siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

.இரு மனைவிகள் இருந்தும் கவனிக்க யாருமில்லை.அநாதையாக இறந்த கோடீஸ்வரர்

மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த நிகில் ஜவேரிக்கு 200 கோடி மதிப்புள்ள சொத்து இருந்தும் கடைசி காலத்தில் கவனித்துக்கொள்ள ஆள் இல்லாமல் மருத்துவமனையில் உயிரிழந்தார். மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிகில் ஜவேரி. இவருக்கு 200 கோடி மதிப்புள்ள
 சொத்துகள் இருந்தும் மருத்துவமனையில் அநாதையாக உயிரிழந்துள்ளார்.ஜவேரியின் உடலைக்கூட வாங்க முன்வராத உறவுகள், அவரது 200 கோடி சொத்துக்கு சண்டையிட்டு வருகின்றனர்.நிகில் ஜவேரிக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இரண்டாவ
து மனைவிக்கு ஒரு மகனும் உள்ளார். இரண்டு
 மனைவிகளையும் ஜவேரி விவாகரத்து செய்துள்ளார்.2009-ம் ஆண்டு ஜவேரி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். 
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஐவேரிக்கு நரம்பியல் தொடர்பான பிரச்னைகள் இருப்பதாகக் கூறினர்.தன் சகோதரி 
வீட்டில் வசித்து வந்தவர் திடீரென கடந்த 2013-ம் ஆண்டு ஜவேரி மாயமானார்.அவரைக் கண்டுபிடித்து தரக் கோரி இரு மனைவிகளும் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
எங்கு தேடியும் எந்தத் தகவலும் இல்லை. 
ஜவேரிக்குச் சொந்தமான நிலத்தின் மதிப்பு 200 கோடி எனத் தெரியவந்ததையடுத்து இரண்டு மனைவிகளும் சொத்துக்கு உரிமைகொண்டாட ஆரம்பித்தனர்.இந்நிலையில், 2014-ம் ஆண்டு ஜவேரியைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அப்போது அவருக்கு மனநலம் தொடர்பாக சில பிரச்னைகள் இருந்தது.
  ஜவேரியைத் தங்களுடன் அழைத்துச் செல்ல குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். இதையடுத்து ஆதரவற்றோர் விடுதியில் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்டனர். மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவர் மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டார்
2017-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவையடுத்து ஜே.ஜே.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், நிமோனியா காய்ச்சல் பாதிப்பால் கடந்த சில தினங்களுக்கு முன்பு 
அவர் மரணமடைந்தார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் ஜே.ஜே.மருத்துவமனையில் நிகில் ஜவேரி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மரணமடைந்ததையடுத்து உடற்கூறாய்வு செய்ய காவல்துறை முடிவு செய்தனர். ஆனால், அவரது
 உடலுக்கு யாரும் உரிமைகோராததால் உடற்கூறாய்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.ஒருவழியாக அமெரிக்காவில் வசிக்கும் அவரின் மகன் ரயானை தொடர்புகொண்டனர். அவரும் உடலை வாங்கிக்கொள்ள 
சம்மதம் தெரிவித்தார்.
அமெரிக்காவில் இருந்து வந்த ரயான்.15
வெள்ளிக்கிழமையன்று ஜவேரியின் உடலைப் பெற்றுக்கொண்டார்.2015-ம் ஆண்டு நிகில் ஜவேரிக்கு சொத்துக்கு உரிமைக்கோரி அவரின் 
முதல் மனைவி தீப்தி
 பஞ்சால் நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார்.இதை எதிர்த்து இந்த ஆண்டு மார்ச் மாதம் ரயான், தீப்தி மற்றும் அவரின் அத்தையின் கணவர்கள் மூன்று பேர் மீது காவல்நிலையத்தில் மோசடி 
வழக்கு தொடுத்தார்.
பிரமாணப்பத்திரத்தில் ஜவேரியின் கையொப்பத்தில் மோசடி செய்ததாகப் புகார் கூறினார். இந்தப் புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




வியாழன், 24 அக்டோபர், 2019

இறுதிக் கிரியைக்கு பிரான்ஸ் சென்ற யாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்

டென்மார்க்கில் இருந்து பிரான்ஸ் சென்ற, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் உடுவில் பகுதியைச் சேர்ந்த 33 வயதான றொனால்ட்டன் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.தனது பெரிய தாயாரின் இறுதிச் சடங்கிற்காக
 பிரான்ஸ் சென்ற நிலையிலேயே குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.பொலிஸாரின் தகவல்களை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;
டென்மார்க்கில் வசிக்கும் குறித்த நபர், தனது பெரிய தாயாரின் இறுதிச் சடங்கிற்காக குடும்பத்துடன் பிரான்ஸ் சென்றிருந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு கொலை 
செய்யப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் கடந்த.(11.10.2019 )11ம் திகதி இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில்
 அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் படுகொலை செய்யப்பட்டமைக்கான காரணம் தெரியாத நிலையில், பிரான்ஸ் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்
 செய்தி வெளியிட்டுள்ளன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 23 அக்டோபர், 2019

எசெக்ஸ் பிராந்தியந்தில் லொறிக்குள் இருந்த 39 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

இன்று காலை எசெக்ஸில் அமைந்துள்ள தொழிற்சாலைப் பகுதியில் லொறி கொள்கலன் ஒன்றினுள்ளிருந்து 39 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.உயிரிழந்தவர்களில் ஒரு 
சிறுவனும் அடங்குவதாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.அதிகாலை 1.40 மணியளவில் கிரெய்ஸ்ஸில் உள்ள வோட்டர்கிளேட் தொழிற்சாலைப் பகுதியில் சடலங்கள் அடங்கிய லொறி 
கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் அம்புலன்ஸ் குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.39 பேரும் சம்பவ
 இடத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் வடக்கு 
அயர்லாந்தைச் சேர்ந்த 25 வயதான லொறி
 ஓட்டுநர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த வாகனம் பல்கேரியாவிலிருந்து பயணித்ததாகவும் சனிக்கிழமை வேல்ஸில் உள்ள ஹோலிஹெட்வழியாக இங்கிலாந்துக்குள் நுழைந்ததாகவும் பொலிஸார் 
கருதுகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



மூன்று வருடங்களாக 16 வயது இளம் யுவதிக்கு நடந்த கொடுமை

16 வயதான இளம் யுவதியை மூன்று வருடங்களாக வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாக கூறப்படும் சந்தேகநபர்கள் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக மொரொன்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த யுவதி கீழே விழுந்து விட்டதாக கூறி நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த யுவதி கடும் உளவியல் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக அறிந்து அது குறித்து மொரொன்துடுவ பொலிஸாருக்கு 
அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் அப்போது யுவதியை இரண்டு பேரும் நீண்டகாலமாக வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.உடனடியாக செயற்பட்ட பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் 31 மற்றும் 45 வயதானவர்கள் எனவும், இவர்களில் ஒருவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் அங்கவீனமடைந்த நபர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.சம்பவம் குறித்து மொரொன்துடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 20 அக்டோபர், 2019

மரண அறிவித்தல் அமரர் தம்பித்துரை செல்வநாயகம் 20,10,19,

யாழ் ஊர்ரெழு   கிழக்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அமரர் தம்பித்துரை செல்வநாயகம்  20,10,19,ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை
பூரணம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற குமாரசாமி மற்றும் தவரத்தினம் ஆகியோரின் மருமகனும் 
விக்கினேஸ்வரி (வசந்தி )அன்புக்கணவரும் சுதாகரன் (இலங்கை ஊர்ரெழு  )ரூசாந்தினி  (அவுஸ்திரேலியா )மதனாகரன் (லண்டன் ) ஐகரன்  (இலங்கை ருகுணு பல்கலைகழகம்-4-ஆம் ஆண்டு   )ஆகியோரின் பாசமிகு தந்தையும்
அருந்ததி கலை நேசன்  (அவுஸ்திரேலியா )ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,தர்னிஷாந்  (ஊர்ரெழு ) 
பிரனேஸ்  (அவுஸ்திரேலியா )  ஆகியோரின்தாத்தாவும் காலஞ்சென்றவர்களான ஞானமணி  வர்ணலக்சுமி 
சிற்றம்பலம் கிருஸ்ணபிள்ளை சிவக்கொழுந்து   ஆகியோரின் மைத்துனரும்
அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2019 திங்கள்கிழமை 
 அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொக்கணை  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது சிறுப்பிட்டி.நெட்  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
உங்களுடைய  அனுதாபத்தை தெரிவு செய்துகொள்ளவு
தகவல்: குடும்பத்தினர்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 16 அக்டோபர், 2019

கட்டுநாயக்காவில் போதைப்பொருட்களுடன் சிக்கிய வெளிநாட்டவர்

நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிரேசில் நாட்டு பிரஜை ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தி வந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதை 
அடுத்தே குறித்த நபருக்கு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.குற்றவாளி இலங்கைக்கு போதைப்பொருளை கடத்தி வந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
 செய்யப்பட்டார்.அவர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புபிரிவினரிடம் கையளிக்கப்பட்டார்.இதனடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 13 அக்டோபர், 2019

அகாலமரண அறிவித்தல் அமரர் பாலராசா நிரோஜன் 12,10,19,

மலர்வு,  08-01-1987- உதிர்வு, -12, 10 2019
யாழ். நவக்கிரி நிலாவரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு பாலராசா நிரோஜன்
12,10,2019,சனிக்கிழமை அன்று  அகாலமரணம்  அடைந்தார்  அன்னார்,திரு பாலராசா, செல்லப்பாக்கியம் தம்பதிகளின்அன்பு  மகனும் அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி கதிராசி  தம்பதிகளின்
பாசமிகு பேரனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தம்பதிகளின் 
பாசமிகு பேரனும் ஆவர் 
ன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2019 புதன் கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
உங்களுடைய  அனுதாபத்தை தெரிவு செய்துகொள்ளவும்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, 11 அக்டோபர், 2019

மரண அறிவித்தல் திரு சரவணமுத்து குமாரசாமி,10,10,19

தோற்றம்-17 ,08,1936 -   மறைவு- 10 10,2019          
யாழ். வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட  சரவணமுத்து குமாரசாமி  (ஓய்வுபெற்ற அதிபர்) அவர்கள் 10-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், சுபத்திரையம்மா 
அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற கணேசமூர்த்தி, பாஸ்கரமூர்த்தி(ரஞ்சன், நோர்வே), புண்ணியமூர்த்தி, சத்தியபாமா, கிருபாகரமூர்த்தி, பிரபாகரமூர்த்தி, சத்தியரஜனி, கானமூர்த்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சதீஸ்வரி(நோர்வே), தவகுமார், கௌரி, சிவதர்சினி, சந்திரகோபன், தாட்சாயினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 பிரதீனா(நோர்வே), திபேரன்(நோர்வே), ரதினியா(நோர்வே), பவித்திரன், பதுமிகா, பதுமிகன், பாதுசன், பவகரன், பவநிதா, ஆர்த்திகன், ஆராதனா, மதுமிதா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
 காலஞ்சென்றவர்களான ராசமணி, கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சிவபாக்கியம், அண்ணாச்சாமி,
 காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி, 
கந்தசாமி இரத்தினசாமி, துரைச்சாமி, அருந்ததியம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும், கண்மணி, புவனேஸ்வரி, கந்தசாமி, செல்லம்மா, பூபதி ஆகியோரின் அன்புச் சகலனும், அப்பாச்சாமி, தங்கநாயகம், சிவசாமி, சரஸ்வதி, கணேசநாயகம், விஜயகுமாரி, சபாநாதன், சிவசுப்பிரமணியம், குணவதி, காலஞ்சென்ற சந்தானலட்சுமி 
மற்றும் சத்தியதேவன், யோகேஸ்வரன், பாலேஸ்வரன், சசிகலாதேவி ஆகியோரின் அன்பு மாமாவும், பாலகிருஷ்ணன், பாலச்சந்திரன், பாலகணேசன், பாலமனோகரன், பாலேஸ்வரன், 
கௌரிதேவி, சசிகலாதேவி, காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, சத்தியசீலன், புஸ்பாதேவி, ஈஸ்வரன், லலிதானந்ததேவி, காலஞ்சென்ற லக்குணதேவி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
உங்களுடைய  அனுதாபத்தை தெரிவு செய்துகொள்ளவு
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 பாஸ்கரமூர்த்தி(ரஞ்சன்) - மகன்Mobile : +4797673972   புண்ணியமூர்த்தி(குஞ்சு) - மகன்Mobile : +94778527034   சத்தியபாமா - மகள்Mobile : +94766274735   கிருபாகரமூர்த்தி - மகன்Mobile : +94773129949   பிரபாகரமூர்த்தி - மகன்Mobile : +94765370375   சத்தியரஜனி - மகள்Mobile : +94777708592   கானமூர்த்தி - மகன்Mobile : +447723957626  
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 10 அக்டோபர், 2019

சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மரணம்

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.சுகயீனம் காரணமாக ,10,10,2019,இன்று அதிகாலை 3 மணியளவில் வவுனியா வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்ட சிறுவனே காலை 8.30 மணியளவில் வைத்தியசாலையில்
 வைத்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
 பொறுப்பற்ற செயற்பாடே சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணம் என இதன்போது உறவினர்கள், வைத்தியர்களுடன் முரண்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது . இதையடுத்து
 சம்பவத்தில் பொலிஸார் தலையிட்டு 
நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.வவுனியா, கற்குழியைச் சேர்ந்த எஸ்.டிலக்சன் என்ற ஏழு வயது சிறுவனே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
.இதேவேளை, மரண விசாரணை அறிக்கையின் பின்னரே சிறுவனின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை வட்டார 
செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வவுனியாவில் முச்சக்கர வண்டிச் சாரதி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை.

கடத்தப்பட்டு காணாமல்போயிருந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவா் வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் உள்ள பற்றை ஒன்றுக்குள் எாியூட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை 
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், குறித்த சாரதி கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தடயங்களை வைத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வவுனியா கள்ளிக்குளம் பகுதியிலுள்ள பற்றைக்குள்ளிலிருந்து அவர் இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா சின்னப்புதுக்குளம் 
பகுதியைச் சேர்ந்த 27 வயதான
 சுகந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே
 இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கோவில்குளம் சந்தியில் நின்று முச்சக்கரவண்டி வாடகைக்குச் செலுத்தி வந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் வவுனியா நகருக்கு பயணித்த நிலையில் காணாமற்போயுள்ளதாக சுகந்தனின் உறவினர்களால் வவுனியா பொலிஸ் 
நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.இந்த நிலையில் அவர் இறுதியாக வவுனியா கள்ளிகுளம் பகுதியில் நின்றுள்ளதாக அவரது தொலைபேசி தரவுகள் (ஜிபிஎஸ்) வெளிக்காட்டியுள்ளன. 
 அதனடிப்படையில் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள், மற்றும் பொலிஸார் முன்னெடுத்த தேடுதலின் அடிப்படையில் கள்ளிக்காடு பற்றைக் காணிக்குள்ளிலிருந்து சுகந்தன் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமாக
 மீட்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் வவுனியா தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 7 அக்டோபர், 2019

அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி

சுவிட்சர்லாந்தில், அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதனால் அதிர்ச்சிக்குள்ளான திருமலை இளைஞர் பக்கவாதம் ஏற்பட்டு கை, கால் செயலிழந்த நிலையில் உயிருக்காகப் போராடி 
வருகின்றார்.இலங்கையில் திருகோணமலை, கடற்கரை சேனையைச் சேர்ந்த இரட்ணசிங்கம் அருட்செல்வன்(33 வயது) என்பவர், கடந்த 2010ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி தென்கிழக்காசிய நாடொன்றில் இயங்கி வரும் ஐ.நா அகதிகளுக்கான அலுவலகமொன்றில்
 தஞ்சமடைந்து இருந்தார்.
பின் பல சிரமங்களுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் மாதம் சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.அங்கிருந்த அதிகாரிகளிடம் தனது அரசியல் தஞ்சக் கோரிக்கையை முன்வைத்தபோது, சுவிஸ் நாட்டு நடைமுறைகளின் படி, இவர் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையிலேயே இவரது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் தனது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் அபாய நிலைமையை எண்ணி அச்சமடைந்த இவர், திடீரென கடும் சுகவீனமடைந்தார்.உடனடி மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட போதிலும் இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. தற்போது அரோ(Aargau) மாநிலத்தில் உள்ள மருத்துவமனையொன்றில் 
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.அத்துடன் இவரது தலைப்பகுதியில் பாரிய சத்திரசிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, இவரின் உடன்பிறந்தவர் ஒருவரும் 
மரணித்துள்ளார்.மிகவும் நெருக்கடியான நிலைக்கு உள்ளாகி இருக்கும் இவரை, இவரது தாயார் சந்திப்பதற்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்துமாறு சுவிஸ் நாட்டில் இயங்கக்கூடிய தமிழ் அமைப்புகள் 
கேட்டுக் கொண்டுள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வெள்ளி, 4 அக்டோபர், 2019

இலங்கை இளைஞன் லண்டன் புகையிர நிலையத்தில்குத்திக் கொலை

பிரித்தானியாவைப் பிறப்பிடமாக கொண்ட இலங்கையை சேர்ந்த இளைஞன் லண்டன் புகையிரத நிலையத்தில் கோரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.தஷான் டேனியல் என்ற இளைஞரே குத்திக் கொல்லப்பட்டவராவார்.
ஆர்சனல் காற்பந்து அணியின் ரசிகரான இவர் போட்டி ஒன்றை காண்பதற்கு லண்டன் ஹில்லிங்க்டன்  ஊடாக சென்ற வேளை, கத்தியால்
 குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.அங்கு பதியப்பட்ட, சிசிரிவி காட்சிகளின் படி இரு நபர்கள் இணைந்து இவரை குத்திக் கொன்றுள்ளதாக தெரிய வருகின்றது.இச்சம்பவம் தொடர்பில் இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கவலை 
வெளியிட்டுள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>