siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 31 ஜனவரி, 2022

நாட்டில் ஒரு சாப்பாட்டு பார்சலின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் சாப்பாட்டு பார்சல் விலையை மேலும் அதிகரித்திருப்பது மக்களிடயே பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.இவ்வாறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை 
பாரிய அளவில்
அதிகரிப்பதற்கு இடைநிலை வர்த்தகர்களே காரணம் என சங்கத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.நாட்டில் இதுவரையில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோதுமை மா கையிருப்பு உள்ள போதிலும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கறுப்பு சந்தையில் கோதுமை 
மாவிற்கு மேலதிகமாக
2,500 ரூபாய் வழங்க நேரிட்டுள்ளது. அரிசி விலை அதிகரிப்பால் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. சிகப்பு அரிசி ஒரு கிலோ கிராம் 170 ரூபாயை கடந்துள்ளது.வெளிநாட்டுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிகளில் பெரிதாக சோறு இல்லை.
முன்னர் ஒரு கிலோ கிராம் அரிசியில் 6 பார்சல்கள் செய்ய முடிந்தது. தற்போது அவ்வாறு முடியவில்லை.
இதனால் சாப்பாட்டு பார்சல்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும். 60 முதல் 80 ரூபாய் வரை இருந்த ஒரு காலை உணவு 120 முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
மதிய நேரத்திற்கான சாப்பாட்டு பார்சல் ஒன்று முன்பு 130 முதல் 150 ரூபாய் வரை விற்கப்பட்டது.
ஆனால் தற்போது ஒரு பாக்கெட் மதிய உணவு சோறு பார்சல் 260 முதல் 280 ரூபாய் வரை விற்கப்படுகின்றது. இந்த விலை மேலும் அதிகரிக்கவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் 
தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



ஞாயிறு, 30 ஜனவரி, 2022

மரண அறிவித்தல் அமரர் கிருபாகரன் சோமசுந்தரம்

யாழ் அச்சுவேலி தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வரா வீதியடியை பிறப்பிடமாகவும் நியூயார்க் அமெரிக்காவை வதிவிடமாகவும் பால்ய நண்பர்களால் மாலி என செல்லமாகவும் உறவினர் நண்பர்களால் மாமாலி என இடுபெயரால் அழைக்கப்பட்டவரும் எமது நெருங்கிய உறவினருமான  உயர்திரு "கிருபாகரன் சோமசுந்தரம்"அவர்களின் பிரிவுச்செய்தியறிந்து மிகவும் மனம்வருந்துகிறோம்
                ஸ்ரீ விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் வெள்ளிவிழாவை   தனது தலைமையில் தன்வயதொத்த இளவல்களான மறைந்த பாலன் அண்ணா ,தம்பிராஜா அண்ணர் ,மற்றும் சுந்தரம் அண்ணா போன்ற செயல்வீரர்களை நிர்வாகத்தில் முன்னிலைப்படுத்தி ஊர் மக்களின் பூரண ஒத்துழைப்புடன்  உள்ளூர் கலைஞர்களுக்கு  முக்கியத்துவமளித்து  வடபகுதியே வியக்கும்வண்ணம் பெரும்பொருட்செலவில்  இரண்டு நாட்கள் தொடர்ந்து விழாவை வெற்றிகரமாக  நடாத்திமுடித்த பெருமையின் முக்கிய நாயகன் இவரென்பது இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும் 
                சிறந்த கல்விமானும், பல்மொழிகளை சரளமாக பேசும் சக்திமிக்கவராகவும், மிகுந்த நகைச்சுவையாளனுமாகிய இவர் காங்கேசன்துறை ,புத்தளம் சீமெந்து தொழில்சாலையில்   பொருட்கள் கொள்வனவு முகாமையாளராக (purchasing manager ) புலம்பெயரும்வரை மிகவுயர்ந்த பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் 
அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



நாட்டில் புதிதாக நகை வாங்குபவர்கள் மற்றும் வீட்டில் நகை வைத்திருப்பவர்களுக்கு

 கடைகளில் நகை வாங்க சென்றால் ஆட்களை பார்த்து தான் விலை போடுகின்றனர்.உடனே ஒரு கால்குலேட்டர் ஐ எடுத்து நாலு அஞ்சு நம்பர தட்டி ஒரு விலை சொல்லுவாங்க. நாம குறைச்சு கேட்டா திரும்ப அதே மாறி பண்ணி அதே விலை அல்லது கொஞ்சம் குறைவாக சொல்வாங்க. இப்படி பல பேரிடம் ஏமாறுவோர் அதிகமானவர்கள்.
அதில் நானும் ஒருவனாக இருந்தேன . இதன் பின்பு ஒரு சாதாரண டூல் ஐ செய்தேன். இதில் ஒவ்வொரு நாளின் அன்றைய தங்க விலை  ஆகிக்கொண்டிருக்கும். நீங்கள் வாங்க இருக்கும் தங்க நகையின் Karat ஐ தெரிவு செய்து. எத்தனை கிராம் என்பதையும் பதிந்தால் நீங்கள் வாங்க இருக்கும் நகையில் உள்ள தங்கத்தின் அன்றைய 
பெறுமதியை காட்டும்.
Making Charge ஒரு கிராம் கு எவ்வளவு எடுக்குறீங்க னு கடைக்காரரிடம் வாய் திறந்து கேட்டு அதையும் input செய்தால் அவருக்கு உண்மையில் அந்த நகைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்கின்ற முடிவுக்கு நீங்கள் வரலாம். அல்லது அந்த making charge ஐ
வைத்து நீங்கள் பேரம் பேசலாம். இனியும் ஏமாறவேண்டாம். www.goldjewel.ml என்ற முகவரிக்கு சென்று நீங்கள் அதை பயன்படுத்திக்கொள்ளலாம். நல்லதை ஷேர் செய்யுங்கள்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


சனி, 29 ஜனவரி, 2022

மரண அறிவித்தல் அமரர் இராமநாதன் சின்னத்தம்பி 29.01.22

யாழ் அச்சுவேலியை தெற்கை பிறப்பிடமாவும் வதிப்பிடமாவும் கொண்ட அமரர் இராமநாதன் சின்னத்தம்பி ( அச்சுவேலி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள தேனீர்கடைஉரிமையாளர்) 29/01/2022 இன்று காலமாகிவிட்டார் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் 
அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>





வெள்ளி, 28 ஜனவரி, 2022

நினைவஞ்சலி 1ம் ஆண்டு அமரர். கந்தையா தனபாலசிங்கம் (தனபால்)28 .01-.22

திதி 28-01-2022 இன்று  
யாழ் பத்தமேனி அச்சுவேலியை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்.கந்தையா தனபாலசிங்கம் (முருகா லொறி உரிமையாளர்.தனபாலன் ) அவர்களின்.திதி 28-01-2022 வெள்ளிக்கிழமை  இன்று இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள்
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


கோவிட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றுமொரு பாதிப்பு

கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை நீரிழுவு செம்மேளத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணருமான வைத்தியர் மணில்க சுமணதிலக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ஆறு மதங்களுக்குப் பின் தங்களது இரத்தத்தின் சர்க்கரை அளவை பரிசோதித்து கொள்வது நல்லது என தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




புதன், 26 ஜனவரி, 2022

இலங்கை மக்களுக்கு சீன அரிசியால் ஏற்படவுள்ளஆபத்து

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொண்டால் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க (Ashoka Abeysinghe) தெரிவித்துள்ளார்.சீனா தனது சாகுபடிக்கு அதிக அளவில் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாகவும்
 அவர் கூறினார்.
இலங்கையை விட மூன்று நான்கு மடங்கு இரசாயன உரங்களை சீனா பயன்படுத்துவதாகவும் அவர் கூறுகிறார். தற்போதைய அரசாங்கத்தினாலேயே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், உரத்தை இறக்குமதி செய்வதற்கு பதிலாக 400 மில்லியன் அமெரிக்க
டொலர்களுக்கு மேல் இன்று செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் 
தெரிவித்தார்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 25 ஜனவரி, 2022

நாட்டில் விஸ்வரூபம் எடுக்கும் இன்னுமொரு நோயால் அதிக உயிரிழப்புகள்

நாட்டில் எலிகாய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் நோய் நிலைமை தொடர்பில் கவனத்தில் கொள்ளாமை மற்றும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறாமை என்பன எலி காய்ச்சலால் பீடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் என சமூக நல வைத்திய நிபுணர் அமில ஏரங்க சந்திரசிறி 
தெரிவித்துள்ளார்.
அதேசமயம் தற்போது, வயல் பகுதியிகளை அண்டி வசிப்பவர்கள் மாத்திரமன்றி நகர் பகுதிகளில் வசிப்பவர்களும் எலிகாய்ச்சலால் பாதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




திங்கள், 24 ஜனவரி, 2022

நாட்டில் எரிபொருளின் விலையை அதிகரிப்பது தொடர்பான தகவல்

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி காரணமாக எரிபொருள் பாவனையை குறைப்பதற்கு உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டிய யோசனையொன்றை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவையில்
 சமர்ப்பித்துள்ளார்.
இதன்படி, எரிபொருள் விலை சூத்திரத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும், கொழும்புக்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு, காணொளி தொழில்நுட்பம் மூலம் வாரத்தில் ஒரு நாள் பாடசாலையை நடத்துதல், போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நேரங்களில் 
அலுவலகங்களை திறப்பது,
பொது நிறுவனங்களில் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு அதிகாரிகளை வரவழைப்பதை கட்டுப்படுத்துதல், பிரதேச செயலாளர்கள் போன்றவர்களை கொழும்பிற்கு வரவழைப்பதை மட்டுப்படுத்தி, இணையத்தில் கலந்துரையாடல்களை நடத்துதல், போக்குவரத்து 
நெரிசலை குறைக்க 
நடவடிக்கை எடுத்தல், தொழிற்சாலைக்குத் தேவையான ஆற்றலை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெற தொழில்துறையினரை ஊக்குவித்தல் போன்ற யோசனைகளை அவர் முன்வைத்துள்ளார். எரிபொருள் பாவனையை குறைப்பதற்காக எரிபொருட்களின் விலைகள் 
அதிகரிக்கப்பட்ட போதிலும்,
எரிபொருளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையும் எரிபொருள் பாவனை அதிகரிப்பிற்கு காரணமானதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில்,
 தற்போது எரிபொருளை 
இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் சுமார் 400 மில்லியன் 
அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும், மின்சார சபைக்கு எரிபொருள் வழங்கினால் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கூடுதலாக செலவாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலைமையை கருத்திற்கொண்டு எரிபொருள் பாவனையை
கட்டுப்படுத்துவதற்கான மாற்று யோசனையாக அமைச்சர் இந்த முன்மொழிவுகளை அரசாங்கத்திடம் 
சமர்ப்பித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




வியாழன், 20 ஜனவரி, 2022

மரண அறிவித்தல் அமரர் சின்னத்தம்பி தனபாலசிங்கம் 19.01.22

யாழ்.  அச்சுவேலி பத்தமேனியைபிறப்பிடமாகவும்,  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் சின்னத்தம்பி தனபாலசிங்கம் அவர்கள் 19-01-2022 புதன்கிழமை  அன்று கனடாவில்  சிவபதம் அடைந்தார் அன்னார் லில்லிமலர் அவர்களின் அன்புக்கணவரும்( கனடா ) ஜெகதீஸ்வரன்(சுவிஸ்) ஜெகதீஸ்வரி ( கனடா ) ஜெயவதானி ( கனடா )  ஜெயராணி ( கனடா ) ஜெயமாலா( இலங்கை)  ஆகியோரின் பாசமிகு தந்தையரும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2022 திங்கள்கிழமை  அன்று  கனடாவில் உள்ள மண்டபத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்
 எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


செவ்வாய், 18 ஜனவரி, 2022

இலங்கையில் சில பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்ய கூடுமாம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் எதிர்வரும் 4 நாட்களுக்கு பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்
மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த 
காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைணக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



நாட்டில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவச மின்சாரம்

குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவச சூரியக்கலங்களை வழங்க மின்சக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணைக்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அடுத்த வாரம் முதல் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சரான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய , 5W, 10W மற்றும் 15W மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சூரியக்கலங்கள் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், அவை இலவசமாக நிறுவப்படவுள்ளன. மேலும், சுமார் 5W சூரியக்கலங்களைப் பெறுபவர்களுக்கு 1500 ரூபா
 வழங்கப்படும்.
அவர்கள் சுமார் சுமார் 10 வருடங்களின் பின்னர் 10,000 ரூபாவை பெற்றுக் கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இந்த சூரியக்கலங்கள் மத வழிபாட்டுத் தலங்களிலும் நிறுவப்படவுள்ளன. ஒரு கிராம சேவையாளர் பிரிவுக்கு ஒரு வீட்டில் சூரிய மின் உற்பத்தி கலங்களை 
நிறுவுவதன் மூலம்
இந்த வேலைத்திட்டம் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும், அதாவது திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் 14,000 வீடுகளுக்கு சூரியக்கலங்கள் இலவச வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



ஞாயிறு, 16 ஜனவரி, 2022

குழந்தைக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருந்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா

தாய்ப்பாலுக்கு நிகா் தாய்ப்பால் மட்டுமே. தாய்ப்பாலை வேறு எதனோடும் ஒப்பிட முடியாது. தாய்ப்பாலின் சிறப்பு என்னவென்றால் அது SARS-CoV-2 வைரஸைவிட மிகவும் சக்தி வாய்ந்தது. அதனால் கொரோனா நோய்த்தொற்று உள்ள பெண்கள் தாராளமாக தமது குழந்தைகளுக்கு தாய்ப்பால் 
கொடுக்கலாம்.
சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டுமா? கனவை நிறைவேற்றும் தற்போது இந்தியாவில் பாிசோதனை செய்யப்படும் 10 போில் 4 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கும் நிலையில், தாய்ப்பால் கொடுக்கும் நிறைய அம்மாக்களுக்கு கொரோனா நோய்த்தொற்று 
இருக்க வாய்ப்பு உண்டு.
இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று உள்ள அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா என்ற கேள்வி எழுகிறது.மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் அம்மாக்கள் 14 நாட்கள் தங்களையே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் போது தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தால், அது குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.
MOST READ: உங்க வீட்டுல கொரோனா நோயாளி இருக்காங்களா? அப்ப இத செய்யுங்க..இல்ல கஷ்டப்படுவீங்க.. கொரோனா நோய்த்தொற்று உள்ள அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது, அவா்களுடைய குழந்தைகளுக்கு கொரோனா நோய் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதே என்று நாம் நினைக்கலாம். ஆனால் உலக சுகாதார அமைப்பு வேறு விதமாக சிந்திக்கிறது.
கோவிட்-19 வைரஸை விட தாய்ப்பால் சக்தி வாய்ந்தது என்று உலக சுகாதார அமைப்பு கருதுகிறது. இந்தப் பதிவில் அதைப் பற்றி விாிவாக காணலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் கொரோனா இருந்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா? கோவிட்-19 தொற்றுள்ள அம்மாக்கள் தாரளமாக தங்கள் குழந்தைகளுக்கு
 தாய்ப்பால் கொடுக்கலாம்.
ஏனெனில் தாய்ப்பால் கொரோனா வைரஸைவிட சக்தி வாய்ந்ததாக இருப்பதால், கொரோனா தொற்றுள்ள அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தாலும், அந்த குழந்தைகளுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவாது. எனவே கொரோனா பாதிப்புள்ள அம்மாக்கள் மற்ற அம்மாக்களைப் போல தங்கள் குழந்தைகளுக்கு தாராளமாகத்
 தாய்ப்பால் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஊட்டச்சத்துள்ள உணவு ஒரு சிறு குழந்தைக்கு அதனுடைய தாய்ப்பால், ஒரு மிகச் சிறந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவு ஆகும். தாய்ப்பாலில் 
தேவையான அளவு தண்ணீா்,கொழுப்பு,கார்போஹைட்ரேட்,தாதுக்கள்,இரும்பு,கால்சியம்,பாஸ்பரஸ்,சோடியம், வைட்டமின் ஏ,வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கின்றன. 
பிறந்த குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கக்கூடிய ஒரே உணவு தாய்ப்பால் மட்டுமே. சிறு குழந்தைகளை பெரும் நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாப்பதும் தாய்ப்பாலே. நோயெதிர்ப்பு சக்தி மேம்படும் பிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை வளா்க்கக்கூடிய எல்லா விதமான ஊட்டச்சத்துகளையும் வழங்குவது 
தாய்ப்பால் ஆகும்.
அதனால் பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதங்களாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவா்களும் நிபுணா்களும் பாிந்துரைக்கின்றனா். குழந்தைகளைத் தாக்கும் நோய்த்தொற்றுகளை அழிக்கும் பிறந்த குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கக்கூடிய அமுதமாகத் தாய்ப்பால் இருக்கிறது. தாய்ப்பாலில் இருக்கும் நோய் எதிா்ப்பு மையமானது, குழந்தைகளுக்கு பலவிதமான வைரஸ்களால் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போாிடும் படைக் கருவியாக இருந்து, அந்த பெருந்தொற்றுகளை அழிக்கிறது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



நினைவஞ்சலி பத்தாம் ஆண்டு அமரர் இளையதம்பி வீரகத்தி 16.01.2022

அன்னை  மடியில்:  — ஆண்டவன் அடியில் : 22.01.2012 
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர்  இளையதம்பி வீரகத்தி அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 16-01-2022..ஞாயிற்றுக்கிழமை  அன்று 
 காலச்சுழற்சியில் பத்து ஆண்டுகள்   கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு
 உருவம் எங்கள் அப்பா
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அப்பாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
 அன்னாரின்
 ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவற்கிரி ,கொம்  நவற்கிரி http://lovithan.blogspot.com/ நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் புத்தூர் நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர்
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் புட்டப்பிள்ளைகள் 
. தகவல் குடும்பத்தினர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

சனி, 15 ஜனவரி, 2022

அமரர் திரு துரைராஜா இரத்தினம் 6ம் ஆண்டு நினைவஞ்சலி 15.01.22

மலர்வு .28.12.1952    உதிர்வு .15.01.2016      
நீங்காத நினைவு.ஆறாம் ஆண்டு 
திதி-15.01.2021
 அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை)   அன்னார்  யாழ்  நவற்கிரி புத்தூரை 
 பிறப்பிடமா​வும்  சங்கோலை  மாவிட்ட புரத்தை வசிப்பிடமா​கவும்  k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட 
அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் நீங்காத நினைவுடன்  ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி 16.01.2022...சனிக்கிழமை அன்று   
மறைந்துவிட்ட எங்கள் உறவின்.
>>>>>>>
நீங்காத நினைவுகள் 
ஆண்டவன் படைப்பினை
 ஆழமாய் பார்த்தாலும்!
பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின்
புன்னகையை ரசிக்கின்றோம்! நீங்கள் இல்லா இல்வாழ்க்கை
 நிறைவற்றதாகவே இருக்கிறது
 உங்களைப் போல் யார் வருவார்.ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த உங்கள்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் 
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் ஆத்மாசாந்தியடைய 
இறைவனை பிரார்த்திக்கின்றோம் 
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி...
என்றும் உங்கள் பிரிவால் துயருறும் 
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் , 
மைத்துனர்மார்கள், மருமக்கள்.
தகவல்
 குடும்பத்தினர் 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 11 ஜனவரி, 2022

நாட்டில் இலங்கையில் வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி

வீடு தேவைப்பட்டு வாடகை வீடுகளில் வாழும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மலிவு விலையில் நிரந்தர வீடுகளை வழங்கும் முயற்சியில் ‘சொந்துரு மஹால் நிவாச’ என்ற வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை
 ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான ரன் பொக்குன கமவில் அமைந்துள்ள காணித்துண்டில் 72 வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வீடு அல்லது வீடமைப்பதற்கு காணியொன்று இல்லாமையால் வாடகை வீடுகளில் வாழ்கின்ற, உண்மையான வீட்டுத் தேவையுள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்கொண்ட குடும்பங்களுக்கு நியாய விலைக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் நோக்கில் ´சொந்துரு மஹல்´ எனும் பெயரிலான வீடமைப்புத் திட்டத்தை தேசிய வீடமைப்பு அதிகாரசபை மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு கிராமிய, வீடமைப்பு மற்றும் கட்டுமானங்கள் கட்டடப்பொருட்கள் கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு 5 இலட்சம் ரூபாய் ஆரம்பத் தொகையாகச் செலுத்துவதற்கான ஆற்றல் இருக்க வேண்டியதுடன், வீட்டுப் பெறுமதியின் எஞ்சிய தொகை வருடமொன்றில் தவணைக் கட்டணமாக அறவிடப்படும் என
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைக்கேற்ப வங்கியின் மூலம் கடனைப் பெற்றுக்கொள்வதற்கும் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>






திங்கள், 10 ஜனவரி, 2022

மரண அறிவித்தல் அமரர் சத்தியபாலன் நந்தகுமார் (சத்தியா) 09.01.22

யாழ் தோப்பு அச்சுவேலியைப்   பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வசிப்பிடமாகக்கொண்ட அமரர் சத்தியபாலன் 
நந்தகுமார் (சத்தியா ) அவர்கள் 09-01-2022.ஞாயிற்றுக்கிழமை  அன்று அமெரிக்காவில் காலமானார்   அன்னார்  காலஞ்சென்ற சத்தியபாலன் மற்றும் திருமதி இந்திராணி அவர்களின் பாசமிகு மகனும் 
சத்தியா அப்பன்(பிரான்ஸ் ) சத்தியா இந்திரன் (சுவிஸ் )சாத்தியபிரபா (லண்டன் )சத்தியா ராயு  (லண்டன்)ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவர் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் 
அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
.அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2022 செவ்வாக்கிழமை  அன்று மு.ப 12-00 -3.00.மணிவரை அமெரிக்காவில்   உள்ள மண்டபத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்மண்டப  முகவரி 
கீழேயுள்ள புகைபடத்துடன் இணக்கப்பட்டுள்ளது 
 எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




ஞாயிறு, 9 ஜனவரி, 2022

நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் பொருட்களின் விலை. மக்கள் அதிர்ச்சியில்

 நாட்டில்எதிர்காலத்தில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயரும் என்று சந்தைப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.விசேடமாக உர நெருக்கடி காரணமாக உள்ளூர் விவசாயப் பொருட்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது உணவுப் பணவீக்கத்தை அதிகரிக்கும் காரணியாகும்.
தற்போது வரையிலும் உர பிரச்சினை காரணமாக நெல் உற்பத்தி மற்றும் மரக்கறி உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என விவசாய வல்லுநர்கள் கருத்து
 தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணிற்கமைய, உணவுப் பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 22.1 சதவீதமாக உயர்ந்துள்ளது, முந்தைய மாதத்தில் 17.5 சதவீதமாக இருந்தது. அது முன்னரை விட தற்போது வரையில் வேகமாக அதிகரித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் மாற்றத்தை ஏட்படுத்தலாம் என
 எதிர்பார்க்கப்படுகிறது
எதிர்காலத்தில் மரக்கறி உற்பத்தி குறைவதால் சந்தைக்கு வரக்கூடிய மரக்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளதால் உணவுப் பணவீக்கம் மேலும் உயரும் அபாயம் உள்ளதாகவும் சந்தைப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.






இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

அமரர் மகாலிங்கம் செல்வகுமார் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.09.02.22

பிறப்பு-17 06. 1963 -   இறப்பு-26 01 2018                                 
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் செல்வகுமார் ( குமார்)அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி
திதி: 09-02-2022-அன்று 
நாட்கள் நகர்கின்றதா இல்லை பறக்கின்றதா!
எங்களை நிர்க்கதியாய் தவிக்கவிட்டு
எங்களின் உயிருக்குயிரானவனேஎங்களைப் பிரிந்து நான்கு ஆண்டுகள் மறைந்ததையா
காலம் நகரலாம் கண்ணீரும் கவலையும்- என்
இதயத்திற்கு மட்டுமே சொந்தமாய் போனதையாஎன்னுயிரே!
 ஏன் இந்த சுமை தந்தீர்?
என் உயிர் உள்ளவரை சோகத்தை....
ஏன் சுமக்கவைத்து விடைபெற்றீர்!துன்பம் என்ற சொல்லை
நீங்கள் பிரியும் வரை அறியவில்லை
இன்று வரை.........எங்கள் இதயம் உங்கள் பிரிவை
ஏற்கவில்லை.........நடந்தவை கனவாகப் போகாதோ..?
மீண்டும் ஒருதரம் வாய்விட்டு அழைத்து
எங்களை அரவணைக்க மாட்டீர்களா?உங்கள் பிரிவால் ஆறாத் துயரில்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து 
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
நேரில் வரமாட்டீர்களோ அப்பா!உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
வாடிநிற்கும் குடும்பத்தினர்.தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>