siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 30 ஜூன், 2020

உடுவில்பாடசாலையொன்றின் முன்மாதிரியான செயற்பாடுகள்

நாட்டில் கொரோனா அபாயம் தற்காலிகமாக ஓய்ந்துள்ள நிலையில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகவிருக்கின்றன. இதற்காக பல்வேறு சுகாதார வேலைத் திட்டங்களை எமது 
அரசாங்கமானது நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றது.பாடசாலை மாணவர்களின் 
சுகாதாரப் பாதுகாப்பை முதற்கொண்டு எமது யாழ் மாவட்டத்திலும் பெரும்பாலான பாடசாலைகளில் 
ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
 இந்த வகையில், யாழ் உடுவில் மகளிர் 
கல்லூரி நிர்வாகமும் தமது பாடசாலை மாணவிகளின் சுகாதார நலன்கருதி, அருமையான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த ஆயத்தமாகி வருகின்றன.அந்த வகையில் பழைய 
பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களைக் கொண்டு கைகளைக் கழுவி சுத்தப்படுத்திக் கொள்வதற்காக பத்திற்கும்
 மேற்பட்ட சிறிய கை கழுவும் கோப்பைகளை சிறப்பான முறையில் வடிவமைத்து 
அவற்றை பூ மரங்களுக்கு பயன்தரும் வகையில் மிகவும் நேர்த்தியாகப் பொருத்தியுள்ளனர்.  இதனால், மாணவிகள் 
வகுப்பறைகளுக்கு செல்லும் முன்னர் தமது கை களை தொற்று நீக்கிகள் மூலம் சுத்தப்படுத்துவதுடன் சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு தண்ணீர் வீண்விரயம் செய்வதும் தடுக்கப்படுகின்றது.  உடுவில் மகளிர் கல்லூரியின் இந்த சிறப்பான செயற்பாட்டை அனைவரும் பாராட்டி 
வருகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 24 ஜூன், 2020

இந்தியாவில் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

இந்தியாவில் அதிகாலையில் வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சனா (17). இவர் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அஞ்சனாவுக்கு 
பனிரெண்டாம் வகுப்பு கிரேட் தேர்வு நடக்கவிருந்தது.இதையடுத்து ஞாயிறு இரவு முழுவதும் அவர் படித்து கொண்டிருந்தார்.
பின்னர் திங்கள் அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து வெளியில் சென்ற அஞ்சனா வெகுநேரமாக வீடு திரும்பவில்லை.இதையடுத்து அஞ்சனாவின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் அவரை 
தேடிய போது அருகில் இருந்த கிணற்றுக்குள் அஞ்சனா மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கத்தினார்கள்.சம்பவம் குறித்து 
தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து அஞ்சனாவை வெளியில் எடுத்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
தேர்வுப் பயத்தில் அஞ்சனா தற்கொலை செய்து கொண்டார் என பொலிசார் கூறியுள்ளனர்.அஞ்சனாவின் குடும்பத்தார் கூறுகையில், கடந்த 5 நாட்களாகவே 
அஞ்சனா யாரிடமும் பேசாமல் இருந்தாள். நாங்கள் அவளுக்கு என்ன பிரச்சனை என கேட்டும் கூறவில்லை.தேர்வு 
காரணமாக மிகுந்த பயம் மற்றும் மன அழுத்தத்தில் அஞ்சனா இருந்திருக்கிறாள்.அவளின் மர
ணம் எங்களுக்கு 
அதிர்ச்சி தருகிறது. அஞ்சனாவின் தந்தை துபாயில் பணிபுரிகிறார் என கூறியுள்ளனர்.சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 23 ஜூன், 2020

சுன்னாகத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கைதான நபர்கள்

  யாழ் சுன்னாகம் பகுதியில் நண்பர்கள் இருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய போது, சட்டவிரோத கூட்டத்தைக் கூடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட 24 பேரையும் பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம்.23-06-20 இன்று உத்தரவிட்டது.
அத்துடன் பிள்ளைகளை செல்லமாக வளர்த்தால் செல்லமாகவே வீட்டில் வைத்திருக்க வேண்டும். வெளியில் குற்றச்செயல்களில் ஈடுபடவிட்டால் நீதிமன்றம் கட்டுக்காவலில் வைக்கவேண்டிய நிலை ஏற்படும் என்று சந்தேக நபர்களின் பெற்றோருக்கு நீதிவான் ஏ.பீற்றர் போல் அறிவுரை வழங்கினார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும்
 தெரியவருகையில்,
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுன்னாகம் இலங்கை வங்கி கிளைக்கு அண்மையான பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 15ஆம் திகதி பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றது. முல்லைத்தீவைச் சேர்ந்த ரணா பிரசாத் வயது -24 மருதனார்மடத்தைச் சேர்ந்த நெல்லையா நேமிநாதன் வயது-20 ஆகிய இருவரது பிறந்தநாள் கேக் வெட்டிக் 
கொண்டாடப்பட்டது.
இந்தக் கொண்டாட்டம் தொடர்பில் தகவல் அறிந்த யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார், அன்றைய தினம் மாலை 5 மணியளவில் பிறந்தநாள் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்றனர். நிகழ்வில் பங்கேற்ற 40இற்கும் மேற்பட்டோரிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அவர்களில் 26 பேரை மட்டும் கைது செய்த பொலிஸார், அவர்களை விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிப்பதாகத் தெரிவித்து அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் நீண்ட இழுபறியின் பின்னர் சந்தேக நபர்கள் 26 பேரும் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் 15ஆம் திகதி இரவு முற்படுத்தினர். சந்தேக நபர்களிடம் ஒவ்வொருவராக 23-06-20. அதிகாலை வரை வாக்குமூலம் பெறப்பட்டது.
சந்தேக நபர்கள் 26 பேரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் முற்படுத்தப்பட்டனர்.
வழக்கில் முற்படுத்தப்பட்ட சிறுவர்கள் இருவரது பெற்றோரையும் அழைத்து அறிவுரை வழங்கிய நீதிவான் ஏ.பீற்றர் போல், அவர்கள் இருவரையும் தலா ஒரு லட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவித்தார்.
ஏனைய 24 பேரையும் வரும் ஜூன் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் சந்தேக நபர்கள் 14 பேர் சார்பில் சட்டத்தரணி வீ.கௌதமன், கடந்த 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை நகர்த்தல் பத்திரம் அணைத்து பிணை விண்ணப்பம் செய்தார்.
எனினும் அன்றைய தினம் பிணை வழங்க மறுத்த மன்று, சந்தேக நபர்கள் 24 பேரையும் இன்று மன்றில் முற்படுத்த சிறைச்சாலைக்கு உத்தரவிட்டது. அத்துடன், சந்தேக நபர்களின் பெற்றோரை மன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் சந்தேக நபர்கள் 24 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்களின் பெற்றோரும் மன்றில் முன்னிலையாகினர்.
பெற்றோருக்கு அறிவுரை வழங்கிய நீதிவான் ஏ.பீற்றர் போல், சந்தேக நபர்களை கடும் நிபந்தனையுடனான பிணையில் 
விடுவிக்க உத்தரவிட்டார்.
சந்தேக நபர்கள் 24 பேரும் தலா 2 லட்சம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் விடுவிக்கப்படுகின்றனர்.
முதல் 8 சந்தேக நபர்களும் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமையும் அடுத்த 8 சந்தேக நபர்களும் மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமையும் ஏனைய 8 சந்தேக நபர்களும் மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றப் பதிவாளர் முன்னிலையில் கையொப்பமிடவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிணையில் வெளியில் இருக்கும் காலப்பகுதியில் சந்தேக நபர்கள் குற்றச் செயல் எவற்றிலும் ஈடுபடக் கூடாது" என்று நீதிவான் பிணை கட்டளையை வழங்கினார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


யாழ் கோப்பாயில் இராணுவம் நிர்மானித்த வீடு கையளிப்பு

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் வறிய குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் புதிய வீடு நிர்மாணித்து இன்று (23-06-20) கையளிக்கப்பட்டது.
கோப்பாய் பகுதியில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிதி பங்களிப்பில், இந்த வீடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ருவான் வணிகசூரியவினால் 
கையளிக்கப்பட்டது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 22 ஜூன், 2020

மன்னார் செஞ்சிலுவை சங்க கிளை செயலாளர் தற்கொலை

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கிப் பயணித்த புகையிரதத்திற்கு முன் பெரியட்டு 41 ஆவது மைல் கல்லுக்கு அருகில் உள்ள புகையிரத வீதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை புகையிரதத்திற்கு 
முன் பாய்ந்து மன்னாரை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை
 செய்து கொண்டுள்ளார்.இவ்வாறு
 தற்கொலை செய்தவர் சமூக சேவையாளரும்,இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளையின் செயலாளராக கடமையாற்றிய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆ.ரகு சங்கர் (43) எனத் தெரிய வந்துள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை பெரிய கட்டு புகையிரத வீதிக்கு அருகில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு, மன்னார் நோக்கி பயணித்த புகையிரத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக 
தெரிய வருகின்றது.சடலம் மடு புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரனைகளை பறையநாளன் குளம் பொலிஸார் மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நாட்டு மக்களுக்கு பெருமகிழ்ச்சிச் செய்தி..கொரோனா தொற்றாளர்கள் இன்று இல்லை

இலங்கையில், கடந்த 48 மணி நேரத்தில் புதிய கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளங்காணப்படவில்லை.
இந்நிலையில், இறுதியாக அடையாளங்காணப்பட்ட 1950 பேர் 
மாத்திரமே இதுவரை கொரோனா தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.இதேவேளை
 கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,498 ஆக அதிகரித்துள்ளது.தற்போது அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளில் 441 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.இதேவேளை
, 25 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
அம்பாறை மாவட்டத்தில் காலை கரை ஒதுங்கிய பாரிய மீன்கள்

அம்பாறை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் இன்றையதினம் காலை பாரிய மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதில் பொத்துவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோமாரி – 2 பிரதேசத்தில் அரியவகை நீல திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதை பிரதேச வாசிகள் அவதானித்து அப்பகுதி கடற்படையினருக்கு 
அறிவித்துள்ளனர்.
இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த கடற்படையினர் கரை ஒதுங்கிய மீனை பார்வையிட்டு மேலதிக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதே வேளை அம்பாறை மருதமுனை – பெரியநீலாவணை கடற்கரை இன்று இராட்சத
 சுறாமீன் ஒன்று பிடிபட்டுள்ளது.
சுமார் 20 அடி உடைய குறித்த மீன் 1500 கிலோவிற்கு அதிகமான இருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர். கரைவலை மீனவர்களது வலையில் சிக்கிய இராட்சத மீனை பார்வையிட பெருமளவு மக்கள் வருகை தந்திருந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்
 தெரிவித்துள்ளார்.
அரிய வகை புள்ளி சுறா பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய மீண்டும் கடலில் விடப்பட்டது. இவ்விரு மீன்களையும் பார்ப்பதற்கு அதிகளவான மக்கள் கடற்கரைக்கு சென்றதாக
 தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
ஞாயிறு, 21 ஜூன், 2020

கொரோனாத் தொற்று சிங்கப்பூர் சிறையிலுள்ள இலங்கையருக்கு உறுதியானது

சிங்கப்பூரில் சிறையிலிருந்த இலங்கையைச் சேர்ந்த 21 வயது இளைஞர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.சமூக நுழைவு அனுமதி அட்டையை வைத்திருந்த அவர், இம்மாதம்,06-06-20,ஆம் திகதியிலிருந்து சாங்கி சிறையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.கிருமிப் பரவல் தொடர்பான எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு 
முன்னர், அவர் சிங்கப்பூருக்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.6ஆம் திகதி சிறையில் அடைக்கப்பட்ட அவர் மற்ற கைதிகளிடமிருந்து 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்பட்டிருந்தார்.அவருடன் ஒரே நாளில் அனுமதிக்கப்பட்ட மற்றக் கைதிகளுக்கு 
கிருமித் தொற்று இல்லையெனக் கண்டுபிடிக்கப்பட்டது.நோய்க்கான அறிகுறிகள் தென்படாத குறித்த 
இளைஞன், சிறைச்சாலைக்கு வெளியில் உள்ள தனிமைப்படுத்தும் வசதியில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளார்.இதற்கு முன் சிறைச்சாலையில் நோய்வாய்ப்பட்ட நால்வருடன் இவருக்கு தொடர்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
சனி, 20 ஜூன், 2020

சூரிய கிரகணம். கிருமிகள் அதிகம் பெருகும் வாய்ப்பு.மக்களே அவதானம்

நாளை 21-06-2020.சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவது தான் சூரியகிரகணம். இந்த சம்பவமானது அமாவாசை அன்று மட்டுமே நிகழும். மேலும், நிலா சூரியனை மறைத்து, பின்னர் சூரியன் வெளியே வரும்.
இந்த கிரகணமானது பல நாடுகளில் ஏற்படும். அப்போது வானிலை மேகமூட்டம் இன்றியிருந்தால் மக்கள் இந்த கிரகணத்தை காணலாம். இந்நிலையில் இங்குசூரிய கிரகணத்தை பொறுத்தவரை பல்வேறு நம்பிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன
.இவை அனைத்தும் ஆயுர்வேத முறைப்படி உருவானவையாகும். சூரியன் முழுமையாக தெரியாத காரணத்தினால் சூரிய கிரகணத்தின் நேரமானது, கெட்ட நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் கிருமிகள் அதிக அளவில் பெருகக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதனால், கிரகண நேரத்தில் சமைத்தல், வெளியே செல்லுதல், நீர் பருகுதல் முதலியவை தவிர்க்கப்படுகிறது. இருப்பினும் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவை உண்ண அறிவுறுத்தப்படுகிறார்கள்.சூரிய
 கிரகணத்திற்கு பின் என்ன செய்ய வேண்டும்?- 
சூரிய கிரகணம் முடிந்த பின்னர் 2 மணி அளவில் வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்ய உபயோகப்படுத்தும் தண்ணீரில், கல்லுப்பு, மஞ்சள், சிறிது அருகம்புல் ஆகியவற்றை சேர்த்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.சுத்தம் செய்த பின்னர் குளிக்க வேண்டும். குளிக்க பயன்படுத்தப்படும் தண்ணீரில் ஒரு வெற்றிலையில் நான்காக வெட்டி, எலுமிச்சை பழ சாறு 3 சொட்டு ஊற்றி, அருகம்புல் மற்றும் வில்வ இலை ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு குளிக்க வேண்டும்.
சகல தோஷம் நிவர்த்தியாமி” என்று கூறிவிட்டு குளித்தால் சூரிய கிரகணத்தால் ஏற்படும் தோஷம் நிச்சயம் நிவர்த்தியாகும்

2020 ஆம் ஆண்டு தற்போது வரை பிறந்த குழந்தைகள் நிச்சயமாக சில தோஷங்களால் பாதிக்கப்பட்டிருப்பர். அவர்களுக்கு தோஷநிவர்த்தி வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.வீட்டின் வாசலில் மாவிலை மற்றும் தோரணங்கள் கட்ட வேண்டும். அபிஷேகம் செய்து முடித்தபின்னர் விக்ரகங்களுக்கும், படங்களுக்கும் சந்தனம், மஞ்சள், குங்குமம் மற்றும் பூவை வைத்து அலங்கரிக்க வேண்டும்.இந்த 
நேரத்தில் விநாயகரை வழிபடுவது மிகுந்த நன்மையை தரும்.அதன் பின்னர் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். இவற்றை முறையாசெய்தால் நிச்சயமாக சூரிய 
கிரகணத்தின் போது ஏறபடும் தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம் என்று நம்பப்படுகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
வெள்ளி, 19 ஜூன், 2020

மரண அறிவித்தல் திருமதி தம்பு பூரணம்18-06-20

 மறைவு : 18-06-2020
யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி மேற்கு தலங்காவற் பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட தம்பு பூரணம் அவர்கள் 18-06-2020 வியாழக்கிழமை 
அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி யோகம்மா
 தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சந்திரசேகரன், இந்திராதேவி, ஞானசேகரன், குணசேகரன், ராசசேகரன், காலஞ்சென்ற மனோகரன், சிவனேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வராணி, தியாகேஸ்வரன், திலகேஸ்வரி, சரோஜா, சசிகலா, கனகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சண்முகம், ராசு, தயாபரசிவம், நடராசா, கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 12:30 மணியளவில்  திருநெல்வேலி செம்பாடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
 துயருறும்  பிள்ளைகள்  மருமக்கள்
பேரப்பிள்ளைகள்  குடும்பத்தினர் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
ஆழ்ந்த அனுதாபங்களுடன் அன்னாரின் 
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இந்திராதேவி – மகள்
Mobile : +94762103460  
தியாகு – மருமகன்
Mobile : +41779221929  
சுஜன்
Mobile : +94777506486  
ராஜன் – மகன்
Mobile : +447459513546  
சிவனேஸ்வரன்(குட்டி) – மகன்
Mobile : +491788366951  

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 17 ஜூன், 2020

விபத்தில் உயிரிழந்த யாழ் மாநகரசபை பணியாளரின் குடும்பத்திற்கு நிதியுதவி

நேற்று உயிரிழந்த யாழ் மாநகரசபையின் தீயணைப்பு வீரரின் குடும்பத்திற்கு சக பணியாளர்கள் நிதி திரட்டி வழங்கியுள்ளனர்.யாழ் மாநகரசபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் நேற்று (16-06-20) வடமராட்சி கிழக்கிற்கு தீயணைப்பு பணிக்கு சென்றபோது, நீர்வேலி பகுதியில் விபத்திற்குள்ளானது.இதில் அரியரட்ணம் சகாயராஜா (37) என்பவர் உயிரிழந்தார்.அவர் உயிரிழந்ததையடுத்து 
நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மனைவி, குழந்தைகளிற்கு உதவும் முகமாக, யாழ் மாநகரசபையின் பணியாளர்கள்.17-06-20. இன்று நிதி திரட்டினர். மாநகரசபை பணியாளர்களிற்கிடையே இன்று 183,000 ரூபா நிதி திரட்டப்பட்டது.இந்த நிதி இன்று உயிரிழந்தவரின் மனைவியிடம் 
கையளிக்கப்பட்டது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 15 ஜூன், 2020

மின்னேரிய முகாமில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 7 பேர் வீடுகளுக்கு

மின்னேரிய இராணுவ முகாமில் வவுனியாவை சேர்ந்த 7 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று (12) காலை வவுனியா பொலிஸ் நிலையத்தினூடாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.மின்னேரிய இராணுவ முகாமில் இந்தியாவிலிருந்து வருகை
 தந்தவர்கள் உட்பட வவுனியாவை 
சேர்ந்த 7 பேர் கொவிட் 19 கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 14 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.அவர்கள் இன்றைய தினம் அவர்களது தனிமைப்படுத்தலை நிறைவு 
செய்து வவுனியா பொலிஸ் நிலையத்தின் ஊடாக வதிவிடங்களை உறுதிப்படுத்திய பின்னர் 
விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

கனடாவில் குரும்பசிட்டியை சேர்ந்த ஒருவர் மர்மமான முறையில் கொலை

யாழ்.குரும்பசிட்டிப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கனடாவில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.
 13-06-20.சனிக்கிழமை மார்க்கம் நகரில்
 45 வயதான மதன் மகாலிங்கம் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அறிவித்த யோர்க் பிராந்திய பொலிஸார்,
அது தொடர்பான விசாரணைகளை 
மேற்கொண்டனர். இந்நிலையில், அவர் கொலை செய்யப்பட்டதாக யோர்க் பொலிஸார்.14-06-20. அன்று  அறிவித்துள்ளனர். கடந்த 06ஆம் திகதி ஸ் ரீலெஸ் வீதி கிழக்கு மர்ஹம் வீதி ச
ந்திப்புக்கு அருகாமையில் மேரிடேல் வீதியில் உள்ள இல்லம் ஒன்றுக்கு வெளியில் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 14 ஜூன், 2020

யாழில் நீர் இறைக்கும் இயந்திரத்தை பீடி பிடித்தபடி இயக்கிய இளைஞன் பலி

புகைபி‍டித்துக்கொண்டு நீர் இறைக்கும் இயந்த்திரத்தை இயக்கும் போது தீக்காயத்திற்குள், உள்ளான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் சுன்னாகம் கந்தரோடை பகுதியை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சுன்னாகம் கந்தரோடையில் விவசாயம் செய்து வரும் குறித்த இளைஞர் 31 ஆம் திகதி தனது தோடடத்திற்கு நீர் இறைப்பதற்காக நீர் இறைக்கும் இயந்த்திரத்தை தோளில் சுமந்து சென்றுள்ளார். அப்போது இயந்திரத்தில் இருந்த மண்ணெண்ணெய் அவரது உடலில் பட்டுள்ளது.
பின்னர் தோட்டத்தில் பீடி புகைத்துக் கொண்டு பெற்றோலை பயன்படுத்தி நீர் இறைக்கும் இயந்திரத்தை இயக்கி உள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து கூக்குரல் எழுப்பியவாறு கிணத்திற்குள் குதித்துள்ளார்.அவ்வாறு குதித்தவரை அயலில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் (12) உயிரிழந்துள்ளார்.இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகார நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 9 ஜூன், 2020

கொரோனா தொற்று இந்திய வியாபாரிக்கு உறுதி-யாழில் 13 பேருக்கு பரிசோதனை.

இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இணுவில் மற்றும் ஏழாலைப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்துவதற்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.குறித்த 13 பேருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனைகளின்
 முடிவுகள் .09-06-20.இன்று 
(செவ்வாய்க்கிழமை) இரவு வெளியாகும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.குறித்த
 இந்திய வியாபாரிக்கு, கொரோனா தொற்று
 இருப்பதாக 08-06-20.நேற்று வெளியான தகவல், இன்றே உறுதிப்படுத்தப்பட்டது.இதனையடுத்தே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 
பரிசோதனை முடிவுகளின் படி, அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கேதீஸ்வரன் 
மேலும் தெரிவித்தார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>மனைவியை பார்க்க வெளிநாட்டிலிருந்து பரிசுகளுடன் வந்த கணவனுக்கு

வெளிநாட்டில் கணவர் பணிபுரியும் நிலையில் கேரளாவில் உள்ள மனைவி திடீரென உயிரிழந்தது அவரை பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.கேரளாவின் திருவனந்தபுரத்தை
 சேர்ந்தவர் பிரசாந்தன் பிரபாகரன் நாயர் (48). இவர் மனைவி மினி (39). தம்பதிக்கு சோனா என்ற மகள் உள்ளார்.பிரசாந்தன் துபாயில் வாகன ஓட்டுனராக பணிபுரிகிறார்.
இந்த நிலையில், கடந்த வாரம் மினி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 
இதையடுத்து வியாழன் அன்று அவர் உயிரிழந்துள்ளார்.இந்த தகவல் துபாயில் உள்ள பிரசாந்தனுக்கு பேரிடியாக வந்தது.இது குறித்து துபாயில் உள்ள சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான ஹாசிக் கூறுகையில், நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த மினி 
திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.இந்தச் செய்தி பிரசாந்தனுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.ஏனெனில், இந்த 
மாதத்தில் மனைவி, மகளை பரிசுகளுடன் வந்து பார்க்க பிரசாந்தன் திட்டமிட்டிருந்தார்.
சனிக்கிழமை திருவனந்தபுரத்துக்கு கிளம்பும் விமானத்தில் பிரசாந்தன் பயணித்து தனது மனைவி மினிக்கு இறுதிச்சடங்குகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 3 ஜூன், 2020

வந்து விட்ட வெட்டுக்கிளிகள். கிளிநொச்சிக்கும் ஒரு வாழை மரம் முற்றாக நாசம்

குருநாகல் மாவத்தகம பகுதியில் அடையாளங் காணப்பட்ட வெட்டுக்கிளி வட மாகாணத்தில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதா விவசாய 
பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன் தெரிவித்துள்ளார்.வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அந்த வெட்டுக்கிளி 
தற்போது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.குருநாகல், கேகாலை 
மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் வெட்டுக்கிளி பரவியுள்ளது.எனினும், வெட்டுக்கிளி 
பரவல் தகவல் பற்றி ஆராய்ந்து வருவதாக 
வடக்கு விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. வழமையாக வடக்கில் காணப்படுகின்ற வெட்டுக்கிளிகளையும் 
புதிதாக பரவி வருகின்ற வெட்டுக்கிளிகளாக விவசாயிகள் கருதுவதாக திணக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.இது சம்பந்தமாக விரிவான பரிசீலனை நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அந்த திணைக்களம் 
குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கிரிந்த புஹூல்வெல பகுதியில் ஒரு பெர்ச் அளவான நிலத்தில் 3 அடி உயரமுள்ள புல் புதரில் சுமார் 1,000 வெட்டுக்கிளிகள் குவிந்துள்ளதாகவும், அருகிலுள்ள வாழைத் தோட்டத்தை அவை நாசம் செய்துள்ளதாகவும், ஒரு வாழைமரத்தை
 முற்றாக தின்று தீர்த்து விட்டதாகவும் விவசாய சேவைகள் வட்டாரங்கள் தெரிவித்தன.உருகமுவ பகுதியில் உள்ள 
ஒரு தோட்டத்தில் நான்கு அடி உயரமான
 புதரில் சுமார் ஐநூறு வெட்டுக்கிளிகள் உள்ளன.இன்று (3) அந்த பகுதிகளில் பெரதெனிய விவசாய கல்லூரியின் மேற்பார்வையில் இரசாயன மருந்து தெளிக்கப்படவுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 2 ஜூன், 2020

யாழ் யாழ் வடமராட்சிப் பாடசாலையிலிருந்து சடலமொன்று மீட்பு

யாழ். புலோலி அ.மி.த.க.பாடசாலையில் இருந்து.02-06-20. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.குறித்த பாடசாலையில் காவலாளியாக கடமையாற்றி வந்தவரே, இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் என அடையாளம்
 காணப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பாடசாலையில் காவலாளி வழமை போன்று
 நேற்று இரவு, கடமைக்கு வந்த நிலையிலையே.02-06-20. இன்றைய தினம் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>