siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 31 மே, 2023

அமரர்.தம்பு பாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியை.01.06.2023

தோற்றம் 28-01-191937. மறைவு -04-05-2023-
யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர்.தம்பு பாலசிங்கம் அவர்களின்  31ம் நாள் அந்தியேட்டி கிரியை.01.06.2023.வியாழக்கிழமை கிரீமலை  தித்தக்கரையிலும் 
 ஆத்மா சாந்திப்பிரத்தனை நிகழ்வுகள் 03-06-2023, அன்று சனிக்கிழமை  பிற்பகல்,12,மணி அளவில்  அன்னாரின் நவற்கிரியிலுள்ள இல்லத்தில்  ஆத்மா சாந்திப்பிரத்தனையும்  அதனைத்  தொடர்ந்து நடைபெறும் 
மதியபோசன நிகழ்விலும்  கலந்து கொள்ளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்
 இங்கனம் -குடும்பத்தினர்   
 அன்னார் காலஞ் சென்றவர்களான,தம்பு .மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ் சென்ற திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும் 
கமலி. சேகர் சாந்தி .நந்தா .காலம்சென்ற சத்தியன் மற்றும் மாலாஆகியோரின் அன்புத்தந்தையாரும் காலஞ் சென்ற துரைராஜா .செல்வராஜா ஜெயரத்தினம் .சின்னமணி ..ஞானமணி,வித்திலசிலோன்மணி  மற்றும் 
  சிவலிங்கமணி ஆகியோரின் சகோதரனும் ஆவர்   
எமக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.எம்மையெல்லாம் நீங்காத நினைவில் தவிக்கவிட்டு
எம்மை விட்டு பிரிந்து 31 நாள் ஆகிவிட்டதே ஐயா !
இறைவனின் பாதவடிவில் நிரந்தர இளைப்பாற்றிக்காகச்
சென்ற எங்கள் அன்புத் தெய்வமே எங்கள் அப்பாவே - 31 நாள் அல்ல ஓர் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்
நாம் உம்மை மறவோம் அப்பா !
தாங்காத துயரோடு தவிக்கின்றோமே அப்பா! 
தரணியில் உம்மை எப்போ காண்போம் அப்பா! உம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். உம்மை மறக்க முடியாமல் உங்கள் பிரிவால் வாடும்
பாசமிகு மனைவி அம்மா .பிள்ளைகள்,சகோதரர்கள். மருமக்கள், பேரப்பிள்ளைகள், 
 அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், வெளிநாட்டில் இருந்து 
எமது துக்கத்தில் பங்கெடுத்த அனைத்து உள்ளங்களுக்கும்,  கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும், 
தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
>>>>> 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!! 
தகவல்-
குடும்பத்தினர்
  வீட்டுமுகவரி  
நவற்கிரி புத்தூர் 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 30 மே, 2023

ஆற்றில் நீராடச் சென்ற கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கனடாவில் உயிரிழந்துள்ளார்.

 கனடாவில்.29-05-2023. திங்கட்கிழமைஅன்று நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி 
உயிரிழந்துள்ளார்.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞர் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் குறித்த துயரச் சம்பவம் 
இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவராவார்.
இச் சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .என்பது குறிப்பிடத்தக்கது.

 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

திங்கள், 29 மே, 2023

வவுனியாவில் மனித பாவனைக்கு தகுதியற்ற 4860 கிலோ அரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

வவுனியா, கூமாங்குளம் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தினுள் விநியோகிப்பதற்கு தயாராக இருந்த மனித பாவனைக்கு தகுதியற்ற 4860 கிலோ அரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
 அரசாங்கத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச விநியோகத்திற்காக வழங்கப்பட்ட அரிசி ஒரு கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளது. 
அங்கு தலா 10 கிலோ எடையுள்ள 486 மூடைகள் காணப்பட்டதாகவும், குறித்த 
அரிசி கையிருப்பில் புழுக்கள் இருந்ததால் அதனை பயன்படுத்த 
முடியாதவாறு காணப்பட்டதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள்
 தெரிவித்தனர்.
 அரசு செயல்படுத்தும் திட்டங்களின் கீழ் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பத்து கிலோ அரிசியை விநியோகிக்க கிராம உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும். அரிசி மாசடைந்து பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளதாக அரிசியை பரிசோதித்த பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்
.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 28 மே, 2023

பருத்தித்துறையில் 3ஆம் குறுக்குத் தெருவில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 3ஆம் குறுக்குத் தெருவில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்து,28-05-2023. இன்றைய தினம் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 33 வயதுடைய தியாகராசா சந்திரதாஸ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்..என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 27 மே, 2023

நாட்டில் திருமண வைபவத்திற்கு தயாராகிக்கொண்டிருந்த இளம்பெண் மீது அசிட் வீச்சு

வெலிகம, மதுராகொட பிரதேசத்தில் இன்று (27) நடைபெறவிருந்த திருமண வைபவத்திற்கு தயாராகிக்கொண்டிருந்த மணமகள் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 இன்று அதிகாலை 03 மணியளவில் இவரது வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் அசிட் வீசி தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக வெலிகம பொலிஸார் 
தெரிவித்தனர்.
 படுகாயமடைந்த பெண் தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
 தாக்குதலுக்கு உள்ளான பெண் சில வருடங்களுக்கு முன்னர் வெலிகம மதுராகொட பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய நபருடன் காதல் உறவை ஏற்படுத்தி பின்னர் பெற்றோரின் எதிர்ப்பினால் உறவை 
முறித்துக் கொண்டார்.
 இதற்கு பழிவாங்கும் நோக்கில் குறித்த இளைஞரால் அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார்
 தெரிவித்தனர்.
 குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரைக் கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெலிகம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்..என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 26 மே, 2023

டுபாயிலிருந்து சுண்டுக்குழியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட இளைஞனின் சடலம்

டுபாயில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த 26 வயதான கமலதாஷ் நிலக்சன்  என்ற இளைஞனின் உடலம்,25-05-2023. நேற்றையதினம் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது
மேலும் இந்த கத்திக்குத்து சம்பவம் கடந்த 27.04.2023 அன்று இடம்பெற்றுள்ளது.இவர் கடந்த 2022ஆம் ஆண்டு வேலைவாய்ப்பிற்காக துபாய்க்கு சென்று நிலையிலேயே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணம் ஒரு திட்டமிட்ட கொலையாக சந்தேகிக்கப்பட்ட வேளை, இது ஒரு தற்கொலை என அந்நாட்டு மருத்துவர்களால் 
அறிக்கையிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சடலத்தை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்தவேளை, விமான நிலையத்தில் வைத்து பரிசோதித்த பொலிஸாரும் மருத்துவர்களும் இது ஒரு
 கொலை என்றும், சடலத்தை உடனடியாக வழங்க 
முடியாது என்றும், இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவேண்டும் என்றும் கூறப்பட்டது..26-05-2023.
இதேவேளை, தாயாரின் மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் சடலமானது நேற்றையதினம் சுண்டுக்குழியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அவரது இல்லத்தில் இன்றையதினம் இறுதிச் சடங்குகள்
 இடம்பெற்றன.
இந்த சம்பவமானது அவருடன் துபாயில் பணிசெய்த நண்பர்கள் உட்பட அவரது ஊரில் உள்ள அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது
.என்பது குறிப்பிடத்தக்கது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> 

திடீரென யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி மரணம்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை 
ஏற்படுத்தியுள்ளது.
யாழ் போதனா வைத்திய சாலையில் மனநல சிகிச்சை பிரிவில் கடமை ஆற்றிய Dr. சாரங்கன் அவர்கள் திடீர் சுகவீனமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் 25-05-2023.அன்று 
 உயிரிழந்துள்ளார்.
குறித்த தகவலை முகநூலில் வட மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி பதிவிட்டுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 25 மே, 2023

கனடாவில் குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக பானத்தில் கலக்கப்பட்ட பொருள்

கனடாவில் குழந்தைகள் காப்பகம் ஒன்றில், குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக, காப்பக ஊழியர் ஒருவர் குழந்தைகளுக்கு ஹார்மோன் ஒன்றைக் கொடுத்த விடயம் பெரும் பரபரப்பை 
ஏற்படுத்தியுள்ளது.
கியூபெக்கிலுள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில், குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் நபர் ஒருவர், குழந்தைகளைத் தூங்க வைப்பதற்காக குழந்தைகளின் பானத்தில் ஹார்மோன் ஒன்றைக் கலந்துள்ளார்.
தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோனான Melatoninஐ, 
பிள்ளைகளுடைய பெற்றோரின் அனுமதியின்றி பிள்ளைகளுக்கு 
கொடுத்ததாக அந்த நபர் மீது பொலிசார் குற்றச்சாட்டு பதிவு செய்து, விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
குழந்தைகளின் பானத்தில் Melatonin கலக்கப்பட்ட விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள குடும்பங்கள் நலத்துறை அமைச்சரான Suzanne Roy, தனது துறையும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது கற்பனை கூட செய்துபார்க்க இயலாத ஒரு சூழல் என்று கூறியுள்ள அமைச்சர், நமது குழந்தைகளின் நலனும் பாதுகாப்புமே முதன்மையானவை என்று கூறியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

புதன், 24 மே, 2023

மரண அறிவித்தல் திரு குமரேஸ்வரன் பரமநாதர்(குமரேசு )23.05.2023

13 Okt 1956 – 23 Mai 2023
யாழ். சாவகச்சேரி மறவன்புலோவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதர் குமரேஸ்வரன் அவர்கள் 23-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதர் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,சுலோசனாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,மிதுனா , கிருசனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,வியாபகன் அவர்களின் மாமனாரும்,மகேஸ்வரன்(சாவகச்சேரி), உமாதேவி(மறவன்புலோ), இரத்தினகாந்தி(கொக்குவில்), கணேஸ்வரன்(சுவிஸ்), ஜெயமளாதேவி(நுணாவில்), கருணாதேவி(மறவன்புலோ) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, அழகராசா மற்றும் சந்திரமூர்த்தி(கொக்குவில்), புவனேஸ்வரி(சுவிஸ்), வேலாயுதபிள்ளை(நுணாவில்), காலஞ்சென்ற குமரேஸ்வரன் மற்றும் ராஜேஸ்வரி(வல்வெட்டி), புவனேஸ்வரி(வல்வெட்டி), சிவமணி(சுவிஸ்), சிவபாலசுந்தரம்(ராசு- சுவிஸ்), காலஞ்சென்றவர்களான ஸ்ரீபாலசுந்தரம், ஜெயபாலசுந்தரம் ஆகியோரின் மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான சின்னையா, குகதாஸ் மற்றும் பூபாலசுந்தரம்(சுவிஸ்), கலா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,சபேசினி, சாந்தினி, சாந்தன், சஞ்சிகா, சஜீவன், கபிலன், விதுஷன், மிதிலன், கர்ஜனா, கீர்த்தனா, ராதி, 
தயானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,யசிதரன், கஜவதனி, மீரா, நிலானி, திலக்க்ஷன், சூட்டி, புஞ்சி(அனு), சுதா, பார்த்தீபன், தர்ஷினி, லர்ஷினி(பபி), தர்ஷன், சியாமா, ராஜன் ஆகியோரின் சித்தப்பாவும்,பேரப்பிள்ளைகளின் பாசமிகு தாத்தாவும் ஆவார். 
அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந. ப 12:30 மணிவரை  Krematorium Nordheim (Bucheggplatz) Halle 1 Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland எனும் முகவரியில் நடைபெறும். 
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Thursday, 25 May 2023 9:30 AM - 4:30 PM
Krematorium Nordheim Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Friday, 26 May 2023 9:30 AM - 4:30 PM
Krematorium Nordheim Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Saturday, 27 May 2023 8:30 AM - 11:30 AM
Krematorium Nordheim Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Monday, 29 May 2023 8:30 AM - 11:30 AM
Krematorium Nordheim Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
 சுலோசனாம்பிகை - மனைவிMobile : +41793775633 மிதுனா - மகள்Mobile : +41799043798 கிருசனா - மகள்Mobile : +41799310287 கணேஸ்வரன் - சகோதரன்Mobile : +41764301644.>>>>
அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந. ப 12:30 மணிவரை  Krematorium Nordheim (Bucheggplatz) Halle 1 Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland எனும் முகவரியில் நடைபெறும்.  

செவ்வாய், 23 மே, 2023

டோராஜாவில் வருடத்திற்கு ஒரு முறை இறந்தவர்களின் உடலை தோண்டியெடுத்து கொண்டாடும் மக்கள்

இந்தோனேசியாவில்  இறந்தவர்களின் உடலினை வருடத்திற்கு ஒரு முறை வெளியில் எடுத்து அவர்களது உறவினர்கள் கொண்டாடுவது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் டோராஜாவில் வாழ்ந்து வரும் மக்களே தமது இறந்த அன்புக்குரியவர்களை வருடத்திற்கு ஒரு முறை கல்லறைகளில் இருந்து வெளியே அழைத்துச் வந்து கோலாகலமாக 
கொண்டாடுகின்றனர்.
இந்த திருவிழாவை 'மானீன்' என்று சிறப்பாக அழைக்கப்படுகின்றது. இவ்வாறாக இறந்தவர்கள் சவப்பெட்டிகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட பின்னர் நன்றாக சுத்தம் செய்யப்படுகின்றனர்.
அதனை தொடர்ந்து புதிய ஆடைகள் அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். இந்நிலையில் இறந்தவர்களின் தொலை தூரத்தில் வசிக்கும் உறவினர்களும் பலவாறாக கதைகளை பரிமாறிக்கொள்ளவும், விருந்துண்டு மகிழவும் வருகை தருகின்றனர்.
இறந்தவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் சிகரெட்டுகள் என்று அவர்களிற்கு பிரியமான தீன்பண்டங்களை எல்லாம் 
வழங்குகின்றனர்.
ஏனென்றால் ஆவி உடலுக்கு அருகில் உள்ளது என்றும் தனக்கு நல்ல கவனிப்பை அது விரும்புகின்றது என்றும் இந்த மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இவ்வாறாக புதைக்கப்பட்டவர்களின் உடல்களை பதப்படுத்தி வைப்பதற்காக மருந்து வகைகளை இவர்கள் பயன்படுத்தி பாதுகாக்கின்றனர்
 என்பதும் குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
திங்கள், 22 மே, 2023

காட்டுத் தீயால் ஸ்பெயினில் 8,500 ஹெக்டேர் காட்டுத்தீயால் கடும் சேதம் என தகவல்

ஸ்பெயினில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள எக்ஸ்ட்ரீமதுரா என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக காட்டுத் தீ ஏற்பட்டது. தற்போது கடுமையான காற்று மற்றும் வறண்ட நிலை காரணமாக வனத்தின் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது.
இதன் காரணமாக, கடல்சோ மற்றும் டெஸ்கார்கமரியா உள்ளிட்ட வனத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட நபர்கள் 
பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும், 
பல சாலைகள் மூடப்பட்டு பல பகுதிகளில் போக்குவரத்து
 நிறுத்தப்பட்டது.
இதற்கிடையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையில் 
விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 இந்த காட்டுத்தீயால் இதுவரை 8,500 ஹெக்டேர் காடுகள் எரிந்து நாசமானது,மேலும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 21 மே, 2023

வட்டுக்கோட்டையில் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் இறங்கிய இ.போ.ச பேருந்து


யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
21.05.2023.இன்று மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில், வீதியை விட்டு விலகி வயலுக்குள் இறங்கிய பேருந்தை, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் 
பொதுமக்கள் மீட்டனர்.
குறித்த பேருந்து பயணிகள் சேவையில் ஈடுபடாத நிலையில், பேருந்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சிலர் பயணித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 20 மே, 2023

அந்தியேட்டி கிரியை அமரர் இராமுப்பிள்ளை நாகராஜா 31ம் நாள் .21.05.2023

பிறப்பு-20 06 1948--இறப்பு--23 04 2023
யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராமுப்பிள்ளை நாகராசா அவர்களின்  கிரீமலை,21-05-2023-31ம் நாள்  வீட்டுகிருத்திய்  23-05-2023.அழைப்பிதழ் 
21-05-2023. ஞாயிற்றுக்கிழமை  அன்று காலை 08,மணியளவில் கிரீமலை  தித்தக்கரையிலும்  ஆத்மா   சாந்திப்பிரத்தனை   நிகழ்வுகள் 23-05-2023,  செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல்,12,மணிஅளவில்  அன்னாரின் இல்லத்தில்  ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்  தொடர்ந்து நடைபெறும் 
மதியபோசன நிகழ்விலும்  கலந்து கொள்ளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்
 இங்கனம் -குடும்பத்தினர்   
மக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.எம்மையெல்லாம் நீங்காத நினைவில் தவிக்கவிட்டு
எம்மை விட்டு பிரிந்து 31 நாள் ஆகிவிட்டதே அப்பா!
இறைவனின் பாதவடிவில் நிரந்தர இளைப்பாற்றிக்காகச்
சென்ற எங்கள் அன்புத் தெய்வமே எங்கள் அப்பாவே - 31 நாள் அல்ல ஓர் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்
நாம் உம்மை மறவோம் அப்பா !
தாங்காத துயரோடு தவிக்கின்றோமே அப்பா! 
தரணியில் உம்மை எப்போ காண்போம் அப்பா! உம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். உம்மை மறக்க முடியாமல் உங்கள் பிரிவால் வாடும்
பாசமிகு மனைவி அம்மா .பிள்ளைகள்,சகோதரர்கள். மருமக்கள், பேரப்பிள்ளைகள், 
 அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், வெளிநாட்டில் இருந்து 
எமது துக்கத்தில் பங்கெடுத்த அனைத்து உள்ளங்களுக்கும்,  கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும், 
தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
>>>>> 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!! 
தகவல்-
குடும்பத்தினர்
  வீட்டுமுகவரி.
  ராசவீதி  
தோப்பு அச்சுவேலி

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 19 மே, 2023

பண்டாரவெளி மணற்குளத்தில் 15 வயது மாணவியைக் காணவில்லை

மன்னாரில் 15 வயது மாணவி காணாமல்போயுள்ளதாக சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவியே 18-05-2023.அன்று  காலையில் இருந்து காணவில்லை என
 தெரிவிக்கப்பட்டது.
 குறித்த மாணவி பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்று வருவதாக பெற்றோர் 
தெரிவித்துள்ளனர்.
 மாணவி காணாமல் போனது தொடர்பாக நேற்றும் இன்றும் தேடிய பெற்றோர் மாணவி பற்றிய தகவல்கள் கிடைக்காததை தொடர்ந்து சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 
செய்துள்ளனர்.
 மேலும் குறித்த மாணவி பற்றிய தகவல்கள் ஏதும் தெரிந்தவர்கள் 074-2614797 எனும் மாணவியின் தந்தையின் தொலைபேசிக்கு தகவல்களை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 18 மே, 2023

மருதானையில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு மருதானை பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில்.18-05-2023. இன்று தீ பரவியுள்ளது.
இந்நிலையில் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்புத் பிரிவினர் 
தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை..என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>புதன், 17 மே, 2023

மரண அறிவித்தல் மாணிக்கம் சிவனந்தினி.17.05.2023

-மறைவு-16-05-2023.
நவற்கிரியை பிறப்பிடமாகவும் புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சிவனந்தினி அவர்கள் 16.05.2023.இன்று காலை இறையடி சேர்ந்தார்
  நல்லடக்கம் .17-05-2023.அன்று   அன்னாரின்  பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 16 மே, 2023

கோப்பாய் வடக்கு வைத்தியசாலைக்கு முன்வீதியில் வீடொன்றில் தீயில் கருகிய நிலையில் சடலம்

 

யாழ் கோப்பாய் வடக்கு கட்டுப்பலானை பகுதியில் 65 வயதான கார்த்திகேசு திருப்பதி எனும் ஓய்வுப்பெற்ற ஆசிரியர் தனக்குத்தானே தீயை மூட்டி உயிரை மாய்த்துள்ளார்.
இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற இவர் கோப்பாய் கிறீஸ்தவ கல்லுாரியில் நீண்ட காலம் கல்வி கற்பித்து ஓய்வுப் பெற்ற ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.¨
மேலும், கோப்பாய் ஆலயங்கள் சிலவற்றின் நிர்வாக உறுப்பினராகவும் உள்ளார். திருப்பதி மாஸ்டர் என இவர் கோப்பாயில் உள்ளவர்களால் அழைக்கப்படுபவர்.
தனிமையில் வசித்து வந்த இவர், இன்று காலை 6 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கு இடையே உயிரை மாய்த்திருக்கலாமென கருதப்படுகிறது.
இரண்டாம்  பாதிப்பு இது தொடர்பான செய்திகள்>>>>>>
யாழ்ப்பாணம் - கோப்பாயில் ஆண் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்றைய தினம் 16-05-2023.மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் வடக்கு வைத்தியசாலைக்கு முன்வீதியில் உள்ள வீடொன்றின் அறையில் இருந்து எரிந்த நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் 65 வயதுடைய கார்த்திகேசு திருப்பதி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 15 மே, 2023

நிட்டம்புவ பொலிஸாரால் சகோதரியின் வீட்டிற்கு தீ வைத்த சகோதரன் கைது

  இலங்கையில் சகோதரியின் வீட்டிற்கு தீ வைத்த இளைய சகோதரர் ஒருவரை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வத்துபிட்டிவல – ருக்கவில பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான ஒருவராவார்.
சம்பவத்தில் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், சகோதரியின் பிள்ளையின் பாடசாலை புத்தகங்கள், சீருடைகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் தீயில் எரிவடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 14 மே, 2023

வாகன சாரதி தூங்கியதால் நடனக் குழு பதுளை ஊவா மாகாண பொது வைத்தியசாலையில்

பண்டாரவளை தோவ ரஜ மகா விகாரையில் இடம்பெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த நடனக் குழுவினரை 
ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் காயமடைந்து பதுளை ஊவா மாகாண பொது வைத்தியசாலையில் அ
னுமதிக்கப்பட்டுள்ளனர்.
14-05-2023. இன்று அதிகாலை 3.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அவர்களில் 08 யுவதிகள்இ 02 இளைஞர்கள் மற்றும் ஒரு வயதானவரும் அடங்குகின்றனர்.
 இவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லையென்றாலும் கால்களிலும் தலையிலும் காயங்கள் இருப்பதாக பதுளை ஊவா மாகாண பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவர் டொக்டர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.
 வாகன சாரதி தூங்கியதால் வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>சனி, 13 மே, 2023

வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி

வவுனியா - வேப்பங்குளம் பகுதியில்  12-05-2023.அன்று  இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.
நெளுக்குளத்தில் இருந்து நகரை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேப்பங்குளம் பகுதியில் நாய் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மகாறம்பைக்குளத்தை சேர்ந்த டனுஜன் (வயது 20) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். 
சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை நெளுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 12 மே, 2023

துப்பாக்கிச்சூட்டில் ஜேர்மனி மேர்சிடிஸ் - பென்ஸ் வாகனத் தொழிற்சாலை இருவர் பலி

ஜேர்மனியிலுள்ள மேர்சிடிஸ் - பென்ஸ் வாகனத் தொழிற்சாலையொன்றில் 
11-05-2023.அன்று  நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
சின்டெல்பின்கென் நகரிலுள்ள தொழிற்சாலையில் 11-05-2023.அன்று காலை 7.45 மணியளவில் நுழைந்த நபர் ஒருவர் இருவர் மீது துப்பாக்கிக் பிரயோகம் செய்த்தாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. துப்பாகிச்சூடு நடத்திய 53 வயதான இச்சந்தேக நபரை, தொழற்சாலையின் பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து, பொலிஸாரிடம் 
ஒப்படைத்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வியாழன், 11 மே, 2023

நாட்டில் களுத்துறை மாணவி விவகாரம்; விடுதி உரிமையாளரின் மனைவி கைது

களுத்துறையில் விடுதியொன்றின் மாடியிலிருந்து விழுந்து 16 வயதான சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குறித்த விடுதியின்
 உரிமையாளரினது மனைவி காவல்துறையினரால்.11-05-2023. இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உரிய நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியமைக்காகவும், சிறுமிக்கு தங்குமிடங்களை வழங்குவதற்கு முன்னர், அவளது அடையாள அட்டை உள்ளிட்ட விபரங்களைச் சரிபார்க்கத் தவறியதற்காகவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் 
தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, சிறுமியின் தொலைபேசி தரவுகள் பெறப்பட்டுள்ள நிலையில், அதனூடாக மேவதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சிறுமியின் கைபேசி சம்பவ தினத்தில் காணாமல் போயுள்ள நிலையில், அதனை கண்டுபிடிக்க தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

புதன், 10 மே, 2023

பரிசில் புறநகரில் A86 நெடுஞ்சாலையை மூழ்கடித்த வெள்ளம் போக்குவரத்து பாதிப்பு

பரிசில் புறநகரில் பெய்துவரும் தொடர் மழையினால் A86 நெடுஞ்சாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இன்று நண்பகலின் பின்னர் ஆரம்பித்த இந்த வெள்ளம், La Courneuve மற்றும் Nanterre பகுதிகளை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. இன்று இரவு மற்றும் நாளை புதன்கிழமை நண்பகல் வரை இந்த மழை நீடிக்கும் அபாயம் உள்ளதால் போக்குவரத்து தொடர்ந்து தடைப்படும் என வீதி அவதானிப்பாளர்களான Sytadin நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று காலை 630 கி. மீ தூரம் வரை போக்குவரத்து நெரிசல் பதிவாகியிருந்தது. பிற்பகல் 3.30 மணி அளவில் 227 கி. மீ தூரம் போக்குவரத்து நெரிசல் பதிவாகியிருந்தது.. என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>செவ்வாய், 9 மே, 2023

மரக்கறிகளின் விலைகள் இலங்கையில் சடுதியாக அதிகரிப்பு

நாட்டில் பொருளாதார மத்திய நிலையங்களில் போஞ்சி விலை.09-05-2023. இன்றைய தினம் (09-05-2023) சற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.
பேலியகொட மெனிங் சந்தை விலையின்படி,
இன்றைய தினம் ஒரு கிலோ போஞ்சி மொத்த விற்பனை விலை 350 முதல் 400 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், மீகொட பொருளாதார மத்திய நிலையத்திலும் இதே விலை பதிவாகியுள்ளது,
தம்புள்ளையில், ஒரு கிலோ போஞ்சி 250 ரூபாவாக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.
எனினும், பொருளாதார நிலையங்களில் கேரட்டின் விலை 100 முதல் 190 ரூபாய் வரை குறைந்த விலையில் பதிவாகியுள்ளது.
வெண்டைக்காய் மொத்த விற்பனை விலை 250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>திங்கள், 8 மே, 2023

நாட்டில் ஏழாவது தடவையாக நாய்கள் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி

மூன்று (03) வயதுடைய சிறுமி ஒருவர் மூன்று மாதங்களில் ஏழாவது (07) தடவையாக நாய்கள் கடித்து பலத்த காயமடைந்து பதுளை ஊவா மாகாண பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவரும், அரச வைத்தியர்கள் சங்கத்தின் உதவிச் செயலாளருமான டொக்டர் பாலித ராஜபக்ஷ07-05-2023-
அன்று தெரிவித்தார்.
 தந்தையின் பராமரிப்பில் பசறை நமுனுகுல கனவரெல்ல தோட்டத்தில் வசிக்கும் குறித்த சிறுமி இ தாயின் பராமரிப்பை இழந்த நிலையில் இந்த சோகமான சூழலை எதிர்கொண்டுள்ளார்.
 தாய் தந்தையையும் பிள்ளையையும் விட்டு வெகு நாட்களுக்கு முன்னரே சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிலில் கூலித்தொழிலாளியான தந்தை வேலைக்கு சென்றபின்னர் வீட்டில் தனிமையில் இருக்கும் சிறுமி,அருகில் உள்ள வீடுகளுக்குச் சென்று அயல் குழந்தைகளுடன் விளையாடச் சென்று இந்த விபத்துகளை எதிர்கொண்டுள்ளார்.
 குழந்தைக்கு சரியான பராமரிப்பு கிடைக்காததால் இந்த விபரீதம் நடந்துள்ளது. இந்த குழந்தைக்கும் சரியான கவனிப்பு மற்றும் சரியான 
வழிகாட்டுதல் இல்லை. 
சரியான ஊட்டச்சத்து இல்லை. மன நிலை என்னவென்று சொல்ல முடியாது. எதிர்பாராத விபத்துகள் ஏற்படலாம். பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படலாம். அவர்கள் பல்வேறு முறைகேடுகளுக்கு 
ஆளாகலாம்.
 ஒரு குழந்தை நாளைய குடிமகன். ஒரு நாகரீக சமூகம் என்ற வகையில் நாம் இதை ஆராய வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டொக்என்பது குறிப்பிடத்தக்கதுடர் பாலித ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>