siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 29 பிப்ரவரி, 2016

யாழ் நீதிபதி இளஞ்செழியன் கணவரை தூக்கில்இடத்தீர்ப்பளித்துள்ளர் ?

மனைவியை கோடரியால் அடித்து கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை குறித்த வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09ம் திகதி திருநெல்வேலி பாற்பண்ணை வீதியில் உள்ள வீட்டில் வைத்து நாகராசா சிவசீலன் என்பவர் தனது மனைவியான சிவசீலன் யேசுதா (வயது 28) வை கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
மதுபோதையில் தினமும் மனைவியை துன்புறுத்தி வந்த கணவர் சம்பவ தினத்தன்று ஆத்திரம் தாங்க முடியாமல், தனது மனைவியை கோடரியால் வெட்டிக் காயம் ஏற்படுத்தியுள்ளார். யாழ்.போதனா 
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்ததுடன், பொலிஸார் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். விளக்கமறியலில் இருந்த அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிராக கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றில்
 இடம்பெற்று வந்தது.
மேற்படி வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த நபருக்கு மரண தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு .யாழில்.மாணவி தற்கொலை!!!

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காட்டியமையால், அதனை ஏற்க மறுத்த பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நல்லூர் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் தரம் 11 ல் கல்வி கற்கும் நல்லூர் கொண்டலடி வைரவர் ஆலயத்திற்கு அண்மையாகவுள்ள ஐங்கரன் அனுசியா (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை 
செய்துள்ளார்.
நேற்று மாலையில் வீட்டில் யாரும் அற்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாகவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவருடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

அரசாங்கம் அம்பியூலன்ஸ் சேவையை தனியார் மயப்படுத்தும் திட்டம் முன்னெடுப்பு!

அம்பியூலன்ஸ் சேவையை தனியார் மயப்படுத்தும் திட்டத்தினை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சுகாதார சேவையை தனியார் மயப்படுத்தும் திட்டத்தின் ஒரு அங்கமாகவே தாம் இதனைக் கருதுவதாகவும் அவர் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
அம்பியூலன்ஸ் சேவையை இந்தியாவிலுள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்குவதன் ஊடாக இந்த தனியார் மயப்படுத்தல் திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது இலவசமாக பெற்றுக் கொள்ளப்படுகின்ற இந்த சேவை எதிர்வரும் காலங்களில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் 
கூறியுள்ளார்.
இதனால் இந்த திட்டத்திற்கு எதிராக மக்கள் ஒன்று திரள வேண்டும் என முன்னிலை சோஷலிஸக் கட்சி அழைப்பு 
விடுத்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 25 பிப்ரவரி, 2016

ஹரிஷ்ணவியின் படுகொலை: அயல்வீட்டு குடும்பஸ்தர் கைது !

படுகொலை செய்யப்பட்டு வவுனியா, உக்குளாங்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது மாணவியின் கொலை தொடர்பில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் அயல் வீட்டில் வசித்து வந்தவரான 35 வயதுடைய பாலசிங்கம் ஜனர்தன் என்ற குடும்பஸ்தரே விசாரணைகளுக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர 
உறுதிப்படுத்தினார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை டி.என்.ஏ.பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் ஊடாக நடவடிக்கை எடுக்க பொலிஸார் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். டி.என்.ஏ. சோதனைகளை முன்னெடுக்க தேவையான மூலக் கூறுகள் சாட்சியாக ஏற்கனவே பெறப்பட்டுள்ள நிலையில் இந்த சோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி கெ.ஹரிஸ்ணவி (வயது 14) கடந்த செவ்வாய்கிழமை (16) தனது வீட்டில் தூக்கில் தொங்கியிருந்த நிலையில் சடலமாக பிற்பகல் 2.15 மணியளவில் மீட்கப்பட்டார். தாயார் தொழிலுக்கும் சகோதரர்கள் பாடசாலைக்கும் சென்றிருந்த நிலையில் தனிமையில் இருந்த மாணவி 2.15 மணியளவில் தாயார், சகோதாரர்கள் பாடசாலை 
முடிந்து வந்த போது 
தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பது அவதானிக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு மீட்கப்பட்டார். இந் நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவினர் முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளிலேயே சந்தேகத்தின் இன்று சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

கேரட் சாப்பிட்டால் ஏற்படும் ஐந்து அற்புதங்கள்?

நம் தமிழ்நாட்டில் அன்றாடம் எளிதில் கிடைக்கும் காய்கறிகளுள் ஒன்று கேரட். ஆனால் கேரட்டின் முக்கியத்துவம் தெரியாமல் பலர் கேரட்டை சாப்பாட்டில் புறக்கணிப்பது உண்டு. கேரட் சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
1. கண் பார்வை அதிகரிக்கும்
கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது. இதனால் இரவு நேரத்திலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் உங்களை அண்டாது.
2. என்றும் இளமையாக
கேரட்டில் இருக்கும் இந்த பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக வயதான தோற்றம் மறையும். 25 வயதிலேயே வயதான தோற்றம் வருகிறது என வருந்துபவர்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வரலாம். உங்கள் மேனி எப்போதும் பளபளப்பாக இருக்க கேரட் சாப்பிடுங்கள்.
3. மாரடைப்புக்கு குட்பை
கேரட்டில் பீட்டா கரோட்டின் மட்டுமின்றி ஆல்பா கரோட்டின், லுட்டின் ஆகியவையும் இருக்கின்றன. கேரட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ஊளைச்சதை குறையும், கொழுப்பு குறைவது மட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக பசியும் அடங்கும். இதனால் இதய வால்வுகளில் கொழுப்பு அடைக்காமல் மாரடைப்பு முதலான இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகிறது.
4. புற்று நோய்க்கு 
கேரட்டில் பால்காரினால், பால்காரின்டியோல் ஆகியவை இருக்கிறது. இவை புற்று நோய் வருவதற்கான வைபுகளை குறைக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கின்றனர். எனவே நுரையீரல் புற்றுநோய், பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.
5. பள பள பற்கள்
கேரட் சாப்பிடுவதனால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும். உமிழ்நீர் அதிகம் சுரப்பதின் காரணமாக பற்களில் பாக்டீரியா போன்றவை வளருவது தடுக்கப்படும். கொஞ்சம் கடினமாக இருக்கும் கேரட்டை நன்றாக கடித்து சாப்பிட்டால் பற்கள் வலுவடைவதோடு பற்களில் உள்ள அழுக்கும் நீங்குகிறது.
இனி தினமும் ஒரு கேரட் கடிக்கலாம் தானே!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

ஐங்­க­ர­நேசனிற்கு மல்­லாகம் நீதி­மன்றம் பிடியாணை!

சுன்­னாகம் நிலத்­தடி நீரில் எண்ணெய் கலந்­தது தொடர்­பான விட­யத்தில் வட­மாகாண சபையால் பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­தில்லை என விவ­சாய அமைச்சர் சார்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்­பாக ஆய்வு அறிக்கை வெளியிட்­டது ஏன் என மல்­லாகம் நீதி­மன்றம் கேள்வி 
எழுப்­பி­யுள்­ளது.
இது தொடர்பில் தெரிய வரு­வ­தா­வது,சுன்­னாகம் உள்­ளிட்ட பகு­தி­க­ளில்­ உள்ள தண்­ணீரில் எண்ணெய் கலந்­தது தொடர்­பான வழக்கு நீதிவான் ஏ.ஜுட்சன் முன்­னி­லையில் நேற்று முன்­தினம் மல்­லா­கத்தில் இடம்­பெற்­றது. கடந்த தவ­ணை­யின்­போது நேற்­று­முன்­தினம் 
ஆஜ­ரா­க­வேண்­டிய விவ­சாய துறை
அமைச்சர் பொ.ஐங்­க­ர­நேசன் நீதி­மன்றில் சமூ­க­ம­ளிக்­க­வில்லை. அமைச்சர் சார்­பாக உத்­தி­யோ­கத்தர் ஒருவர் சமூ­க­ம­ளித்­தமை தொடர்­பாக அதனை ஏற்க மறுத்து நீதி­மன்று உத்­தி­யோ­கத்­தரை எச்­ச­ரிக்கை செய்­த­துடன் ஐங்­க­ர­நே­ச­னுக்கு பிடி­யாணை பிறப்­பிக்­க­வுள்­ள­தா­கவும் 
தெரி­வித்­தது.
இதன்­போது ஐங்­க­ர­நேசன் சார்பில் சட்­டத்­த­ரணி வர­த­ராசா முன்­னி­லை­யானார். பாதிக்கப்­பட்ட மக்­க­ளுக்குத் தண்ணீர் வழங்­க­வேண்­டிய கடப்­பாடு வட­மா­காண சபைக்கு இல்லை. அது மத்­திய அரசின் பொறுப்பு.
மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் தான் வட­மா­காண சபை வழங்­கி­யது என்று சட்­டத்­த­ரணி வர­த­ராசா தெரி­வித்­த­மை­ தொடர்­பாக நீதி­மன்று கேள்வி 
எழுப்­பி­யுள்­ளது.
 மத்­திய அரசு பொறுப்பு என்றால் எதற்­காக நிபு­ணர்­களை நிய­மித்து ஆய்­வு­களை மேற்­கொண்­டனர்? அதனை ஏன் வெளிப்­ப­டுத்­தினர்? இதற்­கான பதில்­களை அடுத்த தவ­ணையில் விவ­சாய அமைச்சர் நீதி­மன்றில் நேரில் தெளி­வு­ப­டுத்­த­வேண்டும் என உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.
குறித்த வழக்­கா­னது எதிர்­வரும் 17ஆம் திக­திக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு அன்றைய தினம் விவசாய அமைச்சர் மற்றும் நீர்வளச் சபையின் பொறு-ப்ப-திகாரி இருவரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தர விடப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 20 பிப்ரவரி, 2016

சங்கிலியை திருட முயன்ற மாணவவன் ஆசிரியையின் துனிச்சலால் முறியடிப்பு!

திருநெல்வேலி கெற்றப்போல் சந்தி பகுதியில் ஆசிரியையின் சங்கிலியை திருட முற்பட்ட மாணவனுடன் போராடிய ஆசிரியை தனது சங்கிலியை மீட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றதுடன், இந்த போராட்டத்தில் குறித்த ஆசிரியை 
காயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியர் ஒருவர் நேற்று காலை 7.45 மணியளவில் பாடசாலைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த 
நிலையில், 
சீருடை அணிந்த இளைஞன் ஒருவனும், வேறு ஒரு இளைஞனும் மோட்டார் சைக்கிளில் வந்து குறித்த ஆசிரியரின் சங்கிலியை அறுக்க முயன்றுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 18 பிப்ரவரி, 2016

யாழ்.குடாநாட்டு வான்பரப்பில்இன்றும் வட்டமிட்ட கிபிர்!

யாழ்.குடாநாட்டில் 7வருடங்களின் பின்னர் கிபிர் போர் விமானம் இன்றும் 2ஆவது முறையாக அதிகாலை 6.30 மணியளவில் யாழ்.குடாநாட்டை  மும்முறை வட்டமிட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியது.
நேற்று முன்தினம் கூட பிற்பகல் 2.10 மணியளவில் இந்த கிபிர் விமானம் யாழ்.குடாநாட்டு வான்பரப்பில் பேரிரைச்சலுடன் பறந்தது. அன்று பெரிதாக மக்கள் மத்தியில் அச்சமான நிலைமை தோன்றவில்லை 
ஆனால் இன்றைய தினம் 
யாழ்.குடாநாட்டு வான்பரப்பில் மும்முறை  கிபிர் போர் விமானம் வட்டமிட்டதால் மக்கள் மத்தியில்  பதற்றமான சூழ்நிலை உருவாகியமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 17 பிப்ரவரி, 2016

நாட்டில் கையடக்கத் தொலைபேசிக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் கையடக்கத் தொலைபேசிக் கட்டணத்தை செக்கனுக்கு 0.03 சத அதிகரிப்புடன் நிமிடத்துக்கு 1 ரூபா 80 சதமாக கட்டணத்தை அதிகரித்துள்ளது.
சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் 1 ரூபா 50 சதமாக ஒரு நிமிடத்துக்கான கட்டணத்தை 
அதிகரித்துள்ளது.
இந்த அதிகரிப்புடன் ஒரு தொலைபேசி பாவனையாளன் பல்வேறு வரிகளுடன் சேர்த்து 1 ரூபா 94 சதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும்.
இருப்பினும், ஏற்கனவே காணப்பட்ட பக்கேஜ் இணைப்புக்கான கட்டணம் இதுவரை அதிகரிக்கப்படவில்லையெனவும்
 தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், ஒரே தொலைபேசி இணைப்பு நிறுவனங்களுக்குள்ளும், வெளியார் தொலைபேசி இணைப்பு நிறுவனங்களுக்கிடையிலும் பேசும் கட்டணம் சமப்படுத்தப்பட்டுள்ளதாகவும்
 குறிப்பிடப்படுகின்றது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

பருத்தித்துறையிலிருந்து 773 இலக்க பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்

மூளாய், பொன்னாலைக்கான 773 ஆம் பாதை இலக்க பஸ் சேவை கடந்த 30 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது.
தினமும் காலை 5.45 மணிக்கும் பிற்பகல் 2.15 மணிக்கும் பருத்தித்துறையிலிருந்தும் காலை 8 மணிக்கும் மாலை 4.30 மணிக்கும் பொன்னாலையிலிருந்தும் இருசேவைகள் இடம்பெற்று வருவதாக பருத்தித்துறை இ.போ.ச. பணிமனை முகாமையாளர் 
கே.கந்தசாமி 
தெரிவித்தார். கடந்த 1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தினால் தடைப்பட்டிருந்த இச் சேவையை மீள ஆரம்பிக்குமாறு பயணிகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து 30 ஆண்டு காலஇடைவெளிக்குப் பின்னர் இச் சேவை மீளவும்
 ஆரம்பிக்கப்பட்டுள்ளது
. இச்சேவையில் ஈடுபடும் பஸ் வண்டி பருத்தித்துறையிலிருந்து மந்திகை, நெல்லியடி, குஞ்சர் கடை, உடுப்பிட்டி, தொண்டைமானாறு, அச்சுவேலி, புத்தூர், சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை, மாவிட்டபுரம், கீரிமலை, சேந்தாங்குளம், விளான், பண்டத்தரிப்பு, சித்தன்கேணி, சுழிபுரம், மூளாய் ஊடாக பொன்னாலை வரை இடம்பெற்றறு, 
வருகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 13 பிப்ரவரி, 2016

வீட்டை உடைத்து பெறுமதியான பணம், நகை கொள்ளை!!!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராமநாதன் வீதி நாச்சிமார் கோயில் பகுதியில் உள்ள வீட்டை உடைத்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம், நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
வெள்ளிக்கிழமை (12) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் உடைத்து வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். 
வீட்டில் இருந்த 
5 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பணம், நகை என்பன திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

விமானம் நடுவானில் கோளாறானது : விமானத்தின் போக்கில் சென்ற விமானி

பிரான்சில் சிறிய ரக விமானத்தில் பயணித்த போது, என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ரோட்டில் தரையிரங்கியுள்ளது.
40 வயதுடைய விமானி ஒருவர், சிறிய ரக விமானம் ஒன்றினை, Seine-et-Marne என்ற பிரெஞ்சு துறையில் இருந்து எடுத்துக்கொண்டு 
சென்றுள்ளார்.
அப்போது, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து உருண்டு, தாறுமாறாக ஓடியுள்ளது.
விமானத்தின் போக்கில் சென்ற விமானியும் என்ன செய்வதென்று தெரியாமலிருக்கையில், Giremoutiers மற்றும் Mouroux இரண்டிற்குமிடையேயான ரோட்டில் தரையிரங்கியது.
ஆனால், தீவிர காயங்கள் எதுவும் ஏற்படாமல் விமானி உயிர்பிழைத்துள்ளார், புத்தாண்டு அன்று நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சனி, 6 பிப்ரவரி, 2016

சிறுவர்க்கு பிச்சை எடுத்து உதவும் பெரியவர்!!!

பணம் இருந்தால் மட்டும் போதாது, அதனைக் கொண்டு பிறருக்கு உதவி செய்வதற்கு நல்ல மனம் வேண்டும்.
பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்களை கடவுளுக்கு இணையானவர்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.
குஜராத் மாநிலத்தின் மெக்னசா என்ற சிறு கிராமத்தில் உள்ள அங்கன்வாடிக்கு செல்லும் கிம்ஜிபாய் என்ற முதியவர், அங்கு படித்துவரும் குழந்தைகளுக்கு பாடப்புத்தகம், நோட்டுகள் பேனா, பென்சில்கள் போன்றவற்றை வாங்கிக்கொடுப்பது வழக்கம்.
இந்த முறை அங்கன்வாடிக்கு சென்ற முதியவர், தங்கத்தோடு வாங்கிக்கொண்டு சென்றுள்ளார், அந்த தங்கத்தோட்டினை 10 குழந்தைகளுக்கு அன்போடு வழங்கியுள்ளார்.
இவர், அங்கு செல்வதற்கு முன்பாக 10 குழந்தைகளை தெரிவு செய்துவைக்குமாறு அங்கிருக்கும் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார், அதன்படியே தெரிவு செய்யப்பட்டிருந்த அந்த குழந்தைகளுக்கு தங்கத்தோட்டினை வழங்கியுள்ளார்.
இவ்வளவுக்கும் அவர் ஒன்றும் செல்வந்தர் கிடையாது, பிச்சை எடுப்பதில் கிடைக்கும் பணத்தினை வைத்து கடந்த 13 ஆண்டுகளாக தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
இந்நபரின் உதவி மனப்பான்மையை புரிந்துகொண்டு, நகைக்கடைக்காரரும் ரூ.13 ஆயிரம் மதிக்கத்தக்க தங்கத்தோட்டின் விலையை 3 ஆயிரமாக குறைத்து ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை
 செய்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>புதன், 3 பிப்ரவரி, 2016

தனியார் பேருந்து ஓட்டோவை மோதியதால் :மூவர் படுகாயம்!!!

யாழில் தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியை மோதித்தள்ளியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்து யாழ்.போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் பயணித்த பாடசாலை மாணவன்  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று பி.ப 1மணியளவில் பலாலி வீதி திருநெல்வேலி  பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
யாழ்ப்பாணத்திலருந்து புன்னாலைகட்டுவன் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தை முந்திச்செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து 
இடம்பெற்றுள்ளது.
தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக  எதிரே வந்த முச்சக்கர வண்டியை அருகிலிருந்த தனியார் வங்கி கட்டடத்துடன் மோதியுள்ளது.
மேலும் இந்த விபத்தில் என்.டி.பி வங்கியின் ஏ.ரி.எம் இயந்திரம் கடுமையாக சேதமடைந்துள்ளது.
மேலும் குறித்த  சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தனியார் பேருந்து சாரதியை கைது செய்தததுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>