siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 31 ஜூலை, 2022

நாட்டில் அரை நாள் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்

இலங்கையில் வருட இறுதியில் அரை நாள் (12 மணி நேரம்) மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் போதிய நிலக்கரி கிடைக்காவிடின், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தியில் தடங்கல் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக 12 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஐந்து இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரி உள்ளதாகவும், செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் எதிர்வரும் மார்ச் மாதம் வரை 25 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரி தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

பந்துலகம பகுதியில் எரிபொருள் விநியோக திகதியை கேட்க வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

பந்துலகம பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்குஅடுத்த பெட்ரோல் விநியோகம் எப்போது என கேட்க மோட்டார் சைக்கிளில்  வந்த தாயும் மகளும் எரிபொருள் பெறுவதற்காக வந்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதியதாக அனுராதபுரம் காவல்துறையினர்
 தெரிவித்தனர்.
இந்த விபத்தில் ஒலயவாவ, ஸ்ரவஸ்திபுர பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பி.டி.அனோமா ரணசிங்க என்ற பெண் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
படுகாயமடைந்த உயிரிழந்தவரின் தாயார் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை 
பெற்று வருகின்றார்.
டீசல் எடுக்க வந்து பல நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனத்தின் மின்கலம் பழுதடைந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இறந்தவர் தனது தாயுடன் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு வந்து எப்பொழுது அடுத்த எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என வினவியதாகவும், மோட்டார் சைக்கிளில் திரும்பிச் செல்ல முற்பட்ட போது, ​​டிப்பர் திடீரென புறப்பட்டு தாய் மற்றும் மகள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில்
 முற்படுத்தப்படவுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>சனி, 30 ஜூலை, 2022

நாட்டில் மின்வெட்டு 14 மணிநேரமாக அதிகரிக்கப்படலாம் வெளியானது அறிவிப்பு

தினசரி மின்வெட்டு நேரம் 14 மணி நேரமாக அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
நாளாந்த மின்வெட்டை 14 மணிநேரமாக அதிகரிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை, திறைசேரிக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிகக்ப்படுகின்றது.
நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கான எந்த வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு 320 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் கடிதங்களை திறக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன்னர் இலங்கை மின்சார சபை திறைசேரிக்கு அறிவித்ததாக 
அவர் அங்கு குறிப்பிட்டார்.
எனினும் குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்திற்குள் உரிய நிலக்கரி இருப்புக்களை கொள்வனவு செய்ய முடியாவிட்டாலும், நாளாந்த மின்வெட்டை 14 மணித்தியாலங்களாக அதிகரிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை திறைசேரிக்கு அறிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>வெள்ளி, 29 ஜூலை, 2022

உங்களுக்கு பளிச்சென்ற பொலிவான சருமத்தைப் பெற வேண்டுமா

அனைவருக்குமே சொக்லேட் சாப்பிட பிடிக்கும். அதுவும் டார்க் சொக்லேட் உடல் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் சொக்லேட்டை சாப்பிட மட்டுமின்றி, சரும அழகை அதிகரிக்கவும் பயன்படுத்தலாம் என்பது தெரியுமா?
ஆம், சொக்லேட்டுகளைக் கொண்டு ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் என்று சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், 
அழகு மேம்படும்.
சொக்லேட்டுகளானது கொலஜென் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தின் தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்ட உதவும். மேலும் சொக்லேட் சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7 ஆம் திகதி உலக சொக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. நீங்கள் சொக்லேட் பிரியர் என்றால், உங்கள் சரும அழகை மேம்படுத்த விரும்புபவராயின், கீழே ஒருசில எளிய சொக்லேட் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றைத் தேர்வு செய்து பயன்படுத்தி, அழகை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.
சொக்லேட் பவுடர் ஃபேஷியல்
இந்த சொக்லேட் பவுடர் ஃபேஷியல் சருமத்தின் ஈரப்பசையை மேம்படுத்துவதோடு, முதுமைக்கான அறிகுறிகள் மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது. அதோடு இது சருமத்தின் பொலிவை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த சொக்லேட் ஃபேஷியலை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
செய்முறை:
* ஒரு பௌலில் 2 ஸ்பூன் சொக்லேட் பவுடரை எடுத்து, அதில் 3 ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து, ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் ஊற 
வைக்க வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 25 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
சொக்லேட் ஃபேஸ் ஸ்கரப்
இந்த சொக்லேட் ஃபேஸ் ஸ்கரப் சருமத் துளைகளை ஆழமாக சுத்தம் செய்யும். மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். இதனால் இந்த ஃபேஸ் ஸ்கரப்பை அடிக்கடி பயன்படுத்துவதால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.
செய்முறை:
* ஒரு பௌலில் 2 ஸ்பூன் கொக்கோ பவுடர், 1 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை மற்றும் சிறிது பால் சேர்த்து நன்கு கெட்டியாக கலந்து 
கொள்ள வேண்டும்.
* பின் முகத்தை ஈரத்துணியால் முகத்தை துடைத்துவிட வேண்டும்.
* பின்னர் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். அழுத்தி தேய்த்துவிடாமல், மென்மையாக தேய்க்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
கடலை மாவு, சொக்லேட் ஃபேஸ் பேக்
உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த ஃபேஸ் பேக்கை போட்ட சில நிமிடங்களிலேயே முகம் பிரகாசமாகவும் அழகாகவும் காட்சியளிக்கும்.
செய்முறை:
* ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 ஸ்பூன் சொக்லேட் பவுடர், 1/2 ஸ்பூன் காபி பவுடர் மற்றும் 1 ஸ்பூன் பால் ஆகியவற்றை சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீர் சேர்த்து நன்கு கலந்து 
கொள்ள வேண்டும்.
* பின் முகத்தை நன்கு கழுவி விட்டு, முகத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு தயாரித்து வைத்துள்ள ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
பாதாம் சொக்லேட் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் சருமத்தின் பொலிவையும், அழகையும் மேம்படுத்த சிறந்தது. முக்கியமாக இந்த ஃபேஸ் பேக் சரும நிறத்தை சட்டென்று அதிகரிக்கும். முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை போட்டால், நல்ல பலனைக் காணலாம்.
செய்முறை:
* ஒரு பௌலில் கொக்கோ பவுடரை சிறிது எடுத்து, அதில் பாதாம் விழுதை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் முகத்தை நன்கு கழுவி துணியால் துடைத்து, தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவி, நன்கு காய்ந்ததும், 
குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>வியாழன், 28 ஜூலை, 2022

மத்தியப் பிரதேசத்தில் குரங்கிற்கு இந்து முறைப்படி இறுதி சடங்கு நடத்திய மக்கள்

இந்து மத சடங்கு படி இறந்த குரங்குக்கு மக்கள் இறுதி சடங்கு நடந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக 
பரவி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் நகரில் மனிதர்களைப் போல் குரங்குக்கு இறுதிப் பிரியாவிடை வழங்கப்பட்டுள்ளது.
இந்து மத நம்பிக்கையின் படி குரங்குகளின் அனுமனின் படைகளாக பார்க்கப்படுகிறது. ராமயணத்தில் ராமர் இலங்கைக்கு செல்ல ராமர் பாலத்தை கட்ட உதவியது குரங்குகள்தான்.
இந்தியாவின் பல இடங்களில் பல வகையான குரங்குகள் உள்ளன. இப்படியாக உ.பி மாநிலத்தில் ஒரு கிராமத்தில் இறந்து போன குரங்கிற்கு 
இறுதி சடங்கு நடத்தினர்
உ.பி மாநிலம் அவுரையாபாத் மாவட்டம் பாப்ஹூந்த் பகுதியில் ஒரு குரங்கு ஒன்று எலெக்ட்ரிக் ஒயரில் ஷாக் அடித்து பரிதாபமாக 
உயிரிழந்தது.
அந்த குரங்கிற்கு அந்த ஊர் மக்கள் இந்து மத முறைப்படி இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர். குரங்கின் சடலத்தை குளிப்பாட்டி, அதற்கு மாலை போட்டு காவித்துணி போட்டு போத்தி இறுதி சடங்கு நடத்தப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பலர் கலந்து கொண்டனர். 
பதின்மூன்றாம் நாள் சடங்குகளில் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
இதுமட்டுமின்றிஇ கிராமத்தில் உள்ள அனுமன் கோவிலில் 12 நாட்களாக இரங்கல் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>புதன், 27 ஜூலை, 2022

உங்கள் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கும் முதுமை காலம் தெரிந்துகொள்ளுங்கள்

அனைவருக்குமே வயதாகும்! எல்லோருக்குமே முதிய பருவத்தை எட்டுவர். இளம் மற்றும் நடுத்தர வயதில் இருப்பதுபோல முதிய பருவம் மகிழ்ச்சி, வருத்தம், சோகம் என்று மாறி மாறி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பலருக்கும் முதுமை என்றால் கொஞ்சம் பயமாகத்தான்
 இருக்கும். வயதாகும் போது வாழ்க்கை உங்களுக்கு கொஞ்சம் சுலபமாகத்தான் இருக்கும். ஏனென்றால் நீங்கள் அத்தனை வருடங்கள்
 கடந்து வந்த அனுபவங்களைத்தான் மறுபடியும் எதிர்கொள்வீர்கள். அதேபோல முதுமை காலத்தில் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பலரும் அறிந்திராத சில குறிப்பிட்ட விஷயங்கள் இங்கே.
முதுமை என்பது நோய் மட்டும் கிடையாது:
முதுமை காலத்தை பற்றி பலரும் தவறாக நினைப்பதில் முக்கியமான விஷயம், வயதாகும் பொழுது நோய்களும் அதிகரித்துவிடும். எப்போதும் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டும், 
மருத்துவமனை, மருந்து மாத்திரைகள் என்று முதுமைக்காலம் முழுவதும் உடல் நல பாதிப்புகள் அதிகரிக்கும் என்ற எண்ணம் கொண்டுள்ளனர். முதுமை 
காலத்தில் உடலின் எதிர்ப்பு சக்தி குறையும் என்பது உண்மைதான். அது மட்டுமின்றி வயதாகும் பொழுது ஒரு சில குறைப்பாடுகள் மற்றும் நோய்களும் ஏற்படும். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை 
முறையின் மூலமாக எளிமையாகத் தடுக்கலாம். இப்போது இருக்கும் இளைஞர்களை விட முதியவர்களை ஆரோக்கியத்துடன் இருப்பதே இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
முதுமைக்காலம் என்றால் ஓய்வு மட்டும் கிடையாது:
இளமை காலம் முதல் நடுத்தர வயது முழுவதும் பல ஆண்டுகளாக பரபரப்பாக ஓடி உழைத்திருப்பீர்கள். அதனாலேயே, ஓய்வு எடுக்க வேண்டும் வழக்கமான விஷயங்களிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. இது ஒரு வகையில் நியாயம்தான். ஆனால் உங்களுக்கு
 வயதாகிவிட்டது நீங்கள் ஓய்வெடுங்கள் என்று நாள்
 முழுவதும் எதுவும் செய்யாமல் இருக்க வேண்டுமென்று அவசியமே
 இல்லை. வயதாவது என்பதாலேயே ஒருவரை 
உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக சோர்வாகிடக் கூடாது. எனவே வயதாகி 
விட்டது அல்லது வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்ற காரணத்தால் அமைதியாகிவிட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.
கூடுதல் நேரத்தால் புதியதாக கற்றுக் கொள்ளலாம்:
முதுமையில் வழக்கமான பொறுப்புகள் குறையும் பொழுது, உங்களுக்கு கூடுதல் நேரம் கிடைக்கும். கூடுதல் நேரம் கிடைப்பதால் புதிதாக ஏதாவது முயற்சி செய்யலாம். கற்றுக்கொள்வதற்கு வயது தடையே கிடையாது, எந்த வயதிலும் கற்றுக் கொள்ளலாம். பல ஆண்டுகளாக 
உங்களுக்குப் பிடித்த விஷயத்தை செய்ய முடியவில்லை, வேலை, குடும்பம் என்று நீங்கள் சுழன்று கொண்டே இருந்து முதுமை காலத்தில் உங்களுக்கு ஓய்வு கிடைக்கும்போதும் நிச்சயமாக கூடுதலாக நேரம் 
இருக்கும். அந்த நேரத்தில் ஏதேனும் புதிதாக ஒன்றை 
கற்றுக் கொள்ளலாம். இது உங்களுடைய வாழ்க்கையை மிகவும் சுவாரஸ்யமாக்கும். 
நீங்களும் ஒரு வயதுவரை செய்ய முடியாதா என்று வருத்தப்பட்ட விஷயங்களை இப்பொழுது செய்யலாம். பயணங்கள் செல்லலாம், தோட்டம் வளர்க்கலாம், சமையல் கற்றுக்கொள்ளலாம்.
உடலில் ஏற்படும் பயம் மற்றும் கவலையை அகற்ற வேண்டும்:
வயதாகிவிட்டது என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்தை முதலில் வெளியேற்ற வேண்டும். அனைவருக்குமே முதுமை ஏற்படும். ஆனால், வயதாகும் போது நீங்கள் பயப்பட வேண்டிய 
அவசியமே இல்லை.
உடலில் பல்வேறு மாற்றங்கள் ஒவ்வொரு காலட்டத்திலும் ஏற்படும். ஒரு சில வருடங்களில் மிகவும் வெளிப்படையாகத் தெரியும். ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை சாப்பிட்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் உடல் மற்றும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கும். நீங்கள் நோய்களைப் பற்றிய கவலை பட வேண்டாம், அதே போல உடலில் ஏற்படும் மாற்றங்களை குறித்தும் கவலைப்படத் 
தேவையில்லை.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>செவ்வாய், 26 ஜூலை, 2022

அந்தியேட்டி கிரியை திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா) 31ம் நாள் .26.07.22

மலர்வு-02-05.1942-உதிர்வு-26-06-2022.-யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகக்கொண்டிருந்த  திருமதி ஆ .க.சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்களின் அந்தியேட்டி கிரியை 26-06-2022.செவ்வாய்க்கிழமை அன்று  அன்னார் காலம்சென்ற  திரு.ஆ .க . சுப்பிரமணியம்(மணிஐயா)
 அவர்களின் பாசமிகு மாணவியரும் காலம் சென்றவர்களான  தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும் 
காலம்சென்றவர்களான ஆறுமுகம் கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும் 
சென்றவர்களான  துரைராஜா செல்வராஜா ஞானமணி வித்திலமணி ஜெயரத்தினம் மற்றும் 
பாலசிங்கம் சிவலிங்கமணி ஆகியோரின் அன்புச்சகோதரியும் தர்மசிறி (இலங்கை )தர்மபூபதி (சுவிஸ் )தர்மதேவி((ஜேர்மன் ) தர்மதேவன்(கனடா )
 தர்மசாந்தினி (நோர்வே )காலம்சென்ற தர்மகுமார் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.இங்கனம் -குடும்பத்தினர் 
எமக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
அம்மா -அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்தவரே
அன்பின் விருட்சமாகி எமக்கெல்லாம் நிழலாக
நின்று கருணை மழை பொழிந்து கண்ணயராது
எமையெல்லாம் காத்து, வளர்த்து வாழ்வழித்து
கலங்கரை விளக்காய் வாழ்க்கை என்னும் 
ஓடத்திற்கு ஒளி காட்டி வழிகாட்டி
சீரும் சிறப்புமாக வாழ வைத்த எம் அன்னையே! 
குணம் என்னும் குன்றேறி நின்று எம்மை 
மகிழ்ச்சி யென்னும் மாகடலில்
திழைக்க வைத்த எங்கள் மாமியே!
கட்டியணைத்து முத்தமிட்டு பேரன்புடன்
எமையெல்லாம் வளர்த்தெடுத்த எங்கள் பாட்டியே!
கடல் கடந்து எமைக்காண ஓடோடி வந்த எம் அம்மாவே  பூட்டிஅம்மாவே 
தரணியில் நீங்கள் தந்த அன்பு பாசம் எல்லாம் சரித்திரத்தில்
மாறாத நினைவுகளோடு நாமும் வாழ்வோம்,
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டும் 
உங்கள்  பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் , 
பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், பட் ட ப்பிள்ளைகள் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்
தகவல்-
குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

திங்கள், 25 ஜூலை, 2022

நாட்டில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ் நாடு மீண்டும் முடங்கும் அபாயம்

மேல் மாகாணம் உள்ளிட்ட ஏனைய மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் COVID – 19 தொற்று கட்டுப்பாட்டு பிரிவின் பிரதான ஒருங்கிணைப்பு நிபுணர், வைத்தியர் அன்வர் ஹம்தானி இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை 
தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்னதாக கடைப்பிடிக்கப்பட்ட சுகாதார வழிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்படி, பாதுகாப்பு முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை கடைப்பிடுத்தல், அவசியமற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்தம் மற்றும் ஒன்று கூடல்களை கட்டுப்படுத்தல் போன்ற வழிமுறைகளை பின்பற்றுமாறு வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸானது ஒமிக்ரோன் வைரஸின் திரிபாக கண்டறியப்பட்டுள்ளதுடன், குறித்த வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை தொடர்ந்தும் கட்டுப்படுத்தக்கூடிய அளவிலே காணப்படுவதாகவும், சுகாதார வழிமுறைகள் முறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்குமாறும் சுகாதார அமைச்சின் COVID – 19 தொற்று கட்டுப்பாட்டு பிரிவின் பிரதான ஒருங்கிணைப்பு நிபுணர், வைத்தியர் அன்வர் ஹம்தானி மேலும்
 தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>ஞாயிறு, 24 ஜூலை, 2022

இஸ்ரேலில்புதைகுழியாக மாறிய நீச்சல் குளம் பூமிக்குள் நபர் மாயம்.

இஸ்ரேலில், டெல் அவிவில் இருந்து தென்கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்மி யோசெப் நகரத்தத்தில் வியாழக்கிழமை அன்று ஒரு குழு பார்ட்டி நடத்திக்கொண்டிருக்கபோது இந்த 
சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.நீச்சல் குள பார்ட்டி கொண்டாட்டத்தில் சுமார் 50 பேர் இருந்தனர். ஆனால் சம்பவத்தின்போது, நீச்சல் குளத்தில் மொத்தம் 6 ஆண்கள் இருந்துள்ளனர். அப்போது நீச்சல்குளத்திற்கு நடுவே திடீரென ஒரு குழி (sinkhole) ஏற்பட்டு மொத்த நீரும் உள்ளே உறிஞ்சப்பட்டது.
குலத்தை இருந்தவர்களில் 34 வயதுடைய நபர் உள்ளே இழுக்கப்படுவதிலிருந்து எப்படியோ தப்பி வெளியேறினார். ஆனால் Klil Kimhi என்ற 32 வயது நபர் 43 அடி ஆழமான அந்த புதைகுழிக்குள் இழுத்துச்செல்லப்பட்டார்
. மற்ற நான்குபேர் காயமின்றி இருந்தனர்.உள்ளே 
விழுந்த நபரை மீட்கும்பணி நடந்துவருகிறது. ஆனால், மீட்பு பணியாளர்களும் உள்ளே இழுத்துச்செல்லப்படலாம் என்ற நிலையில், மீட்புப்பணி தாமதமாகிவருகிறது. புதையுண்ட நபர் இந்நேரம் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
பல்வேறு வழிகளில் இதுபோன்ற குழிகள் ஏற்படலாம், ஆனால் அவை பெரும்பாலும் நிலத்தடி நீரில் கரைந்து, கழுவப்பட்டு, பூமியின் மெல்லிய அடுக்கால் மட்டுமே மூடப்பட்டிருக்கும் திறந்த குகையை விட்டுச்செல்கிறது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு கூறுகிறது.
சுண்ணாம்பு, கார்பனேட் பாறை அல்லது உப்புப் பாறைகளால் ஆன பாறைகளைக் கொண்ட இடங்களில் இதுபோன்ற குழிகள் ஏற்படுவது இயல்பு என கூறப்படுகிறது.
இயற்கையான நில அமைப்பு மற்றும் நீர் வடிகால் முறைகளை மாற்றியமைக்கும் நிலத்தடி நீர் இறைத்தல் மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் மனித நடவடிக்கைகளாலும் சிங்க்ஹோல் குழிகள் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>சனி, 23 ஜூலை, 2022

கொளுத்தும் உச்சகட்ட வெயில் ஸ்பெயினில் 1,047 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டில் தற்போது உச்சகட்ட கோடை காலம் நிலவி வருகிறது. இந்த கோடையில் கடந்த ஜூன் மாதம் 11ந் தேதி முதல் ஒரு வாரம் முதல் கட்ட வெப்ப அலை வீசியது. 
40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையில் 829 பேர் இதில் சிக்கி உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை 
தெரிவித்துள்ளது. 
இந்த நிலையில் தற்போது அந்நாட்டில் 2வது கோடை வெப்பஅலை வீசி வருகிறது. ஜூலை 10 ந் தேதி தொடங்கிய கடந்த 19ந் தேதிவரை பதிவான வெப்பம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1047 ஆக 
உயர்ந்துள்ளது. 
உயிரிழந்தவர்களில் 672 பேர் 85 வயதிற்கு உட்பட்டவர்கள். சுவாச கோளாறு மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் உயிரிழந்தாக ஸ்பெயின் வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் பீ ஹெர்வெல்லா தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>வெள்ளி, 22 ஜூலை, 2022

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து வெள்ளவத்தையில் ஒருவர் பலி

வெள்ளவத்தை விவேகானந்த வீதியில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து தவறி விழுந்து ஒருவர்.22-07-2022. இன்றுகாலை
 உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு  உயிரிழந்தவர் 37 வயது மதிக்கதக்கவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நிர்மாணிக்கப்பட்டு வரும் நான்கு அடுக்குமாடிகளைக் கொண் குடியிருப்பில் வர்ணம் பூசும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபர் நான்காவது மாடி படிக்கட்டில் இருந்து முதல் மாடியில் விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>வியாழன், 21 ஜூலை, 2022

நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் இருவர் பலி

நாட்டில் மேலும் 2 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.காதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 16,535 ஆக 
அதிகரித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>புதன், 20 ஜூலை, 2022

யாழில் போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு சில நிமிடங்களில் நடந்த சம்பவம்

ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் 20-07-2022.இன்றைய தினம் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம்
 இடம்பெற்றுள்ளது .
நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.யாழ். போதனா மருத்துவமனையில் இளைஞனின் சடலம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பெறப்பட்ட சல மாதிரியில் போதைப்பொருள் நேர்மறை அறிக்கை கிடைத்துள்ளது .
இளைஞனின் சடலம் நாளை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று
 தெரிவிக்கப்பட்டது .
யாழ்ப்பாணத்தில் அண்மைய காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனையினால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது .

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>செவ்வாய், 19 ஜூலை, 2022

நாட்டில் பேருந்து கட்டணம் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு

எரிபொருள் விலைக்குறைப்பைத் தொடர்ந்து பேருந்து கட்டணமும் 2.23 சதவீதத்தினால் குறைவடையும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி 40 ரூபாவாக இருந்த ஆரம்பக்கட்டணம் 38 ரூபாவாகக் குறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திருத்தம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாறாக உயர்வான கட்டணம் அறவிடப்படும் பட்சத்தில் அதுகுறித்து பயணிகள் 1955 என்ற இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு அளிக்க முடியும் பேருந்து பயணிகளுக்கு 
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் எரிபொருள் விலை குறைப்பிற்கு அமைவாக பேருந்து கட்டண குறைப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட 
வேண்டும், அதற்கான பரிந்துரைகள் வரும் வரையில் காத்திருப்பதாக அகில இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தை குறைக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருவதுடன், புதிய பேருந்து கட்டணம் இன்று முற்பகல் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
திங்கள், 18 ஜூலை, 2022

நாட்டை வந்தடைந்த நான்கு எரிபொருள் கப்பல்கள் தரையிறக்கும் பணிநிறைவு

நாட்டில் இரண்டு டீசல் கப்பல்களில் இருந்து டீசலை தரையிறக்கும் பணி தற்போது நிறைவு பெறவுள்ளதாக அமைச்சர் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.
த்துடன், துறைமுகத்தில் உள்ள மேலுமொரு டீசல் கப்பலில் இருந்து தரையிறக்கும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் 
மேலும் தெரிவித்தார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு குறித்த செய்தியை அவர் இதேவேளை, பெட்ரோல் கப்பல் ஒன்றில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பிரிசோதனை செய்யப்பட்டு வருவதோடு, குறித்த 
கப்பலில் இருந்து தரையிறக்கும் பணிகள் நாளை ஆரம்பமாகும் எனவும் 
அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>ஞாயிறு, 17 ஜூலை, 2022

திடீரென வானிலையில் மாற்றம் சீனாவில் வெள்ளப்பெருக்கு12 பேர் உயிரிழப்பு

சீனாவில் பரவலாக கோடைவெப்பம் வாட்டி வரும் நிலையில், 16-07-2022.நேற்று திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. 
இதன்காரணமாக தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஒன்றரை நாளில் 98.9 மில்லி மீட்டர் அளவுக்கு
 மழை பெய்துள்ளது. 
இது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் பெய்யும் சராசரி மழையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். 
இந்த திடீர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. மழை வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக 
வெளியேற்றப்பட்டனர். 
பருவநிலை மாற்றத்தின் காரணமாக இத்தகைய தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகமாகி வருகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வெப்பமான காற்று அதிக நீரைச் சேமித்து வைக்கும். 
அது வெளியிடப்படும் போது பெரிய மேக வெடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறி உள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

சனி, 16 ஜூலை, 2022

பாகிஸ்தானின் மனைவியை கொன்று பானையில் கொதிக்க வைத்த கணவன்

பாகிஸ்தானில் குழந்தைகள் முன் மனைவியை கொன்று, கொடூர கணவன் ஒருவர் பானையில் கொதிக்க விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் குல்ஷண்-இ-இக்பால் என்ற இடத்தில் தனியார் பாடசாலை ஒன்று உள்ளது. இந்த பள்ளியில், வாட்ச்மேனாக ஆஷிக் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
இவரது மனைவி நர்கீஸ். ஆஷிக் அவரது மனைவியை தனது 6 குழந்தைகளின் முன் கொன்று, உலோக பானை ஒன்றில் போட்டு கொதிக்க வைத்து விட்டு தப்பியோடியுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தில் சாட்சியாக உள்ளவர்களில் ஒருவரான, அவரது 15 வயது மகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரிடம் ஆஷிக்கின் 
மகள் கூறுகையில்,
நர்கீசை அவரது கணவர் ஆஷிக் முதலில், தலையணை ஒன்றை வைத்து மூச்சு திணற செய்து உயிரிழக்க செய்துள்ளார்.
இதன்பின்னர், பாடசாலை கூடத்தில் இருந்த உலோக பானை ஒன்றில் உடலை போட்டு கொதிக்க வைத்துள்ளார்.
இவை அனைத்தும் அவர்களின் குழந்தைகள் முன்னிலையிலேயே நடந்துள்ளது. இதனையடுத்து அவரது தந்தை தாயை கொன்று கொதிக்கவைத்ததுடன் 3 குழந்தைகளை உடன் அழைத்து கொண்டு தப்பியோடி விட்டதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் குறித்து பொலிஸார் தெரிவிக்கையில்,
பாடசாலையில் இருந்த பணியாளர்கள் குடியிருப்பிலேயே ஆஷிக் வசித்து வந்துள்ளார். கடந்த 8 முதல் 9 மாதங்களாக பாடசாலை செயல்படாமல் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில், பெண்ணின் கால் ஒன்றும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த கொடூர சம்பவம் பற்றி பொலிசார் விசாரணை நடத்தி
 வருகின்றனர்.
அதேசமயம் நர்கீசை சட்டவிரோத உறவில் ஈடுபட ஆஷிக் வலியுறுத்தி உள்ளார். அதற்கு நர்சீஸ் மறுத்த நிலையில், அவரை ஆஷிக் கொலை செய்திருக்கலாம் என தெரிவித்த பொலிஸார், மீதமுள்ள 3 குழந்தைகளையும் மீட்டு கொண்டு சென்றுள்ளனர்.
கண்முன் நடந்தேறிய இந்த ஆஷிக்கின் குழந்தைகள் இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என்றும், நர்கீசின் உடல் மீட்கப்பட்டு ஜின்னா முதுநிலை மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ள நிலையில் பொலிஸார் குற்றவாளியை தேடி வருவதாகவும்
 கூறப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>வெள்ளி, 15 ஜூலை, 2022

மரண அறிவித்தல் திரு முருகுப்பிள்ளை ஆறுமுகசாமி 15.07.22


பிறப்பு-17 OCT 1941-இறப்பு-15 JUL 2022
யாழ். பழவத்தை வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை ஆறுமுகசாமி அவர்கள்(இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஓய்வுநிலை கிளை முகாமையாளர்- சீனன்குடா, கொலன்னாவை). 15-07-2022 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இயற்கை எய்தினார்.அன்னார், பழவத்தை வல்வெட்டியைச் சேர்ந்த
 காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை(கடவுள் சுவாமிகள்) பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துஷ்யந்தன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிநாத்(லண்டன்), கிரிஷாந்தன்(லண்டன்), தர்சன்(லண்டன்), ஆனந்தி(கனடா), சிபோசினி(கனடா) சுகன்யா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற சரஸ்வதி, 
பரிபூரணலட்சுமியம்மா(லண்டன்), கருணாநிதி(அவுஸ்திரேலியா), சிவபாதம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற 
கிருஷ்ணமூர்த்தி, அருட்பெருஞ்சோதி(லண்டன்), ஸ்ரீசற்குருநாதன்(அவுஸ்திரேலியா), ஸ்ரீசண்முகநாதன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஸ்ரீசுதர்சினி, 
வனிதா, அபிராமி, ஜெயகணேசன், வசீகரன், சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சிறீதரன்(அவுஸ்திரேலியா), ஜெயசீலன்(லண்டன்), விஜயமாலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின்
 அன்பு மைத்துனரும்,ஜஸ்னி, வைஸ்னி, தருண், ராவின், தன்ஷியா, தனுஜன், ஹரினி, நிதிசன், அனுஸ்கா, அபிரன், ஆருஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 
பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தொடர்புகளுக்கு
 கோபிநாத் - மகன்Mobile : +447961183985 கிரிஷாந்தன் - மகன்Mobile : +447943866631 தர்ஷன் - மகன்Mobile : +447939846254 ஆனந்தி - மகள்Mobile : +16472140969 சிபோசினி - மகள்Mobile : +16478633634 சுகன்யா - மகள்Mobile : +61414007456

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணைச்செய்திகள் >>>

வியாழன், 14 ஜூலை, 2022

மரண அறிவித்தல் திருமதி குணரத்தினம்.கமலராணி (ராணி )14.07.22

தோற்றம் -23-03-1959-மறைவு 14--07-2022.
யாழ் துணுக்காயை  பிறப்பிடமகவும் யாழ் , புத்தூரை வாழ்விடமாகவும்  நவற்கிரியில் வசித்தவரும் தற்போது  சுவிஸ் பேர்ண்னில் வசித்து வந்த திருமதி ,குணரத்தினம்(ராணி)  அவர்கள் 
14-07-2022.வியாழக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார். அன்னார் திரு குணரத்தினம்(குணம் ) அவர்களின் 
பாசமிகு மனைவியும் 
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரகத்தி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,றஜிதா, சஜிதா, விஜிதா ஆகியோரின்
 பாசமிகு தாயாரும்,
ஐங்கரன், நிக்கோ, டொமினிக் ஆகியோரின் அன்பு மாமியாரும்,றிஷா, கவிஷன், மதிஷன், பென்கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை(கனடா), கமலநாதன்(கொழும்பு) மற்றும் கனகாம்பிகை(கனடா), கனகராஜா(கனடா), வள்ளியம்மை(லண்டன்), கனகரத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கனகரத்தினம்
, செல்வரத்தினம், காலஞ்சென்ற இராசமணி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற சுப்பையா, தங்கமலர், பரம்சோதிராஜா, சித்திரா, சிவனடியான், சாந்தி ஆகியோரின் அன்பு மைத்தினியும் ஆவார்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஆவர்  
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 15 Jul 2022 4:30 PM - 6:00 PM
Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Saturday, 16 Jul 2022 2:00 PM - 7:00 PM
Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 17 Jul 2022 2:00 PM - 7:00 PM
Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Monday, 18 Jul 2022 2:00 PM - 7:00 PM
Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Tuesday, 19 Jul 2022 2:00 PM - 7:00 PM
Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
பார்வைக்கு
Get Direction
Wednesday, 20 Jul 2022 9:00 AM - 12:00 PM
Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
கிரியை
Get Direction
Wednesday, 20 Jul 2022 1:00 PM - 3:00 PM
Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தகனம்
Get Direction
Wednesday, 20 Jul 2022 3:30 PM - 4:00 PM
Bremgartenfriedhof Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தொடர்புகளுக்கு
 குணரத்தினம் - கணவர்Mobile : +41798432587 றஜிதா - மகள்Mobile : +41786849798 செல்வரத்தினம் - மைத்துனர்Mobile : +41799574771 கனகரத்தினம் - மைத்துனர்Mobile : +41774096746 கனகரத்தினம் - சகோதரன்Mobile : +41793704545
. எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


 

புதன், 13 ஜூலை, 2022

நீங்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப் படுகிறீர்களா உடன்போக்க இதோ

எம்மில் சிலருக்கு உடலில் ஏற்படும் அதிக வியர்வை, காஷ், வாய்த் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகளால் பல நேரங்களில் பல இடங்களில் மற்றவர்களுடன் இருக்கும் போது சங்கடமான சூழ்நிலைகளை அனுபவித்திருப்போம். அந்த வகையில் வாயில் இருந்து வரும் துரு நாற்றத்தை எப்படி போக்குவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வாய்த் துர்நாற்றம் வர பல காரணங்கள் உண்டு. சரியாக பல் விலக்காமல் இருப்பது, செரிமான கோளாறு, வெங்காயம், பூண்டு போன்றவற்றை அதிகளவில் சாப்பிடுவது, வாயில் ஏற்படும் கிருமி தொற்று, புகையிலை, அசைவ உணவு போன்றவற்றினால் கூட வாயில் 
துர்நாற்றம் ஏற்படலாம்.
இதனை எப்படி சரிசெய்வது? வாங்க பாக்கலாம். புதினா இலைகளை மென்று தின்பதால் வாயில் இருக்கும் கெட்ட பக்டீரியாக்கள் அளிக்கப்பட்டு வாய் துர்நாற்றம் குறையும். எலுமிச்சை சாற்றுடன் சிறிது நீர் கலந்து குடித்து வந்தாலும் இந்த பிரச்சினை எளிதில் சரியாகும்.
காலை எழுந்ததும் டீ, கோப்பி போன்றவற்றிற்கு பதிலாக அதிக அளவு தண்ணீர் குடிப்பது நன்மை தரும்.
மேலும், ஒருநாளைக்கு இரண்டு முறை பல்துலக்குவது, பல் துலக்கிய பிறகு நாக்கை சுத்தம் செய்வது, பல் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது, இயற்கையாக விளைந்த காய்கறிகளை உண்பது போன்றவற்றின் மூலம் இந்த பிரச்சினையை 
சரி செய்யமுடியும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
செவ்வாய், 12 ஜூலை, 2022

நாட்டில் எரிவாயு பெற மின்சார பட்டியல் அவசியம் லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல்

நாட்டில் சந்தைக்கு.12-07-2022. இன்றைய தினம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம்
 தெரிவித்துள்ளது.
இன்றைய தினமும் கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க பகுதிகளுக்கு சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நாளை முதல் ஏனைய இடங்களுக்கு எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் 
தெரிவித்துள்ளது.
அதேநேரம், சமையல் எரிவாயு கொள்கலனை கொள்வனவு செய்யும் போது, கடந்த மே மாத மின்சார பட்டியலை வைத்திருத்தல் அவசியமாகும்.
இதன்மூலம் அதிகளவான எரிவாயு கொள்கலனை 
பதுக்கி வைக்கும் செயற்பாட்டை தவிர்க்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், லிட்ரோ நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் ஊடாக எரிவாயு விநியோகிக்கப்படும் நிலையங்களை அறிந்துக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 16 ஆம் திகதி 3,200 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதி அளவில் நாட்டின் எரிவாயு தேவையை 100 வீதம் பூர்த்தி செய்ய முடியும் என லிட்ரோ நிறுவனம் 
தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>திங்கள், 11 ஜூலை, 2022

மானிப்பாயில் விபரீத முடிவெடுத்த பாடசாலை மாணவன்

யாழ்.மானிப்பாயில் தவறான முடிவினால் மாணவரொருவர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனந்தன் வீதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.யாழில் பிரபல பாடசாலையொன்றில் தரம் 10இல் கல்வி கற்று வந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>