று மோதிய மோட்டார் சைக்கிளில் சிக்கியுள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை 
மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>செவ்வாய், 14 ஜூன், 2022

டென்னிஸ் போட்டிகளில் பெருமை சேர்த்த யாழ்.மாவட்ட சிறுவர்கள்

இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட STR Cool Tennis இன் 10 வயதிற்க்கு உட்ப்பட்ட தனி நபர்களுக்கான டென்னிஸ் போட்டிகளில் யாழ்.மாவட்ட வீரர்கள் முதன் முறையாக தமது வெற்றிகளை பதிவு செய்துள்ளனர்.
கடந்த யூன் 10ஆம்,11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தில் இப் போட்டிகள் நடைபெற்றன.இதில் 8 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் ஜெ.நர்ஸ்வின் காலிறுதிப் போட்டிக்கு 
தகுதி பெற்றுள்ளார்.
இதன்போது 7 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான இரட்டையர் போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் ரா.ஆரோன் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.மேலும் 7 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் போட்டியில் யாழ் இந்து ஆரம்பப்பாடசாலை மாணவி வி.அஸ்விதா இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார். 


இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


திங்கள், 13 ஜூன், 2022

ஆலடித் தெரு பகுதியில் லண்டன் பெண் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம்

வவுனியா, ஆலடித் தெரு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.இந்த சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதென வவுனியா பொலிஸ் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள்  12-06-2022.அன்று 
 தெரிவித்துள்ளனர்.
32 வயதான சிந்துஜா என்ற உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் லண்டனில் வசிக்கின்றனர். மேலும் 
இறந்த பெண் சில காலமாக அவர்களைப் பிரிந்து வாழ்ந்து வருவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.லண்டனில் 
இருந்து நாடு திரும்பியவர் வவுனியாவுக்குச் சென்று உறவினர்களுடன் 
வசித்து வந்தார்.
இந்நிலையில் திடீரென காணாமல் போயிருந்த நிலையில், அவர் வசித்து வந்த காணியை அண்டிய காணியில் உள்ள கிணற்றில் சடலமாக
 மீட்கப்பட்டுள்ளார்.
இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில் பிரேத பரிசோதனைக்காக அவரது சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.எனினும் இந்த மரணத்தில் மரமம் நீடிப்பதாகவும், பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் நேற்றைய தினம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>ஞாயிறு, 12 ஜூன், 2022

இலங்கையில் எரிபொருளை வழங்க புதிய நடைமுறை

இலங்கையில் ஜூலை முதலாம் திகதி முதல் எரிபொருளை வழங்க புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாடிக்கையாளர்களை பதிவு செய்து, வாராந்தம் உத்தரவாத அடிப்படையில் எரிபொருள் வழங்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர
 தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.
போதிய அளவான எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டாலும், தொடர்ந்தும் எரிபொருளுக்கான வரிசை நீள்கிறது. சிலர் தேவைக்கு அதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்து சேமிப்பதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
வழமையான மின்விநியோகம் வழமைக்கு திரும்பும் வரை எரிபொருள் விநியோகம் மற்றும் எரிபொருள் முகாமைத்துவத்தை 
மேற்கொள்ள முடியாத
நிதி கட்டுப்பாடு காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எண்ணெய் இறக்குமதி ஒரு வாரத்திற்கு 
கையிருப்பில் உள்ளது.
24 மணி நேர மின் விநியோகத்தை மேற்கொள்வதற்கான டீசல், உலை எண்ணெய் மற்றும் நெப்டா என்பனவற்றிக்காக மாதாந்தம் மேலதிகமாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>சனி, 11 ஜூன், 2022

இலங்கை மக்களுக்குமுகக்கவசங்கள் அணிவது தொடர்பான அறிவிப்பு

இலங்கை மக்களுக்கு முகக் கவசங்களை தொடர்ந்தும் பயன்படுத்துமாறு இலங்கை மக்களுக்கு மருத்துவ நிபுணர்களின் ஒன்றியத்தினால் அறிவுறுத்தல்
 வழங்கப்பட்டுள்ளது.
முகக் கவசங்களை அணியும் பழக்கத்தை கைவிட வேண்டாம் எனவும், குறிப்பாக உள்ளரங்க நிகழ்வுகளில் முகக் கவசங்கள் அணியுமாறும் கோரியுள்ளனர்.
வயோதிபர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தேவையின்றி சுவாசப் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடுவதனை தடுக்க இவ்வாறு முகக் கவசம் அணியுமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும், சுகாதார அதிகாரிகள் தொடர்ந்தும் முக்க் கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்த வேண்டியது அவசியமானது என 
தெரிவிக்கப்பட்டுள்ளது.


இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

                  

வியாழன், 9 ஜூன், 2022

நாட்டில் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை – வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோ நாடு அரிசி 220 ரூபாவிற்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 230 ரூபாவிற்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 260 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உச்சபட்ச சில்லறை விலையை விடவும் கூடுதல் தொகைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க நாடு முழுவதிலும் சுற்றி வளைப்புக்கள்
 மேற்கொள்ளப்பட உள்ளது.
தனியொரு வர்த்தகர் இவ்வாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் ஐந்து லட்சம் ரூபா அபராதமோ, ஆறு மாத கால சிறைத்தண்டனையோ அல்லது இந்த இரண்டு தண்டனைகளோ விதிக்கப்படும் என
 அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்யும் தனியார் நிறுவனமொன்றுக்கு ஐந்து லட்சம் முதல் ஐம்பது லட்சம் ரூபா வரையில் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
புதன், 8 ஜூன், 2022

வாழைச்சேனையில் ஆறு நாட்கள் உணவின்றி தெருவில் உயிரிழந்த நபர்

வாழைச்சேனை செங்கலடி புதிய வீதி கொம்மாந்துறையைச் சேர்ந்த பிள்ளையான் கணேசமூர்த்தி (69 வயது) என்பவரே சடலமாக 
மீட்கப்பட்டுள்ளார்.
பொது மைதானத்திற்கு அருகில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பன்டார தெரிவித்தார்.
குறித்த நபர் வீட்டிலிருந்து வெளியேறி சுமார் ஆறு நாட்கள் உணவின்றி தவித்து வந்துள்ள நிலையில், பசியின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலம் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>செவ்வாய், 7 ஜூன், 2022

அக்கரப்பத்தனையில் விறகு தேடச் சென்ற இளம் யுவதிகளைக் காணவில்லை

விறகு தேடச் சென்ற இரண்டு யுவதிகளை கடந்த 06 நாட்களாக காணவில்லை என அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமல் போனவர்கள் அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்டத்தில் வசிக்கும் சிவக்குமார் ரூபிகா (வயது 15), சிவலிங்கம் ஸ்ரீதேவி (வயது 18) ஆகிய இரண்டு யுவதிகள் என பொலிஸார் 
தெரிவித்தனர்.
கடந்த 2ஆம் திகதி காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து விறகு சேர்க்க சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும், இதுவரை இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் 
தெரிவித்தனர்.
இவர்களின் தாய், தந்தையர்கள் மற்றும் உறவினர்கள் கொழும்பு உட்பட சகல இடங்களிலும் தேடிய போதிலும், இதுவரை கிடைக்கவில்லை. அக்கரப்பத்தனை பொலிஸ் ‌‌‌அதிகாரிகள் தொடர்ந்து தேடும் பணியில் ‌‌‌‌ ஈடுபட்டு
 வருகின்றனர்.
குறித்த 2 யுவதிகளும் தோட்டத்தில் தொழிலாளிகளாக தொழில் செய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>> >மரண அறிவித்தல் திரு அருள்தாசன் யேசுதாசன் (அருள், ஜோன்சன்)05.06.22

பிறப்பு-19 -12-1966-இறப்பு-05- 06- 2022
 நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் -யோவான்: 11:25
 யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, 
சுவிஸ் சூரிச்(Zürich)ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருள்தாசன் யேசுதாசன் அவர்கள் 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சுவாந்தக்குரூஸ் யேசுதாசன், பெலிசிற்றம்மா(கனகமணி) தம்பதிகளின் அன்பு மகனும், 
காலஞ்சென்ற பீற்றர் பொங்கலன்(கிப்சலா தச்சுத்தொழிற்சாலை- யாழ்ப்பாணம்), அன்ரனி அம்மா தம்பதிகளின் 
அன்பு மருமகனும்,கிப்சலா அவர்களின் அன்புக் கணவரும்,ஜெனிபர் அவர்களின் அன்புத் தந்தையும்,சேவியர், லில்லி, ஜெனோவா, டயஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கனிஸ்ரா, றகுநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 08 Jun 2022 11:00 AM - 4:30 PM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Thursday, 09 Jun 2022 11:00 AM - 4:30 PM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Friday, 10 Jun 2022 11:00 AM - 4:30 PM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Saturday, 11 Jun 2022 9:00 AM - 11:30 AM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 12 Jun 2022 9:00 AM - 11:30 AM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Monday, 13 Jun 2022 12:00 PM - 4:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Tuesday, 14 Jun 2022 12:00 PM - 4:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
நல்லடக்கம்
Get Direction
Wednesday, 15 Jun 2022 9:00 AM - 1:30 PM
Krematorium Nordheim Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
 கிப்சலா - மனைவிMobile : +41797738561 Bro. யோபு றவி - உறவினர்Mobile : +41763057336 லிதியா - உறவினர்Mobile : +41795014121

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>திங்கள், 6 ஜூன், 2022

நாட்டின் சில பிரதேசங்களில் சிறுவர்களுக்கு புதிய வைரஸ் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பிரதேசங்களில் சிறுவர்களுக்கு புதிய வைரஸ் காய்ச்சலொன்று உருவாகி வருவதாகவும் அது தொடர்பில் பெற்றோர் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
6 மாதம் முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இந்த காய்ச்சல் ஏற்படுவதாகவும் இது ஒருவரிலிருந்த மற்றவருக்கு பரவக்கூடியது என்றும் எனினும் இது ஆட்கொல்லி நோயல்ல என்பதையும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, அவ்வாறான சிறுவர்களை ஆரம்ப பாடசாலை, சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு அல்லது பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் நான்கு நாட்கள் அவர்கள் ஓய்வாக வீட்டில் இருப்பதற்கு வழி செய்யுமாறும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹென்டிபுட்மவுன்ட் என்ற பெயரில் அறியப்பட்டுள்ள மேற்படி வைரஸ் காய்ச்சலானது சிறுவர்களுக்கு ஏற்படும் போது காய்ச்சலுடன் உடலில் சிவப்பு கொப்பளங்கள் ஏற்படுவதாகவும் 
தெரிவித்துள்ளார்.
இக்காலங்களில் இந்தகாய்ச்சல் கொழும்பு நகர்பகுதியில் வெகு வேகமாகபரவி வருவதாகவும் இந்த வைரஸ் காய்ச்சல் மிக இலகுவாக சிறுவர்கள் மத்தியில் பரவி வருவதாகவும் ஒருவருக்கு ஒரு தடவை என்றில்லாமல் பல தடவைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்றும் 
தெரிவித்துள்ளார்.
அவ்வாறு காய்ச்சல் ஏற்படும் சிறுவர்களை வீட்டிலேயே அவர்களுக்கு ஓய்வு பெற்றுக்கொள்ளும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த காய்ச்சல் ஏற்படும் சில சிறுவர்களுக்கு நகம் கழன்று விடக் கூடிய அறிகுறிகள் உள்ளதாகவும் அவ்வாறு ஏற்பட்டால் அவற்றுக்கு மருந்துகளை எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
சனி, 4 ஜூன், 2022

தெற்கு ஜெர்மனியில் தடம்புரண்ட ரயில்… நால்வர் மரணம், 30 பேர் காயம்

தெற்கு ஜெர்மனி வட்டாரத்தில் உள்ள ski resort பகுதியில் ரயில் ஒன்று தடம்புரண்டதில் நால்வர் மாண்டதாக மீட்புச்சேவை அதிகாரிகள்
 தெரிவித்தனர்.
30 பேர் காயமடைந்ததாகவும் 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் கூறினர்.
விபத்து நேர்ந்தபோது சுமார் 60 பேர் ரயிலில் இருந்ததாக நம்பப்படுகிறது.
ரயிலில் பல பள்ளி மாணவர்கள் இருந்தனர் என்று செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் நடந்துவருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
மாண்டவர்களின் அடையாளம் குறித்த விவரங்கள்
 ஏதுமில்லை.
அப்பகுதியில் முற்றிலும் ரயில்சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
ஜெர்மனி முழுவதும் பயணம்செய்ய மலிவுக் கட்டணச்சேவை ஜூன் முதல் தேதி நடைமுறைக்கு வந்தது.
மலிவுக் கட்டணம் என்பதால் தற்போது பயணிகளின் எண்ணிக்கை ரயிலில் அதிகமாய் இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>