siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 31 ஜூலை, 2023

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானம்

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
 அதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
 அதன்படி, 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 348 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. அதேபோல், ஒக்டேன் 95 லீட்டர் பெட்ரோல் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாவாகும். இதேவேளை, ஒரு லீட்டர் டீசலின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 306 ரூபாவாகும்.
 லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் விலை லீட்டர் ஒன்றிற்கு 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாவாகும். இதேவேளை, மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 226 ரூபாவாகும்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 30 ஜூலை, 2023

நாட்டில் இந்த வருடத்தில் 37 பேர் டெங்கு நோயினால் உயிரிழப்பு


இலங்கையில் இந்த வருடத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை 56,228 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதில் 27, 883 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள், கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 12,154 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த 2022 ஆம் ஆண்டின் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் டெங்கு 
நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

சனி, 29 ஜூலை, 2023

அங்கொட தேசிய மனநல நிறுவகத்தில் நோயாளி உயிரிழந்த விவகாரம் நால்வர் விளக்கமறியல்

அங்கொட தேசிய மனநல நிறுவகத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் 
வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் 29-'7-2023. இன்று  அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபர்கள் வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர்களை தாக்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட 48 வயதான நோயாளி ஜூலை மாதம் 20ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் 
 மர்மமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளியை கட்டுப்படுத்த முற்பட்டபோது வைத்தியசாலை உதவியாளர்களினால் நோயாளி தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரை தாக்கிய மருத்துவமனை உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 28 ஜூலை, 2023

மரண அறிவித்தல் திரு அப்புத்துரை மகேந்திரன் 28.07.2023

துயர் பகிர்வு-மறைவு-28-07.2023
.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. 
 அமரர் அப்புத்துரை மகேந்திரன் அவர்கள்  28-07-2023..வெள்ளிக்கிழமை  அன்று இறைபாதம் அடைந்தார்
 அன்னார். காலஞ்சென்ற அப்புத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அருமை மகனும் காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் பேரனும் காலஞ்சென்ற தம்பிராஜா அவர்களின் மருமகனும் மற்றும் தேய்வேந்திரம் அவர்களின் சகோதரனும் மல்லிகாவின் பாசமிகு கணவரும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியை 30-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று 10:00 மு.ப -12:30 பி.ப.மணி  வரை  நவற்கிரி இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம்  30-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று
 நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

எகிப்து நோக்கி ஜெர்மனியிலிருந்து சென்ற சரக்கு கப்பல் தீப்பிடித்துள்ளது

3000 சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு ஜெர்மனியிலிருந்து எகிப்து நோக்கிச்சென்ற சரக்குக்கப்பல் தீப்பிடித்துள்ளது. இந்த சரக்கு கப்பல், டட்ச் கடற்பகுதி அருகே தீப்பிடித்து எரிந்தது.
 இந்தியாவைச் சேர்ந்த கப்பல் ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாக தூதரகம் அறிவித்துள்ளது.
 மேலும் 20 இந்தியர்கள் இந்தகப்பலில் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 27 ஜூலை, 2023

யாழ் மட்டுவிலில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி: கொலை என உறுதி

யாழ் தென்மராட்சி – மட்டுவில் வடக்கு பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டி, கொலை செய்யப்பட்டுள்ளார் என உடற்கூற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, 
தெரிவிக்கப்படுகிறது.
மட்டுவில் வடக்கில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டி நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.
மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட வீட்டில் பொருட்கள்
 சிதறி கிடந்ததனால், கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்த நிலையில், மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 26 ஜூலை, 2023

யாழ் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக பெண் சடலமாக மீட்பு

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக கண்மின்னி என்று அழைக்கப்படும் (கீழே படத்தில் உள்ள பெண்) தனிமையில் 
இருந்த வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளார். குறித்த கொலைச் சம்பவம்  24-07-2023.அன்று 
திங்கட்கிழமை 
இடம்பெற்றிருக்கலாம் எனவும், அவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியும் கொட்டனால் அடித்தும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
நெற்றியில் ஒரு காயம் உள்ளது. ஆனால் அது அடிகாயமா என உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே உறுதிப்படுத்த முடியும் எனவும் இது கொலையாக இருக்கலாம் எனவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது  




செவ்வாய், 25 ஜூலை, 2023

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தேய்காய் எண்ணெய் தொடர்பில் வெளிவந்த அறிவித்தல்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்க்கு 25 ரூபா வரி விதிக்க அரசாங்கத்தின் தீர்மானம்
 எடுத்துள்ளது.
குறித்த தீர்மானத்தை உடனடியாக மீள் பெறப்பட வேண்டுமென நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது
மேலும், குறித்த தீர்மானத்தின் காரணமாக தேங்காய் 
தொடர்பான
 பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கையின் 700 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> >



உலக சுகாதார நிறுவனம் மெர்ஸ் கோரோனா குறித்து வெளியிட்ட அறிக்கை

மெர்ஸ் கோரோனா (MERS-CoV) வைரஸ் தொற்றினால் இதுவரை 2,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 936 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) இரவு அபுதாபியில் ஆபத்தான சுவாசப் பிரச்சினையை ஏற்படுத்தும் மெர்ஸ் கொரோனா வைரஸ் (MERS-CoV) பரவி வருவதை 
உறுதி செய்துள்ளது. 
முதல் முறையாக அல் ஐன் நகரில் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 28 வயது நபர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த நபருடன் 
தொடர்பில் இருந்த 108 பேரை அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் 
சோதித்துள்ளனர். 
ஆனால் இதுவரை இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகள் எதுவும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. பா
திக்கப்பட்ட நபரின் தற்போதைய நிலை குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
மெர்ஸ் கோரோனா வைரஸ் ஒட்டகங்கள் மூலம் பரவுகிறது என்று கருதப்படும் நிலையில், பாதிக்கப்பட்டுள்ள நபர் ஒட்டங்கங்களுடன் தொடர்பு கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது.
மெர்ஸ் கொரோனா (MERS-CoV) என்றால் என்ன? 
மத்திய கிழக்கு நாடுகளில் பரவத் தொடங்கியதால் மெர்ஸ் கொரோனா வைரஸ் Middle East Respiratory Syndrome Coronavirus (MERS-CoV) என்று அழைக்கப்படுகிறது. இது முதன்முதலில் சவுதி அரேபியாவில் 2012 இல் 
கண்டறியப்பட்டது.
அல்ஜீரியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், சீனா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஈரான், இத்தாலி, ஜோர்டான், குவைத், லெபனான், மலேசியா, 
நெதர்லாந்து, ஓமன், பிலிப்பைன்ஸ், கத்தார், கொரியா குடியரசு,
 பிரிட்டன், சவுதி அரேபியா,மற்றும் ஏமன் உள்ளிட்ட பல
 நாடுகளில் உள்ள மக்கள் இந்த வைரஸ் தொற்றினால் 
பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இதுவரை 936 இறப்புகளுடன் மெர்ஸ் கோரோனாவால் ஏற்பட்டுள்ளன. மொத்தம் 2,605 பேர் மெர்ஸ் கோரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இந்த வைரஸ் தொற்று விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு இடையே பரவக்கூடிய ஒரு ஜூடோனிக் வைரஸ் ஆகும். சவூதி 
அரேபியாவில் உள்ள மக்கள் ஒட்டகங்களுடன் பாதுகாப்பற்ற முறையில் தொடர்பு கொள்வதால் இந்த வைரஸ் பாதிப்புக்உக ஆளாகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. 
காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் ஆகும். சில சந்தர்ப்பங்களில் நிமோனியாவும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 24 ஜூலை, 2023

மரண அறிவித்தல் திருமதி கந்தையா சரஸ்வதி (சரசு) 23.07.2023

 துயர் பகிர்வு-மறைவு-23-07.2023. 
யாழ். சரசாலையை பிறப்பிடமாகவும். சுவிசில் வசித்துவரும் தற்போது நவற்கிரி ஆவரங்கால் மேற்க்கு வன்னியசிங்கம் வீதியை 
வதிவிடமாகவும் கொண்ட. 
திருமதி.  கந்தையா சரஸ்வதி
       அவர்கள் 23-07-2023.23 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார். அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
    அன்னார். காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும். 
சின்னத்துரை ( லொறி .மற்றும் மினிபஸ் உரிமையாளர்) , யோகேஸ்வரி,ராஜதுரை,ராஜேஸ்வரி,மகேஸ்வரி,தவம்,தங்கேஸ்வரி,வாமதேவன் ( தம்பியன்)  ஆகியோரின் பாசமிகு தாயாரும்
சிவசோதி ( ஆவரங்கால் மத்திய முன்பள்ளி தலைவர், மற்றும். முன்னாள் ஆவரங்கால் மத்திய சனசமூக நிலைய தலைவர்)
பரமேஸ்வரி,சுதர்சினி,அபுகரட்ணம்,விஜயராஜா,தனபாலன்,ரவீந்திரகுமார்,குமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும். 
கந்தையா, சுப்பையா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 26/7/23 புதன் கிழமை நடைபெறும். 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
. மது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!

.தகவல்:குடும்பத்தினர்
தொடர்புகட்க்கு. 
 சின்னத்துரை( மகன் )
0094774298166
சிவசோதி. (சோதி.  மருமகன்)
0094773604206


ஞாயிறு, 23 ஜூலை, 2023

தாண்டிக்குளம் பகுதியில் புகையிரதத்துடன் லொறி மோதி விபத்து இருவர் படுகாயம்

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் லொறி ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் .23-07-2023.இன்று .பிற்பகல் 
விபத்து ஏற்பட்டுள்ளது.
 யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில், லொறியுடன் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

 வடக்கு புகையிரத பாதை நவீனமயமாக்கப்பட்டதன் பின்னர் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் புகையிரதங்கள் இயங்கினாலும் தாண்டிக்குளம் நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.

 இதனால் நடக்கவிருந்த அசம்பாவிதம் ஓரளவு தவிர்க்கப்பட்டதாகவும் நமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

 விபத்தில் லொறியின் சாரதி மற்றும் துணை சாரதி படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 லொறியின் முன் பகுதி மாத்திரம் புகையிரதத்துடன் மோதியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 22 ஜூலை, 2023

அமெரிக்கவில் கடற்கரையோரம் ஒதுங்கிய உயிரிழந்த 2000 பென்குயின்கள்

செழிப்பான நிலப்பரப்பையும், நீண்ட அழகான கடற்கரை பகுதியையும் கொண்ட தென் அமெரிக்க நாடு உருகுவே. இங்குள்ள கடற்கரை பகுதியில் கடந்த 10 நாட்களில் சுமார் 2000 பென்குயின் பறவைகள் இறந்திருக்கிறது. பென்குயின்கள் இறப்புக்கு காய்ச்சல் நோய் காரணம் இல்லை என்றும், இந்நிகழ்வின் காரணம் மர்மமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகெல்லனிக் பெங்குவின்கள் தெற்கு அர்ஜென்டினாவில் இனப்பெருக்கம் மேற்கொள்கின்றன. குளிர்காலத்தில், உணவு மற்றும் வெப்பமான நீரை தேடி அவை வடக்கே இடம் பெயர்ந்து, பிரேசில் நாட்டின் மாநிலமான எஸ்பிரிடோ சாண்டோ நகர கடற்கரையை அடைகின்றன.
"தற்போது அட்லாண்டிக் பெருங்கடலில் இறந்திருக்கும் இந்த பறவையினங்கள் பெரும்பாலும் மிக இளம் வயது கொண்டவை. அவை உருகுவே நாட்டின் கரையோரங்களுக்கு நீரோட்டங்களால் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. இது தண்ணீரிலேயே ஏற்பட்டிருக்கும் இறப்பாகும்.
அவற்றின் உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட அனைத்து மாதிரிகளின் மூலம் இறப்புக்கு காரணம் பறவை காய்ச்சல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு சில பறவைகள் இறப்பது இயல்பானது. ஆனால் இவ்வளவு அதிக அளவிலான எண்ணிக்கையில் இவை இறந்திருப்பது இயல்பானது அல்ல. 
கடந்த ஆண்டு பிரேசிலில் இதே போன்றதொரு சம்பவம் நிகழ்ந்து என சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விலங்கினங்கள் துறையின் 
தலைவர் கார்மென் லெய்சகோயன் கூறினார். அட்லாண்டிக் கடற்கரையின் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு, 500-க்கும் மேற்பட்ட பென்குயின்கள்
 இறந்து கிடந்தன என லகுனா டி ரோச்சா எனப்படும் பாதுகாக்கப்பட்ட பகுதியின் இயக்குனர் ஹெக்டர் கேமரிஸ் தெரிவித்தார்.
அதிகப்படியான மீன்பிடித்தலும், சட்டவிரோத மீன்பிடித்தலுமே இந்த உயிரினங்களின் இறப்பு அதிகரிப்பதற்கு காரணம் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
 அட்லாண்டிக் கடலில் ஒரு துணை வெப்பமண்டல சூறாவளி, ஜூலை மாத நடுப்பகுதியில் தென்கிழக்கு பிரேசிலை தாக்கியது. இதனால் ஏற்பட்ட மோசமான வானிலையால் பலவீனமான உயிரினங்கள் இறந்திருக்க கூடும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 21 ஜூலை, 2023

விமானம் விபத்துக்குள்ளானதில் மத்திய கொலம்பியாவில் அரசியல்வாதிகள் உயிரிழப்ப

மத்திய கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து அரசியல்வாதிகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ரொட்டிகோ கட்சியின் உறுப்பினர்கள் என தெரிய வந்துள்ளது.
அவர்கள் போயாகா துறையில் சான் லூயிஸ் டி காசினோ என்ற முனிசிபல் பகுதியில் சிறியரக விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது.
விமானம் விலாவிசென்சியோவில் இருந்து பொகோடாவிற்கு கட்சி கூட்டத்திற்காக சென்று கொண்டிருந்ததாகக் 
கூறப்படுகிறது.
சம்பவத்தில் அரசியல்வாதிகளுடன் விமானியும் உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் இந்த சம்பவத்துக்கு இடதுசாரி கட்சி தலைவர் குஸ்டாவோ பெட்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





வியாழன், 20 ஜூலை, 2023

ரோகிணி பகுதியில் உடற்பயிற்சி இயந்திரத்தில் ஓடும்போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு

டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள ஒரு உடற்பயிற்சி நிலையத்தில் சாக்சன் என்ற 24 வயது வாலிபர் சமீபத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். ஓட்டப் பயிற்சிக்காக மின்சாரத்தால் இயங்கும் டிரெட்மில்லில் ஏறி ஓடிக்கொண்டிருந்தார். 
அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. பலத்த மின்தாக்குதலுக்கு ஆளான அவர் பரிதாபமாக இறந்துள்ளார். 
மின்சாரம் பாய்ந்ததே அவரது இறப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக உடற்பயிற்சி நிலைய மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 
தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இறந்துபோன வாலிபர் சாக்சன் பிடெக் படித்துள்ளார். குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 19 ஜூலை, 2023

இலங்கையில் பாண் விலையை குறைக்கமுடியாதாம் பேக்கரிகள் சங்கம்

கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டாலும், அதற்கேற்ப பாண் அல்லது பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என  சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரிகள் சங்கம்
 தெரிவித்துள்ளது.
 பாண் விலையை குறைக்கும் வகையில் கோதுமை மாவின் விலையை கணிசமாக குறைக்க வேண்டும் என அதன் தலைவர்  தெரிவித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 18 ஜூலை, 2023

நாட்டில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் பதற்றநிலை

நாட்டில் ஊவா வெல்லஸ் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் வருட மாணவர்கள் இரு குழுக்களுக்கிடையில் சர்ச்சைக்குரிய சூழ்நிலை காரணமாக இரண்டாம் வருட மாணவர்களை
 பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து தற்காலிகமாக வெளியேற்றுவதற்கு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரசபை நடவடிக்கை
 எடுத்துள்ளது.
 இருதரப்பு மாணவர்களுக்கிடையிலான முரண்பாடு மோதலாக மாறுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக வேந்தர் மஹாச்சார்யா ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார். 
 இதேவேளை, பல்கலைக்கழக வளாகத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


மரண அறிவித்தல் திருமதி துரைசிங்கம் புவனேஸ்வரி 17.07.2023

மறைவு-17-07-2023 
யாழ் கொடிகாமத்தை பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வாழ்விடமாகவும் , தற்போது கனடாவில் வசித்துவந்த , திருமதி துரைசிங்கம்  புவனேஸ்வரி அவர்கள் 17-07-2023.திங்கள்கிழமை அன்று 
இறைவனடி சேர்ந்தார்அன்னார் காலஞ் சென்றவர்களான  வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்
திரு  துரைசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவர் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்:குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி

திங்கள், 17 ஜூலை, 2023

இலங்கையில் முதல் 6 மாதங்களில் வரி வருவாய் 93 சதவீதம் அதிகரிப்பு

இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 6 மில்லியன் 96,946 ரூபா வரி வருமானமாக பெறப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 ஆனால் கடந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 361,832 மில்லியன் ரூபாவே வசூலிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் 
தெரிவித்துள்ளது. 
 அதன்படி, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வசூலான வரி வருவாய் 93 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
 நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதாலும், நாட்டில் வரிக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்களாலும் வரி வருமானம் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 16 ஜூலை, 2023

நாம் பிரதான உணவாக உட்கொள்ளும் மரவள்ளிக் கிழங்கின் நன்மைகள்

 பிரதான உணவாக உட்கொள்ளப்படும் மரவள்ளிக்கிழங்கு, வேகவைக்கும்போது சுவையானது மற்றும் நமது உடலின் வலிமையை அதிகரிக்கும் பல நன்மைகளை வழங்குகிறது.
மரவள்ளிக்கிழங்கில் கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது.
மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா போன்ற எல்லா வகை சிற்றுண்டிகளும், இனிப்பு கார வகைகளும் செய்யலாம்.
ஞாபக மறதி வியாதியை குணப்படுத்தும். உடலில் நீரின் 
அளவை சரியாக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும்.
ரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைக்கிறது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 15 ஜூலை, 2023

திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா) 1ம் ஆண்டு நினைவஞ்சலி .15...07.23

மலர்வு-02-05.1942-உதிர்வு-26-06-2022.- 
திதி -15-07-2023.சனிக்கிழமை இன்று
 யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகக்கொண்டிருந்த  திருமதி ஆ .க.சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்களின்
முதலாம் .ஆண்டு நினைவஞ்சலி 15-07-2023.இன்று அன்னார் காலம்சென்ற  திரு.ஆ .க . சுப்பிரமணியம்(மணிஐயா)
 அவர்களின் பாசமிகு மாணவியரும் காலம் சென்றவர்களான  தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும் 
காலம்சென்றவர்களான ஆறுமுகம் கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும் 
சென்றவர்களான  துரைராஜா செல்வராஜா ஞானமணி வித்திலமணி ஜெயரத்தினம்  
பாலசிங்கம் மற்றும் சிவலிங்கமணி ஆகியோரின் அன்புச்சகோதரியும் தர்மசிறி (இலங்கை )தர்மபூபதி (சுவிஸ் )தர்மதேவி((ஜேர்மன் ) தர்மதேவன்(கனடா )
 தர்மசாந்தினி (நோர்வே )காலம்சென்ற தர்மகுமார் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.இங்கனம் -குடும்பத்தினர்.
முகத்தைக் காணும் முன்பே
நேசிக்கத் தெரிந்தவளே
துன்பம் துயரம் அறியாது
எமை அன்போடு வளர்த்தவளேஉடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தந்த எம் தெய்வமே
பண்பின் உயர்விடமாய்
பாசத்தின் பிறப்பிடமாய்
அன்பிற்கு இலக்கணமாய்
இருந்த எம் குலவிளக்கேபத்து மாதம் பாடுபட்டு பத்தியங்கள்
பல காத்து பத்திரமாய் எமைப்
பெற்றெடுத்தவளேஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் அன்னயே உனைப்போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையே
இவ்வுலகில்ஆண்டொண்றாகினும் உன் நினைவது
எமை விட்டு அகலாமல் என்றும்
உனது நினைவைச் சுமர்ந்தவர்களாய்..!உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல அந்த இறைவனை பிரார்த்திகின்றோம்....
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டும் 
உங்கள்  பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் , 
பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், புட் ட ப்பிள்ளைகள் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




வெள்ளி, 14 ஜூலை, 2023

சீனாவில் மழலைகளுக்கான உணவில் விஷம் ஆசிரியைக்கு மரண தண்டனை


மத்திய சீனாவில், குழந்தைகளுக்கான உணவில் நச்சு இரசாயனத்தை கலந்து குழந்தையொன்றைக் கொன்று மற்றைய 24 குழந்தைகளுக்கு பாதிப்பை உண்டாக்கிய மழலை பள்ளி ஆசிரியைக்கு அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
வேங் யுன் எனும் 39-வயது ஆசிரியை வாங் யுன், 2019ம் வருடம் மார்ச் மாதம், உடன் பணி செய்யும் ஒரு ஆசிரியருடன் ஏற்பட்ட ஒரு தகராறுக்கு பிறகு சோடியம் நைட்ரைட் எனும் ரசாயனத்தை 
வாங்கியுள்ளார். 
மறுநாள் அவர் பணிபுரிந்த மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட உணவு வைக்கப்பட்ட பாத்திரங்களில் அதனை 
கலந்து விட்டார்.
 அதன்பின்னர் ஜனவரி 2020 மாதவாக்கில் ஒரு குழந்தைக்கு பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் பலியானது. இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.
 விசாரணையில், ஆசிரியை வாங், உணவில் கலந்த ரசாயனம்தான், குழந்தைகளின் பாதிப்புக்கு காரணம் என தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த ஹெனன் மாகாணத்தின் ஜியாவ்ஜுவோ நகர
 நீதிமன்றம் கடந்த 2020 ஜனவரி மாதம் அந்த ஆசிரியைக்கு மரண தண்டனை வழங்கியது.
 மரண தண்டனைக்கான உத்தரவை ரத்து செய்ய கோரி அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று, அதே நீதிமன்றம் அவருக்கு தண்டனையை நிறைவேற்ற அவர் அடையாளத்தை 
உறுதி செய்தது.
 பின்பு அவர் தண்டனைக்கான மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சமீப காலமாக சீனாவின் மழலையர் பள்ளிகளில் அதிகரித்து வரும் வன்முறை மரணங்களில் இதுவும் ஒன்று என்பதால் இந்த தீர்ப்பை மக்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்தனர். 
இதே வேளை, சீனா வருடா வருடம் ஆயிரக்கணக்கான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதாக மனித உரிமைகளுக்கான சர்வதேச பொதுமன்னிப்புச்சபை தெரிவிக்கிறது.என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 13 ஜூலை, 2023

தென்கடலில் ஏற்பட்ட விபத்தினால் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்கடலில் ஏற்பட்ட விபத்தினால் தீக்காயங்களுடன் நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்ப கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காலியில் இருந்து சுமார் 431 கடல் மைல் தொலைவில் இலங்கைக்கு தென்மேற்கே ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மீனவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த மீனவர் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஐந்து மீனவர்களுடன் ‘சசிந்த புதா’ என்ற நெடுநாள் மீன்பிடி படகு கடலுக்கு சென்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.
காலியிலிருந்து இலங்கையின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஆழ்கடலில் வெளிநாட்டு படகு ஒன்றும் குறித்த நெடுநாள் படகும் மோதி 
விபத்து ஏற்பட்டது.
இதன்போது அந்த வெளிநாட்டு படகில் இருந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையின் நெடுநாள் படகில் இருந்த மீனவர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியதாக கடற்றொழில் 
மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கடற்படைக்கு 
அறிவித்துள்ளது.
இதன்படி, கடற்படையின் ‘ஸ்பார் மிரா’ என்ற வணிகக் கப்பல் ஊடாக தீக்காயமடைந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




புதன், 12 ஜூலை, 2023

கண்டி வைத்தியசாலை சிகிச்சையால் இளம் யுவதி பரிதாபமாக மரணம்

கண்டி, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வயிறுவலிக்கு சிகிச்சை பெற வந்த 21 வயதுடைய யுவதியொருவர் வைத்தியசாலையில் ஊசி போடப்பட்ட சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பேராதனை போதனா வைத்தியசாலையும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.வயிற்றில் 
ஏற்பட்ட உபாதை
பொத்தப்பிட்டிய அலகல்ல பகுதியைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி ஜயரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யுவதிக்கு வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக நேற்று முன்தினம் கெட்டப்பிட்டி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அவர் நேற்று காலை 10.00 மணியளவில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று 
வந்த நிலையில், தாதியொருவர் இரண்டு ஊசிகளை 
செலுத்தியுள்ளார்.
அதனையடுத்து அவரது உடல் திடீரென நீல நிறமாக மாறி உயிரிழந்துள்ளார் என்று சிறுமியின் தாய் மாயா இந்திராணி தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக வைத்தியசாலையில் வழங்கப்படும் மருந்துகள் காரணமாக பல பெண்கள் உயிரிழந்துள்ளமை நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 11 ஜூலை, 2023

அமெரிக்காவில் தவறுதலாக 13 மாத குழந்தை மீது காரை ஏற்றிய தாய்

அமெரிக்காவில் தாய் ஒருவர் காரை தன்னுடைய 13 மாத பெண் குழந்தை மீது தவறுதலாக மோதிய சம்பவம் இறுதியில் பெரும் சோகத்தில்
 முடிந்துள்ளது.
அமெரிக்காவில் காட்டன்வுட்டில் உள்ள வெஸ்டர்ன் டிரைவ்-வில் தாய் ஒருவர் தன்னுடைய காரை நெருக்கமான பகுதியில் செலுத்தி கொண்டு இருந்த போது தவறுதலாக அவருடைய 13 மாத பெண் குழந்தை மீது காரை 
செலுத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த 13 மாத பெண் குழந்தை உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு அவசர அவசரமாக எடுத்து செல்லப்பட்டது இருப்பினும் சிகிச்சை பலனின்றி 13 மாத பெண் குழந்தை வெர்டே பள்ளத்தாக்கு மருத்துவ மையத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தையின் பெயர் சைரா ரோஸ் தோமிங் என தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
 சம்பவம் தொடர்பாக தகவல் கிடைக்கப் பெற்று குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பொலிஸார், விசாரணையில் அரிசோனா பகுதிக்கு அருகில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அருகில் சம்பந்தப்பட்ட தாய் காரை குறுகிய இடத்தில் இயக்கி கொண்டிருந்த போது இந்த விபத்து தவறுதலாக ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>