siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 30 மே, 2019

மரண அறிவித்தல்அமரர் இரத்தினம் தங்காரத்தினம் ,29, 05 19

மலர்வு,  08 04 1943-- உதிர்வு, -29, 05 2019
யாழ். நவக்கிரி  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்()ட (தர்போது மானிப்பாயில்  
வசித்த)அமரர் இரத்தினம் தங்காரத்தினம்
- ¨¨ அவர்கள் 29-05-2019 புதன் கிழமை   
அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற
அப்பாத்துரை  பொன்னம்மா தம்பதிகளின் மகளும்  அமரர் இரத்தினம்
 (வல்லுவெட்டி )அவர்களின் அன்பு மனைவியும் ஆவர் காலஞ்சென்ற சீவரத்தினம் நேசமணி ஆகியோரின்
 அன்புச்சகோதரியும் ஆவர் 
சகோதரியும்  சிறிதரன் (சுவிஸ்),பவானி,,(இலங்கை),றன்சி ,(சுவிஸ்),திவாகரன் ,,(சுவிஸ்)  நிந்தகரன்  (கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார் 
அன்னாரின் இறுதிக்கிரியை 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய்  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்பேசி
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 29 மே, 2019

யால் பலாலி வீதியில் கோர விபத்துஸ் தலத்தில் வயோதிபர் பலி

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை 8:30 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது .
 துவிச்சக்கர வண்டியில் பயணித்த வயோதிபர் வீதியை கடக்க முற்பட்ட வேளையில் எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.உயிரிழந்த வயோதிபரின் 
உடல் கோப்பாய் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, 24 மே, 2019

நேருக்கு நேர் லொறியுடன் மோதிய முச்சக்கரவண்டிகள் மூவர் பலி

வெல்லவாய ஊவாகுடா ஓயா தனமல்விலா பிரதான வீதியில் லொறி மற்றும் இரண்டு முச்சக்கரவண்டிகள் ஒன்றோடொ
ன்று மோதிய விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பெண்கள் பலியாகியுள்ளதுடன், மேலும் மூவர் 
படுகாயமடைந்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 21 மே, 2019

மரண அறிவித்தல் திரு நிலகண்டு செல்லக்கண்டு ,21, 05 19

மலர்வு,  08 12 1936-- உதிர்வு, -21, 05 2019
யாழ். நவக்கிரி  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்()ட (தர்போது உடுகளில் வசித்த)திரு நிலகண்டு செல்லக்கண்டு ,.
- ¨¨ அவர்கள் 21-05-2019 செவ்வாய்க்கிழமை   
அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற
நிலகண்டு தம்பதிகளின் மகனும் புஸ்பமலர்
 (மலர,அல்லது ராணி )அவர்களின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற சரஸ்வதி   அவர்களின் 
அன்பு ச் சகோதரியும்  திருமகள்   சிவசீலன்  திருவேணி   திசாயினி  நிகேதினி ஆகியோரின் அன்புத்தந்தையும்,  ஆவார் 
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உடுவில்  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்பேசி -சீலன் -00447403179162
   செல்பேசி .பவன் -0776994910 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



அமரர் இராசரத்தினம் இலட்சுமி 31ம் நாள் நினைவஞ்சலி.22,05,19

மாலர்வு-11,01,1944- .உதிர்வு-24.04.2019  
யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாக்கொண்ட                 
அமரர் இராசரத்தினம்,இலட்சுமி (பரிமளம்) அவர்கள் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி
அன்னார்  காலஞ்சென்ற அமரர்  இராசரத்தினம்  அவர்களின் அன்பு மனைவியும்   காலஞ்சென்றவர்களான
மாரிமுத்து தம்பதிகளின் புத்திரியும்   காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை,பாலா ,சிங்கம்   மற்றும் 
சின்னத்துரை, பேத்தச்சி   பார்க்கியம் ஆகியோரின்  
அன்புச்சகோதரியும்  
 வசந்தகுமார்    மலர்வதான  சுகந்தி   ஆகியோரின் அன்புத் தாயாரும் , 
சரிதா  கீர்த்தன் கீர்த்தி லவன்சி  ஆகியோரின்அன்புப் பேத்தியம் ஆவார்
அந்திரட்டி வீட்டுகிருத்திய்  அழைப்பிதழ்
.22-05-2019 புதன் கிழமை அன்று   காலை 08,மணியளவில் கிரீமலை  தித்தக்கரையில்   ஆத்மா   சாந்திப்பிரத்தனை   நிகழ்வுகள்   24,05,2019, அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல்,12,மணிஅளவில்    அன்னாரின் இல்லத்தில்  ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்   தொடர்ந்து நடைபெறும் 
மதியபோசன நிகழ்விலும்  கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்
 இங்கனம் -குடும்பத்தினர் 
 எமக்கு 7
ஆறுதல் கூறி உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
அன்பின் விருட்சமாகி எமக்கெல்லாம் நிழலாக
நின்று கருணை மழை பொழிந்து கண்ணயராது
எமையெல்லாம் காத்து, வளர்த்து வாழ்வழித்து
கலங்கரை விளக்காய் வாழ்க்கை என்னும் 
ஓடத்திற்கு ஒளி காட்டி வழிகாட்டி
சீரும் சிறப்புமாக வாழ வைத்த எம் அன்னையே! குணம் என்னும் குன்றேறி நின்று எம்மை 
மகிழ்ச்சி யென்னும் மாகடலில்
திழைக்க வைத்த எங்கள் மாமியே!
கட்டியணைத்து முத்தமிட்டு பேரன்புடன்
எமையெல்லாம் வளர்த்தெடுத்த எங்கள் பாட்டியே!
கடல் கடந்து எமைக்காண ஓடோடி வந்த எம் பூட்டியே! தரணியில் நீங்கள் தந்த அன்பு பாசம் எல்லாம் சரித்திரத்தில்
மாறாத நினைவுகளோடு நாமும் வாழ்வோம்,
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டும் 
பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் , பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்
தகவல்-
குடும்பத்தினர்
  வீட்டுமுகவரி 
எல்லாளன் வீதி 
நவற்கிரி மேற்கு 
     புத்தூர் 
செல்லிடப்பேசி: +0771179415
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வெள்ளி, 17 மே, 2019

புத்தளத்தில் இரு தேசிய அடையாள அட்டைகளுடன் கைதான பெண்

புத்தளம் பிரதேசத்தில் இரு தேசிய அடையாள அட்டைகளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேச செயலகமொன்றிற்கு
 அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே மேற்படி கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸார் குறித்த பெண்ணிடம் சோதனைகளை மேற்கொண்ட போது
 தேசிய அடையாள அட்டையொன்றை காண்பித்துள்ளார்.பின் அந்த பெண்ணின் பையை சோதனைக்குட்படுத்தியதில் மேலும் ஒரு அடையாள அட்டை மீட்கப்பட்டுள்ளது.புத்தளம் பகுதியைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர் யாழ்ப்பாணத்திலும் வசித்துவந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக 
பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது சந்தேக நபரான பெண்ணை அடையாளப் படுத்தும் வகையில் இரு தேசிய அடையாள அட்டைகள் காணப்பட்டதுடன், அவற்றில் பிறந்த திகதிகளில் வேறுப்பாடு காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.அதற்கமைய 1969 பிறந்திருக்கு மேற்படி பெண் 1979 என 
பிறந்த திகதியை மாற்றி அமைத்து அடையாள அட்டைகள் இரண்டை தம்வசம் வைத்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸார் சந்தேக நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 12 மே, 2019

மரண அறிவித்தல் திருமதி நவரத்தினராசா இந்திராணி,11,05,19

                            பிறப்பு-26 AUG 1944-    இறப்பு-11 MAY 201                                  
யாழ். புத்தூர் நவற்கிரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் கிழக்கு ஆடியன் பிட்டி ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினராசா இந்திராணி அவர்கள் 11-05-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா,
 சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் 
அன்பு மருமகளும், நவரத்தினராசா(ஓய்வுபெற்ற ஆசிரியர் சாவகச்சேரி இந்துக்கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும், மஞ்சுளா(கனடா), Dr. மஞ்சுதன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவபாதசுந்தரமூர்த்தி, திருலோகநாயகி, சர்வானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், வரதராசா(கனடா), Dr. மகாஜினி(பிரித்தானியா) ஆகியோரின்
 அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான செல்வராசா, அன்னலட்சுமி மற்றும் நாகராசா இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும், தீபிகா(கனடா), விதுனன்(கனடா), பக்‌ஷிகா(பிரித்தானியா), கோகுலன்(பிரித்தானியா) ஆகியோரின் 
அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: நவரத்தினராசா(கணவர்) 
முகவரி:  Get Direction இல. 9, ஆடியன்பிட்டி ஒழுக்கை, நுணாவில் கிழக்கு, சாவகசேரி, யாழ்ப்பாணம்
தொடர்புகளுக்கு
 மஞ்சுதன் - மகன் Mobile : +447503230591   மஞ்சுளா -
 மகள் Mobile : +14168757281  

வெள்ளி, 10 மே, 2019

மரண அறிவித்தல்திருமதி இராசதுரை குண்டுமணிதேவி,08,05,19

தோற்றம் .09 DEC 1945--மறைவு-08 MAY 2019
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் மேற்கு இராசவீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை குண்டுமணிதேவி அவர்கள் 08-05-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.  
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், இராசையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், 
இராசதுரை(செல்வராசா) அவர்களின் அன்பு மனைவியும், 
காலஞ்சென்றவர்களான திவாகரமூர்த்தி, ஸ்ரீகரன், கலைச்செல்வி(செல்வி- சுவிஸ்), கருணாகரன்(செல்வா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், 
இராசரஞ்சனி, அகிலானந்தன்(அகி- கனடா), மகேந்திரன், ஜனார்த்தனன்(ஜனா- சுவிஸ்) ஆகியோரின் வளர்ப்புத் தாயாரும்,  
கருணைவேல், பத்மாவதி, வேதேஸ்வரன், அனுஜா, சஞ்ஜீவனி  ஆகியோரின் அன்பு மாமியாரும், 
காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், நவரத்தினம், ஞானலிங்கம், இரத்தினசிங்கம், தவமணிதேவி, நீலமணிதேவி(உரும்பிராய்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  
சொர்ணமலர், அன்னலட்சுமி, மகேஸ்வரி, கமலாதேவி, இந்திராதேவி, தர்மராசா, கலாநிதி, பத்மநாதன், அற்புதநிதி, லிங்கேஸ்வரன், காலஞ்சென்றவர்களான இராசமணி, தியாகராசா, இரங்கநாதன், செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சஹானா, சஹீரன், திவானா, திவியன், கவிரா, கிருஷ்ணவி, ஐந்துயா, தயன், குணாளன், அஜந்தன், அவீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
வீட்டு முகவரி: 
(எல்லாளன் வீதி ) 
நவற்கிரி .புத்தூர்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 செல்வராசா - கணவர் Phone : +94212058410  செல்வி - மகள் Mobile : +41315583625  செல்வா - மகன் Mobile : +33143053034  அகி Mobile : +16136974389  ஜனா Mobile : +41791387178

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 4 மே, 2019

வவுனியாவில் க வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர்¨¨

வவுனியா – சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தரொருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்த 
குடும்பஸ்தரின் சடலம்,03,05,2019, இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் சாளம்பைக்குளத்தை சேர்ந்த இம்திகா அஹலம் (வயது 32) என தெரியவருகிறது.குறித்த நபரின் உடலில் பல பகுதிகளில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக தெரியவரும் நிலையில் சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு 
செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், ஸ்தலத்தில் விசேட அதிரடிப்படையினரும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 1 மே, 2019

தம்பலகாமமத்தில் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து இருவர் பலி.

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. அதில், இருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்தனர்.இந்த விபத்து திருகோணமலை,  கந்தளாய் பிரதான வீதி 
தம்பலகாமம் பகுதியில்,30,04,2019, இடம்பெற்றுள்ளது.திருகோணமலையில் இருந்து கந்தளாய் நோக்கிப் பயணித்த பட்டா ரக வாகனமும், கந்தளாயில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும், நேருக்கு நேர் மோதின எனத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில், சீதுவ பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>