siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

யாழ் புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்தின் சேவைகள் பாதுகாப்பு வழங்கினால் ஆரம்பிக்க முடியும்

 புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்தின் சேவைகளை உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டால் எதிர்வரும்.02-05-2023. செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்க முடியுமென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புத்ததூர் வைத்தியசாலையில் புகுந்து தாக்குதல் நடத்தி வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்தையடுத்து வைத்தியசாலையின் சேவைகள் இதுவரை இடம்பெறவில்லை.
 தற்போது வைத்தியசாலைக்கு பொலிசாரின் பாதுகாப்பு 24 மணி நேரமும் வழங்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையின் சேவையினைத் தொடர்வதற்கு வைத்தியசாலையின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என வைத்தியசாலையின் வைத்தியர் கோரியுள்ளார். அத்துடன் வைத்தியசாலையில் கண்காணிப்பு கமரா மற்றும் 
பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டால் அதனை வைத்திய சங்கத்தினர் பரிசீலனை செய்து வைத்தியரை தொடர்ந்து பணி செய்வதற்கு அனுமதிக்க முடியும் என தெரிவித்தனர்.
 அச்சுறுத்தல் விடுத்தவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த காரணத்தால் தொடர்ந்தும் அவ்வாறான நிலை தோன்றலாம் என வைத்தியர் 
அச்சமடைந்துள்ளார். எனவே வைத்தியர் தனது சேவையினை மீண்டும் தொடர்வதற்கு
 வைத்தியசாலையின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் அவ்வாறு உறுதிப்படுத்தினால் தொடர்ந்தும் சேவையை மேற்கொள்ள முடியும் என வைத்தியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




மரண அறிவித்தல் திருமதி கனகசபை புஸ்பராணி 30.04.2023

தோற்றம் -21-02-1946-மறைவு-30-04-2023.
யாழ். தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும்  நவற்கிரி புத்தூரைய்  வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர் திருமதி கனகசபை புஸ்பராணி   அவர்கள் 30-04-2023. அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ் சென்றவர்களான கதிரவேலு -பாக்கியம் அவர்களின் அன்புமகளும் காலஞ் சென்றவர்களான இளையதம்பி -ஆச்சிமுத்து   தம்பதிகளின் அன்பு மருமகளும்  திரு கனகசபை அவர்களின் அன்புமனைவியும் கலக்குமார் .கலையரசி .கலைமகள் .ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர் 
.அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  30-04-2023. 10:00 மு.ப — 1:30 பி.ப.மணி  ஞாயிற்றுக்கிழமை .அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
30-04-2023. ஞாயிற்றுக்கிழமை  - பி.ப 2:00. மணிக்கு ;.முகவரி   நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு--
மகன் -இலங்கை - 0094755437287.
மகள் -இலங்கை-0094765394630
மகள் -சுவிஸ்- 0041762482376

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






சனி, 29 ஏப்ரல், 2023

ஆனையிறவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி சாரையடி பகுதியைச் சேர்ந்த 27 வயதான சத்தியமூர்த்தி சத்தியன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 
உயிரிழந்துள்ளார்.
ஹயஸ் ரக வேன் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி சில தினங்களுக்கு முன்னர் இவ்விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>







வெள்ளி, 28 ஏப்ரல், 2023

தங்க துப்பாக்கியுடன் அவுஸ்திரேலிய விமான நிலையத்தில் அமெரிக்க பெண் கைது

அவுஸ்திரேலியாவில் சிட்டி விமான நிலையத்தில் அமெரிக்க பெண் ஒருவரின் பயணப் பையில் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சிட்னிக்கு அடையாளம் காணப்படாத
 பெண் வந்துள்ளார்.
மற்றும் துப்பாக்கிக்கான அனுமதி இல்லை என்று ஆஸ்திரேலிய எல்லைப் படை (ABF) தெரிவித்துள்ளது. 
இந்நிலையில், அவளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 
ஆஸ்திரேலிய எல்லைப் படையால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள், விமான நிலைய ஸ்கேன் மூலம் பெண்ணின் சாமான்களைக் காட்டியது, அவரது பையில் துப்பாக்கி இருப்பது தெரியவந்தது.இரண்டாவது புகைப்படம் பையைத் திறந்ததும் கைத்துப்பாக்கியைக் காட்டியது.  
ஒரு ஏபிஎஃப் அதிகாரி ஒரு அறிக்கையில், அதிநவீன கண்டறிதல் தொழில்நுட்பம் ஒரு ஆபத்தான ஆயுதம் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க உதவியது என்று கூறினார்.
சட்டவிரோத மற்றும் மிகவும் ஆபத்தான பொருட்களை ஆஸ்திரேலியாவின் எல்லையை கடக்காமல் குறிவைத்து நிறுத்துவதில் ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரிகள் எவ்வளவு சிறந்து 
விளங்குகிறார்கள் 
என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறோம் என்று ஆஸ்திரேலிய எல்லைப் படை கமாண்டர் ஜஸ்டின் பாதர்ஸ்ட் கூறினார்.
28 வயதான பெண் மீது குற்றம் சாட்டப்பட்டு, டவுனிங் சென்டர் லோக்கல் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றதாக அதிகாரிகள் 
தெரிவித்தனர்.நீதிமன்ற நடவடிக்கைகளின் முடிவு நிலுவையில் உள்ள நிலையில், அவர் தனது விசாவை ரத்துசெய்து ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்படுவதையும் எதிர்கொள்ள நேரிடும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வியாழன், 27 ஏப்ரல், 2023

ஆய்வில் அதிர்ச்சி எலிகள் மூலம் பரவும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா

கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். 
கடந்த 2021-ம் ஆண்டு தைவான் நாட்டில் ஒரு ஆய்வு மையத்தில் தனிமையில் இருந்த இளம் பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் ஆய்வகத்தை விட்டு வேறு எங்கும் 
செல்லவில்லை. 
இதனால் அவருக்கு எப்படி கொரோனா பரவியது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாதிப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரை எலி கடித்தது தெரியவந்தது. எலி மூலம் கொரோனா பரவியதா என அப்போது பெரும் கேள்வி எழுந்தது.
இதனைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் எலிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் எலிகளுக்கு டெல்டா ஒமைக்ரான் வகையான உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
இது தொடர்பாக வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி 
மற்றும் பிற இந்திய நிறுவனங்களின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 26 ஏப்ரல், 2023

கம்பளையில் பரசிட்டமோல் மருந்தை அதிகமாக உட்கொண்டதால் சிறுமி உயிரிழப்பு

இலங்கை கம்பளை உடவெல்ல பிரதேசத்தில் ஏழு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் பரசிட்டமோல் மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் சிறுமி உயிரிழந்ததாக 
கூறப்படுகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வைத்தியசாலை வைத்தியர் சிபாரிசு செய்த மருந்தை வைத்தியசாலையின் மருந்தகத்தில் இருந்து எடுத்து சிறுமிக்கு வழங்கிய போதும் நோயின் தாக்கம் குறையவில்லை என உறவினர்கள்
 தெரிவிக்கின்றனர்.
அதனையடுத்து, சிறுமியை கம்பளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற பெற்றோர், அங்கு குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட மருந்துகள் பரிசோதிக்கப்பட்டன. மருத்துவமனையில் அதிக அளவு மருந்துகள் கொடுத்துள்ளது 
தெரியவந்துள்ளது.
ஆபத்தான நிலையில் உள்ள சிறுமி கம்பளை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
அப்போது மருத்துவர்களால் மயக்க மருந்து செலுத்தப்பட்ட சிறுமி சுயநினைவு பெறாமல் உயிரிழந்தார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

செவ்வாய், 25 ஏப்ரல், 2023

இலங்கையில் 119 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு அவதியில் நோயாளர்கள்

இலங்கையில் தற்போது 119 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு 
தெரிவித்துள்ளது.
எனினும் நோயாளிகளுக்கு தேவையான 14 வகையான உயிர்காக்கும் மருந்துகள் மருத்துவ வழங்கல் திணைக்களத்தில் இருப்பதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்
நேற்றைய தினம் (24-04-2023) சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அந்த 14 வகை உயிர்காக்கும் மருந்துகளில் இரண்டு வகையான மருந்துகள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றன
இந்திய கடன் திட்டத்தில் 99% சதவீத மருந்துகளை இறக்குமதி செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளன.இதன்படி, இலங்கையில் முந்நூறுக்கும் மேற்பட்ட மருந்து வகைகள் கடன் திட்டத்தில் இருந்து 
பெறப்பட உள்ளன.
எதிர்வரும் மே மாத இறுதிக்குள் மருந்துப் பற்றாக்கு
றையை மட்டுப்படுத்த முடியும் எனவும் சுகாதார அமைச்சு கூறுகிறது.இதேவேளை இந்தோனேசிய கடன் திட்டம் மூலமும் இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து 
வருவதாக சுகாதார இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க
 மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>




திங்கள், 24 ஏப்ரல், 2023

முத்துப்பேட்டை அருகே அசதியில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியவர்கள் விபத்தில் 3 பேர் பலி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே, இரவில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு, அசதியில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியவர்கள் மீது ரயில் 
மோதியது.
அதிகாலையில் நேரிட்ட விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்ளிட்ட 
மூன்று பேர் பலி

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

வடக்கு ஜேர்மனியில் ரயில் ஒன்றுடன் மோதிய கார்;விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு ஜேர்மனியில் ரயில் ஒன்றுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து ஹன்னோவர் நகருக்கு வெளியே நியூஸ்டாட் ஆம் ருபென்பெர்க் அருகே இடம்பெற்றுள்ளது.
இதில் காரில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 22 வயதுடை ஆண் ஒருவரும் 21 மற்றும் 22 வயதுடைய இரு பெண்களும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சாலையின் முழு அகலத்தையும் மூடாத தடுப்புகள் மூடப்பட்டிருந்தாலும், கார் ஒரு குறுக்கு வழியில் சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




சனி, 22 ஏப்ரல், 2023

நெடுந்தீவில் வெளிநாட்டிலிருந்து சென்றவர்கள் கொடூரமாக கொலை

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் நால்வர் வீடொன்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவமானது-22.04.2023 இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஐந்து பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன், பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளார். 
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் 
தெரிவித்தார். 
இதன்போது இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவைச் சேர்ந்த இருவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் உட்பட ஐவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
3 பெண்களும் 2 ஆண்களுமே கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நெடுந்தீவு மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்தே வெட்டுக்காயங்களுடன் சடலங்கள் மீட்கப்பட்டன.
நெடுந்தீவைச் சேர்ந்த இருவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் (ஒருவர் பாண்டியன்தாழ்வு), மற்றொருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர் என ஐவரின் சடலங்களே மீட்கப்பட்டன.
மற்றொருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் 11 மணிவரை வீட்டிலிருந்து யாரும் வெளியில் வராத நிலையில் உள்ளே சென்று பார்த்த போது நால்வர் சடலமாகக் காணப்பட்டனர். ஒருவர் குற்றுயிராகவும் மீட்கப்பட்டார்.
மற்றொருவர் அறை ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்டார்.
விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நெடுத்தீவுக்குச்
 சென்றுள்ளனர்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வெள்ளி, 21 ஏப்ரல், 2023

வற்றாப்பளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள குழந்தை இயேசு கோவில் - வற்றாப்பளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் .21-04-2023.இன்றைய தினம்.நண்பகல் குழந்தையேசு கோவில் பத்திமாதா சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் கைவேலி புதுக்குடியிருப்பினை சேர்ந்த 49 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான சந்தியா பரமேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 
கோப்பாபிலவு பகுதியில் இருந்து வந்த கன்டர் வாகனம் வீதியை கடக்க முற்பட்ட உந்துருளியில் பயணித்தவரை மோதித்தள்ளியுள்ளது.
விபத்திற்குள்ளான உந்துருளி தீ பற்றி எரிந்துள்ளது. காயமடைந்த குடும்பஸ்தர் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்
விபத்திற்குக் காரணமான கன்டர் வாகனத்தின் சாரதி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

மரண அறிவித்தல் திருமதி சங்கீதா ஜெயதீபன்.20.04.2023

பிறப்பு-28 Mär 1986-இறப்பு-20 Apr 2023-புத்தளம் முந்தலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Tessin ஐ வதிவிடமாகவும் கொண்ட சங்கீதா ஜெயதீபன் அவர்கள் 
20-04-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நேசபூபதி வசந்தராண தம்பதிகளின் அன்பு மகளும்,
ஜெயதீபன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஈழன் அவர்களின் அன்புத் தாயாரும்,
சஞ்சித், சஹானா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
நிகழ்வுகள்
பார்வைக்கு
ஞாயிறு, 23 ஏப்ரல், 2023
13:00 - 17:00
Chiesa di San Lorenzo

A S. Lorénz 1, 6702 Claro, Switzerland

கிரியை
திங்கள், 24 ஏப்ரல், 2023
11:00 - 14:30
Cimitero di Bellinzona

Via Arnaldo Bolla, 6500 Bellinzona, Switzerland
தொடர்புகளுக்கு
K. C.பிரதீப் - மைத்துனர்
mobile :
+447828604222
பிரதாப் - மைத்துனர்
mobile :
+41765069023

 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 20 ஏப்ரல், 2023

புளியங்குறிச்சி அருகே தனியார் பள்ளி வாகனம் மோதியதில் ஆசிரியை மரணம்

சேலம் மாவட்டம் புளியங்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஆசிரியை தனியார் பள்ளி வாகனம் மோதி உயிரிழப்பு
உடலை எடுக்க விடாமல், போலீசாரிடம் வாக்குவாதம் செய்து உறவினர்கள் சாலை மறியல்.குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 19 ஏப்ரல், 2023

பொலிகண்டி பகுதியில்தவறான முடிவால் பரிதாபமாக உயிரிழந்த யுவதி !

யாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் இளம் யுவதி ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை 
ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம்.19-04-2023. இன்றைய தினம்  இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் பொலிகண்டி ஆலடி பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திராசா பிரியா வயது 22 என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
யுவதியின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.யாழில் அண்மைக் காலமாக இவ்வாறான தற்கொலைச் சம்பவங்கள் தொடரும் நிலையில் இவற்றிற்கான பின்னணிகள் தொடர்பில் எதுவித உறுதியான தகவல்களும் வெளிப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 18 ஏப்ரல், 2023

குப்பிளான் பகுதில் பரபரப்பை ஏற்படுத்திய இளம் தாயின் மரணம்; நடந்தது என்ன!

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சுமந்திரனின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டிற்குள் தீமூட்டி இளம் குடும்பப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சம்பவத்தில் யாழ் குப்பிளான் பகுதியை சேர்ந்த 36 வயதான விஜிதா என்ற குடும்பப் பெண்ணே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த பெண் யாழ் வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் மல்லாகம் உப அலுவலகத்தில் கடமையாற்றி வந்தவர் என கூறப்படுவதுடன் , பெண்ணுக்கு 10 வயதான பெண் பிள்ளை ஒன்றும் உள்ளது.
தீயில் கருகிய தாய் -தவிக்கும் மகள்
அதேவேளை சுகிர்தன் தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவரும் நீண்டகாலத்தின் முன்னரே திருமணமாகியவர் எனவும் அவரது மகன் ஒருவர் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றி வருவதாகவும் கூறப்படுகின்றது.
சுகிர்தனின் மனைவி கடந்த 2020ம் ஆண்டு தனது இரு பிள்ளைகளுடன் வெளிநாடு சென்று தனித்து வாழ்ந்துவருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் உயிரிழந்த விஜிதாவின் வீட்டிலேயே தவிசாளர் உணவருந்துவதாகவும் அந்த பெண்ணின் பிள்ளையை வெளியிடங்களிற்கும் கல்வி நடவடிக்கைக்கும் அழைத்து செல்வதாகவும் பிரதேச 
மக்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிலிருந்து பெற்றோலுடன் சுகிர்தன் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் நகை, பணம் இருக்குமிடங்களை மகளிடம் காண்பித்து விட்டு சென்றதாக கூறப்படுகின்றது.
சுகிர்தனின் வீட்டிற்குள் சென்று வாக்குவாதப்பட்ட பின்னர் தனது உடலில் பெற்றோல் ஊற்றி எரித்த விஜிதா கிண்றுக்குள் குதித்த நிலையில் மீட்கப்பட்டு யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தவிசாளர் விடுவிப்பு
அவர் தற்கொலை செய்தாரா அல்லது குற்றச்செயல்கள் நடந்ததா என்பது உறுதியாகாத நிலையில் தவிசாளர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
பொலிஸ் நிலையத்தில் பெண் தற்கொலைக்கு முயன்றதற்கான சாட்சியங்கள் தென்பட்டதையடுத்து தவிசாளர் விடுவிக்கப்பட்டதாக 
கூறப்படுகின்றது.
அதேவேளை இலங்கை சட்டங்களின்படி தற்கொலை ஒரு குற்றச்செயல், தற்கொலை செய்தது உறுதியானால் அதன் பின்னணி காரணங்களை தேடி ஆராய்வதில்லை. அதனால் இந்த வழக்கு இத்துடன் நிறைவடைந்து விடும் என சட்டம் கூறுகிறதாம்.
இது இவ்வாறிருக்க தனது இணைப்பாளரை காப்பாற்றுவதில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தீவிர பிரயத்தனம் எடுத்ததன் காரணமாகவே சுகிர்தன் விரைவாக வெளியில் வர முடிந்ததாக தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஓர் இளம் தாய் , விபரீத முடிவால் உயிரிழந்தமைக்கான காரணம் என்ன? உண்மைகள் மறைக்கப்படுகின்றதா? 
  என்பது  குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 17 ஏப்ரல், 2023

ஏழாலை பகுதியில் விபரீத முடிவெடுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

யாழ் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் வீட்டு வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் பணிபுரியும் பாலகிருஷ்ணன் விஜிதா (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, ஏழாலை பகுதியில் உள்ள முன்னாள் தவிசாளரின் வீட்டுக்கு 16-04-2023.அன்றயதினம் இரவு சென்ற குறித்த பெண்,வீட்டின் வளாகத்தினுள் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதனை அவதானித்த வீட்டில் இருந்தோர் தீயினை அனைத்து காப்பாற்றிய போதிலும் , அவர் கிணற்றினுள் குதித்துள்ளார். கிணற்றில் இருந்து காப்பாற்றி தெல்லிப்பழை வைத்தி​யசாலையில் சிகிச்சைக்காக 
அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் (17) உயிரிழந்துள்ளார். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.என்பதுகுறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

அலபாமா மாநிலத்தில் பிறந்த நாள் பார்ட்டியில் துப்பாக்கிச்சூடு; 6 பேர் உயிரிழந்ததாக தகவல்

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்த நாள் பார்ட்டியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் 
வெளியாகி உள்ளது.
டேட்வில்லே நகரில் உள்ள மஹோகனி டான்ஸ் ஸ்டூடியோ என்ற இடத்தில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில், சுமார் 20 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் சம்பவத்திற்கு காரணமாணவர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் பெரும்பாலானோர் இளம்வயதினர் என உள்ளூர் செய்தி நிறுவனங்கள்
 தெரிவித்துள்ளது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

சனி, 15 ஏப்ரல், 2023

நாட்டில் மகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்

கொழும்பில் இரவு மழை பெய்தாலும் வெப்பம் 'எச்சரிக்கை' மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் நாளை மனித 
உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் அவதானமான நிலை வரை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மனித உடலில் 'எச்சரிக்கை' அளவில் இருக்கும் வெப்பநிலை சோர்வு மற்றும் வெப்ப பிடிப்புகளுக்கு வழிவகுக்கும்.
எனவே முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும், முதியவர்கள்,நோயாளிகள், குழந்தைகளை வெளிப்புறங்களுக்கு
 செல்வதை மட்டுப்படுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.
அத்துடன் பொதுமக்கள் இலகுரக மற்றும் வெள்ளை 
அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் 
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 14 ஏப்ரல், 2023

மக்களை காவல் காக்க நியூயார்க்கில் களமிறங்கும் ரோபோ நாய்

நியூயார்க் பொலிஸார் ரோபோ நாய் ஒன்றை காவல் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு மாத்திரம் (2022) நியூயார்க் நகரில் 1 லட்சத்து 26 ஆயிரம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ள அதேசமயம் 433 கொலை குற்றங்கள் நடந்துள்ளன.
நியூயார்க் நகரில் 36 ஆயிரம் பொலிஸார் பணிபுரிந்து வரும் நிலையில், குற்றங்களை தடுக்க நவீன வழிமுறைகளை நகர பொலிஸ் அதிகாரிகள் பின்பற்றி வருகின்றனர்.
ரோந்து பணியில் ரோபோ நாய் 
அதன் ஒரு பகுதியாக தற்போது டிஜிடாக் (Digidog) என்ற ரோபோ நாய் ஒன்றை பணியில் ஈடுபடுத்தியுள்ளனர். இந்த ரோபோ நாய் ரிமோட் கண்ட்ரோல் முறையில் இயக்கப்படுகிறது.
சுரங்க நடைபாதைகள், ஆபத்தான பகுதிகள், கட்டுமானம் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ரோபோ நாய் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படயுள்ளது.
ஆபத்தில் சிக்கும் மனிதர்களுக்கு உதவி செய்யும் திறன் கொண்ட இந்த ரோபோ நாயிடம் மனிதர்கள் தொடர்பு கொள்ள முடியும் என 
கூறப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது தப்பிச் செல்லும் கார்களில் ஜி.பி.எஸ். கருவியை பொருத்தும் எந்திரத்தையும் நியூயார்க் பொலிஸார் 
அறிமுகம் செய்துள்ளனர்.    

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 13 ஏப்ரல், 2023

முல்லைத்தீவில் தமிழர் பகுதியில் குளத்தில் மிதந்த சடலத்தால் பரபரப்பு


  முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள குளம் ஒன்றில் இருந்து உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் 03 ஆம் ஒழுங்கை வள்ளிபுனம் – புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த 50 அகவையுடைய டா.டேவிட் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குளக்கரையில்  மிதிவண்டி மற்றும் செருப்பு, சறம்
குளக்கரையில் உயிரிழந்தவரின் மிதிவண்டி மற்றும் செருப்பு, சறம் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த நபரின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகைள புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருவதாககவும் தகவல்கள் தெரிவிக்கின்றன



புதன், 12 ஏப்ரல், 2023

சீனாவில் அரியவகை H3N8 பறவைக்காய்ச்சலுக்கு முதல் மனித உயிர் பலி

அரியவகை H3N8 பறவைக்காய்ச்சலுக்கு சீனாவில் முதல் மனித உயிர் பலியானதாக, உலக சுகாதார 
நிறுவனம் தகவல்.
மனிதர்களிடையே பரவும் தன்மை அற்ற வைரஸ் என்பதால், உலக நாடுகள் அச்சப்பட தேவையில்லை என்றும் அறிக்கை.
என்பதுகுறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 11 ஏப்ரல், 2023

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை மீண்டும் காய்ச்சல் 15 பேர் பலி

நாடு முழுவதும் இன்புளுவன்சா காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக காய்ச்சல், தசைவலி, மூக்கில் நீர் வடிதல், தொண்டை புண் மற்றும் சளி போன்றவை இதன் அடிப்படை அறிகுறிகளாகும் என விசேட வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அதோடு கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுவாச பிரச்சினை உள்ளவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நோயின் அறிகுறிகள்
அதிக காய்ச்சல், தசை மற்றும் மூட்டு வலி, மூக்கு ஒழுகுதல், தொண்டை புண் மற்றும் சளி ஆகியவை நோயின் முக்கிய 
அறிகுறிகளாகும்.
அதேவேளை  வைரஸால் பாதிக்கப்பட்ட ஆரோக்கியமான நபர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு இயற்கையாகவே குணமடைவார் என்று சுகாதார சுகாதார மேம்பாட்டுப் தெரிவித்துள்ளது.
மேலும், பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் 
இதேவேளை, காலி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



மேலும் இந்த வருடத்தின் கடந்த மூன்றரை மாதங்களில் எலிக்காய்ச்சல் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாக காலி மாவட்ட தொற்றுநோய் நிபுணர் எரந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.  


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 10 ஏப்ரல், 2023

சலேம்பூர் கிராமத்தில்திருமண வைபவத்தின் போது துப்பாக்கிப் பிரயோகம் செய்த மணமகள்

இந்தியாவில் தனது திருமண வைபவத்தின் போது துப்பாக்கிப் பிரயோகம் செய்த மணமகள் ஒருவரை உத்தரபிரதேச மாநில பொலிஸார் 
தேடி வருகின்றனர்.
திருமண மேடையில் மணமகனுக்கு அருகில் அமர்ந்திருக்கும் மணமகள், கைத்துப்பாக்கி ஒன்றினால் 4 தடவைகள் மேல் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் காட்சி அடங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.
மணமகளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த நபர் அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்துள்ளார். 4 தடவைகள் சுட்ட பின்னர் அத் துப்பாக்கியை அந்நபரிடமே மணமகள் திருப்பிக் கொடுக்கும் காட்சியும் வீடியோவில் 
பதிவாகியுள்ளது.
சலேம்பூர் எனும் கிராமத்தில்.07-04-2023. கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
 நிலையில், இது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>