siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 30 ஜனவரி, 2019

யாழ் பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் அவரது வீட்டு முற்றத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
 சாவகச்சேரி பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
 இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.00 மணியளவில் நுணாவில் மேற்கு சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.
 சிறீதரன் கோகிலமதி (வயது 22) என்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட 2 ஆம் வருட மாணவியே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
 பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் குறித்த மாணவியின் காதலன் ஒரு மாதத்திற்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
 இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மனவிரக்திக்கு உள்ளாகியிருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </




கொடிகாமத்தில் காணி சண்டையில்ö முதியவர் அடித்து கொலை

யாழ்ப்பாணணத்தில் காணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பகுதியில் இச்சம்பவம்$
 இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் கொடிகாமம் வடக்கு எழுதுமட்டுவாளை சேர்ந்த 78 வயதான செல்லன் சின்னத்துரை என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும்
 தெரியவருவதாவது,
குறித்த முதியவருக்கும் , மட்டுவில் பகுதியை சேர்ந்த வேறு இருவருக்கும் இடையில் நீண்டகாலமாக காணி பிணக்கு நடை
பெற்று வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 19ஆம் திகதி இரு தரப்பினருக்கும் இடையில் காணிப்பிணக்கு ஏற்பட்டதில் வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியுள்ளது.
இதன்போது இருவரும் இணைந்து முதியவரை பொல்லுகளால் தாக்கியுள்ளனர்.
அத்தாக்குதலில் படுகாயமடைந்த முதியவரை அயலவர்கள் மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முதியவர் 
மாற்றப்பட்டார்.
இந்நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென
 உயிரிழந்துள்ளார்.
முதியவர் உயிரிழந்தமை தொடர்பில் கொடிகாமம் பொலிஸாரிடம் முதியவரின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </




போலியான தண்ணீர்ப் போத்தல் விற்பனை யாழ் குடாநாட்டில்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் போலியான தண்ணீர்ப் போத்தல் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு விற்பனை செய்து வந்த 6 ஆயிரத்து 800 போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவற்றை உடனடியாக அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில் குறித்த
 போத்தல்கள சிக்கின.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இயங்கிய வர்த்தக நிலையம் ஒன்றில், நிறுவனத்தின் பதிவு இலக்கம் இன்றித் தயார் செய்யப்பட்ட, போலி இலக்கம் ஒட்டப்பட்டிருந்த குடி தண்ணீர்ப் போத்தல்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன.
இவ்வாறு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 6 ஆயிரத்து 800 குடி தண்ணீர்ப் போத்தல்களை சுகாதார உத்தியோகத்தர்கள்
 கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போத்தல்கள் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
போத்தலில் மத்திய சுகாதார அமைச்சின் அனுமதிப் பதிவு இலக்கம் என தனியான ஓர் சிறிய ஸ்ரிக்கர் அச்சிடப்பட்டு ஓட்டியுள்ளதாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர் மன்றின் கவனத்துக்குக் 
கொண்டு வந்திருந்தார்.
வழக்கை ஆராய்ந்த நீதிபதி, குறித்த வழக்கில் மாவட்ட விநியோகஸ்தரோடு பிரதான சந்தேக நபருக்கு அழைப்பானை அனுப்புமாறும், அதுவரை சான்றுப் பொருட்கனை மன்றில் தடுத்து வைத்ததோடு, மாவட்ட விநியோகஸ்தரான 2 ஆம் எதிரியை 40 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில்
 செல்ல அனுமதித்தார்.
இவ்வாறு இடம்பெற்ற வழக்கில் பிரதான சந்தேக நபர்களும் மன்றில் தோன்றிய நிலையில் யாழ்ப்பாணம் மேலதி நீதிமன்றில் குறித்த வழக்கு இடம்பெற்றது.
இதன்போது வழக்கை ஆராய்ந்த நீதிவான், குடி தண்ணீர்ப் போத்தல்கள் அனைத்தையும் அழிக்குமாறும், பிரதான சந்தேக நபர்கள் இருவரும் தலா 10 ஆயிரம் ரூபா குற்றப்பணம் செலுத்த வேண்டும்.
 எனவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இவ்வாறான போத்தல் நீர் பருகும் யாழ்ப்பாண மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </


ஞாயிறு, 27 ஜனவரி, 2019

பூப்புனித நீராட்டு விழாவிற்கு யாழிலிருந்து சென்ற குடும்பம் விபத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து பூப்புனித நீராட்டு விழாவிற்கு காரில் சென்ற குடும்பதினர் 6 பேர் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் பருத்தித்துறை செட்டியார் தெரு வீதியிலிருந்து மட்டக்களப்பு செங்கலடி எல்லை வீதியிலுள்ள தமது உறவினர் மகள் பூப்புனித நீராட்டு விழாவிற்கு குறித்த குடும்பத்தினர் காரில் புறப்பட்டுள்ளனர்.
அதன்போது வாகனத்தை செலுத்திய சாரதியின் தூக்கத்தால் சடுதியான வாகன தடுப்பை செலுத்தியதால் சனநடமாட்டம் குறைந்த இவ்விடத்தில் வாகனம் நிலைகுழைந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளை அவ்வீதியில் வந்துகொண்டிருந்த இன்னுமொரு பேருந்தில் விபத்தில் காயமடைந்த குடும்பத்தினரை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பு செங்கடி வைத்தியசாலையில் 
அனுமதித்தனர்.
மேலும் குறித்த விபத்தில் சிறுமி சுவர்த்தினி (7) என்பவர்கள் காயமுற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவாதகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் ஆசிரியர் பாஸ்கர் குடும்பத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துகுள்ளாக்கியுள்ளதாக அறிய முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


இமையாளன் பகுதியைச் சேர்ந்த 4 மாத குழந்தை உயிரிழந்துள்ளது

யாழ்ப்பாணத்தில் நான்கு மாத குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நான்கு மாத குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை செய்த முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முறைப்பாட்டின் பிரகாரம் சடலத்தை பிரேதத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு பருத்தித்துறை மரணவிசாரணையினை அதிகாரி சதாசிவம் சிவராஜா. உத்தரவிட்டார்
வல்வெட்டித்துறை இமையாளன் பகுதியைச் சேர்ந்த அ.அஸ்மிதா என்ற நான்கு மாத குழந்தை சனிக்கிழமை (26) இரவு உயிரிழந்தது.
குழந்தையின் தாயும் தந்தையும் சில தினங்களுக்கு
 முன்னர் பிரிந்து வாழும் நிலையில் குழந்தை இறந்ததால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை வல்வெட்டித்துறை பொலிசில் முறையிட்டுள்ளதையடுத்தெ குறித்த உத்தரவு 
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நுணாவிலில் புகையை சுவாசித்த முதியவர் மருத்துவமனையில்

குளியலறையில் காணப்பட்ட கறைகளை நீக்க, கல்சியம் நீக்கியை ஊற்றிய போது எழுந்த புகையை சுவாசித்த முதியவர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் சாவகச்சேரி நுணாவில்
 கிழக்கில் இடம்பெற்றது.
அப்பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையைத் துப்பரவு செய்ய கூலிக்கு ஒருவரை ஏற்பாடு செய்திருந்தனர்.அங்கு வந்த அவர் கல்சியம் நீக்கியை கறைபடிந்துள்ள பகுதியில் ஊற்றியுள்ளார்.
அதன் போது எழுந்த புகையைச் சுவாசித்த
 முதியவர் மூச்சுவிடக் சிரமப்பட்டார். அவர் அவசர நோயாளார் காவு வண்டி கிடைக்காத நிலையில் சாவகச்சேரி
 மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை மேற்கொண்ட பின்னர் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு
 மாற்றப்பட்டுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 25 ஜனவரி, 2019

வெகு விரைவில் பால்மாவிற்கும் புதிய விலைச்சூத்திரம்

பால் மாவிற்கும் புதிதாக விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்கு இவ்வாறு விலைச் சூத்திரமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பால் மா விலை தொடர்பில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தின் போது விலைச் சூத்திரமொன்றை உருவாக்குவது குறித்து இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டதாக நுகர்வோர் 
விவகார அதிகாரசபை 
பால் மா இறக்குமதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிதி அமைச்சின் பிரதிநிதிகள், வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பினை 
நடத்தியுள்ளனர்.
இந்த கூட்டத்தின் போது, எரிபொருளை போன்றே பால் மாவிற்கும் விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் நிலவி வரும் பால் மா விலையின் அடிப்படையில் பால் மாவின் உள்நாட்டு விலை மாற்றம் அடையும் வகையில் இந்த விலைச் சூத்திரம் அறிமுகம் செய்யப்படவுள்ளது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 23 ஜனவரி, 2019

மூன்று வயதுப் பாலகன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராமமொன்றில் மின்சாரம் தாக்கி மூன்று வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளது.நேற்றுக் காலை மின்சார தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் மல்லாவி வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சைக்காக
 அனுமதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட தகவலுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த குழந்தை 3 வயதுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 19 ஜனவரி, 2019

மரண அறிவித்தல், திருமதி.சர்வாணி சுரேஸ்குமார்.16-01-19

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Regensdorf வை வசிப்பிடமாகவும் கொண்ட சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16-01-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், தேவராசா இலட்சுமி தம்பதிகளின் இரண்டாவது புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுரேஸ்குமார் அவர்களின் பாசமிகு மனைவியும், நிருஸான், நிலக்‌ஷனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனுஜா(கனடா), மிருநாளினி(கனடா), கணேஸ்வரன்(இலங்கை), இந்துஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சரஸ்வதி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, கந்தசாமி, பாலசிங்கம்(ஜெர்மனி), யோகேஸ்வரி சிறிதரன்(ஜெர்மனி), ஸ்ரீராமகிருஷ்ணா, சிவநாதன், வேணு சகிலா ஆகியோரின் அன்பு மைத்துனியும், குமாரவேலு, நடராஜா, வசந்தாதேவி, இன்பராணி, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், இந்திராதேவி ஆகியோரின் உடன்பிறாவச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
அவரின் ஆத்மா அமைதிபெற பிரார்த்திப்போம்
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு:

Monday, 21 Jan 2019 07:30 AM – 04:30 PM

Tuesday, 22 Jan 2019 07:30 AM – 04:30 PM

Wednesday, 23 Jan 2019 07:30 AM – 04:30 PM

Thursday, 24 Jan 2019 07:30 AM – 04:30 PM

Friday, 25 Jan 2019 07:30 AM – 04:30 PM

Saturday, 26 Jan 2019 08:30 AM – 11:30 AM

Sunday, 27 Jan 2019 08:30 AM – 11:30 AM

Käferholzstrasse
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு:

சு. சுரேஸ்குமார் – கணவர் Mobile : +41788703772

சு. பாலசிங்கம் – மைத்துனர் Mobile : +49228660890

சு. சிறிதரன் – மைத்துனர் Mobile : +4922871012276

ஆ. பிறேம்குமார் Mobile : +41795906980

சு. கந்தசாமி – மைத்துனர் Mobile : +94773223558

கு. சரஸ்வதி – மைத்துனி Phone : +94212230577

தே. கணேஸ்வரன் – சகோதரர் Phone : +94212231183

ஸ்ரீ. தனுஜா – சகோதரி Mobile : +15147314698

சி. மிருநாளினி – சகோதரி Mobile : +14167045265

வே. சிந்துஜா – சகோதரி Mobile : +447853968439
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 17 ஜனவரி, 2019

நாட்டில் வெற்றுக் கைகளினால் உணவு விற்பனை செய்ய தடை

இலங்கையில் வெற்றுக் கைகளினால் உணவினை தொட்டு மற்றவர்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சு 
தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறை குறித்து எதிர்வரும் 3ஆம் திகதிக்கு பின்னர் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்ததுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பரவும் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காய்ச்சல் யாழில்

யாழ்ப்பாணத்தில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயின் தாக்கம் காரணமாக 45 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கன்றன.
உரும்பிராயை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் 30 ஆம் திகதி இரணைமடுவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற திரும்பிய பெண்ணுக்கு அன்றைய தினமே காய்ச்சல் 
ஏற்பட்டுள்ளது.
31ம் திகதி அருகிலுள்ள தனியார் வைத்தியசாலையில் 
தொடர் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 7ம் சிகிச்சை பெறச் சென்ற வேளையில் மயங்கி வீழந்துள்ளனர். உடனடியாக அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை பரிசோதித்த வைத்தியர்கள், அவர் உண்ணிக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார் என
 கண்டுபிடித்துள்ளனர்.
எனினும் உரிய சிகிச்சை வழங்கப்பட்ட போதும், கடந்த 13 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள்
 தெரிவித்துள்ளனர்.
இந்தக் காய்ச்சல் குறித்து யாழ். குடாநாட்டு மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர்கள் 
எச்சரித்துள்ளர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 16 ஜனவரி, 2019

கோர விபத்து யாழில் சிறுவன் பல!! நால்வர் படுகாயம்

 
மூன்று முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தநான்கு பேர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் படுகாயமடைந்தனர். அதில் 12 வயது சிறுவன்
 உயிரிழந்தான். ஏனைய மூவரும் மருத்துவமனைகளில்
 சேர்க்கப்பட்டுள்ளனர்
.யாழ்ப்பாணம் இணுவில் 7 ஆம் கட்டைப் பகுதியில் நேற்றிரவு  இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.முச்சக்கரவண்டி ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பயணித்துள்ளனர்.முச்சகரவண்டி 
இணுவில் 7 ஆம் கட்டைப் பகுதிக்கு வந்தடைந்த போது, அந்த நாற்சந்திக்கு மூன்று பக்கங்களாலும் இருந்து வந்த முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதின.
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நான்கு பேர் படுகாயமடைந்தனர். எதிரே வந்த முச்சக்கரவண்டியில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் படுகாயமடைந்தார்.
பொலிஸ் உத்தியோகத்தர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏனையவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




திங்கள், 14 ஜனவரி, 2019

யாழில் இளைஞன் மர்ம நபர்களினால் அடித்துக் கொலை

கோடாரிப் பிடியால் தாக்கப்பட்ட இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் வடமராட்சி கற்கோவளம் தண்ணீர் பந்தலடிப்பகுதியில்12.01.19.  இரவு 8.30. மணியளவில் நடந்துள்ளது.கற்கோவளத்தைச் சேர்ந்த 
22 வயதுடைய வாசுதேவன் அமல்கரன் என்ற இளைஞனே கொல்லப்பட்டுள்ளார்.
இளைஞன் மூன்று பேர் கொண்ட கும்பலால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.சிற்றுண்டி விற்பனை
 செய்யும் முச்சக்கரவண்டி வாகனத்தை அவருடைய நண்பர் மறித்து றோல்ஸ் கேட்டதாகவும், இதன் போது ஏற்பட்ட தகராறில் உறவினர்களால் இளைஞன் கோடரி பிடியால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு 11 மணியளவில் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் இளைஞன் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சடலம் பருத்தித்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணையை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இரு தமிழர்கள் கொழும்பு மாநகரில் பட்டப்பகலில் சுட்டுக் கொலை.

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரு தமிழ் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.கொட்டாஞ்சேனையை 
சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடைய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.வத்தளையில் இருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த மூவர் மீது
 மற்றொரு காரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதால், இருவர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் 33 வயதுடைய நபர் ஸ்டீவன் ராஜேந்திரன் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.மற்றைய நபர் மதி ​என்ற பெயரால் அழைப்படுபவர் என உயிரிழந்த மற்றைய இளைஞனின் உறவினர் பெண் வழங்கிய தகவல் மூலம் தெரியவந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இளைஞர்களுக்கு இடையிலான வர்த்தக முரண்பாடு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 13 ஜனவரி, 2019

புன்னைக்குடா கடலில் நீராடச்சென்ற மாணவன் சடலமாக கண்டெடுப்பு

மட்டக்களப்பு, புன்னைக்குடா கடலில் நீராடுபோது காணாமல்போன  மாணவனொருவனின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் செங்கலடி- குமாரவேரலியார் கிராமத்தினைச் சேர்ந்த குபேந்திரன் ஹரிஸ்வரதன் என்ற 14 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஐந்து மாணவர்கள் புன்னைக்குடா கடலில் நீராடுவதற்குச் கடந்த வியாழக்கிழமை மாலை சென்றுள்ளனர்.
இதன்போது அவர்கள் நீராடி கொண்டிருக்கும்போது, ஒருவர் அலையில் அடித்துச் செல்லபட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஏனைய நான்கு மாணவர்களும் நீரில் அடித்துச் சென்றவரை மீட்க முடியாமல் வீடு 
திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் மகனை காணவில்லையென பெற்றோர் தொடர்ச்சியாக தேடுதலில் ஈடுபட்டிருந்தபோதே, கடலுக்கு குளிக்கச் சென்றமை தொடர்பாக ஏனைய மாணவர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர் குறித்த தகவலின் அடிப்படையில் புன்னக்குடா கடலில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது மாணவனின் சடலம் கரையொதுங்கிய நிலையில் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




வெள்ளி, 11 ஜனவரி, 2019

பணமும் நகையும் யாழில் பேருந்தில் பறிகொடுத்த பெண்

தனது கைப்பையில் வைத்திருந்த 25 பவுண் தங்க நகைகளையும், 50 ஆயிரம் ரூபா பணத்தையும் பேருந்தில் பறிகொடுத்த பெண், ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
 குறித்த பெண் அழுகையுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சுன்னாகத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்தில் இன்று பகல் பயணித்த பெண், யாழ்.நகருக்கு பேருந்து வந்தடைந்த போதே தனது கைப்பையை அவதானித்துள்ளார்.
அளவெட்டியைச் சேர்ந்த பெண் சுன்னாகத்தில் பணத்தைப் பெற்று தனது கைப் பையில் வைத்துள்ளார்.
பின்னர், தனது நகைகளையும் பாதுகாப்பு கருதி கைப்பையில் வைத்துக் கொண்டும் பேருந்தில் பயணித்துள்ளார்.
 யாழ் நகரைப் பேருந்து வந்தடைந்ததும், பேருந்தில் இருந்து இறங்கும் போதே கைப்பை திறந்த நிலையில் இருப்பதனை அவர் அவதானித்துள்ளார். கைப்பையில் இருந்த பணமும், நகையும் திருடப்பட்டுள்ளது.
 பெரும் பதற்றமடைந்த பெண் பெரும் அழு குரலுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார். -

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


யாழில் போதை மாத்திரை உட் கொண்ட மாணவர்கள் மருத்துவனையில்


வலி வடக்கு மீள்குடியேற்றப்பகுதிக்குட்பட்ட பாடசாலை ஒன்றில்  தரம் ஒன்பதில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவர்கள் மூவர் போதை மாத்திரைகள் உட்கொண்டு போதை ஏறிய  நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் பலருக்கும் பெரும் அதிர்ச்சி
யை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டுருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்
நல்லிணக்க புரத்தில் உள்ள இரு  மாணவர்களும் தெல்லிப்பழையை சேர்ந்த ஒரு மாணவனும் இணைந்து நேற்று காலை பாடசாலைக்குள் சென்றுள்ளனர். அதில் நல்லிணக்கபுரத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தனது சகோதரனிடம் (வயது 16) இருந்து போதை மாத்திரைகளை (20 மாத்திரைகள்)  பெற்று வந்துள்ளார்.
அதில் ஒருவர் 5 மாத்திரையும் மற்ற மாணவன் 4 மாத்திரைகளையும் மூன்றாவது மாணவன் 3 மாத்திரைகளையும் உட்கொண்டுள்ளனர். பின்னர் வகுப்பறையினுள் மயங்கிய நிலையில்
 கிடந்துள்ளனர்.
குறித்த விடயத்தை அறிந்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து அவர்களை வெளியே அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர் அப்போது அவர்கள் தாறுமாறாக தம்மை அறியாமல் பேசத்தொடங்கியுள்ளனர். நிலமையை அறிந்த அதிபர் குறித்த மாணவர்களை தெல்லிப்பளை வைத்தியசாலையில்
 அனுமதித்துள்ளார்.
பின்னர் வைத்தியசாலையில் இருந்து சுகாதார வைத்திய அதிகாரிக்கு குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டு, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் வைத்தியசாலைக்கு சென்று மாணவர்களிடம் இது குறித்து விசாரணைகளை
 மேற்கொண்டனர்.
குறித்த மாத்திரைகள்  அவர்களது சுற்றயல்களில் உள்ள மருந்தகங்களில் சாதாரணமாக கிடைப்பதாகவும், தற்போது பயன்படுத்திய மாத்திரை தனது சகோதரனிடம் இருந்து பெற்றுக்கொண்டதாகவும் ஒரு மாணவர் விசாரணையில் தெரிவித்திருந்தார்.
அவர்கள் எந்த மருந்தகங்களில் குறித்த மாத்திரைகளை கொள்வனவு செய்பவர்கள் என்ற தகவலை பெற்றுக்கொண்டு மாவட்ட புரத்துக்கு அண்மையில் உள்ள  குறித்த இரு மருந்தகங்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர் சென்று பரிசோதனை மேற்கொண்டதுடன் அங்கிருந்த மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் குறித்த மருந்தகங்களுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துச் சென்றுள்ளனர். குறித்த விடயம் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை 
ஏற்படுத்தியிருந்தது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 9 ஜனவரி, 2019

கிளிநொச்சில் கோர விபத்தில் பலியான யாழ் இளைஞர்கள்

கிளிநொச்சில் 08.01.2012. இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.இயக்கச்சியில் இராணுவ வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டிருந்தது. இதன் போது முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலியாகி
 இருந்தனர்.
பளையைச் சேர்ந்த 36 வயதான பி.ஜெயக்குமார், பளை, மாசாரைச் சேர்ந்த 32 வயதான கே.குகதாஸ், சுழிபுரத்தைச் சேர்ந்த எஸ்.ரதீஸ்வரன் ஆகியோரே உயிரிழந்தனர்.இவர்களில் குகதாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது
இந்த கோர விபத்து நேற்று மாலை நடந்துள்ளதுடன், இராணுவ வாகனத்தை செலுத்தி வந்தவர் பளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பளையில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியை, கட்டைக்காடு இராணுவ முகாமில் இருந்து இயக்கச்சி 552 படைப்பிரிவு முகாமுக்கு எரிபொருள்
 பெற்றுக்கொள்ள வந்த இராணுவ ட்ரக் வண்டி முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியது என்று தெரியவருகின்றது.விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டி முற்றாக நசுங்கிச் சேதமடைந்தது. முச்சக்கரவண்டியைச் செலுத்தியவர் மிக மோசமான காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். ஏனையவர்களும் சம்பவ இடத்திலேயே
 உயிரிழந்தனர்.
எனினும், இந்த கோர விபத்து தொடர்பான தடங்களை அழிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திங்கள், 7 ஜனவரி, 2019

தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் யாழில் பலி

யாழில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நல்லூர் பருத்தித்துறை வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை சசிகரன் (வயது 46) என்பவரே 
உயிரிழந்தவராவர்.
குறித்த நபர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஊரெழு பகுதியில் உள்ள தோட்டமொன்றில் புல்லு வெட்டிக்கொண்டு இருந்த சமயம் மதிய நேரம் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். இருந்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள்
 தெரிவித்தனர்.
அதனால் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


மரண அறிவித்தல் திரு தம்பிஜயா குணரத்தினம்,05, 01 19

மலர்வு,  30 03 1941- உதிர்வு, -05, 01 2019
யாழ். நவக்கிரி நிலாவரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  தம்பிஜயா குணரத்தினம். (ஓய்வுபெற்ற பொருத்தினர்- காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை) அவர்கள் 05-01-2019 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான
 தம்பிஜயா செல்லம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், புலோலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், சீவரத்திணம் அவர்களின் அன்புக் 
கணவரும், சீவறஞ்ஜினி, பாஸ்கரன், தயானந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும், குலசேகரம், காலஞ்சென்றவர்களான அழகம்மா, தருமசேகரம், சந்திரசேகரம், நாகரத்திணம் ஆகியோரின்
 பாசமிகு சகோதரரும், குகநேசன், நிவேதினி, உஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 தனராஜ்- தீபவானி, கஜன்- சுஜந்தினி, ரஜீவன், சுரீயா, ஸ்ருதிகா, விரூஜன், கவினாவ், சிவாணி, ஷிறீவன் ஆகியோரின்
 பாசமிகு பேரனும், சுவேன், ஜிகானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 ரஜீவன் Mobile : +94762399032
 Mobile : +94773937015
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 6 ஜனவரி, 2019

பாரவூர்தி தடம் புரண்டு கோர விபத்து….. !! இருவர் ஸ்தலத்தில் பலி

கொழும்பு, ஜா-எல, வெலிகம்பிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்று (சனிக்கிழமை)
 இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்கலன் ஏற்றிவந்த பாரவூர்தியொன்று 
வீதியை விட்டு தடம் புரண்டமையினாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக ஜா-எல பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 5 ஜனவரி, 2019

சவுதி அரேபியாவில் வவுனியா பெண் தற்கொலை

சவுதி அரேபியாவிற்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற, வவுனியாவை சேர்ந்த பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நான்கு மாதங்களின் முன்னர் அங்கு அவர் தற்கொலை செய்து கொண்ட போதிலும், கடந்த சனிக்கிழமையே அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு இறுதிக்கிரியைகள் 
இடம்பெற்றுள்ளன.
கணவன் இறந்து விட்ட நிலையில், இந்த பெண்ணே குடும்பத்தை கவனித்து வந்திருக்கிறார். வவுனியா மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த குமாரவேல் அன்னக்கிளி 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு 
உயிரிழந்துள்ளார்.
இவரது உயிரிழப்பிற்கு கொழும்பிலுள்ள, முகவரே காரணமென பெண்ணின் உறவினர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
இவரது கணவர் எற்கனவே உயிரிழந்த நிலையில், ஐந்து பிள்ளைகளையும் அன்னக்கிளியே தனது உழைப்பில்
 பராமரித்து வந்தார்.
வறுமை காரணமாக அவர் எற்கனவே சில தடவைகள் மத்திய கிழக்கு நாடுகளிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
கடந்த எப்ரல் 18ம் திகதி கொழும்பிலுள்ள வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் ஊடாக சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றார். நான்கு மாதங்களாக உறவினர்களுடன் எந்த தொடர்பும்
கொள்ளவில்லை.
எனினும் கொழும்பிலுள்ள முகவருடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு, தனக்கு வேலையிடத்தில் அதிக துன்புறுத்தல், அதிக வேலை, தன்னை வேறிடத்திற்கு மாற்றும்படி அல்லது நாட்டுக்கு அழைக்கும்படி கேட்டு வந்துள்ளார்.
எனினும் முகவர் உரிய நடவடிக்கை எடுக்காமல் தவறிழைத்தார் என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம்
 சுமத்தியள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் 12ம் திகதி அன்னக்கிளி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நாட்களின் பின்னர் சவுதி அரேபியாவிலுள்ள உறவினர் ஒருவர், வவுனியாவிலுள்ள உறவினர்களிற்கு தகவல் வழங்கியுள்ளார். எனினும், இதை உறுதிசெய்ய முடியாமல், உறவினர்கள்
 தவித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள முகவரை தொடர்பு கொண்டபோது, தமக்கு இது பற்றி தெரியாது என்னும், கொழும்பிலுள்ள வேலைவாய்ப்பு முகவருடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை தொடர்புகொண்டபோது, அன்னக்கிளி தற்கொலை செய்து நான்கு மாதங்களும் 18 நாட்களுமாகி விட்டது என்ற தகவல் சொல்லப்பட்டது. சடலம் அங்குள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டனர்.
பின்னர் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் கடந்த சனிக்கிழமை சடலம் அதிகாலை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டு
, சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை பெறப்பட்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் வவுனியாவில் அடக்கம் செய்யப்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 3 ஜனவரி, 2019

கோர விபத்து கொழும்பிலிருந்து யாழ் சென்ற வாகனம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளார்.இன்று அதிகாலை 3.30 மணியளவில் பளைப் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் கொழும்பில் இருந்து சென்ற ஹையேஸ் ரக வான் மோதுண்டு 
விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பில் புதிதாக கொள்வனவு செய்து செலுத்தி செல்லப்பட்ட ஹையேஸ்ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.சம்பவத்தில் ஹையேஸ் வானை செலுத்தி வந்த மீசாலை மேற்கை சேர்ந்த பஸ் சாரதி சம்பவ இடத்தில் பலியானார் எனத் 
தெரியவருகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




நாட்டில் வாகனங்களை வாங்குவதற்கு காத்திருப்போருக்கு தகவல்

இலங்கையில் 2019ஆம் ஆண்டுக்கான வாகனங்களின் இறக்குமதி தாமதமாகும் என வாகன இறக்குமதியாளர் சம்மேளன தலைவர் ரஞ்சன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.இலங்கையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்னும் சமர்ப்பிக்கப்படாமை மற்றும்
 ரூபாவின் விலையில் தொடர்ந்தும் ஏற்பட்டு வருகின்ற வீழ்ச்சி என்பன இதற்கான காரணங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறும் போது; 2019ஆம் ஆண்டுக்கான
 வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், தற்போது வாகனங்களின் இறக்குமதியை மேற்கொண்டிருக்க முடியும்.அவை பெப்ரவரி அளவில் இலங்கையை வந்தடைந்திருக்கும். எனினும் தற்போது அதற்கான வாய்ப்புக்கள் இல்லை என பீரிஸ்
 குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ரூபாவின் வீழ்ச்சி காரணமாக வாகனங்களுக்கான விலைகளை தீர்மானிக்க முடியாமல் இருப்பதாகவும் 
அவர் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஒரு மாதமேயான குழந்தையை உயிருடன் புதைத்த கொடூரத் தாய்

பிறந்து ஒரு மாதமான குழந்தையை உயிரு
டன் வீட்டு தோட்டத்தில் புதைத்ததாக கூறப்படும் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஹட்டன் யூனிப்பீல்ட் தோட்டத்தில் வசித்து வரும் 28 வயதான பெண்ண இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரான இந்த பெண் நேற்று முற்பகல் குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க செய்துள்ளார். இதன் பின்னர், 
குப்பைகளை போட வெட்டப்பட்டிருந்த குழிக்குள் குழந்தையை வைத்து மண்ணை போட்டு மூடியுள்ளார்.குழந்தை வீட்டில் இல்லாத காரணத்தினால், பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் குழந்தை பற்றி பெண்ணிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது தான் குழந்தையை குழிக்குள் போட்டு புதைத்து விட்டதாக பெண் கூறியுள்ளார். இதன் பின்னர், பெண்ணின் தாயும், உறவினர்களும் இணைந்து குழந்தையை தோண்டி எடுத்து வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.பால் கொடுக்கும் போது குழந்தை இறந்து விட்டதாக அவர்கள் வைத்தியசாலையில் கூறியுள்ளனர். எனினும், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குழந்தையின் கழுத்து பகுதியில் மண் இருப்பதை கண்டு அது பற்றி விசாரணை 
நடத்தியுள்ளனர்.
தனது கணவருடன் சுமார் ஒரு மாத காலமாக இருந்து வரும் தகராறு காரணமாக குழந்தையை உயிருடன் புதைத்ததாக பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.சம்பவம் தொடர்பில் பெண்ணின் தாயையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண்ணின் கணவன், கண்டியில் தொழில் புரிந்து வருகிறார்.
இந்த சம்பவம் நடந்த நேரத்தில் அவர் வீட்டில் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குழந்தையின் பிரேதப் பரிசோதனை டிக்கோயா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.கைது செய்யப்பட்ட பெண்கள், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படஉள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>