siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 22 ஜனவரி, 2015

குழந்தையை மாடியில் இருந்து வீசி கொலை செய்த இளம்பெண்!!

தகாத உறவால் பிறந்த குழந்தையை 6–வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிறந்த குழந்தை 
மும்பை வெர்சோவா ஜே.பி. ரோடு பகுதியில் அட்லாண்டா என்ற 6 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தின் கீழே உள்ள நீச்சல் குளத்தின் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த வெர்சோவா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த கட்டிடத்தின் அருகே உள்ள மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். இதில் கடந்த 4 நாட்களாக எந்தவொரு பெண்ணிற்கும் பிரசவம் ஆகவில்லை எனதெரியவந்தது.
தகாத உறவு 
இதையடுத்து அட்லாண்டா கட்டிடத்தில் குடியிருப்பவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கட்டிடத்தின் 6–வது மாடியில் வசிக்கும் 20 வயது இளம்பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அந்த இளம்பெண் ஆடையில் ரத்தக்கரையுடன் சோர்வடைந்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனே போலீசார் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வீட்டின் உரிமையாளர் வெளியூரில் இருப்பதால் வீட்டின் பாதுகாப்புக்காக அந்த இளம்பெண் கடந்த 6 மாதங்களாக அங்கு தங்கியிருந்துள்ளார்.
குழந்தை கொலை 
திருமணமாகாத அந்த இளம்பெண் தகாத உறவால் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அவர் பிறந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் 6–வது மாடியில் உள்ள கழிவறை ஜன்னலில் இருந்து தூக்கி வெளியே வீசி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இளம்பெண் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>