
குருநாகல் மாவத்தகம பகுதியிலுள்ள அம்மன் கோவிலில் துப்பாக்கியுடன் சென்ற குழுவினரால் ஆலயத்திலுள்ள பணம் உள்ளிட்ட தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
வெள்ளை நிற கார் ஒன்றில் நேற்று மாலை 3.45 அளவில் வருகை தந்த சிலரே ஆலயத்தில் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
மாவத்தகம பரந்தன வீதியிலுள்ள அம்மன் கோவிலிலே பெறுமதியான தங்க நகைகளும் பல இலட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
எனினும் கொள்ளையிடப்பட்டுள்ள...