siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

அடிக்கடி உங்கள் கண்கள் துடிக்கிறதா இது நல்லதா கெட்டதா

நம்முடைய கண்கள்  ஒரு சில சமயங்களில் வழக்கத்திற்கு மாறாக நம்முடைய கண்கள் திடீரென துடிக்க ஆரம்பிக்கும். எந்த ஒரு விஷயமும், வழக்கத்திற்கு மாறாக நடக்கும் பொழுது நமக்கு ஒரு பதட்டம் வந்து விடுகிறது. இந்த வகையில் கண்கள் துடித்த உடன் என்னவாக இருக்கும்? என்ன நடக்கப் போகிறது? என்கிற ஒரு உள்ளுணர்வு மனதை குழப்பிக் கொண்டிருக்கும். அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் கண்கள் துடிப்பது நல்லதா? கெட்டதா? எப்படி துடித்தால், என்ன பலன்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
நம்முடைய கண்கள் துடிக்கும் பொழுது, நம்மையும் மீறி நம்முடைய உள்ளுணர்வு ஏன் இப்படி இப்போது துடித்தது? என்று ஒரு கேள்வி கேட்கும். அறிவியல் ரீதியாக சரியான தூக்கமின்மை காரணமாக பலருக்கு இது போல கண்கள் துடிப்பதாக கூறப்படுகிறது. அதிக நேரம் வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இது போல கண்கள் அடிக்கடி துடிக்கும். மேலும் மூளை தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களும் இதை சில சமயங்களில் எதிர்கொள்கின்றனர்.
மூளைக்கும், கண்களுக்கும் நிறையவே தொடர்பு உள்ளன. எனவே மூளையில் இருக்கும் பிரச்சனைகள் கூட, கண் துடிப்பதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என்பது அறிவியல் கூற்று ஆகும். ஆனால் ஆன்மிக ரீதியாக கண்கள் துடிப்பதற்கு பல்வேறு பலன்கள் கூறப்பட்டுள்ளது. அதில் வலது கண் துடித்தால் நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் நடக்கும் என்பது பொருளாகும். இடது கண் துடித்தால் மனதில் கவலை வரப் போகிறது என்று அர்த்தமாகிறது. ஏதோ ஒரு விஷயம் உங்களை அழுத்திக் கொண்டிருக்கிறது என்பதும் அர்த்தம்.
வலது கண்ணில் இருக்கும் இமை மட்டும் துடித்தால் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு நல்ல செய்தி ஒன்று வர இருக்கிறது என்பதை அறிகுறியாக உணர்த்துகிறது. இடது கண் இமை மட்டும் துடித்தால் மனதில் கவலை இருக்கிறது அல்லது கவலை வரப்போகிறது என்பதை குறிக்கிறது எனவே இடது கண்ணை விட, வலது கண் நல்ல பலன்களைக் கொடுக்கிறது. வலது கண்ணில் இருக்கும் வலப்புருவம் துடித்தால் அங்கு திடீர் பண வரவு உண்டாகும் என்று எடுத்துக் கொள்ளலாம்.
அதுவே இடது புறத்தில் இருக்கும் புருவம் துடித்தால் குழந்தை பிறப்பு, உங்களுக்கு அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கு உண்டாகும் என்று எடுத்துக் கொள்ளலாம். அதாவது மழலையின் குரல் கேட்கும் வாய்ப்புகள் அமையும் மேலும் கூடவே கவலைகளும் இருக்கும் என்று 
கூறப்படுகிறது. கண்கள், புருவம் மட்டுமல்லாமல் புருவ மத்தியில் இருக்கும் இடம் திடீரென சிலருக்கு துடிக்கும். அப்படி இருந்தால் உங்களுக்கு பிரியமானவர்களுடன் இருக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள்.
கண்களின் நடுப்பாகத்தில் இருக்கும் இடம் ஆனது திடீரென துடித்தால் குடும்பத்தினரை அல்லது மனதிற்கு பிடித்தவர்களை பிரிந்து இருக்கக் கூடிய சூழ்நிலை வரலாம். இப்படி கண்கள், கண்களை சுற்றியுள்ள பாகங்கள், புருவம் போன்ற அமைப்புகள் திடீரென வழக்கத்திற்கு மாறாக துடித்தால்
 இந்த பலன்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது
 எந்த அளவிற்கு பலன்களை கொடுக்கும் என்பது யாருக்கும் தெரியாது, ஆனால் இனி உங்கள் கண் துடித்தால் என்ன பலன்? என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



சனி, 26 பிப்ரவரி, 2022

கிளிநொச்சியில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கிளிநொச்சியில் பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.இந்நிலையில் 2 நாட்களாக தமது வாழ்வாதாரம் இழந்த நிலையில் இருப்பதாக முச்சக்கரவண்டி சாரதிகள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக சாரதிகள் மேலும் தெரிவிக்கையில்,எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள்
 தட்டுப்பாடு காரணமாக
தனியார் விற்பனை நிலையங்களில் அதிக விலைக்கு எரிபொருள் கொள்வனவு செய்து முச்சக்கரவண்டியினை வாடகைக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், அப்படி செலுத்தப்படும் ஆயில் முன்னைய விட அதிகமான வாடகை பணம் அறவிடவேண்டிய நிலைக்கு முச்சக்கரவண்டியின் சாரதிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே முற்சக்கரவண்டியில் தற்பொழுது மக்கள் முச்சக்கரவண்டியில் செல்ல முடியாத 
நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் முச்சக்கரவண்டி சாரதிகள் தமது வாழ்வாதாரத்தினை இழந்த நிலையிலுள்ளதுடன், இவ்வாறான நிலை தொடருமாயின் தமது முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலை விட்டு வேறு ஏதும் தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என சாரதிகள் கூறுகின்றனர்.இந்நிலையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரிபொருளை மீண்டும் விரைவாகப் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
 என தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

கொடூரமாக யாழில் கொலை செய்யப்பட்ட பெண்! சந்தேகநபர் வாக்குமூலம்

மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிப பெண்ணை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றேன் என யாழில் தனிமையிலிருந்த வயோதிப பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பத்தலைவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் இராசாவின் ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்த வயோதிப பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது – 72) என்ற வயோதிப பெண்ணே கொலை
 செய்யப்பட்டார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



நாட்டில் இன்னும் ஒரு நாட்களில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலையில் பாரியமாற்றம்


உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் தங்கத்தில் விலை என்பன எகிறியுள்ளது. அதன்படி கச்சா எண்னெய் பரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர் என்றளவில் உயர்ந்துள்ளதுடன் தங்கத்தின் விலையும் 
அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையின் ஒரு பரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜனவரி 31ஆம் திகதி 91.03 டொலருக்கு வர்த்தகமானது. இந்த நிலையில் தற்போது பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பரல் 98 டொலரில் இருந்து வந்தது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் கச்சா எண்ணெய்யின் விலை பரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டொலர் என்றளவில் உயர்ந்துள்ளது.
அதேவேளை கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் கச்சா எண்ணெய்யின் விலை 100 அமெரிக்க டொலரைத் தொட்டுள்ளதனால், உலகளவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயரும் என்றே கூறப்படுகிறது. கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கச்சா எண்ணெய் சந்தையில் சுணக்கம் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை, இதனை வாய்ப்பாக சரியாகப் பயன்படுத்திக்
 கொண்டுள்ளது .
இது ஒரு பரலுக்கு 115 டொலர் வரை கூட உயர வாய்ப்பிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் வெகுவாகக் குறைந்த போதும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இந்நிலையில் இந்தமுறை இந்த விலையேற்றம் இந்திய எரிபொருள் சந்தையில் என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்
என நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதேவேளை, பங்குச்சந்தையிலும் பெரும் சரிவு ஏற்பட்டதுடன் தங்கத்தின் விலை 1.2 வீதத்தால் அதிகரித்தது. மேலும் மின்னிலக்க நாணயச் சந்தையும் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளதுதுடன் Bitcoin விலை 36,000 அமெரிக்க டொலருக்குக் கீழ், ஒரு மாதம் காணாத அளவு சரிந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



புதன், 23 பிப்ரவரி, 2022

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பற்றிய செய்தி

நாட்டில் கடந்த சில நாட்களாக எரிவாயு, அரிசி, சீனி, பனை, சீமெந்து ஆகியவற்றின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்தார்.
தற்போது எரிவாயு, சீனி மற்றும் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், விலை உயர்வாகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பால் மா மற்றும் சீமெந்து பிரச்சினை தீர்க்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இந்த இரண்டு பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து வரிகளையும் நீக்கி பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் 
அரசு எடுத்துள்ளது என்றார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வவுனியா வைத்தியசாலையின் கவனகுறைவால் பறிபோன குழந்தையின் உயிர்

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத சிசு ஒன்று மரணமடைந்துள்ளதுடன், வைத்தியசாலையின் தவறே குழந்தையின் இறப்புக்கு காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்
.22-02-2022.அன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பம் ஒன்றின் 9 மாதக் குழந்தைக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில்
 22-02-2022.அன்று 
இரவு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதன்போது குழந்தையை கோவிட் விடுதிக்கு கொண்டு சேர்த்து பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த குழந்தைக்கு கோவிட் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் 5 ஆம் விடுதியில் அனுமதித்து சிகிச்சையளித்துள்ளனர்.
இன்று (22.02) காலை வரை பெற்றோருடன் கதைத்த குழந்தையின் உடலில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டதுடன், குழந்தை மரணமடைந்துள்ளது. குறித்த குழந்தையின் மரணத்திற்கு வைத்தியசாலையின் தவறே காரணம் என தெரிவித்து பெற்றோர் வைத்தியசாலை விடுதியில் 
முரண்பட்ட நிலையில் பொலிஸார் அவர்களை வெளியேற்றியிருந்தனர். இந்நிலையில் தமது குழந்தையின் மரணத்திற்கு நீதி 
வேண்டும் என வவுனியா
பொலிசில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதுடன், வைத்தியசாலை நிர்வாகத்திடமும் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் தவசிகுளம் பகுதியை சேர்ந்த டினோஜன் அக்சயன் என்ற 9 மாத குழந்தையே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் பாதிக்கப்பட்ட பெற்றோருடன் கலந்துரையாடியதுடன், குறித்த குழைந்தையின் மரணம் தொடர்பாக உரிய விசாரணைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

நாடு அபாய கட்டத்தில் எரிபொருள்களுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பு.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதன் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளதனால் நீண்ட வரிசையில் பவுசர்கள் எரிபொருள் கொள்வனவுக்காக காத்திருக்கின்றன. நாட்டில் டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதே இதற்குக்
 காரணம் ஆகும்.
ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் எரிபொருள் நிரப்பு நிலையங் களுக்கு முன்னால் வாகனங்கள் நீண்ட வரிசை யில் நிற்கின்ற நிலையில், டெக் கூட்டுத்தாப னத்தின் எரிபொருள் கிடங்குகளுக்கு முன்பாக வெற்று பவுசர் லொறிகள் அணிவகுத்து நிற்கின்றன. இலங்கைக்கு எரிபொருளை ஏற்றிச் செல்லும்
 கப்பல்கள் சில
காலமாக கடலில் நங்கூர மிடப்பட்டிருக்கும் நிலையில், அதற்கான பணத்தைச் செலுத்த டொலர்கள் இன்னும் கிடைக்க வில்லை. தற்போதைய தேவையில் 50% மட்டுமே தற்போதைய நிலவரப்படி கூட்டுத்தாபனம் வழங்க முடியும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ள நிலையில் , நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் எனத் 
தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



திங்கள், 21 பிப்ரவரி, 2022

விரைவில் இலங்கை மக்களுக்கு விடுதலை வெளியாகிய முக்கிய செய்தி

இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவது உட்பட நாட்டை முழுமையாக திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கையின் அனைத்து மக்களினதும் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்பார்த்த மட்டத்தை எட்டினால் இந்த நடவடிக்க மேற்கொள்ளப்படும் என அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சில சமயங்களில் ஒரே நபர் பல சந்தர்ப்பங்களில் கோவிட் வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். மேலும் 1231 புதிய கொரோனா தொற்றுகள் அடையாளம் காணப்பட்டதன் மூலம், நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 636,837 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



நாட்டில் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம்

நாட்டில் போதைப்பொருள் பயன்படுத்தி விட்டு வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டமொன்று உருவாக்கப்படவுள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
சாரதிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக வீதி விபத்துகள் அதிகரித்துள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கடந்த ஆண்டு இடம்பெற்ற 22 ஆயிரம் வாகன விபத்துக்களில்  2 ஆயிரத்து 470 பேர் உயிரிழந்தனர். அத்துடன் குறித்த விபத்துகளில் 14 ஆயிரம் பேர் காயமடைந்தனர். நாளாந்தம் வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
அதிகரித்து வரும் விபத்துகள் காரணமாக வீதிகளில் உடற்பயிற்சி செயற்பாடுகளில் ஈடுபடாமல் விளையாட்டு மைதானங்கள் மற்றும் நடைபாதை என்பவற்றை பயன்படுத்துமாறும் அஜித் ரோஹன அறிவுறுத்தியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

பாக்ரோவில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் பாக்ரோ பகுதியில் நேற்று இரவு 11.45 மணியளவில் வான்  ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 5 பேர் கடும் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் 
தெரிவித்தனர்.
மாத்தறை – கோட்டேகொட பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போதே அவர்கள் பயணம் செய்த வான் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாத்தறை – கோட்டேகொட பகுதிகளை சேர்ந்தவர்களே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
வானில் 12 பேர் பயணித்துள்ளதாகவும், இதில் சாரதி உட்பட 5 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதோடு, ஏனையோர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெறும்போது அனைவரும் நித்திரையில் இருந்ததாக, அதில் பயணம் செய்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாத்திரையை முடித்துவிட்டு பொகவந்தலாவ – பலாங்கொடை வழியாக மாத்தறை செல்ல தீர்மானித்த இவர்கள் வழி தவறி சாமிமலை வீதியின் ஊடாக சென்ற வேளையிலேயே இந்த விபத்து 
நேர்ந்துள்ளது.
வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>






இலங்கையில் கடந்த 18 மாதங்களில் இளைஞர்-யுவதிகள் நீரில் மூழ்கி மரணம்

இலங்கையில் கடந்த 18 மாதங்களில் 168 மாணவர்கள் மற்றும் இளைஞர்-யுவதிகள் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
எனவே பாதுகாப்பற்ற சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யவேண்டாம் என்று பாடசாலை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்ட சிரேஸ்ட கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம்.பாலசூரிய இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பற்ற நடத்தைகளே இந்த துயரமான போக்குக்கு இட்டுச் சென்றுள்ளது என்று 
அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இதுபோன்ற பயணங்களுக்கு செல்ல அனுமதி வழங்கினால் பாடசாலைகளின் அதிபர்களே பொறுப்புக்கூறவேண்டும்.
மதுபோதையில் ஆற்றில் குளிக்கச்சென்ற மற்றும் நீராடச் சென்ற சில சிரேஸ்ட மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கடந்த ஆண்டு இதுபோன்ற 18 சம்பவங்கள் பதிவாகின.
இந்தநிலையில் பாதுகாப்பற்ற பயணங்களுக்கு மாணவர்களை ஒழுங்கமைத்து அவர்களுடன் சென்றதற்காக சுமார் ஆறு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு அதிபர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்படவேண்டும்
 என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு நீரில் மூழ்கி 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 16 பேர் மாணவர்களாவர் என்றும் குருநாகல் மாவட்ட சிரேஸ்ட கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம்.பாலசூரிய மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குறிப்பிட்டார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

மரண அறிவித்தல் அமரர் சுப்பிரமணியம் கனகராசா 18.02.22

யாழ் சிறுப்பிட்டி மத்தியைசேர்ந்த‌ சுப்பிரமணியம் கனகராசா அவர்கள் 18-02-2022 இன்று மதியம் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினாா். இவர் ஓய்வு நிலை அதிபரும் சமூக சேவையாளாரும் சிறுப்பிட்டி முதியோா் சங்கத்தினுடைய தலைவரும் ஆவாா். அன்னாாின் இறுதிக் கிாியைகள் பற்றிய விபரம் பின்னா் இதே இணைப்பில் இணக்கப்படும் 
இவ் அறிவித்தலை உற்ரார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேம் எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


வியாழன், 17 பிப்ரவரி, 2022

வவுனியாவில் வர்த்தக நிலையங்களில் சீனியில் செய்யப்படும் மோசடி

வவுனியா, பஜார் வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட சீனி பையில் ஒரு வகையான இரசாயன பொருள் கலப்படம் செய்யப்பட்டுள்ளமை கணடறியப்பட்டுள்ளது.இது தொடர்பில் பொதுமகன் ஒருவர் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையில் முறைப்பாடு 
மேற்கொண்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,வவுனியா, பஜார் வீதியில் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள பிரபல வர்த்தக நிலையத்தில் பொதுமகன் ஒருவர் பொதியிடப்பட்ட சீனி பை ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார்.அதனை வீட்டிற்கு எடுத்துச்சென்று அதனை பாவனைக்கு உட்படுத்தியபோது அதனுள் ஓர் விதமான இராசயான பொருள் கலந்திருந்தமையை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து அதுகுறித்து பாவனையாளர் வவுனியா மாவட்ட பாவனையாளர் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையில் முறைப்பாடு மேற்கொண்ட நிலையில், வவுனியா மாவட்ட பாவனையாளர் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தனர்.
அதேவேளை சீனி பொதியிடும் சமயத்தில் குளிர்பானம் தயார் செய்ய பயன்படுத்தப்படு்ம் சிற்றிக்கசிட் தவறுதலாக சீனியில் கலந்துள்ளதாக தெரிவித்த குறித்த வர்த்தக நிலையம், குறித்த சீனியினை பெற்றுக்கொண்டவர்கள் உடனடியாக அதனை மீள வழங்குமாறும் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



அமரர் நாகலிங்கம் பத்மநாதன் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 17.02.22

பிறப்பு-28-02-1956-இறப்பு-17-02-2021.யாழ் யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் பத்மநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா!ஒருபோதும் உம் கொள்கை
நம்வாழ்வில் என்றும் மறையாது அப்பா!
உங்கள் நினைவுகள்
எம் மனதை விட்டு நீங்காது அப்பா!உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் ஆத்மாசாந்தியடைய 
இறைவனை பிரார்த்திக்கின்றோம் ..
என்றும் உங்கள் பிரிவால் துயருறும் 
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் , 
மைத்துனர்மார்கள், மருமக்கள்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





புதன், 16 பிப்ரவரி, 2022

நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை


இலங்கைக்கு போதியளவு டீசல் கையிருப்பு கிடைத்துள்ளதுடன், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில 
தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதன் பின்னணியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐஓசி நிறுவனம் பெப்ரவரி 06ம் திகதி முதல் எரிபொருள் விலையை உயர்த்துவதாக 
அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் (CPC) விலையேற்றத்திற்கு செல்ல அரசாங்கத்திடம் அனுமதி கோரியது, ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்ததையடுத்து, நுகர்வோர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்றனர்.
இதனால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடமிருந்து (IOC) 40,000 மெற்றிக் தொன் எரிபொருளை இலங்கையின் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் 
16-02-2022.இன்று கையளித்தார்.
எரிபொருளை உடனடியாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் (CPC) ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்தியாவிலிருந்து வந்த ‘ஸ்வர்ண புஷ்ப்’ என்ற எண்ணெய் டேங்கர் மூலம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.


இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>> >>>

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

மரண அறிவித்தல் திருமதி அம்பலவாணர் சுசிலா 14.02.22

தோற்றம்.17 08 1957-மறைவு-14 02 2022
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் சுசிலா அவர்கள் 14-02-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சண்முகம், செல்லம்மா தம்பதிகளின் ஆசை மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற
 அம்பலவாணர் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சுந்தரலிங்கம் மற்றும் வெற்றி வேலாயுதம் பிள்ளை(சிவம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சுபாசினி(சுபா), மதனராஜ்(மதன்), நிஷாந்தினி(நிஷா), சுதாஜினி(ஆஷா), நவீனராஜ்(நவீன்) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,ரமேஷ், பிரதீபன், துஷ்யந்தி, ஷர்மிளா, 
புவனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஹமிஷா, அபினாஷ், பிரஜின், ஆரன், ஆதன், அஹானா, நிற்ராறா, நவ்யா, துரோணன், 
தியானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், அன்னலட்சுமி, நடராஜா, பாமா மற்றும் அமிர்தமணி, மாலினி ஆகியோரின் மைத்துனியும்,காலஞ்சென்ற பாலாமணி மற்றும் சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 சுபா - மகள்Mobile : +19054979009 மதன் - மகன்Mobile : +14168944818 நவீன் - மகன்Mobile : +14167050606 நிஷா - மகள்Mobile : +16479705214 
ஆஷா - மகள்Mobile : +16476871217

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



எரிவாயு அடுப்பு வவுனியாவில்வீடொன்றில் வெடித்து சிதறியது

வவுனியாவில் சிங்கள பிரதேச செயலக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று பாதிவாகி இச்சம்பவம் 
 13-02-2022.ஞாயிற்றுக்கிழமை  அன்று  அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் 
தெரியவருகையில்,
வவுனியா சிங்கள பிரதேசசெயலக வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்றையதினம் இரவு சமையல் செய்த பின்னர் சமையலறை கதவினை மூடிவிட்டு தூங்கச்சென்றுள்ளனர்.
அதன் பின்னர் அதிகாலை தேநீர் தயாரிப்பதற்காக சமையல் அறையை திறந்த போது எரிவாயு அடுப்பு வெடித்திருப்பதை கண்டு 
அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



திங்கள், 14 பிப்ரவரி, 2022

பருத்தித்துறை பகுதியில் தீடிரென உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தாய்

கொழும்பில் வசித்து வந்த வடமராட்சி பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் .14-02-2022.இன்று அதிகாலை 5-00 மணியளவில்
 தீடிரென உயிரிழந்தார் .
சுகயீனமுற்ற வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த சத்தியேஸ்வரன் ஜெபினா வயது 41 என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



யாழ் சித்தங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.இவ்விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதியமையினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியும் முச்சக்கர வண்டி சாரதியும் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



கோப்பாய் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்து (புகைப் படங்கள்)

யாழ் கோப்பாய் பகுதியில் முச்சக்கர வண்டியுடன் வான் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது14-02-2022..இன்று மாலை 6.15 மணியளவில்
 இவ் விபத்து இடம் பெற்றுள்ளது. வாகனத்தில் பயணித்தவர்கள் சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>