siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 29 டிசம்பர், 2016

முதன்முறையாக ஏலியன்ஸை தொடர்பு கொள்ளபோகும் பூமி:?

கிரக வாழ்க்கைக்கு வெளியே தொடர்பு கொள்ள மனிதகுலம் முதல் முறையாக நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக அறிவியல் ஆய்வியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளி ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக ஏலியன்ஸின் சிக்னல் கண்டுபிடிக்க விண்ணில் ஆய்வு செய்து
 வருகின்றனர்.
இந்நிலையில், சான் பிரான்சிஸ்கோ சார்ந்த அமைப்பான Extra Terrestrial Intelligence (METI) ஏலியன்ஸை முதல் முறையாக தொடர்பு கொண்டு ஹலோ சொல்ல திட்டமிட்டு களமிறங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் தூரத்தில் இருக்கும் கிரங்களுக்கு உரையாடல் அனுப்ப தொடங்கவுள்ளது. இந்த செய்திகள் மீண்டும் மீண்டும் 2018 இறுதிக்குள் ரேடியோ அல்லது லேசர் சிக்னல் வழியாக 
அனுப்பப்படும்.
METIயின் தலைவரும், SETIயின் முன்னாள் இயக்குனருமான Douglas Vakoch கூறியதாவது, பல தலைமுறையினாருக்காக இந்த பரிமாற்றத்தை தொடங்க வேண்டும் என்றால், நாம் காற்று மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த தி்ட்டம் சிறந்த உரையாடலுக்கான தொடக்கத்தை உருவாக்க முயற்சிக்கும் என நம்பிக்கை 
தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>புதன், 28 டிசம்பர், 2016

மரண அறிவித்தல் திரு நாகமுத்து கந்தப்பு

அன்னை மடியில் : 25 ஒக்ரோபர் 1936 — இறைவன் அடியில் : 26 டிசெம்பர் 2016
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து கந்தப்பு அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று
 இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து வேலாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வரட்ணம் அவர்களின் 
அன்புக் கணவரும்,
தேவமனோகரி(டென்மார்க்), தேவமனோகரன்(சுவிஸ்), செல்வமனோகரன்(லண்டன்), பேபிமனோகரி(சுவிஸ்), பாலமனோகரி(லண்டன்), காலஞ்சென்ற மாயமனோகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சின்னத்தம்பி, மற்றும் காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, மருதப்பு, கந்தையா, ஐயம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவசரவணபவன், சுமதி, எழிலரசி, பார்த்திபன், செல்வமோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சின்னத்தம்பி இராஜதுரை அவர்களின் மைத்துனரும்,
கபிலன், மிதுலா, கனிபல், நிரோஜன், நிசாங்கி, டனி, அஞ்சலி, மக்சிம், ஸ்ரிபன், மெளனிஷா, மகிலன், றம்யன், ஜெனீபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
வீட்டு முகவரி: 
இராஜ வீதி, 
தோப்பு, 
அச்சுவேலி, 
யாழ்ப்பாணம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
- — இலங்கை
செல்லிடப்பேசி: +94769386941
மனோ — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41217298061
செல்வன் — பிரித்தானியா
தொலைபேசி: +442086446497
செல்லிடப்பேசி: +447432098782
தேவமனோகரி — டென்மார்க்
தொலைபேசி: +4598510297
செல்லிடப்பேசி: +4526736906
பேபிமனோகரி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41223001877
பாலமனோகரி — பிரித்தானியா
தொலைபேசி: +442085861826
செல்லிடப்பேசி: +447946488803
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 27 டிசம்பர், 2016

கோர விபத்தில் வவுனியாவில் :மூவர் பலியானதாக தகவல்கள்!

 வவுனியா ஈறப்பெரியகுளத்தில் கோர விபத்து மூவர் பலியானதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன எனினும் இதுவரை உறுதியாக பலியான விபரங்கள் பெறமுடியாமல் உள்ளது என்பதும் 
குறிப்பிடத்தக்கது
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கப் ரக வாகனத்துடன் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கெண்டைனர் ஒன்றும் விபத்துக்குள்ளானதிலேயே
 மூவர் பலியானதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன மேலும் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் 
அறியப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


அமரர் துரைசிங்கம் மகேந்திரன் 31ம் , நினைவஞ்சலி (அந்தயேட்டி)

பிறப்பு : 8 ஓகஸ்ட் 1966 — இறப்பு : 28 நவம்பர் 2016
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த துரைசிங்கம் மகேந்திரன் (மகேன்)  அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், நாகரத்தினம்(செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரகத்தி, கனகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,
கேதாரகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன், மதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயலக்சுமி(கிளிநொச்சி), பன்னீர்ச்செல்வம்(Selvam Transporte- சுவிஸ்), மோகனாதேவி(நயினை), நாகேஸ்வரி(ஜெர்மனி), பரமேஸ்வரி(பிரான்ஸ்), இரவீந்திரன்(சுவிஸ்), யோகேஸ்வரி(சுவிஸ்), ஜெகதீஸ்வரி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியேஸ்வரி(ஜெர்மனி), கணேசலிங்கம்(ஜெர்மனி), கருணலிங்கம்(யாழ்), குகணேஸ்வரி(நயினை), சண்முகலிங்கம்(சுவிஸ்), புஸ்பராணி(கொலண்ட்), கலைச்செல்வி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
மண்ணினில் மகிழ்ந்து 
மாண்புடன் வாழ்ந்த மகேந்திரன் 
விண்ணிலே விடையேறிய
பரமன் பாதம் பணிந்து- இறையாகி 
கண்ணினால் இவ்வுலக காட்சிகள்
அனைத்தும் காண்கிறான்
வெந்த புண்ணிலே வேல் பாய்ந்த
உணர்வோடு நிற்கின்றோம்- அவர் பிரிவால் 
பண்ணிசைத் தேவார பதிகம் பாடித்துதித்து
நினைவுகள் சுமந்த கண்ணீரை 
பூக்களாய் தூவி தூவி காணிக்கை செய்கின்றோம்
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
அன்னாரின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டவர்களுக்கும், மலர்வளையம், துண்டுபிரசுரம், தொலைபேசி, முகநூல் மூலமாகவும் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், வேறு வழிகளில் பங்களிப்பு செய்தவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தயேட்டிக்கிரியை 28-12-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Schützenhaus, Rumlangerstrasse, 8156 Oberhasli, Swiss எனும் முகவரியில் நடைபெறும்.
தகவல்
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள்
தொடர்புகளுக்கு
கேதாரகெளரி(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41434110183
பன்னீர்செல்வம்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41796795922
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 25 டிசம்பர், 2016

மரண அறிவித்தல் திரு மதியாபரணம் அமிர்தலிங்கம்.

பிறப்பு : 21 ஓகஸ்ட் 1954 — இறப்பு : 23 டிசெம்பர் 2016
யாழ். தோப்பைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை. வண்ணார்பண்ணை, சுவிஸ், ஜெர்மனி Wupperthal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மதியாபரணம் அமிர்தலிங்கம் அவர்கள் 23-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மதியாபரணம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நளினி அவர்களின் அன்புக் கணவரும்,
முகிலன், யகலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானமலர்(இலங்கை), ஞானசேகரம்(காந்தி- சுவிஸ்), பரமேஸ்வரி(லீலா- கனடா), புஸ்பமலர்(சாந்தி- சுவிஸ்), மகேஸ்வரி(வசந்தி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதா, சிந்து, லவன்யா, லவலஸ்சினி, லவின், தாரனி, யானுதி, லாசவன், பிரதீகா, ஆரபிகா, யதுசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவளம், காலஞ்சென்ற பூமணி, மகேஸ்வரி(தேவி), அன்னம்மா(குழந்தை), தழையசிங்கம், காலஞ்சென்ற தில்லையம்பலம், சின்னத்தம்பி, புகனேந்திரநாதன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
பூபாலசுந்தரம் அவர்களின் அன்பு மருமகனும்,
சிவானந்தம், கௌரி, சிவகணேசன், சாந்தினி, றாகினி, ஜெயக்குமார், சசி, றாகினி, றமணி, சுகந்தி ஆகியோரின் 
உடன்பிறவாச்சகோதரரும்,
அருட்செல்வி, சூட்டி, செந்தில், முருகதாஸ், துரைராசா(இலங்கை), றமணி(சுவிஸ்), தருமசேகரம்(செல்வம்- சுவிஸ்), தர்மகுலசிங்கம்(கனடா), முரளி(கனடா), மோகனா(நோர்வே), பானுமதி(லண்டன்), விஜயகுமார்(லண்டன்), தேவராஜன்(நோர்வே), ரவிந்திரன்(லண்டன்), யாழினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு 
மைத்துனரும்,
கீர்த்திகா, கீர்த்திகன், கவிகாந் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — ஜெர்மனி
தொலைபேசி: +492022422765
காந்தி(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41613010918
சாந்தி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41447864164
லீலா — கனடா
தொலைபேசி: +16474601065
சிவானந்தம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41791020530

சனி, 24 டிசம்பர், 2016

திரு முத்துக்குமாரு ஆறுமுகசாமி அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பிறப்பு : 12 சனவரி 1942 - இறப்பு : 28 நவம்பர் 2016
யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும், ஜெர்மனி (Böblingen) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு ஆறுமுகசாமி
.(இளைப்பாறிய உத்தியோகத்தர்- யாழ் ஈழநாடு பத்திரிகை) அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மறைவுச்செய்திக் கேட்டு நேரிலும், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுக்கும், தொலைபேசி மற்றும் இணையவழியூடாக துயரைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதி நிகழ்வில் இரங்கல் உரை கண்ணீர் அஞ்சலிகள் வழங்கித் தொடர்ந்து வந்த கிரியைகள் நேர்த்தியாக நடைபெறவும் அன்னாரின் ஆன்ம சாந்திக்காகப் பிரார்த்தித்த, உதவிகள் பல புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை .27-12-2016. செவ்வாய்கிழமை  அன்று  Cruise Terminal Maasbracht  (tegenover) Havenstraat 20, 6051 CS Maasbracht, Holland எனும் இடத்தில் நடைபெறும்.
 தொலைபேசி. இலக்கம் . 0031 (0) 475 – 461 574
மேலும் 31-12-2016 சனிக்கிழமை  அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை அவரது  தோப்பு  அச்சுவேலி  உள்ள  இல்லத்திலும், Verrein Für Deutsche Schäferhunde , lm Zimmerschlag . 8 ,    71032Böblingen,Germany. எனும் முகவரியிலும், நன்றி நவிலல், மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆறுமுகசாமி சின்னம்மா — ஜெர்மனி தொலைபேசி:+497031224307
மகேந்திராசா மலர்வதனா — ஜெர்மனி தொலைபேசி:+4915221698480
சுந்தரராசா சந்திரவதனா — ஜெர்மனி தொலைபேசி:+491739101091
மதனராசா கனிஷ்ர — கனடா தொலைபேசி:+14169935082
சந்திரராசா சுகந்தினி — ஜெர்மனி தொலைபேசி:+491775715939

அமரர் முத்துக்குமாரு ஆறுமுகசாமி (சாமித்தாத்தா) அவர்களின் ஆத்மாசாந்தி அடைய உற்றார்   உறவினர்கள் 
     நவற்கிரி புத்தூர் உறவுகள் தோப்பு  அச்சுவேலி.உறவுகள் மற்றும் ஜெர்மனி -  கனடா  சுவிஸ் வாழ் உறவுகள் - நண்பர்கள்  இறைவனை பிராத்திக்கின்றோம்  ஓம் சாந்தி .. ஓம் சாந்தி ..ஓம் சாந்தி...


இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 23 டிசம்பர், 2016

மாம்பழம் சந்தியில் சலூனில் திருட முற்பட்ட சிறுவர்கள் இருவர் கைது?

சலூனில் திருட முற்பட்ட சிறுவர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் அரியாலை மாம்பழம் சந்தியில் உள்ள சலூன் ஒன்றில், இன்று (புதன்கிழமை) நண்பகல் வேளையில் குறித்த சிறுவர்கள் இருவரும் திருட முற்பட்டுள்ளனர். இதன் போது சம்பவத்தை நேரில் கண்டவர்கள்  பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து இருவரும் சம்பவ இடத்திலேயே வைத்துக் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட சிறுவர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அதே இடத்தில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் 16 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்றினையும் 50 சி.டி.க்களையும் கடந்த காலங்களில்
 திருடியுள்ளனர்.
நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த  10 வயது மற்றும் 11 வயது சிறுவர்கள் இருவரையும் சிறுவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றார்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பேஸ்புக் தொலைகாட்சி சேவையினை ஆரம்பிக்கவுள்ளது

44re443ewநெட்பிலிஸ் மற்றும் அமெசன் ஆகிய நிறுவனங்களின் தொலைக்காட்சி சேவையினை போன்ற  தொலைக்காட்சி சேவை ஒன்றினை அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம்
 தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான தகவல்களின் அடிப்படையில் அந் நிறுவனம் உரிமங்கள் கொண்ட வீடியோக்களை உருவாக்கக்கூடிய சில நிறுவனங்கள், தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு 
வருகின்றது.
மேலும் நாடகங்கள், விளையாட்டுக்கள் போன்றவற்றினை அடிப்படையாக கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இந்த திட்டத்தின் ஊடாக அறிமுகம் செய்வதற்கு பேஸ்புக் நிறுவனம் 
எண்ணியுள்ளது.
எனினும் இச்சேவையினை பேஸ்புக் கணக்கினூடாக பார்த்து மகிழ முடியுமா என்ற தகவல் குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
விரைவில் மேலதிக தகவல்கள் வெளியாகலாம் என 
எதிர்பார்க்கப்படுகின்றது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 22 டிசம்பர், 2016

மரண அறிவித்தல் திரு சரவணமுத்து பொன்னம்பலம்

மண்ணில் : 15 டிசெம்பர் 1931 — விண்ணில் : 19 டிசெம்பர் 2016
யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட   (மந்திரிமலை - நவக்கிரி) திரு சரவணமுத்து பொன்னம்பலம் அவர்கள் 19-12-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசநாயகம், அன்னம்மா தம்பதிகளின் 
அன்பு மருமகனும்,
பாக்கியலட்சுமி(சின்னக்கிளி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
விஜயானந்தம்(கனடா), பரமானந்தம்(கனடா- Reginos Pizza), சர்வானந்தம்(கனடா), சிவானந்தம்(கனடா- Reginos Pizza), விவேகானந்தா(கனடா- Reginos Pizza), ஜெகானந்தம்(இலங்கை), காலஞ்சென்ற சச்சிதானந்தம் ஆகியோரின் பாசமிகு 
தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், கனகம்மா, நடராஜா, சுப்பிரமணியம், மற்றும் செல்லம்மா(இலங்கை), இராசமணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பத்மநிதி(கனடா), வரலட்சுமி(கனடா), பிறேமா(கனடா), யசிந்தா(கனடா), கலாநிதி(கனடா), சுலோஜனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, கந்தையா(வல்லிபுரம்), ரத்தினம், சந்திராதேவி, நல்லைநாதன், மற்றும் தங்கம்மா(பிரான்ஸ்), சற்குணதேவி, கணேசலிங்கம், தனபாலசிங்கம், லீலாவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நோமிலா, மேகலா, பிரதீப், பிரவீன், பிரபா, தமிழனி, திலீபன், ஜனனி, யசிகன், ஜனுசினி, யனுசன், ஜனா, சங்கர், வசந்தன், ராஜூ, சச்சி, தீபன், சாலினி, ஹாசினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அனுஸ்ரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 20/12/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 21/12/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி: புதன்கிழமை 21/12/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம் செய்யப்பட்து
திகதி: புதன்கிழமை 21/12/2016, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada 
தொடர்புகளுக்கு
சிவா — கனடா
தொலைபேசி: +14167561758
செல்லிடப்பேசி: +14165235795
ஜெயா — இலங்கை
செல்லிடப்பேசி: +94777743114
விஜயானந்தம் — கனடா
தொலைபேசி: +14168364962
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>சனி, 10 டிசம்பர், 2016

உந்துருளி ஒன்று புகையிரதத்துடன் மோதுண்டு ஒரு பெண் பலி !

பாதுக்க – லியன்வல புகையிரத குறுக்கு வீதியில் உந்துருளி ஒன்று புகையிரதத்துடன் மோதுண்டு 48 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்த அவிசாவளை நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்துடன், உந்துருளி மோதுண்டுள்ளதாக காவற்துறை 
தெரிவித்தது.
இந்நிலையில் உந்துருளியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>ஞாயிறு, 4 டிசம்பர், 2016

அறிமுகம் செய்தது மற்றுமொரு வசதியினை யூடியூப் !

காணொளிகளை  ஒன்லைனில் பகிர்ந்துகொள்ளும் வசதியினை தரும் யூடியூப் தளமானது பல வசதிகளையும் பயனர்களுக்கு தருகின்றது.
இவற்றில் நேரடி ஒளிபரப்பினை செய்யும் வசதியும் பிரதானமாகக் காணப்படுகின்றது.
தற்போது இவ் வசதியில் 4K காணொளிகளை  நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய வகையில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வசதி 360 டிகிரி வீடியோக்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் 4K காணொளிகளை  பதிவேற்றும் வசதி தரப்பட்டிருந்த நிலையில் நேரடி ஒளிபரப்பிற்கு 4K வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை பலத்த வரவேற்பைப் பெற்றுவருகின்றது.
இவ் வசதியானது கடந்த டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
செக்கனுக்கு 60 பிரேம்கள் கொண்ட இந்த காணொளிகளை தொழில்நுட்பத்தின் உதவியுடன் இனிமேல் உயர்தரம் கொண்ட நேரடி ஒளிபரப்புக்களை கண்டுமகிழ முடியும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>பூநகரியில் வெட்டி எரித்து புதைக்கப்பட்ட சடலம் மீட்பு!


கிளிநொச்சி – பூநகரி, வாடியடி பிரதேசத்தை அண்மித்த பகுதியில் துண்டுதுண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பூநகரியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 62 வயதுடைய கந்தையா சபாரத்தினம் என்ற விவ சாயியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
வவுனியா – குருமன்காடு பகுதியில் வசித்துவரும் பூநகரியைச் சொந்த இடமாகக் கொண்ட கந்தையா சபா ரத்தினம் என்ற விவசாயி, கடந்த 28 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் பூநகரிக்கு சென்ற நிலையில் தனது கணவன் காணாமல் போயுள்ளதாக அவரது மனை வியால் பூநகரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பிர காரம், துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட பின்னர் குழியொன்றில் புதை க்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் கனேடிய குடியுரிமை உள்ள பூநகரியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட சடலம் குறித்த விசாரணை கிளிநொச்சி நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவ பால சுப்பிரமணியம் முன்னிலையில் இடம்பெற்றதைத் தொடர்ந்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளி நொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 
எடுத்துச் செல்லப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸாருடன் இணைந்து கிளிநொச்சி குற்றத் தடயவியல் பொலிசார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 3 டிசம்பர், 2016

கொழும்பு தெஹிவளை ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்

ஆரம்ப காலம் முதல் மனித சமூகம் இறைவழிபாட்டை தலையாய கடமையாக கடைபிடித்து வருகின்றனர். அதன் வழியில் வந்த இன்றைய சந்ததியினரும் அதனை கடைபிடித்து 
வருகின்றனர்.
வாழ்கையை நெறிப்படுத்தும் வகையிலான சிறந்த வழிகாட்டல்களையும் , சிறந்த பயணத்தையும் கொண்டமைந்த இந்து மதத்தில் பல வழிபாட்டு முறைகள் காணப்படுகின்றன.
ஆகம மற்றும் கிராமிய முறையிலான வழிபாட்டுமுறைகள் இவ்வாறு பின்பற்றப்பட்டு வருகின்றது. எனினும், நாகரிகம் என்னும் பெயரில் உலகமே ஒரு மாறுபட்ட கோணத்தில் சென்றுகொண்டிருக்க, மத கொள்கைகள் மதிப்பற்றதாக பரிணமித்துவிட்டது .
இன்று நவீனம், கணினிமயமாக்கம் என ஓடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் சடங்குகள், மாந்திரீகம், பரிகாரம் என்னும் நிலைப்பாட்டில் ஒரு தரப்பினர் இருக்கத்தான்
 செய்கின்றனர்.
இவ்வாறான மதச் சடங்குகள், பரிகாரம் போன்ற நிகழ்வுகள் கொழும்பு தெஹிவளை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 30 நவம்பர், 2016

மரண அறிவித்தல் அமரர் முத்துக்குமாரு ஆறுமுகசாமி :28:01:16

மலர்வு:12:ஜனவரி:1942: உதிர்வு : 28 நவம்பர்: 2016
யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும், ஜெர்மனி Böblingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு ஆறுமுகசாமி (இப்பாறிய  யாழ் ஈழநாடு பத்திரிகை  உத்தியோகத்தர்)  அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மலர்வதனா, சந்திரவதனா, மதனராசா, சந்திரராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சிதம்பரம்(பூரணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
மகேந்திரராசா, சுந்தரராசா, கனிஷ்ர, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சத்தியா, சிந்து, சோபி, கேதுயன், துசான், ஷாளினி, சந்துறு, சமீறா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, துரைராசா, வேலுப்பிள்ளை, ஆறுமுகம், அன்னம்மா, நாகலிங்கம், மற்றும் செல்லத்துரை, முத்துப்பிள்ளை(பாலம்மா), அன்னப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நன்னித்தம்பி, ஐயாத்துரை, ராசமணி, தம்பிஐயா, நேசமலர், மற்றும் தவமணி, தெய்வநாயகி, வ. செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் 11:30 மணிவரை Waldfriedhof, Maurerner weg-130, 71034 Böblingen, Germany எனும் முகவரியில் நடைபெற்று தொடர்ந்து மு.ப 11:30 மணிமுதல் 02:00 மணிவரை அனுதாப உரை நிகழ்த்தப்படும் அதற்கு பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆறுமுகசாமி சின்னம்மா — ஜெர்மனி
தொலைபேசி: +497031224307
மகேந்திராசா மலர்வதனா — ஜெர்மனி
தொலைபேசி: +4915221698480
சுந்தரராசா சந்திரவதனா — ஜெர்மனி
தொலைபேசி: +491739101091
மதனராசா கனிஷ்ர — கனடா
தொலைபேசி: +14169935082
சந்திரராசா சுகந்தினி — ஜெர்மனி
தொலைபேசி: +491775715939
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>முதல் முறையாக இலங்கை வரலாற்றில் அமெரிக்கா டொலரின் 151 ரூபாக்குமேல்?

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்கா டொலரின் பெறுமதி நேற்றைய தினம் 151 ரூபாவை கடந்துள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய நாணய மாற்று விகித மதிப்புகளில் இந்த விடயம்
 குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய அமெரிக்கா டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 151.07 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் அமெரிக்கா டொலர் ஒன்றின் பெறுமதி 150.59 ரூபாவாக காணப்பட்டது.
இதனால் தொடர்ந்து ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகின்றமையினால் இலங்கைக்கு கொண்டு வரும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவை விலைகள் உயர்வடைவதாக
 சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>செவ்வாய், 29 நவம்பர், 2016

பாரிய விபத்து முறிகண்டியில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

முறிகண்டியில் இடம்பெற்ற இவ் வீதி விபத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்
 தெரியவருவதாவது,
அக்கரைப்பற்றில் இருந்து  யாழ். நோக்கிச் சென்று  கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை மல்லாவியில் இருந்து கீரிமலை சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இன்று காலை ஏழு மணியளவில்  கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் வைத்து முந்திச்செல்ல எத்தனித்த  வேளையே  இவ் விபத்து 
இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் தனியார் பேருந்தில்  பயணித்துக் கொண்டிருந்த  பத்து  ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் அடங்கலாக பதின்நான்கு பேர் படுகாயமடைந்த  நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இருவர் அவசர சிகிச்சைப்  பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை  மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>திங்கள், 28 நவம்பர், 2016

மரண அறிவித்தல் அமரர் முத்துக்குமாரு ஆறுமுகசாமி:28:11:16

 மலர்வு:12:ஜனவரி:1942: உதிர்வு : 28 நவம்பர்: 2016
யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும், ஜெர்மனி Böblingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு ஆறுமுகசாமி (இப்பாறிய  யாழ் ஈழநாடு பத்திரிகை  உத்தியோகத்தர்)  அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மலர்வதனா, சந்திரவதனா, மதனராசா, சந்திரராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சிதம்பரம்(பூரணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
மகேந்திரராசா, சுந்தரராசா, கனிஷ்ர, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சத்தியா, சிந்து, சோபி, கேதுயன், துசான், ஷாளினி, சந்துறு, சமீறா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, துரைராசா, வேலுப்பிள்ளை, ஆறுமுகம், அன்னம்மா, நாகலிங்கம், மற்றும் செல்லத்துரை, முத்துப்பிள்ளை(பாலம்மா), அன்னப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நன்னித்தம்பி, ஐயாத்துரை, ராசமணி, தம்பிஐயா, நேசமலர், மற்றும் தவமணி, தெய்வநாயகி, வ. செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் 11:30 மணிவரை Waldfriedhof, Maurerner weg-130, 71034 Böblingen, Germany எனும் முகவரியில் நடைபெற்று தொடர்ந்து மு.ப 11:30 மணிமுதல் 02:00 மணிவரை அனுதாப உரை நிகழ்த்தப்படும் அதற்கு பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆறுமுகசாமி சின்னம்மா — ஜெர்மனி
தொலைபேசி: +497031224307
மகேந்திராசா மலர்வதனா — ஜெர்மனி
தொலைபேசி: +4915221698480
சுந்தரராசா சந்திரவதனா — ஜெர்மனி
தொலைபேசி: +491739101091
மதனராசா கனிஷ்ர — கனடா
தொலைபேசி: +14169935082
சந்திரராசா சுகந்தினி — ஜெர்மனி
தொலைபேசி: +491775715939
 தொர்புகளுக்கு தொலைபேசிஇலக்கம்  
00497031224307 மருமகன் சுந்தரராஜா (யேர்மன்: Böblingen)

செவ்வாய், 22 நவம்பர், 2016

யாழ் நகரை அண்டிய பகுதிகள் தொடர் மழையால் நீரில் மூழ்கியுள்ள!

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் பருவ மழையைத் தொடர்ந்து வழக்கம்போல யாழ்.நகரை அண்டிய வசந்தபுரம், நித்தியவெளி, சூரியவெளி மற்றும் பொம்மைவெளி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்துள்ளன.
மழை வெள்ளம் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பலர் இடம்பெயர்ந்துள்ளதுடன், மேலும் பலர் தங்க இடம் அற்ற நிலையில் மழை வெள்ளத்துக்கு மத்தியில் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு 
வருகின்றனர்.
வருடந்தோரும் பருவ மழை ஆரம்பித்ததும் இவ்வாறான இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்குவது வாடிக்கையாகிவிட்ட போதும் இதற்கான நிரந்தரத் தீர்வுகாணப்படவோ அல்லது இங்கு குடியிருக்கும் மக்களுக்காக நிரந்தர மாற்று வீடுகளுகளுக்கான ஏற்பாடுகளோ
 மேற்கொள்ளப்படவில்லை.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 18 நவம்பர், 2016

மகிழ்ச்சியான செய்தியை இலங்கை அகதிகளுக்கு 'UNHCR' கொடுத்துள்ளது ?

இலங்கை அகதிகள் 26,615 பேருக்கு மலேசியாவில் தங்கியிருப்பதற்கு ஐ.நா முகவர் அமைப்பு (UNHCR) அங்கீகாரம் அளித்திருப்பதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
மலேசிய பிரதமர் செயலக அமைச்சர் டருக் சேரி சஹிடான் காசிம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் என ஊடகம் ஒன்று செய்தி 
வெளியிட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு தொடக்கம், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையான காலத்தில் உலகம் முழுவதிலும் இருந்து 888,294 அகதிகள் மலேசியாவில் தங்கியிருப்பதற்காக விண்ணப்பித்துள்ளார்கள்.
இவர்களில் 824,419 பேர் மியான்மாரைச் சேர்ந்த அகதிகளாவர். மியான்மாரை அடுத்து, இலங்கை அகதிகளுக்கே அதிகளவில் புகலிடம்
 அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில், இலங்கையைச் சேர்ந்த 26,615 அகதிகளுக்கு மலேசியாவில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து சோமாலியா, பாகிஸ்தான், ஈராக் மற்றும் ஏனைய நாடுகளின் அகதிகளுக்கும் மலேசியாவில் தங்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 17 நவம்பர், 2016

செல்வி அர்ச்சனா செல்லத்துரை டென்மார்க் நாட்டின்விமானியானர்

டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானியான இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான அர்ச்சனா செல்லத்துரை பயணிகளுடனான முதல் பயணம் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தனது பேஸ் புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கனவு மெய்ப்பட்டது.
முதன்மை அதிகாரி எனும் பதிவியுடன் முதல் நாளில் பயணிகளுடன் முதல் பணி. நமது லட்சியத்தை நாம் அடையும்போது கிட்டும் மகிழ்ச்சிக்கு மாற்றே கிடையாது.
பயங்கள் எப்போதும் கடுமையாகவே இருந்தது. இந்த எல்லையை தொடுவதற்கு எனது வாழ்க்கையில் பலவற்றை நான் இழந்திருக்கிறேன்.
நண்பர்கள் விட்டகன்றனர், ஆண்டுகள் பல மறைந்தன, குடும்பத்துடன் செலவிட்ட காலங்கள் மறைந்தன, இளமையும்
 மறைந்துள்ளது.
பல முறை நனையும் கண்களை நானே துடைத்துக்கொள்ள நேர்ந்தது. இருப்பினும் நான் மகிழ்கிறேன், இதுபோன்று எனது வாழ்க்கையில் எப்போதும் நான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என 
அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
புதன், 16 நவம்பர், 2016

ஈழத்தமிழர்களை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது !

இலங்கையில் இருந்து அகதியாக புலம்பெயர்ந்து பப்புவா நியுகினி மற்றும் நவுறு போன்ற தீவுகளில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நியாயமான அகதிகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என அந்நாடு அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி 
கருத்து வெளியிடுகையில்,
அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இது தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அகதிகளுக்கான திட்டத்தில் பப்புவா நியுகினி மற்றும் நவுறு போன்ற தீவுகளில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளை அமெரிக்கா பொறுப்பேற்க தீர்மானித்தது என்று அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய டொனால்ட் டரம்ப இதனை ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்வியெழுந்திருந்த நிலையில், குறித்த திட்டம் அமுல்படுத்தப்படும் என ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
ஆனால் அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாக கருத்து வெளியிட்டுவருகின்றார் என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>வியாழன், 10 நவம்பர், 2016

யாழில் 20 வயது பெண் பகலில் கடத்தல்- தந்தை பெரும் பதற்றம்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில், பட்டப் பகலில் மோட்டார் சைக்கிளில் வந்து ஒருவர் பெண்ணை கடத்திச் சென்றுள்ளார். 20 வயதான அப்பெண்ணின் தந்தையார் பெரும் பதற்றத்தோடு, பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர்
 தன்னை ஒரு இளைஞர் சந்தித்ததாகவும். உங்கள் மகளின் காதலன் நான் என்று தன்னை அறிமுகப்படுத்தியதாகவும் அவர் அவர் தெரிவித்துள்ளார். தனது மகளை கல்யாணம் முடித்து தருமாறும் 
அவர் கேட்டுள்ளார்.
ஆனால் தான் அதனை மறுத்துவிட்டதாக தந்தை தற்போது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழில் ஆவா குழு, கஞ்சா கடத்தல், கள்ள சாரயம் என்று பல விடையங்கள் அரங்கேறிய நிலையில். தற்போது ஆள்கடத்தல் கூட மிக சர்வசாதாரணமாக இடம்பெற்று 
வருகிறது. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 9 நவம்பர், 2016

கூடுதல் விலைகளிள் மருந்துகள்விற்பனையா ? உடனே அழையுங்கள்!

விலை குறைக்கப்பட்டுள்ள மருந்துகளை கூடுதல் விலைகளில் விற்றால் அவை தொடர்பில் அறிவிக்குமாறு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்விலேயே அமைச்சர் இவ்வாறு
 தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டு விலையை மீறி மருந்து விற்பனை செய்யும் மருந்தகங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை வழங்க, சுகாதார அமைச்சினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் 
அறிமுகப்படுத்தப்பட்டன.
இதன்படி, 011 3071073 அல்லது 011 3092269 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்வதன் மூலமோ 011 2686113 என்ற பெக்ஸ் இலக்கத்துக்குத் தகவல் அனுப்புவதன் மூலமோ, மக்கள் தமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>