siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 30 நவம்பர், 2020

மரண அறிவித்தல் திரு பழனித்துரை.தேவநாதன் .29-11-20.

யாழ் அச்சுவேலி பத்தமேனியை பிறப்பிடமாகவும் சுவிஸ் (oberburg)ஐவசிப்பிடமாகவும்கொண்ட 
திரு பழனித்துரை.தேவநாதன் (தேவன்) அவர்கள் 29-11-2020. ஞாயிற்றுக்கிழமை. அன்று. இறைபதம் அடைந்தார் (இவர் அச்சுவேலிமகாவித்தியலத்தின்பழைய மாணவர் ஆவார்).இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம் .
அன்னாரின் பிரிவால்
  துயருறும் குடும்பத்தினர்  
உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!

நிலாவரை.கொம் செய்திகள் >>>



சாரையடியில் சிறுமி சடலமாக மீட்பு; விளையாட்டு விபரீதமானது

 –  முதலாம்  இணைப்பு.>>>>>>>

பருத்தித்துறை – சாரையடி பகுதியில் வீட்டில் தனித்திருந்த 09 வயது சிறுமி ஒருவர் கழுத்துப்பட்டியால் தூக்கிட்ட நிலையில் சடலமாக 
மீட்கப்பட்டுள்ளார்.
தாய், தந்தையர் வெளியே சென்ற நிலையில் சிறுமி வீட்டில் தனித்திருந்தார் என்றும் வீட்டார் திரும்பி வந்து பார்த்த போது,
 அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை அடுத்து அவரை மீட்டு பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு
 சென்றுள்ளனர்.
இருந்தபோதிலும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியாசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 >>>>>
 இரண்டம்- இணைப்பு
 >>>>
 பருத்தித்துறை சாரையடியில் மரணித்த சிறுமி விளையாட்டாக தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னலில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார் என்று திடீர் இறப்பு விசாரணையில்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் தனிமையில் இருந்த சிறுமி, தமையனின் கழுத்துப் பட்டியை எடுத்து அவரது உயர மட்டத்தில் காணப்பட்ட யன்னல் பிணைச்சலில்கட்டி கழுத்தில் சுருக்கிட்டுள்ளார். சுருக்கு இறுகியதால் மாணவி
 உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சிவராஜா விசாரணைகளை முன்னெடுத்தார். உடற்கூற்றுப் பரிசோதனையை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி சுதேவா முன்னெடுத்தார்.
கழுத்தில் பட்டி இறுகிக்கொண்டதால் சிறுமி உயிரிழந்தார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்சி சிறீதரன் (வயது-9) என்ற சிறுமியே இவ்வாறு
 மரணமடைந்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

 

 

மரண அறிவித்தல் திரு மயில்வாகனம் பத்மநாதன் 30-11- 20

மலர்வு-26 11 1937-உதிர்வு-30-11- 2020.
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், உடுவில் பிரதேச செயலக வீதி, சுன்னாகம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பத்மநாதன் (ஓய்வுபெற்ற உடற்கல்வி போதனாசிரியர்- யாழ்ப்பாண பல்கலைக்கழகம், பலாலி ஆசிரியர்- கலாசாலை உடற்கல்வி விரிவுரையாளர்) அவர்கள் 30-11-2020  இன்று.திங்கட்கிழமை  இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான
 மயில்வாகனம் சாவித்திரி தம்பதிகளின் அன்பு மகனும், விஜயராணி அவர்களின் அன்புக் கணவரும், ரஜனி, கரிகரன், காலஞ்சென்ற மயூரன்(பாவாணன்/கெனடி), லிங்கரன், சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், டேவிட், பத்மலோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும், பிலிசியா, டிலோரன்ஸ், ஜொஹானி, வலன்சியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2020 செவ்வாய்க்கிழமை 
அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் சுன்னாகம் கொத்தியாலடி 
இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் 
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் 
அன்னாரின் பிரிவால்
  துயருறும் குடும்பத்தினர்  
உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!

.தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 குடும்பத்தினர் Mobile : +94771298159   சுதா - மகன்
Mobile : +447448432036  

நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 29 நவம்பர், 2020

காங்கேசன் கடலில் .குளிக்கச் சென்ற இளைஞர்களை அள்ளிச் சென்ற அலை

 யாழ்  வலி வடக்கு தையிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கடலில் குளிக்கச் சென்ற போது அலையில் சிக்கி காணமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும், கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது;
வலிகாமம் வடக்கு பகுதிக்குட்பட்ட பலாலி பொலிஸ் பிரிவு, தையிட்டியைச் சேர்ந்த 19 வயது இளைஞர்கள் இருவர் கடல் குளிக்கச் சென்ற போது அலையில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.
இவ் அனர்த்தத்தில் தையிட்டி தெற்கு, தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன்-நிரோசன் மற்றும் மாசிலாமணி-தவச்செல்வம் ஆகிய 19 வயது இளைஞர்களே அலையில் சிக்கி காணாமல் போயுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அலையில் சிக்கி காணாமல் போயுள்ள மாசிலாமணி-தவச்செல்வம் என்ற இளைஞருக்கு திருமணமாகி 10 நாட்களே ஆகியுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




நாட்டில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வங்காள விரிகுடாவின் மாற்றம்

அடுத்துவரும் 24 மணிநேரத்தில் வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் குறைந்த அழுத்தப் பகுதியை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
.இதனையடுத்து இது அடுத்த சில
 நாட்களில் இலங்கையின் வானிலையில் பாதிப்புக்கள் இருக்கும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று ஊவா, மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஒரு சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மழை 
அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.இந்த
 மழைவீழ்ச்சி 50 மி.மீ வரை 
பதிவாகலாம். எனவே கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து 
வளிமண்டலவியல் திணைக்களத்தால் அடுத்த
 சில நாட்களுக்கு வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





சனி, 28 நவம்பர், 2020

புளியங்களம் தேவநகரில் மதில் இடிந்து வீழ்ந்து சிறுவன் மரணம்

திருகோணமலை – புளியங்களம் தேவநகரில் வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில் 10 வயதுடையச் சிறுவன்
 உயிரிழந்துள்ளார்.
காற்றுடன் கூடிய கடும் மழையால் வீட்டின் இடிந்து விழுந்துள்ள நிலையில், அதில் சிக்குண்டிருந்த சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் சிறுவன் பலத்தக் காயங்களுக்கு உள்ளாகியிருந்ததால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 26 நவம்பர், 2020

நாட்டில் தொலைதூரக் கல்விமுறையை தொடர்ந்தும் விரிவுபடுத்த திட்டம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் பின்னர் மீளவும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வைரஸ் தொற்றிற்கு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் தொலைதூர கல்வி முறையை தொடர்ந்தும்
 விரிவுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.பல பிரதேசங்களில் இந்த கல்வி முறையின் கீழ் சாதகமான 
முடிவுகள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக தொலைதூர கல்வி முறையை பயன்படுத்துவதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும்
 தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




புதன், 25 நவம்பர், 2020

அமரர் ஸ்ரீஸ்கந்தராசா நக்கீரன் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 24.11.20

பிறப்பு-   15-04-1984 -- இறப்பு--24-11-2019 
யாழ் உரும்பிராய் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட  
அமரர். ஸ்ரீஸ்கந்தராசா  நக்கீரன் 
அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.,24-11-2019..அன்று. 
ஆண்டு ஒன்றானாலும் 
ஆறமுடியவில்லை எம்மால்
இப்புவியில் ஐயா உம்மை நாம் 
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கிறோம் 
ஓர் ஆண்டுக் கதியில் கரைந்தோடிச் சென்றாலும் – 
உங்கள்
நினைவுகள் கல் மேல் பொறித்த எழுத்துக்கள் போல்
எங்களை விட்டு அகலவில்லை!
 எங்கள் அப்பாவே  இன்ப துன்பங்களை – நீங்கள்
அருகிருந்து பங்கெடுத்து கொள்வதை
நாம் உணர்கின்றோம் – நீங்கள்
இல்லையெனும் உணர்வே
நெஞ்சுருகி கொல்லுதப்பா!
இருந்தாலும் என்றென்றும் எங்களுக்கு
இறைவன் நீங்கள் தான் அப்பாவே  
உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி
 நிற்கின்றோம்.
   அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய மனைவி பிள்ளைகள் குடும்ப தினரும்  நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் உரும்பிராய்  வாழ்  நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .... 
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத 
நினைவுகளுடன் வாழும்
 உங்கள்அன்பு  மனைவி பிள்ளைகள் 
அன்னாரின் பிரிவால்
  துயருறும் குடும்பத்தினர்  
உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல் குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பலத்த காற்று..முல்லையில் பாடசாலையில் சரிந்து வீழ்ந்த பாரிய மரம்

நிவர் புயலின் தாக்கம் காரணமாக இலங்கையின் வடக்கே முல்லை மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசபாடசாலையொன்றில்.25-11-20. இன்று காலை பாரிய மரமொன்று சரிந்து 
வீழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தெய்வாதீனமாக எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை. பாடசாலை வளவில் நின்ற பாரிய மரமே சரிந்து வீழ்ந்தள்ளதெனினும் அருகிலுள்ள
 பாடசாலைக் கட்டிடங்களுக்கு சேதங்கள் எவையும் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.முல்லை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள் முன்கூட்டியே குறித்த 
இடங்களிலிருந்து வெளியேறி விட்டதால், நிவர் புயலினால் வரப்போகும் சேதங்களை தவிர்க்க முடிந்துள்ளதாக
 மாவட்டத்தின் இடர் முகாமைத்துவ அதிகாரியொருவர் தெரிவித்தார்.எவ்வாறெனினும், முல்லை மற்றும் வடக்கு மாகாண மக்கள் இப்புயல் தொடர்பில் தொடர்ந்து 
மிகவும், விழிப்பாக இருக்க வேண்டுமெனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




விபத்தில் மன்னாரில் படுகாயமடைந்த அரச உத்தியோகஸ்தர் மரணம்

மன்னார் தள்ளாடி சந்தியில் கடந்த 13-11-20. ஆம் திகதி இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ் போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அரச உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் புள்ளி 
விபர திணைக்களத்தின் தகவல் தொழில் நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றிய வவுனியாவை சேர்ந்த
 தனபாலசிங்கம் நிஸாந்தன் (வயது-30) என்பவரே சிகிச்சை பலன் இன்றி  24-11-20.,அன்று உயிரிழந்தார்.
மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக சென்ற டிப்பர் வாகனமும், திருக்கேதீஸ்வரம்- தள்ளாடி பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் தள்ளாடி 
சந்தியில் கடந்த 13-11-20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை சுமார் 8.15 மணியளவில் மோதி விபத்திற்கு உள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் மன்னார் நோக்கி வந்த குறித்த 
நபர் படுகாயம் அடைந்தார்.குறித்த நபர் கடமையின் நிமித்தம், திருக்கேதீஸ்வரம்- தள்ளாடி பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக சென்ற டிப்பர் வாகனத்துடன் தள்ளாடி
 சந்தியில் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதன் போது குறித்த நபர் படுகாயமடைந்த 
நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக 
யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.இந்நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 11 தினங்களாக அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை
 பெற்று வந்த நிலையில் குறித்த நபர் 24-11-20.அன்று  சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




செவ்வாய், 24 நவம்பர், 2020

யாழில் உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் மாரடைப்பாலேயே மரணம்

யாழ்ப்பாணம் – கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சட்ட மருத்துவ அறிக்கை 
வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருமுருகண்டியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் தயாகரன் (வயது-48) என்பவரே இவ்வாறு 
உயிரிழந்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


தாழமுக்கம் நிவார் புயலாக உருவாகியுள்ளது 48 மணி நேரத்தில் கரை கடக்கும்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் நிவார் புயலாக உருவாகியுள்ள நிலையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வடக்கு கரையோரமாக தமிழக கரையோரத்தை நோக்கி 
நகரவுள்ளது.
இதனை வளிமண்டலவியல் திணைக்களம் 
தெரிவித்துள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 23 நவம்பர், 2020

எரவல தர்மபால வித்தியாலய மைதானத்தில் மாணவன் மீது துப்பாக்கி சூடு

கொழும்பு – மஹரகம, எரவல தர்மபால வித்தியாலயத்தின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் மீது 22-11-20.அன்று  மாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் குறித்த மாணவன் காயமடைந்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
குறித்த மாணவன் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் அருகிலுள்ள வீட்டு வளாகத்திற்குள் வீழ்ந்த பந்தினை எடுக்க சென்ற போதே இவ்வாறு வாயு துப்பாக்கி ஒன்றால் துப்பாக்கி பிரயோகம் 
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வைத்தியர் ஒருவர் கைது 
செய்யப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 22 நவம்பர், 2020

யாழில் பொலிஸ் அதிகாரியால் அழகான முறையில் தயாராகும் கீரைப்பிட்டு

 

நாட்டில் போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக சோறும், பிட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என சில
 தினங்களுக்கு முன்னர் நீதிமன்றில் யாழ்ப்பாண பொலிஸ் தலைமையதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மன்றுரைத்திருந்தார். இவருடைய இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான நிலையில், ரைட் அப்கள், மீம்ஸ்கள் மூலமாக பிட்டு மற்றும் பீட்சாவை 
சம்மந்தப்படுத்தி நெட்டிசன்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள் பெர்னாண்டோ மீதான தங்களுடைய விசனத்தை 
வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் யாழ்ப்பாணத்தவர்களின் உணவு 
குறித்து தெரிவித்த கருத்துக்களுக்குகடுமையான எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ள நிலையில், யாழில் வயோதிப மாது 
ஒருவர் மிகவும் தத்துரூபமான முறையில் யாழ்ப்பாணக் கீரைப்பிட்டு செய்கின்றார் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



மட்டுவில் பகுதியில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

யாழ் தென்மராட்சியில் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் 22 வயது பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் 21-11-20.அன்று மதியம் 12 மணியளவில் தேவாலய வீதி மட்டுவில் கிழக்கு
 மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
தந்தை, தாய் வேலை நிமித்தம் வெளியில் சென்றிருந்தவேளை வீட்டினுள் சுவாமி அறைக்குள் குறித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவ வேளை
 பெண்ணின் இரு தம்பிமாரும் (சிறியவர்கள்) விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். தாத்தாவும் வீட்டில் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்பவத்தில் தர்மகுலராசா மாருதி வயது 22 என்பவரே உயிரிழந்துள்ளார்.சாவகச்சேரி 
நீதிமன்ற நீதவானின் பணிப்பின் பின்னர் தென்மராட்சி பிரதேசத்தின் திடீர் மரண விசாரணை அதிகாரி சி. தவமலர் விசாரணைகளை
 மேற்கொண்ட பின் யாழ்.போதனா 
வைத்தியசாலையின் சட்டவைத்திய நிபுணரின் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம்
 கையளிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

தேத்தாதீவில் சிற்றுண்டி வாங்கச் சென்ற சிறுமியை பந்தாடியது லொறி

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தேத்தாதீவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியாசலை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.விபத்தில் தேத்தாதீவைச் சேர்ந்த 7 வயதுடைய மயில்வாகன் சனுஸிகா எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேத்தாதீவு கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (20) பணிஸ் வாங்குவதற்காக பிரதான வீதியை குறுக்கிட்டு கடைக்குச் சென்று திரும்பி வந்தபோது, 
சிறுமி மீது சிறிய ரக லொறி ஒன்று
 மோதியுள்ளது.சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு
 கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக 
சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.இந்நிலையில், 20-11-20.அன்று 
 இரவு சிறுமி உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் லொறியின் சாரதி களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது
 செய்யப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வடக்கு மாகாணஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பாடசாலை செல்ல வேண்டுமா

வடக்கு மாகாணத்தில் ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி எல்.இளங்கோவன் 
தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாடசாலை அதிபர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,
“மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கு
 23-11-20.அன்று  பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையான ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் (மேல் நிலை பாடசாலைகளுடன் இயங்கும் ஆரம்ப பிரிவுகள் உட்பட) பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டியதில்லை என்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் 
தெரிவித்துள்ளார்.
எனினும் ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பாக கணிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்கள் பாடசாலை அதிபர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 21 நவம்பர், 2020

மரண அறிவித்தல் திரு .சிதம்பரன் கிருஸ்ணபிள்ளை 22 .11. 20

யாழ் ஆவரங்கால் சர்வோதயா வீதியை பிறப்பிடமாகவும் 
வதிவிடமாகவும் கொண்ட. 
திரு. சிதம்பரன் கிருஸ்ணபிள்ளை 
                          அவர்கள் 22-11-20. ஞாயிற்றுக்கிழமை. அன்று. இறைபதம் அடைந்தார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம் .
அன்னாரின் பிரிவால்
  துயருறும் குடும்பத்தினர்  
உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!

நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 17 நவம்பர், 2020

கரவெட்டியைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர்.17-11-20. இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – வடமராட்சி மாதா கோவில்வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டியைச் சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் (வயது-23) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் கோண்டாவில் கிழக்கு, வன்னியர்சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து
 கல்வி கற்றுவந்திருக்கின்றார்.
அந்த வீட்டிலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை இடம்பெற்றுவருகின்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>



திங்கள், 16 நவம்பர், 2020

சாதனை மாணவன் வடக்கிற்கு சேவையாற்றுவதே எனது நோக்கம்

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் 2020 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி 195 புள்ளிகளை பெற்று ச.ஆர்வலன் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார்.
பொறியியலாளராக வந்து வடக்கு மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 14 நவம்பர், 2020

அனைவர்க்கும் இனிய தித்திக்கும் தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்

உலக தமிழ் உள்ளங்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்.
மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய 
உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவக்கிரி http://lovithan.blogspot.com/ இணையம் நவக்கிரி.கொம் நவக்கிரி நவக்கிரி .கொம்    .நிலாவரை.கொம்  இணையங்களின் 
இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம்
தீபாவளி பலதேசங்களில் வாழும் அனை வரும்
 கொண்டாடி மகிழ்வார் 
 ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். 
மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து பரவசம் அடைவர்.
வாழ்கவளமுடன்
நிலாவரை.கொம் செய்திகள் >>>






வெள்ளி, 13 நவம்பர், 2020

யாழில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி சிறுமி.மரணம்

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்குண்டதால் கழுத்து இறுக்கி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கோயில் வீதியைச் சேர்ந்த உயிந்தன் சாதுரியா (வயது 7) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த சிறுமி சென். ஜோன் பொஸ்கோ வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவி 
எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 3-ஆம் திகதி குறித்த சிறு மி ஊஞ்சல் ஆடுவதற்காக மரத்தில் கொழுவி இருந்த 
ஊஞ்சல் கயிற்றினை கதிரையில் ஏறி எடுக்க முற்பட்டுள்ளார்.ஊஞ்சலில் போடப்பட்ட முடிச்சினை அவிழ்க்க 
முற்பட்டபோது கதிரையிலிருந்து விழுந்தபோது கயிறு கழுத்தில் சிக்குண்டுள்ளது.வெளியில் வந்த தாயார் மகள் கயிற்றில் தூங்கி கொண்டு இருப்பதனைக் கண்டு பதறி அவரை உடனடியாக
 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி 12-11-20.அன்று உயிரிழந்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 12 நவம்பர், 2020

கிளிநொச்சி தொண்டமான் நகரில் சுவர் இடிந்து சிறுவன் மரணம்

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தொண்டமான் நகர் பகுதியில் தற்காலிக வீடு ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த நிரோஜன் ரிஷாந்தன் (எட்டு வயது) என்ற சிறுவனே இடிந்து வீழ்ந்த சுவரில் சிக்குண்டு 
உயிரிழந்துள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>