siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 8 டிசம்பர், 2024

நாட்டில் திக்வெஹெர பிரதேசத்தில் பணத் தகராறு :தாக்கப்பட்டு ஒருவர் கொ லை

நாட்டில் குருணாகல், வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திக்வெஹெர பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் கடந்த 05-12-2024.வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் வாரியப்பொல , தெமட்டலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடையவர் ஆவார்.
சம்பவத்தன்று, கொலை செய்யப்பட்டவர் இளைஞன் ஒருவருடன் மதுபானம் அருந்திக்கொண்டிருந்துள்ள நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இருவருக்கும் இடையில் தகராறு 
ஏற்பட்டுள்ளது.
தகராறு எல்லை மீறியதில் சந்தேக நபரான இளைஞன் கொலை செய்யப்பட்டவரை பொல்லால் தாக்கி 
கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து, சந்தேக நபரான 30 வயதுடைய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது 





 

சனி, 7 டிசம்பர், 2024

மரண அறிவித்தல் அமரர் கனகரத்தினம் குலநாயகம்

 துயர் பகிர்வு-தோற்றம் 00.மறைவு-07-12-2024.
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் மட்டுவிலை வதிவிடமாகவும் கொண்ட அமரர் கனகரத்தினம் குலநாயகம் .07-12.2024.சனிக்கிழமை இன்று
 இறைவனடி சேர்ந்தார்
இவர் கனகரத்தினம் மகேஸ்வரியின் அன்பு மகனும் அன்னார்  காலம்சென்ற சபாநாயகத்தின் மற்றும் ஜெயக்குமாரியின் அன்பு சகோதரனும் ஆவார். அன்னாரின் இறுதிச்சடங்கு .08-12-2024.ஞாயிற்ருக்கிழமை  அன்று மட்டுவிலில்  நடைபெறும்
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
வீ ட்டு முகவரி-
 மட்டுவில்
தகவல்
குடும்பத்தினர்..


வெள்ளி, 6 டிசம்பர், 2024

நாட்டில் தர்மபுரம் நாதன் திட்டம் பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு

நாட்டில் கிளிநொச்சி தர்மபுரம் நாதன் திட்டம் பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மகன் மீட்டதாக ஆரம்ப விசரணையில் தெரிய வந்துள்ளது.உயிரிழந்தவரின் 14 வயதுடைய மகன் அதிக மது போதையில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.¨
சம்பவத்துடன் தொடர்புடைய 14 வயதுடைய சிறுவன் விசாரணைக்காக தர்மபுரம் பொலிஸாரால் அழைத்து 
செல்லப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற மரண விசாரணை அதிகாரி விசாரணை மேற்கொண்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விசாரணையில் தெரியவந்த நிலையில், முழுமையான விசாரணைக்காக
 பரிந்துரைத்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மாட்ட நீதவானிற்கு அறிக்கை சமர்ப்பித்து விசாரணை செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த உயிரிழந்த தாய்க்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. பொலிஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட 14 வயதுடைய சிறுவனும் அதிக மது 
போதையில் இருந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மரணத்தில் சந்தேகம் நிலவுகின்ற நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது










 

வியாழன், 5 டிசம்பர், 2024

நாட்டில் கொழும்பில் இருந்து பதுளை சென்ற ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

நாட்டில் தெமோதர புகையிரத நிலையத்திற்கு கீழே வளைவில் நபர் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார். 
 குறித்த நபர் நேற்று (04) கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே  மோதுண்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது. 
தெமோதர சவுதாம தோட்டத்தில் வசிக்கும் 36 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
என்பது  குறிப்பிடத்தக்கது




 

புதன், 4 டிசம்பர், 2024

நாட்டில் எட்டு பாடசாலை மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில்

நாட்டில் கேகாலை, மாவனெல்லை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 08 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று
 மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் 03-12-2024. செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
நான்காம் வகுப்பில் கல்வி கற்கும் ஓன்பது வயதுடைய பாடசாலை மாணவர்களே வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள
 பாடசாலை மாணவர்கள் நேற்றைய தினம் காலை 10 மணியளவில் பாடசாலைக்கு அருகில் உள்ள மரமொன்றிலிருந்த காய்களை
 உட்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, இந்த பாடசாலை மாணவர்கள் வாந்திபேதி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டு திடீர் சுகயீனமுற்றுள்ள நிலையில் 
மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் உடல் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.என்பது குறிப்பிடத்தக்கது.


செவ்வாய், 3 டிசம்பர், 2024

தொண்டைமனாற்றில் மூன்று நாள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில் மூன்று நாள் நீடித்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 இவ்வாறு உயிரிழந்தவர் மண்டபக்காடு, கெருடாவில் தெற்கு, தொண்டைமனாறைச் சேர்ந்த கனகன் சண்முகம் (வயது- 62) என்பவராவார்.
 காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் .02-12-2024. திங்கட்கிழமை அன்று அவரால் நடக்க முடியாத நிலையில் காலை பருத்தித்துறை 
ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 இம் மரணம் தொடர்பில் வல்வெட்டித்துறை  
பதில் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டார் சாட்சிகளை வல்வெட்டித்துறை பொலிசார் நெறிப்படுத்திய நிலையில் சடலம் உடற் கூற்று பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.






 

திங்கள், 2 டிசம்பர், 2024

நாட்டில் வெள்ள அனர்த்தத்தின் பின்பு எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து

நாட்டில் வெள்ள அனர்த்தத்தின் பின்பு எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து மக்கள் விழிப்பாக செயற்படுமாறு கிளிநொச்சி பிராந்திய 
சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரித்தார்.
 கிளிநொச்சியில் நடந்த ஊடக சந்திப்பிலேயே 
குறித்த விடயத்தை தெரிவித்தார்.தொடர்ந்து 
தெரிவிக்கையில் அண்மை நாட்களாக இடம்பெற்ற வெள்ள
 அனர்த்தத்தினால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தனர்
.இவர்கள் வெள்ள நீரில் பயணம் செய்திருந்தனர்.வெள்ளநீர் மூலம் எலியின் சிறுநீர் மூலம் பக்ரீறியா தொற்று ஏற்பட்டு குறித்த
 நோய் ஏற்படுகிறது. 
எனவே கடுமையான காய்ச்சல் மற்றும் கால் நோ, கண்சிவப்பு போன்ற அறிகுறி காணப்பட்டால் மருத்துவ உதவியைப்பெற்று எலிக்காய்சலிருந்து பாதுகாக்குமாறு தெரிவித்திருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது .




ஞாயிறு, 1 டிசம்பர், 2024

நாட்டில் சில எரிபொருட்களுக்கான விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

நாட்டில் லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 இதன்படி, சிபெட்கோ எரிபொருள் விலைக்கு ஏற்ப லங்கா ஐஓசியின் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என்றும் நிறுவனம்
 தெரிவித்துள்ளது. 
 நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைக்க இலங்கை பெற்றோலிய
 சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் நடவடிக்கை 
எடுத்துள்ளது. 
இதன்படிஒக்டேன் 92 பெற்றோலின் புதிய விலை ரூபா 02 குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 309 ரூபாவாகும். லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 286 ரூபாவாகும். 
 இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 188 ரூபாவாகும். மற்ற எரிபொருள் விலைகள் திருத்தப்படவில்லை 
மற்றும் அந்த விலைகள் முந்தைய விலையில் விற்கப்படும்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு நிகராக சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையை 
திருத்தியுள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 பெற்றோலின் புதிய விலை ரூபா 02 குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 309 ரூபாவாகும். லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 286 ரூபாவாகும். 
 இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 188 ரூபாவாகும். மற்ற எரிபொருட்களின் விலைகள் திருத்தப்படவில்லை மற்றும் அந்த விலைகள் முந்தைய விலையில் விற்கப்படும்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 30 நவம்பர், 2024

நாட்டில் வெள்ள அனர்த்தம் காரணமாக நோய்கள் வேகமாக அதிகரிக்கலாம்

தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக எதிர்காலத்தில் டெங்கு, எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுவது வேகமாக 
அதிகரிக்கலாம் என, சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். 
 எதிர்வரும் நாட்களில் வெள்ளம் தணிந்ததன் பின்னர் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது 
அத்தியாவசியமானது
 என, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார நிபுணர் டொக்டர் அனோஜா தீரசிங்க தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.


 


 

வெள்ளி, 29 நவம்பர், 2024

நாட்டில் கல்முனை கிட்டங்கி பாலத்தில் கரை ஒதுங்கிய சடலம் ஒன்று மீட்பு

நாட்டில் கல்முனை கிட்டங்கி பாலத்தில் நீரில் மூழ்கி கரை ஒதுங்கிய நிலையில் ஒருவருடைய சடலம்.29-11-2024. இன்று  
மீட்கப்பட்டது.
கல்முனை -பாண்டிருப்பை வசிப்பிடமாகக் கொண்ட 47 வயதுடைய ஜெகன் என அழைக்கப்படும் நாகலிங்கம் சுரேஷ் என்பவரே இவ்வாறு கரை ஒதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நாவிதன்வெளி – சவளக்கடை மரம் அரியும் ஆலயம் ஒன்றில் வேலை பார்க்கும் இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில்.29-11-2024. இன்று காலை திரவந்தியமேட்டு பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள 
மக்களுக்கு உணவுகளை எடுத்துச் சென்ற கடற்படையினர் குறித்த பகுதியில் சடலம் மிதப்பதை கண்டு அவற்றை கரை சேர்த்துள்ளனர்.
சடலம் மேலதிக விசாரனைகளுக்காக அங்கிருந்து கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதேவேளை, மூன்றாவது நாளாகவும் நாவிதன்வெளி கல்முனை கிட்டங்கி பாலத்தினூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், 
அத்தியாவசிய தேவைகளை மாத்திரம் கருதிற் கொண்டு கடல் படையினரின் படகு சேவை இடம் பெற்று வருகின்றது.என்பது குறிப்பிடத்தக்கது.





 

வியாழன், 28 நவம்பர், 2024

மரண அறிவித்தல் அமரர்ஆறுமுகம் கனகசிங்கம் 28.11.24

 துயர் பகிர்வு-தோற்றம் 04-05-1940-மறைவு-28-11-2024.
யாழ். யாழ் சிறுப்பிட்டி மேற்க்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கனகசிங்கம் அவர்கள்  28.11.2024 வியாழக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
வீ ட்டு முகவரி-
 இராசவீ தி 
சிறுப்பிட்டி மேற்க்கு
 நீர்வேலி 
தகவல்
குடும்பத்தினர்.





மரண அறிவித்தல் அமரர் வேலுப்பிள்ளை கனகலிங்கம் 28.11.24

 துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-28-11-2024.
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர்
வேலுப்பிள்ளை கனகலிங்கம் அவர்கள் .28-11-2024.இன்று  நவற்கிரியில்  காலமானார். அன்னார்  காலம்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதியினரின் பாசமிகுமகனும்  மகனும், துரைசிங்கம், இராசம்மா,
காலஞ் சென்ற வனேஸ்வரி  
மற்றும் குகதாசன், அவர்களின் சகோதரனும் 
ஸ்ரீ ரான்சன் அவர்களின் அன்பு மாமனாரும்  ஆவர்.
அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  29-11-2024.2024. வெள்ளிக்கிழமை 10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
 29-11-2024.2024. வெள்ளிக்கிழமை அன்று ;(முகவரி) நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
மேலதிக தொடர்புகளுக்கு +33652175425(ஸ்ரீ )பிரான்ஸ்
தகவல்
குடும்பத்தினர்.


புதன், 27 நவம்பர், 2024

நாட்டில் சீரற்ற வானிலையால் நால்வர் பலி, ஆறு பேர் மாயம்

நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 04 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  மேலும் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த மோசமான காலநிலை காரணமாக நாட்டின் 18 மாவட்டங்களில் உள்ள 141 பிராந்திய செயலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக
 அறிவிக்கப்பட்டுள்ளது. 
66,947 குடும்பங்களில் 230,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் உதய ஹேரத் தெரிவித்தார்.
மேலும் இந்நிலைமையினால் 8 வீடுகள் முழுமையாகவும், 620 பகுதி வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது .

அமரர் காசிநாதர் காசிநாதர் குலசிங்கம் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட காசிநாதர் குலசிங்கம்  
(செந்தா பஸ் உரிமையாளர்,)அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவஞ்சலி 
27-112024.புதன்கிழமை அன்று அன்னார், காலஞ்சென்றவர்களான  காசிநாதர் தம்பதிகளின் அன்பு மகனுமாவார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
வீ ட்டு முகவரி-
 சிறுப்பிட்டி 
 நீர்வேலி 
தகவல்
குடும்பத்தினர்.


செவ்வாய், 26 நவம்பர், 2024

நாட்டில் மட்டக்களப்பில் வெள்ளத்தால் வயலுக்குள் சிக்கியுள்ள ஏழு விவசாயிகள்

நாட்டில்  மட்டக்களப்பு புல்லுமலை தம்பட்டி மற்றும் மாவடிஓடை வண்ணாத்தி ஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை 
நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து வெளியேறி வீடு திரும்ப முடியாமல் சிக்குண்டுள்ளதாக
 மாவட்ட விவாசய அமைப்பின் தலைவர் ரமேஸ் தெரிவித்தார.
அப்பகுதியில் உள்ள வயல்களில் வேளாண்மை காவலுக்குச் சென்ற மற்றும் வேளாண்மை நடவடிக்கைகளுக்காக புல்லுமலை தம்பட்டி 
வயல் பிரதேசத்தில் 3 விவசாயிகளும் மாவடி ஓடை வண்ணாத்தி ஆறு வயல் பிரதேசத்தில் 4 பேர் உட்பட 7 விவசாயிகள் சென்றிருந்தனர்.
இந்நிலையில், கடும் மழை காரணமாக அந்த பகுதியிலுள்ள குளங்களின் வான்கதவு திறக்கப்பட்டதையடுத்து, வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து, அந்த விவசாயிகள் தமது வாடிகளிலிருந்து வீடுகளுக்கு வெளியேற முடியாமல் சிக்குண்டுள்ளனர்.
இவர்களை மீட்பதற்காக கடற்படையினர் மற்றும் விமானப் படையினரின் உதவி கோரியுள்ளதாகவும் வெள்ள நீர் அதிகமாக 
பாய்ந்தோடுவதால் படகில் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் மேகம் இருள் சூழ்ந்து காற்று வீசுவதால் விமானப்படையின் ஹெலிகொப்டரில் பயணிக்க முடியாதவாறு காலநிலை பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியிருப்பதாக விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், வயல் பகுதிகளில் சிக்குண்டிருப்பவர்களுடனான தொடர்பு தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் இவ்விடயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும்
 வயல் பகுதியில் சிக்ண்டிருப்பவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது 


திங்கள், 25 நவம்பர், 2024

நாட்டில் ஒருகொடவத்தை பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் அடித்துக் கொ லை

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒருகொடவத்தை பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு, வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஒருகொடவத்தை பிரதேசத்தில் இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் பலத்த காயமடைந்த இளைஞன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்
 தெரிவித்தனர்.
இந்த தகராறின்போது காயமடைந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவனும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் ன்பது குறிப்பிடத்தக்கது 





 

ஞாயிறு, 24 நவம்பர், 2024

நாட்டில் வவுனியா சிறைச்சாலையில் உயிரிழந்த கைதி விசாரணைகள் தீவிரப்படுத்திய பொலிஸார்

நாட்டில் வவுனியா சிறைச்சாலையில் தவறான முடிவெடித்து நபர் 
ஒருவர் 23-11-2024.அன்று  உயிரழந்துள்ளார்.
 துஸ்பிரயோக குற்றம் ஒன்றிற்காக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த குறித்த நபர்   சிறைக்கூடத்திற்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இந்நிலையில் உணடியாக சிறைக்காவலர்களால் மீட்கப்பட்ட அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் அவர் முன்னமே சாவடைந்துள்ளதாக வைத்தியசாலையில்
 தெரிவிக்கப்பட்டது. 
சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த 57 வயதான நபரே சாவடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.


சனி, 23 நவம்பர், 2024

நாட்டில் வளர்ப்பு நாயை பிடிக்க ஓடிய இரண்டு வயது குழந்தை ரயிலில் மோதி உயிரிழப்பு

நாட்டில் வளர்ப்பு நாயை பின்தொடர்ந்து ஓடிய 2 வயது 2 மாத ஆண் குழந்தையொன்று கல்கமுவ பிரதேசத்தில் கொழும்பில் இருந்து காங்கசந்துறை நோக்கி சென்ற விரைவு ரயிலில் மோதி துரதிஷ்டவசமாக தாய் முன்னிலையில் உயிரிழந்துள்ளது.
கல்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்ருவகந்த பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இளைய பிள்ளையான எம்.செஜன் ஹசரங்க என்ற குழந்தையே
 உயிரிழந்துள்ளது.
இந்த வீட்டில் இருந்து சுமார் 15 மீற்றர் தொலைவில் வடக்கு புகையிரத பாதை அமைந்துள்ளதால், குழந்தை வெளியில் செல்லாதவாறு வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் வேலி அமைக்கப்பட்டிருந்த 
போதும் குழந்தை அதனை கவிழ்த்துள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
தாய் குழந்தையுடன் கடைக்கு செல்ல தயாராகி கொண்டிருந்த போது, ​​கவர் கீழே விழும் சத்தம் கேட்டது. 
குழந்தை ரயில் தண்டவாளத்தை நோக்கிச் செல்வதைக் கண்ட தாயார், ஓடிச்சென்று அதனை காப்பாற்ற முயன்றாலும், வேகமக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் குழந்தை மீது மோதியது.என்பது குறிப்பிடத்தக்கது.
.

வெள்ளி, 22 நவம்பர், 2024

மரண அறிவித்தல் திரு. குலதுங்கம் மதிசூடி(மதியண்ணா)

துயர் பகிர்வு தோற்றம் -01-01-1958-மறைவு-20-11-2024.
யாழ் அரியாலையைபிறப்பிடமாகவும்  தோப்பு அச்சுவேலியை வாழ்விடமாகவும் தற்போது கனடாவில் வசித்துவந்த  திரு குலதுங்கம் மதிசூடி
(மதியண்ணா)அவர்கள் 20-11-2024.அன்று இறைபாதம் அடைந்தார்.அன்னார் திருமதி நித்தி அவர்களின்  அன்புக்கணவரும் காலஞ்சென்ற திரு திருமதி சின்னத்துரை கமலம் தம்பதியினரின் அன்பு  மருமகனும் 
காலம் சென்ற அனந்தராஜா மற்றும் திருமதி ஜெயலக்சுமி (இலங்கை )
அவர்களின் மருமகனும் திரு பரலோகநாதன் (கனடா ) திரு  சத்திய நாதன் (கனடா ) ஆகியோரின் 
மைத்துனரும் 
 ஜேந்தி (இலங்கை )ஆனந்தி( சுவிஸ்)நகுலன்
 (இலங்கை) ஆகியோரின் சித்தப்பாவும்  குமார்   (இலங்கை) ரமணன்(சுவிஸ் )
ஆகியோரின் மாமனாரும்  ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் பெரும் துயரோடு ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நல்லடக்கம் பற்றிய விபரம் 
கிரியை 
27-11-2024.புதன்கிழமை 
காலை -9.00.மணிக்கு 
நல்லடக்கம் 
27-11-2024.புதன்கிழமை
11-30.மணிக்கு 
கனடா - ஸ்காபரோவில்
நடைபெறும்
 தகவல்: குடும்பத்தினர். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!



மகன் கத்தியால் குத்தியதில் கனடா ஸ்காபரோவில் தந்தை பலி மகன் கைது

கனடா - ஸ்காபரோவில் மகன் கத்தியால் குத்தியதில் தந்தை உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் யாழ் அரியாலையை சேர்ந்த 66 வயதுடைய குலதுங்கம் மதிசூடி என்பவரே உயிரிழந்தார் என
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 11 மணியளவில் இந்த கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து 32 வயதுடைய மகன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.என்பதாகும்


வியாழன், 21 நவம்பர், 2024

நாட்டில் வன்னிவிளாங்குளம் பகுதியில் விபத்தில் இரு இளைஞர்கள் பலி-ஒருவர் படுகாயம்

நாட்டில் முல்லைத்தீவு, மல்லாவி - வன்னிவிளாங்குளம் 
பகுதியில் 20-11-2024.அன்ரு  மாலை இடம்பெற்ற விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மாங்குளத்திலிருந்து மல்லாவி நோக்கி வந்த மோட்டார் 
சைக்கிளும் மல்லாவி பகுதியிலிருந்து 
மாங்குளம் 
நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது வன்னிவிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் விதுசன் (வயது 20), மாங்குளம் - புதிய கொலணி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் விதுர்சன் (வயது 20) ஆகிய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.




 

புதன், 20 நவம்பர், 2024

மன்னார் வைத்தியசாலையில் பத்து வருடங்களுக்குப் பின் பிரசவம்: தாயும் சேயும் மரணம்

மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு, 
.20-11-2024 புதன்கிழமை . காலை மன்னார் மாவட்ட பொது 
வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா தெரிவித்தார்.
 மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் தாய் வேணுஜா என அழைக்கப்படும் ஜெகன் ராஜ சிறி திருமணமாகி 10 வருடங்களாக பிள்ளை இல்லாத நிலையில்.19-11-2024. செவ்வாய்க்கிழமை பிரசவத்திற்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று 
விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை யின் போது தாயும் சேயும் மரணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் உறவினர்கள், பெற்றோர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்றினைந்து மகப்பேற்று விடுதியில் போராட்டம் நடத்திய நிலையில் வைத்தியசாலையில் பதற்றமான 
நிலை ஏற்பட்டிருந்தது
 இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் நீதவான் இறந்த 
தாய் மற்றும் சேயின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காகவும் மேலதிக விசாரணைகளுக்காக வும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.
 இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட விசேட குழு புதன்கிழமை (20) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை
 முன்னெடுத்து வருகின்றது.
 மேலும் மாவட்ட ரீதியாக விசாரணைகள் முன்னெடுக்கப் படவுள்ளதோடு வடமாகாண சுகாதார அமைச்சிடமும் விசாரணைகளை முன்னெடுக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் தவறிழைத்தமை கண்டுபிடிக்கப்பட்டால் உரியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார் .
என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 19 நவம்பர், 2024

சுவிற்சர்லாந்தில் வாகன விபத்தில் அகலமரணம் திரு. திருலோகபாலகன் கேசவன்

துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-19-11--2024.
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும்சுவிசை வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர்
திருலோகபாலகன் (தமிழ் காவலர்) அவர்களின் மகன் கேசவன் 
அவர்கள் .19-11-2024.அன்று சுவிற்சர்லாந்தில் அகலமரணம் 
சுவிற்சர்லாந்து Valais மாகாணத்தில் உள்ள Leuk என்ற இடத்தில் 27 வயது சாரதி ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். 
திருலோகபாலகன் பாப்பன்  தம்பதிகளின் அன்பு மகனுமாவார் 
சஸ்டன் நோக்கிச் செல்லும் சாலையில் காருக்கும் எதிரே வந்த டிரக் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 
விபத்து நடந்த இடத்திற்கு அவசரகால சேவைகள் வந்தபோது, ​​​​ஓட்டுனர் இறந்ததை மட்டுமே அவர்களால் தீர்மானிக்க முடிந்தது.
பலியானவர் 27 வயதுடைய இலங்கை பிரஜை என Valais contonal பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் தாக்கத்தால் மேலும் இரண்டு வாகனங்கள் விபத்தில் சிக்கியது. மூன்று பயணிகள் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு 
செல்லப்பட்டனர்.
 விபத்துக்கான சரியான காரணம் குறித்து அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியது.என்பது குறிப்பிடத்தக்கது 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல்
குடும்பத்தினர்.