siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 31 அக்டோபர், 2020

நாச்சிக்குடாவில் மீன்பிடிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் மரணம்

கிளிநொச்சி நாச்சிக்குடாவில் கடல் தொழிலுக்குச் சென்ற இளம் குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
31-10-20.இன்று சனிக்கிழமை குறித்த மீனவர் நாச்சிக்குடா கடற்பரப்பில் களங்கட்டி பணியில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த சம்பவம்
 இடம்பெற்றுள்ளது.
குறித்த மீனவர் நீரில் மூழ்கியதையடுத்து ஏனைய மீனவர்களின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து 
வரப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட மீனவர் முழங்காவில் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையாவார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை நாச்சிக்குடா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். 


வழிபாட்டில் ஈடுபட்ட பூசகர் உட்பட 15 நபர்கள் வவுனியாவில் கைது

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் பழைய வாடி கிராமத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட பூசகர் உட்பட 15 நபர்களை.31-10-20., இன்று மதியம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா புளியங்குளம் பழைய வாடி கிராமத்திலுள்ள சிவ நாகதம்பிரான் ஆலயத்தில் பௌர்னமி தின விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறுவதற்குறிய விசேட ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த 
சமயத்தில் அங்கு சென்ற புளியங்குளம் பொலிஸார் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாது 
வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டதாக தெரிவித்து பூசகர் உள்ளிட்ட 15 நபர்களை கைது செய்து புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களை ஆலயத்தினுள் அனுமதிக்க வேண்டாமென அப்பகுதி சுகாதார பரிசோதகர்கள் , பொலிஸாரால் அறிவித்தல் வழங்கப்பட்ட நிலையில் அதனை மீறி 
செயற்பட்டதாக தெரிவித்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நவகமுவ பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் மரணம்

 கொழும்பு – நவகமுவ பொலிஸ் நிலைய பொலிஸ் காவலில் இருந்த 25 வயது இளைஞன்.31-10-20. இன்று காலை சடலமாக 
மீட்பட்டுள்ளார்.
இது தொடர்பில் விசாரணை நடத்த பொலிஸ் குழு ஒன்று 
நியமிக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 

 


 

வியாழன், 29 அக்டோபர், 2020

சுன்னாகத்தில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் மரணம்

யாழ். சுன்னாகத்தில் வீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபர் ஒருவர் 28-10-2020.அன்று  உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பளை, திருக்கம்புலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற கணக்காளரான வல்லிபுரம் ஆறுமுகசாமி (76.வயது ) என்பவரே இவ்வாறு 
உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர், சுன்னாகம் பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட வேளை வாகனங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தமையால், நடு வீதியில் நின்றுள்ளார். அதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தி படுகாயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



பரந்தன் உமையாள்புரத்தில் விபத்தில் தாய், மகன் மரணம்

 

கிளிநொச்சி – பரந்தன், உமையாள்புரம் பகுதியில் 28-10-20.அன்று  இரவு  இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
எரிபொருள் பவுசரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது.
இதன்போது ஆலய பூசகரின் மனைவியான யாழ்ப்பாணம் – நீராவியடி பகுதியை சேர்ந்த 58 வயதுடைய இராதாகிருஸ்ணன் மீனாம்பாள் மற்றும் அவரது மகனான 28 வயதுடைய இராதாகிருஷ்ணன் கிருபானந்தன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
பவுசர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 27 அக்டோபர், 2020

யாழ் நவற்கிரியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் கார் மோதி ஒருவர் சாவு

யாழ் – அச்சுவேலி பகுதியில் இருந்து இராச வீதி ஊடாக .27-10-20.இன்று மாலை பயணித்துக கொண்டிருந்த காரென்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து நவற்கிரி விளாத்தியடிப்பாகுதில் மின்னல் வேகத்தில் சென்று மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்தில் 
பலியாகியுள்ளார்
வாகனத்தின் சாரதியான வசாவிளான் பகுதியை சேர்ந்த தனபாலசிங்கம் லஷ்ச தீபன் (வயது 34) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடன் பயணம் செய்த சிவன் சரல தீபன்(வயது 23) பலத்த காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


மரணஅறிவித்தல் அமரர் சுப்பன் அண்ணாமலை .27-10 -20

 தோற்றம் -19-11-1937- மறைவு :27-10-2020 
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும். வதிவிடமாகவும் கொண்ட
 அமரர் அண்ணாமலை அவர்கள் 27-10-2020 .செவ்வாய்க் கிழமை அன்று 
  இயற்கை எய்தினார்.
    அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது  இல்லத்தில் நடைபெற்று
பின்னர் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
.இவ் அறிவித்தலைஉற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள்
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்
அணை வருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றன
தகவல்: குடும்பத்தினர்
வீ ட்டுமுகவரி
மஸ்கன் வீ தி
நவற்கிரி புத்தூர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


திங்கள், 26 அக்டோபர், 2020

பொல்துப. கங்கையில் நீரில் மூழ்கிய இளைஞன் மரணம்

இரத்னபுரி, பலாங்கொடை, பொல்துப கங்கையில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றது.

கிரிமெட்டிதென்னவை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


ஞாயிறு, 25 அக்டோபர், 2020

ஹபரன பகுதியில் நீச்சல் தடாகத்தில் மாரடைப்பால் விழுந்த பெண் மரணம்

அநுராதபுரம் – ஹபரன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி பெண் உத்தியோத்தர் ஒருவர் நீச்சல் தடாகத்தில் விழுந்து
 உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் சிலர் சுற்றுலா விடுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்ட போதே இந்த சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
இதன்போது நீச்சல் தடாகத்தை சுத்தம் செய்த பெண் மாரடைப்பு காரணமாக நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்ததாக 
கூறப்படுகிறது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 24 அக்டோபர், 2020

தர்மபுரம் கிழக்கில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த மாணவன் பலி

கிளிநொச்சி – தர்மபுரம் கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில்.23-10-20. அன்று   திருமண விழாவிற்கு வருகை தந்த பாடசாலை மாணவன் ஒருவன் பாதுகாப்பற்ற கிற்றில் விழுந்து 
உயிரிழந்துள்ளான்.
திருமண நிகழ்வுக்கு தர்மபுரம் கட்டைக்காடு பகுதியில் இருந்து திருமண நிகழ்வுக்கு வருகை தந்த மாணவன் அன்றைய  தினம் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் குறித்த மாணவனை 
தேடியுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 20 அக்டோபர், 2020

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேற்றாதீதிவில் அதி சொகுசு கார் விபத்து

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் அதி சொகுசு கார் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதுடன் கார் முற்றாக சேதமடைந்துள்ளது.20-10-20.
இன்று அதிகாலை தேற்றாத்தீவு உப தபால் அலுவலகத்துக்கு முன்னால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் வடிகானுள் மோதுண்டுள்ளது.
இவ்விபத்தில் காரில் பயணித்த சாரதி உட்பட இருவர் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தின்போது கார் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

மன்னார் பசார் வீதி விபத்தில் ஒரே குடும்பத்தில் மூவர் காயம்

மன்னார் –பசார் வீதியில்.20-10-20. இன்று  காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
உந்துருளியில் பயணித்த குடும்பம் ஒன்றும் பொலிஸாரின் வாகனமும் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.
விபத்தில் காயமடைந்தவர்கள் கணவன், மனைவி, மற்றும் மகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 19 அக்டோபர், 2020

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி பஸ் மோதி படுகாயம்

உயர்தர பரீட்சையில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்ப முற்பட்ட மாணவி ஒருவர் விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.
மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி முன்னால் உள்ள பாதசாரி கடவையை கடந்து செல்ல முயன்ற போது எதிரே வந்த
 பஸ்சுடன் மோதியே குறித்த 
19-10-2020.இன்று மாணவி காயமடைந்துள்ளார்.
இதன்போது அல்லாரை வடக்கை சேர்ந்த து.ருக்சிகா (19-வயது) என்ற மாணவி படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டார்
நிலாவரை.கொம் செய்திகள் >>>



மினுவாங்கொடையில் கொரோனா தொற்று 87 பேருக்கு

கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 87 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது§9-10-20. இன்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை பெண் ஊழியரின் கொரோனா தொற்று காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,162 ஆக உயர்ந்துள்ளது.
இதன்படி இலங்கையின் மொத்த கொரோனா தொற்று 
எண்ணிக்கை 5,625 ஆகும்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


கலேவல நீர்ப்பாசன கிணற்றில் மூழ்கி சிறுவர்கள் மூவர் பலி

மாத்தளை – கலேவல நீர்ப்பாசன கிணற்றில் மூழ்கி 7, 12, 15 வயதுடைய சிறுவர்கள் மூவர் பலியாகியுள்ளனர்.
 19-10-20. இன்று இவர்களின் சடலங்கள் 
மீட்கப்பட்டுள்ளன.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரிகளும், அவர்களது சகோதரனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 
என்பது குறிப்பிடத்தக்கது 
நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 17 அக்டோபர், 2020

உதயபுரம் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருவர் பலி

 

அரியாலை கிழக்கு உதயபுரம் பகுதியில் மதில் இடிந்துவிழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 
அரியாலை பகுதியைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு இடம்பெற்று வந்த நிலையில் 16-10-20.அன்று
 அதிகாலை நான்கு முப்பது மணி அளவில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட அரியாலை பகுதியைச் சேர்ந்த ஒருவரே மதில் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 16 அக்டோபர், 2020

சிலாவத்தையில் கோர விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து
 பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தை
 பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி வீதியால் வந்த உழவு இயந்திரமொன்றை 
நிறுத்தும் படி சைகை காண்பித்துள்ளார்.இதன்போது உழவு இயந்திரத்தை நிறுத்த முற்பட்ட வேளையில் ஏற்பட்ட விபத்தில், பொலிஸ் அதிகாரியொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இதன்போது, 
முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரியான 42 வயதுடைய ஒருவரே 
உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் 
முல்லைத்தீவு 
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதன்போது உயிரிழந்தவரின் சடலம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில்
 வைக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





வியாழன், 15 அக்டோபர், 2020

பேரகல வீதியில் முச்சக்கரவண்டி விபத்து.ஒன்றரை வயதுக் குழந்தை பரிதாபமாகப் பலி

 ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லவாய – பேரகல வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி, கட்டுப்பாட்டை இழந்து 500 மீற்றர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.இந்த விபத்தில் காயமடைந்த
 முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த
 தாய் மற்றும் குழந்தை பலத்த காயமடைந்த 
நிலையில், ஹல்துமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த நிலையில், ஒன்றரை 
வயது குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், சம்பவத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி
 மற்றும் உயிரிழந்த
 குழந்தையின் தாய் தாயார் மேலதிக 
சிகிச்சைகளுக்காக தியதலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இந்நிலையில் விபத்து தொர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

தென்மராட்சி – மீசாலை சந்தியில் விபத்தில் ஒருவர் காயம்

 தென்மராட்சி – மீசாலை சந்தியில் .15-10-20. இன்று மாலை 6 மணியளவில் பஸ் ஒன்று ரயில் தண்டவாளம் மீதேறி விபத்துக்கு 
உள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் பஸ் மோதியதில் மீசாலை மேற்கை சேர்ந்த கோகுலன் லக்சிகன் (வயது-15) என்ற மாணவன் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு
 மாற்றப்பட்டுள்ளான்.
வீதியை கடக்க முயன்ற மாணவன் மீது மோதுவதை தவிர்ப்பதற்கு பஸ்ஸின் சாரதி முயன்ற போது பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த புகையிரத கடவையுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியது என்று தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 



 

வெலிகமையில் 15 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகம் செய் தஆசிரியை கைது

 மாத்தறை – வெலிகமையில் 15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 27 வயதுடைய பிரத்தியேக வகுப்பு ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவனின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒக்டோபர் 6ம் திகதி ஆசிரியையின் வீட்டில் படிக்க சென்ற குறித்த சிறுவன், பின்னர் வகுப்புக்கு செல்ல மறுத்துள்ளான். எனினும் சில நாட்களில் ஆசிரியையும் சிறுவனும் வீட்டை விட்டு
 வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அவர் சிறுவனை கொழும்பு, கண்டி ஹோட்டல்களுக்கு அழைத்து சென்றதாகவும் 
தெரியவருகிறது.
இந்நிலையில் கடந்த 12ம் திகதி இருவரையும் அழைத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு, சிறுவனின் வாக்குமூலத்தின்படி 
ஆசிரியை கைது செய்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

மட்டக்களப்பு வீதியில் கங்கை பாலத்தில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

 திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் கங்கை பாலத்தில் .15-10-20.இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் ஈச்ந்தீவு, ஆலங்கேனி, கிண்ணியாவை பிறப்பிடமாகவும் மூதூர், மல்லிகைத் தீவு, பெருவெளி பிரதேசத்தில் வசிப்பிடமாகவும் உடைய தர்மசேனன் நித்தியரூபன் (வயது-37) என மூதூர்
 பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூரில் இருந்து தம்பலகாமம் ஆடைத் தொழிச்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸூம் கிண்ணியாவில் இருந்து மூதூர் நோக்கிச் சென்ற மோட்டார் இருசக்கர வாகனமும் கங்கை 
பாலத்தில் நேருக்கு நேர் சந்தித்த வேலையில் வேகத்தை கட்டுப்படுத்த இயலாத மோட்டார் இருசக்கர வாகனத்தை 
ஓட்டிச் சென்றவர்.
முதலில் பஸ்ஸூடன் மோதி பின்பு கங்கை பாலத்தின் அலுமினிய தடுப்புடன் மோதியதில் விபத்து ஏற்பட்டு மோட்டார் இருசக்கர வாக ஓட்டுனர் ஸ்தலத்தில் பலியானதாக மூதூர் பொலிஸார்
 தெரிவித்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

புதன், 14 அக்டோபர், 2020

கற்பகபுரத்தில் தற்கொலை செய்து கொண்ட இரு பிள்ளைகளின் தாயார்:

வவுனியா, கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவமானது.14.10-20. இன்று காலை 7.00 மணிக்கும் 8.45 மணிக்கும் இடையியலான நேரத்தில் இடம்பெற்றுள்ளது.
சடலமான மீட்கப்பட்டவர் முத்துக்குமார் கஜனி (வயது 27) என உறவினர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இன்றைய தினம் வீட்டில் இருந்து காலை 6.30 மணி அளவில் 3 வயது மற்றும் 7 வயது பிள்ளைகளுடன் கணவர் அவரது தாயார் 
வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன் போது குறித்த குடும்ப பெண் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். காலை 8.45 மணி அளவில் வீடு திரும்பிய கணவர் வீட்டிக்குள் சென்ற சமயத்தில் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்படுதை அவதானித்துள்ளார்.
இதனை அடுத்து, இது தொடர்பில் அயவர்களின் கற்பகபுரம் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கிராமசேவையாளர் இது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு 
தகவலை வழங்கினார்.
உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் தடயவியல் பொலிஸாரின் விசாரணைக்கு உட்படுத்துமாறு உத்தரவு 
பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, தான் கடன் தொல்லையினால் தற்கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த பெண் அவரது தாயாரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்ததாக மரணித்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளதாகவும் அயலவர் தெரிவித்திருந்தமையும் 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


திங்கள், 12 அக்டோபர், 2020

நாட்டில் தனிமைப்படுத்தலில் இருந்து விலகிய கான்ஸ்டபிள் பணி நீக்கம்

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விலகிய பொலிஸ் சாரதியான கான்ஸ்டபிள் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த கான்ஸ்டபிளுக்கு எதிராக வழக்கு தாக்கல் 
செய்யப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஹிஜ்ஜிராபுர பகுதியில் வீடொன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

ஹட்டன் – ஹிஜ்ஜிராபுர பகுதியில் வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளர் வழங்கிய தகவலுக்கு அமைய இன்றைய தினம் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்
 தெரிவித்துள்ளனர்.
60 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் 3 நாட்களுக்கு முன்னரே அவர் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் 
மேற்கொண்டு வருகின்றனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>