siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 31 மார்ச், 2019

பாரிய பாதிப்பு யாழ்ப்பாணத்திற்கு ஏற்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்கள் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் நிலவும் வறட்சி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறித்த இரு மாவட்டங்களிலும் 7 ஆயிரத்து 350 குடும்பங்களை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் 
பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வேலனை, நெடுந்தீவு, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலக பிரிவுகள் இவ்வாறு வறட்சியை எதிர்கொண்டுள்ளன.
குறித்த பகுதிகளில் மக்கள் குடிநீரை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வவுனியாவிலும் குடிநீர் பிரச்சினை நிலவி வருகின்றது.
எனவே குடிநீர் பிச்சினை நிலவுகின்ற பிரதேசங்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக நீரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

அறிமுகமாகிய வித்தியாசமான முச்சக்கர வண்டிஇலங்கையில்

இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது. 
இலங்கை போக்குவரத்து சந்தையில் புதியதொரு புரட்சியாக இந்த முச்சக்கர வண்டி நேற்று அறிமுகமாகியுள்ளது.
TREO என்ற பெயரில் இலங்கை சந்தையில் இந்த முச்சக்கர வண்டி அறிமுக்கப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 முற்று முழுதான மின்சாரத்திலேயே பயணிக்க கூடிய வகையில் இந்த முச்சக்கர வண்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
 இந்த முச்சக்கர வண்டி சுற்று சூழலுக்கு மிகவும் நெருக்கமானதாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் வரலாற்றில் இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகப்படும் செய்யப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வழைப்பழத்துக்குள் யாழில் சிக்கிய மர்மம்

மகனுக்கு வழங்குவதற்காக ஹெரோயின் போதைப்பொருளை வழைப்பழத்துக்குள் மிக நுட்பமாக மறைத்து கடத்திச் சென்ற தாய் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது
 செய்யப்பட்டார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல வழக்குகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கே தாய் இவ்வாறு ஹெரோயின் கொண்டு சென்றுள்ளார்.
 போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் திருநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நீதிமன்றின் உத்தரவில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். 
 அவருக்கு எதிராக சைக்கிள் திருட்டுக் குற்றச்சாட்டு வழக்குகள் பல நிலுவையிலுள்ளன.
சந்தேகநபரை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பார்வையிடச் சென்ற அவரது தாயார்,  புகையிலை நறுக்குக்குள் சிறியளவு ஹெரோயின் போதைப் பொருளைச் சுற்றி அதனை வாழைப்பழத்துக்குள் நுட்பமாகச் செலுத்தி எடுத்துச் சென்றுள்ளார்.
 வாழைப்பழத்தை சோதனை செய்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் சுற்றப்பட்ட புகையிலை நறுக்கை மீட்டுள்ளனர்.
அதனால் சந்தேகநபரின் தாயாரைக் கைது செய்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், அவரை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம்
 ஒப்படைத்தனர். 
 பொலிஸார் விசாரணைகளின் பின்னர், வயோதிப் பெண்ணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை முற்படுத்தினர்.
 இதன்போதே "மகனை நல்வழிப்படுத்துவதற்கு
 முன்மாதியாக இருக்கவேண்டிய தாய் இவ்வாறு நடந்துகொள்ளலாமா? போதைப்பொருள் குற்றச்சாட்டில் 
ஏற்கனவே சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவருக்கு மீளவும் போதைப்பொருளை எடுத்துச் சென்று வழங்குவது மகனை குற்றம் செய்யத் தூண்டுவதாகவே உள்ளது" என்று எச்சரித்த யாழ்ப்பாணம்
 நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், சந்தேகநபரான வயோதிப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க
 உத்தரவிட்டார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 30 மார்ச், 2019

க.பொ.த சாதாரணதரப் பkapothaரீட்சையில் சாதனை வடமராட்சி மாணவர்கள்

2018 க.பொ த.சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் வடமராட்சியில் மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை 
முன்னணியில் உள்ளது.
வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையில் 24 மாணவர்கள் 9ஏ சித்தியை
யும், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 16 மாணவர்கள் 9ஏ சித்தியையும்,
 உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் 3 மாணவர்கள் 9ஏ சித்தியையும், நெல்லியடி மத்திய கல்லூரியில் 2 மாணவர்கள் 9ஏ
 சித்தியையும்,
வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் 2 மாணவர்கள் 9ஏ சித்தியையும், கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி, கம்பர்மலை அ.த.க.பாடசாலை, உடுத்துறை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவர் வீதம் 9ஏ சித்தியையும்
 பெற்றுள்ளனர்.
இதன் அடிப்படையில், வடமராட்சி கல்வி வலயத்தில் 50 மாணவர்கள் 9ஏ சித்தியைப் பெற்றுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 29 மார்ச், 2019

சாதாரணதர பெறுபேறுகள் வெளியாகியது

கடந்த-2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று(28)சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம்-03 ஆம் திகதி ஆரம்பமாகி 12 ஆம் திகதி வரை இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் நாடு முழுவதுமிருந்து ஆறு இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமையும் இங்கு 
குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை,பரீட்சை முடிவுகளை www.doenets.lk  எனும் இணையத்தள முகவரி மூலமாகப் பார்வையிட முடியுமெனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.


திங்கள், 25 மார்ச், 2019

ரொமானியாவில் ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது

லண்டனில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
 ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL504 என்ற விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி வரும் போது பயணி ஒருவருக்கு அவசர வைத்திய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் ரொமானியா நாட்டின் Bucharest பகுதியில் விமானம் அவசரமாக 
தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளினதும் பாதுகாப்பை உறுதி செய்வது ஸ்ரீலங்கன் விமான சேவையின்
 கொள்கையாகும். 
அதற்கமைய அவசர வைத்திய தேவைக்கமைய விமானம் அருகில் இருந்த Bucharest பகுதி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க விமானி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.அதற்கமைய விமானம் தரையிறக்கப்பட்டதன் பின்னர் விமான நிலையத்தின் வைத்தியர் உடனடியாக அழைக்கப்பட்டார்
 சிறுநீரக பிரச்சினையில் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நோயாளிக்கு உடனடியாக மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி
 கொடுக்கப்பட்டது.
அந்த பயணியின் உடல் நிலை தற்போது ஆரோக்கியமாக உள்ளதென ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.
சர்வதேச விமான சட்டத்திட்டங்களுக்கமைய நீண்ட தூரம் பயணிக்கும் விமானத்திற்கு கால நேரம் ஒன்று வழங்கப்படும். 
அதற்கமைய ஒரு நாளில் அதிக நேரம் பயணிக்க முடியாது. விசேடமாக எரிபொருள் நிரப்புவதற்கும், விமானத்தின் தரத்தினை சோதனையிடுவதற்கும் சில மணித்தியாலங்கள் அவசியமாகும்.
எனவே இந்த விமானத்தில் பயணித்த 195 பயணிகளுக்கும் குறித்த பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மீண்டும் பயணத்தை ஆரம்பித்த விமானம் இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை 
வந்தடைந்துள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



அம்மை மற்றும் கண்நோய் யாழில் பரவி வரும் ஆபத்து

யாழ்ப்பாணத்தில் அம்மை மற்றும் கண்நோய் போன்றவை மக்களிடையே பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
குடாநாட்டில் தற்போது அதிக அளவு வெப்பம் நிலவுவதால் இந்தக் காலத்தில் ஏற்படக்கூடிய இந்த நோய்கள் பரவி வருவதாக 
குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறான நோய்கள் காணப்படின் பாதிக்கப்பட்டவரை சுத்தமான இடத்தில் தனிமையில் வைத்து பராமரிக்குமாறு சுகாதாரப் பகுதியினர் அறிவித்துள்ளனர்.
இந்த நோய்களுக்கு இலக்கானவர்களுக்கு அதிக அளவு தண்ணீர் அருந்தக் கொடுக்க வேண்டும்.
இலகுவில் சமிபாடடையக்கூடிய உணவு வகைகளை வழங்குமாறும் அறிவித்துள்ளனர்.
இவ்வாறான நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள் மருத்துவமனைகளில் உள்ளதால் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற் றுக்கொள்ளுமாறு அறிவித்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


தும்பளையில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த வெயில்

யாழ்ப்பாணத்தில் சுட்டெரிக்கும் கடும் வெயில் காரணமாக நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என செய்தி 
வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை தும்பளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சேர்ந்த 52 வயதான ஜீவகடாட்சம் கஜேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடும் வெப்பத்தால் நேற்றுமுன்தினம் புதன்கிழமை குடும்பத்தலைவரான அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கூலித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட இவர் கடும் வெயிலில் கட்டட அமைப்புப் பணியில் வேலை செய்துகொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
அவர் உடனடியாகப் பருத்தித்துறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அல்லைப்பிட்டியில் வாகன விபத்தில் – இளைஞன் பலி

யாழ்.அல்லைப்பிட்டி- மண்கும்பான் இடையில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞா் ஒருவா் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிாிழந்துள்ளாா்.
மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞன் டிப்பா் வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஆபத்தான நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாா்.
எனினும் சிகிச்சை பலனின்றி இளைஞன்
 உயிாிழந்துள்ளாா்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 23 மார்ச், 2019

மரண அறிவித்தல் அமரர் விசாகநாதன் தங்கம்மா,22.03.19

தோற்றம் :- 11.12.1936 - மறைவு -22.03.2019
யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா ) அவர்கள் நேற்றையதினம் ,22,03,19, காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் நாளை 24.03.2019  அன்று அவரது இல்லத்தில்  10:00 மணியளவில் இடம்பெற்று அம்மையாரின் பூதவுடலானது சிறுப்பிட்டி பத்தகலட்டி இந்து மயானத்தில் 
தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு 
 ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தின
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 22 மார்ச், 2019

நாட்டில் குளிர்பானம் வீதியோரங்களில் விற்பனை செய்யத் தடை

நாட்டில்  வீதி­யோ­ரங்­க­ளில் உள்ளூர் உற்­பத்­தி­க­ளான சர்­பத் மற்­றும் ஜூஸ் வகை­களை விற்­பனை செய்­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. மீறு­வோர் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென சாவ­கச்­சேரி சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தி­னர் அறி­வித்­துள்­ள­னர்.
தற்­போ­தைய வெயில் காலத்­தில் வீதி­யோ­ரங்­க­ளில் செல்­வோர் நலன்­க­ருதி பலர் உள்ளூர் தயா­ரிப்­பான சர்­பத் மற்­றும் ஜுஸ் வகை­களை விற்­பனை செய்து வரு­கின்­ற­னர்.
இத­னால் நோய்­கள் பர­வக்­கூ­டிய அபா­யம் உள்­ள­தால் அவ்­வாறு உள்ளூர் தயா­ரிப்­பு­களை வீதி­யோ­ரங்­க­ளில் விற்­பனை செய்­வதை நிறுத்­து ­மா­றும் தவ­றின் அவர்­கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மெ­ன­வும்
 அறி­வித்­துள்­ள­னர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> >



வியாழன், 21 மார்ச், 2019

இந்திய பழங்களுக்கு இலங்கையில் தற்காலிகமாகத் தடை

இந்தியாவிலிருந்து திராட்சை மற்றும் மாதுளம்பழங்களின் இறக்குமதியை அரசாங்கம் தற்காலிகமாகத் தடை
செய்துள்ளது.
இந்தியாவிலிருந்து பழங்களை இறக்குமதி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பான விதிமுறைகளை பூர்த்தி செய்யாத நிலையிலேயே 
இவ்வாறான 
தடையை விதிக்க முடிவு செய்திருப்பதாக தேசிய தாவர நோய்த்தடுப்புச் 
சேவை தெரிவித்துள்ளது.



கரைச்சியில் எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து வரும் தடை

கிளிநொச்சி - கரைச்சி பிரதேசசபையின் எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவர்கள் யாசகம் பெறுதல் மற்றும் வழங்குதல் தடை செய்யப்படவுள்ளது.
இந்த தடையானது எதிர்வரும் 01.04.2019ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக
 அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவிக்கையில்,
கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அமைவாக கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் யாசகம் பெறல் மற்றும் யாசகத்தை ஊக்குவித்தல் தடை 
செய்யப்படவுள்ளது.
இந்த தடையால் யாசகம் செய்பவர்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என கருதுபவர்கள் பிரதேசசபையின் தலைமை செயலகத்தில் பதிவு செய்ய முடியும்.
இதன் மூலம் அவர்களுக்கான நல்வழிகளை காண்பிக்கும் நடைமுறையும் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படுகிறது 
என குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மலையகத்தில் ஒரு பகுதியில் பெய்த ஆழங்கட்டி மழை

இலங்கையின் மலையக பகுதியில் ஆழங்கட்டி மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதிகளில் பல பகுதிகளுக்கு நேற்று மாலை அடைமழை பெய்துள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம்
 தெரிவித்துள்ளது.
பொகவந்தலாவை, நோர்வுட் மற்றும் ஹட்டன் ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு அடைமழை பெய்துள்ளது.
இதன்போது பல இடங்களில் அடைமழையின் போதும், ஆழங்கட்டி விழுந்ததாக பிரதேச மக்கள் 
தெரிவித்துள்ளனர்.
காஸல்ட்ரீ மற்றும் மவுசாகலை பிரதேசங்களில் பல மாதங்களாக நிலவிய கடும் வரட்சியின் பின்னர் நேற்று மழை பெய்துள்ளது.

இதனால் பாரிய நீர் தட்டுப்பாட்டு ஏற்பட்ட நிலையில் அந்தப்பகுதிகளில் 15 நிமிடங்கள் வரை ஆழங்கட்டி மழை பெய்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



யாழ் தெல்லிப்பழை வைத்தியசாலை நோயாளியிடமிருந்து போதைப்பொருள் மீட்பு

சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நோயாளியிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வைத்தியசாலையில் இந்த சம்பவம்
 இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய குடும்பத் தலைவராகிய அவரை, அதிலிருந்து மீட்பதற்கு தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக குடும்பத்தினர் 
அனுமதித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் அவரிடம் சிறிய பொதியொன்று இருந்துள்ளது.இவ்விடயம் குறித்து சிகிச்சையளித்து வருகின்ற வைத்தியர்கள் வினவியபோது, ஹெரோயின்
 என கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, வைத்தியசாலை நிர்வாகத்தினரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் அவ்விடத்துக்குக்கு சென்ற பொலிஸார் சந்தேகநபரிடம் விசாரணையை நடத்தியதுடன் அவரிடமிருந்து மூன்று ஹெரோயின் போதைப் பொருள் பொதிகளை கைப்பற்றி, அவரை
 கைது செய்துள்ளனர்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 18 மார்ச், 2019

புத்தளம் நாகவில்லு பகுதியில் வாகன விபத்து நால்வர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் ஒன்று அதிகாலை விபத்துக்குள்ளனாதில் விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 இந்த விபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட மூன்று பெண்களும் சாரதியும் உரிழந்துள்ள நிலையில், விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 புத்தளம் நாகவில்லு பகுதியில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற இந்த கோர விபத்து ஏற்பட்டிருந்திருந்து.
 யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற வேன் ஒன்றுடன், எதிர்த் திசையில் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம்
 இடம்பெற்றுள்ளது.
 யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த குறித்த வேன் நாகவில்லு பகுதியில் உள்ள இரவு ஹோட்டலில் நிறுத்தியுள்ளது.
பின்னர், மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி செல்ல முற்பட்ட போதே இந்த பாரிய விபத்து
 இடம்பெற்றுள்ளது.
 இந்த விபத்தில் குறித்த வேனில் பயணித்த சாரதி உட்பட பத்து பேருடன், வீதியோரத்தில் நின்ற மற்றுமொரு லொறியின் சாரதியொருவரும் பாடுகாயமடைந்தார்.
 இந்த நிலையில் அங்கிருந்தவர்களால் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
 இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் வேனில் பயணித்த கர்ப்பிணத் தாய் உட்பட மூன்று பெண்களும், வீதியோரத்தில் நின்ற லொறியின் சாரதியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
 வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எழுவரில் ஆண்கள் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நான்கு ஆண்களும், சிறுமி ஒருவரும் தொடர்ந்தும் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



யாழ் வடிவில் ஏ9 வீதியில் அம்மாச்சி உணவகத்தின் முன்பாக

யாழ்ப்பாணம் கைதடி ஏ9 வீதியில் அமைக்கப்படும் அம்மாச்சி உணவகத்தின் முன்பாக "யாழ்" போன்று கொங்கிறீட்டில் பெரிதாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்படுகிறது. வடமாகாண சபையின் ஏற்பாட்டில் இது அமைக்கப்படுகிறது.
அத்துடன் இங்கு யாழ்ப்பாணத்தின்(சுற்றுலா தகவல் மையம் மற்றும் நினைவு பொருட்கள் விற்பனை கடையும் அமைக்கப்படுகிறது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







ஞாயிறு, 17 மார்ச், 2019

வாகன விபத்தில் 8 பேர் தாண்டிக்குளம் பகுதியில் படுகாயம்

வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட்பட எட்டு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து, கொழும்பு நோக்கி இன்று பயணித்த கயஸ் வாகனமொன்று வேக கட்டுப்பாட்டையிழந்து பனை மரத்துடன் மோதுண்டதாலேயே குறித்த விபத்து 
இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பாலியாறு நீர்த்தேக்கம் ,50 கோடி ரூபாய் செலவில் வடமாகாண மக்களுக்கு

யாழ் . மாவட்டம் உள்ளிட்ட வடமாகாண மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பிரமாண்டமான முறையில் பாலியாறு நீர்த்தேக்கத்தை உருவாக்கவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதாரம் , மீள்குடியேற்றம் , புனாழ்வாழ்வு , வடக்கு அபிவிருத்தி அமைச்சு கூறியுள்ளது .
வடக்கில் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் 60 ஆயிரம் பேர் வரையிலான மக்கள் நிலக்கீழ் நீரின் மூலமாக தமது நாளாந்த தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள் . இந்த நிலக்கீழ் நீர் எதிர்வரும் 10 முதல் 20 வருட காலத்திற்கு மாத்திரமே போதுமானதாக
ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார். இந்தப் பிரச்சினைக்குரிய தீர்வாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நீரை திசைத்திருப்பும் திட்டம் 
அமுலாக்கப்ப டவுள்ளது .
எந்தவித பிரயோசனமும் இன்றி கடலில் கலக்கும் நீரை , கீழ் பாலியாறு நீர்த் தேக்கத்தில் சேமித்து வைக்கமுடியும் என கண்டறியப்பட்டுள்ளது .இதன் மூலம் வவுனிக்குளம் , கொள்ளவிளான்குளம் , அடம்பன்குளம் , மல்லாவிக்குளம் போன்றவை சார்ந்த பிரதேசங்கள்
 அனுகூலம் பெறும் எனவும் இந்தத் திட்டத்திற்கான செலவினம் 350 கோடி ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் மேற்படி அமைச்சு
 மேலும் கூறியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


கட்டப்பிராயில் கடும் வெயில் காரணமாக குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்

வட மாகாணத்தை அச்சுறுத்தி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம், கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடும் வெப்பமான காலநிலையில் வெளியில் சென்றவர் மயங்கி வீழ்ந்துள்ளார். எனினும் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பளையில் உள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்றபோது அவர் காணிக்குள் மயங்கி வீழ்ந்து 
உயிரிழந்துள்ளார்.
அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கடுமையான வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டவியல் திணைக்களம் எச்சரித்திருந்தது.
இவ்வாறான நெருக்கடி நிலையை சமாளிக்க அதிகளவான நீர் அருந்துமாறும், மூன்று வேளையும் நீராடுமாறும் சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியிருந்தமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 16 மார்ச், 2019

இனி தேசிய அடை மற்றும் கடவுச்சீட்டு பிரதேச செயலகங்களில் பெறலாம்

தேசிய அடை  மற்றும் கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை இலத்திரனியல்  மற்றும் கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள் ஆணையாளர் நாயகம் வியோனி குணதிலக்க 
தெரிவித்துள்ளார் .
நாடளாவிய ரீதியில் உள்ள 331 பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்கள கிளைக் காரியாலயங்கள் ஊடாக இவை
விநியோகிக்கப்படவுள்ளன .பிரதேச செயலகங்களில் ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமாக 
கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் மீண்டும் பிரதேச செயலகம் மூலம் இவ்வடையாள அட்டை விநியோகிக்கப்படும் .இதேவேளை , கடவுச்சீட்டை மாவட்டச் செயலகங்கள் ஊடாக வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என குடிவரவு , குடியகல்வு 
திணைக்களம் மேலும் 
அறிவித்துள்ளது .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


எல்பிட்டியவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் பேரூந்தை கடத்தல்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை மர்ம நபர் ஒருவர் ஓட்டிச் சென்றமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.எல்பிட்டிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றையே இவ்வாறு ஓட்டிச் 
செல்லப்பட்டுள்ளது.
ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இல்லாத நிலையில் பேருந்தை ஓட்டி சென்ற அடையாளம் தெரியாத நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.உடுகம டிப்போவிற்கு சொந்தமான பேருந்து நீர்கொழும்பு நோக்கி செல்வதற்கு உடுகம டிப்போவில் இருந்து பயணித்துள்ளது.
எல்பிட்டிய பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்திய சாரதி மற்றும் நடத்துனர் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர்.இதன்போது பேருந்தில் ஏரிய மர்ம நபர் பயணிகளுடன் பேருந்தை ஓட்டி சென்றுள்ளார்
 என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அந்த நபர் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை பேருந்தை ஓட்டி சென்ற நிலையில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் முச்சரவண்டி ஒன்றின் உதவியுடன் பேருந்தை துரத்தி சென்று பிடித்துள்ளனர். சந்தேகநபரை எல்பிட்டிய பொலிஸாரிடம் 
ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறான செயலை செய்தது ஏன் என்பது தொடர்பில் உரிய தகவல் கிடைக்காத நிலையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் என விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் தெரிய வந்துள்ளது.இதன்போது, பேருந்தில் பெருமளவு பயணிகள் இருந்ததாகவும் அவர்கள் அச்சம் காரணமாக அபாயக் குரல் எழுப்பியதாகவும் 
தெரிவிக்கப்படுகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 12 மார்ச், 2019

பெண்களுக்கான தனியான பேரூந்து சேவைகள் இலங்கையில் விரைவில்

பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவை யொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2 வாரங்களில் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதன் முதல்கட்டதாக இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான 25 முதல் 30 பஸ்களை ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பஸ் சேவையானது, தெரிவுசெய்யப்பட்ட நகரங்களிலும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது .அலுவலக நேரங்களில் இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளன.
பெண்கள் மீதான துஷ்பிரயோக நடவடிக்கைகள் காரணமாகவே இந்த பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு  குறிப்பிட்டுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 11 மார்ச், 2019

மூங்கிலாற்று சந்திப்பகுதியில் விபத்தில் ஐவர் காயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் மூங்கிலாற்று சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்தனர்.
இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
பரந்தன் புதுக்குடியிருப்பு முதன்மை வீதியில் ஏறிய முச்சக்கர வண்டியுடன், அதிவேகமாக வந்த உந்துருளி மோதியது.
உந்துருளியில் பயணித்த இருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரும் விபத்தில் காயமடைந்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>