siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 30 ஜனவரி, 2017

நாகபாம்பைக் கொன்று உயிர்விட்ட நன்றியுள்ள நாலுகால் ஜீவன்

கிளிநொச்சியில் வீட்டுக்குள் புகுந்த நாக பாம்பை கடித்து கொன்றது  பாம்பு கடித்ததனால்  தனது  உயிரயும்  நீத்த
  மிகநன்றியுள்ள நாய் ஒன்று
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>சனி, 28 ஜனவரி, 2017

மரண அறிவித்தல் திரு இரத்தினம் சோதிலிங்கம்

பிறப்பு : 1 மார்ச் 1946 — இறப்பு : 26 சனவரி 2017
யாழ். மறவன்புலத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் சோதிலிங்கம்.(சோதி) 
(இளைப்பாறிய உத்தியோகத்தர்- யாழ். ஈழநாடு பத்திரிகை)
அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் 
அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், இராசம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், விவேகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பானுமதிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
விவேகினி(ஜெர்மனி), ருபாகினி(லண்டன்), செந்தில்குமார்(ஜெர்மனி), திருக்குமரன்(ஜெர்மனி) ஆகியோரின் 
அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமார், ஷனேந்திரன்(ஜெயா), வித்தியாஞ்சலி, சிவசக்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகராசா அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
டேவிற், ஜனனி, அபர்ணா, நிரோமி, நம்யா, நயிரா, ஷியான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம்
 செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
வீட்டு முகவரி:- 
இல.05, 
அன்னசத்திர லேன், 
கந்தர்மடம், 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செந்தில்குமார் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +497031735651
திருக்குமரன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915755161448
விவேகினி(செல்வி) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +497031277175
ருபாகினி(ரூபி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447883084882
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 26 ஜனவரி, 2017

பாரிய தீ விபத்து. யாழ்.பல்கலையின் பெண்கள் விடுதியில்?

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் இன்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிதாக அமைக்கப்பட்ட பெண்கள் விடுதியின் முதலாம் மாடியிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் விடுதியின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தீ விபத்து ஏற்பட்ட விடுதியில் இருக்கும் மாணவிகளை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினரும் பொலிஸாரும் பல்கலைக்கழக சமூகத்தினரும் 
ஈடுபட்டுள்ளனர்.
விடுதியில் தீ விபத்து ஏற்படும் சந்தர்ப்பத்தில் ஒரு மாணவி உறங்கிக்கொண்டிருந்ததாகவும், ஏனைய மாணவிகளின் சத்தம் கேட்டு விடுதியை விட்டு வெளியேறியதாகவும் 
குறிப்பிடப்படுகின்றது.
தீப்பரவல் ஏற்பட்ட பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணப்படுவதால் உள் நுழைவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை எனவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நாளை வெள்ளிக்கிழமை உங்களை வலம் வரப்போகும் கெமராக்கள்!

வீதியில் இடம்பெறுகின்ற விபத்துக்களுக்கு சாரதிகள் மட்டும் பொருப்பல்ல..பொருப்பற்ற முறையில் வீதிகளை கடக்கின்ற பாதசாரிகளின் கவனயீனமும், அவசரப்போக்கும் பிரதான காரணமாகின்றது.
இந்நிலையில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை உங்களை சுற்றி கெமராக்கள் வலம் வரபோகின்றது. உங்களது தவறான வீதி பயன்பாடுகளை நேரடியாக  ஒளிப்பரப்படவிருக்கின்றது.
நாளைய தினம் வெள்ளிக்கிழமை இலங்கையின் முக்கியமான தெருக்களில்  கெமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
நீங்கள் பாதைகளில் விடும் தவறுகள், முறையற்ற நடவடிக்கைகள் என்பன நேரடியாக ஒளிப்பரப்படவிருக்கின்றது..
நோக்கம் தான் என்ன???
உயிர்ப்பலியை ஏற்படுத்தும் பாரதூரமான விபத்துக்கள் முதல், நிரந்தர அங்கவீனம் ஏற்படுத்தும் விபத்துக்கள், பொருட்சேதங்களைப் பெரியளவில் தந்து இழப்புத் தரும் விபத்துக்கள் என்று 
ஒரு சில வினாடிகள் தவறு காரணமாக ஆயுளுக்கும் எம்மை மனவேதனைக்குள்ளாக்கும் விபத்துக்கள் தினமும் இலங்கையில் நடந்துகொண்டேயிருக்கின்றன.
கடந்த 2015 ல் மட்டும் நாடாளாவியரீதியில் பதியப்பட்ட விபத்துக்கள் 39719 நடந்திருக்கின்றன. இதில் 2800 உயிர்கள் பலியாகியுள்ளன.
2016 ல்  ஆண்டில் சுமார் 80000 விபத்துக்கள் 
பதிவாகியுள்ளன.
வீதிகள் விருத்தியடைகின்றன; வாகனங்கள் நாளுக்கு நாள் புதிது புதிதாய்க் குவிந்தவண்ணமே இருக்கின்றன.
வீதி போக்குவரத்து போலீசாரும் புதிதாக நூறு, ஆயிரம் என்று வீதிகள் தோறும் நிறுத்திவைக்கப்பட்டாலும் விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றனவே தவிர குறைவதாக இல்லை.
பொதுமக்களின்  அவசரம், வீதி விதிமுறைகள் பற்றிய தெளிவின்மை,  அவதானக் குறைவு, சாரதி அனுமதிப் பத்திர வழங்கல் நடைமுறையில் ஒரு சீர்த்தன்மை இல்லை, வாகன அதிகரிப்பு, வீதிகளின் குறுக்கம் இப்படி ஆய்ந்து, ஆராய்ந்து பேசிக்கொண்டிருந்தாலும் விபத்தும் உயிர்ப்பலிகளும் அதிகரிக்கின்றனவே தவிர, குறைவதாக
 இல்லை.
ஆகவே வீதி விதிமுறைகள் பற்றிய தெளிவினை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த நாளைய தினம் வீதிக்கே வருகிறது .
வீதி விதிமுறைகள் பற்றிய தெளிவினையும், இதனால் ஏற்படுகின்ற விளைவுகளை கட்டுப்படுத்தவும், விலைமதிக்கமுடியாத மனித உயிர்களை காப்பாற்றவும் தயாராகிவிட்டது லங்காபுரி …
நாளை வெள்ளிக்கிழமை நீங்கள் விதியில் விடுகின்ற தவறுகளை முழு இலங்கை மட்டும் அன்றி உலகமே பார்க்கப்பபோகின்றது…
மனித உயிர்களை காப்பாற்ற, வீதி விபத்துக்களை குறைக்க  கெமராக்களுடன் நாளைய தினம் இலங்கையின் அனைத்து  வீதிகளிலும்  நேரடியாக 
இந்நடவடிக்கை தொடர்பான உங்களது ஆழமான, கருத்துக்களை கொமண்ட் செய்யவும்…
விலைமதிக்க முடியாத உயிர்களை காப்பாற்ற துணிந்த  உங்களது விமர்சனங்களையும் ஏற்க தயாராகிவிருக்கின்றது….
குறிப்பாக பாதசாரிகள் பாதைகளில் எப்படி கடக்க வேண்டும்?
வீதி விளக்குகளை எப்படி பின்பற்ற வேண்டும்?
சாரதிகள் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும்?
வீதி விதிமுறைகள்  தொடர்பில் உங்களுக்கு தெரியாத விடங்கள் என்ன?
போன்ற அனைத்து விடயங்கள் தொடர்பிலும் உங்களது விமர்சனங்களை கொமண்ட் செய்யவும்..
உங்களது ஒரு விமர்சனம் கூட நாளை ஒரு
 உயிரை காப்பாற்றும்…
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


தொழிற்சாலையில் வத்தளையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து!

வத்தளை ஹுணுபிடிய பொலிதீன் தொழிற்சாலையொன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ பரவலில் பொருள் சேதம் மற்றும் உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இன்னும் தகவல் கிடைக்கவில்லை என அங்குள்ள பொலிஸார் தகவல் 
வெளியிட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>கிழக்கு மாகாணம் நீரில் முழ்கும் அபாயத்தில்கிழக்கு மாகாணம்!!!


கிழக்கு மாகாணத்தில் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம் உள்ளிட்ட பல நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நீர்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டபிள்வ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதன் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த விவசாய நடவடிக்கைகள் புத்துயிர் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊவா, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தொட்டை மாவட்டத்தின் சிலப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை இன்றும் தொடரும் என எதிர்வு 
கூறப்பட்டுள்ளது.
எனவே மக்கள் அனைவரும் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்ககை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் 
தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>புதன், 25 ஜனவரி, 2017

குடியிருப்புக்குள் வேலியை உடைத்து புகுந்த காட்டுயானை!

வாகரை பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட ஆண்டாங்குளம் பகுதியிலுள் மக்கள் குடியிருப்பு பகுதியில் யானை மின்சாரவேலி அமைக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு புகுந்த காட்டு யானை மின்சார வேலியை உடைந்துவிட்டு குடியிருப்பு பகுதியில் யானைக்கூட்டம் 
புகுந்துள்ளது.
குறித்த பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை காரணமாக யானை பாதுகாப்பு மின்சாரவேலி அமைக்கப்பட்டிருந்தபோதும்,  பராமரிக்கும் வேளையில் வன ஜீவராசிகள் அதிகாரிகள் 
அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆனால் குறித்த பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் உட்புகுந்த நிலையில் குறித்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
செவ்வாய்கிழமை இரவு வேளையில் யானை பாதுகாப்பு மின்சார வேலியை உடைத்து குடியிருப்புக்குள் உட்புகுந்த யானைக்கூட்டம் அங்குள்ள வேளாண்மைப் பயிர்களை துவம்சம் செய்துள்ளதாக 
தெரிவித்தனர்.
இதேவேளை வாகரை கட்டுமுறிவுக் குளத்தின் பிரதான வீதி முற்றுமுழுதாக வெள்ள நீரினால் மூடப்பட்டுள்ள நிலையில் கட்டுமுறிவு அரசினர் பாடசாலைக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் விசாயிகள் என பலர் போக்குவரத்து செய்வதில் பெரும்சிரமத்தை எதிர் நோக்கிவருவதாக தெரிவித்தனர்.
செவ்வாய்கிழமையில் இருந்து தொடர் தேர்ச்சியாக பெய்த அடைமழை காரணமாக ஆண்டான்குளம் உடைப்பெடுத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>மரண அறிவித்தல் திருமதி இராசதுரை பூரணம்

மலர்வு : 16 மார்ச் 1927 — உதிர்வு : 23 சனவரி 2017
யாழ். நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை பூரணம் அவர்கள் 23-01-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை அருளாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு தெய்வயானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
அன்பானந்தர், சிவசக்தி, சிவானந்தவல்லி, காவேரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மயிலுப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமுதினி, சிவராஜசிங்கம், ரகுலபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அமுதவாணி, சரவணா, அகிலன், இந்து, சிவதர்ஜினி, சோபன், துர்க்கா, மயூரன், மாலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அரண், மீனா ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/01/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Trinity Community Centre, East Avenue, London E12 6SG, United Kingdom 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/01/2017, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: City of London Cemetery and Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK 
தொடர்புகளுக்கு
அன்பானந்தர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447954524028
சிவசக்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447947765248
சிவானந்தவல்லி — பிரித்தானியா
தொலைபேசி: +442082579054
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 23 ஜனவரி, 2017

வீடு புகுந்து யாழில் மக்களை வெட்டித்தள்ளிய வாள்வெட்டு கும்பல்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் நந்தினி பேக்கரி பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வாள்வெட்டு கும்பல் ஒன்று புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டித்தள்ளியுள்ளது.
குறித்த சம்பவம் 22.01.2017. மாலை 04.30 மணியளவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியிலுள்ள 5 வீடுகளுக்குள் புகுந்த இந்த மர்ம கும்பல், வீடுகளில் இருந்தவர்கள் மீது சரமாரியான தாக்குதல்களை நடாத்திவிட்டுச் சென்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>எட்டு வீட்டின் உரிமையாளர்களுக்கும் அபராதம்?

யாழ் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான முறையில் வீடுகளை வைத்திருந்தவர்கள் பொலிஸாரால் இனம் காணப்பட்டுள்ளனர் 
குறித்த  எட்டு   வீட்டின் உரிமையாளர்களுக்கும் எதிராக இன்று நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதவான் சதீஸ்கரன் குறித்த 8 வீட்டின் உரிமையாளர்களுக்கும் தலா 1500 ருபாய் தண்டம் விதித்து 
தீர்ப்பளித்தார்.
இலங்கை பூராகவும் பரவி வரும் டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக டெங்கு நுளம்புகள்  பரவும் அபாயமுள்ள வீடுகள் இனம் காணப்பட்டு வீட்டின் உரிமையாளர்களுக்கு எதிராய் பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் கடந்த வருடம் 384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>ஞாயிறு, 22 ஜனவரி, 2017

நினைவஞ்சலி. ஐந்தாம் ஆண்டு அமரர் திரு வீரகத்தி .22.01.17

அன்னை  மடியில்:  — ஆண்டவன் அடியில் : 22.01.2012 யாழ். புத்தூரைப்  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திரு வீரகத்தி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. காலச்சுழற்சியில் நான்குஆண்டுகள்   கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
என் அப்பா  
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அப்பாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
 அன்னாரின்
 ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் புத்தூர் நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .... ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள் 
. தகவல் குடும்பத்தினர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>சனி, 21 ஜனவரி, 2017

இளைஞன் குளவித் தாக்குதலுக்கு இலக்காகி மரணம்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன் தோட்டப்பகுதியில் 19.01.2017 அன்று பகல் 2.00 மணியளவில் குளவித்தாக்குதலுக்கு இலக்காகி 28 வயது மதிக்கத்தக்க இளைஞன் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுக்குள்ளான நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் 
தெரிவித்தனர்.
சம்பவத்தின் உயிரிழந்தவர் கிங்கொரா தோட்டத்தை சேர்ந்த ஜெபமாலை ஸ்டீபன் என வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சம்பவத்தில் காயமடைந்த அந்தோனி செல்வம் வயது 34, ஞானசேகரன் கருணாநிதி வயது 25 என்பவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை கொழுந்தினை உழவு இயந்திரத்தில் ஏற்றிக்கொண்டு வரும் போது திடீரென கலைந்த குளவிகள் இவர்களை சராமரியாக தாக்கியுள்ளதாகவும் இதனால் இவர்கள் மயக்கமுற்றதாகவும் அதனைத்தொடர்ந்தே பொதுமக்களால் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

போதனா வைத்தியசாலையில்மூன்று குளந்தைகளை பெற்றதாய்…!

காயத்திரி எனும் 32 வயது தாயால் யாழ் போதனா வைத்தியசாலையில் ஆச்சரியம்!! யாழ் போதனா வைத்தியசாலையில் 18.01.2017 காலை ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை காயத்திரி எனும் 32 வயதான தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.

வைத்திய கலாநிதி k.சுரேஸ்குமார் அவர்களின் நெறிப்படுத்தலில் வைத்தியர்கள்,தாதியர்கள்,மற்றும் ஏனைய உத்தியோகஸ்தர்களின் பங்களிப்புடன் இந்த அதிசய நிகழ்வு வெற்றிகரமாக 
இடம்பெற்றுள்ள.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
திங்கள், 16 ஜனவரி, 2017

இலங்கையும் விசா இன்றி பயணிக்கும் நாடுகளின் பட்டியலில் !!

பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.
இதன்படி, இலங்கை 88 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக 2017 ஆம் ஆண்டுக்கான கடவுச் சீட்டு சுட்டெண் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2016 ஆம் ஆண்டிற்கான கடவுச் சீட்டு சுட்டெண் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை 87 ஆவது இடத்தை பெற்றுள்ளது.
இந்த நிலையில், 35 நாடுகளுக்கு விசா பெற்றுக்கொள்ளாமல் பயணிப்பதற்கான வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பட்டியலில் உலகின் பலமான கடவுச் சீட்டாக ஜேர்மன் கடவுச் சீட்டு பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் இடத்தை சுவீடன் மற்றும் சிங்கப்பூர் கடவுச் சீட்டுக்களும் பெற்றுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>சனி, 14 ஜனவரி, 2017

அனைவர்க்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 14.01.17

எனது அனைத்து இணைய உறவுகட்கும் எனது அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும்  என் இதயம் கனிந்த இனிய 14.01.2017. தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்பொங்கல் திருநாளை, மகர சங்கராந்தியன்று கொண்டாடுகின்றனர். காரணம், அன்று தான்,
 மகர ராசியில் நுழைகிறான் சூரியன். சங்கராந்தியை, சங்+கராந்தி என, பிரித்து பொருள் காண வேண்டும். ‘சங்’ என்றால், நல்ல முறை; ‘கிராந்தி’ என்றால், மாறுதல்! கிராந்தி என்ற சொல்லே, 
கராந்தி என மருவியுள்ளது. ‘சங்கராந்தி’ என்ற சொல்லுக்கு, நல்ல முறையிலான மாற்றம் என்று பொருள். பொதுவாக, தை மாதம் முதல் தேதியில், மகர சங்கராந்தி வரும்.
இந்நாளில், வடதிசை பயணத்தை துவக்குகிறது சூரியன். வடக்கு திசையை, ‘குபேர திசை’ என்பர். இதனால் தான், தை முதல், ஆனி வரையுள்ள ஆறு மாதங்களை சுப மாதங்களாக கருதி, திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளையும் செய்கிறோம்.
சங்கரமணம் என்ற சொல்லுக்கு பிரவேசித்தல் என்று பொருள். மகர ராசியில் சூரியன் நுழையும் நிகழ்வே மகர சங்க்ராந்தி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ராசியிலும் சூரியன் பிரவேசிப்பது தமிழ் மாதப் பிறப்பாக கடைபிடிக்கப்படுகிறது. தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் சூரியன் பிரவேசிப்பது தை மாதப்பிறப்பு என்றும் பொங்கல் பண்டிகை என்றும் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.
மகர சங்கராந்தி விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒரு வருட காலத்தை இரண்டு ஆறு மாதங்களாகப் பிரித்து உத்திராயணம் மற்றும் தட்சியாணம் என்று அழைக்கப்படுகிறது. தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் உத்திராயணம் ஆகும்.
ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்கள் தட்சியாணம் ஆகும். தட்சியாணம் என்பது தேவர்களுக்கு இரவு பொழுதாகும் உத்திராயணம் என்பது தேவர்களின் பகல் காலமாகும். தேவர்களுக்கு பகல் காலமான உத்திராயணத்தின் முதல் நாளான தை மாதம் முதல் தேதி அதாவது சூரியன் மகரம் ராசியில் நுழையும் நேரத்தில் பஞ்சங்கத்தின் அடிப்படையில் உள்ள கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றை கொண்டு சங்கராந்தி புருஷன் என்று உருவகப்படுத்தி மகர சங்க்ராந்தியின் பலன்கள் கூறப்படுகின்றன. மன்மத வருடத்திற்க்கான சங்கராந்தி பலன்கள்…
மங்களகரமான மன்மத வருடம் மார்கழி மாதம் 29ம் தேதி (14-01-2016) அன்று வியாழக்கிழமை சுக்ல பட்சம் வளர்பிறை சஷ்டி திதி, பூரட்டாதி நட்சத்திரம், பரிகம் நாம யோகம், கௌலவ கரணத்தில் இரவு 01-26 மணிக்கு துலா லக்கினத்தில் சங்கராந்தி (சூரியன்) பகவான் மகர ராசியில் பிரவேசிக்கிறார். பெயர் : மந்தாகினி — கல்வியில் சிறந்தவர்களுக்கு கஷ்ட நஷ்டங்கள் உருவாகலாம்.
வாகனம் : பன்றி — விவசாய பயிர்கள் சீர்கெடும் வஸ்திரம் : விசித்திரம் — அனைவரும் நலமாக இருப்பர் ஆபரணம் : சுவர்ணம் — ஆடைகளின் விலை குறையும் ஸ்நானம் : மஞ்சள் — பெண்களுக்கு கஷ்டங்கள் அதிகம் ஆயுதம் : கலப்பை — அனைவருக்கும் உணவு கிடைக்கும் கந்தம் (நறுமணம்) : சந்தனம் — அனைவரும் சுகமாக இருப்பர் புஷ்பம் : மகிழம்பூ — ஒரு சிலருக்கு கஷ்டங்கள் உண்டாகலாம் சத்திரம் : ரஜதம் — வெள்ளி விலை குறையும் சாமரம் : ஹேமம் — தங்கம் விலை குறையும் வாத்தியம் : ருத்திர வீணை — தீவிரவாதிகள்
கொல்லப்படுவார்கள் பாத்திரம் : சூர்ப்பம் — தானியங்கள் பற்றாகுறை போஜனம் : மா — உடல் ஆரோக்கியம் சிறக்கும் முக பலன் : லச்சை — தானிய விருத்தி ஜாதி : வைசியர் — வியாபாரிகளுக்கு லாபம் குறையும் திக்கு : மேற்கு திசை — உறவினர்களிடையே பகைமை அதிகரிக்கும் பட்சம் : சுக்ல பட்சம் — அனைவருக்கும் சுபிட்சம் உண்டாகும் கிழமை : வியாழன் — மழை அதிகமாக பொழியும் காலம் : இரவு — கால்நடை மேய்ப்பவர்களுக்கு கஷ்டம் லக்கினம் : துலாம் — மழை அதிகமாக பொழியும் சூரியனுக்குரிய வாகனம் குதிரை; அதற்கு, ‘சப்தா’ என்று பெயர். ஏழு குதிரைகள் சூரியனின் தேரை இழுத்துச் செல்கின்றன.
மாதம் ஒருமுறை ராசி விட்டு ராசி மாறி சஞ்சாரம் செய்வது சூரியனின் தொழில். இதனாலேயே இவர், குதிரையை வாகனமாகக் கொண்டுள்ளார். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் நுழையும் நாளே, தமிழ் மாத பிறப்பாக உள்ளது. உலகிலுள்ள உயிர்களுக்கு உணவளிக்கும் கடமை சூரியனிடமே உள்ளது.
இதனால் தான், உழவர்கள் அறுவடை முடிந்ததும் கிடைக்கும் முதல் நெல்லை, குத்திய பச்சரிசியால் பொங்கலிட்டு, சூரியனுக்கு படைத்து நன்றி தெரிவிக்கின்றனர். இந்த தை மாதத்தில், சூரிய பகவான் நம் அனைவருக்கும் நல்வழி காட்டுவார் !
இனிய பொங்கல் நல் வாழ்த்து,,,,,,
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன எல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்……
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 12 ஜனவரி, 2017

மரண அறிவித்தல்திரு நாகலிங்கம் நவரத்தினம்

பிறப்பு : 14 பெப்ரவரி 1936 — இறப்பு : 10 சனவரி 2017
யாழ். புத்தூர் வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் நவரத்தினம்  (அரசாங்க ஒப்பந்ததாரர், வீரவாணி சப்தகன்னி ஆலய தர்மகர்த்தா)  அவர்கள் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாக்குட்டி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கச்சிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

யோகராசா, ரஞ்சினிதேவி, சுசிலாதேவி(ஜெர்மனி), பரமானந்தராஜா(சுவிஸ்), கோமளாதேவி(லண்டன்), லக்குணராஜா, குலதேவராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தானய்யா, காலஞ்சென்ற அழகம்மா, நவமணி, சிற்றம்பலம், கனகசபை, இராசைய்யா, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாரதிதாசன், நித்தியானந்தன்(ஜெர்மனி), பத்மசிறி(லண்டன்), ரஞ்சிதமலர், சுலோச்சனா(சுவிஸ்), சிறிதா, விஜிதா ஆகியோரின் 
அன்பு மாமனாரும்,
பிரியதர்ஷன், நிலக்‌ஷன், கஜீவன், யதுமிலன், பகித், வினோஷா, துஷிபுவன், தினேஷா, நிரோஷா, நிவிஷன், நிஜிதன், சாம்பவி, சஞ்சு, சுகீர்த்தனா, தனுஷ், யலக்ஸ், ஷிரிப்பிரியா, ஹரிசன், மோகனப்பிரியா, நவமிதுலன், அஸ்வினி, விதுஷன், அம்ரித்தா ஆகியோரின் 
அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று வாதரவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பத்மசிறி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447886033961
பரமானந்தராஜா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799402473
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நாவற்குழியில் 50 சிங்கள குடும்பங்களுக்கு வீடுகள்?

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீடமைப்பு திட்டம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்
2017 ஆம் ஆண்டுக்கான மிகப்பெரிய திட்டமாக நாவற்குழி பிரதேசத்தில் 250 வீடுகளை கொண்ட மாதிரி கிராமம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நாவற்குழி பிரதேசத்தில் குடியேறியுள்ள 200 தமிழ் குடும்பங்களில் 50 சிங்களக் குடும்பங்களுக்கான வீடுகளே அமைத்து கொடுக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு வீட்டிற்கும் சுமார் 5 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன், குறித்த மாதிரிக் கிராமத்திலே அனைத்து வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
ஞாயிறு, 8 ஜனவரி, 2017

பேனாவை மரண தண்டனை வழங்கிய பிறகு எதற்காக நீதிபதி உடைக்கிறார்?

ஒரு வழக்கினை நடத்தும் நீதிபதி, அந்த வழக்கில் மரண தண்டனை தீர்ப்பை வழங்கி அதனை நிறைவு செய்யும் போது தீர்ப்பு எழுதிய பேனாவை உடைப்பதை பல்வேறு திரைப்படங்களில் 
பார்த்திருப்பீர்கள்.
ஒரு உயிரை கொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது. அது அநீதியான ஒன்று தான் என்று தான் பழைய காலங்களில் கருதப்பட்டு வந்தது.
அந்த காரணத்தினாலேயே, தற்போதைய காலத்தில் மரண தண்டனை வழங்கினாலும், மனிதாபிமானம் மற்றும் குற்றவாளியின் நல்லொழுக்கம் கருதி, மரண தண்டனைகள் ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகின்றன.
எதற்காக பேனா உடைக்கப்படுகிறது?
இந்த முறை பிரிட்டிஷ் காலத்தினர் பின்பற்றிய முறை. அவர்களின் ஆட்சி காலத்தின் போது, ஒருவரின் உயிரை பறிப்பதற்காக தீர்ப்பு எழுதிய இந்த பேனாவின் நிப், இனி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது.
இது ஒரு சோகத்தின் வெளிப்பாடு என்று பின்பற்றி வந்துள்ளனர்.
இந்த முறையே தற்போது வரை பின்பற்றப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>திங்கள், 2 ஜனவரி, 2017

திரு யோகராசா ஹேமா பதின்ஓராம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலையைப்பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட 
அமரர் யோகராசா ஹேமா.(hema)வின் 02.01.2017
இன்று பதின்ஓராவது ஆண்டு நினைவஞ்சலி
மனம் ஒரு நிமிடம் 
மயங்க வைத்தது மனதை. 
நாசியினாலும் காணமுடிந்தது 
நினைவுகள் உன்னுடையதாயிற்றே?
பாசத்திறகாய் எனக்கு ஒரு தம்பி
 அன்பின் உருவமாய் தரணியில் வாழ்ந்தார்
அன்னை போல் என்றும் எமை நெஞ்சில் வைத்தார்
தற் பெருமை இல்லாத தங்கம் 
உயிர் இருக்கும் வரை தன்னால் இயன்றளவு செய்தார்
செல்வந்தனாய் இருந்தபோதும் எளிமையாக வாழ்ந்தார் 
சென்ற இடம் எல்லாம் மதிப்போடு
 வாழ்ந்தார் 
தொடக்கி வைத்தால் முடியும் வரை அயராது உழைப்பார்
உன்  நினைவுகள் மறையாது
 அழியாது
எம்மை நீங்கி ஏன் சென்றாய்?
பார்க்கும் இடமெல்லாம் உன்னுரும் நிழலாக
நிதமும் உலாவி வருகுதையா
எம் ஆறுதலுக்காய் ஒருமுறை வாராயோ ஹேமா....
எல்லா பிறவியிலும் 
என் அன்பிற்குரிய
என் தம்பியாக நீ மட்டும் கிடைக்க 
வரம் கேட்கிறேன்........
சகோதர்கள்- அப்பா அம்மா ....
திரு யோகராசா குடும்பத்தினர்-  
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>