siruppiddy

18

siruppiddy

unkal

unkal
சுகாதார செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுகாதார செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 ஜூன், 2024

நாட்டில் கிளிநொச்சியில் நாய்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் கடந்த 10.05 2024 அன்றைய
 தினம் நாய் கடிக்கு இலக்கான சிறுமி ஒருவர் உரிய சிகிச்சை
 பெறாத நிலையில் கடந்த 25,06.2024 அன்றைய 
தினம் வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.  
தொடர்ந்து அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக 26 05.2024 அன்று யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக 
உயிரிழந்துள்ளார்.  
தியாகரன் சாருஜா என்ற நான்கு வயதுடைய குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமியே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.  
அப்பகுதியில் பல பேர் குறித்த நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் அவர்களுக்கு மேலதிக சிகிச்சைகள் 
வழங்குவதற்காக
 நான்கு பேர் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 
சிறுமியின் பராமரிப்பில் தொடர்பு வைத்திருந்த 11 பேருக்கும் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்தியரின் ஆலோசனைகளுக்கு
 அமைவாக அவர்களுக்கு முற்பாதுகாப்பு தடுப்பூசி 
ஏற்றப்பட்டுள்ளது.  
அத்துடன் அப்பகுதியில் கட்டாகாளி நாய்களும் அதிகரித்து காணப்படுவதை அவதானிக்க முடிவதுடன், அவைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு .வருகின்றனர் 
மேலும் இறந்த சிறுமியின் தாயார் வீட்டு வறுமைகாரணமக வெளியூர் சென்ற நிலையில் சிறுமியின் இறப்பு செய்திகேட்டு இன்று
 நாடுதிரும்பியுள்ளார்
உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரோத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது



சனி, 20 ஜனவரி, 2024

அவதானம்போத்தலில் அடைத்து விற்க்கும் ஊறுகாயால் ஏற்படும் அபாய நோய்களாம்

தற்போது விதம் விதமாக உணவில் வகைகளை சேர்ப்பது என்பது மரக்கறிகளின் விலையேற்றத்தில் இயலாத காரியமாகும். சிலர் அதனால் ஊறுகாயை உண்ணும் உணவுடன் சேர்த்து சுவைபட
 உண்கிறார்கள்.
அன்றாடம் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே தேவைப்பட்டால் ஆரோக்கியமான முறையில் ஊறுகாயை செய்து சாப்பிடுங்கள். பல வகையான ஊறுகாய் நிறைய
 எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும்.
 அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுகின்றனர். செரிமான பிரச்சனைகள் ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனைகளை 
ஏற்படுத்தும். 
எதுவும் அளவுக்கு மீறினால் நஞ்சாகலாம் என்ற முதுமொழிக்கேற்ப நாம் ஊறுகாயை பயன்படுத்த வேண்டும். தவறினால் அதில் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட
 உண்டாக்கும்.அல்சர்
 ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர, அல்சர் பிரச்சனையை சந்திக்கக்கூடும். எனவே சாதாரணமாக அதிக அளவில் காரம் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, ஊறுகாயை அதிகம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
 இரத்த அழுத்தம்
 இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நீரிழிவு இருப்பவர்கள், ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான நிலைமையை அவர்கள் சந்திக்கக்கூடும்.
 இதய நோய்
 ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.
 வயிறு உப்புசம்
 ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிகம் இருப்பதால் அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 21 ஆகஸ்ட், 2013

ஆப்பிளை விட சக்தி வாய்ந்த ஸ்ட்ராபெர்ரி!


தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
ஏனெனில் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்துள்ளது.
ஆனால் ஆப்பிளின் சக்தியையே ஸ்ட்ராபெர்ரி பழம் மிஞ்சும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இப்பழம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதுடன், சர்க்கரை நோய், புற்று நோயை தடுக்கும் திறன் படைத்தது.
அத்துடன் எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும் பிலேவனாய்டு என்ற பொருள் இப்பழத்தில் உள்ளது.
மேலும் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும் உள்ளது.
செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.
இதில் ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை உள்ளது.
இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.
மேலும் இது ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. ஸ்ட்ராபெர்ரி பழச்சாற்றை குடித்தால் பற்களில் கறை ஏற்படுவதை தவிர்க்கலாம். இதில் உள்ள அமிலங்கள் பல் கறையையும் நீக்குகின்றன.

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

புருவ பராமரிப்பில் செய்யக் கூடாதவை


பொதுவாக பல ஆண்கள் முகத்தை சீர் செய்யும் போது புருவத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.
முக அலங்காரம் மற்றும் முக பராமரிப்பு என்று வந்தால், ஆண்கள் புருவத்தை கணக்கிலேயே எடுத்துக் கொள்வதில்லை.
அதற்கு காரணம் நம்முடைய சமுதாயத்தில் பெரும்பாலான ஆண்கள் தங்களின் நேரத்தை சலூனில் செலவிட விரும்புவதில்லை. சொல்லப்போனால், புருவ பராமரிப்பு என்பதை மெட்ரோ செக்ஷுவல் வகை ஆடவர் மட்டுமே விரும்புவார்கள்.
அப்படிப்பட்ட ஆண்கள் ஆடை அலங்காரம், மேக்-கப் மற்றும் முக பராமரிப்பில் அதிக அக்கறை எடுத்துக் கொள்பவர்கள். முக வசீகரத்தை கொண்டு பிறரை ஈர்க்க வேண்டுமென்றால், அதற்கு புருவங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது.
கண்டிப்பாக புருவ பராமரிப்புக்கான காரணங்கள் ஆண்களிடமும், பெண்களிடமும் வேறுபடுகிறது. ஆண்களை பொறுத்த வரை புருவ பராமரிப்பு என்பது இயற்கை அழகை தக்க வைக்கவும், சீராக இல்லாத ரோமத்தை நீக்குவதற்கு மட்டுமே.
இது சற்று குழப்பமாக இருந்தாலும், கீழ்கூறிய செய்யக்கூடியவையையும் செய்யக்கூடாதவையையும் படித்தால், புருவ பராமரிப்பைப் பற்றி தெளிவாக புரிந்துக் கொள்ளலாம்.
* ரேசரை பயன்படுத்தி புருவத்தை பராமரிக்க கண்டிப்பாக பரிந்துரைக்க மாட்டோம். அதனை பயன்படுத்தினால், அதன் விளைவு விபரீதமாக கொண்டு போய் முடியும்.
* ரேசரை வைத்து புருவத்தை ட்ரிம் செய்யும் போது, அதிகமாக எடுத்து விட வாய்ப்பு உள்ளது. அதனால் தாடியை போல புருவம் அதிகமாகவும், அடர்த்தியாகவும் வளரும் அபாயம் உள்ளது.
இது போக சீரான திசையில் அதன் வளர்ச்சி இருக்காது. இதனால் அது அழகை பாதிப்பதோடு மட்டுமல்லாது, வெட்டுக்காயங்களையும் ஏற்படுத்தும்.
* பொறுமை இல்லாத சமயம் புருவத்தை பராமரிக்கும் போது, அதிக அளவில் புருவத்தை எடுத்துவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே நேரத்தை எடுத்துக் கொண்டு, பொறுமையாக ஒவ்வொரு முடியாக உருவ வேண்டும்.
* நடுவில் எப்படி இருக்கிறது என்று பார்க்காமல் அவசரம் அவசரமாக முடியை நீக்கிக் கொண்டே போனாலும், அளவுக்கு அதிகமான முடியை நீக்க வாய்ப்பு உள்ளது. ஒரு முறை போனால் போனது தானே. அதனால் பொறுமையுடன் செயல்பட்டு, சங்கடத்தில் இருந்து காத்துக் கொள்ளுங்கள்.
* நீளமான முடிகளை புடுங்க வேண்டும் என்ற அவசியமில்லை. காடுகளை போன்ற தோற்றத்தை தடுக்க, அவைகளை ட்ரிம் செய்தால் மட்டுமே போதுமானது. அதிலும் புருவத்தை மேல்நோக்கி சீவினால், அது நீளமான முடியை காட்டிவிடும்.
* மேலும் சிறிய சீப்பை பயன்படுத்த வேண்டும் அல்லது புருவங்களை மேல்நோக்கி தேய்த்தால், அவைகள் ஒரே திசையை நோக்கி இருக்கும். புருவத்தை ட்ரிம் செய்ய சிறிய கத்தரிகோலைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் கண்டிப்பாக ட்ரிம் செய்ய வேண்டும்.
* புருவ ரோமங்களை புடுங்குவதற்கு முன் அல்லது வேக்சிங் செய்வதற்கு முன், அந்த இடத்தை சுத்தமாகவும் அழுக்கு இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* மேலும் அவ்விடத்தில் எண்ணெயையும் தேய்த்துக் கொள்ள வேண்டும். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சுத்தமாகவும், துவாரங்கள் திறந்தும் ரோமங்கள் மென்மையாகவும் இருக்கும். அதனால் ரோமங்களை புடுங்கும் போது வலி இல்லாமல் இருக்கும்.
* ரோமங்களை புடுங்கவும், வேக்சிங் செய்யவும் நல்ல தரமுள்ள கருவிகளில் முதலீடு செய்ய வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தாமல், மலிவான பொருட்களை பயன்படுத்தினால் விளைவு மோசமாக இருக்கும்.
* மேலும் ரோமங்கள் சீராக வளராமல் போகலாம். அதனால் நல்ல படியாக புருவங்களை பராமரிக்க, நல்ல பொருட்களில் முதலீடு செய்ய வேண்டும்.
* புருவங்களுக்கு மத்தியில் வளரும் முடிகள் ஒரு போதும் நாகரீகமாக இருந்ததில்லை, இருக்க போவதுமில்லை. மேலும் அது ஈர்க்கும் வண்ணம் இருப்பதில்லை.
அதனால் அதை உடனே நீக்குங்கள். அருகில் இருக்கும் சலூனுக்கு சென்று முதலில் அதை த்ரெட்டிங் மூலமாக நீக்குங்கள். இப்படி வளரும் முடியை வைத்திருப்பதை விட, அதனை நீக்க த்ரெட்டிங் செய்வது ஒன்றும் பெரிய அவமானம் கிடையாது.
* மூக்கின் மேல் முடிகள் உள்ள ஆண்களை எந்த பெண்ணும் வலை வீசி தேடுவது கிடையாது. இதனை நீங்களே நீக்க வேண்டும் என்று எண்ணினால், வேக்சிங் அல்லது புடுங்குதல் மூலம் செய்யுங்கள்.
* மாறாக ஷேவ் செய்யாதீர்கள். பெண்கள் மட்டும் தான் புருவங்களை பராமரிக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். அதனை உடைத்தெறியுங்கள். மேற்கூறிய செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளை மனதில் வைத்துக் கொண்டு, புருவ பராமரிப்பில் ஈடுபடுங்கள்