siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 24 நவம்பர், 2017

மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி யாழில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்த வர்த்தரொருவர் எதிர்பாராத மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி
 உயிரிழந்துள்ளார்.
இந்த அனர்த்தம் யாழ். கரணவாய் பகுதியில்  இடம்பெற்றுள்ளது. வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் தனது, வர்த்தக நிலையத்திலிருந்து குளிர்சாதனப் பெட்டியை வழமை போன்று திறந்து 
பார்த்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரத் தாக்குதலுக்குள்ளான அவர் தூக்கி வீசப்பட்டார்.  அயலவர்கள் அவரை மீட்டுப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
யாழ். கரணவாய் நவிண்டில் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையாரான க.சிவகுமரன்(வயது- 42) என்பவரே அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்..

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் மோதி குழந்தை படுகாயம்

வவுனியா புகையிரத நிலைய வீதியில்  மோட்டார் சைக்கிள் மோதியதில், குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புகையிரத நிலைய வீதியூடாக குருமண்காடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், மதுரா மண்டபத்தை அண்மித்த வேளை, வீதியில் நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின்போது குறித்த பெண் ஒரு வயதுக் குழந்தையைத் தூக்கிச் சென்றிருந்தார். மோட்டார் சைக்கிள் மோதியதில் நிலைகுலைந்த பெண் குழந்தையுடன் விழுந்து படுகாயமடைந்தார்.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 21 வயது இளைஞரைக் கைது செய்த பொலிஸார் விசாரணை 
நடத்தி வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 21 நவம்பர், 2017

யாழ் சிறுப்பிட்டியில் 4 பிள்ளைகளின் தாய் காய்ச்சலால் உயிரிழப்பு


மூன்று நாள் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்றுயாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். நீர்வேலி சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான சுப்பிரமணியம் இரத்தினேஸ்வரி (வயது 55) என்ற குடும்பப்பெண்ணே உயிரிழந்தவராவார். 
இவர் கடந்த 16,17,18ஆம் திகதிகளில் காய்ச்சல் மற்றும் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 18ஆம் திகதி காலை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். 
வைத்திய சாலையில் இரத்த பரிசோதனை வசதி இல்லாததால் இரத்தம் பரிசோதி க்கப்படாமல், மாத்திரைகள் கொடுத்து வைத்தியர் அனுப்பியுள்ளார். காய்ச்சல் அதிகரித் தால் மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டு வரும்படி தெரிவித்துள்ளார். ஆனால் அன்று இரவு 11 மணியளவில் உடல் சோர்ந்து நடக்கமுடியாமல் இருந்த காரணத்தால் உடனடியாக யாழ்.போதனா வைத் தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று காலை 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் 
மேற்கொண்டிருந்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 18 நவம்பர், 2017

அமரர் உருத்திரமூர்த்தி பிரசாத் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 18.11-17

மண்ணில் : 9 ஒக்ரோபர் 1988 — விண்ணில் : 18 நவம்பர் 2016
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  உருத்திரமூர்த்தி பிரசாத் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வாழ்வில் ஒளியேற்றி 
பிரகாசிக்க வந்துத்த பிரகாஷே 
என்றென்றும் நீர் எம்முடனே 
வாழ்ந்திருப்பீர் என்றிருந்தோம் 
இடைநடுவில் எமைவிட்டு 
இறைவனடி சென்றீரோ

குடும்பத் தலைவனின்றி 
நாம் நிலைகுலைந்து நிற்கையிலே 
வாழ்க்கைப் படகிற்கு துடுப்பாக நின்றீரே

எல்லோருக்கும் வழிகாட்டி 
எமை வாழ வைத்தீரே 
பண்பிலே உயர்ந்தவனாய் 
பழகுவோர்க்கு இனியவனாய் 
பாசமுள்ள சகோதரனாய் 
அன்பிலே சிறந்தவனாய்

உற்றார் உறவுகளை உன் பக்கம் ஈர்த்தவனே 
எமை விட்டு சென்றின்று ஓராண்டு ஆனதுவே 
ஓராண்டென்ன ஓராயிரம் 
ஆண்டானாலும்
மறவாதையா உங்கள் நினைவு 
ஓராண்டென்ன உயிருள்ளவரை 
அஞ்சலிப்போம் உம் ஆத்மா சாந்திபெற
ஓம், சாந்தி, சாந்தி.
உன் பிரிவால் துயறுரும் அம்மா, சகோதரிகள், சகோதரன், உறவினர்கள்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
தகவல்
குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல், திருமதி இரத்தினராசா சின்னம்மா.17-11-17

பிறப்பு : 17 பெப்ரவரி 1942 — இறப்பு : 17 நவம்பர் 2017
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினராசா சின்னம்மா.(தங்கம்மா) அவர்கள் 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அப்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினராசா(சங்குவேலி) அவர்களின் அன்பு மனைவியும்,
கலாந்தி(சுவிஸ்), குகராஜா(கனடா), குகேந்திரன்(சின்னதம்பி- சுவிஸ்), குணராஜா(ராஜன்- சுவிஸ்), வசந்தநிதி(சுவிஸ்), நந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, சின்னராசா மற்றும் பூமணி, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகசிங்கம்(சுவிஸ்), புஸ்பமாலா(கனடா), உதயகுமாரி(சுவிஸ்), சதர்சினி(சுவிஸ்), தமோதரம்பிள்ளை(சுவிஸ்), ஜெகதீஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்பு
 மைத்துனியும்,
ஜான்சி சுரேஸ்(சுவிஸ்), றெனிஷா கோகுலன்(சுவிஸ்), லக்‌ஷனா(கனடா), அஸ்வினா(கனடா), கெளதமன்(சுவிஸ்) யதுலா(இலங்கை), அபிஷனா(சுவிஸ்), விபிஷன்(சுவிஸ்), அக்‌ஷியா(சுவிஸ்), லவனியா குபேரன்(சுவிஸ்), சங்கவி(சுவிஸ்), பிரவீன்(கனடா), சாஹானா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரதியா(சுவிஸ்), அமிர்தா(சுவிஸ்), ஆரூஷ்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப. 9:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் .
வீட்டு முகவரி: 
கைத்தொழில்பேட்டை, 
தோப்பு, 
அச்சுவேலி, 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குணம்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94764828726
நந்தினி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94769371228
யோகசிங்கம்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41795041600
சின்னதம்பி(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787692179
குகராசா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14162976177
தமோதரம்பிள்ளை(மருமகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326855458

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வெள்ளி, 17 நவம்பர், 2017

நினைவஞ்சலி 1ம்ஆண்டு அமரர் முத்துக்குமாரு ஆறுமுகசாமி.17.11.17

மலர்வு:12:ஜனவரி:1942: உதிர்வு : 28 நவம்பர்: 2016 
யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும், ஜெர்மனி Böblingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு ஆறுமுகசாமி (இப்பாறிய  யாழ் ஈழநாடு பத்திரிகை  உத்தியோகத்தர்) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.(திதி ).17.11.2017.இன்று  காலச்சுழற்சியில் ஓர் ஆண்டு  கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
எங்கள்  அப்பா  
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அப்பாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி
 நிற்கின்றோம்.
   அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ்  மறவன்புலவு கோவிலாக்கண்டி  தோப்பு.ஜெர்மன் வாழ்   நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .... 
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள் மருமக்கள் 
. தகவல் குடும்பத்தினர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 14 நவம்பர், 2017

சுண்டுக்குழி பகுதியில் நண்பனை பார்க்க சென்றவர் மயங்கி மரணம்

நண்பனை பார்க்க சென்ற குடு ம்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்த பரிதாப சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் சுண்டுக்குழி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் தெற்கை சேர்ந்த தாமோதரம்பிள்ளை தர்மகுலசிங் கம் (வயது 55) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்
குறித்த நபர் கோப்பாயில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று முன் தினம் மாலை 6 மணியளவில் சுண்டுக்குழியில் உள்ள தனது நண்பனை பார்ப்பதற்கு சென்றுள் ளார்.
அங்கு நண்பன் இல்லாத கார ணத்தால் அவருடைய 
வீட்டில் மாமரத்துக்கு கீழ் நின்றுள்ளார். நண்பன் 7.30 மணியளவில் வீட்டுக்கு வந்த போது அவர் நிலத்தில் விழுந்து 
கிடந்துள்ளார்.
உடனடியாக யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த வைத்தியர் அவர் உயிரிழந்து ள்ளதாக தெரிவித்துள்ளார். பிரேத பரிசோத னையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்து ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் 
மேற்கொண்டிருந்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

திங்கள், 13 நவம்பர், 2017

விற்பணை நிலையத்தினை உடைத்து யாழ் புத்துாரில் திருட்டு



 புத்தூர் பகுதியில் உள்ள பல்பொருள் விற்பணை நிலையத்தினை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் அத்தியாவசியப்பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
இச் சம்பவம்  வெள்ளிகிழமை இரவு 11:00 மணிக்கும் அதிகாலை 5:00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது 50ஆயிரத்திற்கு உட்பட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தூரில் கடை உடைத்து திருட்டு சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் மாலை 5:00 மணியளவில்இளைஞர் ஒருவரை அப்பகுதி இளைஞர்கள் பிடித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஞாயிறு, 12 நவம்பர், 2017

பாடசாலை மாணவன் கோர விபத்த்தில் பலி - 7 பேர் காயம்

ராஜகிரிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் அவர்களில் நால்வரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.
கெப் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்திற்கான காரணம் தொடர்பில் ராஜகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 9 நவம்பர், 2017

ஆறு பொருட்களின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு நடைமுறையில்

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆறு பொருட்களுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக வரி குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் , கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது
 குறிப்பிட்டார்.
விதை உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பருப்பு, கருவாடு, தேங்காய் எண்ணெய் மற்றும் மரக்கறி எண்ணெய் ஆகிய பொருட்களின் வரிகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, விதை உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஒரு கிலோவிற்கான விசேட வர்த்தக பொருள் வரி 39 ரூபாவாலும், பருப்பு கிலோவுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்த பொருள் வரி 12 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன.தேங்காய் எண்ணெய் மற்றும் மரக்கறி எண்ணெய் ஒரு லீற்றரின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கருவாடுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக பொருள் வரி 50 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஞாயிறு, 5 நவம்பர், 2017

யாழ் நல்லூர் பகுதியில் பெய்த மீன் மழை! ஆச்சரியத்தில் மக்கள்

யாழ்   நல்லூர் பகுதியில்  மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயப் பகுதியில் இவ்வாறு மீன் மழை பெய்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் கடும் மழை பெய்துவரும் நிலையில் அந்தப் பகுதியில் மழையுடன் சில வகை மீன்களும் வந்து விழுந்துள்ளன
பெருமளவு மக்கள் அவற்றைப் பார்வையிட்டுச் சென்றனர்
. இவ்வாறான மீன் மழை தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக நடக்கின்றது என்று அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 4 நவம்பர், 2017

மரண அறிவித்தல்,Dr. கங்காதரன் செல்லமுத்து.02.11.17

பிறப்பு : 13 யூலை 1930 — இறப்பு : 2 நவம்பர் 2017
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட கங்காதரன் செல்லமுத்து.(பல் வைத்தியர்) அவர்கள் 02-11-2017 வியாழக்கிழமை அன்று 
இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லமுத்து தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலேஸ்வரி(ரதி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
Dr. காயத்திரி, ஸ்ரீ கௌரங்கா, கௌத்தமி ஆகியோரின் 
பாசமிகு தந்தையும்,
கிருஷ்ணசாமி(லண்டன்), காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், தெய்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயந்தினி, தயாபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயனி, ஸ்ரீ ஹரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்..

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/11/2017, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/11/2017, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/11/2017, 11:30 மு.ப
முகவரி: Riverside Cemetery & Cremation Centre, 1567 Royal York Rd, Etobicoke[Lawrence], ON M9P 3C4, Canada. 
தொடர்புகளுக்கு
பாலேஸ்வரி(ரதி) — கனடா
தொலைபேசி: +14164398495
Dr. காயத்திரி(மகள்) — கனடா
தொலைபேசி: +14169493146
கௌத்தமி(மகள்) — கனடா
தொலைபேசி: +14388252855
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 2 நவம்பர், 2017

யாழ் கோப்பாய் பாலத்திற்கு அருகே ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் பாலத் தடியில் நேற்று காலை நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருகிலே அவர் பயணித்ததாக நம்பப்படும் உந்துருளி ஒன் றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் சங்கத்தானை சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய கனகரட்ணம் கோணேஸ்வரன் என்பவரே இவ்வாறு 
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
கைதடி - மானிப்பாய் வீதியில், கோப்பாய் பாலத்தடியில் உள்ள பரவைக் கடல் ஓரமாக நேற்று காலை நபர் ஒருவரது சடலம் காணப்பட்டுள்ளது. சடலத்தின் அருகில் குறித்த நபர் பயணித்ததாக நம்பப்படும் உந்துருளி ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணம் விபத்துக் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும் அவர் பயணித்ததாக நம்பப்படும் உந்துரு ளியில் விபத்து ஏற்பட்டிருப்பதற்கான தடயங் கள் எதுவும் காணப்படவில்லை என்றும், அவரது தலைக்கவசம் உந்துருளியில் 
கொழுவிய நிலையிலும் காணப்பட்டுள்ளதுசம்பவம் தொடர்பான தடயவியல் பரிசோ தனைகளை யாழ்ப்பாணம் குற்றப் பிரிவுப் பொலிஸார் மேற்கொண்டுவரும் நிலையில் இதுகுறித்த விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை குறித்த பகுதி ஆள் அரவ மற்ற பிரதேசமாகையால் குறித்த மரணம் விபத்துக் காரணமாக ஏற்பட்டிருக்க முடியாது என்று பொதுமக்களால் நம்பப்படுவதாக தெரி விக்கப்படுகின்றது. 
இங்கு அழுத்தவும் நவற்கிரி .கொம்1 செய்தி >>

தாய் தன் உயிரைக் கொடுத்து மகளைக் காப்பாற்றினர்

மின்சாரம் தாக்கிய மகளை காப்பாற்ற முற்பட்ட தாய் ஒருவர் பரிதாபமாகப் பலியானார். யாழ்.வடமராட்சி தும்பளைப் பகுதியில்
 இடம்பெற்றது.
இச் சம்பவத்தில் தும்பளை பருத்தித்துறையைச் சேர்ந்த குணராசா அம்பிகை (வயது- 50) என்ற குடும்பப்பெண்ணே பரிதாபகர மாக உயிரிழந்தவராவார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
தமது வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிக்கு கேபிள் வழங்குநர் மூலமே இணை ப்பினைப் பெற்றுவந்துள்ளனர். இவ் இணைப் பினை மழை, இடி, மின்னல் காரணமாக இரவு துண்டித்து விட்டு நேற்று அதிகாலையில் இணைப்பு கொடுக்கப்பட்டது.
உயிரிழந்த குடும்பப் பெண்ணின் மகள் இணைப்பினை வழங்க முற்பட்ட போது தொலைக்காட்சி கேபிள் இணைப்பின் மூலம் பாய்ந்ததாக தெரிவிக்கப்படும் மின்சாரம் மகளைத் தாக்கியதைக் கண்ட தாய் மகளைக் காப்பாற்றுவதற்காக ஓடிச்சென்று அவரைப் பிடித்துள்ளார்.
இதற்கிடையில் மின் தாக்குதலில் இரு ந்து மகள் தூக்கியெறியப்பட தாயார் மின்சா ரத் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது அவர் மரணமடைந்துள்ளார். கைப் பகுதியில் மின்சாரத் தாக்கம் ஏற்பட்டிருப்பதாக வைத்தியசாலை தரப்பினர்
 தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பிலான மரண விசா ரணையினை பருத்தித்துறை பதில் நீதவான் பா.சுப்பிரமணியம் மேற்கொண்டார். மேல திக விசாரணைகளைப் பருத்தித்துறைப் பொலிஸார் 
மேற்கொண்டுள்ளனர்
இங்கு அழுத்தவும் நவற்கிரி .கொம்1 செய்தி >>


புதன், 1 நவம்பர், 2017

அமரர் நாகலிங்கம் ஆனந்தலிங்கம் 1ம் ஆண்டு நினைவஞ்சலி .01.11.17

 ஆண்டவன் அடியில் : 01,10,2017 
யாழ்  அச்சுவேலி தோப்பை   வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு நாகலிங்கம் ஆனந்தலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு. 01.11.2017 இன்று நினைவஞ்சலி. காலச்சுழற்சியில் ஓர் 
 ஓர் ஆண்டுகள்   கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை நித்தம் நாம்
  இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு
 உருவம் நீகள் தான்  
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அப்பாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
 அன்னாரின்
 ஆத்மாசாந்தி அடைய நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் புத்தூர் நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .... ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள் 
. தகவல் குடும்பத்தினர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



அமரர் மாதர் தம்பிராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி .01.11.17

யாழ்  அச்சுவேலி  விக்கினேஸ்வர  வீதியை சேர்ந்த    அமரர் மாதர் தம்பிராசா அவர்களின்   முதலாம்  ஆண்டு நினைவஞ்சலி (திதி .01.11.2017) இன்று 
ஆலம் விருட்சம் போல் வேரூன்றி விழுது விட்டு
 கிளை பரப்பி நிழல் தந்த எங்கள் அன்பு அப்பாவே விதியென்னும் இரண்டெழுத்து உங்களை வேரோடு சாய்த்து ஆண்டொன்று ஆனதே அப்பா ஆனாலும் ஆறுமோ எங்கள் துயரம் மாறுமோ உங்கள் நினைவுகள்  பாசத்தின் 
முழு உருவம் எங்கள்  அப்பா  
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அப்பாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
  முதலாம் ஆண்டு  நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>