siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 28 மே, 2017

பாரிய வாகனம் மருதங்கேணிப் பகுதியில் பள்ளத்தில் பாய்ந்து விபத்து

பருத்தித்துறை மருதங்கேணிப் பகுதியில் பாரிய வாகனம் ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மருதங்கேணி சாலையில் குடாரப்பு பகுதியில் பாலம் அமைக்கும் பணி இடம்பெற்று வருகிறது. 
இந்த நிலையில் குறித்த வாகனம் பாலம் அமைக்கும் பள்ளத்தில் வீழ்ந்தே  விபத்துக்குள்ளானது.
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>

அதிகாலையில் யாழ்.நகரில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு`!


யாழ்ப்பாணம் நகர் மாட்­டீன் வீதி­யில் நேற்று அதி­காலை 4.30 மணி­ய­ள­வில் கொழும்­பி­லி­ருந்து பேருந்­தில் வந்து வீட்­டுக்கு நடந்து சென்று கொண்­டி­ருந்த பெண்­ணி­டம் 2 பவுண் சங்­கிலி கொள்­ளை­யி­டப்­பட்­ட­தாக யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு 
செய்­யப்­பட்­டுள்­ளது.
“பணி­யின் நிமிர்த்­தம் கொழும்பு சென்று தனி­யார் பேருந்­தில் யாழ்ப்­பா­ணம் வந்து இறங்­கிய பெண், யாழ்ப்­பா­ணம் முதன்மை வீதி­யி­லி­ருந்து மாட்­டீன் ஓழுங்­கை­யில் 100 மீற்­றர் தூரத்­தி­லி­ருந்த தனது வீட்­டுக்கு கால்­ந­டை­யா­கச் சென்­றுள்­ளார்.
வீட்­டுக்கு அண்­மை­யா­கச் சென்ற நிலை­யில் அவ­ரைத் துவிச்­சக்­கர வண்­டி­யில் வந்த ஒரு­வர் திடீ­ரெனïïïïக் கீழே தள்ளி வீழ்த்­தி­யுள்ளார். பெண் நிலை குலைந்து கீழே வீழ்ந்த போது, அவர் அணிந்­தி­ருந்த 2 பவுண் தங்­கச் சங்­கி­லியை துவிச்­சக்­கர வண்­டி­யில் வந்­த­வர்கள் அறுத்­துக் கொண்டு தப்­பி­யோ­டி­விட்­டார்” என்று முறைப்­பாட்­டில் 
தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
கொள்ளை இடம்­பெற்ற பகு­தி­யில் பொருத்­தப்­பட்­டி­ருந்த மின் விளக்­கு­கள் ஒளி­ர­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. அது தொடர்­பில் உரி­ய­வர்­க­ளுக்கு அறி­வித்­தும் மாதக் கணக்­கில் மின்­வி­ளக்­கு­கள் சீர­மைக்­கப்­ப­ட­வில்லை என்று குற்­றஞ்­சாட் டப்­பட்­டது.  
வணக்கம் ரி ரி என் செய்திகள் >>>

செவ்வாய், 16 மே, 2017

அவசர தகவல் யாழ் குடாநாட்டு மக்களுக்கு ….!

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கையொப்பத்தினை போலியாக இட்டு இடமாற்றம் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் 
கைது செய்துள்ளனர்.
வவுனியா குருமன்காடு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் ரவீந்திரன் (வயது 58) என்பவர் யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
வவுனியாவைச் சேர்ந்த குறித்த நபர் காணாமல் போனோரின் உறவுகளை கண்டெடுத்து தருவதாகவும், இடமாற்றம் மற்றும் வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாகவும் கூறி சுமார் 13 லட்சம் ருபா நிதி மோசடி
செய்துள்ளார்.
அத்துடன் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கையொப்பத்தினை போலியாக இட்டு, இடமாற்றம் செய்து தருவதாக கூறி 4 லட்சம் ரூபாவை நபர் ஒருவரிடம் பெற்றுக்கொண்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் உங்களின் உறவு யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு சாப்பாடு வாங்கிக்கொடுக்க வேண்டும். என்று கூறியும். மகளீர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் இணைப்புச் செயலாளர் என்றும் பாசாங்கு காட்டி ஏமாற்றி வந்துள்ளார்.
குறித்த விடயத்தினை அறிந்து கொண்ட யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 
பதிவு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான விசேட புலானய்வு பிரிவினருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் குறித்த நபர் புலனாய்வு பிரிவினரினால் 
கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, குறித்த நபர் தான் ஆளுநரின் அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகவும், அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் வேலை பார்ப்பதாகவும் கூறி, பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளமையும் 
தெரியவந்துள்ளது.
குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றதாகவும், விசாரணையின் பின்னர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்வாறான மோசடியாளர்கள் தொடர்பாக யாழ் குடாநாட்டு மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 15 மே, 2017

உலகமெங்கும் மீண்டும் இணைய தாக்குதல்? இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரிக்கை

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை (கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை 
ஏற்படுத்தி உள்ளது.
இந்த ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால், இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷியா என கிட்டத்தட்ட 100 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இங்கிலாந்தில் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘மால்வேர் டெக்’ என்னும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், 
ஓரளவு இந்த வைரஸ் தாக்குதலை 
கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதே நேரத்தில் இன்னுமொரு இணைய தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். அந்த தாக்குதல் அனேகமாக இன்று (திங்கட்கிழமை) நடைபெறலாம் என அவர்கள் யூகிக்கின்றனர்.
இங்கிலாந்து உள்துறை மந்திரி அம்பர் ரூத் இதுபற்றி குறிப்பிடுகையில், “இந்தப் பிரச்சினை பெருமளவு சரிசெய்யப்பட்டுள்ளது.
 ஆனால் கம்ப்யூட்டர் வைரசுக்கு எதிராக இன்னும் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.
இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு, கணினியில் கோப்புகளை திறப்பதற்கு 300 டாலர் முதல் 600 டாலர் வரை (சுமார் ரூ.19 ஆயிரத்து 500 முதல் ரூ.39 ஆயிரம் வரையில்) பிட்காயின்களை செலுத்துமாறு கணினி திரையில் தோன்றியதாக தகவல்கள் 
வெளிவந்தன. அந்த வகையில் இதுவரை 22 ஆயிரம் பவுண்டுக்கு அதிகமாக (சுமார் ரூ.18¼ லட்சம்) 3 கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுவரை இப்படி ஒரு இணைய தாக்குதல் நடந்தது இல்லை என்று யூரோபோல் (ஐரோப்பிய சட்ட அமலாக்கல் ஒத்துழைப்பு முகமை) கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 11 மே, 2017

மரணஅறிவித்தல் திரு நடராசா - சிவசுப்ரமணியம்.10.05.17

திரு நடராஜா சிவசுப்பிரமணியம்
அன்னை மடியில் : 20 ஏப்ரல் 1948 — ஆண்டவன் அடியில் : 10 மே 2017
யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சிவசுப்பிரமணியம் அவர்கள் 10-05-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா பறுபதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சபேசன்(சுவிஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,
இராசாத்தி(ஜெர்மனி), அம்பிகைவாசன் மயிலு(இலங்கை), தெய்வேந்திரம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலைவதனா அவர்களின் அன்பு மாமனாரும்,
யோகேந்திரம்(ஜெர்மனி), நகுலேஸ்வரி(இலங்கை), சிவனேஸ்வரி(ஜெர்மனி), கணேஸ், காசிப்பிள்ளை, சிவமணி(சுவிஸ்), அருளம்பலம்(சுவிஸ்), குணபாலசிங்கம்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான பொன்மணி, கிருஷ்ணப்பிள்ளை குணசேகரம், செல்வநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
சபேசன்(மகன்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 11/05/2017, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Alters- & Pflegeheim Lindenhof, Lindenstrasse 72, 9000 St. Gallen, Switzerland 
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 12/05/2017, 10:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Alters- & Pflegeheim Lindenhof, Lindenstrasse 72, 9000 St. Gallen, Switzerland 
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 13/05/2017, 10:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Friedhof Feldli, Feldlistrasse 10/18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 13/05/2017, 02:30 பி.ப — 06:30 பி.ப
முகவரி: Friedhof Feldli, Feldlistrasse 10/18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 10:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Friedhof Feldli, Feldlistrasse 10/18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/05/2017, 02:30 பி.ப — 06:30 பி.ப
முகவரி: Friedhof Feldli, Feldlistrasse 10/18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 15/05/2017, 10:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Friedhof Feldli, Feldlistrasse 10/18, 9000 St. Gallen, Switzerland
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 15/05/2017, 02:30 பி.ப — 06:30 பி.ப
முகவரி: Friedhof Feldli, Feldlistrasse 10/18, 9000 St. Gallen, Switzerland
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 16/05/2017, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Friedhof Feldli, Feldlistrasse 10/18, 9000 St. Gallen, Switzerland
தொடர்புகளுக்கு
தவமணி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41712441225
சபேசன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41712601881
செல்லிடப்பேசி: +41765393346
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 10 மே, 2017

போக்குவரத்து சபைக்கு ஒரு நாளில் 83 மில்லியன் ரூபா வருமானம்!!

உலக தொழிலாளர்கள் தினத்தன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு 83 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் கட்சிகளுக்காக வழங்கப்பட்ட பஸ்களில் மாத்திரம் 58.6 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக அதன் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் பொதுவான பயண நடவடிக்கைகளிலும் கருத்திற் கொள்ள கூடிய வருமானம் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுவாக அரசாங்க விடுமுறை நாட்களில் அல்லது ஞாயிறு தினங்களில் தங்கள் தினசரி வருமானம் 68 மில்லியன் ரூபாய் எனவும் இம்முறை பாரிய அதிகரிப்பு ஒன்று காணப்பட்டுள்ளதாக 
அவர் குறிப்பிட்டுள்ளார்.
மே தின பேரணிக்காக இம்முறை வழங்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை மற்றும் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதற்கமைய இந்த அதிக வருமானம் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 6 மே, 2017

பஸ் நிலையத்தில் அனாதரவாக நின்ற சிறுவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில்

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (04) மதியம் தனியாக நின்ற சிறுவன் ஒருவனை பேருந்து நிலைய நேரக்கணிப்பாளர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டள்ளது.
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் தனியாக நின்று அழுதுகொண்டிருந்த சிறுவன் ஒருவனை வவுனியா சாலையின் இ.போ. ச நேரக்கணிப்பாளர் அழைத்து விசாரித்தபோது வீடு செல்வதற்கு செட்டிகுளத்திலிருந்து தனியார் பேருந்தில் வந்துள்ளதாகவும் தனது பெயர் மயில்வாகனம் சுகாதாரன் 10 வயது எனவும் கிளிநொச்சி அக்கராஜன்குளம் என்று தெரிவித்தார்.
குறித்த சிறுவன் தற்போது பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவில் ஒப்படைக்கப்பட்டள்ளார்.
சிறுவனைப்பற்றிய தகவல் தெரிந்தால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தொடர்பு கொள்ளவும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


இன்றுமுதல் நாட்டில் அடை மழைஎன திணைக்களத்தின் அறிவிப்பு



நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் மாலை 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறித்த திணைக்களம் 
குறிப்பிட்டுள்ளது.
மேல் மாகாணம், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வட மத்திய மற்றும் தென் மாகாணத்தில் 75 மில்லி மீற்றர் அளவு கடுமையாக மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பல மாதங்களாக இலங்கையில் கடும் வறட்சி நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



மரணஅறிவித்தல் திருமதி வள்ளிப்பிள்ளை செல்லத்துரை,04.05.17

பிறப்பு : 1 ஏப்ரல் 1917 — இறப்பு : 4 மே 2017
யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட வள்ளிப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 04-05-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
மங்கையற்கரசி(நல்லூர்), காலஞ்சென்ற பாலசிங்கம்(சுன்னாகம்), குலசிங்கம்(கனடா), குணசிங்கம்(லண்டன்), பகீரதி(கனடா), சத்தியேஸ்வரி(நல்லூர்), யோகசிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவஞானம்(நல்லூர்), இரத்தினேஸ்வரி(சுன்னாகம்), புஸ்பராணி(கனடா), பத்மாவதி(லண்டன்), ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), பாலசிங்கம்(நல்லூர்), கலாநிதி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
ஞானரூபன் மாலினி(நல்லூர்), கஜன்(கனடா), ஜனா(கனடா), ஆயன்(லண்டன்), அரண்(லண்டன்), அனிஜன்(நல்லூர்), நிதர்ஜன்(நல்லூர்), சுரேஸ் ஜான்சி(சுவிஸ்), றெனிஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திருமால்(நல்லூர்), ஹெலி(கனடா), ரதியா(சுவிஸ்), அமிர்தா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
வீட்டு முகவரி: 
பண்டாரக் குளம் மேற்குவீதி, 
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
_ — இலங்கை
செல்லிடப்பேசி: +94774677577
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 4 மே, 2017

யாழ் மயி­லிட்டி கிணற்­றி­ல் வெடி­பொ­ருள்­கள் மீட்பு!


அண்­மை­யில் விடு­விக்­கப்பட்ட மயி­லிட்டி வடக்­குத் துறை­யில், கிணற்­றி­லி ­ருந்து பெரு­ம­ளவு வெடி பொருள்­கள் நேற்று மீட்­கப்­பட்­டுள்­ளன. 
இன்­றைய தின­மும் வெடி­பொ­ருள் மீட்­புப் பணி தொட­ரும் என்று 
தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 
மீள்­கு­டி­ய­மர்­வுக்­காக வீட்­டுக் கிணற்­றைத் துப்­பு­ரவு செய்­த­போதே, இந்த வெடி­பொ­ருள்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. 
3 ஆயி­ரம் துப்­பாக்கி ரவை­கள், 15 கைக்­குண்­டு­கள், அடை­யா­ளம் காணப்­ப­டாத குண்­டு­கள் 20 என்­பன நேற்று மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கிணற்­றி­னுள் இன்­ன­மும் வெடி­பொ­ருள்­கள் காணப்­ப­டும் நிலை­யில், அவற்றை மீட்­கும் பணி இன்று தொட­ரும் என்று
 பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 2 மே, 2017

மரணஅறிவித்தல் திருமதி சரவணமுத்து மகேஸ்வரி 30.04.17

தோற்றம் : 27 ஓகஸ்ட் 1938 — மறைவு : 30 ஏப்ரல் 2017
யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சரவணமுத்து அவர்கள் 30-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி வைரமுத்து தம்பதிகளின் 
அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு 
மனைவியும்,
தெய்வநாயகி, பத்மலோசி(சுவிஸ்), தெய்வராணி(சுவிஸ்), கேதீஸ்வரி  (இலங்கை) நல்லநாதன்(சுவிஸ்), சிவனேசன்(சுவிஸ்), சோதிநாதன்(கனடா), கிருபா(கனடா) ஆகியோரின் 
அன்புத்தாயாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், யோகரத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விஐயராஐன், சிவகுருநாதன், முரளிதரன், உமா, கோசலா, தவராசா, சுயிதா, வியிதா, சாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவபாக்கியம்(சுவிஸ்), ராசமலர்(இலங்கை) ஆகியோரின்
 அன்பு மைத்தினியும்,
சஐந்தா, பாலசஐந்தன், லசந்தன், சிவறஞ்சித், நிவெஸ்திகா, நிருத்திகா, நிவேதன், சரண்யா, வாசன், வாகினி, விசாகன், டிலக்சி, கேசவன், பிரவீன், சாரங்கன், கபின், லதுஐன், நிருஷன் ஆகியோரின் 
அன்புப்பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2017 புதன்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் சிறுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி காலயன்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
யோகரத்தினம்(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
நாதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41412404518
சிவனேசன்  (சிவன்)— சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41435586419
செல்லிடப்பேசி: +41793543351
தெய்வராணி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41434999710
யோகரத்தினம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41443026564
யோகரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779359548
தெய்வநாயகி — இலங்கை
தொலைபேசி: +9421790378
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>