siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

கடல் மீன்களின் விலை வடமாகாணத்தில் கடுமையாக உயர்வு

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் வடமாகாணத்தில் கடல் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய கடற்பரப்புகளில் நாளாந்தம் மீன்பிடித்தல் இடம்பெற்று வருகின்ற போதிலும், கடந்த சில நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீன்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், கடற்தொழிலாளர்களுக்கு எரிபொருளுக்கு அதிக பணம் செலுத்த நேரிடுவதன் காரணமாக மீன்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக கடற்றொழில் சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அதிகமாக விற்பனையாகும் மீன்கள் 2000 ரூபாவை எட்டியுள்ளதாகவும், இறால் மற்றும் நண்டு 1600 – 1800 ரூபாய்க்கு இடைப்பட்ட விலைகளில் விற்பனை செய்ய நேரிட்டுள்ளதாகவும் மீன் விற்பனையாளர்கள் 
தெரிவித்துள்ளனர்.
குறித்த மீன்கள் இதற்கு முன்பு ஒரு கிலோ 700 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் இரட்டிப்பு விலை அதிகரிப்பு என்பது தாங்கிக் கொள்ள முடியாததெனவும் வட மாகாண மக்கள் தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


இலங்கைக்கு எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று வந்தடைந்தது

3,600 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் 29-04-2022.இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் குறித்த எரிவாயு தொகை தரையிறக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக எரிவாயு விநியோகத்தின் போது பல இடங்களில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



வியாழன், 28 ஏப்ரல், 2022

இலங்கையில் அதிகரித்தது டொலரின் விற்பனை பெறுமதி

இலங்கையில் அனுமதிப் பெற்ற வணிக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலரை 360 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன.தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கையில் ரூபாயின் மதிப்பு நாள்தோறும் 
சரிவடைந்து வருகிறது.
அதேவேளை 27-04-2022.அன்று  மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 350.49 ரூபாவாக பதிவாகியிருந்தமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



புதன், 27 ஏப்ரல், 2022

கீரிமலை பகுதியில் இளைஞன் ஒருவரின் தவறான முடிவு

யாழ். கீரிமலை பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்துத் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் 27-04-2022.இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வீட்டிற்கு வெளியே உள்ள மரத்தில் தூக்கிட்டு இவ்வாறு 
உயிரிழந்துள்ளார்.
இளைஞன் சடலமாகத் தூக்கில் தொங்கியதை அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





செவ்வாய், 26 ஏப்ரல், 2022

போதைப்பொருள் கடத்திய தமிழ் இளைஞனுக்கு சிங்கப்பூரில் தூக்குத்தண்டனை

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் இளைஞரான தர்மலிங்கம் நாகேந்திரன், 27-04-2022.நாளை புதன்கிழமை 27ம் திகதி தூக்கிலிடப்படவுள்ளதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நாகேந்திரன் தொடர்பில் அவரது தாயார் புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாகவும், அதன் மீதான விசாரணை .26-04-2022.இன்று நடைபெறுவதாகவும் நாகேந்திரனின் சகோதரி ஊடகம் ஒன்றுக்குத்  தெரிவித்துள்ளார்.
42.7கிராம் ஹெராயின் போதைப் பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில் 2009ஆம் ஆண்டு நாகேந்திரன் கைதுசெய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 21.
 அதைத்தொடர்ந்து பத்து ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் அவருக்கு 2019ஆம் ஆண்டு மரண தண்டனை 
விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

திங்கள், 25 ஏப்ரல், 2022

தீ விபத்தில் நைஜீரியாவில் எண்ணெய் ஆலையில் 100 பேர் பலி

நைஜீரியாவில் சட்ட விரோதமாக செயல்பட்ட எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழும் நிலையில், பல இடங்களில் எண்ணெய் சுரங்கங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு செயல்படுகின்றன.
இந்நிலையில்,ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நைஜீரியாவின் தெற்கு மாநிலமான இமோவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து 
உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறிப்பாக,அடையாளம் தெரியாத எரிந்த உடல்கள் அப்பகுதியில் சிதறிக் கிடக்கின்றன.இந்த பெரும் விபத்துக்கு பிறகு சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும்,தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து,நாட்டின் எண்ணெய் வளங்கள் திருடப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக,நைஜீரியாவில் உள்ள சட்டவிரோத சுத்திகரிப்பு ஆலைகளை சோதனை செய்து அழிக்க அரசாங்கம் இராணுவத்தை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



நாட்டில் பாடசாலை மாணவர் மியான் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து பலி

கேகாலை – மாவனல்லை பகுதியில் உள்ள மியான் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
குறித்த மாணவர் மாவனல்லை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள மியான் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற வேளையில் நீர்வீழ்ச்சியின் கரையில் இருந்து தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது படுகாயமடைந்த மாணவன் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 22 ஏப்ரல், 2022

இலங்கை மாணவன் அவுஸ்திரேலியாவில் விபத்தில் பலி

அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வந்த இலங்கை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அத்தனகல்ல, வல்பொல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இசுரு ஜீவந்த என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் 
காணப்பட்டுள்ளார்.
குறித்த இலங்கை மாணவன் பயணித்த கார் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி 
வெளியிட்டுள்ளன.
மாணவன் உயர்தர கணிதப் பிரிவில் கம்பஹா மாவட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகி இருந்த நிலையில்,மேற்படிப்புக்காக அவுஸ்திரேலியாவுக்கு
 சென்றுள்ளார்.
உயிரிழந்தவரின் உடலை இலங்கைக்கு கொண்டு வர அவரது நண்பர்கள் நிதி திரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

கொடிகாமத்தில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் பலி மேலும் இருவர் படுகாயம்

யாழ் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற ரயில் – பட்டா ரக வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் ஜனுசன் வயது 12 எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் தந்தையான நாகமணி தயாபரன் வயது 45 மற்றும் உயிரிழந்தவரின் சகோதரனான தயாபரன் தனுஷன் வயது 15 ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பயணித்த ரயில், கொடிகாமம், மிருசுவில் வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள புகையிரத கடவையில் பட்டா ரக வாகனத்தை மோதி விபத்தை
 ஏற்படுத்தியுள்ளது.
பட்டா ரக வாகனத்தில் பயணித்த சிறுவன் உயிரிழந்த நிலையில், சிறுவனின் தந்தையும், சகோதரனும் படுகாயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 
மாற்றப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


அமரர் இராசரத்தினம் இலட்சுமி (பரிமளம்)3ம் ஆண்டு நினைவஞ்சலி.22,04,22

மாலர்வு-11,01,1944- .உதிர்வு-24.04.2019  
திதி -22..04.2022 வெள்ளிக்கிழமை அன்று 
யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாக்கொண்ட                 
அமரர் இராசரத்தினம்,இலட்சுமி (பரிமளம்)  அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னார்  காலஞ்சென்ற  இராசரத்தினம்  அவர்களின் அன்பு மனைவியும்   காலஞ்சென்றவர்களான
மாரிமுத்து தம்பதிகளின் புத்திரியும்   காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை,பாலா ,சிங்கம்    
சின்னத்துரை, பேத்தச்சி - மற்றும் பார்க்கியம் ஆகியோரின்  
அன்புச்சகோதரியும்  
 வசந்தகுமார்    மலர்வதான  சுகந்தி   ஆகியோரின் அன்புத் தாயாரும் , 
சரிதா  கீர்த்தன் கீர்த்தி லவன்சி  ஆகியோரின் அன்புப் பேத்தியம் ஆவார்
அன்னாரின்  3ம்ஆண்டு நினைவஞ்சலி  22-04-2022 அன்று 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
காலச்சுழற்சியில்   ஓர்ஆண்டு   கடந்து போனாலும் இன்னும் 
எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
எங்கள் அம்மா   
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
 அன்னாரின்
 ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் நவற்கிரி நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி
 என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் , பிள்ளைகள் சகோதர்கள் பேரப்பிள்ளைகள் புட்டப் பிள்ளை

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

நாட்டில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாடு முழுவதும் இன்றும், நாளையும் மின்வெட்டு அமுலாகும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 
தொிவித்துள்ளது.
மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்குவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது.
இதனால் 19-04-2022.இன்று மின்வெட்டு நேரத்தை 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க
 தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



திங்கள், 18 ஏப்ரல், 2022

நாட்டில் மீண்டும் அதிகரித்தது பெட்ரோல், டீசல் விலை

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.இதற்கமைய, சகல விதமான பெட்ரோல் வகைகளின் விலைகளும் 35 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.மேலும்,சகல விதமான டீசல் வகைகளின் விலைகள் 75 ரூபாவினால் 
அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, பெட்ரோல் 92 – 338 ரூபாவாகும், பெட்ரோல் 95 – 367 ரூபாவாகும்,பெட்ரோல் யூரோ 3 – 347 ரூபாவாகும்,ஓட்டோ டீசல்- 289 ரூபாவாகும், சூப்பர் டீசல் – 327 ரூபாவாகவும் 
அதிகரித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



சனி, 16 ஏப்ரல், 2022

நீர் வெறுப்பு நோயினால் யாழில் குடும்பத்தலைவர் உயிரிழந்துள்ளார்

யாழ், கடற்கரை வீதியில் நாய் மற்றும் பூனையின் நக கீறலுக்கு உள்ளாகி குடும்பத்தலைவர் ஒருவர் நீர் வெறுப்பு நோயினால்
 உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கடற்கரை வீதியைச் சேர்ந்த அந்தோனி சூசைநாதன் (வயது-35) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு 
உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமையினால் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சட்ட மருத்துவ வல்லுநரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் 3 மாதங்களுக்கு முன்பு தெரு நாய் கடிக்கு உள்ளாகிய நிலையில், அது தொடர்பில் மருத்துவ சிகிச்சை பெறாததால் விலங்கு விசர் நோய்த்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளத் தவறியுள்ளதுடன்
,2 மாதங்களுக்கு முன்பு பூனையும் நகங்களால் கீறியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவருக்கு நேற்றிரவு திடீரென நடுக்கம் ஏற்பட்ட நிலையில்,பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அவர் நேற்றிரவு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், 16-04-2022.இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

அமரர் மயில்வாகனம் இராசரத்தினம் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 10.04.22

பிறப்பு-02-0-1930--இறப்பு-22-03 -2021.
யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
 அமரர்  மயில்வாகனம்  இராசரத்தினம் அவர்கள்,.அவர்களின் .முதலாமாண்டு திதி  10.04.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற மயில்வாகனம் தம்பதிகளின் அன்புமகனும் 
  காலஞ்சென்ற செல்லம்மாஅவர்களின்,அன்புகணவரும் செல்வரத்தினம் 
(இலங்கை )அருளம்மா (இலங்கை ) தாமோதரம்பிள்ளை (சுவிஸ் ) செல்வச்சரஸ்வதி (இலங்கை ) கனகலிங்கம்  (சுவிஸ் ) மகிளேஸ்வரி (இலங்கை )பாலசுந்தரம் (இலங்கை )ஆகியோரின்  பாசமிகு தந்தையாரும்ஆவர்  
எமது அப்பாவே போனதோ ஓராண்டு
ஆனால் நீங்கள் எம்மில் வாழ்வதோ
 பல்லாண்டு ஒரு நிமிடம் நினைக்க முதல் மின்னல்
மாதிரி மறைந்தது ஏனோ
கண் சிமிட்டி கையசைத்து காட்னினீர்களே
நான் திரும்பி வருவேன் என்று
அந்த ஒரு நொடி பொழுதினிலே
 உங்கள் கண் சிமிட்டலும் கையசைத்தலும் நின்று
 ஓராண்டு காலம் ஓடி விட்டது ஆனால்
எம் கண்கள் மூடும் வரை மனகண்களில் வாழ்வீர்கள்
உங்கள் பேரபிள்ளைகளோ
 கதிகலங்கி நிற்கின்றார்கள்
 எங்களை வழி நடத்தி செல்ல வேண்டும்
என்றும் ஒளியாய் வாழ்ந்து
எங்கள் எல்லோரையும் வழி நடத்தி
கொண்டிருப்பீர்கள் அப்பா தாத்தா 
அன்னாரின் பிரிவால்
  துயருறும்   பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை பூ ட்ட ப்பிள்ளைகள்,உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
 வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்  

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

சனி, 9 ஏப்ரல், 2022

அமரர் சின்னத்தம்பி சிவானந்தம்1ம் ஆண்டு நினைவஞ்சலி (செல்வா) 09.04.22

பிறப்பு-02 05 1964--இறப்பு--22 03 2021
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசில்வசித்து வந்தவரும் தற்போது  நவற்கிரியில் வதித்து வந்த
 திரு சின்னத்தம்பி சிவானந்தம் (செல்வா,சிவா.) அவர்களின் .முதலாமாண்டு திதி  09.04.2022-சனிக்கிழமை அன்று 
அன்று அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி மற்றும் அசுவதி  தம்பதிகளின் 
அன்பு மகனும் ( மூத்த புதல்வர் ) காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவறஞ்சனி (றஞ்சி .சுவிஸ்  )அவர்களின் பாசமிகு கணவரும் வசிதா நிறஞ்சன் ஆகியோரின் 
பாசமிகு தந்தையும் ஆவர் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் 
அன்பினில் விளைந்த
ஆரமுதே அளவிலா
இன்பப் பெரும் சுடரேஆனந்தமாய் உள்ளங்கள்
கவர்ந்த உத்தமரே அற்புத
மனிதரின் மாணிக்கமேதொலை தூரம் சென்ற போதும்
தொலையாதது உமது நினைவுகள்
தொடு வானம் போல் தொடரும்
கனவுகள் தோழமையாய்
திகழும் நற்சந்தங்கள்நம்மை விட்டகன்று நாட்கள்
பலவாயிற்று நானிலமும் ஏங்குதே
நல்ல குணவாளனுக்காய் நாட்கள்
மாதங்களாய் அகவையும் ஒன்றாயிற்று
 நல்லவரே வானவரே நற்பதவி கண்டீரேசீரும் சிறப்புமாய் நீர் இருந்த
நாட்கள் சிந்தாமல் சிதையாமல்
கதை கவிதை சொல்லுதே சித்திரமே
உம்தோற்றம் சிந்தையிலே சிகரம் ஐயா
 சீரோடு சிறப்பாக நீர் சிவனிடத்தில் இளைப்பாறும்ஆண்டு கடந்தாலும் ஆறாத துயரத்தில்
மீளாது தவிக்கும் அன்பான குடும்பத்தினர்,
உற்றார், உறவினர், நண்பர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
வீ ட்டு  முகவரி 
நவற்கிரி .புத்தூர் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு 
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>

திங்கள், 4 ஏப்ரல், 2022

அமரர் திரு,ஆ ,க,சுப்பிரமணியம்.11ம் ஆண்டு நினைவஞ்சலி.04.04.2022

மண்ணில் : 06- 02 1932 — விண்ணில் : 06 04 2011
திதி : 04 -04- 2022.திங்கள்கிழமை,அன்று 
யாழ். மாவிடடபுரத்தை பிறப்பிடமாகவும், நவற்கிரி புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட.அமரர் திரு ..(ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணிஐயா  ) அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்தின்ஒரு ஆண்டுகள் கழிந்தும் என்றும் எம்மோடு இருக்கும் ஏந்தலே!!
பத்தின்ஒரு ஆண்டுகள் போனதையா!
ஏங்கியே அழுகின்றோம் ஏந்தலே!!
தாங்கியே பிடிக்க தலைவனின்றி
தவிக்கின்றோம் ஐயா!
.இன்று நீங்கள் இல்லாமல்
தனியாய் தவிக்கின்றோம் நாம் வாழும்
காலம் வரை உங்கள் நினைவுகளும்
 எங்கள் உள்ளத்தில் வற்றாத
ஊற்றாகப் பொங்கிப் பெருகும்.எத்தனை உறவுகள் இருந்தாலும்
தோள்சாய அப்பா இல்லையே! என
கதறியழும் பிஞ்சுகளை அரவணைக்காது
அநாதரவாய் தவிக்க விட்டுவழி தெரியாத்
 தூரம் விரைந்தோடி சென்றதேனோ!எங்களை தவிக்க விட்டு நீர்
 தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண வருவாயா ஓர் கணமே?
 உங்கள் நினைவுகள் அழியவில்லை
 எங்கள் கண்ணீரும்
நிற்கவில்லை அப்பா... அப்பா...
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவால் வாழ்ந்திடுவோம் |
பத்தின்ஒரு ஆண்டுகள்  நினைத்து நீர் மல்கும்நாங்கள்  
..என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்
வாழும் மனைவி, பிள்ளைகள்
,மருமக்கள் சகோதரர்கள்
தகவல் குடும்பத்தினர்
எமது நவற்கிரி,கொம் 
இணையங்களின் நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை,.கொம்  நவக்கிரி .கொம் இணையங்களின் 
நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ,,ஓம்சாந்தி ஓம்சாந்தி 
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திகின்றோம்...
ஓம்சாந்தி .ஓம்சாந்தி .ஓம்சாந்தி ..

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>