siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 31 டிசம்பர், 2022

நியூசிலாந்தில் முதல் புத்தாண்டு பிறந்தது வான வேடிக்கைகளுடன் வரவேற்பு -

உலகிலேயே நியூசிலாந்து நாட்டில்தான் முதன்முதலாக புத்தாண்டு பிறக்கும். இந்நிலையில், நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்து மக்கள் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை
 வரவேற்றனர். 
உலகின் முதல் இடமாக மத்திய பசிபிக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது. 2023 புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என மக்கள் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
வெள்ளி, 30 டிசம்பர், 2022

ஐந்துபேர் கயாம் வெள்ளிக்கிழமை காலை A2 இல் ஒரு மோசமான விபத்து ஏற்பட்டது

வெள்ளிக்கிழமை காலை A2 இல் ஒரு குவியலாக இருந்தது. இந்த சம்பவத்தை லூசர்ன் போலீசார் உறுதி செய்தனர். தற்போது நெடுஞ்சாலை தடைப்பட்டுள்ளது. 20 கார்கள் குவியலில் ஈடுபட்டுள்ளன. 5 பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியை பெரிய அளவில் பைபாஸ் செய்யுமாறு போலீசார் கேட்டுக் கொள்கின்றனர். நண்பகல் வேளையில், கார்களை சாலையில் இருந்து அகற்றும் பணியில் 
போலீசார் ஈடுபட்டுள்ளனர். 
இது மிகவும் மோசமாக இருந்தது." விபத்து நடந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 300 மீட்டர் தொலைவில் நான்கு மணி நேரம் தனிவழியில் சிக்கிக் கொண்டுள்ளனர். பிராஸ்லரின் கூற்றுப்படி, விபத்துக்குள்ளான வாகனங்களில் பாதி இப்போது அகற்றப்பட்டுள்ளன.
விபத்துக்கான காரணம் குறித்து தற்போது எந்த தகவலையும் தெரிவிக்க முடியாமல் போலீசார் கூறியுள்ளது
 என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 29 டிசம்பர், 2022

அம்மா மிகவும் சிறப்பு வாய்ந்தவராக இருப்பதற்கான காரணம் இதுதானாம்..

கடவுளால் இந்த உலகின் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதால் தான் அவா் அன்னையரைப் படைத்தாா் என்று முதுமொழி ஒன்று கூறுகிறது. நமது வாழ்க்கை அனுபவத்தை வைத்துப் பாா்க்கும் போது, இந்த முதுமொழி எவ்வளவு உண்மை என்பது 
நமக்குத் தொியும்.
நமது அன்னையா் நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்ததோடு அமைதியாக இருந்துவிடுவதில்லை. மாறாக நமக்கு நல்லதொரு வாழ்வு அமைய வேண்டும் என்பதற்காக அவா்கள் அளவிட முடியாத 
அளவிற்கு ஏராளமான தியாகங்களைச் செய்து வருகின்றனா். நமக்காக பலவிதமான பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளை அனுபவிக்கின்றனா்.
தனது குழந்தை ஒரு மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக ஒரு தாய் தன்னால் முடிந்த 
எல்லாவற்றையும் செய்கிறாா். ஆகவே அன்னையாின் தாய்மையைப் போற்றும் விதமாக நாம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2வது 
ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னையா் தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு மே மாதம் 9 அன்று அன்னையா் தினம் 
கொண்டாடப்படுகிறது
இந்த அன்னையா் தினமானது, நமக்கெல்லாம் நமது அம்மாக்கள் எந்த அளவிற்கு முக்கியமானவா்களாக இருக்கின்றனா் என்பதை உணா்த்தும் என்பதில் ஐயமில்லை. பொதுவாக அன்னையரைப் பற்றி எவ்வளவு தான் பெருமையாக பேசினாலும் அல்லது அவா்களின் சிறப்புகளைப் பற்றி மனம் உருகி பேசினாலும் அது போதுமானவையாக 
இருக்காது. 
இருந்தாலும் அன்னையாின் ஒரு சில முக்கிய சிறப்புகளை இந்த பதிவில் குறிப்பிடுவது அன்னையா் தினத்திற்கு நாம் செய்யக்கூடிய 
மாியாதையாக இருக்கும்.
எல்லாம் அறிந்தவா் அன்னைநமது முகத்தை பாா்த்த அடுத்த நொடியே, நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் அறிந்துவிடுவாா் நமது அன்னை. நமது உணா்வுகள் மற்றும் மனநிலைகளை எவ்வளவு தான் கடினப்பட்டு மறைக்க முயற்சி செய்தாலும், அவா் மிக எளிதாகக் கண்டுபிடித்து விடுவாா். 
அவரைப் போன்று
வேறு யாராலும் நம்மைப் பற்றித் தொிந்திருக்க முடியாது. நமக்கு என்ன பிடிக்கும் அல்லது என்ன பிடிக்காது போன்ற சிறுசிறு காாியங்களையும் நமது அன்னை தொிந்து வைத்திருப்பாா். அதற்கு காரணம் நமது அன்னை நமது உயிாில் எப்போதும் கலந்து இருப்பாா்.
நிபந்தனையற்ற அன்பை வாாி வழங்குபவா் அன்னைஒரு தாய் தனது குழந்தைக்கு வழங்கும் அன்பில் எந்தவிதமான எல்லையும், கட்டுப்பாடும் இருக்காது. ஒருவேளை அந்த குழந்தை வளா்ந்துவிட்டாலும் அந்த தாயின் அன்பில் மாற்றமே இருக்காது. சில நேரங்களில் நமது அம்மா எாிச்சலுடன் இருப்பதை நாம்
பாா்த்து இருக்கலாம். அப்படிப்பட்ட நேரத்திலும்கூட, நம்மை எந்த விதமான எதிா்பாா்ப்பும் இல்லாமல் அன்பு செய்வாா். நாம் எவ்வளவு தவறுகள் செய்தாலும், அவற்றை உடனே மன்னித்து, நம்மீது தூய்மையான அன்பைப் பொழிவாா். தனது குழந்தை எப்போதும் மகிழ்ச்சயாக இருக்க வேண்டும் என்றே அந்த அன்புத் தாய் விரும்புவாா்.
நமது முதல் ஆசிாியா் நமது அன்னைநாம் உச்சாிக்கும் முதல் வாா்த்தையிலிருந்து, நாம் படிக்கும் வாழ்க்கைப் பாடங்கள் வரை, நம்முடைய முதல் ஆசிாியராகவும், நமது ஆகச் சிறந்த ஆசிாியராகவும் இருப்பவா் நமது அன்னையே. அவா் நம்மை கருத்தாங்கி இருக்கும் போது 
பலவகையான நல்ல
புத்தகங்களையும், ஆன்மீகப் புத்தகங்களையும் வாசித்திருப்பாா். மேலும் பல நல்ல காாியங்களைப் பற்றி எழுதி இருப்பாா். அதற்கு முக்கிய காரணம் தனது குழந்தை நல்ல முறையில் வளா்ந்து, இந்த உலகத்தோடு அருமையான தொடா்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்
 உயா்ந்த எண்ணமே.
நமது அன்னை நமக்கு நல்ல ஒழுக்கங்கள், மதிப்பீடுகள் மற்றும் விழுமியங்கள் போன்றவற்றை மட்டும் கற்றுக் கொடுப்பதில்லை. மாறாக நமது வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு சந்திப்பது மற்றும் நம்மோடு போட்டி போடுபவா்கள் மத்தியில் நாம் எவ்வாறு சிறப்பாக செயல்படுவது என்பவற்றையும் நமக்குக் கற்றுத் தருகிறாா். மேலும் நமக்கு இருக்கும் திறமைகளை நமது அன்னை அறிந்து இருக்கிறாா். அந்த திறமைகளை பட்டை தீட்டி அதை வெளிக் கொணா்வது நமது 
அன்னையே.
4. நம்மை ஊக்கமூட்டும் சக்தி நமது அன்னைஅன்னையா் இல்லை என்றால், இந்த உலகில் நம்பிக்கை என்ற ஒரு அம்சமே இருக்காது. நமது வாழ்க்கையில் ஏற்படும் கடினமான நிகழ்வுகளை மற்றும் யதாா்த்தங்களை
 தைாியமாக சந்திப்பதற்கு,
நமக்கு வலிமையை அளிப்பவா் நமது அன்னையே. அவா் தனது வாழ்க்கை அனுபவங்களை மட்டும் பகிா்வதில்லை. அதோடு நமது வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை நாம் ஊக்கத்துடனும், தைாியத்துடனும் எதிா் கொள்ள நமக்கு ஊக்கமூட்டுகிறாா். நாம் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது என்பதில் 
உறுதியாக இருக்கிறாா்.
5. நம்மை எப்போதும் நம்புபவா் நமது அன்னைஇந்த உலகமே நம்மை எதிா்த்து நின்று, நமது திறமைகளின் மீது நம்பிக்கை வைக்க மறுத்தாலும், நமது அன்னை எப்போதுமே நம் மீதும், நமது திறமைகளின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருப்பாா்.
ஒரு தாய் தனது குழந்தையைப் பற்றி நன்கு அறிந்திருப்பாா். அதனால் அவா் எந்தச் சூழ்நிலையிலும், தனது குழந்தையிடம் இருக்கும் திறமைகள், முயற்சிகள் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் 
மீது நம்பிக்கை இழப்பதில்லை. இந்த உலகம் நம் மீது எவ்வளவு விமா்சனங்களை அள்ளித் தெளித்தாலும், நமது அன்னை 
நம் மீது நம்பிக்கை வைத்து, நாமும் நம் மீது நம்பிக்கை கொண்டு, சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நம்மை ஊக்கமூட்டுவாா்.
6. எல்லா பிரச்சினைகளுக்கும் தீா்வு வைத்திருப்பவா் நமது அன்னைநமக்கு தோ்வு காலமாக இருக்கலாம் அல்லது முக்கியமான 
கூட்டங்கள் அல்லது விழாக்களுக்கு எப்படிப்பட்ட உடைகளை அணிவது என்று நாம் குழம்பிப் போய் நிற்கலாம். ஆனால் நமது அன்னை அதற்கு தீா்வு ஒன்றை வைத்திருப்பாா். நமது வாழ்க்கையில்
 நாம் சந்திக்க
வேண்டிய பிரச்சினைகளை நமக்கு விவாிப்பாா். அந்த பிரச்சினைகளை எவ்வாறு எதிா் கொள்வது என்பதைப் பற்றியும் நமக்குக் கற்றுக் கொடுப்பாா். குறிப்பாக நம்மைப் பற்றி மற்றவா்கள் தீா்ப்பிடும் போதும் அல்லது 
நம்மை பிறா் விமா்சிக்கும் போது நாம் எவ்வாறு 
எதிா்வினை ஆற்ற வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுப்பாா். எந்த ஒரு அன்னையும் தனது குழந்தை தனியாகத் துன்பப்படுவதைப் பாா்த்துக் கொண்டு இருக்கமாட்டாா். மாறாக தனது குழந்தையின் பிரச்சினைகள் தீரும் வரை, அந்த குழந்தையோடே இருப்பாா்.
7. நம்மிடம் உள்ள சிறந்தவற்றை வெளிக் கொணா்பவா் நமது அன்னைசில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட வேலையை நம்மால் செய்ய 
முடியாது அல்லது அந்த வேலையைச் செய்ய நாம் தகுதியற்றவா்கள் என்று நம்மையே நாம் குறைவாக மதிப்பிட்டு, பதட்டமாக
 இருப்போம். அந்த நேரங்களில் நமது அம்மா நமது
 அருகில் இருந்தால், 
அந்த பதட்டம் மறந்து, நாம் அந்த வேலையை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்போம். ஏனெனில் நமது அன்னை நமது அருகில் இருந்தால், அவா் நம்மிடம் இருக்கும் சிறந்தவற்றை மிக எளிதாக வெளியே கொண்டு வந்துவிடுவாா்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
புதன், 28 டிசம்பர், 2022

சீனாவில் தெளிவற்ற காலநிலை காரணமாக 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதல் பலர் காயம்

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஜெங்ஜவ் நகரில் உள்ள பாலம் ஒன்றில் இன்று காலை பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றின் மேல் மற்றொன்று நிற்கும் வகையிலான விபத்து 
ஏற்பட்டு உள்ளது.
இதில், கார்கள், லாரிகள் என 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி கொண்டன. குளிர்கால சூழலை முன்னிட்டு காலையில் தெளிவற்ற வானிலை காணப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு துறையை சேர்ந்த 11 தீயணைப்பு வாகனங்களும், 66 வீரர்களும் உடனடியாக அந்த பாலத்திற்கு சென்றுள்ளனர். பலர் இந்த விபத்தில் காயமடைந்து உள்ளனர். அவர்கள் வாகனங்களுக்குள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணி
 நடந்து வருகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 27 டிசம்பர், 2022

கொரோனா மரணங்கள் இலங்கையில் மீண்டும் பதிவாகியுள்ளன

இலங்கையில் கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த மரணங்கள் 26-12-2022.அன்று  பதிவாகியுள்ளன.  இவ்வாறு உயிரிழந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து 
வரும் நிலையில் இலங்கையும் கொரோனா பரவல் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் எனவும் துறைசார் நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 26 டிசம்பர், 2022

கூகுலில் பட பேட்ஜின் மூலம் தொடர்புடைய இணைய தளங்களை கண்டறிவது எப்படி

பட பேட்ஜின் மூலம் படத்தின் இணையப் பக்கத்தில் உள்ள உள்ளடக்கத்தின் வகையை நீங்கள் அறியலாம்.
Googleளில் படங்களைத் தேடும்போது சில படங்கள் பேட்ஜ்களுடன் இருக்கும். உதாரணமாக, தயாரிப்புகளுக்கு தயாரிப்பு, ரெசிபிகளுக்கு ரெசிபி மற்றும் வீடியோக்களுக்கு வீடியோ. இந்த பட பேட்ஜ்கள் இணையத்தில் 
நீங்கள் என்ன வகையான உள்ளடக்கம் தேவை என்பதை கண்டறியலாம்.
உதாரணமாக, ரெட் வெல்வெட் கப்கேக் ரெசிபியைக் கண்டறிய
 விரும்பினால்:
"ரெட் வெல்வெட் கப்கேக்" என்று தேடவும்.
ரெசிபி ரெசிபி பேட்ஜ் உள்ள படத்தைக் கண்டறியவும்.
படத்தின் கீழ் உள்ள இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
படத்தின் பரிமாணங்களைக் கண்டறிதல்
கம்ப்யூட்டர் உலாவியில் படத்தைத் தேடும்போது படத்தின் பரிமாணங்களைக் கண்டறியலாம்.
உங்கள் தேடல் முடிவுகளில் இருந்து ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
வலது பேனலில், படத்தின் விரிவாக்கப்பட்ட காட்சியின் மீது சுட்டியை நகர்த்தவும்.
உதவிக்குறிப்பு: கம்ப்யூட்டரில், படத் தேடல் முடிவுகளை அளவின்படி வடிகட்டலாம். படத்தைத் தேடிய பிறகு தேடல் பட்டியின் கீழ் கருவிகள் அதன் பிறகு அளவு என்பதைக் கிளிக் செய்யவும்.

படத் தேடல் முடிவுகளை வடிப்பான்கள் மூலம் சுருக்குதல்
படத் தேடல் முடிவுகளுக்கு மேலே உள்ள வடிப்பான்கள் மூலம் குறிப்பிட்ட படங்களை நீங்கள் கண்டறியலாம். என்ன தேடுவது என்பது 
உறுதியாகத் தெரியவில்லை எனில் விரிவான படத்
 தேடலுடன் தொடங்கி வடிப்பான்களைச் சேர்த்து முடிவுகளைச் சுருக்கலாம்.
உங்கள் தேடல் வார்த்தைகளுடன் தொடர்புடைய
 சொற்களை அதிகம் தேடப்பட்டவற்றின் அடிப்படையில் வடிப்பான்கள் காட்சிப்படுத்திடும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வடிப்பான்களைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் தேடல் வார்த்தைகளுடனும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வடிப்பான்களுடனும் பொருந்துகின்ற பட முடிவுகளை நீங்கள் பெறுவீர்கள். ஒரு வடிப்பானை அகற்ற, அதை மீண்டும் தேர்ந்தெடுக்கவும்.
உதவிக்குறிப்பு: வடிப்பான்களில் உள்ள பரிச்சயமற்ற சொற்களை நீங்கள் அடையாளம் காண உதவும் வகையில் பெரும்பாலான வடிப்பான்கள் சிறுபடவுருக்களைக் கொண்டிருக்கும்.
முக்கியம்: சில நாடுகள் அல்லது மொழிகளில் இந்த அ
ம்சம் கிடைக்காது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
ஞாயிறு, 25 டிசம்பர், 2022

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரழந்துள்ளனர்.

ண்டி - அக்குறணை - துனுவில பிரதேசத்தில் இருவர் உயிரழந்துள்ளனர்.
வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரன், சகோதரி 
உயிரிழந்துள்ளனர். 
கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் 18 மற்றும் 19 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது வீட்டில் இறந்தவர்களின் தாய், தந்தை மற்றும் மற்ற சகோதரர் என ஐந்து பேர் இருந்தனர். 
அவரும் மண் மேட்டின் கீழ் விழுந்து படுகாயமடைந்து கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் இந்த விபத்தில் தாய் மற்றும் தந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 24 டிசம்பர், 2022

எப்பாவல, கிராலோகம பகுதியில் காணாமல் போன சிறுவன் மீட்ப்பு


அநுராதபுரம் எப்பாவல - கிரலோகம, கெடதிவுல பிரதேசத்தில் காணாமல் போன ஒன்பது வயது சிறுவன், ரிக்கில்லகஸ்கட - ஜோன்ஸ்லன் தோட்டத்திலுள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மின்சார திருத்த வேலைகளில் ஈடுபடும் நபர் ஒருவரின் நெருங்கிய நண்பரின் வீட்டில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் 
தல்துவ தெரிவித்தார்.
பின்னர், சம்பந்தப்பட்ட மின்சார திருத்த வேலை செய்யும் நபரை காவல்துறையினர் அங்கு இருந்த போது கைது செய்தனர், காணாமல் போயிருந்த சிறுவனையும் காவல்துறையினர் 
மீட்டுள்ளனர்.
குறித்த சிறுவன் கடந்த 19-12-2012  அன்று இரவு முதல் காணாமல் போயுள்ளதாக தாய் காவல்நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 23 டிசம்பர், 2022

புத்துாா் - வாதரவத்தை யில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் சடலமாக மீட்பு

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிாிவிற்குட்பட்ட புத்துாா் - வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். 
மாலை ஆடு மேய்ப்பதற்காக சென்றிருந்த வாதரவத்தை - பொிய பொக்கணை பகுதியை சோ்ந்த செ.ராகுலன் (வயது25) என்ற இளைஞன் காலை ஆகியும் வீடு திரும்பவில்லை. 
இந்நிலையில் இளைஞனின் தந்தை இளைஞனை தேடிச் சென்றிருந்தபோது நீாில் மூழ்கி அவா் உயிாிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வலிப்பு காரணமாக நீாில் மூழ்கி உயிாிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தொியவந்துள்ளது. 
சம்பவம் தொடா்பாக அச்சுவேலி பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வியாழன், 22 டிசம்பர், 2022

கிளிநொச்சி பளையில் கோர விபத்தில் பலியான இளம் தாயார்..தவிக்கும் பிள்ளைகள்.

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கிளிநொச்சி பளையில் நேற்றையதினம் விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் 
இ.போ.ச பேருந்தில் பயணித்த இரு பிள்ளைகளின் தாயார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் முல்லை 
வலயக்கல்விப் 
பணிமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுபவர்
குறித்த உத்தியோகஸ்தர் குழந்தைகளின் பராமரிப்புக் 
கருதி வீட்டுக்கும் – பணியகத்துக்குமிடையில் தினமும் பயணிப்பவர் என கூறப்படுகின்றது.இந்நிலையில் , “அந்த பஸ்ஸுக்கு இன்னொரு பயணி கிடைப்பார். புது ஓட்டுநர் கிடைப்பார். பணிமனைக் கடமைகளுக்கு இன்னொரு உத்தியோகத்தர் கிடைப்பார்
குறித்த உத்தியோகஸ்தர் குழந்தைகளின் பராமரிப்புக் கருதி வீட்டுக்கும் – பணியகத்துக்குமிடையில் தினமும் பயணிப்பவர் என கூறப்படுகின்றது.இந்நிலையில் , “அந்த பஸ்ஸுக்கு இன்னொரு பயணி கிடைப்பார். புது ஓட்டுநர் கிடைப்பார். பணிமனைக் கடமைகளுக்கு இன்னொரு உத்தியோகத்தர் கிடைப்பார்
இந்தப்பிள்ளையின் தாய்க்கு இன்னொரு மகள் கூட இருப்பார். தாயில்லாத இந்த இரு பாலகர்களுக்கும், தாய் எப்படிக் கிடைப்பாள்?” வீதியிலேயே கருகும் கனவுகளுக்கும், வீடுகளில் கதறித்தீராத கண்ணீருக்கும் யார்
 பதிலளிப்பது?

இதே விபத்தில் பத்து வயது மாணவி ஒருவரின் கை முழங்கையுடன் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு அமைய போகிறது.எனவே இவ்வாறான சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இப்படியான அதிவேக போக்குவரத்துக்குள் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப்போகின்றதோ.
எமது இணையங்களின் ஆழ்ந்த இரங்கல்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
புதன், 21 டிசம்பர், 2022

யாழ் சென்ற அரச பேருந்து தடம்புரண்டு பாரிய விபத்து..ஒருவர் பலிபலர் படுகாயம்!!!.

கிளிநொச்சி – பளை ஏ9 வீதியில், முள்ளியடி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் பலியானதுடன் 15 இற்கு மேற்பட்டவர்க
ள் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.21-12-2022..இன்று மாலை 6 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.முள்ளியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 100 மீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டு 
தடம்புரண்டுள்ளது.
குறித்த பேருந்தில் பயணித்த ஒருவர் பலியானதுடன், 15 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.கடுமையான காயங்களுக்குள்ளான பலர் பளை வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு நோயாளர் காவுவண்டிகளில் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக பயணம் செய்ததன் காரணமாகவே வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானதாக வீதியில் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
செவ்வாய், 20 டிசம்பர், 2022

புளோரிடாவில் படுக்கை அறையை சுத்தமாக வைக்கச் சொன்னதால் ஆத்திரத்தில் தாய் மீது கொலை முயற்சி

அமெரிக்காவின் புளோரிடாவில் ஜேக்கப் ப்ரூவர் என்ற 17 வயது சிறுவன், தன் அம்மாவை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை 
ஏற்படுத்தியது. 
ஜேக்கப்பிடம் அவனது அறையை சுத்தமாக வைத்திருக்கும்படி அவனது தாய் கூறியிருக்கிறார். தொடர்ந்து இவ்வாறு அறிவுறுத்தியதால் ஆத்திரமடைந்த ஜேக்கப், தாயுடன் வாக்குவாதம் செய்துள்ளார். 
வாக்குவாதம் முற்றிய நிலையில், கத்தியால் தாயை குத்தி உள்ளார். அத்துடன் பாத்திரத்தால் தலையில் அடித்துள்ளார். 
இதில் பலத்த காயமடைந்த தாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஜேக்கப்பை கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 
பின்னர் சிறார் சிறையில் அடைக்கப்பட்டான். துப்பறிவாளர்கள் நடத்திய நேர்காணலில் பேசிய ஜேக்கப் தனது தாயை பலமுறை கத்தியால் 
குத்தியதாக கூறினான். 
தாயை கொல்வதற்கு துப்பாக்கி வேண்டும் என ஜேக்கப் தன் நண்பரிடம் கேட்டு மெசேஜ் அனுப்பி உள்ளான். 
அவன் துப்பாக்கி கொண்டு வர முடியாது என்று கூறியதுடன், கத்தி கொண்டு வருவதாகவும் கூறி கத்தியை கொண்டு வந்து 
கொடுத்திருக்கிறான். 
மேலும், அந்த நண்பர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
திங்கள், 19 டிசம்பர், 2022

சாவகச்சேரியில் வியட்நாமில் உயிரிழந்த பொதுமகனின் உடலம் அடக்கம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால் எதிலியாக  புறப்பட்டு, இடையில் முயற்சி பயனளிக்காமையால், உயிரை மாய்த்துக்கொண்ட யாழ் சாவகச்சேரி பொதுமகனின் உடலம், 19-12-2022.இன்று அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
வியட்நாமில் உயிரை மாய்த்துக் கொண்ட, யாழ் சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் உடலம் 19-12-2022.இன்று சாவகச்சேரியின்,  கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் அடக்கம் 
செய்யப்பட்டது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கமுடியாமல், கடந்த நவம்பர் 8ஆம் திகதியன்று, கனடா செல்ல முற்பட்டிருந்த நிலையில் வியட்நாம் கடற்பரப்பில் 300க்கும் மேற்பட்ட இலங்கையர்களுடன் சென்ற மீன்பிடி படகு சேதமடைந்து, கவிழும் நிலைக்கு உள்ளானது.
இதன்போது அதில் இருந்த ஒருவர், இலங்கையின் கடற்படையுடன் தொடர்புக்கொண்டு உதவியை கோரியிருந்தார்.
இந்தநிலையில் ஜப்பானிய கடற்படை கப்பல் ஒன்று, குறித்த ஏதிலிகளை கையேற்று, பின்னர் அவர்களை வியட்நாம் கடற்படையினரிடம்
 கையளித்தது.
இதனையடுத்து குறித்த ஏதிலிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இதனை குறித்த ஏதிலிகள் ஏற்றுக்கொள்ளாதநிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருவர் உயிரை மாய்த்துக் கொள்ள 
முயற்சித்தனர்.
அவர்கள் இருவரும், உடனடியாக வியட்நாமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், அவர்களில் ஒருவரான சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தநிலையில் உயிரிழந்தவரின் உடலத்தை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கம் உள்ளிட்ட பல தரப்பினரிடம் அவரது உறவினர்கள் கோரிக்கை 
விடுத்திருந்தனர்..
எனினும் இலங்கை அரசாங்கம், நிதியுதவி எதனையும் மேற்கொள்ளாத நிலையில் தனியாரே அதற்கான நிதியை வழங்கினர் என்று தகவல்கள்  வெளியாகியிருந்தன. 
இதனையடுத்து சுமார் ஒரு மாதத்தின் பின்னர் கிரிதரனின் உடலம் நேற்று முன்தினம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையில், தொடர்ந்தும் வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள எஞ்சியுள்ள இலங்கை ஏதிலிகள் தொடர்ந்தும் தெளிவற்ற நிலையே
 தொடர்கிறது.
இதேவேளை இந்திய பெருங்கடல் பிரதேசத்தில் பிரித்தானியாவின் ஆளுகைக்குள் உள்ள  டீகோ கார்சியாவில் தங்க வைக்கப்பட்;டுள்ள இலங்கையின் ஏதிலிகளுக்கு ஏதிலி அந்தஸ்தை வழங்குவதற்கு பிரித்தானியா தொடர்ந்தும் மறுத்து வருகிறது.
எனினும் ருவண்டாவுடன் செய்துக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையின் கீழ் அவர்களை அங்கு குடியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
இதுஇவ்வாறிருக்க, அண்மையில் குறித்த ஏதிலிகளில் மூன்று பேர் மருத்துவ சிகிச்சைக்காக அண்மையில் ருவண்டாவுக்கு 
அனுப்பப்பட்டனர்.
எனினும் அவர்கள், மருத்துவ சிகிச்சையின் பின்னர், மீண்டும் டீகோ கார்சியாவுக்கு அழைத்து வரப்படுவர் என்று பிரித்தானியா நிர்வாகம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
ஞாயிறு, 18 டிசம்பர், 2022

நாட்டில் லெமசூரிய பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து

              வலப்பனை கீர்த்தி பண்டாரபுர வழிவூடான கண்டி - பண்டாரவளை பிரதான வீதியின் ஹங்குராங்கெத்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட லெமசூரிய பகுதியில் பேருந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து.18-12-2022. இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
கண்டியிலிருந்து ஹங்குராங்கெத்த வழியாக பதுளையை நோக்கியும்,பண்டாரவளையிலிருந்து அதே வழியில் கண்டியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவித்த போது இவ்விரு பேருந்துகளிலும் பயணித்த பயணிகளில் 15 பேர் விபத்துக்குள்ளாகி பலத்த காயங்களுடன் கீர்த்தி பண்டாரபுர கழகத்தின் பிரதேச வைத்தியசாலைக்கும், ஒரு சிலர் வலப்பனை பிரதேச வைத்தியசாலைக்கும் கொண்டு செல்ப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேககட்டுப்பாட்டை மீறிய இவ்விரு பேருந்துகளும் மோதிக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 17 டிசம்பர், 2022

யாழ் குடும்பஸ்தர்.கனடா ஆசையினால் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்

சட்டவிரோதமாக கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த இலங்கையர்கள் 300 பேர் வியட்நாம் அருகே படகு பழுதடைந்ததால விய்ட்நாமில் தங்க வைப்பட்டிருந்தனர்.இவ்வாறு அங்கு தஙகவைக்கபப்ட்டிருந்தவர்கள் நாட்டுக்கு அழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த நிலையில், நாட்டுக்கு தாம் மீளவும் 
திருப்பி செல்ல
போவதில்லை என தெரிவித்து இருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அதில் யாழ் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.வியட்நாம் நாட்டில் மரணமடைந்த,சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் சற்று முன்னர் விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு 
வரப்பட்டிருக்கிறது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.இதேவேளை உயிரிழந்தவரின் இறுதிக்கிரியைகள் நாளை யாழ்ப்பாணம் சாவகச்சேரி கல்வயலில் உள்ள அவரின் வீட்டில் நடைபெறும் என குடும்பத்தினர் 
தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருகடியால் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், தங்களது பயண ஆபத்துக்களை அறியாது செல்வதனால் இவ்வாறான இழப்புக்களை நாம் சந்திக்கவேண்டியுள்ளது.அதேவேளை உயிரிழந்த கிரிதரன் மூன்று குழந்தைகளின் தந்தையாவார். வறுமையை போக்க தனது கணவர் வெளிநாடு செல்ல முயன்றதாக உயிரிழந்தவரின் மனைவி
 தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்த பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.இந்நிலையில் குடும்ப கஸ்ரத்தை போக்கவென சட்டவிரோத வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோர் இனியாவது அது தொடர்பில் சிந்தித்து செயலாற்றுவது, அவர்களது குடும்பத்தை நாட்டாற்றில் தவிக்க விடாது காப்பாற்றும்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>மரண அறிவித்தல் செல்வன் நடேசலிங்கம் (தம்பு பேபி)அக்‌ஷயன் 13.12.22

பிறப்பு-12-08-2023-இறப்பு-13-12-2022
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட நடேசலிங்கம் அக்‌ஷயன் அவர்கள் 13-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், திரு.திருமதி தம்பிப்பிள்ளை தம்பதிகள், திரு. திருமதி திருநாவுக்கரசு தம்பதிகளின் அன்புப் பேரனும்,நடேசலிங்கம்(தம்பு பேபி) நந்தினி தம்பதிகளின் பாசமிகு மகனும்,நடேசலிங்கம் செந்தூரி அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 15 Dec 2022 4:00 PM - 7:00 PM
Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Friday, 16 Dec 2022 3:00 PM - 7:00 PM
Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Saturday, 17 Dec 2022 2:00 PM - 7:00 PM
Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 18 Dec 2022 2:00 PM - 7:00 PM
Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
கிரியை
Get Direction
Monday, 19 Dec 2022 1:00 PM - 3:00 PM
Bremgarten cemetery (Bremgartenfriedhof) Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
 ஆனந்தன் - மாமாMobile : +41786464930 பானுஷாந்தன் - சகோதரன்Mobile : +41787420637 கெங்கன் - மாமாMobile : +41797604807 பரமு - மாமாMobile : +41796583612 நடேசலிங்கம்(பேபி நந்தினி) - தந்தைMobile : +41763262647 உதயன் - மாமாMobile : +41792458216 வசந்தி - மாமிMobile : +41799444570 ஈசன் - சித்தப்பாMobile : +41765248374 சகுந்தலா(கௌசி- குண்டு பத்தமேனி) - அத்தைMobile : +94773922029 நளினி - சித்திMobile : +94764029397 சிவனடி - மாமாMobile : +33650129462
கண்ணீர் அஞ்சலி
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி

வெள்ளி, 16 டிசம்பர், 2022

அமரர் தம்பு. துரைராஜாவின் 20ம் ஆண்டு நீங்காத நினைவுகள் மற்றும் மூவர் து-சிதம்பரம்.து.தங்கரத்தினம். இ .கனகசபாபதி 16.12.22

மலர்வு .15-.04-1926. உதிர்வு .14-01.2004

திதி -16-12-2022
யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமா​வும் வசிப்பிடமா​கவும் மாகக் கொண்ட
அமரர் ,தம்பு துரைராஜா.அமரர் துரைராஜா-சிதம்பரம். (பூரணம்).அமரர் துரைராஜா தங்கரத்தினம்.
தோற்றம் 06-05-1949-மறைவு-23-01-2005.(தங்காள் ) அமரர் இராசையா கனகசபாபதி.தோற்றம் 01-04-1949- (தேவர் பிறப்பிடம் கோண்டாவில் ).வாழ்ந்த இடம்நவற்கிரி.)அகியோரின் 
 நீங்காத நினைவுடன் இருபதாவது  ஆண்டு
 நினைவஞ்சலி.(திதி )16-12-.2021.இன்று
காலங்கள் ஓடினும் கவலைகள் மாறுமோ...???
கண்ணீரின் வலிகளைக் கடக்கத்தான் முடியுமோ...??
பாலகர்கள் வளர்ந்து வாழ்தலும் அறிவீரோ
பாசங்கள் மறையாமல் தேடுதல் அறிவீரோ
மறைந்ததோ உங்கள் உடல் மனங்களோ உன்னுடன் தினங்களும் தேடும் அன்பியல் தந்தை நின் நிசம்
உருவம் மறைந்து ஆண்டு இருபது 
இன்னும் பல வருடம் இல்லை மறுபிறப்பும்
நம்மை வந்தடைய உங்களை  விட யாருளரோ
முன்னையோர் தவம் செய்தோம் நற்தந்தையாக்
தந்தையராக கணவனாய் நல் உடன்பிறப்பாய் மைத்துனனாய்
மகனாய் மருமகனாய் இப்பூமியில் எம் குடும்பத்தில்
வந்த வரம் பெற்றோமே வருவாய் மீன் பிறப்பாய்
வந்தெம் குடிபுகுவாய் அன்பனே வரும் வாசல்
காத்திருப்போம் அன்புப் பிள்ளைகள் சகோரர்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் புட்டப்பிள்ளைகள்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
தகவல்:,குடும்பத்தினர்.
 உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.ஓம் சாந்தி, உங்கள் பிரிவால் துயருறும்
, பிள்ளைகள், இனிக்கும் இன்முகமும்
கொண்ட ஈடுஇணையற்ற
எங்கள் தந்தையே மற்றும் 
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகிறோம் ஐயா அப்பா அம்மா அக்கா அத்தான் 
ஓம் சாந்தி ஓம் சாந்தி சாந்தி,,
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
..உங்கள் ஆத்ம சாந்திக்காக
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி !!!
தகவல்
குடும்பத்தினர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வியாழன், 15 டிசம்பர், 2022

நாட்டில் சிமெண்ட் விலை மேலும் ரூ.1,000 குறைக்கப்படலாம்

நாட்டில் சீமெந்து விலையில் ஏற்பட்டுள்ள அண்மைய வீழ்ச்சியானது, சீமெந்து இறக்குமதியாளர்களின் மாபியாவினால் விலை நிர்ணயம் செய்யப்படுவதை நிரூபிப்பதாக தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.
"இந்த நாட்டில் டாலர் நெருக்கடி ஏற்பட்டால், சீமெந்து இறக்குமதி செய்வதை நிறுத்துங்கள்.
 இறக்குமதியாளர்களால் அதிக விலைக்கு சீமெந்து விற்கப்படும் போது, ​​சீமெந்து மூட்டையின் விலையை மேலும் 1000 ரூபாவால் குறைக்க 
முடியும்" என்றார். 
விலைக் கட்டுப்பாட்டை நிர்ணயிப்பதன் மூலம் உள்ளூர் சிமென்ட் உற்பத்தியாளர்களை அரசாங்கம் பலப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

புதன், 14 டிசம்பர், 2022

நாட்டில் 5 அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் திடீரென குறைத்த விலைப்பட்டியல்

நாட்டில் 5 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. 14.12.2022.இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் சிவப்பு பருப்பு (ஒரு கிலோகிராம்)4 ரூபா 385 ரூபா, கோதுமை மா (ஒரு கிலோகிராம்) 15 ரூபா
250 ரூபா. வெள்ளைப்பூடு (ஒரு கிலோகிராம்) 35 ரூபா 460 ரூபா.வெங்காயம் (ஒரு கிலோகிராம்)9 ரூபா 190 ரூபா.உள்ளூர் டின் 
மீன் 5 ரூபா 490 ரூபா.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>