siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 30 ஏப்ரல், 2026

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் சின்னத்தம்பி அசுவதி 30.04.26

யாழ் மீசாலையைப்  பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகக்கொண்ட  
  (கடந்த .11-05-2025-அன்று சிவபதமடைந்த) அமரர்  சின்னத்தம்பி அசுவதி
  அவர்களின்முதலாம் ஆண்டு நினைவஞ்சலி..திதி -30-04-2026. வியாழக்கிழமை அன்று 
 . அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அப்பு மனைவியும் திருமதி. தங்கேஸ்(இலங்கை )
.மற்றும்காலஞ்சென்ற சிவானந்தம் (,சிவா.) மற்றும் திரு .அருளானந்தம் (சுவிஸ் )செல்வா  (சுவிஸ் ) ஆகியோரின் அன்புத்தாயாருமாவார்  
-------------
நீங்காத நினைவுகள்>>>
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் 
உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
தகவல் .
குடும்பத்தினர் 

https://navakkiri.blogspot.com/2022/04/1-090422.html



புதன், 29 ஏப்ரல், 2026

நாட்டில் ஹட்டன் - டிக்கோயா வீதியில் தனியார் பேருந்து விபத்து: பலர் காயம்

நாட்டில் டயகமவில் இருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், 20 பேர் 
காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து ஹட்டன் - போடைஸ் பிரதான வீதியில் டிக்கோயா பட்டல்கல தோட்டப் பகுதியில் இன்று (29) பிற்பகல் 3:00 மணியளவில்
 இடம்பெற்றுள்ளது.
பயணித்துக் கொண்டிருந்த பேருந்து, எதிரே வந்த மற்றொரு பேருந்துக்கு இடமளிக்க முற்பட்ட போதே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானது.
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 35 பயணிகள் இருந்துள்ளனர். இதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டிக்கோயா மருத்துவமனையின் மருத்தவர் ஒருவர் 
தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரும் அடங்குவர் என காவல்துறையினர்
 குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.   என்பதும்  குறிப்பிடத்தக்கது                                                                                                                                              

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 28 ஏப்ரல், 2026

பானி பூரி இந்தியாவில் சாப்பிட்ட ஆறு வயது சிறுவன் மரணம்

.இந்தியாவில்  ஜார்க்கண்ட் மாநிலம், கிரிடிஹ் பகுதியில் வீதியோர கடை ஒன்றில் பானி பூரி சாப்பிட்ட 6 வயது சிறுவன்
 உயிரிழந்துள்ளார்.
மேலும் பானி பூரி சாப்பிட்ட குழந்தைகள் உட்பட 18 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனைவருக்கும் கடுமையான காய்ச்சல், வயிற்று 
வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள்
 தெரிவித்துள்ளன.
முஃபசில் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பஜ்டோ கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி
 வருகின்றனர்.
சிறுவன் உயிரிழப்பிற்கு உணவு விஷம் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பானி பூரி விற்பனையாளர் தலைமறைவானதையடுத்து அவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 27 ஏப்ரல், 2026

நாட்டில் கிளிநொச்சியில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

.நாட்டில் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் 26-04-2026.அன்று பிற்பகல் மூவர் நீராடிய நிலையில் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில்
 அவரை தேடும் பணி நேற்று மாலை முதல் இடம்பெற்ற நிலையில் இன்று காலை 8.00 மணியளவில் இரணைமடு நன்னீர் மீனவர்களினால்
 மீட்கப்பட்டது.
குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தைச்சேர்ந்த 32வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இங்கிலாந்தில் இரு குழந்தைகள் மரணம் - ஒருவர் கைது

பிரித்தானியாவின் வோல்வர்ஹாம்டனில் உள்ள குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 02 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பத்தில் குழந்தைகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக
 அறிவிக்கப்பட்டது.
இரண்டு குழந்தைகளின் இறப்பிற்குக் காரணமாக இருந்ததாக அல்லது அதற்கு அனுமதித்ததாகச் சந்தேகத்தின் பேரில், 30 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தீ விபத்துக்கான சரியான சூழ்நிலைகளைக் கண்டறிய, மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறையும் தீயணைப்புத் துறையும் இணைந்து ஒரு கூட்டு விசாரணையை நடத்தி வருகின்றன.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 25 ஏப்ரல், 2026

நாட்டில் கிளிநொச்சியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள மாணவியின் உயிரிழப்பு

நாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் தரம்-11 இல் கல்வி கற்றுவரும் மாணவியான அக்சயா தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் 
ஏற்படுத்தியுள்ளது. 
இந்தச் சம்பவம்.24.04.2026  வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. சிரித்த முகத்துடன் எப்போதும் நண்பர்களுடன் கலகலப்பாகப் பழகும் குணம் கொண்ட அக்சயா கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தயாராகி வந்த நிலையில் திடீரென தவறான முடிவெடுத்து உயிரிழந்தமை குடும்பத்தினர், நண்பர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில்
 ஆழ்த்தியுள்ளது.
தயவு செய்து நீங்கள் எடுக்கும் முடிவு உங்களை சுற்றி உள்ள உறவுகளை எந்தளவு பாதிக்கும் என்று கொஞ்சமாவது யோசிச்சி பாருங்கள் உங்களுக்காக அவர்கள் எவ்வளவு எல்லாம்,கஷ்டபட்டு 
இருப்பார்கள். 
என்ன பிரச்சனையாக இருந்தாலும் குடும்பத்திடம் மனசு விட்டு பேசுங்கள் அவர்கள் உங்கள் உறவுகள் தானே அவர்கள் பார்த்து கொள்வார்கள் பெற்றோர்களே நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு 
நம்பிக்கையை கொடுங்கள். 
அப்போது தான் அவர்களும் உங்களிடம் வெளிப்படையாக இருப்பார்கள் . எந்தவொரு பிரச்சினைகளுக்கும் தற்கொலை தீர்வாகாது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 24 ஏப்ரல், 2026

இரண்டு பேருந்துகள் பென்டகன் அருகே மோதி விபத்து - 23 பேர் காயம்

இரண்டு பேருந்துகள்  .பென்டகன் பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பாதுகாப்புத் துறைப் பணியாளர்கள் உட்பட 23 பேர் 
காயமடைந்துள்ளனர்.
ஓம்னி ரைடு மற்றும் ஃபேர்ஃபாக்ஸ் கனெக்டர் போக்குவரத்துப் பேருந்துகள் சற்று முன்னதாக மோதிக்கொண்டன.
காயமடைந்தவர்களில் 18 பேரை மேலதிக மருத்துவப் பரிசோதனைக்காக அவசரப் பணியாளர்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்குக் 
கொண்டு சென்றனர்.
ஐவருக்குச் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. காயமடைந்த 23 பயணிகளில் பத்து பேர் பாதுகாப்புத் துறையைச் 
சேர்ந்தவர்கள்.
இந்த விபத்து காரணமாகப் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் பல மணிநேரம் என்பதும்  குறிப்பிடத்தக்கது.
.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வியாழன், 23 ஏப்ரல், 2026

நாட்டில் யாழ் நோக்கிச் சென்ற ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

நாட்டில் பெண் உயிரிழப்பு, முச்சக்கரவண்டிச் சாரதிக்குப் படுகாயம்! வவுனியா தாண்டிக்குளம் திருநாவற்குளம் மூன்றாம் ஒழுங்கைக்கு எதிர்ப் பக்கமாக அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்
 கடவையில் இன்று 

வியாழக்கிழமை (23-04-2026) முற்பகல்- 10.15 மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் முச்சக்கர வண்டியொன்று மோதுண்டதில் அதில் பயணித்த பெண்ணொருவர்
 உயிரிழந்துள்ளார். 
முச்சக்கர வண்டியின் சாரதி உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் வவுனியா மாவட்டப் பொதுவைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

                                                                                                                                                                                                                                                                                                                                

புதன், 22 ஏப்ரல், 2026

யாழ் .உரும்பிராயில் கோர விபத்து- தந்தையும் மகனும் பலி

யாழ் உரும்பிராய் பகுதியில்.22-04-2026. இன்று  அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளுடன் கனரக வாகனம் மோதி, இந்த விபத்து இடம் பெற்றுள்ளது
. விபத்தில், மோட்டார் 
சைக்கிளில் பயணித்த 65 வயதான தந்தையும் 29 வயதான மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



செவ்வாய், 21 ஏப்ரல், 2026

மரண அறிவித்தல் அமரர் இராசரத்தினம் வசந்தகுமார் (அப்பன் )

துயர் பகிர்வு-தோற்றம் 28-05-1969--மறைவு-20-04-2024.
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் லண்டனை  
வசிப்பிடமாகக் கொண்ட 
 அமரர் இராசரத்தினம்  வசந்தகுமார் (அப்பன் ) அவர்கள் 
  லண்டனில் 20-04-2026.,திங்கள்க்கிழமை அன்று
 காலமானார்  அன்னார்  காலம்சென்ற  இராசரத்தினம்,இலட்சுமி (பரிமளம்)  தம்பதியினரின் அன்பு மகனும்
 திருமதி சசி. (லண்டன்  )அவர்களின் அன்புக்கணவரும் 
ஆகாஷ்.(லண்டன்  ) அபினயா(லண்டன்  )ஆகியோரின் பாசமிகு தந்தையும்
 மலர்வதான ( வதான ) சுகந்தி   ஆகியோரின்  அன்பு ஆகியோரின் அன்புச்சகோதனும் 
 சரிதா  கீர்த்தன் கீர்த்தி லவன்சி  கிருசான் ஆகியோரின்அன்புமாமனும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியை
06-05-2026-புதன்கிழமை அன்று லண்டலில் நடைபெறும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
இலங்கை  வீட்டு முகவரி: 
(எல்லாளன் வீதி ) 
நவற்கிரி .புத்தூர்
https://navakkiri.blogspot.com/2022/04/3-220422.html

திங்கள், 20 ஏப்ரல், 2026

நாட்டில் சிறுப்பிட்டி பகுதியில் தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்த பெண்

யாழில், சிறுப்பிட்டி யில் தேநீரை குடித்துவிட்டு தான் செய்த சிற்றுண்டியை அவரது கணவர் சாப்பிடவில்லை என்ற காரணத்தாலும், கணவர் தாக்கியதாலும் மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.அவரது கணவர் சனிக்கிழமை (18) வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது அவரது மனைவி தேநீரும் ரோல்ஸூம் கொடுத்துள்ளார்.
இதன்போது தேநீரை குடித்துவிட்டு ரோல்ஸினை சாப்பிட மறுத்துள்ளார். இந்நிலையில் அந்த ரோல்ஸினை சாப்பிடுமாறு கணவரிடம் வற்புறுத்தியுள்ளார்.
இதன்போது கணவர் அவரை தாக்கிவிட்டு வெளியே சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்துள்ளார்.
இதன்போது குறித்த பெண் ஏற்கனவே தனது உடலில் பெற்றோலினை ஊற்றிவிட்டு இருந்துள்ளார். கணவன் வந்ததும் தனக்கு தானே தீமூட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இந்நிலையில் அவரை மீட்டு கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (19) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் நீராடிய போது சுழியில் அகப்பட்டு மரணம்

நாட்டில் பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது

. இவர் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர் என்பதும், ஏனைய மாணவர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

மதியாமடு பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்து இளம் குடும்பஸ்தர் பலி

நாட்டில் வவுனியா வடக்கு, மதியாமடு பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற கோர விபத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 நேற்றைய தினம் குறித்த நபர் தமது அத்தியாவசியத் தேவை ஒன்றின் நிமித்தம் உழவியந்திரத்தைச் செலுத்திச் சென்றுள்ளார். இதன்போது, எதிர்பாராத விதமாக உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து திடீரெனத் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது உழவு இயந்திரத்தைச் செலுத்திச் சென்ற சாரதி பலத்த
 காயங்களுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 18 ஏப்ரல், 2026

நாட்டில் கடந்த 12 நாட்களில் நீரில் மூழ்கி 26 பேர் பலி; மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

இலங்கையில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் விடுமுறை காலப்பகுதியை அடுத்து, நீர்நிலைகளில் நீராடச் சென்றவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் சடுதியாக 
அதிகரித்துள்ளன.
கடந்த 12ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 26 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினமும் (17) இரு வேறு இடங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. மிஹிந்தலை - மரதன்குளம் குளத்தில் நீராடச் சென்ற 55 வயதுடைய நபர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக
 உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் 11 வயதுடைய மகனும், 12 வயதுடைய மற்றுமொரு சிறுவனும் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் 
மூழ்கியுள்ளனர்.
அவர்களைக் காப்பாற்றுவதற்காக நீரில் குதித்த தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எனினும், இரு சிறுவர்களும் எவ்வித பாதிப்புமின்றி பொதுமக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தெஹியோவிட்ட - ஹிங்குரலகந்த பகுதியில் சீதாவக்க ஆற்றில் நீராடச் சென்ற 17 வயதுடைய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி 
உயிரிழந்துள்ளார்.
தனது உறவினர்களுடன் தெஹியோவிட்ட பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த போது குறித்த இளைஞர் திடீரென நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தொடர்ச்சியாக பதிவாகும் இவ்வாறான மரணங்களை அடுத்து, நீர்நிலைகளில் நீராடும் போது பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 17 ஏப்ரல், 2026

நாட்டில் முன்நூறு அடி பள்ளத்தில் பாய்ந்த சிற்றூந்து : ஒருவர் பலி

நாட்டில்  பாலங்கொடையிலிருந்து கண்டிக்குச் சென்று கொண்டிருந்த சிற்றூந்து 300 அடி உயரமான செங்குத்தான பாறையிலிருந்து கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிற்றூந்து விபத்தில், மேலும் இரண்டு பெண்கள் படுகாயமடைந்து டிக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 16 ஏப்ரல், 2026

நாட்டில் ஆறு . நாட்களில் 44 பேர் விபத்துகளில் பலி

நாட்டில் ஏப்ரல் 10 முதல் 15 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான 42 வீதி விபத்துக்களில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 10 முதல் 15 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான 42 வீதி விபத்துக்களில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சித்திரைப் புத்தாண்டு தினங்களான ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று நாட்களில் மாத்திரம் 19 விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த விபத்துக்களில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.
வாகன வகைகளின் அடிப்படையில் விபத்துக்களை பகுப்பாய்வு செய்ததில், அதிகபட்சமாக 16 மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் 4 முச்சக்கரவண்டிகள், 4 வேன்கள், 2 கார்கள், 2 கெப் வாகனங்கள், 2 துவிச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் என்பன இதில் உள்ளடங்குவதாக அவர் மேலும்
 தெரிவித்தார்.
அதேபோல், 2025 ஆம் ஆண்டின் புத்தாண்டு தினங்களில் 25 விபத்துக்களும் 26 மரணங்களும் பதிவாகியிருந்த நிலையில், இவ்வருடம் அந்த எண்ணிக்கை 19 ஆகக் குறைவடைந்துள்ளதாகவும் அவர்
 சுட்டிக்காட்டினார்.
இந்த விபத்துக்களுக்கு மதுபோதையில் வாகனம் செலுத்தியமையே பிரதான காரணம் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர மேலும் தெரிவித்துள்ளார்..என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 15 ஏப்ரல், 2026

இலங்கை மகாவலி கங்கையில் மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயம்

நாட்டில் திருகோணமலை சோமாவதி மகாவலி கங்கையை குறுக்கறுக்கும் ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேரி
ல் மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, காணமல் போயுள்ளனர். சேருநுவர காவல்துறையினர் சூரியன் செய்தி பிரிவுக்கு, இதனை 
உறுதிப்படுத்தினர்.
புத்தாண்டு தினமான நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை உட்பட 3 பேர் மகாவலி கங்கை குறுக்காகச் செல்லும் ஆற்றில் 
நீராடியுள்ளனர்.
இதன்போது, மூன்று பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக சேருவில காவல்துறையின் பொறுப்பதிகாரி சூரியன் செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



செவ்வாய், 14 ஏப்ரல், 2026

நாட்டில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை

நாட்டில் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இன்று 14-04.2028 -பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு இரவு 11.00 மணிவரையில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிற்பகல் 1.00 மணிக்கு மேல்,சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை, 
அனுராதபுரம், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் உள்ள சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழையால் 
தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கும் அபாயத்தைக் குறைக்க மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 13 ஏப்ரல், 2026

யாழ் புத்தூர் வாள்வெட்டுச் சம்பவம்: சிறுப்பிட்டி வயல் பகுதியில் நபர்களை மடக்கிப் பிடித்த மக்கள்

யாழ் புத்தூரில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மர்ம நபர்களை, சிறுப்பிட்டிப் பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் குறித்த விபரங்கள்:
புத்தூர் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பியோடிய கும்பலைச் சேர்ந்த சில நபர்கள், சிறுப்பிட்டி வயல் பகுதியில் பதுங்கியிருப்பதாக அப்பகுதி மக்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, விழிப்புடன் செயற்பட்ட கிராம மக்கள் அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்தனர். இதன்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்களைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.
பொலிஸாரிடம் ஒப்படைப்பு:
பிடிபட்ட நபர்களின் கைகளைக் கட்டிய பொதுமக்கள், உடனடியாக அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸாரிடம் சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
தற்போதைய நிலை:
பிடிபட்டவர்களிடம் இருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஆயுதங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர
குறித்த நபர்கள் வாள்வெட்டுச் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர்களா அல்லது வேறு ஏதும் பின்னணி கொண்டவர்களா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பதுங்கியிருந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்களைத் துணிச்சலுடன் மடக்கிப் பிடித்த சிறுப்பிட்டி மக்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

நாட்டில் தாந்தாமலை பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி

நாட்டில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தாந்தாமலை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் 
என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது பயிர்ச்செய்கைக்கு 
நீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரைப் பொருத்த
 முயன்றபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

சனி, 11 ஏப்ரல், 2026

கார் ஒன்று மினிபஸ் மீது மோதியதில் இங்கிலாந்தில் இரண்டு இளைஞர்கள் மரணம்

பிரித்தானியாவில், கார் ஒன்று சாலைப் பாலத்திலிருந்து விலகி, கீழே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு மினிபஸ் மீது மோதியதில், இரண்டு பதின்ம வயது இளைஞர்கள் 
உயிரிழந்தனர்.
லெய்செஸ்டர்ஷையரில் உள்ள லட்டர்வொர்த்தை நோக்கி கில்மோர்டன் லேனில் சென்றுகொண்டிருந்த ஒரு நீல நிற கார், சாலைப் பாலத்திலிருந்து எம்1 நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்தக் கார், எம்1 நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு வெள்ளை நிற ஃபியட் டுகாடோ மீதும் மோதியதாக லெய்செஸ்டர்ஷையர் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர்
 குறிப்பிட்டுள்ளார்.
நீல நிற காரில் இருந்த பதின்ம வயது இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
மினிபஸ்ஸில் இருந்த ஓட்டுநர் மற்றும் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர், உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வெள்ளி, 10 ஏப்ரல், 2026

நாட்டில் பட்டானிச்சூர் பகுதியில் லொறி மோதி சைக்கிளில் சென்றவர் பலி

 

நாட்டில் வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதி வழியாக துவிச்சக்கரவண்டி ஒன்று பயணித்த நிலையில் பட்டானிச்சூர் பகுதியில் அதன் ஓட்டுநர் பாதையின் மறுபக்கத்திற்கு திரும்புவதற்கு முற்பட்டுள்ளார். இதன்போது அதே திசையில் பின்னால் சென்ற லொறி ஒன்று துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது
விபத்து இடம்பெற்ற உடனேயே, லொறியின் சாரதி வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகத் 
தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார். அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு, உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார், விபத்து இடம்பெற்ற விதம் குறித்து முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்து
 வருகின்றனர்.
அத்துடன் தப்பியோடிய லொறியின் சாரதியைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 9 ஏப்ரல், 2026

மரண அறிவித்தல் அமரர் நாகமுத்து குமாரசிங்கம்

 துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-09-04-2026
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட 
அமரர் நாகமுத்து குமாரசிங்கம் 
அவர்கள் 09-04-2026.வியாழக்கிழமை .இன்று  நவற்கிரியில்  காலமானார். அன்னார்  காலம்சென்ற
 நாகமுத்து தம்பதியினரின் அன்புமகனும் திருமதி  ராசு (கனடா )அவர்களின் அன்புக்கணவரும் 
திருமதி சுபா (சுவிஸ் )திருமதி சொக்கி (கனடா )திரு செட்டி(கனடா )
திரு  கண்ணன் (கனடா )
ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவர் அன்னாரின்  நல்லடக்க விபரம்  
இந்த இணையத்தில்  இணைக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல்
குடும்பத்தினர்.

நாடில் மின்னல் தாக்கியதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில்  நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சோகமான சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் தனது தாய் மற்றும் தந்தை வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது பெய்த கடும் மழை காரணமாக, அவர்களுக்குக் குடை ஒன்றைக் கொடுப்பதற்காக சென்ற போதே இந்த விபரீதம்
 ஏற்பட்டுள்ளது.
23 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது
மக்களே அவதானமாக இருங்கள் மின்னல் மழை போன்ற நேரங்களில் உங்கள் பாதுகாப்பினை முதலில் பார்த்து கொள்ளுங்கள்
தொலைபேசிகளை பாவிப்பதை குறைத்து கொள்ளுங்கள் மின்சாரங்களை கவனமாக பாவிங்கள் .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 8 ஏப்ரல், 2026

திருகோணமலையில் திடீரென தீக்கிரையான ரயில் இயந்திரம்

திருகோணமலை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இயந்திரம் இன்று (08) மாலை 3.00 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது. தூரப் பிரதேசங்களில் இருந்து நிலையத்திற்கு வரும் ரயில்களை, நிலைய எல்லைக்குள் இழுத்துச் சென்று நிறுத்தும் பணிகளுக்காக இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
திருகோணமலை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இயந்திரம் இன்று (08) மாலை 3.00 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது. தூரப் பிரதேசங்களில் இருந்து நிலையத்திற்கு வரும் ரயில்களை, நிலைய எல்லைக்குள் இழுத்துச் சென்று நிறுத்தும் பணிகளுக்காக இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இன்று மதியம் கொழும்பிலிருந்து வந்த ரயிலின் பெட்டிகளை இடமாற்றும் பணியில் குறித்த இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதே, திடீரென இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து குறித்து கருத்து தெரிவித்த பிரதான புகையிரத நிலைய அதிபர் எஸ். சர்வேஸ்வரன், “தீப்பிடித்தமைக்கான காரணம் குறித்து தற்போது உறுதியாகக் கூற முடியாதுள்ளது. எனினும், தீயணைப்புப் படையினர் இது குறித்து விசாரணை நடத்தி விரைவில் தகவல்களை வழங்குவார்கள்,” எனத் தெரிவித்தார்.
இந்தத் தீ விபத்தினால் ரயில் இயந்திரம் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html