siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 31 ஜனவரி, 2024

அடுக்குமாடிக் குடியிருப்பில் சுவிட்சர்லாந்தில் தீ விபத்து.ஒருவர் மரணம்

பாபல் மாவட்டத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் ஒருவர்
 கொல்லப்பட்டார்.
 லூசர்ன் நகரில் உள்ள பெர்ன்ஸ்ட்ராஸ்ஸில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திங்கள்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது. லூசெர்ன் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின்படி, ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார் மற்றும் ஒருவர் லேசான 
காயமடைந்தார். 
இது விசாரணையைத் தொடக்கியுள்ளது. தீயணைப்புத் துறையின் செயல்பாட்டு மேலாளர் உறுதி செய்ததையடுத்து, தீ விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தளத்தில் நிலைமை இருந்தது. ஒரு குடியிருப்பாளர் தெரிவித்தார் "ஒரு நபர் ஷாப்பிங் சென்று, அவர் திரும்பி வந்தபோது அவர் தீயைக் கண்டார்."
 அவரது பக்கத்து வீட்டுக்காரர் பின்னர் தீயணைப்புத் துறையை அழைத்தார், மேலும் வயதானவர் தனது மனைவியை குடியிருப்பில் இருந்து 
வெளியேற்ற விரும்பினார். "ஆனால் அவர் குடியிருப்பின் கதவைத் திறந்தபோது, 
அதிகமாக புகை இருந்தது," குடியிருப்பாளர் தொடர்கிறார். இறந்தவர் இவரது மனைவியா என்பது தெரியவில்லை.
 "இறந்த நபரின் அடையாளத்தை அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெளிவுபடுத்துகிறது" என்று அரசு வழக்கறிஞர் 
அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் சைமன் கோப் கோரிக்கையின் பேரில் கூறினார். ஐந்து நிமிடங்களில் அவசர சேவைகள் தளத்தில் வந்திருந்தன.
என்பதாகும் 





 

செவ்வாய், 30 ஜனவரி, 2024

தாய்லாந்து மனைவி கொலை சுவிஸ் கணவரால் பொலீஸ் விசாரனை துரிதம்

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முன்னாள் ரயில் ஓட்டுனர் ஒருவர் தாய்லாந்து மனைவியைக் கொன்றதாக பலமாக சந்தேகிக்கப்படுகிறது.

 தாய்லாந்து மாகாணமான நகோன் ரட்சசிமாவில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தாய்லாந்து மனைவியைக் கொன்றுள்ளார். ஜனவரி 8ஆம் தேதி முதல் மனைவி வாக்குவாதம் முற்றி ஓடிவிட்டதாக அவரது சுவிஸ் கணவர் ஆர்.(53) பொலிஸாரிடம் தெரிவித்தார்.

 ஊடக அறிக்கைகளின்படி, 2021 இல் இறந்த தனது முதல் சுவிஸ் கணவரிடமிருந்து அந்த மனைவி 13 மில்லியன் பாட் (சுமார் 315,000 பிராங்குகள்) பெற்றுள்ளார். தாய் ஊடக அறிக்கையின்படி, அவர் ஆர். சுவிட்சர்லாந்தில் ரயில் ஓட்டுநராக இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியினர் தாய்லாந்துக்கு குடிபெயர்ந்தனர். காவல்துறை சில முரண்பாடுகளைக் கண்டறிந்ததை அடுத்து ஜனவரி 29 ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆர். இறந்த மனைவி ஓடிவிட்டதாகக் கூறப்பட்ட பிறகு, தனது காலணிகளையோ அல்லது பிற பொருட்களையோ தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை.
அவரது மனைவி காணாமல் போனது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால், ஆரினது கடவுச்சீட்டை பொலீசார் பறிமுதல் செய்தனர். பல மணி நேர விசாரணைக்குப் பிறகு, வாக்குவாதத்தில் மனைவியைக் கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார் அவர்.

 அவர்கள் பகிர்ந்து கொண்ட வீட்டில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோள வயலில் உடலை வீசியுள்ளார். இறந்த மனைவியின் வங்கிக் கணக்கையும் பொலீஸார் ஆய்வு செய்ததில், ஜனவரி 8-ஆம் தேதி இரவு 10 மணியளவில் இந்தக் கணக்கில் இருந்து ஆரின் கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டதைக் கண்டறிந்தனர். 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரி தனது சகோதரியின் கணக்கில் சமீபத்தில் 2,000 பாட்களுக்கு குறைவாக இருந்ததாக தெரிவிக்கிறார். கடனை அடைப்பதற்காக வங்கிச் செயலியைப் பயன்படுத்தி தனது மனைவி தனக்குத் தனிப்பட்ட முறையில் பணத்தை மாற்றியதாக அதிகாரிகளிடம் ஆர் தெரிவித்துள்ளார். பொலிசார் இப்போது வங்கியின் மதிப்பாய்வின் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.என்பதாகும் 



திங்கள், 29 ஜனவரி, 2024

நியுயோர்க்கில் பிஸ்கட் சாப்பிட்டதால் இளம்பெண் உயிரிழப்பு

நியுயோர்க்கில் பிஸ்கட் சாப்பிட்டு யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 11ஆம் திகதியன்று நியுயோர்க்கில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியைச் சேர்ந்த ஒர்லா பாக்செண்டேல் என்பவரே பிஸ்கட் சாப்பிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஒவ்வாமை
25 வயது நிறைந்த இவர் ஒரு தொழில்முறை நடனக்கலைஞராக இருந்துள்ளார், தனது வேலையின் நிமித்தம் நியுயோர்க்கில் வாழ்ந்து வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சம்பவ தினத்தன்று பாக்செண்டேல், வெண்ணிலா புளோரன்டைன் எனப்படும் பிஸ்கெட்டை சாப்பிட்டுள்ளார். இதன் போது சிறிது நேரத்திலேயே அவரது உடல் முழுவதும் ஒவ்வாமை ஏற்பட்ட நிலையில் பாக்செண்டேல் உயிரிழந்தார்.

இவரது மரணம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவருக்கு வேர்க்கடலை ஒவ்வாமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்நிலையில் அவர் சாப்பிட்ட பிஸ்கெட்டில் வேர்க்கடலை சேர்க்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், பிஸ்கெட்டின் மேலுறையில் சேர்மானங்களில் வேர்க்கடலை சேர்க்கப்பட்டது குறிப்பிடப்படாமல் இருந்ததும், அது தெரியாமல் பாக்செண்டேல் அதனை வாங்கி உட்கொண்டு இறந்ததும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை  என்பதாகும்



ஞாயிறு, 28 ஜனவரி, 2024

சிறியரக விமானம் பெல்ஜியத்தில் விபத்துக்குள்ளானதால் இருவர் மரணம்

கிழக்கு பெல்ஜியத்தில் உள்ள ஏரோட்ரோமில் இலகுரக விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்தது. 
அப்போது பலத்த காற்று வீசியதால் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. எனினும், விமானத்தை தரையிறக்க விமானி முயற்சி செய்தும் பலனளிக்காமல் சாலையோரம் நின்றுகொண்டிருந்த கார் மீது 
பயங்கரமாக மோதியது. 
இதில் விமானமும் காரும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த இருவரும் உயிரிழந்தனர். 

காரில் இருந்தவர், சிகெரட் புகைப்பதற்காக காரை விட்டு இறங்கிய சமயத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததால், நல்வாய்ப்பாக அவர் 
உயிர்பிழைத்தார். 
இந்த விபத்து தொடர்பாகவும், விமானத்தில் பயணம் செய்தவர்கள் யார் என்பது குறித்தும் அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






 

சனி, 27 ஜனவரி, 2024

கண்டாவளை பகுதியில் பேருந்து கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது

கிளிநொச்சியில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டாவளை பகுதியில் பேருந்து ஒன்று .27-01-2024.இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 
வேக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மின்கம்பத்தை 
முறித்துக் கொண்டு கால்வாயில் பாய்ந்தது 
விபத்துக்குள்ளாகியுள்ளது.  
குறித்த தனியார் பேருந்து பயணிகளை ஏற்றியவாறு பயணித்துள்ள நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தினை உடைத்துக் கொண்டு கால்வாயில் 
பாய்ந்துள்ளது.  
இவ்விதத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்த வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது    


 

வெள்ளி, 26 ஜனவரி, 2024

சில பகுதிகளில் டொரன்டோவில் கடும் மழை குறித்து எச்சரிக்கை

டொரன்டோ பெரும்பாக பகுதியில் கடுமையான மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை 
விடுத்துள்ளது.
குறித்த பகுதியில் 15 முதல் 25 மில்லி மீட்டர் வரையில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் இந்த மழை காரணமாக வெள்ள நிலைமைகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாள் முழுவதும் மேகமூட்டத்துடனான வானிலையே நிலவும் எனவும் வெப்பநிலை 7 பாகை செல்சியஸ் ஆக காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மேகமூட்டத்துடனான வானிலையானது  இந்த வார இறுதி வரையில் தொடரும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது
.என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 25 ஜனவரி, 2024

இலங்கையில் இந்திய இசைஞானி இளையராஜாவின் மகள் மரணம்

இந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் இலங்கையில் காலமானதாக வெளியாகி உள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கையில் சிகிச்சை பெற்று 
வந்துள்ளார்.
இந்நிலையில் சற்றுமுன் அவர் காலமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பவதாரணிக்கு தற்போது 47 வயதாகிறது  
இவர் சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இதேவேளை இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் அவர் தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் நேற்றையதினம் இலங்கைக்கு வருகை தந்தமை என்பதாகும்







 

புதன், 24 ஜனவரி, 2024

நாட்டில் வெரகே பகுதியில் வீட்டின் வீட்டு முற்றத்தில் சிறுமியை கடித்து குதறிய குரங்குகள்

மாவனெல்லை, வெரகே பகுதியில்  வீட்டின் முற்றத்தில் இருந்த ஒன்பது வயது சிறுமி ஒருவரை குரங்குகள் சில கடித்த சம்பவம் ஒன்று மாவனெல்லை பிரதேசத்தில் 23-01-2024.அன்று பதிவாகியுள்ளது.
 இச்சம்பவம் மாவனெல்லை, வெரகே பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மகளின் தாயார் கூறியதாவது: "அப்போது நான் முற்றத்தில் நெல்லை காயவைத்துக் 
கொண்டிருந்தேன். 
பாடசாலை செல்லும் எனது மகன் நெல் சாப்பிட வரும் குரங்குகளை விரட்டிக் கொண்டிருந்தார்., அப்போது எனது மகள் முற்றத்தில் இருந்தார். 
திடீரென மகள் இருக்கும் இடத்திற்கு வந்த நான்கு
 குரங்குகள் அவரின் மீது பாய்ந்தன. மகள் ஓட முற்பட்ட போது 
அங்கு விழுந்து விட்டார். 
 அப்போது அவர் காலின் தொடை பகுதியை குரங்குகள் கடித்தன. பின்னர் மகன்தான் குரங்குகளை விரட்டியடித்தார். சம்பவத்தின்
 பின்னர் மகளை உடனடியாக மாவனெல்லை 
வைத்தியசாலைக்கு 
கொண்டு சென்றோம். குரங்குகளுக்கு இரத்த ருசி பட்டால் குழந்தைகள் போன்று பெரியவர்களையும் குரங்குகள் கடிக்கக்கூடும் என்று வைத்தியர் 
தெரிவித்தார்."
 தற்போது குரங்குகள் அதிகமாக பெருகியுள்ள கேகாலை மாவட்டத்தின் பல பகுதிகளில் குரங்குகள் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் எத்தனை முறை தெரிவித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் 
சுமத்தியுள்ளனர்.
 இதேவேளை, கேகாலை மாவட்டத்தில் மாத்திரம் குரங்குகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக மாவட்ட செயலகம் அண்மையில் தெரிவித்திருந்தது.என்பதாகும் 



 

செவ்வாய், 23 ஜனவரி, 2024

கொழும்பில் புதிய போக்குவரத்து நடைமுறையில் அடையாளம் காணப்பட்ட விதி மீறல்கள்

நாட்டில் கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிப்பதற்காக 24 மணிநேர கண்காணிப்பு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 125 
விதிமீறல்களை சிசிடிவி மூலம் அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை சிசிடிவி கண்காணிப்பு கமரா அமைப்பு மூலம் கண்டுபிடிக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை இலங்கை பொலிஸார் நேற்று ஆரம்பித்தனர்.
அதற்கமைய போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் நேற்று கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட பரீட்சாத்த திட்டம் ஜனவரி 31 வரை தொடரும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும் போக்குவரத்து விதிமீறல் பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு அறிவிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
என்பத  குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


திங்கள், 22 ஜனவரி, 2024

மரண அறிவித்தல் அமரர் கந்தசாமி ரவீந்திரன் (ரவி.சுவிஸ்) 21.01.2024

துயர் பகிர்வு
மலர்வு -05-07-.1971. உதிர்வு -21-01-2024
.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட. அமரர் கந்தசாமி ரவீந்திரன் (ரவி.சுவிஸ்) 21.01.2024-ஞாயிற்ருக்கிழமை  அன்று  இறைபாதம் அடைந்தார்
அன்னார். காலஞ்சென்ற வேலுப்பிள்ளை  தம்பதிகளின்  அன்புப் பேரனும் கந்தசக்சாமி  தம்பதிகளின் அன்புப் பேரனும் திரு திருமதி கந்தசக்சாமி (நாகரத்தினம்-ஆச்சி) தம்பதிகளின் பாசமிகு  மகனும் திரு திருமதி மாலா 
திரு திருமதி ரவீந்தினி  (தங்கா) ரஜனி  மனோகரன் மாலா  ஆகியோரின் அன்புச் சகோதரனும்  ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் இதேஇணையத்தில் இணைக்கப்படும் 
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
இலங்கை வீட்டுமுகவரி  
நவற்கிரி புத்தூர் 
தகவல் குடும்பத்தினர் 




 

ஞாயிறு, 21 ஜனவரி, 2024

நீராட சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் பாணந்துறை கடலில் உயிரிழப்பு

இலங்கை பாணந்துறை கடற் பகுதியில்  நீராடச் சென்ற போலந்து நாட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
குறித்த விபத்தில் 61 வயதுடைய போலந்து நாட்டு பிரஜை ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
பாணந்துறை - தெற்கு பொலிஸ் பிரிவில் உள்ள 
ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர், பாணந்துறை கடற்கரைக்கு நீராடச் சென்றுள்ளார்.  
இதன்போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட அவர், உயிர் காக்கும் பிரிவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பதாகும்.





 

சனி, 20 ஜனவரி, 2024

அவதானம்போத்தலில் அடைத்து விற்க்கும் ஊறுகாயால் ஏற்படும் அபாய நோய்களாம்

தற்போது விதம் விதமாக உணவில் வகைகளை சேர்ப்பது என்பது மரக்கறிகளின் விலையேற்றத்தில் இயலாத காரியமாகும். சிலர் அதனால் ஊறுகாயை உண்ணும் உணவுடன் சேர்த்து சுவைபட
 உண்கிறார்கள்.
அன்றாடம் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே தேவைப்பட்டால் ஆரோக்கியமான முறையில் ஊறுகாயை செய்து சாப்பிடுங்கள். பல வகையான ஊறுகாய் நிறைய
 எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும்.
 அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுகின்றனர். செரிமான பிரச்சனைகள் ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனைகளை 
ஏற்படுத்தும். 
எதுவும் அளவுக்கு மீறினால் நஞ்சாகலாம் என்ற முதுமொழிக்கேற்ப நாம் ஊறுகாயை பயன்படுத்த வேண்டும். தவறினால் அதில் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட
 உண்டாக்கும்.அல்சர்
 ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர, அல்சர் பிரச்சனையை சந்திக்கக்கூடும். எனவே சாதாரணமாக அதிக அளவில் காரம் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, ஊறுகாயை அதிகம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
 இரத்த அழுத்தம்
 இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நீரிழிவு இருப்பவர்கள், ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான நிலைமையை அவர்கள் சந்திக்கக்கூடும்.
 இதய நோய்
 ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.
 வயிறு உப்புசம்
 ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிகம் இருப்பதால் அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 19 ஜனவரி, 2024

டெங்கு மரணங்கள் யாழ்.போதனாவில் அதிகரித்துள்ளன

யாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோயினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அரியாலைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரும், முல்லைத் தீவுப் பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனத் தெ
ரிவிக்கப்பட்டுள்ளது.
 யாழில் அண்மைக்காலமாக டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை
என்பது குறிப்பிடத்தக்கது




 

வியாழன், 18 ஜனவரி, 2024

அறிவியல்நகர் பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இன்று .18-01-2024.புகையிரத விபத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர்  
பலியாகியுள்ளார். 
அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து 
இடம்பெற்றுள்ளது.  
குறித்த விபத்தில் முறிகண்டி பகுதியை சேர்ந்த 43 வயதுடைய கேதீஸ்வரன் விஜயானந்தன் எனும் 2 பிள்ளைகளின் தந்தையான ரிப்பர் சாரதியே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் உயிரிழந்த நபரின் சடலம் புகையிரத அதிகாரிகளால் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் 
ஒப்படைக்கப்பட்டது.  
பொலிஸ் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்படவுள்ளதாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்
.என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

புதன், 17 ஜனவரி, 2024

இலங்கைக்கு இந்தியாவில் இருந்து வரும் மாசடைந்த காற்றால் பாதிப்பு

இலங்கைக்கு 
இந்தியாவில் இருந்து பரவலடைந்து வரும் மாசடைந்த காற்று இலங்கையின் சில பகுதிகளில் மூடுபனியை போன்று தோற்றமளிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து வரும் மாசடைந்த காற்றானது, பண்டாரவளை மற்றும் பதுளை போன்ற பகுதிகளில் மூடுபனியை 
ஏற்படுத்தியுள்ளது.
திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், “புது டெல்லியில் இருந்து காற்றோட்டமானது ஒரு வட்ட இயக்கத்தில் பரவலடைந்து 
வருகின்றது. 
அது டெல்லியில் இருந்து வங்காள விரிகுடாவை நோக்கி பயணிக்கிறது. வங்காள விரிகுடாவில் இருந்து சுழன்று செல்லும் இந்த காற்று கிழக்கு மாகாணத்தின் ஊடாக இலங்கைக்குள் 
நுழைகிறது. 
இது இலங்கையின் வளிமண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. விரைவில் காற்றுடன் சிறிது ஈரப்பதமும் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, இதன் விளைவாக சிறிதளவில் மழை பெய்யும். 
இதனால் மூடுபனி குறையும். இருப்பினும் இந்த மாத இறுதிக்குள் இந்தியாவில் இருந்து மேலும் காற்றோட்டம் இருக்கும் என்று தெரிகிறது. தற்போது இலங்கைக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை” என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் நுவரெலியாவில் வெப்பநிலை வீழ்ச்சியடையும் எனவும் திணைக்களம் உறுதியளித்துள்ளது. மத்திய மாகாணத்தில் நேற்று மாலை நிலவரப்படி 6 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை 
பதிவாகியுள்ளது.
இந்தநிலையில், கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், மன்னாரில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாகவும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளமை 
இலங்கையை அண்டி ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதி பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார். 
கடந்த சில நாட்களாக காற்று மாசமடைதல் அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில், குறித்த பகுதிகளில் தற்போது மனித சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக 
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதி பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்
.என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 16 ஜனவரி, 2024

அமரர் திரு துரைராஜா இரத்தினம் 8ம் ஆண்டு நினைவஞ்சலி 15.01.24

மலர்வு .28.12.1952    உதிர்வு .15.01.2016      
நீங்காத நினைவு.-15.01.2024 எட்டாம்  ஆண்டு இன்று  
-15.01.2024
 அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை)   அன்னார்  யாழ்  நவற்கிரி புத்தூரை 
 பிறப்பிடமா​வும்  சங்கோலை  மாவிட்ட புரத்தை வசிப்பிடமா​கவும்  k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட 
அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் நீங்காத நினைவுடன்  எட்டாம்  ஆண்டு நினைவஞ்சலி 15-01-2024
.திகள்கிழமை அன்று   
மறைந்துவிட்ட எங்கள் உறவின்.
>>>>>>>
நீங்காத நினைவுகள் 
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
மனைவி பிள்ளைகள் மருமக்கள் சகோதர்கள் பேரப்பிள்ளைகள் 
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி !  சாந்தி ! சாந்தி 


திங்கள், 15 ஜனவரி, 2024

நாட்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த பேருந்து

நாட்டில்¨தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  
பெலியத்த மாற்றுப்பாதைக்கு அருகில் இந்த பேருந்து  திடீரென தீப்பிடித்துள்ளதாக நெடுஞ்சாலை பொலிஸார் 
தெரிவித்தனர். 
எனினும், பேருந்து தீப்பிடித்ததையடுத்து, பயணிகள் அனைவரும் அதிலிருந்து வெளியேறியதுடன், தீயினால் யாருக்கும் காயம்
ஏற்படவில்லை. 
எனினும், தீ விபத்தால் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு  தீக்கிரையாகியுள்.தகவல்கள் தெரிவிக்கின்றன. 
என்பது குறிப்பிடத்தக்கதுளதாக 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

நாட்டில் திரவ எரிவாயு இறக்குமதி குறித்து தேசிய கணக்காய்வு அலுவலகத் தகவல்

நாட்டில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் படி, அதிக விலைக்கு திரவ எரிவாயுவை இறக்குமதி செய்வதன் மூலம் 1,139 பில்லியன் ரூபா கூடுதல் செலவை அரசாங்கம் ஏற்க வேண்டியுள்ளது.
லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தினால் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான திரவமாக்கப்பட்ட பெற்றோலிய 
எரிவாயு கொள்வனவு தொடர்பான விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தேசிய கணக்காய்வு அலுவலகம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது.
குறைந்த விலைக்கு எரிவாயுவை கொள்வனவு
 செய்ய அமைச்சரவை அனுமதியளித்துள்ள போதிலும், 
அதிக விலைக்கு எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான புதிய கொள்வனவு நடவடிக்கையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் 
தெரிவித்துள்ளது.
இதன்படி, பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், திரவமாக்கப்பட்ட பெற்றோலிய வாயுவை கொள்வனவு 
செய்வதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட பில்லியன் டாலர்களில், லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட 120 மில்லியன் டாலர் மானியம் பயன்படுத்தப்படவில்லை என்று கணக்காய்வு அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது..என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 13 ஜனவரி, 2024

சூரிச் நகரில் டிராம் மோதி இளம் பெண் உயிருக்காபத்தான நிலையில்

 சூரிச்நகரில்12-012024. வெள்ளிக்கிழமை மாலை, சூரிச் மாவட்டம் 4 இல் ஒரு டிராம் 21 வயது பெண்ணெருவரை மோதியது. அதனால் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்ல 
வேண்டியதாயிற்று.
 சூரிச நகர காவல்துறையின் முந்தைய கண்டுபிடிப்புகளின்படி, லைன் 2 இல் உள்ள ஃப்ளெக்சிட்டி டிராம் இரவு 7:30 மணிக்கு லெட்ஸிக்ரண்டிலிருந்து அல்பிஸ்ரீடர்ப்ளாட்ஸ் நோக்கிச் சென்றது.
நோராஸ்ட்ராஸ்ஸின் உயரத்தில், ஒரு பாதசாரி பேடெனெர்ஸ்ட்ராஸ்ஸையும், நோராஸ்ட்ராஸ்ஸின் திசையில் டிராம் தடங்களையும் கடந்தார். அந்த “21 வயதான பெண்ணை நகருக்குள் பயணித்த டிராம் மோதி அவர் பலத்த காயமடைந்தார்.
 Schutz & Rescue Zurich இலிருந்து மருத்துவ உதவியாளர்களிடமிருந்து ஆரம்ப மருத்துவ சிகிச்சையைப் பெற்ற பிறகு, ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்" என்று சூரிச் நகர காவல்துறை ஒரு ஊடக வெளியீட்டில் எழுதுகிறது.
 சூரிச் நகர காவல்துறையின் விபத்து தொழில்நுட்ப சேவையின் நிபுணர்கள் விரிவான புகைப்படம், பரிமாணம் மற்றும் பொருள் ஆதாரங்களை வழங்குவதற்காக அனுப்பப்பட்டனர்.என்பது குறிப்பிடத்தக்கது




 

வெள்ளி, 12 ஜனவரி, 2024

சவூதி அரேபியாவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து இலங்கை பணிப்பெண் மரணம்

ஆறு மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற மெதிரிகிரிய திவுலன்கடலைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயார் குறித்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் மெதிரிகிரிய திவுலன்கடலைச் சேர்ந்த பி. தில்மி மதுபாஷினி குமாரி 26 வயதான இரண்டு பிள்ளைகளின் 
தாயாவார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, குடும்பத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட இந்த பெண் வீட்டு வேலை
 செய்யச் சென்றார்.
 இந்தப் பெண் சவூதி சென்ற நாளிலிருந்து வாரம் ஒருமுறை அல்லது இருமுறை தொலைபேசியில் கணவருடன் தொடர்பு கொண்டு பேசியதாகவும் குறித்த வீட்டில் தனக்கு வேலைகள் அதிகம் என்றும் தெரிவித்துள்ளதாக 
தெரிய வந்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது






 

வியாழன், 11 ஜனவரி, 2024

மரண அறிவித்தல் திரு.சுப்பிரமணியம் கணேசதாஸ் (தாஸ்) 10.01.24

துயர் பகிர்வு உதிர்வு -10-01-2024
யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட  திரு.சுப்பிரமணியம்  கணேசதாஸ் (தாஸ்) 10-01-2024 .அன்று கொழும்பில் இறைவனடி சேந்தார். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர் 

புதன், 10 ஜனவரி, 2024

நாட்டில் மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகள்

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் 
மூழ்கியுள்ளன.  
இதன் அடிப்படையில் ஓட்டமாவடி பதுரியா நகர், மாஞ்சோலை ஆகிய கிராமங்களின் எல்லைப்பகுதிகள் பெருமளவிலும் மாஞ்சோலை அல்-ஹிரா வித்தியாலம், லெப்பை தம்பி சிறுவர் பூங்கா,குளக்கரை
 பள்ளிவாயல் வளாகம் வெள்ளத்தில்மூழ்கியுள்ளதுடன் மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர்
இதனால் மக்கள் பெரும் அசோகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ் வெள்ளநீரினை அகற்றும் பணிகள் அக் கிராமங்களில் இன்று (10.01) அதிகாலை முதல் மாஞ்சோலை ஹிழுரிய்யா ஜும்ஆப்பள்ளி வாயலின் ஒத்துழைப்புடன் அக்கிராம சிவில் சமூக அமைப்புக்களினால் கிராம சேவையாளர்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  
வெள்ள அனர்த்ததினால் பாதிப்புற்றுள்ள நிலையில் பொது இடங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கான சமைத்த உணவுகள் நலன் விரும்பிகளால் வழங்கும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறமை என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 9 ஜனவரி, 2024

மீண்டும் ஜப்பானில் உள்ள ஹோன்சு நகரின் மேற்கு கடற்கரை பகுதியில் பாரிய நிலநடுக்கம்

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் மேற்கு கடற்கரை பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. 
அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. குறித்த நிலநடுக்கத்தால் இதுவரை 161 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறான நிலையில், ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஜப்பானில் உள்ள ஹோன்சு நகரின் மேற்கு கடற்கரை பகுதியில் 46 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்று இதுவரை தகவல் கிடைக்கவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. என தகவல் வெளியாகியுள்ளது.என்பதாகும் 





 

திங்கள், 8 ஜனவரி, 2024

புராதன மனித எச்சங்கள் கனடாவில் மீட்கப்பட்டுள்ளன

https:/மனித உடல் பாகங்கள் மீட்பு தொடர்பில் தொல்லியல் ஆய்வாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பரிசோனைக்கு உட்படுத்திய தொல்லியல் ஆய்வாளாகள் இவை புராதன காலத்து மனித எச்சங்கள் என கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வுப் பணிகளுக்காக கட்டின நிர்மான நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்ட பகுதி கனடிய பழங்குடியின மக்களின் புதைகுழிகளாக இருக்கக் கூடும் என தொல்லியல் ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது