siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

நாட்டில் 220 மில்லியன் ரூபாய் தங்கக் கடத்தல் மோசடிகண்டுபிடித்தனர்

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் 27-09-2021.அன்று பெரிய அளவிலான தங்க கடத்தல் மோசடி ஒன்றை கண்டுபிடித்தனர்.
இந்த பாரிய தங்க கடத்தல் ஒரு போலியான வர்த்தக பெயரில் விமான சரக்கு பகுதியில் கொரியர் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் நகரத்திலிருந்து வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் மின் இயந்திரங்களின் பாகங்கள் இறக்குமதி செய்யப்படுவதாகக் தெரிவித்து 16 கிலோ தங்கம் இவ்வாறு 
கடத்தப்பட்டுள்ளது.
இந்த பொருட்களின் உட்புற பாகங்கள் தங்கத்தால் தயாரிக்கப்பட்டு அதில் பொருத்தப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தங்கத்தின் சந்தை மதிப்பு சுமார் 220 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சட்டவிரோத இறக்குமதி தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>சனி, 25 செப்டம்பர், 2021

இலங்கையில் பால்மா விலை 200 ரூபாவால் அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால்மா விலை 200 ரூபாவினால் அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
பால்மா இறக்குமதி செய்யப்படும் நிறுவனங்களின் அமைப்பு இதற்கான கோரிக்கையை விடுத்திருந்தது. இந்நிலையில் வாழ்க்கை செலவு குழு அதற்கு அனுமதியை வழங்கியுள்ளதாக 
கூறப்படுகின்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 23 செப்டம்பர், 2021

வடமராட்சி நவிண்டிலில் வெளிநாடு செல்லவிருந்த இளம் பெண் திடீர் மரணம்

யாழ்.வடமராட்சி நவிண்டில் பகுதியில் வெளிநாடு செல்லவிருந்த இளம் பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தொியவருகின்றது. குறித்த பெண் 21-09-2021. அன்றிரவு  இவர் 
உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டில் திருமணம் முடித்த நிலையில் மிக விரைவில் கணவரிடம் செல்லவிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த பெண் கொரோனா தொற்றுக்குள்ளாகி 
சிகிச்சை பெற்றவர் எனவும் கூறப்படுகின்றது. சம்பவத்தில் நவிண்டில் பகுதியைச் சேர்ந்த தவேந்திரன் துளசிகா வயது 37 என்ற 
குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ள நிலையில், குறித்த
 சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை 
ஏற்படுத்தியுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>புதன், 22 செப்டம்பர், 2021

.திருநெல்வேலி பகுதியில் காரில் பயணித்தவர்களிடம் சிக்கிய பொருட்கள்

யாழ்.திருநெல்வேலி பகுதியில் காரில் பயணித்த நால்வரை சோதனையின் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் 20-09-2021அன்று இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து உயிரிக்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் 2 கிராம் 94மில்லிக்கிராமும் வாள் ஒன்றும் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>ஸ்கந்தபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் 20-09-2021அன்று  இரவு நிகழ்ந்துள்ளது.இச்சம்பவத்தில் ஸ்கந்தபுரம் 2ம் பாடசாலை வீதியில் வசித்துவரும் பேரின்பநாதன் கேசவன் எனும் 27 வயதான இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

சிறிய வியாபார நிலையமொன்றை நடாத்திவரும் குறித்த இளைஞன் நேற்றைய தினம் இரவு பிஸ்கட் எடுத்து வர கடைகள் சென்றபோது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது

நிலாவரை.கொம் செய்திகள் >>>திங்கள், 20 செப்டம்பர், 2021

வட்ஸ்அப் பயனாளர்களுக்கு இலங்கையில் முக்கிய அறிவிப்பு

வட்ஸ்அப் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் இருவர் தெஹிவளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நைஜீரிய பிரஜைகள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸ் கணினி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் வசமாக சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை பெண்ணொருவருக்கு பரிசு கிடைத்துள்ளதாகவும், அதற்காக குறிப்பிட்டளவு பணத்தை வைப்பு செய்ய வேண்டும் எனவும் வட்ஸ்அப் ஊடாக சந்தேகநபர்கள் குறுந்தகவல் அனுப்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் வட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் இவ்வாறான போலி குறுந்தகவல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு 
கோரப்பட்டுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


மரண அறிவித்தல் திரு இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா 20.09.21

தோற்றம்-14 01 1956-    மறைவு-20 09 2021
  யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 20-09-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா(இளைப்பாறிய ஆசிரியர்), தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு கடை குட்டியும், காலஞ்சென்ற திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற தர்மரத்தினம், ஜெயசீவரட்ணம்,
 கமலலோஜினி மற்றும் சந்திரவதனா(பிரித்தானியா), இரஞ்சிதமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,செல்வவேணி அவர்களின் 
அன்புக் கணவரும்,
கீர்த்தனா, அர்ச்சனா, சுபர்ணா, தர்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
வீட்டு முகவரி
20 Dormer's Ave,
Southall, Middlesex,
UB1 2SP,
UK.தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 சுரேஸ் - மைத்துனர்Mobile : +447340409626 
பவன் - மைத்துனர்Mobile : +447748322652 
சுதன் - சகோதரன்Mobile : +447957383535 
வீடு - குடும்பத்தினர்Mobile : +442085711178

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

நாட்டில் மேலும் மூன்று பொருட்களுக்கு விலை அதிகரிப்பு

இலங்கையில் பால் மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் விலை குழுவினால் நடத்தப்பட்ட கண்காணிப்பின் பிரகாரம், வாழ்க்கை செலவுக் குழுவின் அனுமதியுடன் இந்த பொருட்களுக்கான விலையை அதிகரிக்க நேரிடும் 
என அவர் கூறியுள்ளார்.
இந்த பொருட்களுக்கான விலை, சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள பின்னணியில், குறித்த பொருட்களுக்கான விலையை அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கடந்த 6 மாத காலமாக கோரியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் தாம் தொடர்ச்சியாகவே கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் 
அவர் தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில், வாழ்க்கை செலவுக் குழுவின் இறுதி அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், குறித்த பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்படும் என அவர் கூறுகின்றார்.இலங்கையில் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 940 ரூபாவாக இருக்கும் போது, சர்வதேச சந்தையில் ஒரு மெற்றிக் தொன் பால் மாவின் விலை 3070 டொலராக காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அதே பால் மா ஒரு மெற்றிக் தொன்னின் தற்போதைய விலை 3700 டொலர் என அவர் கூறுகின்றார்.இதனால், எதிர்வரும் தினங்களில் குறித்த மூன்று பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியம் எழுந்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார்

நிலாவரை.கொம் செய்திகள் >>>ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

மரண அறிவித்தல் திருமதி கதிரவேலு இராசலக்சுமி அவார்கள் 19.09.21

                    தோற்றம்-04-07-1932.-  மறைவு-20 09 2021                       
    யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி கதிரவேலு இராசலக்சுமி அவார்கள் 19.09.21ஞாயிற்றுக்கிழமை    இன்று இயற்கை எய்தினார்.அன்னார் காலஞ்சென்ற கதிரவேலுவின் பாசமிகு மனைவியாரும் காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்
 காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும் 
மற்றும் யோகேஸ்வரன்  அரற்புதமலர் கருணாநந்தன்  ஜெந்தி குகனேசன் சுதமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2021,திங்கள்கிழமை அன்று 
மு.ப 10:00 மணி முதல் ந.ப 11:00மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி  நிலாவரை  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல் .குடும்பத்தினர் 
வீ ட்டு  முகவரி 
நவற்கிரி .புத்தூர் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

மகிழ்ச்சியான செய்தி தங்கத்தின் விலை தமிழகத்தில் திடீர் வீழ்ச்சி

தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஆபரணத் தங்கத்தின் விலை சரிவை கண்டு வருவதனால் வாடிக்கையாளர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில்  (செப்டம்பர் 18) விற்பனையில் சவரனுக்கு ரூ.16 வரை விலை குறைந்து விற்பனை 
செய்யப்பட்டு வருகிறது.
பொதுவாக சுபமுகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விற்பனையானது அதிகமாக காணப்படுவது வழக்கம். அந்த நாட்களில் தங்கத்தின் விலையானது சற்று அதிகரித்து
 விற்பனை செய்யப்படும்.
ஆனால் கொரோனா 2 ஆம் அலைக்கு மத்தியில் மீண்டுமாக துவங்கியுள்ள தங்க நகைகளின் விற்பனை விலையானது தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அது போல இந்த காலத்தில் சுபகாரியங்கள் செய்பவர்களுக்கு தங்க நகைகளின் விலை சற்று மகிழ்ச்சியை 
ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்த தங்கத்தின் விலையானது, தற்போது இரண்டாவது வாரமாக சரிவை கண்டுள்ளது. குறிப்பாக செப்டம்பர் 17.அன்று விற்பனையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.300 வரை குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில்  செப்டம்பர் 18.அன்றும்  தங்கத்தின் விலை மீண்டுமாக 
சரிவை கண்டுள்ளது.
அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து, பல மாதங்கள் கழித்து ஒரு சவரன் நகை ரூ.34,952க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>மக்களே அவதானம் மெல்ல மெல்ல விஷமாக மாறும் குடிநீர் இப்படி இல்லாவிடின் குடிக்காதீர்கள்.

உண்மையை உணருங்கள், மற்றவருக்கும் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளவும் !குடிநீர் பாட்டில்களில் மெல்லக் கொல்லும் விஷமாகி” நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்
குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.
குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம்.
அடிப்புற முக்கோணத்திற்குள் எண்1 இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.
எண் 2 இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும்.எண் 3என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், 
பழரசம் இருக்கும்.
எண் 4எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.எண் 5 பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர
 பயன்பாட்டிலும், 
எண் 6 இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர எண் 7 இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.
இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து 
எண்ணை பார்ப்பது அவசியம்.தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து 
பயன்படுத்தக்கூடாது.
உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது.’ஒன்ஸ் யூஸ்’பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி மெல்லக் கொல்லும் விஷமாகி நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும் என்றார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>
வெள்ளி, 17 செப்டம்பர், 2021

நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு. அடுத்த மாதத்தின் பின் மின்சார தடை

அடுத்த மாதத்தின் பின்னர் மின்சார விநியோகத்தில் சிக்கல் நிலைமை ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.மின்சாரம் பயன்படுத்தும் மக்கள் 44 பில்லியன் ரூபாய் மின்சார கட்டணம் செலுத்தாமையினால் இந்த நிலைமை ஏற்படும் அபாயம் உள்ளதென 
தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் மக்கள் உடனடியாக மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.எனினும் மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் வகையில் மின்சார தடை செய்து மக்களை சிரமத்திற்குள்ளாக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளாது. எனினும் தொடர்ந்தும் அதனை
 மேற்கொள்ள முடியாது.
இதன் காரணமாக அடுத்த மாதத்தின் பின்னர் மின்சாரம் வழங்குவதற்கு சிக்கல் நிலைமை ஏற்படும் என அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>வியாழன், 16 செப்டம்பர், 2021

மரண அறிவித்தல் திருமதி இளைய தம்பி தனலட்சுமி அம்மா (பாக்கியம்)16.09.21

 தோற்றம் -28 07 1927-மறைவு  16.09.2021
யாழ். புத்துரைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி, டென்மார்க், பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி தனலட்சுமிஅம்மா அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பிறைசூடி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துவேலு பறுவதப்பிள்ளை தமப்திகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற முத்துவேலு இளையதம்பி அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான தனநாயகி, பேரின்பநாயகி, பாலசுப்பிரமணியம், சிவசுந்தரம், மற்றும், உருத்திரகோடிஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற கருணாகரன்(ஜேர்மனி), கங்காதரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற மனோகரன்(டென்மார்க்), மனோரஞ்சிதம்(பிரித்தானியா), பிரபாகரன்(அவுஸ்திரேலியா), ஞானசேகரன்(அவுஸ்திரேலியா),
 மீனலோசினி(பிரான்ஸ்), 
ஸ்ரீகரன்(பிரான்ஸ்), கலாலோசினி(பிரித்தானியா), காலஞ்சென்ற சுதாகரன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பங்கயச்செல்வி மற்றும் சரவணமுத்து, 
செல்வமலர்தேவி, சோதி, சாந்தி, சிவனேசன், மரி, சிவலிங்கம் மற்றும் வாணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற 
பகீரதன்(ஜேர்மனி), சசிரதன்(பிரித்தானியா), வினோத்ரதன்(ஜேர்மனி), துகிர்தா(டென்மார்க்), துருபதன்(ஐக்கிய அமெரிக்கா), 
பிரகலாதன்(பிரித்தானியா), பிரவீணா(பிரித்தானியா), பிரமீனா(பிரித்தானியா), கஜன்(அவுஸ்திரேலியா), தர்ஷிகா(அவுஸ்திரேலியா), சிவசாந்(அவுஸ்திரேலியா), வஷாந்திகா(அவுஸ்திரேலியா), கிரிவர்மன்(பிரான்ஸ்), கோகுலவர்மன்(பிரான்ஸ்), கவிவர்மன்(பிரான்ஸ்), குவாற்றலின்(பிரான்ஸ்), அஞ்சலி(பிரான்ஸ்), 
கபிலன்(பிரான்ஸ்), தீலன்(பிரான்ஸ்), சுபாங்கர்(பிரித்தானியா), சுஷாங்கர்(பிரித்தானியா), திலக்‌ஷன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,சன்ரெல், சனாஜா, தைரிஷா, கெலன், 
எலியோ, செரேனா, டியான், அரியான், லியாம்பகி, மிலன் மற்றும் கியன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 சிவலிங்கம் - மருமகன்Mobile : +447447949830 கலாலோசினி - மகள்Mobile : +447533014323 மனோரஞ்சிதம் - மகள்Mobile : +447419844432 கங்காதரன் - மகன்Mobile : +447424159464 கங்காதரன் - மகன்Mobile : +49447424159464 பிரபாகரன் - மகன்Mobile : +61423622974 ஞானசேகரன் - மகன்Mobile : +61421023985 மீனலோசினி - மகள்Mobile : +33782474484 ஸ்ரீகரன் - மகன்Mobile : +33782474484 திலக்‌ஷன் - பேரன்Mobile : +447460415192 வினோத்ரதன் - பேரன்Mobile : +4917670830310
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால்
  துயருறும்  சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
 உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!

நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

நாட்டில் பருப்பின் விலை மீண்டும் அதிகரிப்பு. அதிர்ச்சியில் மக்கள்

  இலங்கையில் பருப்பின் விலை மேலும் அதிகரிக்ககூடும் என அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சந்தையில் பருப்பின் விலையானது தற்போது 250 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் 
குறிப்பிட்டுள்ளது
நாட்டிற்கு அவுஸ்திரேலியா மற்றும், கனடாவில் இருந்து பருப்பு கொள்வனவு செய்யப்படும் நிலையில், கனடாவில் விளைச்சல் குறைந்துள்ளமையால் பருப்பின் விலை அதிகரிக்கும் சாத்தியம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பால்மா பக்கட் ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு 6 யோகட்டுகளை கொள்வனவு செய்யுமாறு சில வர்த்தகர்கள் நிர்ப்பந்திப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
பால்மா பக்கட்டின் விலையினை காட்டிலும் 6 யோகட் கோப்பைகளின் விலை அதிகம் என்பதால் வாடிக்கையாளர்கள் பாரிய அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.இதனால் அவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>திங்கள், 13 செப்டம்பர், 2021

கர்ப்பிணிப் பெண் ஒருவர் யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு

கொவிட்-19 தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த இமானுவேல் ராஜன் மரியதெஸ்ரா (வயது-36) என்பவரே உயிரிழந்தார். கடந்த முதலாம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொவிட்-19 சிகிச்சை விடுதியில் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பயனின்றி நேற்று (12)இரவு உயிரிழந்தார்.இறப்பு விசாரணையை யாழ்ப்பாண போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் இன்றையதினம் மேற்கொண்டார். சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சுகாதார முறைப்படி தகனம் செய்ய அனுமதி்வழங்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இணுவிலைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் இரண்டு பிள்ளைகளை பிரசவித்து கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>
இலங்கையை சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படும்

சப்ரகமுகாலியிலிருந்து ஹம்பாந்தோடடை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கரையோரத்தை அண்டிய பகுதிகளில் 2 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வ, மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் 
தெரிவித்துள்ளது.
இலங்கையின் இன்றைய வானிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, வடமேல் மாகாணத்தில் ஓரவு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.ஊவா மாகாணத்திலும், அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும், இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று 
அதிகரித்து வீசக்கூடும்.
இந்த நிலையில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்ப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>செவ்வாய், 7 செப்டம்பர், 2021

இன்று முதல் நாட்டில் பெரிய வெங்காயம் விலையில் திடீர் மாற்றம்

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா இறக்குமதி வரியை அறவிட தீர்மானித்துள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.அதன்படி இன்று முதல் இந்த வரி அறவீடும் நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் 
அவர் கூறியுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


கோர விபத்த்தில் வவுனியாவில் சம்பவ இடத்தில் இளைஞன் பலி

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (06) இரவு இடம்பெற்ற விபத்து தொடர்பில் மேலும் 
தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து ஈரப்பெரியகுளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஈரப்பெரியகுளம் சந்தியில் எதிரே வந்த கடற்படையி
ன் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் சாரதி பலியாகியுள்ளார்.
அனுஸ்க அபயரத்தின லக்மால் (வயது 28) என்ற இளைஞனே மரணமடைந்துள்ளவராவார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகந்தன் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>
யாழில் மரணத்திலும் இணைபிரியாத வயதான தம்பதிகள்

யாழில் கணவன் – மனைவி இருவரும் கொரோனாவுக்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சோி – நுணாவில் பகுதியில் கொரோனா தொற்றினால் மனைவி உயிரிழந்து ஒரு வாரத்தில் கணவனும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
கடந்தவாரம் 87 வயதான வயோதிப பெண்மணி கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவருடைய சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்.07-09-2021. இன்று அவருடைய சடலம் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 97 வயதுடைய அவருடைய கணவரும் இன்று காலை உயிரிழந்திருப்பதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றினால் கணவனும் மனைவியும் உயிரிழந்த முதலாவது சம்பவம் இது என்பது
 குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>திங்கள், 6 செப்டம்பர், 2021

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் உயிரிழக்க இதுதான் முக்கிய காரணமாம்

நாட்டில் கொரோனா நோயாளிகள் உரியநேரத்தில் வைத்தியசாலைக்கு வருவதில்லை என்பது பெரும் குறைபாடாக இருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.அதிக காய்ச்சலுடன் ஏனைய வருத்தங்கள் இருக்கின்ற பொழுது கட்டாயம் வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அபர் மேலும் தெரிவித்துள்ளார்.
06-09-2021..இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், சிலர் வீடுகளில் இருந்து தங்களைத் தாங்களே சிகிச்சை அளித்துக் கொண்டு இருப்பினும் அனைவருமே வைத்தியரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகச் சிறந்தது.
குறிப்பாக தொற்று ஏற்பட்டு மூன்று, நான்கு நாட்களுக்குப் பின்னர் நியூமோனியா காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டாலும் சில நாட்களின் பின்னர் நோய் நிலை அதிகரித்து உடல் செயலிழப்பு ஏற்படும்.இவ்வாறு சில நாட்கள் தாமதித்து வருவதினால், சில சமயங்களில் அவர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>சனி, 4 செப்டம்பர், 2021

மரண அறிவித்தல் திருமதி கருணாகரன் பரமேஸ்வரி(புனிதம்) 04.09.21

யாழ். சிறுப்பிட்டி வல்லையப்புலம் அருள் மிகு ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மணி) அம்பாள் தேவஸ்தானத்தின் சப்பர திருவிழா உபயகாரரும், ஆலய திருப்பணி வேலைகளுக்கும் பங்காற்றிய
 சிறுப்பிட்டியை சேர்ந்த  அமரர் இளைய தம்பி கருணாகரன் (கருணை )அவர்களின் அன்பு மனைவி யேர்மனி டோட்முணட் நகரில் வாழ்ந்து வந்த திருமதி கருணாகரன் பரமேஸ்வரி(புனிதம்) 04/09/2021 அன்று காலமானார்  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால்
  துயருறும் பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
 உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!

நிலாவரை.கொம் செய்திகள் >>>மரண அறிவித்தல் திரு கந்தையா கனகரத்தினம் 04.09.21

தோற்றம்  28-04-1945 -மறைவு  04-09-2021 
யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தோப்பு மற்றும் வவுனியாவையும்  வதிவிடமாகவும் கொண்ட(லொறிஉரிமையாளர் )திரு கந்தையா கனகரத்தினம் அவர்கள்  04.09.2021 அன்று  காலமாகி விட்டார். 
அன்னார் காலம் சென்ற கந்தையா தம்பதிகளின் அன்புமகனும் காலம் சென்ற (லொறிஉரிமையாளர் ) வன்னியசிங்கம் அவர்களின் சகோதரனும் காலம் சென்ற ஜெயசந்திரன் (லொறிச்சாரதி )அவர்களின் சகலனும் 
மற்றும் கந்தசாமி கணேஸ் 
அகியோரின் மைத்துனரும் ஆவர்  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 தகவல் குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை ,பூட்டப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!

நிலாவரை.கொம் செய்திகள் >>>