siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 31 மார்ச், 2023

மிருசுவில் கரம்பகம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் கொடூரமாக வெட்டிக் கொலை

யாழ் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மிருசுவில் கரம்பகத்தில் உள்ள தோட்டக் குடிலில்.31-03-2023. இன்று காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் வயது 43 என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழும் இவர் தோட்டத்தில் தங்குவதை வழமையாக கொண்டுள்ளார்.
இந்நிலையிலேயே இன்று காலை கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

மல்லாவி கொல்லவிளாங்குளத்தில் திருமணமாகி 5 மாதங்களில் உயிரிழந்த பெண்

முல்லைத்தீவு – மல்லாவி கொல்லவிளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் 23-03-2023-அன்று  இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
வீட்டில் இருந்து மின்சாரத்தினை வெளியில் முற்றத்தில் வெளிச்சம் போடுவதற்காக எடுக்கப்பட்டிருந்த நிலையில், மின்சார வயரினை பிடித்த வேளையிலேயே குறித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயதான பிரபாகரன் சுதாஜினி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் திருமணமாகி 5 மாதங்கள் ஆன நிலையில் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு 
உத்தரவிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வியாழன், 30 மார்ச், 2023

ருவாண்டா வைத்தியசாலையில் 5 இலங்கை தமிழ் அகதிகளின் விபரீத முடிவு

இலங்கையை சேர்ந்த ஐந்து தமிழ் அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
ருவாண்டா தலைநகரமான கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் 5 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தையல் ஊசியை விழுங்கி தற்கொலைக்கு முயற்சி
22 வயதான யுவதியையும் இலங்கைக்கு திருப்பியனுப்பவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையிலேயே யுவதி தையல் ஊசியை பாதியாக உடைத்து இரண்டு துண்டுகளையும் விழுங்கியுள்ளார்.
இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்து அவர்கள் வெளியிட்ட காணொளி வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் கூறியுள்ளதாவது,
ஆரம்பத்தில் டியாகோ கார்சியா தீவில் நுழையும் போது நன்றாக வரவேற்றிருந்ததாகவும் ஆனால் தற்போது தமது சுயமரியாதையை இழப்பது போன்று உணர்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
விலங்குகளை போன்று அடைப்பு 
வெளியுலகம் தெரியாமல் சிறையில் அடைக்கப்படுவது போன்றே வாழ்க்கை கடந்து செல்வதாக அவர்கள் கவலை 
வெளியிடுகின்றனர்.
இவர்களுடன், மேலும் சுமார் 65 பேர் டியாகோ கார்சியா தீவில் உள்ளதாகவும் விலங்குகளை போன்று அடைக்கப்பட்டுள்ளதாக இவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
உயிர்வாழ்வதற்கான சுழல் அந்த தீவிலும் தற்போதுள்ள தாம் தங்கியுள்ள ருவாண்டா தலைநகரமான கிகாலியும் வாழ முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் கவலை 
வெளியிடுகின்றனர்.
பாதிக்கப்பட்ட மற்றுமொரு இளைஞன் கூறுகையில் தான் இந்தியாவில் பிறந்த நாடற்ற மனிதன் என குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தனக்கு மனநோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்த போதும் அதற்கான சிகிச்சைகள் வழங்கப்படவில்லை என்கின்றார்.
இரத்த வாந்தி எடுப்பதாவும் இதனை அதிகாரிகளிடம் தெரிவித்தால் புகைப்படம் எடுக்குமாறும் இரத்தத்தை கையில் எடுத்து வருமாறு குறிப்பிடுவதாகவும் அவர் கவலை வெளியிடுகின்றார்.
சிறைக் கைதிகளுக்கு கூட ஒருசில சுதந்திரம் உள்தாகவும் ஆனால் தமக்கு அந்த சுதந்திரம்கூட இல்லாத அடிமைகளாக வாழ்வதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .
அதேவேளை  சட்டவிரோத பயணங்கள் உயிராபத்தை ஏற்படுத்தும் என்பது தெரிந்தும்  மக்கள் இன்னும் ஐரோப்பிய  நாடுகளுக்கு    இவ்வாறு பயணம் செய்வது  குறையவில்லை என்பது இங்கு 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 29 மார்ச், 2023

இந்திராபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலி

நாட்டில்  பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த விபத்து 28-03-2023-அன்று பிற்பகல் 5 மணி அளவில் 
இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் ஏ9 வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பளை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது பின்னால் சென்ற கனரகவாகனம் மோதிதில் சம்பவ இடத்திலேயே குறித்த குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.
சடலம் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குடும்ப தகறாரு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸ் விசாரணைகள் 
இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 28 மார்ச், 2023

அமெரிக்காவில் கணவரை பலி வாங்க இரு பிள்ளைகளை கொன்ற மனைவி

அமெரிக்காவை சேர்ந்த வெரோனிகா யங்ப்ளட் (37) என்ற பெண் தனது முன்னாள் கணவரை பலி வாங்குவதற்காக தனது மகள்களை கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.
வெரோனிகா தனது மகள்களான சரோன் (15), யங்ப்ளட் (5) ஆகியோரை கொலை செய்ததற்காக மனநலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் குற்றமற்றவர் என்று கடந்த ஒகஸ்ட் 15  ஆம் திகதி ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் மீது இரண்டு முதல் நிலை கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் வேண்டுகோளை நீதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். 
மேலும் வெரோனிகா இரண்டு முறை துப்பாக்கிச் சூடு செய்ததற்காகவும் அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வெறும் மனநோய்க்கு அப்பாற்பட்டது.  
இது மனச்சோர்வுக்கு அப்பாற்பட்டது.  
இது PTSDக்கு அப்பாற்பட்டது. 

இது தற்கொலைக்கு அப்பாற்பட்டது" என்று வழக்கறிஞர் நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார். 
இரண்டு வார விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் தற்போது 
தீர்ப்பளித்துள்ளது.
யங்ப்ளட்டினின் சகோதரி, முன்னாள் கணவர் மற்றும் முன்னாள் காதலர் ஆகியோரும் சாட்சியமளித்ததாக தெரிவித்துள்ளது. 
யங்ப்ளட் ஒரு பாலியல் தொழிலாளியாக இருந்ததாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளார்.
அவர் தனது சொந்த குடும்பத்தினரால் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பாதுகாப்பு வழக்கறிஞர்கள் 
கூறியுள்ளனர்.
மெக்லீன், வர்ஜீனியா அபார்ட்மெண்டில் அவர்கள் பாதுகாப்பற்றவர்களாக இருப்பதற்காக அவர் தனது குழந்தைகளுக்கு தூக்கு மாத்திரைகளை கொடுத்துள்ளார்.
தனது மகள் புரூக்ளின் தலையில் அவர் சுட்டதில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இரண்டாவது மகளான ஷரோன் இரண்டு முறை சுடப்பட்டுள்ளார். 
உடனே ஷரோன் உயிருக்குப் போராடிய நிலையில் அவசர எண்ணான 911 ஐ அழைத்து, அவரது தாயார் அவளை சுட்டுக் கொன்றதாக 
கூறியுள்ளார்.
அங்கு வந்த பொலிஸார் ஷரோனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 27 மார்ச், 2023

மரண அறிவித்தல் திரு இளையதம்பி சங்கரப்பிள்ளை காலமானார்

யாழ் அச்சு வேலி  தோப்பை  பிறப்பிடாகவும், கந்தர்மடத்தை வாழ்விடமாகவும் கொண்டவர் தோப்புப் போதிப்பிள்ளையார் ஆலயத்தின் முன்னைநாள் தலைவரும் யாழ் இந்து கல்லூரி மற்றும் நைஜிறியாஆகியவற்றில் ஆசிரியராகக் கடமையாறிய அவர் பின்னர் இறுதி வரை கனடா ஸ்காபரோவை வதிவிடமாகக் கொண்டு நீண்ட காலம் 
இங்கு வாழ்ந்தார்.
அத்துடன் , பல சமூக சேவைகளை கனடாவிலும், தனது பிறப்பிடமான தோப்புர் போத்தி பிள்ளையார் தேவஸ்தானத்துக்கும் அரும் சேவையாற்றிய அவர் ஒரு சர்வதேச கவிஞர் என்ற பட்டத்தையும்
 பெற்றிருந்தார். 
கனடாவில் சில பாராளுமன்ற உறுப்பினர்களோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்து  அதன் மூலம்  தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்து  
வாழ்ந்து வந்தார்.
அண்மையில் தனது 94வது வயதில் நிறைவான வாழ்லிருந்து இயற்கை எய்தினார். அவரது இறுதிக்கிரியைகள் கனடாவில் இடம்பெறவுள்ளன. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எங்களது 
பிரார்த்தனைகள். 
அனுதாபம் தெரிவிக்க விரும்புவோர் அவரது புதல்வருடன் 416 712 5598 என்னும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 26 மார்ச், 2023

: வீடொன்றில் இருந்து பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

பரிசில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரது சடலத்தை நேற்று சனிக்கிழமை மாலை காவல்துறையினர் 
மீட்டுள்ளனர்.
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது..24-03-2023. வெள்ளிக்கிழமை காலை வீட்டில் 
இருந்து புறப்பட்ட கணவன், 25-03-2023.நேற்று சனிக்கிழமை மாலை
 வீடு திரும்பியபோது, அவரது யில்  மிக மோசமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், வீட்டின் வரவேற்பறையில் கிடந்தாதாக
 அறிய முடிகிறது.
உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டபோதும் அவர்களால் அப்பெண்ணை காப்பாற்ற முடியவில்லை.
29 வயதுடைய பெண் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

சனி, 25 மார்ச், 2023

வரலாறு காணாத பனிப்புயல் பாதிப்பால் அமெரிக்காவில் 23 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் தற்போது வரலாறு காணாத அளவுக்கு மோசமான வானிலை நிழவி வருகின்றது. அங்கு பெரும்பாலான மாகாணங்கள் பனிப்புயல் பாதிப்பை எதிர்கொள்கின்றன.
சமீபத்தில் கலிபோர்னியா மாகாணத்தில் பனிப்புயல் வீசியது. இதில் பல வீடுகள் மற்றும் அலுவலகங்களின் கண்ணாடிகள் உடைந்து 
சேதமடைந்தது.
மேலும், பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 
இதனால் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சுற்றுப்பகுதிகளில் பல நகரங்கள் இருளில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை 
பாதிக்கப்பட்டது.
இந்த பனிப்புயல் காரணமாக சான் பிரான்சிஸ்கோவின் வீதிகளில் காணும் இடமெங்கும் பனியால் மூடப்பட்டு இருந்தது. அங்கு 
சாலைகளில் நிறுத்தியிருந்த கார்கள் மறையும் அளவுக்கு 
பனி படர்ந்திருந்தது.
இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எனவே, பலர் வைத்தியசாலைக்கு கூட செல்ல முடியாமல் அவதியடைந்தனர். தற்போது அங்கு ஓரளவு இயல்பு நிலை 
திரும்பியது.
மேலும், இந்த பனிப்புயலில் 700-க்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்தன. இந்த மரங்கள் விழுந்ததில் 2 பேர் 
உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், புயலால் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
உயிருக்கே அச்சுறுத்தல் நிலவும் இந்த பனிப்புயல் காரணமாக பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசாங்கம் 
எச்சரித்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 24 மார்ச், 2023

அமரர் திரு,ஆ ,க,சுப்பிரமணியம்.12ம் ஆண்டு நினைவஞ்சலி 24.03.2023


மண்ணில் : 06- 02 1932 — விண்ணில் : 06 04 2011
யாழ். மாவிடடபுரத்தை பிறப்பிடமாகவும், நவற்கிரி புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட.அமரர் திரு ..(ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணிஐயா  ) அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி 24-03-2023.வெள்ளிக்கிழமை இன்று 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாரை   
ப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
பன்னிரண்டு  ஆண்டுகளாய்  
வளர்ந்து நிற்பது உங்கள் பிரிவின் சோகம்
அனைவராலும் ஐயா ஐயா என அழைக்கபட உங்கள்
நீங்காத நினைவுகளுடன்
ஒன்பது ஆண்டுகளல்ல இன்னும் ஓராயிரம் ஆண்டுகள்
நாம் வாழ்ந்தாலும்..
வாழும் காலமெல்லாம் உன் பிரிவின் ஏக்கம் தொடரும்…
நினைவு அஞ்சலி
காலங்கள் கடந்தாலும்
ஆண்டுகள் சென்றாலும்
எங்கள் மனதில்
என்றும் நிலைத்திருப்பாய்
அன்பின் அடையாளமாக
அறத்தின் புதல்வனாக
தர்மத்தின் தலைவனாக
பொன்னம்மாவின் செல்வனாக
காலத்தை வென்ற தலைமகனாக
ஆறுமுகம்.கந்தையா
பொன்னம்மாவின்
அன்பில் சிவமாக
என்றும் எங்களில்
வாழ்கிறீர்கள் அன்பின்ஐயா
என்றென்றும் எங்கள் தெய்வம் நீங்கள்
…அன்பும் ஆற்றலும்
பண்பும் பாசமும்
உறுதியும் உன்னதமும்
உண்மையும் உழைப்பும்
உற்ற தோழமையும்
இனிக்கும் இன்முகமும்
கொண்ட ஈடுஇணையற்ற
எங்கள் தந்தையே !
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகிறோம் ஐயா
ஓம் சாந்தி ஓம் சாந்தி சாந்தி,,,
உங்கள் பிரிவால் என்றும் வாடும்
அன்புப் ,பிள்ளைகள்,
சகோதர்கள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள் புட்டப்பிள்ளைகள்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
தகவல்:-குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
வியாழன், 23 மார்ச், 2023

ஏழு பிரித்தானிய பிரஜைகள் உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சையால் :உயிரிழப்பு


துருக்கியில் உடல் எடையை குறைக்கும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ஏழு பிரித்தானிய பிரஜைகள் மரணமடைந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் சிலர் மிக மோசமான உடல்நலப் பிரச்சினைகளுக்குள்ளாகியிருக்கின்றனர்.
அறுவைச் சிகிச்சையின்போது 70 சதவீதமானவர்களுக்கு வயிற்றுப் பகுதி அகற்றப்படுகிறது. மிகக் கடுமையான உடல் பருமன் பிரச்சினையைக் கொண்டவர்களுக்குப் பிரித்தானியாவில் அந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இருப்பினும், அங்குள்ள மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள நீண்டகாலம் காத்திருக்க வேண்டும் என்பதால் சிலர் குறுக்கு வழியாக வெளிநாடுகளில் அதனை மேற்கொள்ள
 விரும்புகின்றனர்.
சமீப ஆண்டுகளில் மக்கள் மத்தியில் அந்த எண்ணத்தை விதைப்பதில் பல சமூக வலைத்தள விளம்பரங்களும் முக்கியப் பங்காற்றிவருகின்றன.
இதற்கிடையே, துருக்கியில் அறுவைச் சிகிச்சை செய்து மோசமான பக்கவிளைவுகளுடன் பிரித்தானியாவுக்கு திரும்புவோரின் எண்ணிக்கை கூடி வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதுவரை எத்தனை பிரித்தானிய மக்கள் அந்த அறுவைச் சிகிச்சைக்காகத் துருக்கி சென்றனர் என்ற அதிகாரப்பூர்வத்
 தகவல் இல்லை.
ஆனால் 2019 இல் இருந்து இதுவரை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு 7 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது மட்டும் தெரியும் என செய்தி 
வெளியாகியுள்ளது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 22 மார்ச், 2023

உடுப்பிட்டி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் மரணம்

யாழ் உடுப்பிட்டி  பகுதியில் வீடு ஒன்றில் கம்பி ஒன்றினை பயன்படுத்தி சிற்ப வேலைகளில்  ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை மின் தாக்கம் 
இடம்பெற்றது.
இதன்நகாரணமாக தூக்கி வீசப்பட்ட குறித்த இளைஞனை வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இளைஞன் ஒருவன் மரணம் அடைந்துள்ளான்.
மரணமடைந்தவர்  27 வயதுடைய நிலக்காடு காரைநகரை  சேர்ந்த குமாரசாமி சுதன் எனும்  ஒரு குழந்தையின் 
தந்தையாவார்.
 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை  பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
செவ்வாய், 21 மார்ச், 2023

எல்லாவல நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாவுக்கு சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த நிலை!

 

வெல்லவாய - எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றவர்களில் நான்கு இளைஞர்கள்  நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்றைய தினம் (21-03-2023) காலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
10 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று இங்கு நீராட சென்றதாகவும் அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


திங்கள், 20 மார்ச், 2023

. நெடுஞ்சாலையில் பங்களாதேஷில் கோர விபத்து! 17 பேர் பலி

பங்களாதேஷில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 
நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேலியை தகர்த்துக்கொண்டு பஸ் வீதியோர கால்வாய்க்குள் விழுந்ததில் இந்த உயிரிழப்புகள் 
ஏற்பட்டுள்ளன.
பஸ் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதோடு, 25 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 19 மார்ச், 2023

நாட்டில் குருநாகல் மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 
தெரிவித்துள்ளது.
நிலச்சரிவுகள், பாறைகள் சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 18 மார்ச், 2023

அராலி சந்தியில் பட்டா ரகவாகனம் பேருந்து மீது மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி சந்தியில்.18-03-2023. இன்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் 
உயிரிழந்துள்ளார். 
3ஆம் கட்டை ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெனட் மாறன் (வயது 25) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
ஊர்காவல்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம்  நோக்கி சென்ற பட்டா ரக வாகனம் நயினாதீவிலிருந்து வந்து கொண்டிருந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  
இச்சம்பவத்தில் பட்டா ரக வாகனத்தின் சாரதி ஸ்தலத்திலேயே பலியானார்.
இந்நிலையில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும்  ஊர்காவல்துறை பொலிஸாரால் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வெள்ளி, 17 மார்ச், 2023

நாட்டில் மரவெள்ளி கிழங்கின் விலை திடீர் அதிகரிப்பு

இலங்கையில்  சமீபகாலமாக நாடு முழுவதிலும் உள்ள கிராம புறங்களில் 60 – 70 ரூபாய் வரை விற்க்கப்பட்ட மரவெள்ளி  மரவள்ளிக்கிழங்கின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 200விலும் குறைவான விலையில் விற்கப்பட்ட நிலையில் தற்போது மரவெள்ளி கிழங்கின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டு 230 ரூபாவிற்கு விற்பனை 
செய்யப்படுகின்றது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
மரண அறிவித்தல் திரு வைரமுத்து விநாயகமூர்த்தி 16.03.2023

 

பிறப்பு-15 03 1938-இறப்பு-16-03-2023.
யாழ். கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும், நவற்கிரியை ,வாழ்விடமாகவும்  கனடா வை  வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து விநாயகமூர்த்தி அவர்கள் 16-03-2023 வியாழக்கிழமை 
அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,அன்னபூரணம் அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற சிவபாக்கியம், கமலாதேவி(இலங்கை), துரைராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு அண்ணாவும்,நிமல்ராஜ், விமலராணி, 
காலஞ்சென்ற ஆனந்தராஜா, 
வசந்தராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜெயக்குமாரி, ரவீந்திரன், மேகலா, காலஞ்சென்ற சிவசாந்தினி, ஜெயலட்சுமி, சரோஜினி , வனஜா, பவகோபிதன், டக்சிகா, காலஞ்சென்ற தூயலிங்கம், குணபாலலிங்கம், 
ராஜேந்திரன், கலாநிதி, யுகாநந்தி, யுகதர்ஷினி 
ஆகியோரின் அன்பு மாமனாரும்,துசியந்தன், துசியா, உஷாந்தன், நிஜந்தன் ஆகியோரின் பெரியப்பாவும்,காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம், 
கிருஷ்ணபிள்ளை, செல்வராணி 
மற்றும் தானையா,
 இராசம்மா, இராசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மகேஸ்வரி, சிவஞானமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,சஞ்ஜீவன், அபினா, ஆருணி, பிரவீனா, நிவேதன், நிஷானி, அதித்திரி, அதித்தன்
 ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 19 Mar 2023 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 20 Mar 2023 11:30 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Monday, 20 Mar 2023 12:30 PM - 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 20 Mar 2023 3:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
 நிமால் - மகன்Mobile : +14168881128 சாந்தி - மகள்Mobile : +16472896545 வசந்த் - மகன்Mobile : +16478853012

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 16 மார்ச், 2023

சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த இங்கிலாந்தில் ஹோட்டலில் திடீர் தீ விபத்து

இங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தெற்கு பகுதியான சசெக்ஸ்சில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹோட்டல் மற்றும் அதன் பக்கத்து கட்டடத்தில் தீ பற்றியதாகவும், சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள்
 மூலமாக தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை 
நடத்தி வருகின்றனர்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>புதன், 15 மார்ச், 2023

ஈரானின் தீ மிதிப்பு திருவிழாவில் பலியான பல உயிர்கள்: ஆயிரக்கணக்கானோர் காயம்

பாரசீக புத்தாண்டை முன்னிட்டு ஈரானின் பாரம்பரிய தீ மிதி திருவிழாவில் கலந்து கொண்டவர்களில் 11 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விழாவில் பங்கேற்றவர்களில் 3,500 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் உள்ளூர் பத்திரிகைகள் தகவல் தெரிவித்துள்ளன. ஃபார்சி மொழியில் சாஹர்ஷன்பே சூரி என்று அழைக்கப்படும் தீ மிதி திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஈரானிய நாட்காட்டி ஆண்டின் கடைசி செவ்வாய்க்கிழமை இரவு கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவானது மார்ச் மாதம் 20ம் திகதி முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 20ம் திகதியில் இருந்தே குறித்த விழா தொடர்பில் மொத்தம் 26 பேர்கள் மரணமடைந்துள்ளதாக 
கூறப்படுகிறது.
இந்த தீ மிதி திருவிழாவானது ஈரானின் இஸ்லாமியத்திற்கு முந்தைய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் ஷியா பிரிவு மதகுருக்களால் பொதுவாக புறக்கணிக்கப்பட்டே வருகிறது. இருப்பினும் இளையோர்களிடத்தில் இந்த விழாவிற்கு பெரும் ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
செவ்வாய், 14 மார்ச், 2023

வேண்டுமென்றே கனடாவில் பாதசாரிகள் மீது வாகனத்தைச் செலுத்தியதில் இரண்டு பேர்பலி

கனடாவில் பாதசாரிகள் மீது வேண்டுமென்றே வாகனத்தை செலுத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் 
தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் கியூபெக் மாகாணத்தின் Amqui பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்து சம்பவத்தில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். பிக்கப் ரக வாகனம் ஒன்று பாதசாரிகள் மீது மோதுண்டதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
வாகனத்தின் சாரதி வேண்டுமென்றே பாதசாரிகள் மீது வாகனத்தை மோதச்செய்து உள்ளதாக தென்படுகின்றது என போலீசார் 
தெரிவிக்கின்றனர்.
காயம் அடைந்தவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்துடன் தொடர்புடைய 38 வயதான வாகன சாரதி போலீசாரிடம் சரணடைந்துள்ளார்
வேண்டுமென்றே வாகனம் மோதச் செய்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் 
தெரிவிக்கின்றனர்.
எவ்வாறு எனினும் இந்த சம்பவம் பயங்கரவாத செயலாகவோ அல்லது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய விவகாரமாகவோ அமையப் பெறவில்லை என அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் 
தெரிவித்துள்ளார். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
திங்கள், 13 மார்ச், 2023

விருத்தாசலம் பகுதியில் மருமகள் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த மாமியார் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த முகேஷ் ராஜ் என்பவருக்கும் கிருத்திகா என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் 
குழந்தைகள் உள்ளன.
முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் படுத்திருந்த கிருத்திகா மீது இன்று அதிகாலை குடும்பப் பிரச்சனை காரணமாக மாமியார் ஆண்டாள் ஆசிட்டை வீசியுள்ளார். மேலும்,கொசு மருந்தான ஆல் அவுட்டை வாயில் ஊற்றி கொலை செய்ய 
முயற்சி செய்து உள்ளார்.
அருகில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு விருத்தாசலம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வலது கண் பார்வை இழந்து விட்டதால் அறுவை சிகிச்சைக்காக தற்போது புதுச்சேரி மருத்துவமனையில் கிருத்திகா அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து தொடர்பாக மாமியார் ஆண்டாளை விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து 
வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 12 மார்ச், 2023

ஜப்பானில்பாடசாலையில் வீசிய கடும் துர்நாற்றம்: 9 மாணவர்களுக்கு நேர்ந்த நிலை

ஜப்பானில் உள்ள பாடசாலை ஒன்றில் வீசிய கடுமையான துர்நாற்றத்தால் 9 மாணவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதாக தகவல்
 வெளியாகியுள்ளது.
ஜப்பான் -  ஹோன்சு தீவில் உள்ள ஹரேஷிமா நகரில் பாடசாலை ஒன்றுள்ளது. இங்கு .09-03-2023. அன்று வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.
அப்போது பாடசாலையில் திடீரென கடும் துர்நாற்றம் வீச தொடங்கியது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அசவுகரியமாக 
உணர்ந்தனர்.
துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என பாடசாலை ஊழியர்கள் சோதனை செய்து கொண்டிருந்தபோதே, மாணவர்கள் சிலருக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன.
அதைத்தொடர்ந்து இந்த துர்நாற்றத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 9 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது அவர்கள் நலமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>