siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 8 டிசம்பர், 2024

நாட்டில் திக்வெஹெர பிரதேசத்தில் பணத் தகராறு :தாக்கப்பட்டு ஒருவர் கொ லை

நாட்டில் குருணாகல், வாரியப்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திக்வெஹெர பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாரியப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் கடந்த 05-12-2024.வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர் வாரியப்பொல , தெமட்டலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடையவர் ஆவார்.
சம்பவத்தன்று, கொலை செய்யப்பட்டவர் இளைஞன் ஒருவருடன் மதுபானம் அருந்திக்கொண்டிருந்துள்ள நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இருவருக்கும் இடையில் தகராறு 
ஏற்பட்டுள்ளது.
தகராறு எல்லை மீறியதில் சந்தேக நபரான இளைஞன் கொலை செய்யப்பட்டவரை பொல்லால் தாக்கி 
கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து, சந்தேக நபரான 30 வயதுடைய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது 





 

சனி, 7 டிசம்பர், 2024

மரண அறிவித்தல் அமரர் கனகரத்தினம் குலநாயகம்

 துயர் பகிர்வு-தோற்றம் 00.மறைவு-07-12-2024.
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் மட்டுவிலை வதிவிடமாகவும் கொண்ட அமரர் கனகரத்தினம் குலநாயகம் .07-12.2024.சனிக்கிழமை இன்று
 இறைவனடி சேர்ந்தார்
இவர் கனகரத்தினம் மகேஸ்வரியின் அன்பு மகனும் அன்னார்  காலம்சென்ற சபாநாயகத்தின் மற்றும் ஜெயக்குமாரியின் அன்பு சகோதரனும் ஆவார். அன்னாரின் இறுதிச்சடங்கு .08-12-2024.ஞாயிற்ருக்கிழமை  அன்று மட்டுவிலில்  நடைபெறும்
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
வீ ட்டு முகவரி-
 மட்டுவில்
தகவல்
குடும்பத்தினர்..


வெள்ளி, 6 டிசம்பர், 2024

நாட்டில் தர்மபுரம் நாதன் திட்டம் பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு

நாட்டில் கிளிநொச்சி தர்மபுரம் நாதன் திட்டம் பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மகன் மீட்டதாக ஆரம்ப விசரணையில் தெரிய வந்துள்ளது.உயிரிழந்தவரின் 14 வயதுடைய மகன் அதிக மது போதையில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.¨
சம்பவத்துடன் தொடர்புடைய 14 வயதுடைய சிறுவன் விசாரணைக்காக தர்மபுரம் பொலிஸாரால் அழைத்து 
செல்லப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற மரண விசாரணை அதிகாரி விசாரணை மேற்கொண்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விசாரணையில் தெரியவந்த நிலையில், முழுமையான விசாரணைக்காக
 பரிந்துரைத்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மாட்ட நீதவானிற்கு அறிக்கை சமர்ப்பித்து விசாரணை செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த உயிரிழந்த தாய்க்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. பொலிஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட 14 வயதுடைய சிறுவனும் அதிக மது 
போதையில் இருந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மரணத்தில் சந்தேகம் நிலவுகின்ற நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது










 

வியாழன், 5 டிசம்பர், 2024

நாட்டில் கொழும்பில் இருந்து பதுளை சென்ற ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

நாட்டில் தெமோதர புகையிரத நிலையத்திற்கு கீழே வளைவில் நபர் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார். 
 குறித்த நபர் நேற்று (04) கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே  மோதுண்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது. 
தெமோதர சவுதாம தோட்டத்தில் வசிக்கும் 36 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
என்பது  குறிப்பிடத்தக்கது




 

புதன், 4 டிசம்பர், 2024

நாட்டில் எட்டு பாடசாலை மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில்

நாட்டில் கேகாலை, மாவனெல்லை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 08 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று
 மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் 03-12-2024. செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
நான்காம் வகுப்பில் கல்வி கற்கும் ஓன்பது வயதுடைய பாடசாலை மாணவர்களே வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள
 பாடசாலை மாணவர்கள் நேற்றைய தினம் காலை 10 மணியளவில் பாடசாலைக்கு அருகில் உள்ள மரமொன்றிலிருந்த காய்களை
 உட்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, இந்த பாடசாலை மாணவர்கள் வாந்திபேதி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டு திடீர் சுகயீனமுற்றுள்ள நிலையில் 
மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் உடல் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.என்பது குறிப்பிடத்தக்கது.


செவ்வாய், 3 டிசம்பர், 2024

தொண்டைமனாற்றில் மூன்று நாள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில் மூன்று நாள் நீடித்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 இவ்வாறு உயிரிழந்தவர் மண்டபக்காடு, கெருடாவில் தெற்கு, தொண்டைமனாறைச் சேர்ந்த கனகன் சண்முகம் (வயது- 62) என்பவராவார்.
 காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் .02-12-2024. திங்கட்கிழமை அன்று அவரால் நடக்க முடியாத நிலையில் காலை பருத்தித்துறை 
ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 இம் மரணம் தொடர்பில் வல்வெட்டித்துறை  
பதில் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டார் சாட்சிகளை வல்வெட்டித்துறை பொலிசார் நெறிப்படுத்திய நிலையில் சடலம் உடற் கூற்று பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.






 

திங்கள், 2 டிசம்பர், 2024

நாட்டில் வெள்ள அனர்த்தத்தின் பின்பு எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து

நாட்டில் வெள்ள அனர்த்தத்தின் பின்பு எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து மக்கள் விழிப்பாக செயற்படுமாறு கிளிநொச்சி பிராந்திய 
சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரித்தார்.
 கிளிநொச்சியில் நடந்த ஊடக சந்திப்பிலேயே 
குறித்த விடயத்தை தெரிவித்தார்.தொடர்ந்து 
தெரிவிக்கையில் அண்மை நாட்களாக இடம்பெற்ற வெள்ள
 அனர்த்தத்தினால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தனர்
.இவர்கள் வெள்ள நீரில் பயணம் செய்திருந்தனர்.வெள்ளநீர் மூலம் எலியின் சிறுநீர் மூலம் பக்ரீறியா தொற்று ஏற்பட்டு குறித்த
 நோய் ஏற்படுகிறது. 
எனவே கடுமையான காய்ச்சல் மற்றும் கால் நோ, கண்சிவப்பு போன்ற அறிகுறி காணப்பட்டால் மருத்துவ உதவியைப்பெற்று எலிக்காய்சலிருந்து பாதுகாக்குமாறு தெரிவித்திருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது .




ஞாயிறு, 1 டிசம்பர், 2024

நாட்டில் சில எரிபொருட்களுக்கான விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

நாட்டில் லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 இதன்படி, சிபெட்கோ எரிபொருள் விலைக்கு ஏற்ப லங்கா ஐஓசியின் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என்றும் நிறுவனம்
 தெரிவித்துள்ளது. 
 நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைக்க இலங்கை பெற்றோலிய
 சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் நடவடிக்கை 
எடுத்துள்ளது. 
இதன்படிஒக்டேன் 92 பெற்றோலின் புதிய விலை ரூபா 02 குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 309 ரூபாவாகும். லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 286 ரூபாவாகும். 
 இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 188 ரூபாவாகும். மற்ற எரிபொருள் விலைகள் திருத்தப்படவில்லை 
மற்றும் அந்த விலைகள் முந்தைய விலையில் விற்கப்படும்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு நிகராக சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையை 
திருத்தியுள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 பெற்றோலின் புதிய விலை ரூபா 02 குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 309 ரூபாவாகும். லங்கா ஒயிட் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 286 ரூபாவாகும். 
 இலங்கை மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 188 ரூபாவாகும். மற்ற எரிபொருட்களின் விலைகள் திருத்தப்படவில்லை மற்றும் அந்த விலைகள் முந்தைய விலையில் விற்கப்படும்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>