siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 31 டிசம்பர், 2020

பொலன்னறுவையில் கொரோனா கைதிகள் ஐவர் தப்பியோட்டம்

பொலன்னறுவை – கல்லேல கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொரோனாத் தொற்றுடைய சிறைக் கைதிகள் ஐவர்.31-12-20. இன்று காலை
 தப்பியோடியுள்ளனர்.
இவ்வாறு தப்பிச் சென்ற சிறைக் கைதிகள் நீர்கொழும்பு சிறை கைதிகளாவார்.
இவர்களை தேடும் நடவடிக்கை தீவரமாக
 முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>சுழலில் சிக்கி ஆற்றில் காணாமல் போன கிராம சேவகரின் சடலம் மீட்பு

மன்னார் – நானாட்டான் அருவியாற்றில் நண்பர்களுடன் குளித்த போது சுழலில் சிக்கி காணாமல் போன கிராம சேவகரை கடந்த இரு நாட்களாக தேடிவந்த நிலையில் அவரது சடலம் .31-12-20.இன்று காலை அரிப்பு பழைய தோனித்துறை பகுதியில் கரையொதுங்கியுள்ளது.
காணாமல் போய் தற்போது சடலமாக மீட்கப்பட்ட கிராம அலுவலகர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தோமஸ்புரி கிராம அலுவலகர் பிரிவில் கிராம அலுவலகராக கடமையாற்றும் ஜனார்த்தனன் (வயது-26) என தெரிய வந்துள்ளது.
நான்கு கிராம அலுவலகர்கள் உள்ளடங்களாக 6 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில் அருவியாற்றில் குளிக்கும் போது இவ் அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

கிளிநொச்சியில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நெல் சந்தைப்படுத்தல் அலுவலகர் கைது

கிளிநொச்சி – கரடிபோக்கு நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் (சிஐடி)கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி – கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தின் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது
 செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட ரீதியில் அறுவடை செய்யப்படும் நெல்லினை அவ்வந்த மாவட்டங்களில் உள்ள அரிசி ஆலைகளிற்கு வழங்கி, அரிசியாக சதொச உள்ளிட்ட நிறுவனங்களிற்கு விற்பனை
 செய்யும் நடைமுறை காணப்படும் நிலையில், கிலோ ஒன்றுக்கு 3 ரூபா பணத்தினை தரகர் கூலியாக பெற்று (இலஞ்சமாக) வெளி மாவட்ட அரிசி ஆலைகளிற்கு விற்பனை செய்வதாக 
அமைச்சருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>முல்லைத்தீவு முள்ளியவளை கிணற்றில் உருக்குலைந்த சடலம்

முல்லைத்தீவு – முள்ளிவளையில் கிணறு ஒன்றில் உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு முறையிடப்பட்டுள்ளது.
நாவற்காடு பகுதியில் உள்ள நீர் குறைந்த கிணறு ஒன்றின் உள்ளேயே குறித்த சடலம் காணப்படுகின்றது.
கிணற்றின் வெளியில் ரி சேட் ஒன்றும், ஆண்கள் அணியும் பாதணிகளும் காணப்படுவதாக தெரியவருகிறது.
அந்தப் பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், நீதிபதி சம்பவ இடத்திற்கு வரும் வரையில் யாரையும் கிணற்றுக்கு அண்மையில் அனுமதிக்க முடியாது என்று பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 30 டிசம்பர், 2020

களுத்துறை மாவட்டடத்தில்117 வயதுடைய பெண் மரணம்

இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண் என சான்றிதழ் பெற்றவர் நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 
நிலையில் 29-12-20.அன்று  மரணமடைந்துள்ளார்.
குறித்த 117 வயதுடைய பெண்ணான ‘வேலு பாப்பானி அம்மா’ என்பவரே இவ்வாறு இரவு மரணமடைந்துள்ளார்.
இரு பிள்ளைகளின் தாயாரான இவர் 1903ம் ஆண்டு மே 03ம் திகதி, களுத்துறை மாவட்டம், தொடங்கொடை பிரதேச செயலக பிரிவில் உள்ள நேஹின்ன கிராமத்தில் பிறந்தார்.
அவரது விபரங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட முதியவரின் அடையாள அட்டை மூலமாகவும் சரிபார்க்கப்பட்டுள்ளன.
இதேநேரம், உலக முதியோர் தினத்தைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு ஒக்டோபர் முதாலம் திகதி
 இலங்கையின் மிகவும் வயதான பெண் எனத் தெரிவிக்கும் சான்றிதழை முதியயோருக்கான 
தேசிய சபை குறித்த பெண்மணிக்கு வழங்கியிருந்தமையும் 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

கொழும்பு கொள்ளுப்பிட்டி யில் வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் மரணம்

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் கட்டடம் ஒன்றின் கீழ்தளம் வெள்ளத்தில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் நேற்று (29) இரவு பெய்த மழையினால் டுப்ளிகேஷன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றின் கீழ்தளமே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.
குறித்த கட்டடத்தில் நிர்மாணப்பணியில் ஈடுபடுகின்ற ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் குறித்த கட்டடத்தின் கீழ்தளத்தில் மேலும் 5 பேர் சிக்கி இருந்த நிலையில் அவர்கள் உயிர்தப்பியுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 29 டிசம்பர், 2020

மரண அறிவித்தல்அமரர் வயிரமுத்து நவரத்தினம்(நவம்) 29-12-20

உதிர்வு--29-12-2020.
யாழ். கட்டைப்பிராயை பிறப்பிடமாகவும். மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியை. வதிவிடமாகவும். தற்பொழுது ஆவரங்கால் சங்கணாவத்தையில் வசித்து வந்தவருமாகிய. அமரர் திரு. வைரமுத்து நவரத்தினம் (நவம்)  அவர்கள் இன்று 29/12/20 செவ்வாய்கிழமை. இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார். காலஞ்சென்ற வைரமுத்து கண்ணம்மா 
தம்பதிகளின் மகனும். காலஞ்சென்ற திருமதி மனோன்மணியின் அன்புக்கணவரும்.   காலஞ்சென்ற விசாலாட்ச்சி (இரத்தினக்கா)மற்றும் ரதிராணி(ராணி)  சின்னத்தங்கச்சி ( ரஞ்சி) ஆகியோரின்
 அன்புச் சகோதர்ரும். 
காலஞ்சென்ற. கணவதிப்பிள்ளை, பாலசுப்பிரமணியம் (சின்னராசா) மற்றும் குகபாலச்சந்திரன் ( பவா) ஆகியோரின் மைத்துணரும். 
செல்வேந்திராசா (ராசன் வண்டையா),குலா,கலா,ராஜி, ரகு, கண்ணன் ,சுரேஸ்,தாமினி ,
கிருஷாந்தன். ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும். ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்  அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு
ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியாவின்  ஆழ்ந்த அனுதாபங்கள் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
 வீட்டு முகவரி: 
 சங்கணாவத்தை
ஆவரங்கால் புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
மருமகன் ஆவரங்கால்
     கண்ணன் 
பிரித்தானியா

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வாகரையில் இரு குளங்கள் உடைப்பெடுத்ததால் பலநூறு விவசாயிகள் பரிதவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட எல்லத்துமடு குளம் மற்றும் சாம்பல்கேணி குளம் ஆகிய இரண்டு குளங்களும் உடைப்பெடுத்ததன் காரணமாக இரண்டு குளத்தையும் நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எல்லத்துமடுப் பகுதியில் சுமார் 300 மேற்பட்ட 
ஏக்கர் விவசாய
 செய்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக எல்லத்துமடுகுளம் உடைப்பெடுத்ததன் மூலம் வேளாண்மை அனைத்தும் மணலினால் மூடப்பட்டு 
காணப்படுகின்றது.
அத்தோடு குளத்திற்குள் நீர் இல்லாமையினாலும், ஓரிரு தினங்களில் மழை இல்லாமல் போனால் விவசாயத்தினை கைவிட வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. இதில் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலத்தில் 125 விவசாயிகள் குறித்த குளத்தை நம்பி விவசாயத்தில் ஈடுபட்டு 
வருகின்றனர்.
அதேபோன்று சாம்பல்கேணி குளத்தை நம்பி 800க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயம் செய்யப்பட்ட நிலையில் குறித்த குளமானது வெள்ளப்பெருக்கு காரணமாக உடைப்பெடுத்ததன் மூலம் குறித்த குளத்தில் உள்ள அனைத்து நீரும் வயல் பிரதேசத்திற்கு பாய்ந்த நிலையில் குளம் நீர் குறைந்து காணப்படுகின்றது.
இங்கு 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் குறித்த பகுதியில் வேளாண்மைச் செய்கை செய்து இருந்தாலும் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் விவசாய காணிக்குள் மணல் பரந்து உள்ளதன் காரணமாக குறித்த பகுதி விவசாய செய்கையை கைவிட வேண்டிய நிலையில் விவசாயிகள் காணப்படுகின்றனர்.
எனவே குறித்த எல்லத்துமடு குளம் மற்றும் சாம்பல்கேணி குளம் ஆகிய இரண்டு குளங்களையும் புனரமைப்பு செய்ய உடனடியான உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு விவசாயிகள் வேண்டுகோள் 
விடுக்கின்றனர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
திங்கள், 28 டிசம்பர், 2020

மரண அறிவித்தல்,அமரர் இராசிங்கம் (ராசையா. ) சுப்பிரமணியம் 28.12.20

மலர்வு-20-08-1941 --உதிர்வு--28 12-2020 
யாழ்  தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை  வதிவிடமாகவும் கொண்ட அமரர் இராசிங்கம்(ராசையா. ) சுப்பிரமணியம் 
 (பிரபலியமான  கொழும்பு -யாழ் லொறி-சாரதி - ரைவர் மணியம்.. ) 
அவர்கள் 28-12-2020 திங்கள்க்கிழமை இன்று   
இயற்கை எய்தினார். 
 . அன்னார், காலஞ்சென்ற இராசிங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும் திருமதி இராசலட்சுமி  (ராசு ) அவர்களின் ன்புக் கணவரும் இந்திரகுமாரி (இந்திரா .சுவிஸ்  )  சிவகுமாரி (குட்டி.சுவிஸ் )  இராசகுமார் (மோகன்.கனடா  )  இராஜமோகன்  (இலங்கை.சின்ன  ) (மஞசுளா  (மன்சு..கனடா அவுஸ்திறேலியா ) நிர்மலகுமாரி ( இலங்கை  )   ஆகியோரின் 
அன்புத் தந்தையும்   புஸ்பராஜா  (காந்தி.சுவிஸ்  ) வாசி (சுவிஸ்)  மைக்கல், (அவுஸ்திரேலியா) உமாகாந்தன் (இலங்கை)  கமலாதேவி (கனடா)   உருத்திரா (இந்தியா) ஆகியோரின் அன்புமாமனாரும்
 காலஞ்சென்றவர்களான  செல்லத்துரை.இத்தினம்  சின்னையா பாக்கியம் ஆகியோரின்
 அன்புச்சகோதரும் ஆவார். 
அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2020 புதன் கிழமை  அன்று மு.ப 09:00 மணி முதல் ந.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி  நிலாவரை  இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
 வீட்டு முகவரி: 
நவற்கிரி பிள்ளையார் 
       கோவிலடி 
 நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

அறபாநகரில் மதிலை பிடித்து ஏற முயன்ற சிறுவன் மதிலிடிந்து மரணம்

¨கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அறபாநகர் கிராமத்தில் மதில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ள
 சம்பவம் 26-12-20.அன்று மாலை இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை நாசீவந்தீவைச் சேர்ந்த சிறுவன் தனது தாய் தொழில் நிமிர்த்தம் சவூதி அரேபியாவிற்கு சென்ற நிலையில் அறபாநகர் பகுதியிலுள்ள தனது சகோதரியின் வீட்டில் வசித்து வந்த 
நிலையில் எதிர் வீட்டு மதில் சுவரினை பிடித்து ஏறுவதற்கு முயற்சித்த போது மதில் சிறுவன் மேல் விழுந்துள்ளது. இந்த நிலையில் குறித்த சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் 
உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை நாசீவந்தீவு முருகன் ஆலய வீதியைச் சேர்ந்த கோபால் பிறேமசாந் என்ற (வயது-13) சிறுவனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் 
தெரிவித்தனர். 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>மரண அறிவித்தல் அமரர் கதிரேசு சுப்பிரமணியம் 27.12.20

மலர்வு-25-02-1957 --உதிர்வு--27 12-2020 
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும். வதிவிடமாகவும் கொண்ட அமரர் கதிரேசு சுப்பிரமணியம் (மணியம் ) 
அவர்கள் 27-12-2020..ஞாயிற்ருக்கிழமை இன்று   இயற்கை எய்தினார். 
 . அன்னார், காலஞ்சென்ற கதிரேசு.பூலோகம்  தம்பதிகளின் பாசமிகு மகனும் அழகம்மா(கிளி  )  பூலோகராசன் (ராசன்  )  ஆகியோரின் அன்புச்சகோதரும் திரு துரைசிகத்தின் மைத்துனரும்  ஆவார். 
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2020 ஞாயிற்ருக்கிழமை இன்று  மு.ப 09:00 மணி முதல் ந.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி  நிலாவரை  இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
 வீட்டு முகவரி: 

ரசவீதி நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஐந்து நாட்களின் பின்னும் இறந்த உடலில் கொரோனா வைரஸ்

காலியில் அண்மையில் கொரோனா தொற்றால் மரணித்த ஒருவரின் சடலம் மீது ஐந்து நாட்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலும் உடலில் கொரோனா வைரஸ் இருந்தமை இன்று (26) உறுதி 
செய்யப்பட்டுள்ளது.
19ம் திகதி இறந்தவரின் குறித்த சடலத்தை தகனம் செய்ய நீதிமன்றம் தடை விதித்த நிலையில், சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவில் 24ம் திகதி தகனம் செய்வதற்கு முன்னர் மேற்கொண்ட பரிசோதனையின் போதே உடலில் தாெடர்ந்தும் வைரஸ் இருப்பது 
உறுதியானது.
இதன்படி கொரோனா வைரஸ் இறந்த உடலில் நீண்ட நாட்கள் உயிர்வாழ்வது உறுதியாகியுள்ள நிலையில், முஸ்லிம்களின் உடல்களை குளிர்ந்த கொள்கலன்களின் வைக்கும் திட்டம் தொடர்பில் சந்தேகம் 
எழுந்துள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>செவ்வாய், 22 டிசம்பர், 2020

துறைநீலாவணையில் வீதியில் சென்றவர் மின்சாரம் தாக்கி பலி

அம்பாறை – களுவாஞ்சிகுடி, துறைநீலாவணை பகுதியில். 21-12-20.அன்று நேற்றுமின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் துறைநீலாவணை 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான முருகேசு புலேந்திரன் (வயது-61) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர் இரும்புக்கத்தியை வீதியால் எடுத்துச் செல்லும்போது, வீதியின் அருகாமையிலுள்ள மின்மாற்றியின் உயரழுத்தம் மின்சாரக்கம்பியில் தவறுதலாகப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த நபர், மின்சாரத்தால் தாக்கப்பட்டு வீதியில் இழுத்து வீசப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>மாத்தளையில் முப்பது குழந்தைகளை கடத்தி விற்றவர் கைது

சிறுவர் கடத்தல் தொடர்பில் மாத்தளையில்.22-12-20. இன்று  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் புதிதாகப் பிறந்த 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>சனி, 19 டிசம்பர், 2020

பொத்துஹெர தொடக்கம் மத்திய அதிவேக வீதியின் 3ம் கட்டம் ஆரம்பம்

நாட்டில் மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள்.19-12-20. இன்று ஆரம்பிக்கப்பட்டன.
பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரையான பகுதியை இணைக்கும் திட்டத்தின் கட்டுமான பணிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தமையைத் தொடர்ந்து நிர்மாணப் பணிகள் 
ஆரம்பிக்கப்பட்டன.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பல கட்டங்களின் கட்டுமானப் பணிகள் முன்னதாகவே தொடங்கப்பட்டிருந்தாலும் பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரையான பகுதியின் கட்டுமானம் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட வேண்டியிருந்தது
தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து, அதற்கான கட்டுமானங்களை விரைவாகத் தொடங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமீபத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


இருபாலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு வழங்கல்

யாழ்ப்பாணம் – இருபாலை தெற்கு ஜே/257 கிராம வேவையாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு கல்வியங்காடு நல்லூர் நண்பர்கள் (UK- EUROPE) நிதிப்பங்களிப்பில் இருபாலை தெற்கு மாதர் அபிவிருத்திச்சங்க மண்டபத்தில்.19-12-20. இன்று  காலை நடைபெற்றது.
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்றை அடுத்து தொடர் மழை வெள்ளம் காரணமாக அன்றாடம் உழைத்துவாழும் குடும்பங்கள் பல பாதிப்படைந்துள்ளன.
இந்நிலையிலேயே இருபாலை தெற்கு மாதர் அபிவிருத்தி சங்கம், பொது அமைப்புக்களுடன் இணைந்து பாதிப்படைந்த முப்பது கடும்பங்களுக்கு உலர் உணவினை வழங்கியுள்ளது.
இந்த நிகழ்வில் வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினர் ந.கஜேந்திரகுமார், இருபாலை தெற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி.சறோஜா தங்கராசா, இருபாலை தெற்கு விவசாய சம்மேளன தலைவர் திரு.தவராசா தர்சன் மற்றும் சமூக உறுப்பினர்களும் பலர் 
கலந்து கொண்டனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
வெள்ளி, 18 டிசம்பர், 2020

கொழும்பில் பச்சிளம் சிசு கொரோனாவினால் பரிதாபமாக மரணம்.

கொழும்பில்  பிறந்து 46 நாட்களேயான சிசு ஒன்று கொவிட் நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளது.கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னதாக கடந்த 08ஆம் திகதி 20 நாளான
 சிசுவொன்று இதே வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.கொவிட் நிமோனியா
 காரணமாக இந்த சிசு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை
 அறிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிசுவின் உடல்,18-12-20. இன்று மாலை பொரளை மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

நாட்டில் 35,000ஐ கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில்.17-§1-20.  நேற்று 650 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், தொற்றாளர்களின் எண்ணிக்கை 35,387 ஆக உயர்ந்தது.
17-§1-20.  நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 638 பேர் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். 12 பேர் சிறைகளில் இருந்தே அடையாளம் காணப்பட்டனர்.மினுவாங்கொட 
– பேலியகொட கொத்தணி 31,720 ஆக அதிகரித்துள்ளது.17-§1-20.  நேற்று 701 பேர் குணமடைந்து வெளியேறியதை தொடர்ந்து, 
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,353 ஆக உயர்ந்தது.நாட்டின் 61 மருத்துவமனைகளில் தற்போது 8,874 பேர் சிகிச்சை
 பெற்று வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 467 நபர்களும் கண்காணிப்பில் உள்ளனர்.இதுவரை 160 பேர் கொரொனாவினால்
 உயிரழந்துள்ளனர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>வியாழன், 17 டிசம்பர், 2020

நாட்டில் 34 ஆயிரத்தைக் கடந்த கொரோனா நேற்று மட்டும் 616 பேருக்கு தொற்று

நாட்டில் நேற்று 616 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரானா தொற்றாளர்களின் எண்ணிக்கை 34,734 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 560 பேர் மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 51 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இந்தியாவில் இருந்து வந்த இரண்டு 
நபர்கள், உக்ரைனிலிருந்து இரண்டு பேர் மற்றும் குவைத்திலிருந்து ஒருவர் உட்பட ஐந்து வெளிநாட்டிலிருந்து 
வந்தவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.மினுவாங்கொட- பேலியகொட கொரோனா 
கொத்தணி 31,070 ஆக அதிகரித்தது.7 வெளிநாட்டினர் உட்பட 8,925 பேர் தற்போது நாடு முழுவதும் 63 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று குணமடைந்த 785 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 25,652 ஆக உயர்ந்தது.499 பேர் கொரோனா சந்தேகத்தில் 
கண்காணிப்பில் உள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>செவ்வாய், 15 டிசம்பர், 2020

மரண அறிவித்தல் அமரர் வேலாயுதம் கணேசமூர்த்தி (ராசன்) 15.12.20

மலர்வு-28-10-1958 --உதிர்வு--15 12-2020.
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும். வதிவிடமாகவும் கொண்ட அமரர் வேலாயுதம் கணேசமூர்த்தி .(ராசன்)
அவர்கள் 15-12-2020.செவ்வாய்க்கிழமை இன்று   இயற்கை எய்தினார். 
 . அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம் சரஸ்வதி தம்பதிகளின் 
பாசமிகு மகனும் 
அழகேஸ்வரி (அழகி )அவர்களின் அன்புக் கணவரும் திரு ராசதுரை காலஞ்சென்ற பாக்கியம்  ஆகியோரின் மருமகனும்  $¨
வரதலக்சுமி ரத்தினம் கனகம்மா  பாக்கியம் ஆகியோரின் 
அன்புச்சகோதரும் ஆவார்.
    அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2020 புதன்கிழமை  அன்று மு.ப 09:00 மணி முதல் ந.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி  நிலாவரை  இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
 வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>


திங்கள், 14 டிசம்பர், 2020

அமரர் முத்துக்குமாரு ஆறுமுகசாமி 4ம்ஆண்டு .நினைவஞ்சலி 14.12.20

மலர்வு:12:ஜனவரி:1942: உதிர்வு : 28 நவம்பர்: 2016 
            திதி -.14-12.2020
யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும், ஜெர்மனி Böblingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு ஆறுமுகசாமி (இப்பாறிய  யாழ் ஈழநாடு பத்திரிகை  உத்தியோகத்தர்) அவர்களின் 4ம் ஆண்டு 
நினைவஞ்சலி.(திதி ).14.12.2020.திங்கள்க்கிழமை .அன்று   
மறைந்துவிட்ட உங்கள் உறவின்  
நீங்காத நினைவுகள் 
உதிர்ந்துவிட்ட உங்கள் நினைவின் 
உலராத வாசனை 
அன்பின் உருவமாய் தரணியில் வாழ்ந்தார்
அன்னை போல் என்றும் எமை நெஞ்சில் வைத்தார்
  எங்கள் அப்பா
அக்கறையாய் கண்ணை இமை காப்பது போல் காத்தார் 
உழைப்பாலும் வான்போல உயர்ந்து நின்றார்அப்பா
சேவை செய்வதிலும் முன் நிற்பார் என்றுமே அப்பா
தன் கையால் யாவருக்கும் கொடுத்தவர்தான்எங்கள்  அப்பா
தற் பெருமை இல்லாத தங்கம் தான் எங்கள் அப்பா 
உன்னதமாய் இறைபணியை செய்து 
வாழ்வில் முடித்தார்
உயிர் இருக்கும் வரை தன்னால் இயன்றளவு செய்தார்
செல்வந்தனாய் இருந்தபோதும் எளிமையாக வாழ்ந்தார்
சென்ற இடம் எல்லாம் மதிப்போடு 
வாழ்ந்தார்
தொடக்கி வைத்தால் முடியும் வரை அயராது உழைப்பார்
தொண்டு செய்து  வாழ்பவனை எப்போதும் மதிப்பார்
உண்மை நேர்மை உள்ளவர்க்கு 
அன்பான எங்கள் அப்பா
பொய் களவு செய்பவரை வெறுப்பார் எங்கள்  அப்பா
எந்த இடத்தை கேட்டாலும் உடன் சொல்வார் அப்பா
அனைவரையும் தெரிந்த ஒரு மனிதர்தான் அப்பா
தாய் தந்தை தெய்வமென 
போற்றியவர் எங்கள் அப்பா
அவரோடு இருந்த என் நினைவுகள் மறையாது
அவரோடு நான் கதைத்த ஞாபகங்கள் அழியாது
என் அப்பா போல் எவரும் எமக்கு  
கிடையாது
என் அப்பா செய்த தொண்டு எப்போதும் அழியாது
எப்போதும் துணையாக இருப்பார் 
எங்கள்  அப்பா

பாசத்தின் முழு உருவம் 
எங்கள்  அப்பா  
 உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி
 நிற்கின்றோம்.
   அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய மணைவியும் குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ்  மறவன்புலவு கோவிலாக்கண்டி  தோப்பு.ஜெர்மன் வாழ்   நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .... 
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள் மருமக்கள் 
. தகவல் குடும்பத்தினர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 13 டிசம்பர், 2020

யாழ் மருதனார்மடம் கொரோனா; 218 பேரின் முடிவுகள் இன்று இரவுக்கு

யாழ் உடுவில் பிரதேச செயலகப் பிரிவு முழுமையாக முடக்கப்பட்டுள்ளது, பிசிஆர் பரிசோதனை முடிவுகளை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
13-12-20.இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார். மேலும்,
“மருதனார்மடம் சந்தையில்12-12-20.நேற்று 398 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 283 பேரின் மாதிரிகள் யாழ் போதனாசாலை ஆய்வுக்கூடத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது முன்னர் தொற்று உறுதியானவரின் குடும்பத்தில் ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் 104 பேருக்கு இன்று மீளவும் பரிசோதனை செய்யப்படுகிறது, ஏனைய 114 பேரின் மாதிரிகள் அநுராதபுரத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த 218 பேரின் முடிவுகள்.13-12-20. இன்று இரவு
 வெளியாகும்.
அந்த முடிவுகளில் கொரோனா தொற்று உறுதியானால் பில பகுதிகளில் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும், தொற்று உறுதியாகாது விட்டால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டிருப்பர்.
யாழ்ப்பாணத்தின் ஏனைய பொதுச் சந்தைகளிலும் உள்ளவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

இரத்தினபுரி மற்றும் கெகிராவை விபத்துக்களில் இருவர் காயம் இருவர் பலி

இரத்தினபுரி மற்றும் கெகிராவை பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பண்டாரநாயக்க மாவத்தைக்கு அருகில் மோட்டார் சைக்கிளை வீதியின் குறுக்காக தள்ளி சென்ற போது லொறி ஒன்று மோதிய விபத்தில் 70 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இன்று (13) அதிகாலை கெகிராவை, தம்புள்ளை
 வீதியின் சூரியகம சந்திக்கு அருகில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>