siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 30 செப்டம்பர், 2020

மரண அறிவித்தல் குவைத் மன்னர் ஷேய்க் சபா 29-09-20

 குவைத் நாட்டின் மன்னர் ஷேய்க் சபா அல் அஹமட் அல் சபா தனது 91வது வயதில் 29-09-20.அன்று  காலமானார்.
அமெரிக்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் மரணமானார்.
2006 – 2020 வரை குவைத்தின் மன்னராக இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து முடிக்கான இளவரசர் ஷேய்க் நவாவ் அல் அஹமட் அல் சபா மன்னரானதாக அந்நாட்டு அமைச்சரவை 
தெரிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


 

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

எருக்கலம் பிட்டியில் 952 கிலோ மஞ்சள் கட்டி மூடைகள் பொலிஸாரால் மீட்பு.

மன்னார்-  எருக்கலம் பிட்டியில் 952 கிலோ மஞ்சள் கட்டிகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு பதுக்கி வைக்கபட்டிருந்த 952 கிலோ மஞ்சள் கட்டிகள் அடங்கிய மூடைகளை மன்னார் எருக்கலம் பிட்டி பகுதியில் வைத்து .28-09-20 அன்று திங்கட்கிழமை பொலிஸார் மீட்டுள்ளதோடு, சந்தேகநபர் ஒருவரும் கைது
 செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எருக்கலம் பிட்டி பகுதியில் கடற்படை புலனாய்வு தகவலுக்கு அமைய குறித்த மஞ்சள் மூடைகள் மீட்கப்பட்டுள்ளன.கடற்படையினருக்கு 
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின் பணிப்பில் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு 
பொறுப்பதிகாரி குமார பள்லேவல 
தலைமையிலான பொலிஸ் பிரிவினரே குறித்த மஞ்சள் மூடைகளை கைப்பற்றி உள்ளனர்.மேலும், மன்னார் எருக்கலம்பிட்டியை
 சேர்ந்த 52 வயதுடைய
 சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணையின் பின் சுங்கத் திணைக்களத்திடம் கைப்பற்றப்பட்ட மஞ்சளை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பரந்தன் பகுதியில் ரயிலுடன் மோதி .. ஒருவர் உடல் சிதறிப் பலி.

யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.கிளிநொச்சி 
பரந்தன் பகுதியில் வைத்து.29-09-20. இன்று குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்துக்குள்ளான நபரின் சடலம்
 அடையாளம் காண முடியாத அளவு உருகுலைந்த நிலையில் காணப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>இலங்கையில் நெருக்கடி அடையும் போதை பொருள் விவகாரம்?

 

இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமையான பெற்றோரின் குழந்தைகள் பாடசாலையை விட்டு இடைவிலகும் அபாயமுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அத்தகைய மாணவர்களை பாடசாலை கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத் தெரிவித்துள்ளார்.
பாடசாலைக்கு செல்லவேண்டிய வயதில் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ள மாணவர்கள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் 
அவர் கூறியுள்ளார்.
இதன்போது கண்டறியப்படும் மாணவர்களை மீண்டும் பாடசாலைகளில் இணைப்பது தொடர்பில் கல்வியமைச்சினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத் 
குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவர்கள் தொடர்பிலான விசேட விசாரணைகளை மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையான பெற்றோரின் குழந்தைகளே அதிகளவில் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ளமை தெரியவந்துள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத் தெரிவித்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

மரண அறிவித்தல் திருமதி பஞ்சலிங்கம் பத்மாவதி 27.09.20

மறைவு .27.09.2020
யாழ் தோப்பு ,அச்சுவேலியை பிறப்பிடமாகவும் திக்கம் மாதோட்டை யை வசிப்பிடமாகவும் கொண்டதிருமதி பஞ்சலிங்கம்  பத்மாவதி,  27.09.2020,
அன்று காலமானர்
அன்னாரின் இறுதிக்கிரியை 28-09-2020 திங்கட்கிழமை அன்று  அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர்   இந்து மயானத்தில் பூதவுடல்
 நல்லடக்கம்  நடைபெறும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் கணவர்  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்அணை வருக்கும் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
தகவல்: குடும்பத்தினர் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

குருநகரில் வீடுடைத்து கொள்ளை சிறுவன் உட்பட இருவர் கைது

 


யாழ் குருநகரில் வீட்டில் யாரும் இல்லாத போது, வீடுடைத்து 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் 17 வயது சிறுவன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் நகைகளை வாங்கி அடகு வைத்த 
ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், கொள்ளையடித்த நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த 17-09-20.அன்று முற்பகல் இடம்பெற்றது. வீட்டில் இருந்தவர்கள் வேலைக்குச் சென்றிருந்த வேளை, வீடுடைத்து நகைகள் கொள்ளையிடப்பட்டன.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது திருநகரைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்துக் கொடுத்த 
மற்றொருவரும் கைது செய்யப்பட்டார் என்று 
பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர்கள் இருவரும். 27-09-2020.இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

விபத்தில் சிகிச்சை பலனின்றி திருமலை ஒருவர் உயிரிழந்துள்ளார்

திருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
26-09-20.அன்று இரவு, 9.45 மணியளவில் திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள பல நோக்கு கூட்டுறவு சங்க சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதி சொகுசு வாகனம் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதுண்ட பின்னர் அருகிலுள்ள மின்கம்பத்துடன் 
மோதுண்டுள்ளது.
இதன்போது, முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>காத்தான்குடியைச் சேர்ந்த சிறுவன் விபத்தில் .உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தின்போது வீதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறுவன் ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.
26-09-20.அன்று .மாலை இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 12வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது தந்தையுடன் வியாபாரா நடவடிக்கைக்காக வருகை தந்த குறித்த சிறுவன், யூதா ததேயு தேவாலயத்தின் முன்பு வியாபார நடவடிக்கையின்போது, முச்சக்கர வண்டி சாரதியுடன் உரையாடிக் கொண்டிருந்த போது மட்டக்களப்பு நோக்கி வருகை தந்த கார் சிறுவனை 
மோதியுள்ளது.
குறித்த விபத்தின்போது சிறுவன் ஸ்தலத்திலே உயிரிழந்தான். இதன்போது முச்சக்கரவண்டியும் சேதத்துக்குள்ளாகியதுடன் காரும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>தொண்டமனாற்றில் முகம் கழுவ சென்றவர் திடீர் மரணம்

 

தொண்டமனாற்றில் கிணற்றடியில் முகம் கழுவச் சென்ற போது, மயங்கிச் சரிந்த குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் .27-09-20.இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தொண்டமனாறு கடற்கரை வீதியில் வசிக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த அன்ரன் ஜோர்ஜ் (வயது-35) 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிணற்றடிக்குச் சென்ற அவர் மயங்கிச் சரிந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவரை உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளார் என்று 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் மந்திகை வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>

சனி, 26 செப்டம்பர், 2020

கொல்லர் புளியங்குளம் பகுதியில்பயணிகள் பேரூந்து மோதி .ஒருவர் பலி

 

கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணம் நோக்கி வந்த பயணிகள் பேருந்து மோதியதில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த
 சம்பவம் 25-09-20.அன்று  இரவு கனகராயன்குளம் – கொல்லர் புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. பிரதான
 வீதியால் நடந்து சென்றவர் மீது பேருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. அதில் படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த சந்தணகுமார (வயது 41) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து 
வருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>நெல்லியடி இராஜ கிராமத்தில் கர்ப்பிணிப்பெண் தூக்கிலிட்டுத்தற்கொலை

 

யாழ்– நெல்லியடி இராஜகிராமம் பகுதியில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இச் சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயாரான 29 வயதான கஜேந்திரன் துசேந்தினி என்பவரே உயிரிழந்துள்ளதாக
 நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.25-09-20.அன்று  காலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட அவரை
 உறவினர்கள் பருத்தித்துறை ஆதார 
வைத்தியசாலையில் அனுமதித்த போது, 
அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.சடலம் மரண விசாரணைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் 
மேற்கொண்டுள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நல்லடக்கம் 26.09.20

 


தோற்றம்.04-06-1946-மறைவு .25.09.2020 
உடல்நலக்குறைவால்.25-09-20. அன்று  காலமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் அரசு மரியாதையுடன் அவரது தாமரைப்பாக்க இல்லத்தில்.26-09-20. இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் 
அஞ்சலி செலுத்தினர்.
நல்லடக்கம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வர வேண்டாம் என கூறப்பட்டிருந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்தலாம் என 
தெரிவிக்கப்பட்டிருந்தது.
சமூக இடைவெளியை கடைபிடித்து, 100 பேருக்கு மிகாமல் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.
"பாலு... நீ இல்லாம உலகம் சூன்யமாயிடுச்சு" - இளையராஜாவின் 
உருக்கமான அஞ்சலி
எஸ்.பி.பி என்ற "பன்முக கலைஞன்" - "பாடும் நிலா" மறைந்தது
பல்வேறு தரப்பினரும் எஸ்.பி.பியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை
 விடுத்திருந்தினர்.
இந்நிலையில், தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் வெளியிட்டார்.
தாமரைப்பாக்கம் இல்லத்தில் இறுதி மரியாதை 
நடைபெற்று வருகிறது
மருத்துவமனை தெரிவித்தது என்ன?
கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி.பி, தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து பிறகு வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில்
 குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் உயிர்காக்கும் கருவிகளின் அதிகபட்ச உதவி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சிகிச்சைபெற்றுவரும் எம்.ஜி.எம். மருத்துவமனை 
நேற்று முன் தினம் தெரிவித்தது.
இந்நிலையில் .25-09-20. அன்று பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி
எஸ்.பி.பியின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை 
அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் 
கமல் ஹாசன், நடிகர் ரஜினி காந்த், மேற்கு 
வங்க முதலமைச்சர் மம்தா பனேர்ஜி, மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் செளஹான், மேலும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு திரைத்துறையினர் என பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்அணை வருக்கும் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
தகவல்: குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 25 செப்டம்பர், 2020

யாழ்தேவி தடம்புரண்டதனால் வடக்கு ரயில் மாா்க்கம் ஸ்தம்பிதம்

 

அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில் யாழ் தேவி கடுகதி ரயில் தடம்புரண்டுள்ளது.
இதனால் வடக்கு மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில், மதவாச்சியில்
 நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ் நோக்கி பயணித்த ரயில் தடம்புரண்டுள்ளதைத் தொடர்ந்து, ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தும் நடவடிக்கைகள் 
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>இடம்பெற்ற வாகன விபத்தில் நிந்தவூர் பிரதான வீதியில் இளைஞர் ஒருவர்

அம்பாறை – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர்
 உயிரிழந்துள்ளார்.
இன்று (25) இடம்பெற்ற குறித்த விபத்தில், நிந்தவூர் 4ம் பிரிவைச் சேர்ந்த நஜாத் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் அக்கரைபற்று பகுதியில் இருந்து வந்து கொண்டிருத்த போது, அதே பக்கமாக வந்த கன்டர் லொறியொன்று ஜி.பி.எஸ். சந்தியால் திரும்ப முற்பட்டபோது வேக கட்டுப்பாட்டை இழந்த குறித்த மோட்டார் சைக்கிள், லொறியில் மோதுண்டு, மறுமுனையில் வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி
 தூக்கி வீசப்பட்டனர்.
இதனால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக
 எடுத்துச்செல்லப்பட்டார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>கொட்டபிடிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

பொலனறுவை – கிரிதலை, பகமுண பிரதான வீதியின் கொட்டபிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
24.09-20.அன்று  மாலை இந்த விபத்து இடம்பெற்றது.
உயிரிழந்தவர்கள் பயணித்த 
மோட்டார் சைக்கிள் வீதியில்
 இருந்து வழுக்கிச் சென்று கொங்கிரீட் தூண் ஒன்றில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>மரண அறிவித்தல் “பாடுநிலா” எஸ்.பி. பாலசுப்பிரமணியம் .25-09-20

தோற்றம்.04-06--1946- மறைவு .25.09.2020 
தென்னிந்திய திரைத்துறையின் பிரபல பாடகரும் நடிகருமான “பாடுநிலா” எஸ்.பி. பாலசுப்பிரமணியம் .25-09-20.இன்று   சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் காலமானார்.
ஆகஸ்ட் 5ம் திகதி கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய எஸ்.பி.பி ஒரு மாத காலத்துக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமாகியுள்ளார்.
அண்மைய நாட்களில் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் நேற்று திடீரென மோசமான கட்டத்தை அடைந்த பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி 
மரணமடைந்தார்.
நெல்லூரில் 1946ம் ஆண்டு சிறிபதி பண்டிதாரியுல பாலசுப்பிரமணியம் ஆக பிறந்த இவர் 1967ம் ஆண்டு தெலுங்கில் “எமியே விந்தா மோகம்” என்ற பாடல் மூலமும் தமிழில் “ஆயிரம் நிலவே வா” பாடல் மூலமும் பாடகராக அறிமுகமாகி 16 மாெழிகளில் நாற்பதாயிரம்
 பாடல்களை பாடியுள்ளார்.
1969ம் ஆண்டு தெலுங்கில் “பெல்லந்தே நூரெல்ல பந்த” என்ற திரைப்படத்திலும், 1971ம் ஆண்டு தமிழில் “மொஹமட் பின் துக்லக்” திரைப்படத்திலும் சிறுவேட நடிகராக அறிமுகமான எஸ்.பி.பி, நாயகனாகவும், துணை நடிகராகவும் 50கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் உட்பட பல உயரிய விருதுகளையும் பெற்றிருக்கின்றார்.
இறுதியாக “என்னோட பாஷா” என்ற பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்அணை வருக்கும் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
தகவல்: குடும்பத்தினர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>
வியாழன், 24 செப்டம்பர், 2020

கோகி நகரில் பவுஸர் தீப்பிடித்து எரிந்து கோர விபத்து..23 பேர் பலி

 

நைஜீரியாவின் மத்திய மாநிலமான கோகி நகரில் ஒரு பரபரப்பான வீதியில் பெற்றோல் பௌசர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 23 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.லோகோஜா – அபுஜா நெடுஞ்சாலையில் புதன்கிழமை டேங்கர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை
 இழந்து ஐந்து கார்கள், மூன்று முச்சக்கர
 வண்டிகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளான
 நிலையிலேயே இவ்வாறு தீப்பிடித்து எரிந்துள்ளது.இந்த அனர்த்தத்தில் 23 பேர் கொல்லப்பட்டதாகவும், ஒரு குழந்தை காயங்களுடன் உயிர் தப்பியதாகவும், பெடரல் சாலை பாதுகாப்பு ஆணையகத்தின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.இந்த சம்பவத்துடன் விபத்துக்குள்ளான 
வாகனங்களில் பயணித்தவர்களே 
இவ்வாறு உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.இந் நிலையில் “பெடரல் சாலை பாதுகாப்பு ஆணையத்தால் உறுதிப்படுத்தப்பட்ட 23 பேரின் மரணம், நம் நாட்டிற்கு ஏற்பட்ட துயர சம்பவங்களின் மற்றொரு 
சோகமான சம்பவத்த‍ை பிரதிபலிக்கிறது” என்று ஜனாதிபதி அந் நாட்டு ஜனாதிபதி முஹம்மடு புஹாரி ஒரு அறிக்கையில் 
சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 23 செப்டம்பர், 2020

நாட்டில் மஞ்சள், மிளகுக்கு நிர்ணய விலை வேண்டும்

 

நாட்டில் மஞ்சள் மற்றும் மிளகிற்கு நிர்ணய விலை விதிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ 
தெரிவித்துள்ளார்.
உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து சர்வதேச சந்தைவாய்ப்புகளைப் பெற்று மஞ்சள் மற்றும் மிளகு ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் 
ஜனாதிபதி கூறியுள்ளார்.
சிறு தோட்ட பயிர்செய்கைக்கான அபிவிருத்தியுடன் தொடர்புடைய கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால செயற்றிட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில்.23-09-20. இன்று கலந்தாலோசிக்கப்பட்டது.
இதன்போது கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கருவா, ஏலம், கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்டப் பயிர்செய்கைகளின் விருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


களுவாஞ்சிகுடியில் தீயில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமத்தில் உள்ள வீடு ஒன்றில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று (23) காலை மீட்கப்பட்டது.

திருப்பழுகாமம் திரௌபதையம்மன் ஆலய வீதியில் உள்ள வீடு ஒன்றின் முன்பக்கத்திலேயே இந்த சடலம் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட சடலம் குறித்த வீட்டில் வசித்துவந்த 64 வயதுடைய தில்லையம்மா புவனசிங்கம் என்பவரது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் மகள் பிள்ளைகளுடன் வசித்துவந்த நிலையில் இன்று காலை குறித்த பெண் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக 
பொலிஸார் தெரிவித்தனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>இலங்கையர்களுக்கு மொபைல் செயலிகளால் வந்துள்ள பேராபத்து எச்சரிக்கை

இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் செயலிகள் தொடர்பில் இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கூடிய செயலிகள் தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, ஆபத்து
 உள்ளதா என்ற விடயத்தை முன்வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு, பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு 
அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளும் கணினி மற்றும் கையடக்க தொலைபேசி
 செயலிகள் தொடர்பில் உலகளவில் கடந்த நாட்களாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப 
பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளது.அண்மையில் இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் பல்வேறு கையடக்க தொலைபேசி செயலிகளுக்கு தடை விதித்தது.எதிர்காலத்தில் ஏற்படவுள்ள சைபர் யுத்தம் போன்ற செயற்பாடுகளுக்காக கையடக்க 
தொலைபேசி மூலம் பெற்றுக்கொள்ளப்படும் தரவுகளை பயன்படுத்த முடியும் என்பது தொழில்நுட்ப பிரிவின் நிலைப்பாடாகும்.எனவே, இலங்கையர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரித்து நாட்டின் பாதுகாப்பிற்கு
 அச்சுறுத்தலாக கூடிய செயலிகள்
 தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு, பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளிடம் இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு 
கோரிக்கை விடுத்துள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>மரண அறிவித்தல் திருமதி. ரகுநாதன் ( இலகுப்பிள்ளை ) கமலாதேவி 23-09-20

 

யாழ்  ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும் 
  ஆவரங்கால் ,வங்கி வீதியை வதிவிடமாகவும் கொண்ட. 
திருமதி.  ரகுநாதன் ( இலகுப்பிள்ளை ) கமலாதேவி ( தேவி) 
அவர்கள் இன்று 23/09/2020 புதன்.கிழமை   அன்று இறைபதம் சேர்ந்தார்.  
அன்னார். காலஞ்சென்ற ரவீந்திரன்(ரவி)மற்றும் 
மகேந்திரன்(மகே) சுகந்தி,பாலேந்திரன்(பாலன்)தவேந்திரன்(தவே)குலேந்திரன்(குலம்) 
ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும்கணவர்  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்அணை வருக்கும் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகட்க்கு்்
மகே- 00447947 976863
பாலன்- 00447738 208493
குலம்-  00447940 650552
சுகந்தி- 004407424 261330
தவே- 0094773303517

நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 22 செப்டம்பர், 2020

மரண அறிவித்தல் திருமதி. இராஜசிங்கம் (செட்டியார் ) சரஸ்வதி 22.09.20

யாழ்  நவாலியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் (செட்டியார் ) சரஸ்வதி. 22.09.2020 அன்று காலமானார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் கணவர்  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்அணை வருக்கும் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
தகவல்: குடும்பத்தினர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 21 செப்டம்பர், 2020

பிரவுன் சுகர் ரக ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

கடலில் மிதந்து வந்த சுமார் ஒரு கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை சின்னப்பாடு 
கரையோரத்தில் வைத்து தாம் கைப்பற்றியதாக உடப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மிகவும் பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டிருந்த இந்த ஹெரோயின் போதைப்பொருள் கடலில் மிதந்து வந்து சின்னப்பாடு கடற்கரையில் கரையொதிங்கியுள்ளது.
இதனைக் கண்ட மீனவர் ஒருவர் அது குறித்து உடப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.பிரவுன் சுகர் ரக ஹெரோயின் போதைப்பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.பாதுகாப்பாக 
பொதி செய்யப்பட்டிருந்தாலும் ஹெரோயின் போதைப்பொருளில் கடல் நீர் புகுந்துள்ளதாகவும் இதனால், அதன் பெறுமதியை கணக்கிட முடியாதுள்ளதாகவும் பொலிஸார் 
கூறியுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>இளைஞன்.கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி பரிதாபமாகப் பலி

 

கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஆனந்தபுரம் கிழக்குப் பகுதியில் இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 
பயணித்த மன்னவாகினி ரயிலுடன் இளைஞன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் கிளிநொச்சி
 மலையாளபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய 
யோகேந்திரன் அஜந்தன் என்ற
 இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>