siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 27 டிசம்பர், 2021

அமரர் தம்பு. துரைராஜாவின்19ம் ஆண்டு நீங்காத நினைவுகள் 27.12.2021

மலர்வு .15-.04-1926. உதிர்வு .14-01.2004
திதி -27-12-2021
யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமா​வும் வசிப்பிடமா​கவும் மாகக் கொண்ட
அமரர் ,தம்பு துரைராஜா.அமரர் துரைராஜா-சிதம்பரம். (பூரணம்).அமரர் துரைராஜா தங்கரத்தினம்.
தோற்றம் 06-05-1949-மறைவு-23-01-2005.(தங்காள் ) அமரர் இராசையா கனகசபாபதி.தோற்றம் 01-04-1949- (தேவர் பிறப்பிடம் கோண்டாவில் ).வாழ்ந்த இடம்நவற்கிரி.)அகியோரின் 
 நீங்காத நினைவுடன் பத்தொன்பதாவது ஆண்டு
 நினைவஞ்சலி.(திதி )27-12-.2021.இன்று
பத்தொன்பது ஆண்டுகளாய்
வளர்ந்து நிற்பது உங்கள் பிரிவின் சோகம்
எம் இதயம் கவர்ந்த செல்வங்களே  ஏன் - இந்த
உலகம் கடந்து சென்றீர்கள்
அனைவராலும் ஐயா தாத்தா என அழைக்கபட உங்கள்
நீங்காத நினைவுகளுடன்
பத்தொன்பது ஆண்டுகளல்ல இன்னும் ஓராயிரம் ஆண்டுகள்
நாம் வாழ்ந்தாலும்..
வாழும் காலமெல்லாம் உன் பிரிவின் ஏக்கம் தொடரும்…
நினைவு அஞ்சலி
காலங்கள் கடந்தாலும்
ஆண்டுகள் சென்றாலும்
எங்கள் மனதில்
என்றும் நிலைத்திருப்பாய்
அன்பின் அடையாளமாக
அறத்தின் புதல்வனாக
தர்மத்தின் தலைவனாக
காலத்தை வென்ற தலைமகனாக
தம்பு- மாணிக்கத்தின்
அன்பில் சிவமாக
என்றும் எங்களில்
வாழ்கிறீர்கள் அன்பின்ஐயா
என்றென்றும் எங்கள் தெய்வம் நீங்கள்
…அன்பும் ஆற்றலும்
பண்பும் பாசமும்
உறுதியும் உன்னதமும்
உண்மையும் உழைப்பும்
உற்ற தோழமையும்
இனிக்கும் இன்முகமும்
கொண்ட ஈடுஇணையற்ற
எங்கள் தந்தையே !
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகிறோம் ஐயா
ஓம் சாந்தி ஓம் சாந்தி சாந்தி,,,
உங்கள் பிரிவால் என்றும் வாடும்
அன்புப் பிள்ளைகள் , பிள்ளைகள்,
சகோதர்கள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள் புட்டப்பிள்ளைகள்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
தகவல்:,குடும்பத்தினர்.
அமரர் துரைராஜா-சிதம்பரம். (பூரணம்)
எங்கள் அம்மாவே ஆண்டுகள் பல கடந்தும் 
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை..அன்பையும் பண்பையும் பொழிந்த நீங்கள்
ஒரு நொடியில் மறைந்ததேன்?
இனி எப்போது எம் முகம் பார்ப்பாய்?
 உன் புன்முகம் பார்க்க
ஏங்கித் தவிக்கின்றோம்!
தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய் உங்களுக்காய் அழுகின்றோம்...உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இன்றும் எங்கள் விழிகளில் வழிகின்றதே
 கண்ணீர்த்துளிகள்...உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்


 அமரர் இராசையா கனகசபாபதி.தோற்றம் 01-04-1949- (தேவர் பிறப்பிடம் கோண்டாவில் ).வாழ்ந்த இடம்நவற்கிரி.)
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில் நடந்ததென்ன
நினைத்து பார்க்கு முன்னே நினைக்காமல் போனதென்னநிஜம்தானா என்று நினைக்கின்றோம் தினமும்
திக்கற்று தவிக்கின்றோம் திரும்பி வரமாட்டிரேஎங்கள் இதயதுடிப்பில் அன்பு கொண்ட உம் முகம்
அருகினில் இருப்பது போல் உணர்கின்றோம்அன்பிற்கு இலக்கணமாக இருந்த எங்கள் அம்மாவே
ஆயிரம் உறவுகள் அணைத்திட இருந்தாலும்
உம்மை போன்று அன்பு காட்ட யாரும் இல்லையம்மா...அன்பால் என்றும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...உங்கள் ஆத்ம சாந்திக்காக
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்தகவல்: குடும்பத்தினர்



.அமரர் துரைராஜா தங்கரத்தினம்.
தோற்றம் 06-05-1949-மறைவு-23-01-2005.(தங்காள் ) 
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
 நீங்கள் இன்றிஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
 வளர்த்தீர்கள்!எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
 உன் நினைவு எமை விட்டு அகலாது நாங்கள் உன்னை மறந்தால்
 தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் எண்கள் அக்காவே!!!உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகிறோம் ஐயா
ஓம் சாந்தி ஓம் சாந்தி சாந்தி,,,
உங்கள் பிரிவால் என்றும் வாடும்

அன்புச் சகோதர்கள் மருமக்கள்
பெறாமக்கள் 
பேரப்பிள்ளைகள் புட்டப்பிள்ளைகள்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
தகவல்:,குடும்பத்தினர்.

வெள்ளி, 24 டிசம்பர், 2021

இலங்கையில் இன்றைய நாளின் வானிலை தொடர்பின் செய்தி

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலைநிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் 
தெரிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக்கூடிய சாத்தியம் 
காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



வியாழன், 23 டிசம்பர், 2021

நாட்டி மின் துண்டிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபை விடுத்துள்ள செய்தி

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாளொன்றில் சுமார் 45 நிமிடங்கள் மின்சார துண்டிப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.மின்பிறப்பாக்கி புனரமைக்கப்படும் வரை இன்னும் சில நாட்களுக்கு நாளாந்த மின் துண்டிப்பு தொடரும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அவசியம் கருதி, தினசரி மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணிவரை இந்த மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.எவ்வாறாயினும், கோளாறு ஏற்பட்டுள்ள மின்பிறப்பாக்கியிலிருந்து தொடர்ச்சியாக எண்ணெய் கசிவு ஏற்படுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமார மானவடு தெரிவித்துள்ளார்.
மேலும், மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், தேசிய மின் விநியோகக் கட்டமைப்பில் சமநிலையை பேணமுடியாததால் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.அத்துடன், கோளாறை சீர்செய்வதற்கு எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பதை உறுதியாகக்கூற முடியாது என்றும் அவர் மேலும் 
தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



புதன், 22 டிசம்பர், 2021

நாட்டில் எரிபொருளுக்கான விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு

மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலின் கோரிக்கைக்கு அமைய, நேற்றுமுன்தினம் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை விடவும், எரிபொருளுக்கான விலை மேலும் அதிகரித்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சருக்கு அனுப்பிய கடித்தை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.மத்திய வங்கி ஆளுநரின் கடிதத்தின் பிரகாரம், ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 35 ரூபாவாலும், ஒரு லீட்டர் டீசலின் விலையை 24 ரூபாவாலும், ஒரு லீட்டர் மண்ணெண்ணையின் விலையை 11 ரூபாவாலும் அதிகரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
எனினும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 20 ரூபாவாலும், ஒரு லீட்டர் டீசலின் விலையை 10 ரூபாவாலும், ஒரு லீட்டர் மண்ணெண்ணையின் விலையை 10 ரூபாவாலும் நேற்றிரவு அதிகரிக்கப்பட்டிருந்தது.எரிபொருள் பயன்பாட்டை குறைத்து, அந்நிய செலாவணியை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தனது பரிந்துரையில் கூறியிருந்தார்.
இதற்கமைய – ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 15 ரூபாவாலும், ஒரு லீட்டர் டீசலின் விலையை 14 ரூபாவாலும், ஒரு லீட்  டர் மண்ணெண்ணையின் விலையை 01 ரூபாவாலும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 21 டிசம்பர், 2021

அன்பு மனைவிக்கு யூடியூப் உதவியுடன் பிரசவம் பார்த்த கணவர்

தமிழ்நாட்டின், ராணிப்பேட்டை மாவட்டம், நெடும்புலி கிராமத்தில் யூடியூப் பார்த்து மனைவிக்குப் பிரசவம் பார்த்த கணவர் உள்ளிட்ட இருவரை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.மேற்படி பகுதியைச் சேர்ந்த 32 வயதான நபரொருவரே 28 வயதான தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்துள்ளதாக தெரியவந்துள்ளது. இப்பெண்ணுக்கு கடந்த 13ஆம் திகதி பிரசவ திகதியாக மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
எனினும், அத்திகதியில் பிரசவ வலி ஏற்படவில்லை. 
இந்நிலையில், 19-12-2021.அன்று பிற்பகல் 3 மணியளவில் அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்நிலையில், அப்பெண்ணின் கணவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், தனது சகோதரியின் உதவியுடன் யூடியூப் காணொளியை பார்த்து குழந்தையை பிரசவிக்க செய்துள்ளார் என்றும் விசாரணைகளின் மூலமாக காவல்துறையினர்
 கண்டறிந்துள்ளனர்.
பின்னர் கருவிலிருந்த ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. குழந்தையைப் பிரசவித்த பெண்ணும் அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதில் உடல்நிலை கவலைக்கிடமானதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதன்பின்னர், குறித்த வைத்தியசாலையின் வைத்தியர் பெண்ணின் கணவர்மீது காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் பெண்ணின் கணவரும் அவரது சகோதரியும் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலை சேர்க்க வேண்டும் என்றும் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



சனி, 18 டிசம்பர், 2021

மரண அறிவித்தல் திருமதி தனையா புவனேஷ்வரி (புவனேஸ் ) 18.12.21

தோற்றம்  08-06-1932 -மறைவு  18-12-2021 
யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்.நவற்கிரி புத்தூரை  வதிவிடமாகவும்  தற்போது தோப்பில் வசித்துவந்த  திருமதி தனையா புவனேஷ்வரி (புவனேஸ் )  
அவர்கள் 18.12.2021. சனிக்கிழமை  அன்று இயற்கை எய்தியுள்ளார் அன்னார் காலம்சென்ற வேலுப்பிள்ளை சின்னாச்சி ஆகியோரின் பாசமிகுமகளும்   
காலம்சென்ற தனையா வின் அன்பு மனைவியும் விஜயலக்சுமி பார்த்தசாரதி  நீதிராஜா  தயாநிதி  சற்குணநிதி  தனேஷ் 
ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவர் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின்
 இறுதிக்கிரியை 19-12-2021 ஞாயிற்றுக்கிழமை  அன்று மு.ப 11:30 மணியளவில்   அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் தோப்பு  இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெறும்
தகவல் குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை ,பூட்டப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




புதன், 15 டிசம்பர், 2021

தெற்கு நெடுஞ்சாலையில் இடம் பெற்ற பாரிய விபத்தில்; தந்தையும்,மக்களும் பலி

இலங்கை தெற்கு அதிவேக நெடுஞ்சாசலை மில்லினிய பகுதியில் காரொன்று விபத்துக்குள்ளானதில் தந்தை, மகள் இருவரும் 
உயிரிழந்துள்ளனர்.
குறித்த காரில் பயணித்த 39 வயதுடைய தந்தையும் 4 வயது மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளதுடன் மேலதிக விசாரணையையும் 
முன்னெடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





இந்துபுரம் பகுதியில்ஏ 9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் உயிரிழப்பு

நாட்டில்முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரிவுக்குட்பட்ட ஏ 9 வீதியில் இந்துபுரம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.14-12-2021.அன்று இரவு பத்து மணியளவில் வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த போது விபத்து காரணமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் திருமுறிகண்டி வசந்தநகர் பகுதியை சேர்ந்த 61 வயதுடைய  சுப்பிரமணியம் முருகேசு (சந்திரன்) என்பவராவார்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாங்குளம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



நாட்டில் தடுப்பூசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டமையை உறுதிப்படுத்தும் சுகாதார அட்டையை லெமினேட் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போறைய நிலைமையை அமைய நான்காவது தடுப்பூசி செலுத்த வேண்டிய தேவை ஏற்படலாம் என்பதால், சுகாதார அட்டையை
லெமினேட் செய்ய வேண்டாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.கோவிட் தடுப்பூசி அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
தற்போது வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி அட்டை எடுத்துச் செல்வதற்கு ஏற்றதல்ல. ஒரு தரவுத்தளத்தில் தகவல் சேர்க்கப்படும் வரை மற்றும் QR குறியீடு அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் வரை தடுப்பூசி அட்டையை பாதுகாப்பாகப் 
பயன்படுத்த வேண்டும்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


திங்கள், 13 டிசம்பர், 2021

கண்டியில் எரிவாயு வெடித்து பெண் உயிரிழப்பு.நஷ்ட்டஈடு கோரும் குடும்பத்தினர்

இலங்கை கண்டியில் சமையல் எரிவாயு வெடித்தமையினால் காயங்களுக்கு உள்ளான பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் உட்பட குடும்பத்தினர் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய 10 கோடி ரூபாய் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அவரது கணவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 51 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயாவார். மாத்தளை வில்கமுவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், தனது பிள்ளைகளின் மேலதிக கல்விக்காக குண்டசாலை பிரதேசத்திற்கு வந்து தற்காலிகமாக தங்கியிருந்த நிலையில், எரிவாயு வெடித்து தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் அல்லது எவ்வித பொறுப்புவாய்ந்த நிறுவனங்களும் தேடி பார்க்கவில்லை என குடும்பத்தினர் 
தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



மாத்தளை வில்கமுவ வில் எரிவாயு அடுப்பு வெடித்து பெண் உயிரிழப்பு.10 கோடி இழப்பீடு கோரும் கணவர்

நாட்டில்  மாத்தளை –வில்கமுவ வில் எரிவாயுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவத்தில் எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவரினால் சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர தீர்மானித்துள்ளதாக 
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு அவர் வழங்கி செவ்வியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களினால், 10 கோடி ரூபா இழப்பீடு கோரி குறித்த வழக்கினை தாக்கல் செய்யவுள்ளதாகவும் மேலும் 
தெரிவித்துள்ளார்.
மாத்தளை – வில்கமுவ பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.தமது பிள்ளையின் மேலதிக கற்றல் செயற்பாடுகளுக்காக குண்டசாலை பகுதியில் உள்ள தற்காலிக வீடொன்றில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கமோ, அதனுடன் தொடர்புடைய பொறுப்பு வாய்ந்த நிறுவனமோ எந்தவொரு ஆய்வினையும் இதுவரை நடத்தவில்லையென உயிரிழந்த பெண்ணின் கணவர் மேலும் குற்றம் சுமந்தியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

20 வயதுக்கு மேற்பட்ட சகலரும் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.அதற்கமைய, இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்று 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள தகுதியுடை நபர்கள் எந்தவொரு தடுப்பூசி நிலையத்திற்கும் சென்று மூன்றாம் கட்ட
தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் அறிவித்துள்ளார்.முதல் இரு கட்டங்களாகவும் அஸ்ட்ரசெனகா, சினோபார்ம், ஸ்புட்னிக் மற்றும் மொடர்னா என எவ்வகை தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களும் 
மூன்றாம் கட்டமாக பைசர்
 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.
 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 10 டிசம்பர், 2021

நாட்டில் 1 Kg அரிசியின் விலை 500 ரூபா வெளியான அதிர்ச்சித் தகவல்.

இலங்கையில் ஒரு கிலோ கிராம் அரிசியில் விலை 500 ரூபாயை விடவும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குடும்ப உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச (Shashindra Rajapaksa) தெரிவித்துள்ளார்.நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், முன்னதாக ஒரு தொன் யூரியா 278 அமெரிக்க டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டது.
 இந்த நிலையில் இன்று ஒரு டன் யூரியாவின் 
விலை 1282 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
அந்த விலையில் யூரியாவை கொண்டு வந்து விவசாயம் செய்தால் ஒரு கிலோ அரிசி 500 ரூபாயை தாண்டும் என்றும் அவர்
 மேலும் தெரிவித்துள்ளார்.
 09-2021.அன்று  இலங்கையில் 25 கிலோ யூரியா மூட்டை ஒன்று 9000 ரூபாய்க்கு மேலாக விற்பனை செய்யப்படுகிறது எனவும் அவர் இதன் போது 
சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



மரண அறிவித்தல்திரு சின்னப்பு சுப்பிரமணியம் (ஏழாலை மணியம்)10.12.21

பிறப்பு-15 01 1940-இறப்பு-10 12-2021
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு சுப்பிரமணியம் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமார்(சுவிஸ்), தேவலதா(கனடா), பிரேமலதா(பிரான்ஸ்), உதயராசா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான நடராஜா, திருநாவுக்கரசு, விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷ்ணலதா, சர்வானந்தம், ஜெகநாதன், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிவேக்(சுவிஸ்), விநேக்(சுவிஸ்), நவகீர்தன்(கனடா), சாஜினி(கனடா), விதுஷிகன்(கனடா), தர்சிகன்(பிரான்ஸ்), பிரியந்தி(பிரான்ஸ்), ரதுசன்(பிரான்ஸ்), ஸ்ரீராம்(ஐக்கிய அமெரிக்கா), ராகவி(ஐக்கிய அமெரிக்கா), பிரணவி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் 
அன்புத் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சிறுப்பிட்டி மேற்கு இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி 
மேற்கு பத்தகலட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 உதயகுமார் - மகன்Mobile : +41793618700 தேவலதா - மகள்Mobile : +14379924802 பிரேமலதா - மகள்Mobile : +33753607120 பிரேமலதா - மகள்Mobile : +94764893365 உதயராசா - மகன்Mobile : +18622242945 உதயராசா - மகன்Mobile : +94767303584

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 7 டிசம்பர், 2021

மரண அறிவித்தல்திரு அப்பாப்பிள்ளை ராசலிங்கம் 07.12.21

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட அப்பாப்பிள்ளை இராசலிங்கம் அவர்கள் 07-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாப்பிள்ளை சிவஞானம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகநாதன்(அளவெட்டி), தவபூபதி(தொல்புரம்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,சுதர்சினி(சுதா) 
அவர்களின் அன்புக் கணவரும்,ஆறுமுகசாமி(கனடா), காலஞ்சென்ற செல்வநாயகம்(செல்வம்), ஞானகிருஸ்ணசாமி(தவம்- இலங்கை), பூமாதேவி(ஆச்சி- கனடா), காலஞ்சென்ற இராசாத்திஅம்மா(புஸ்பம்- ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிவமணி(கனடா), 
சறோஜாதேவி(கனடா), ராதாதேவி(இலங்கை), 
ஆறுமுகநாதன்(கனடா), பாலசுப்பிரமணியம்(ஜேர்மனி), செல்வநாதன்(கனடா), சுதர்சன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,வேணி(சுவிஸ்) அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Note:- இறுதிநிகழ்வுகளில் கலந்துகொள்ள வருபவர்கள் covid-19 தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சி பத்திரத்தை கட்டாயமாக எடுத்து வரவும்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 10 Dec 2021 2:00 PM - 4:00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Saturday, 11 Dec 2021 9:00 AM - 11:00 AM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 12 Dec 2021 8:30 AM - 11:30 AM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
கிரியை
Get Direction
Monday, 13 Dec 2021 8:00 AM - 12:30 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
தொடர்புகளுக்கு
 சுதர்சன் - மைத்துனர்Mobile : +41765743394 செண்பகவரதன் - உறவினர்Mobile : +41791313744
. எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




திங்கள், 6 டிசம்பர், 2021

நாட்டில் புதிய அடையாளத்துடன் சந்தைக்கு வரும் எரிவாயு

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் வழிகாட்டல்களுக்கு உட்பட்டு சந்தைக்கு வெளியிட லிட்ரோ கேஸ் நடவடிக்கை
 எடுத்துள்ளது.
அதன்படி, புதிய சிலிண்டர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு பின்னணியில் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் சின்னத்துடன் பொலித்தீன் சீல்
 வைக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை, இன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாயு கசிவு காரணமாக வெடிப்புச் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. காலி, தல்கம்பொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 05-12-2021.அன்று  எரிவாயு அடுப்பு 
வெடித்துள்ளது.
பன்னல, ஹெத்திரிப்புவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் உள்ள எரிவாயு அடுப்பு நேற்று பிற்பகல் வெடித்து சிதறியுள்ளது.
இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. மாத்தளை, யடவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் தீப்பற்றிய நிலையில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்
.
இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


ஞாயிறு, 5 டிசம்பர், 2021

இலங்கையர் பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்டமைக்கான காரணம்

பாகிஸ்தானில் பணிபுரிந்து வந்த இலங்கையர் கொடூரமாக கொல்லப்பட்டமைக்கான காரணம் குறித்து அந்நாட்டின் உள்ளூர்வாசிகள் வெளிப்படுத்தியுள்ளதாக மேற்கோள்காட்டி செய்திகள் 
வெளியாகியுள்ளன.
உயிரிழந்த நபர் சியல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில் அவரது அலுவலக சுவர் அருகே தெஹ்ரீக் – இ – லபைக் என்ற அமைப்பின் மதப் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.அதை குறித்த நபர் கிழித்து எறிந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இதை பார்த்த தொழிற்சாலை ஊழியர்கள் அந்த அமைப்பினரிடம் தெரிவித்துள்ளனர்.
உடனே குறித்த அமைப்பைச் சேர்ந்த பெருமளவானோர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளதுடன், உயிரிழந்த நபரை அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து வந்து கண்மூடித்தனமாக தாக்கியதுடன் உயிரோடு தீ வைத்து எரித்துள்ளதாக
 கூறப்படுகிறது.
இவ்வாறான நிலையில் உயிரிழந்தவர் மிகவும் ஒழுக்கமானவர் எனவும், கடின உழைப்பாளி என அவருடன் நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



சனி, 4 டிசம்பர், 2021

மரணஅறிவித்தல் திருமதி செல்வராஜா மனோன்மணி 04.12.2021

யாழ்  சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமான
திருமதி செல்வராஜா மனோன்மணி அவர்கள்  04 12 2021 அன்று  இயற்கை எய்தியுள்ளார்
அன்னார் காலம்சென்ற தம்பிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்.
காலம் சென்ற செல்வராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்.
குணரத்தினர் (தாயகம்) கந்தசாமி (யேர்மனி) ஆகியோரின் 
பாசமிகு அக்காவும்.
சிவகுசா (பிரான்ஸ்) கலாதேவன் (சுவிஸ்)கலாறஞ்சினி ( யேர்மனி) கலாரூபன் (தாயகம்) ஆகியரின் அப்புத்தாயாரும்,
விஜயலச்சுமி (தாயகம்) காலஞ்சென்ற இரசேஸ்வரி யேர்மனி) காலஞ்சென்ற தர்மலிங்கம் (தாயகம்) இரத்தினம் (தாயகம்) ஆகியோரின் 
மைத்துனியும்
திருக்கயிலைநாதன் (பிரான்ஸ்) வசிகரன் ( யேர்மனி)ஜெயா (தாயகம்)கிருஸ்ணவேனி (சுவிஸ்)லீலாநந்தன் (லண்டன்) தயாநந்தன் (லண்டன் )சுகிர்தா (தாயகம் ) சிவேதன்( சுவிஸ்)
நித்யா, ( யேர்மனி) அரவிந்தன், ( யேர்மனி) மயூரன் ( யேர்மனி)ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
நேஷான் ( யேர்மனி) யோகிதா ( யேர்மனி) ,வந்தனா ( யேர்மனி) கலைவாணி (லண்டன்) சமிதா (லண்டன்) வசந்தரூபன் (தாயகம்) அரங்கநாதன் (பிரான்ஸ்) லோயினி(தாயகம்)வனிதா(தாயகம்) சுவர்ணா(பிரான்ஸ்) தீபன் (தாயகம்) புவி (தாயகம்) தர்சா(தாயகம்) மைதிலி(தாயகம்)ஆகியோரின் 
சிறியதாயாரும்
சிந்திகா (பிரான்ஸ் )கௌசிகா (பிரான்ஸ் )துவாரகன் (பிரான்ஸ் ) பிரவிந்த் (சுவிஸ் )அபிசா (சுவிஸ் )வர்ணிகா ( யேர்மனி) மதுசாயினி(தாயகம்) தஸ்மிகன் (தாயகம்) பூஜிதா (லண்டன் )ஜானுயா (லண்டன்) தியா (லண்டன் ) சசியா )லண்டன் )கர்ணிகா )தாயகம் ) கவினுகா (தாயகம் )சஜித் ( யேர்மனி) மித்திரன் ( யேர்மனி) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்
04.12.2021 பார்வைக்கு‌ வைக்கப்பட்டு முகவரி
Présentation du corps en salon
samedi 04 décembre 2021 à 16h00
CHAMBRE FUNÉRAIRE
41 avenue du Pont de Tasset
74960 MEYTHET
>>>>>>>
09.12.2021 காலை 9 மணியில் இருந்து 13 மணியளவில் இறுதிக்கிருகைகள் இடம்பெறும் முகவரி
Cérémonie à la chambre funéraire le jeudi 09 décembre 2021 à 09h00
Cérémonie Religieuse ( au crématorium )
jeudi 09 décembre 2021 à 13h00
Crématorium de ANNECY
route du Cimetière des lles
74000 ANNECY

Crémation
jeudi 09 décembre 2021 à l’issue de la cérémonie
Crématorium de ANNECY
route du Cimetière des lles
74000 ANNECY
Remise de l’urne à la famille
>>>>>>>>
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகுசா (பிரான்ஸ்) ‎00 3369 9376200
கலாதேவன் (சுவிஸ்) ‎00 4176 3855657
றஞ்சி (யேர்மனி) 0049 174 6031406
கலாரூபன் (தாயகம் ) 00 9477 6975545

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

வெள்ளி, 3 டிசம்பர், 2021

புகையிரதத்துடன் கப் ரக வாகனம் ஒன்று மோதி விபத்து ஒருவர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் கப் ரக வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில்
 03-12-2021.இன்று  ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்தில் தவசிகுளம், கொடிகாமம் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சூசைநாதன் பிரதீபன் என்பவரே இவ்வாறு
 மரணமடைந்துள்ளார்.
மஞ்சள் நிற சமிக்கை விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்த போது குறித்த வாகனம் கடவையை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து
 இடம்பெற்றுள்ளது.
இதன்போது விபத்தில் படுகாயமடைந்தவரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் மரணமடைந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல் துறை மேற்கொண்டு 
வருகின்றனர்.  

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>