siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 30 நவம்பர், 2023

பிலிப்பைன்ஸில் உலகின் சோகமான மாலி எனப்படும் யானை உயிரிழப்பு

விலங்குகள் நல ஆர்வலர்களால் "உலகின் சோகமான" (World's 'saddest' elephant) யானை என பெயரிடப்பட்ட "மாலி" எனப்படும் யானை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாலி பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் உயிரிழந்துள்ள நிலையில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தனியாகவே 
கழித்துள்ளதாம்.
 'மணிலா' மிருகக்காட்சிசாலையில் நான்கு தசாப்தங்களாக இருந்து வரும் மாலியை மிகவும் நேசித்தவர்களிடமிருந்து அஞ்சலிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் 
தெரிவிக்கின்றன..
மாலியின் மரணம் குறித்து மணிலாவின் மேயர் பேஸ்புக் காணொளியில் அறிவித்துள்ளார். மாலியைப் பார்க்க மிருகக் காட்சிசாலைக்குச் சென்றது தனது மகிழ்ச்சியான குழந்தைப் பருவ நினைவுகளில் ஒன்றாகும் எனவும் அவர் தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது 

புதன், 29 நவம்பர், 2023

தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவ விமானம்

எட்டு பேரை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்ப்ரே விமானம்.
29-11-2023. இன்று தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது
. இதுகுறித்து தகவல் அறிந்த ஜப்பானிய கடலோரக் 
காவல்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் டில்ட்ரோட்டர் விமானமான ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும், டர்போபிராப் விமானமாகவும் 
செயல்படக்கூடியது. 
இதில் 8 பேர் பயணித்ததாக தெரியவந்துள்ளது. விமானத்தில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய விவரங்கள் குறித்து உடனடியாகத் தெரியவில்லை என்று கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் கசுவோ ஓகாவா தெரிவித்தார்.
தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள ககோஷிமாவுக்கு தெற்கே உள்ள யாகுஷிமா தீவில் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகே கடலோர காவல்படைக்கு ஒரு மீன்பிடி படகில் இருந்து அவசர அழைப்பு வந்ததாகவும் அவர் கூறினார்.
ஆஸ்ப்ரே எந்த அமெரிக்கத் தளத்தைச் சேர்ந்தது என்பது குறித்தும் ஆனால் அந்த விமானம் இவாகுனியில் இருந்து ஒகினாவாவுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.என்பதும் குறிப்பிடத்தக்கது


செவ்வாய், 28 நவம்பர், 2023

சாவகச்சேரி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

யாழ் சாவகச்சேரி பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும், 
நுணாவிலைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே, சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்திற்கான நீர் விநியோகத்தில் ஏற்பட்ட தடையினை கண்காணிப்பதற்காக, நீர் தொட்டி வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்ற போது, மின்சார தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது



திங்கள், 27 நவம்பர், 2023

ரொறன்ரோவில் இடம் பெற்ற விபத்தொன்றில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து சம்பவம் ஒன்றில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். நான்கு பதின்ம வயது உடையவர்களும் ஒரு பெண்ணும் இந்த சம்பவத்தில் 
உயிரிழந்துள்ளனர்.
 இரண்டு வாகனங்கள் மோதி கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. ஹிடன்வெளி பகுதியின் 60-ஆம்
 இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து
 இடம்பெற்றுள்ளது.
 15 முதல் 17 வயது மதிக்கத்தக்க இளைஞர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் நோர்த் யோர்க் மற்றும் ரிச்மண்டில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் 
இந்த சம்பவத்தில் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவரும்
 உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி 
உயிர் இழந்துள்ளார்.
 இந்த விபத்து காரணமாக அறுபதாம் இலக்க அதிவேக நெடுஞ்சாலை சில மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தமை 
குறிப்பிடத்தக்கத.
 இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் கூறியுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.




ஞாயிறு, 26 நவம்பர், 2023

பண்ணை பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில்.26-11-2023. இன்று நோயாளர் காவு வண்டியுடன்,  மேலும் இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 
நோயாளர் காவு வண்டிக்குப் பின்னால் வந்த
 முச்சக்கரவண்டி, 
 நோயாளர் காவு வண்டியை முந்திச் செல்ல 
முற்பட்ட வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி,  நோயாளர் காவு வண்டிக்கும் எதிரே வந்த வாகனத்துக்கும் இடையில் 
சிக்கிக் கொண்டது. 
குறித்த விபத்தினால் உயிர் சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.  இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது 





 

சனி, 25 நவம்பர், 2023

கேரள மாநிலத்தில் பல்கலைக்கழக விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மாணவர்கள் மரணம்

இந்தியாவில் கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள்
 உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை
 ஏற்படுத்தி உள்ளது.
கொச்சி அருகே களமசேரி பகுதியில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது.
இங்கு நடைபெற்ற விழாவில் அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்றதாக தெரிகிறது. மேலும், மாணவர்கள் அல்லாதோரும்
 ஏராளமானோர் கலந்து கொண்டதாக தகவல்
 வெளியாகியுள்ளது.
அரங்கம் நிரம்பி வழிந்த நிலையில், அரங்கிற்கு வெளியேயும் அதிக அளவிலானோர் நின்று கொண்டிருந்தனர். திடீரென மழை பெய்ததால் அரங்கத்திற்கு வெளியே இருந்தவர்கள், உள்ளே நுழைந்ததால் கூட்ட நெரிசலால் விபத்து ஏற்பட்டுள்ளது.
 கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.


   

வெள்ளி, 24 நவம்பர், 2023

யாழ் வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலில் பலியான இளைஞனின் நீதிமன்றின் உத்தரவு

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்தன்கேணி இளைஞன் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் 
உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ந்த வழக்கில் 31 சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டு 
தாக்குதலுக்கு உள்ளான மற்றுமொரு இளைஞன் அடையாளம் காட்டும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு நீதிவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார் .என்பதும் குறிப்பிடத்தக்கது 








 

வியாழன், 23 நவம்பர், 2023

நாட்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து மூன்று பேர் காயம்

நாட்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று, கார்  ஒன்றுடன் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது. 
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கலனிகம பகுதியில்.23-11-2023. இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 
ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், ஆடைத் 
தொழிலாளி உட்பட மூவர் காயமடைந்து
 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக வீதியின் கலனிகம போக்குவரத்துப் பொலிஸார் 
தெரிவித்தனர்.
விபத்தின் போது காரில் இருவர் பயணித்துள்ளதுடன் அவர்கள் இருவரும் மற்றும் பேருந்தில் பயணித்த ஆடைத் தொழிலாளி ஒருவருமே காயமடைந்துள்ளனர். 
பேருந்து சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் 
தெரிவித்தனர். 
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது  






 

புதன், 22 நவம்பர், 2023

நாட்டில் பெரிய சாளம்பன் கிராமத்தில் மின்சார வேலியில் சிக்குண்டு கொம்பன் யானை உயிரிழப்பு

முல்லைத்தீவு ஒட்டி சுட்டான் பெரிய சாளம்பன் கிராமத்தில் வயல் நிலத்துக்காக பாதுகாப்புக்கு போடப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டு கொம்பன் யானை ஒன்று  21-11-2023.அன்று   
உயிரிழந்துள்ளது.
சுமார் 15 வயது மதிக்கத்தக்க யனையே இவ்வாறு உயிரிழந்துள்ளந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
யானையின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க முல்லைத்தீவு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளதுடன் பொலிஸாரும்  வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 
 இதேவேளை சாளம்பன் கிராமத்தில் காட்டு யானையினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் கருத்து 
தெரிவித்துள்ளனர்.   
தங்கள் கிராமத்துக்கான யானை வேலி இதுவரை அமைத்துக் கொடுக்கப்படவில்லை என்றும் இதனால் தொடர்ச்சியாக விவசாய நிலங்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் யானையால் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் விவசாயிகளும் மக்களும் அங்கலாய்க்கின்றார்கள்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 






 

செவ்வாய், 21 நவம்பர், 2023

உயரிய கொவிட்- அலை குறித்து சுவிட்சர்லாந்தில் எச்சரிக்கை ஜெர்மன் உயிரியலாளர்

 புதிய கோவிட் X இல், ஜெர்மன் மூலக்கூறு உயிரியலாளர் உல்ரிச் எல்லிங் "உயர்ந்த கொரோனா அலை" பற்றி எச்சரிக்கிறார். இருப்பினும், இது அதிக நெரிசலான தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு வழிவகுக்காது.
 "பைரோலா" என்றும் அழைக்கப்படும் புதிய கோவிட்
 மாறுபாடு BA.2.86, பல ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகிறது. 2020 மற்றும் 2021 தொற்றுநோய்களுடன் ஒப்பிடும்போது நிலைமை கணிசமாக மாறிவிட்டது என்று ஃபெடரல் பொது சுகாதார அலுவலகம் (BAG) ஒரு 
அறிக்கையில் எழுதுகிறது.
 தற்போதைய அறிவின் படி, அவை ஆபத்தானவை அல்ல. இருப்பினும், நோய்வாய்ப்பட்டவர்கள் தாங்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது பெரும்பாலும் தெரியாது மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
அதாவது கொரோனா தொற்று சாதனை அளவை நோக்கி செல்கிறது. ஆஸ்திரிய அறிவியல் அகாடமியில் உள்ள மூலக்கூறு பயோடெக்னாலஜி நிறுவனத்தில் கற்பிக்கும் மற்றும் ஆராய்ச்சி செய்யும் ஜெர்மன் 
நுண்ணுயிரியலாளர் உல்ரிச் எலிங், X இல் தனது தனிப்பட்ட சுயவிவரத்தில் இதனைக் கூறினார். ஆகஸ்டில் சுவிட்சர்லாந்திலும் பைரோலாவின் முதல் தொற்று கண்டறியப்பட்டது.
 LeeWas உடன் இணைந்து பத்திரிகைகள் நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு: மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் 
எண்ணிக்கை 
அதிகரித்தால், சுவிஸ் மக்களில் பெரும்பான்மையானவர்கள் வீட்டிற்குள்ளும் பொதுப் போக்குவரத்திலும் முகக்கவச தேவையை தொடர்ந்து 
ஆதரிப்பார்கள்.
 இருப்பினும், நெரிசலான தீவிர சிகிச்சைப் பிரிவுகளை ஒருவர் எதிர்பார்க்கவில்லை, "இல்லையெனில் வழக்கமானது," நுண்ணுயிரியலாளர் அதே இடுகையில் எச்சரிக்கிறார். பெரும்பாலான ஐரோப்பிய 
நாடுகளிலும் இதே போக்கு உள்ளது. "புதிதாக தடுப்பூசி போடுவது, முகக்கவசம் அணிவது மற்றும் கவனத்துடன் இருப்பது இப்போது 
புத்திசாலித்தனமாக இருக்கும்.என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 20 நவம்பர், 2023

சமூக நலக்குடியிருப்பில் வசிக்கும் நபர் பிரான்சில் கத்திக்குத்தினால் மரணம்

அரசால் வழங்கப்படும் சமூகநல குடியிருப்பு (résidence sociale) வீட்டில் வசிக்கும் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்.  Torcy (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் 19-11-2023. ஞாயிற்றுக்கிழமை அன்று
 இடம்பெற்றுள்ளது.
 அங்குள்ள சமூகநல குடியிருப்பு வீடொன்றில் வசிக்கும் 28 வயதுடைய ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்.
 கொல்லப்பட்டவர் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலாளி சம்பவ சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவர் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. தாக்குதலுக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.என்பதும் குறிப்பிடத்தக்கது  





 

ஞாயிறு, 19 நவம்பர், 2023

தனியார் பேருந்து யாழ் மன்னார் வீதியில் மரமொன்றுடன் மோதி விபத்து

யாழ்ப்பாணம்- மன்னார் பாதையூடாக பயணித்த தனியார் பேருந்து மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 
குறித்த சம்பத்தால் பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.  குறித்த சம்பவம்  18.11-2023 .அன்று 
இடம்பெற்றுள்ளது. 
முழங்காவில் பகுதியை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றுடன் போட்டியிட்டு அந்த பேருந்தை முந்த முயற்சித்த வேளை நிலைதடுமாறி மரத்தின்மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. 
இந்த நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டதுடன் பேரூந்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 
தொடர்ச்சியாக மன்னார் யாழ்ப்பாணம், மன்னார் வவுனியா வீதிகளில் பேருந்து சாரதிகள் மக்களின் உயிர்களை மதிக்காது பேருந்துகளை
 போட்டி போட்டு செலுத்தும் சம்பவங்களும் அதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றமை 
என்பது குறிப்பிடத்தக்கது


சனி, 18 நவம்பர், 2023

சாந்தசோலை சந்தியில் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி

வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை சந்தியில்.18-11-20-23. இன்று  இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 
உயிரிழந்துள்ளார். 
ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த நபர்  எதிரே வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இதில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அக்கராயன் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில் பணியாற்றிய 27 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு 
உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது 



வெள்ளி, 17 நவம்பர், 2023

இந்தியா சூரத் நகரில் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கிய நான்கு தொழிலாளர்கள் மரணம்

இந்தியா  குஜராத் மாநிலம் சூரத் நகரில் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கிய 4 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை பிஹாரைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் சூரத் நகரின் பால்சனா பகுதியில் உள்ள ஒரு சாய ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போதே இச்சம்பவம் 
பதிவாகியுள்ளது.
2 தொழிலாளர்கள் தொட்டிக்கு உள்ளே இறங்கியபோது மயக்கமடைந்துள்ளனர். . அவர்களை காப்பாற்றும் முயற்சில் மற்ற இரு தொழிலாளர்களும் மயங்கி தொட்டிக்கு உள்ளேயே விழுந்துள்ளனர்.
4 பேரும் தொட்டியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் 4 பேருமே ஏற்கெனவே இறந்துவிட்டதாக அவர்களைப் பரிசோதன செய்த மருத்துவர்கள் 
தெரிவித்துள்ளனர்.
 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேர்ந்த இந்த அவலம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது 




வியாழன், 16 நவம்பர், 2023

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி வீசாவில் கனடா செல்ல முயன்றவர் கைது

போலி கனேடிய வீசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர், குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால்,16-11-2023. இன்று காலை கைது செய்யப்பட்டார்.
இவர் மட்டக்களப்பை வசிப்பிடமாக கொண்ட 37 வயதுடைய தமிழர் ஆவார்.
16-11-2023.இன்று காலை 08.15 மணிக்கு டுபாய்க்கு புறப்படவிருந்த எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் ரிகே-653 விமானத்தில் பயணிப்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் கனேடிய விசா குறித்து சந்தேகம் கொண்ட விமான அதிகாரிகள், அவரை குடிவரவு மற்றும் எல்லை அமலாக்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொழில்நுட்ப
 சோதனையில் இந்த விசா போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து, இவரை கைது செய்த குடிவரவு எல்லை 
அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், அவர்களிடம் நடத்திய
 விசாரணையில், இந்த விசாவை தயார் செய்ய தரகரிடம் 30 இலட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், மேலும் 30 இலட்சத்தை கனடா சென்ற பிறகு தருவதாக ஒப்புக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இந்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





புதன், 15 நவம்பர், 2023

நாட்டில் கஹதுடுவ பகுதியில் பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான சொகுசு வான்

நாட்டில் கஹதுடுவ பொல்கசோவிட்ட சந்தியில் பஸ் ஒன்றும் சொகுசு வான் ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 
இந்த விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவி உள்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  
மத்தேகொடையிலிருந்து வந்த வேன், கொழும்பு நோக்கித் திரும்புவதற்குத் தயாரான போது கெஸ்பேவயிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
விபத்தின் பின்னர் பேருந்தின்  சாரதியும் நடத்துனரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று கஹதுடுவ பொலிஸில் 
சரணடைந்துள்ளனர்.  
இந்த விபத்தில் வேனின் சாரதி மற்றும் பயணி ஒருவரும், பாடசாலை மாணவி ஒருவரும், பேருந்தில் பயணித்த மூன்று பெண்களும் 
காயமடைந்துள்ளனர்.  
. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது 





 

செவ்வாய், 14 நவம்பர், 2023

லண்டனில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் உயிரிழப்பு

மேற்கு லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவில் உள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்த குடும்பம் வசித்து வந்தது. கடந்த.12-11-2023. ஞாயிற்றுக்கிழமை  தீபாவளி அன்று இரவு 10.30 மணியளவில் இவர்கள் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென இரண்டு 
மாடிகளுக்கும் பரவியது.
இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். அந்த வீட்டில் சீமா ராத்ரா என்ற பெண் தனது மூன்று குழந்தைகளுடன் இறந்துள்ளார். 
விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பிய குழந்தைகளின் தந்தை ஆரோன் கிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு நபரும் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீபாவளி கொண்டாட்டத்தின்போது அப்பகுதியில் அதிகளவில்
 பட்டாசு சத்தம் இருந்ததாகவும், அதனால் தீ விபத்திற்கு பட்டாசு வெடித்தது காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
 இதுகுறித்து, தலைமை கண்காணிப்பாளர் சீன் வில்சன் கூறுகையில், " இது ஒரு பயங்கரமான சம்பவம். இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிய லண்டன் தீயணைப்புப் படை அயராது உழைக்கும்" என்று கூறினார்
.என்பதும் குறிப்பிடத்தக்கது    





 

திங்கள், 13 நவம்பர், 2023

புதிய கொரோனா தொற்று அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது

புதிய HV.1, மிகவும் தொற்றுநோயான கோவிட்-19 மாறுபாடு அமெரிக்கா முழுவதும் பரவி வருகிறது. இதுவே உலகளவில் ஆதிக்கம் செலுத்துவதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அக்டோபர் மாத இறுதியில் இருந்து அனைத்து COVID-19 வழக்குகளில் கால் பகுதிக்கும் அதிகமானவர்களுக்கு HV.1 தொற்று பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் தரவுகளின்படி, அக்டோபர் 28 அன்று முடிவடைந்த இரண்டு வார காலப்பகுதியில் புதிதாக கண்டறியப்பட்ட அனைத்து 
வழக்குகளிலும் 25.2% மாறுபாடு காரணமாக பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு சாத்தியமான குளிர்கால எழுச்சியை சமாளிக்கும் வகையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

ஞாயிறு, 12 நவம்பர், 2023

மத்திய இத்தாலியில் புகலிட மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில்பலர் பாதிப்பு

மத்திய இத்தாலியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 31 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது. 
அநேகமாக வாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 
ஆபத்தான நிலையில் இருந்த ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் ரோம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது கோமா நிலையில் இருப்பதாக அன்சா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
  என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 11 நவம்பர், 2023

யாழ் நல்லூர் கந்தன் ஆலய வீதிகளை விரத உற்சவத்தை முன்னிட்டு மூட நடவடிக்கை

நடை பெறவுள்ள  கந்த சஷ்டி விரத உற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் எதிர்வரும்.14-11-2023. செவ்வாய்க்கிழமை முதல் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் அறிவித்துள்ளார்.
அதன்படி, ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் 
எதிர்வரும் .14-11-2023.செவ்வாய்க்கிழமை  முதல்.17-11-2023. வெள்ளிக்கிழமை வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலான
 ஒரு மணிநேரமும், 18-11-2023.சனிக்கிழமை  சூர சம்ஹார நிகழ்வன்று
 பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், மறுநாள்.19-11-2012.
 ஞாயிற்றுக்கிழமை  மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் வீதி தடை போடப்பட்டு, அவ்வீதியின் ஊடான போக்குவரத்து
 தடை செய்யப்பட்டிருக்கும்.
எனவே, அந்த வீதியால் வாகனங்களில் பயணிப்போர், போக்குவரத்து தடை விதிக்கப்படும் நேரங்களில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு ஆணையாளர் அறிவித்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 10 நவம்பர், 2023

பிரான்ஸ் பரிஸில் சுப்பர் மார்க்கட்டொன்று தீக்கிரையாகியுள்ளது

பரிசில்  09-11-2023.அன்று  வியாழக்கிழமை காலை ஏற்பட்ட தீவிபத்தில் Auchan பல்பொருள் அங்காடி தீக்கிரையாகியுள்ளது. 15 ஆம் வட்டாரத்தின் rue Lecourbe வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றே  09-11-2023.அன்று  காலை 5.30 மணி அளவில் 
தீப்பிடித்து எரிந்துள்ளது.
 உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் நாலவர் மூச்சுத்திணறலுக்கு உள்ளானார்கள். நான்கு தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு
 தீ அணைக்கப்பட்டது.
அப்பகுதியில் பிரபலமாக உள்ள Auchan பல்பொருள் அங்காடி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



வியாழன், 9 நவம்பர், 2023

ஒன்பது வருடங்களின் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றில் சந்தேக நபருக்கு மரண தண்டனை

பெண்​ணொருவரை கொலை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 
மாத்தளை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்ணை, 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி கத்தியால் குத்திப் படுகொலை 
செய்து கிணற்றுக்குள் தள்ளிவிட்டதாக பொலிஸ் தரப்பில்
 தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அயலில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றிய படுகொலைச் செய்யப்பட்ட பெண்ணின் காதலனை
 கைது செய்தனர். 
அத்துடன் படுகொலைக்கு பயன்படுத்திய கத்தி, அந்த பெண், இறுதியாக வைத்திருந்த தொலைபேசி மற்றும் உடைகள் என்பவற்றை நீதிமன்றில் சமர்ப்பித்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கது..


புதன், 8 நவம்பர், 2023

ஆஸ்திரேலியாவி ஹோட்டலின் உணவருந்தும் பகுதியில் புகுந்த கார் ஐந்து பேர் மரணம்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது டேல்ஸ்ஃபோர்டு. நகரப் பகுதியில் இருந்து வெகுதூரத்தில் உள்ள இந்த கிராமப் பகுதியான டேல்ஸ்ஃபோர்டில் பிரபல 
ஹோட்டல் ஒன்று உள்ளது.
இந்த ஹோட்டலில் சலையோரமாக திறந்த வெளியில் அமர்ந்து உணவருந்தும் இடம் உள்ளது. நேற்று மாலை இந்தப் பகுதியில ஏராளமானோர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். 
ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது திடீரென வேகமாக வந்த பி.எம்.டபிள்யூ சொகுசு கார், இந்த பகுதிக்குள் புகுந்தது. இதில் ஒரு பையன், இரண்டு ஆண்கள், ஒரு பெண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
காயம் அடைந்த ஏழு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒரு இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து 
விசாரணை நடத்தினர். 
அப்போது, காரை ஓட்டிவந்தது 68 வயது நபர் எனத் தெரியவந்துள்ளது. அவர் மது அருந்தி கார் ஓட்டவில்லை என போலீசார் 
தெரிவித்தனர். 
போதைப்பொருள் எடுத்துக் கொண்டாரா என்பதை தெரிந்துகொள்ள அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளதாகன போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரை வேகமாக ஓட்டி வந்ததுதான் விபத்து காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது     




 

செவ்வாய், 7 நவம்பர், 2023

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு - பதுளை ஊடான போக்குவரத்து தடை

இலங்கையில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை - கொழும்பு பிரதான வீதியில் பாறைகள் சரிந்து 
விழுந்துள்ளது. 
இதன்காரணமாக குறித்த பகுதியூடான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர். 
பதுளை அல்தும்முல்லை பிரதேசத்தில் மண்பாறைகள் சரிந்து விழுந்துள்ளமை  என குறிப்பிடுள்ளனர் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>