siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 30 நவம்பர், 2018

பாடசாலை மாணவன் முல்லைத்தீவில் தற்கொலை

முல்லைத்தீவு செம்மலைபகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவனின் உடலமாக மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு செம்மலை மாணிக்க பிள்ளையார் ஆலயத்தை அண்மித்தகாட்டுப்பகுதியில்,
 13 அகவையுடைய பாடசாலை மாணவன் ஒருவன், பாடசாலை சீரூடையுடன் தூக்கில்தொங்கிய நிலையில் நேற்று இரவு உடலமாக காணப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிசாரை தொடர்பு கொண்டுகேட்டபோது, மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதாக தகவல்கிடைத்துள்ளதாகவும், சம்பவ இடத்திற்கு மரண விசாரணை அதிகாரியுடன் செல்லவுள்ளதாகவும் 
தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பில் விசாரணைகளையும் தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வியாழன், 29 நவம்பர், 2018

தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்தில் 4 பேர் பலி

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
புத்தளம் நாத்தாண்டியா பகுதியில் இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
விபத்தில் 23 பேர் படுகாயமடைந்துள்ளதுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக 
முன்னெடுக்கப்பட்டு வந்தது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களில் மூவர் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>


வைமன் வீதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது ன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பதற்ற நிலைமை
 ஏற்பட்டுள்ளது.
யாழ்- வைமன் வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று  அதிகாலை நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் குறித்த  வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் 
தீயில் எரிந்துள்ளது.
 இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் இரண்டும் சேதமாக்கப்பட்டுள்ளன.
 8 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்றே குறித்த தாக்குதலை மேற்கொண்டது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. 
ஆரியகுளம் சந்தியில் கராஜ் வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவரின் வீட்டிலேயே குறித்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 கராஜ் உரிமையாளர் நேற்று இரவு முச்சக்கர வண்டிகள் இரண்டை வீட்டின் முன் நிறுத்தியுள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில்,
 பெரும் சத்தம் கேட்டுள்ளது. 
இந்நிலையில் வீட்டு உரிமையாளர் வெளியே வந்து பார்த்த போது 8 பேர் முகமூடியுடன் வீட்டின் முன்னாள் நின்றுள்ளனர். குறித்த  கும்பல் வீட்டின் கண்ணாடிகள் மற்றும் வாகனங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் 
சென்றுள்ளனர்.
 குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் தெரிவிக்கையில்,
 "முச்சக்கரவண்டிகள் இரண்டும் தீ பற்றி எரிந்துள்ளன. இதேவேளை, மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் வாளால் வெட்டப்பட்டு சேதமாக்கப்பட்டதோடு வீட்டின் கண்ணாடிகள்
 உடைக்கப்பட்டன.
 நான் எவருடனும் எந்த பிரச்சினைளுக்கும் செல்வதில்லை. யார் இவ்வாறான சம்பவத்தை புரிந்தனெரென்றும் தெரியாது" என வீட்டு
 உரிமையாளர் தெரிவித்தார்.
 குறித்த சம்பவம் தொடர்பாக யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



திருகோணமலை யில் தொலைபேசியை திருடிய நபருக்கு சிறைதண்டனை

திருகோணமலை பகுதியில் பெறுமதியான தொலைபேசியொன்றினை திருடி தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவருக்கு மூன்று மாதம் கட்டாய சிறைதண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜமாலியா, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த மாதம் திருகோணமலை பகுதியில் ஒரு இலட்சம் ரூபாய் பெருமதியான தொலைபேசி ஒன்றினை திருடி பாவித்து வந்த நிலையில், தொலைபேசியின் உரிமையாளர் திருகோணமலை தலைமையக குற்றத் தடுப்பு பொலிஸாரிடம் முறைபாடு
 செய்துள்ளார்.
திருகோணமலை தலைமையக குற்றத் தடுப்பு பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் தொலைபேசி
 பரிவர்த்தனை நிலையத்துடன் தொடர்பு 
கொண்டு தகவல்களை பெற்று குறித்த நபரை அலைபேசியுடன் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மூன்று மாதம் கட்டாய சிறைதண்டனை விதித்துள்ளார்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


மரண அறிவித்தல், திருமதி.அலோசியஸ் மல்லிகாதேவி.29.11.18

தச்சந்தோப்பை பிறப்பிடமாகவும் உரும்பிராய் கிழக்கு தம்பித்துரை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.அலோசியஸ் மல்லிகாதேவி அவர்கள் (29.11.2018) வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சதாசிவம் நாகம்மா தம்பதியரின்
 அன்பு மகளும்,
காலஞ்சென்ற தேவசகாயம் தொம்மாஸியா அவர்களின் அன்பு மருமகளும்,
தேவசகாயம் அலோசியஸின் அன்பு மனைவியும்,
ஜெனஸ்றீன், சரண்ராஜன், ஜெனித்தா, அபிராஜ் 
ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உமாலினி, நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வடிவேல்பூபதி, தியாகராஜா, சுப்பிரமணியம், திரவியநாதன் பத்மாவதி,
ஸ்ரீறன்சன் கெங்காதேவி, நித்தியசீலன் ஆகியோரின் பாசமிகு அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 30.11.2018 வெள்ளிக்கிழமை உரும்பிராய் கிழக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று காலை 11.00 மணியளவில் தகனக் கிரியைகளுக்காக தச்சந்தோப்பு பிணமுருங்கை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்
 நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி, அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
ஜெனஸ்றீன்:0769675942
சரண்ராஜன்:0757609495
நிலாவரை.கொம் செய்திகள் >>


புதன், 28 நவம்பர், 2018

ஆண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் கிணற்றிலிருந்து மீட்பு

திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வள்ளுவர் கோட்டம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 இலக்கத்திற்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் திருகோணமலை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்
இதனையடுத்து திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமீலா குமாரி ரத்நாயக்க சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் சடலம் யாருடையது என இணங்கண்டு உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும்
 நீதவான் கட்டளையிட்டார்.
இதேவேளை, இச்சடலம் செல்வநாயகபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா திருஞானம் (60 வயது) என்பவருடையது என அவரது குடும்பத்தினரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.இச்சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத பரிசோதனைக்காக
 வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படவுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது
நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 27 நவம்பர், 2018

மரண அறிவித்தல் திருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா.27-11-18

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Castel Goffredo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஸ்பரூபன் ஜெயலலிதா.(லலிதா)அவர்கள் 27-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கொடிகாமம் ஆத்தியடி ஒழுங்கை கச்சாய் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா வேலுப்பிள்ளை, இராமுப்பிள்ளை பரமேஸ்வரி(இத்தாலி) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், மீசாலை வடக்கைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் சிவஞானறஞ்சிதம் 
தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலாயுதம்பிள்ளை புவனேஸ்வரி(சுவிஸ்) தம்பதிகளின் பெறாமகளும்,
புஸ்பரூபன்(ரூபன்- இத்தாலி) அவர்களின் அன்பு மனைவியும்,
சுபீஜன், விபீஜன் ஆகியோரின்
 அன்புத் தாயாரும்,
ஜெயசோதி(இலங்கை), ஜெயமனோகரா(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயமகேஸ்வரா(பொலிஸ் உத்தியோகத்தர்- இலங்கை), ஜெயமதீஸ்வரா(சுவிஸ்), ஜெயமனோகரி(இலங்கை), ஜெயசங்கர்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஸ்பலதா(இத்தாலி), காலஞ்சென்ற மதனகாவலர், புஸ்பமோகன், புஸ்பமாலா(ஜெர்மனி), பாலசிங்கம், பத்மலோஜினி(சுவிஸ்), விஜயராணி(சுவிஸ்), சிறீதரன்(சுவிஸ்), துவாரகா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திலகரட்ணம்(பாலன்- இத்தாலி), குணசீலன்(ஜெர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
செந்தூரி செந்தாரகன், பகீரதன், சாலினி, தர்ணியா, சஞ்சயா, ஜந்துஜன், பிரிந்தயன் ஆகியோரின் 
அன்புச் சித்தியும்,
மதுஷன், மாதினி, கெளசிக், அபிநயா, அபிஷாந், கஜந்தினி, கேஷாயினி, ஜலவன், மிதிலவன், தமிழகன், திராவிடன், ஜெதுஷன், ஜெதுஷனா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி, அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get Direction Wednesday, 28 Nov 2018  02:00 PM - 06:00 PM
Via Cristoforo Colombo
Via Cristoforo Colombo, 40, 46044 Aquilone MN, Italy தகனம் Get Direction Thursday, 29 Nov 2018  09:00 AM - 10:00 AM
Via Cristoforo Colombo
Via Cristoforo Colombo, 40, 46044 Aquilone MN, Italy
தொடர்புகளுக்கு
 ரூபன் - கணவர் Phone : +390376780553 Mobile : +393384541374  பாலன் - மைத்துனர் Mobile : +393206762769
நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 25 நவம்பர், 2018

ரயிலில் மோதி யாழ் முகமாலையில் ஒருவர் மரணம்

யாழ் செய்திகள்:யாழ். முகமாலையில் ரயில்க் கடவையை கடக்க முற்பட்ட ஒருவர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் சிதைவடைந்ததால் அடையாளம் காணமுடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் முகமாலை இராணுவச் சோதனைச் சாவடி முன்பு இருந்த இடத்தில் இன்று நண்பகல் 
இடம்பெற்றது.
 கொழும்பிலிருந்து சென்ற கடுகதி ரயிலுடனேயே இந்த விபத்து இடம்பெற்றுதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 24 நவம்பர், 2018

பொன்னாலை மோட்டார் சைக்கிள் விபத்தில்து

பொன்னாலைப் பாலத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி என்பன இந்த விபத்தில் 
சிக்கிக்கொண்டன.
காரைநகரில் உள்ள ஆலயம் ஒன்றில் பூசை செய்துவிட்டு பாலத்தால் மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த அர்ச்சர், கடற்றொழிலுக்குச் சென்றுவிட்டு துவிச்சக்கரவண்டியில் வந்துகொண்டிருந்தவரை முந்திச்செல்ல முற்பட்டார்.
இதன்போது துவிச்சக்கரவண்டியுடன் விபத்துக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்துடனும் அவரது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
அர்ச்சகர் வீதியில் விழுந்து மோட்டார் சைக்கிளுடன் இழுத்துச் செல்லப்பட்டார். அவரது தலைக்கவசம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன சேதமடைந்திருந்தன. துவிச்சரவண்டியில் சென்றவர் கடலுக்குள் பாய்ந்த நிலையில் அவரும் காயமடைந்தார்.
அர்ச்சகர் நோயாளர் காவு வண்டியில் ஏற்றப்பட்டபோது சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டார் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என வைத்தியாசாலைத்
 தகவல்கள் தெரிவித்தன.
விபத்து இடம்பெற்றவேளை சாரதி பேருந்தை நிறுத்துவதற்காக முற்பட்டபோது பாலத்தில் எதிர்த்திசையில் தரித்து விடப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடனும் பேருந்து மோதியுள்ளது. இதனால் அந்த மோட்டார் சைக்கிளும் 
சேதமடைந்துள்ளது.
மேற்படி விபத்தில் வடலியடைப்பை சேர்ந்த அர்ச்சகரே உயிரிழந்தார். பொன்னாலையைச் சேர்ந்த ரகுநாதன் புஸ்பகாந்தன் (வயது-33) என்பவர் காயமடைந்தார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 காயமடைந்தவரும் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவம் இடம்பெற்ற இடம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்டது எனினும், வட்டுக்கோட்டைப் பொலிஸார் உடனடியாக அங்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் ஊர்காவற்றுறை பொலிஸார் வரும்வரை போக்குவரத்து ஒழுங்குகளை
 மேற்கொண்டனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 22 நவம்பர், 2018

பாழடைந்த வீடொன்றில் யாழில் ஆணின் சடலம் மீட்பு

சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகிலிருந்து இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடற்தொழிலை மேற்கொள்ளும் யாழ். கொய்யாத்தோட்ட பகுதியை சேர்ந்த விமலதாஸ் ஜோசப் ஜெபர்சன் (33 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 அப்பகுதி மக்கள் சடலம் தொடர்பில் வழக்கிய தகவலின் அடிப்படையிலேயே யாழ். பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 19 நவம்பர், 2018

கொடூரமாக யாழில் அடித்து கொல்லப்பட்ட நாய்

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதிக்குள் வசிக்கும் நபர் நாய் ஒன்றை அடித்துக் கொலை செய்து, வீதியில் உள்ள குப்பைகளுடன் 
போட்டு சென்றுள்ளார்.
மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் உள்ள திருநெல்வேலியில் கடந்ந வாரம் ஒருவர் தனது வீட்டு வளவிற்குள் பிரவேசித்த தெரு நாயை 
அடித்துக் கொலை செய்துள்ளார்.
 அவ்வாறு கொல்லப்பட்ட நாயை ஓர் பையில் பொதி செய்து மாநகர சபையினால் கழிவு சேகரிக்கும் இடத்தில் 
வீசிச் சென்றுள்ளார்.
 குறித்த சம்பவம் இடம்பெற்று இரு தினங்களின் பின்னர் கழிவு அகற்ற சென்ற மாநகர சபை ஊழியர்கள் அதனை அவதானித்துள்ளனர்.
 இது தொடர்பில் அயலில் ஆராய்ந்த வேளையில் குறித்த செயலினை மேற்கொண்டவர் அடையாளம் 
காணப்பட்டுள்ளார்.
 இதனையடுத்து சுகாதார மேற்பார்வையாளர் ஒருவர் குறித்த வீட்டின் உரிமையாளரை அனுகி அதனை உரிய முறையில் அகற்றுமாறு கோரிய போது அச் செயலை தான் மேற்கொள்ளவில்லை
 என மறுத்துள்ளார்.
 இந்த நிலையில், மேலும் ஆராய்ந்த நிலையில் உயிரிழந்த நாய் குறித்த வீட்டிற்குள் செல்வது முதல் அடித்துக்கொள்வது மற்றும் பொதி செய்து எடுத்துச் செல்வது வரையான சம்பவங்கள் அயலில் உள்ள ஓர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி கமராவில் பதிவாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 இதனால் குறித்த வீடியோவினை காண்பித்து உறுதி செய்த நிலையில் வீதியில் எறிந்த நாயினை மீண்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று புதைக்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 18 நவம்பர், 2018

நாட்டில் காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்

அடுத்த சில நாட்களில், குறிப்பாக இன்றும் நாளையும் நாடு முழுவதும் மழையுடன் கூடிய வானிலை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா வடமத்திய மற்றும் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என
 எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்


அமரர். துரையப்பா பாக்கியநாதன 2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலர்வு  ,21,02. 1951 -ஆண்டவன் அடியில்,18 ,11 2016
திதி: 27.11.2018
அச்சுவேலி தோப்பை பிறப்பிடமாக்கவும் வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த 
(சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசும் சட்ட ஆணையாளரும்.ஆவார்)
 அமரர். துரையப்பா பாக்கியநாதன்அவர்களின் 
2ம் ஆண்டு.நினைவஞ்சலி 18 ,11 2018 இன்று  
காலங்கள் கடந்தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்
அன்பென்ற சொல்லின் அர்த்தமும் மறந்துவிட்டது உங்கள் மறைவுடனே
உண்ணும் உணவும் சுவை இழந்துவிட்டது போல்
உணர்கின்றோம் உங்கள் கைகள்
 படாததனால்
கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
ஆன்மா சாந்திக்காக போதிப்பிள்ளையார் 
அருள் வேண்டி பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
  முதலாம் ஆண்டு  நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி 1 ஓம் சாந்தி 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

சனி, 17 நவம்பர், 2018

கஜா புயலால் யாழில் 16 வீடுகள் முற்றாக சேதம்

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் தாக்கிய கஜா புயல் தாக்கத்தினால் 15 பிரதேசங்களை சேர்ந்த 770 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த இரவு தொடக்கம் இன்று இரவு வரை கஜா புயல்தாக்கம் வடக்கில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள 15 பிரதேச செயலாளார் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் 770 குடும்பங்களை சேர்ந்த 2893 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மக்களின் 16 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 480 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலையம் அறிவித்துள்ளது

நிலாவரை.கொம் செய்திகள் >>>


பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள் யாழில்

யாழ்.மாநகர சபை எல்லைக்குள்  பசு மாடு , மறி ஆடுகளை இறைச்சியாக்குவதற்கு கட்டுபாடுகள்
  விதிக்கபட்டு உள்ளன.
யாழ்.மாநகர சபை கூட்டத்தில் நேற்றைய தினம் பசுமாடுகள் மற்றும் மறி ஆடுகளை இறைச்சியாக்குவோர் அவற்றுக்கு மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும். மாடு கன்று போடாது எனவும் ஆடு குட்டி போடாது எனவும் மருத்துவ சான்றிதழ் பெற்றால் மாத்திரமே அவற்றை இறைச்சியாக்கலாம் என தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
செய்திகள்


வெள்ளி, 16 நவம்பர், 2018

போதை பொருள் யாழ் மாணவனிடம் நீதிமன்றம் தண்டனை

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன்
 நேற்று தீர்ப்பளித்தார்.
ஒரு மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க மாணவனை சான்று பெற்ற சீர்திருத்தப் பாடசாலையில் சேர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம்
 கட்டளை வழங்கியது.
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாண நகர் பகுதியில் 18 வயதுடைய மாணவன் ஒருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 10 மில்லிக்கிராம் உயிர்க்கொல்லி ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
அவர் யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரி ஒன்றின் மாணவன் என்று பொலிஸார் மன்றுக்குத் தெரிவித்தனர்.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றில் மாணவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதனால் அவருக்கு ஒரு மாதகால சிறைத் தண்டனையை விதித்த யாழ்ப்பாணம் நீதிவான், மாணவனை அச்சுவேலி சீர்திருத்தப் பாடசாலையில் சேர்ப்பித்து தண்டனைக் காலத்தைக கழிக்க 
அனுமதியளித்தார்.


புதன், 14 நவம்பர், 2018

சவுக்கடியைச் சேர்ந்த பாடசாலைக்கு சென்ற சிறுமியை காணவில்லை

 11 வயது  சிறுமி ஒருவர் 14,11,2018, புதன்கிழமை காலை பாடசாலைக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்
சவுக்கடியைச் சேர்ந்த ஜேசுதாஸ் ஜென்சிசா என்ற சிறுமியே
 காணாமல் போயுள்ளார்
குறித்த சிறுமி வழமைபோல சவுக்கடியிலுள்ள தனது  வீட்டில் இருந்து மயிலம்பாவெளியிலுள்ள விபுலானந்தர் பாடசாலைக்கு  இன்று காலை 7.00 மணிக்கு துவிச்சக்கரவண்டியில் சென்றவர் பிற்பகல் 2.00 மணிக்கு பாடசாலை முடிவடைந்தும் வீடு திரும்பாததையடுத்து பெற்றோர் 
அவரை தேடிச் சென்றனர்.
இருந்தபோதும் குறித்த சிறுமி பாடசாலைக்கு வரவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட  விசாணையில் தெரியவந்துள்ளதுடன் சிறுமி துவிச்சக்கர வண்டியடன் காணாமல் போயுள்தாக பொலிஸாரல் தெரிவிக்கப்படுகிறது 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என செய்திகள்
தெரிவிக்கின்ன்றன.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


மயங்கிய நிலையில் முல்லை. காட்டுப்பகுதியில் மீட்க்கப்பட்ட யுவதி

முல்லைத்தீவு - பெருங்காட்டுப்பகுதியில், மயங்கிய நிலையில் இருந்த யுவதி ஒருவர் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
ஒட்டுசுட்டான் - வெள்ளிமலை ஏற்றக் காட்டுப்பகுதியில் பெண் ஒருவர் கை வெட்டப்பட்டு மயங்கிய நிலையில் காணப்படுவதாக முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த யுவதியை மீட்டு முல்லைத்தீவு - மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் சம்பவ இடத்தில் இருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு மீட்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் குறித்த யுவதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சி பூநகரியினை சேர்ந்த 24 வயதுடை யுவதி ஒருவரே இவ்வாறு மயங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தனது 17 வயது மகளை ஏலத்தில் விட்ட தந்தை

தெற்கு சூடானில் 17 வயது மகளை தந்தை திருமணத்திற்காக ஏலத்தில் விட்ட சம்பவம் தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில்
 வைரலாகி வருகிறது.
தெற்கு சூடானில் பெரும்பாலும் Dinka என்ற கலாச்சாரம்
 பின்பற்றப்பட்டு வருகிறது.
அதாவது பெற்றோர் தங்கள் பெண்களை ஏலத்தில் விடுவார்களாம், அதில் இறுதியாக யார் அதிகமாக பொருட்களோ, பணமோ கொடுக்கிறார்களோ அவர்களுக்கு அந்த பெண் திருமணம் செய்து
 வைக்கப்படும்.
 அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய 17 வயது மகளை அங்கிருக்கும் தந்தை ஒருவர் ஏலத்தில் விட்டுள்ளார். இந்த ஏலத்தில்
 6 பேர் கலந்து கொண்டனர்.
இறுதியாக தொழிலதிபர் ஒருவர் 500 மாடு, 3 விலையுயர்ந்த கார்கள் மற்றும் 1 மில்லியன் உள்ளூர் மதிப்பிலான பணம் கொடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்ய ஏலத்தில் எடுத்துள்ளார்.
இவர்களின் திருமணம் கடந்த 9-ஆம் திகதி நடைபெற்றுள்ளது. அந்த திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அதில் இந்த பெண் ஏலத்தின் மூலம் எடுக்கப்பட்டவள் என்று குறித்து அந்த பெண்ணின் வயதை குறிப்பிட்டுள்ளனர், இதைக் கண்ட சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
17 வயது பெண்ணை திருமணம் செய்து வைப்பதே தவறு, அதில் இதை பேஸ்புக் பக்கத்தில் போடுவதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையடுத்து பேஸ்புக் நிறுவனம் அந்த புகைப்படத்தை 
நீக்கியதாக கூறப்படுகிறது.
தெற்கு சூடானில் பெண்களின் திருமண வயது 18 தான், ஆனால் நாட்டின் பஞ்சம் போன்றவைகள் காரணமாக 50 சதவீத பெண்கள் தங்களுடைய 18-வது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு முன்னரே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்.
இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானலும், அவர்களின் பெயர் மற்றும் விபரங்கள் குறித்து எந்த ஒரு தகவலும் 
வெளியாகவில்லை.


திங்கள், 12 நவம்பர், 2018

வடமராட்சியில் குடும்பஸ்தர் மின்சாரம் தாக்கி பலி

வீட்டில் தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தை திருத்த முற்பட்ட நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நெல்லியடி கரணவாய் பகுதியில் இன்று ர,12.11,2018, இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


ஞாயிறு, 11 நவம்பர், 2018

யாழ் மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி

இரத்தினபுரி பலாங்கொடை, பான் குடா ஓயாவில் நீராட சென்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி
 உயிரிழந்துள்ளனர்.
 இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் .உயிரிழந்த மூவரின் விபரங்கள் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. 
குறித்த சம்பவத்திர் 25 வயதான செல்வரட்ணம் திசான் 23 சரவணபவன் கோபிசன்  மற்றும் 25 வயதான கோபாலகிருஷ்ணன் சாரங்கன்  ஆகிய மூவருமே உயிரிழந்தனர்.
உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
 சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


சனி, 10 நவம்பர், 2018

மரண அறிவித்தல் திருமதி மாணிக்கவாசகர் நாகபூசணி அம்மாள். 09,11,18

மண்ணில் : 22 மார்ச் 1942 — விண்ணில் : 9 நவம்பர் 2018
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நவக்கிரி நிலாவரைசந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகபூசணி அம்மாள் மாணிக்கவாசகர் அவர்கள் 09-11-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபாதம்
 அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும்,
இராகுலன் அவர்களின் அன்புத் தாயாரும்,
பராசக்தி, முத்தம்மா, நடேசலிங்கம்(பழனி), குமரகுருபரன்(குரு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தியாகராஜா, இராஜரட்ணம், அலங்காரம், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-11-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் நிலாவரை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி, அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நடேசலிங்கம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4967318583
குமரகுருபரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773647025
காந்தரூபன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776258098
விபுலன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447903254423
நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 9 நவம்பர், 2018

இளைஞர் ஒருவர் கைதடிப் பகுதியில் சடலமாக மீட்பு

தனிமையில் இருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கைதடி கிழக்கை சேர்ந்த இராசையா ரூபதர்மன் (வயது 32) என்ற இளை ஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவரது சகோதரர்கள் கொழும்பில் வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில் தீபாவளிதினத்தன்று உறவினர் வீட்டில் மதிய உணவு அருந்திவிட்டு சென் றுள்ளார். இரவு உணவு 
உண்பதற்கு வரவில்லை. 
இந்த நிலையில் அடுத்த நாள்காலை அவரது வீட்டில் சடலமாக காணப்பட்டுளளார். உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது. இந்த மரண விசாரணையை தென்மராட்சி பகுதி மரண விசாரணை அதிகாரி இளங்கீரன்
 மேற்கொண்டிருந்தார்.
இதேவேளை கோப்பாயிலும்  தனிமையில் இருந்த முதியவர் சடலமாக மீட்பு
வீட்டில் தனிமையில் வசித்து வந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப் பட்ட சம்பவம் கோப்பாய் பகுதியில் 
இடம்பெற்றுள்ளது. 
கோப்பாய் வடக்கை சேர்ந்த சின்னத் தம்பி இராசு (வயது 65) என்பவர் வீட்டில் தனிமையாக வசித்து வந்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை இவர் வீட்டில் இருப்பதை அயலவர்கள் அவதானித்துள்ளனர். 
நேற்று முன்தினம் குறித்த நபரை காண வில்லை என வீட்டினுள் சென்று பார்த்த போது இவர் இறந்த நிலையில் சடலமாக இருப்பதை அவதானித்துள்ளனர். 
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டது. இது தொடர்பான மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமார் மேற்கொண்டிருந்தார்.


புதன், 7 நவம்பர், 2018

இரு இளைஞர்கள்! கிளிநொச்சியில் பரிதாபமாகப் பலி

 !
கிளிநொச்சி ஏ-9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
நேற்று மாலை 7 மணியளவில்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இ
தென்னிலங்கையிலிருந்து  யாழ் நோக்கி சென்றுக்கொண்டிருந்த எரிபொருள்தாங்கி  வாகனமும், பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி  நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும்  
விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் பலியாகியுள்ளனர்.
விபத்தின் போது ஒருவர் சம்பவ இடத்திலேயே  பலியாகியுள்ளார். மற்றொருவர்  வைத்தியசாலைகுக் கொண்டு சென்ற போது இறந்துள்ளார்.  
இந்த விபத்தில்  இறந்த ஒருவர் அடையாளம் 
காணப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த  செல்வராஜா கஜீபன் வயது 18 என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு இதுவரை மற்றைய இளைஞன் அடையாளம் காணப்படவில்லை.
 தீபாவளி தினமான இன்று இடம்பெற்ற இச் சம்பவம் பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


திங்கள், 5 நவம்பர், 2018

அமரர் நாகலிங்கம் ஆனந்தலிங்கம் 2ம் ஆண்டு நினைவஞ்சலி..05.11.18

 ஆண்டவன் அடியில் : 01,10,2017 
யாழ்  அச்சுவேலி தோப்பை பிறப்பிடமாக்கவும்  நவற்கிரியையும்   தோப்பையும்   வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு நாகலிங்கம் ஆனந்தலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு. 01.11.2018 இன்று நினைவஞ்சலி ஆலம் விருட்சம் போல் வேரூன்றி விழுது விட்டு
 கிளை பரப்பி நிழல் தந்த எங்கள் அன்பு அப்பாவே விதியென்னும் இரண்டெழுத்து உங்களை வேரோடு சாய்த்து ஆண்டொன்று ஆனதே அப்பா ஆனாலும் ஆறுமோ எங்கள் துயரம் மாறுமோ உங்கள் நினைவுகள்  பாசத்தின் 
முழு உருவம் எங்கள்  அப்பா  
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அப்பாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி 
நிற்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
  முதலாம் ஆண்டு  நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>