siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 31 மார்ச், 2026

பருத்தித்துறையில் வீட்டாருடன் முரண்பாடு வீட்டை விட்டு வெளியேறியவர் சடலமாக மீட்பு

யாழ், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் , மீட்கப்பட்டு ,
 உடற்கூற்று 
பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
அல்வாய் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி குலசிங்கம் (வயது 78) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
குறித்த முதியவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை தனது வீட்டாருடன் முரண்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 
வீட்டை விட்டு வெளியேறியவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடி வந்தனர். 
இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை முதியவர் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 30 மார்ச், 2026

நினைவஞ்சலி முதலாம் ஆண்டு அமரர் செல்வராஜா பூமணி 30.03-2026

மண்ணில் 12.06-1934-விண்ணில் 30-03-2025.
முதலாம்  ஆண்டு திதி 28-09-2024  இன்று 
யாழ்.நவற்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடா– நவற்கிரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்
கொண்டிருந்த அமரர் செல்வராஜா பூமணி அவர்களின்  முதலாம்  ஆண்டு திதி .30-03-2026..திங்கள்ட்கிழமை இன்று .நவற்கிரியில்  அன்னாரின்  இல்லத்தில் ஆத்மசாந்திபிராத்தனையும்  மதிய போசனமும்  நடைபெறும் 
அன்னார் காலம்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும் காலம்சென்ற ராமலிங்கம் தம்பதியினரின் பாசமிகு மக்களும் காலம்சென்ற தம்பு மாணிக்கம்
தம்பதியினரின் அன்பு மருமகளும் காலம்சென்ற கந்தசாமி சத்தியபாமா (பாமா) நவரத்தினம் (குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்
திரு பாலசுப்பிரமணியம் (பாலா.கனடா ) காலம்சென்ற சரஸ்வதி (சரஸ்) மற்றும்
திரு பாலேஸ்வரன் (பாலா.கனடா )திரு பாலராஜா (அப்பன்.கனடா )பாக்யராஜா (ராஜா.கனடா ) ஆகியோரின்
பாசமிகு தாயாரும் ஆவர் இவ் அறிவித்தலை உற்றார், 
உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் நீங்காத நினைவுகள்
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்.

எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி!

https://navakkiri.blogspot.com/


ஞாயிறு, 29 மார்ச், 2026

கொடிகாமத்தில் உயிரிழந்த பொலிஸ்சாரின் கொலையாளி கைதாகவில்லை

யாழ்   கொடிகாமத்தில் நேற்றையதினம் சட்டவிரோத மணல் கடத்தற்காரர்களின் உழவுஇயந்திரம் மோதி உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரான கெட்டியாராட்சிக்கே அல்பிரட் இவர் தான்.
1969ஆம் ஆண்டு பிறந்த இவர் நிற்றம்பூவ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
இதனிடையே கொலையாளி கைதாகவில்லையென தகவல்கள்  தெரிவிக்கிக்கின்றன.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வெள்ளி, 27 மார்ச், 2026

தரிசனம் செய்ய சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றவர் திடீர் மரணம்

 

நாட்டில் சிவனொளிபாத மலைக்குத் தரிசனம் செய்யச் சென்ற யாத்திரிகர் ஒருவர்.27-03-2026. இன்று காலை திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக 
உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.தெகிவளைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சம்பத் பெர்னாந்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது உறவினர்களுடன் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுகொண்டிருந்தபோது, மல்வத்தை – நல்லதண்ணி பாதையிலுள்ள கங்குலதென்ன பகுதியில் வைத்து திடீரென உடல்நலக்குறைவுக்கு உள்ளாகியுள்ளார்.
உடனடியாகச் செயற்பட்ட அவரது உறவினர்கள் மற்றும் கங்குலதென்ன பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இணைந்து, அவரை நல்லதண்ணி நகருக்குத் தூக்கி வந்துள்ளனர்.
அங்கிருந்து நோயாளி காவு வண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அவர் கொண்டு 
செல்லப்பட்டார
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய அ
திகாரி தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் உடல் தற்போது மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது  என்பதும்  குறிப்பிடத்தக்கது-

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 26 மார்ச், 2026

ஏவுகணை சிதைவு விழுந்ததில் அபுதாபியில் இருவர் உயிரிழப்பு

அபுதாபியில் ஏவுகணை சிதைவு விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
வான் பாதுகாப்பு அமைப்புகள் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை இடைமறித்த பின்னர், சிதறி விழுந்த பாகங்களால்
 ஏற்பட்ட சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததை அபுதாபி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும், பல வாகனங்கள் சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் 
தெரிவித்தனர்.
ஏவுகணை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 25 மார்ச், 2026

மர்மமான முறையில் காணாமல் போன தம்பதியினர் சடலங்களாகக் கண்டெடுப்பு.

நாட்டில்  கொரோனா காலத்தில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட தம்பதியினர், கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டு வாய்க்காலில் புதைக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் 
வெளியாகியுள்ளது.
கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வெல்லம்பிட்டிய, கம்பிக்கொட்டுவ வத்தை பகுதியில் உள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து நேற்று(24) இவர்களின் உடல் எச்சங்கள் 
மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 2020-ஆம் ஆண்டு 62 வயதான சுனில் குமாரசிங்க மற்றும் கமண்டா சில்வா ஆகிய தம்பதியினர் காணாமல் போனதாக அவர்களது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆரம்பகட்ட விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், உறவினர்கள் ஜனாதிபதி செயலகத்திடம் மேன்முறையீடு செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் இந்திகா லோகுஹெட்டி தலைமையிலான குழுவினர், பாதிக்கப்பட்ட தம்பதியினரின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த தம்பதியிடம் விசாரணை நடத்தினர்.
 அதில், தனிப்பட்ட தகராறு காரணமாக தம்பதியினர் கொலை செய்யப்பட்டு, உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அருகில் உள்ள வாய்க்காலில் புதைக்கப்பட்டமை தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு தம்பதி மற்றும் அவர்களது உதவியாளர் என மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



செவ்வாய், 24 மார்ச், 2026

மட்டக்களப்பு, ஏறாவூரில் வாள்வெட்டுக்கு இருவர் படுகாயம்

நாட்டில் .மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் முதலாம் பிரிவு, இளையவன் வீதியில் நேற்று இரவு இரு
 குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் முதலாம் பிரிவு, இளையவன் வீதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற கண்காட்சி ஒன்றின் போது, இரு தரப்பினருக்கும் இடையே வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு 9.00 மணியளவில் ஒரு குழுவினர் மற்றைய தரப்பினரின் வீட்டிற்குச் சென்று வாள்வீச்சுத் தாக்குதலை 
நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



ஞாயிறு, 22 மார்ச், 2026

துருக்கி நாட்டில் அகாலமரணம் . க.ஜெயந்தினி, க.விபூசன் சுவிஸ், 20.03.2026

.யாழ் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்தவரும் சுவிஸ் நாட்டில் வசிப்பவருமான 
திரு குமாரசாமி கணேசலிங்கம் (சின்னதம்பி) என்பவரது அன்பு மனைவி திருமதி கணேசலிங்கம் .ஜெயந்தினி, அன்பு மகன் செல்வன் க.விபூசன் என்பவரும்
 துருக்கி நாட்டில் ஏற்பட்ட வாகன  விபத்தில் .20.03.2026).அகாலமரணம் அடைந்து விட்டார்கள் என்ற துயர செய்தியை அனைவருக்கும் 
அறியத்தருகின்றோம்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி இணையம்  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!

https://navakkiri.blogspot.com/2026/03/130326.html




 

சனி, 21 மார்ச், 2026

நாட்டில் வவுனியாவில் மயானத்தின் வடிகானுக்குள் சடலம் மீட்பு

நாட்டில் வவுனியா – இரட்டை பெரியகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொது மயானத்தின் வடிகான் ஒன்றிலிருந்து அடையாளம் காண முடியாத வகையில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்
 மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா – இரட்டை பெரியகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொது மயானத்தின் வடிகான் ஒன்றிலிருந்து அடையாளம் காண முடியாத வகையில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்
 மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளதாகவும், அது சுமார் 5 அடி 6 அங்குல உயரமுடைய சாதாரண உடல்வாகு கொண்ட ஒரு ஆணின் சடலம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வெள்ளி, 20 மார்ச், 2026

அமரர் திரு,ஆ ,க,சுப்பிரமணியம்.15ம் ஆண்டு நினைவஞ்சலி 21.03.2026


மண்ணில் : 06- 02 1932 — விண்ணில் : 06 04 2011
யாழ். மாவிடடபுரத்தை பிறப்பிடமாகவும், நவற்கிரி புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட.அமரர் திரு ..(ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணிஐயா  ) அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி./(திதி)  21-03-2026.சனிக்கிழமை அன்று 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 

தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாரைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
பதின் ஐந்து   ஆண்டுகளாய்  
வளர்ந்து நிற்பது உங்கள் பிரிவின் சோகம்
அனைவராலும் ஐயா ஐயா என அழைக்கபட உங்கள்
நீங்காத நினைவுகளுடன்
ஒன்பது ஆண்டுகளல்ல இன்னும் ஓராயிரம் ஆண்டுகள்
நாம் வாழ்ந்தாலும்..
வாழும் காலமெல்லாம் உன் பிரிவின் ஏக்கம் தொடரும்…
நினைவு அஞ்சலி
காலங்கள் கடந்தாலும்
ஆண்டுகள் சென்றாலும்
எங்கள் மனதில்
என்றும் நிலைத்திருப்பாய்
அன்பின் அடையாளமாக
அறத்தின் புதல்வனாக

தர்மத்தின் தலைவனாக
பொன்னம்மாவின் செல்வனாக
காலத்தை வென்ற தலைமகனாக
ஆறுமுகம்.கந்தையா
பொன்னம்மாவின்
அன்பில் சிவமாக
என்றும் எங்களில்
வாழ்கிறீர்கள் அன்பின்ஐயா
என்றென்றும் எங்கள் தெய்வம் நீங்கள்
…அன்பும் ஆற்றலும்
பண்பும் பாசமும்
உறுதியும் உன்னதமும்
உண்மையும் உழைப்பும்
உற்ற தோழமையும்

இனிக்கும் இன்முகமும்
கொண்ட ஈடுஇணையற்ற
எங்கள் தந்தையே !
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகிறோம் ஐயா
ஓம் சாந்தி ஓம் சாந்தி சாந்தி,,,
உங்கள் பிரிவால் என்றும் வாடும்
அன்புப் ,பிள்ளைகள்,
சகோதர்கள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள் புட்டப்பிள்ளைகள்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
தகவல்:-குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2023/03/12-24032023.html




வியாழன், 19 மார்ச், 2026

யாழ். பல்கலைக்கழக மாணவி நுவரெலியா விற்கு சுற்றுலா வந்தவர் தவறி விழுந்து வைத்தியசாலையில்

யாழ் பல்கலைக்கழத்தில் இருந்து நுவரெலியா மாவடத்தில் சுற்றுலா வந்திருந்த மாணவர்களில், மாணவியொருவர் சின்ன உலக முடிவில் (பட்டிப்பொலவில்) கீழே தவறி விழுந்து விட்டதாகவும், 
, மீட்கப்பட்டு, நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் இருந்து நுவரெலியா மாவடத்தில் சுற்றுலா வந்திருந்த மாணவர்களில், மாணவியொருவர்
 சின்ன உலக முடிவில் (பட்டிப்பொலவில்) கீழே தவறி விழுந்து விட்டதாகவும், அவர், மீட்கப்பட்டு, நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




புதன், 18 மார்ச், 2026

நாட்டில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- 4 பேர் பலி,40 பேர் காயம்

நாட்டில் அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 17 மார்ச், 2026

நாட்டில் கொழும்புத்துறைப் பகுதியை அண்டிய பகுதியில் பவுசர் மோதி இருவர் பலி

யாழில்  இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் அண்ணன் மற்றும் தங்கை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 
யாழ் கொழும்புத்துறைப் பகுதியை அண்டிய பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் அண்ணன் மற்றும் தங்கை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியை அண்டிய பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பிரட்லீ (வயது 24) மற்றும் அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 16 மார்ச், 2026

நாட்டில் ஏழாவது ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞன் மரணம்

நாட்டில் கொழும்பு, வெள்ளவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, வெள்ளவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரெட்டிக்கா வீதியில் நிர்மாணிக்கப்படும் வரும் கட்டிடத்தில் இருந்த விழுந்து 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் உடவலவே, ஒலிமட பகுதியைச் சேர்ந்த புவனேஷா ராசா ஸ்ரீகாந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நிர்மாணிப்பில் இருந்த 10 மாடி கட்டிடத்தின் 7வது மாடியில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, ​​லிப்டில் இருந்து விழுந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது   என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 14 மார்ச், 2026

மரண அறிவித்தல் திருமதி சர்வானந்தம் பிறேமா 13.03.26

துயர் பகிர்வு-தோற்றம் -29-.june -1973-மறைவு-13-03-2026.
யாழ் கொக்குவில் மேற்கை   பிறப்பிடமாகவும்  கனடாவை  வதிவிடமாகவும்  திருமதி சர்வானந்தம் பிறேமா    அவர்கள் .13-03-2026..வெள்ளி க்கிழமை  அன்று  இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலம்சென்ற பாலசந்திரன்
மற்றும் சந்திரகுமாரி ஆகியோரின் மகளும் காலம்சென்றவர்களான பொன்னம்பலம் பாக்கியலட்சுமியின் 
 அன்பு  மருமகளும்  சர்வானந்தம் (செல்வா )அவர்களின் ஆருயிர் மனைவியும் ஆவர் அன்னாரின்
  நல்லடக்கம் கனடாவில் நடைபெறும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

எமது நவற்கிரி இணையம்  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!

https://navakkiri.blogspot.com/2026/03/130326.html

அன்னாரின்  நல்லடக்க விபரம் 









 

வெள்ளி, 13 மார்ச், 2026

லிஸ்டீரியோசிஸ் தொற்று காரணமாக பிரான்சில் இருவர் மரணம் - 12 பேர் பாதிப்பு

பிரான்சில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் 2026 ஜனவரி வரை லிஸ்டீரியோசிஸ் நோயின் 12 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. 
இந்த தொற்றுகள் சமைத்த இறைச்சி உணவுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அதிகாரிகள்
 தெரிவித்துள்ளனர். 
இந்த 12 பேரில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நோயாளிகளின் சராசரி வயது 81 ஆகும். அவர்களில் 7 பெண்களும் 5 ஆண்களும் உள்ளனர். 12 பேரில் 11 பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பலருக்கு ஏற்கனவே மற்ற உடல்நலப் பிரச்சினைகளும் இருந்தன.
இந்த நோயுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் உணவுகள் caillettes, pâtés en croûte மற்றும் பிற சமைத்த இறைச்சி உணவுகள். 
இவை “Drôme salaisons” மற்றும் “Jules Courtial” என்ற பெயர்களில் விற்பனை செய்யப்பட்டன. லிஸ்டீரியா பக்டீரியா இருப்பதால் இப்பொருட்கள் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

வியாழன், 12 மார்ச், 2026

யாழ் வடமராட்சியில் மருமகன் மாமி வெட்டி படுகொலை மாமனர் வெட்டி படுகாயம்

யாழ்  மராட்சியில் குடும்ப தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்ததுடன் , மாமனாரையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய அரச உத்தியோகஸ்தரை பொலிஸார் 
கைது செய்துள்ளனர்
வடமராட்சியில்.(11-03-2026.) நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 
கரவெட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக நேற்றைய தினம் மாலை கரவெட்டியில் உள்ள தனது
 வீட்டில், தனது இரண்டு பிள்ளைகளையும் ஒரு அறையில் பூட்டி வைத்து , 
மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு, மனைவியை கத்தியால் குத்த முனைந்த வேளை , மனைவி,  கணவனை கீழே தள்ளி விழுத்தி விட்டு , அறையில் இருந்த இரண்டு பிள்ளைகளையும் மீட்டுக்கொண்டு , 
வீட்டில் இருந்து
 தப்பியோடி அருகில் இருந்த கடையொன்றினுள் தஞ்சம் புகுந்துள்ளனர். 
அந்நிலையில், மனைவி, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மந்திகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கே சென்று 
இருப்பார் என்ற எண்ணத்தில் , மனைவியின் தாய் வீட்டிற்கு
 சென்றவர் , அங்கே தனிமையில் இருந்த மனைவியின் தாயாருடன் தர்க்கப்பட்டு, அவரை வாளினால் வெட்டி படுகொலை
 செய்துள்ளார். 
பின்னர் அங்கிருந்து வெளியே வந்து அப்பகுதிகளில் தேடுதல்களை நடத்தியுள்ளார். அதன் போது, வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பழச்சாறு கடையொன்றில் மனைவியின் தந்தை நிற்பதனை அவதானித்து , அங்கு சென்று அவர் மீது மூர்க்கத்தனமாக வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளார். 
அதன் போது அங்கிருந்தவர்கள் அவரை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை அங்கிருந்து தப்பி சென்றார். அதனை அடுத்து , அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார் வடமராட்சி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தரான படுகொலையானவரின் மருமகனை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  
சம்பவத்தில் யோகராசா சரஸ்வதி (வயது 67) என்பவரே உயிரிழந்ததுடன், அவரது கணவனான காசிப்பிள்ளை யோகராசா படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 11 மார்ச், 2026

பேருந்து தீப்பற்றி எரிந்ததில் சுவிட்சர்லாந்தில் ஐந்து பேர் படுகாயம் ஆறு பேர் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்து, பிரிபொங் மாகாணம், கெர்சர் நகரில் பேருந்தொன்று தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீயானது விரைவாக பேருந்து முழுவதிலும் பரவியதால் பயணிகளால் வெளியில் வர முடியாத சூழ்நிலை
 ஏற்பட்டுள்ளது.
பேருந்தில் இருந்த 11 பயணிகளில் ஆறு பேர் உயிரிழந்ததோடு, 5 பயணிகள் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து காயமுற்றவர்களை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
பேருந்தில் திடீரென தீப்பற்றியதன் பின்னணியைக் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 10 மார்ச், 2026

யாழ் நாவலப்பிட்டியை சேர்ந்த நபரொருவர் நயினாதீவில் குத்திக்கொலை

யாழ் நயினாதீவு பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார் என ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் 
ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்
 நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முரண்பாடு காரணமாக மற்றொரு நபர் கத்தியால் குத்தி இவரைக் கொலை செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் 
தெரியவந்துள்ளது.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொட்டகலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

சனி, 7 மார்ச், 2026

மரண அறிவித்தல் திருமதி தவராஜசிங்கம் நாகேஸ்வரி

துயர் பகிர்வு-தோற்றம் 00.மறைவு-07-03-2026.
யாழ் பருத்தித்துறையை   பிறப்பிடமாகவும்   வதிவிடமாகவும்  திருமதி தவராஜசிங்கம் நாகேஸ்வரி  அவர்கள் .07-03-2026..சனிக்கிழமை  அன்று  இறைவனடி சேர்ந்தார்
 அன்னார் காலம்சென்ற  தவராஜசிங்கம்  அவர்களின் அன்பு  மனைவியும் காலம்சென்ற 
 திரு திருமதி   கணபதிப்பிள்ளை  சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்  காலம்சென்ற பிரபாகரன் மற்றும் 
கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் திருமதி தனலட்சுமி  மற்றும் காலம்சென்ற வரதன்ஆகியோரின் 
 அன்புச்சகோதரியும்  ஆவர்  அன்னாரின் இறுதிச்சடங்கு திகரைபுலோலி  வடக்கில்  திகதி-  08-03-2026 ஞாயிற்க்கிழமை 10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்
  நல்லடக்கம்
08-03-2026 ஞாயிற்க்கிழமை  அன்று ; கோரியடி பருத்தித்துறை  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி இணையம்  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!

https://navakkiri.blogspot.com/2026/03/blog-post_7.html





 

வெள்ளி, 6 மார்ச், 2026

யாழ் பாலைதீவு படகு விபத்து உயிாிழப்பு அதிகாிப்பு

யாழ் பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்குப் பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு குருநகர் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களின்
 எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் இருவரும் 
யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய எம்.ஜோசப் மற்றும் 57 வயதுடைய பிரான்ஸிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் சடலங்கள் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும், 13 வயது சிறுவன் ஒருவன், 4 பெண்கள்
 மற்றும் 8 ஆண்கள் என மொத்தம் 13 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒரு ஆணும் இரு பெண்களும் ஆபத்தான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 4 மார்ச், 2026

நாட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டிக்குள் சடலம் மீட்பு

நாட்டில்  மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதியில், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டி ஒன்றிற்குள் இருந்து நபர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி வீதியில், கருச சந்தியிலிருந்து மொரட்டுவை நோக்கி அமைந்துள்ள வீரபுரன் அப்பு வித்தியாலயத்திற்கு முன்னால் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த முச்சக்கர வண்டியின் பின் ஆசனத்திற்கு அடியில் இருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
விசாரணைகளின் போது, உயிரிழந்தவர் மொரட்டுவை, வில்லோரவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என அடையாளம் 
காணப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக பல 
வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு, ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் இருந்து விடுதலையாகி 21 நாட்களுக்கு பின்னரே இவர் வீடு திரும்பியுள்ளார். 
சடலம் இருந்த இடத்தை கல்கிஸ்ஸை குற்றத்தடுப்பு ஆய்வு கூட திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்டதுடன், மொரட்டுவை பிரதான நீதவான் சம்பத் கமகே வருகை தந்து ஸ்தல ஆய்வை
 மேற்கொண்டார். 
சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு மரண பரிசோதனை
 நடத்தப்படவுள்ளது.
மேலும், இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மொரட்டுவை பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 3 மார்ச், 2026

நாட்டில் ஹபரணை - பொலன்னறுவை வீதியில் விபத்து:ஏழு பேர் காயம்

இன்று பிரதான வீதியில் மின்னேரியா வனவிலங்கு அலுவலகத்திற்கு அருஹபரணை - பொலன்னறுவைகில்  இடம்பெற்ற கோர விபத்தில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று, வீதியில் பழுதடைந்து நின்ற பாரவூர்தி ஒன்றை முந்திச் செல்ல முயன்ற போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது எதிரே வந்த அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற டிராக்டருடன் பேருந்து நேருக்கு நேர் மோதியுள்ளது. பேருந்தில் பயணித்த 4 ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர்களும், டிராக்டரில் இருந்த 3 பேரும் காயமடைந்துள்ளனர்.
பேருந்தின் முன் இருக்கையில் பயணித்த பெண் ஊழியர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில் அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்
காயமடைந்தவர்கள் ஹபரணை, தம்புள்ளை மற்றும் பொலன்னறுவைவைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து சாரதியின் கவனக்குறைவான வாகனம் செலுத்துதலே இந்த விபத்துக்குக் காரணம் என ஹபரணை காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் 
தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

திங்கள், 2 மார்ச், 2026

இலங்கையர் எவரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில்காயமடையவில்லை-இலங்கைத் தூதுவர் அருஷா குரே தெரிவிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களில் காயமடைந்தவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை என அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் அருஷா குரே
 தெரிவித்துள்ளார். 
இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்களை விடுத்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுமார் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் இலங்கையர்கள் 
வசிக்கின்றனர். 
இலங்கைக்கான தூதரகம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் உள்நாட்டு அமைச்சு ஆகியவற்றுடன் நேரடித் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அவர்
 குறிப்பிட்டுள்ளார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் அவசரத் தேவைகளுக்கான உதவிகளை வழங்குவதற்காக விசேட சேவையொன்றை ஏற்பாடு செய்துள்ளது. 
போக்குவரத்து, பாதுகாப்பான இடங்கள் மற்றும் விமான நிலைய அணுகல் தொடர்பான ஆலோசனைகளைத் தூதரகம் மற்றும் டுபாய் கொன்சியூலர் அலுவலகம் தமது பேஸ்புக் பக்கத்தின் ஊடாகத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், அவற்றைச் சரிபார்க்கவும். இதற்கிடையில், யாரேனும் அந்நாட்டிற்குச் சுற்றுலாப் பயணமாகச் சென்றிருந்தால், விமானச் சேவை மற்றும் தமது பயண முகவர்களுடன் 
தொடர்பைப் பேணுவும். 
உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் அதிகாரபூர்வ செய்திகளை மட்டுமே நம்புமாறும், இராச்சியத்தில் உள்ள தமது நாட்டுப் பிரஜைகள் மற்றும் அங்கு வருபவர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான 
அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html