siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 1 ஏப்ரல், 2026

ரஷ்ய விமானம் கிரிமியாவில் விபத்துக்குள்ளானது: 29 பேர் பலி

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியா பகுதியில் ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் , அதில் பயணித்த 29 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் நேற்றுப் புதன்கிழமை 
தெரிவித்தன.
சம்பவ இடத்திலிருந்து கிடைத்த தகவல்களின்படி, விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களும் 23 பயணிகளும் உயிரிழந்தனர் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி டாஸ் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் புலனாய்வுக் குழுவும் இந்த விபத்தை உறுதிப்படுத்தியது. ஆனால் உயிரிழப்புகள் குறித்த விவரங்களை
 வழங்கவில்லை.
2026 மார்ச் 31 அன்று, கிரிமியா குடியரசின் பக்சிசரே மாவட்டத்தில் உள்ள குய்பிஷேவோ கிராமத்திற்கு அருகே, பறந்துகொண்டிருந்த ஏஎன்-26 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் 7 விமானப் பணியாளர்களும் 23 பயணிகளும் இருந்தனர் என்று அக்குழு 
தெரிவித்துள்ளது.
விமானப் பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாக குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html