கல்முனை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ்
உத்தியோகஸ்தர் பெண்ணொருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்
நேற்று மாலை கல்முனை சிறீ முருகன் கோயிலில் பொலிஸ் உத்தியோகஸ்தர், பெண்ணொருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அதனை அறிந்த பொதுமக்கள் அவ்விடத்திற்கு விரைந்து இருவரையும் நேரடியாக பிடித்துள்ளனர். அதன்பின்னர்
பொதுமக்களிடம் தாங்கள் இருவரும் காதலர்கள் என தெரிவித்துள்ளனர்.அங்கு வந்த பொலிஸார் அங்கு நடைபெற்ற சம்பவத்தை விசாரிக்காமல் ஆலய பிரதம குருவையும்
இரண்டு இளைஞர்களையும் வலாத்காரமாக பிடித்து பொலிஸ் வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர்
இந்த சம்பவத்தால் கல்முனை மக்கள் பொலிஸ் நிலையம் முன்பு திரண்டு சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யும்படியும் அப்பாவிகளை விடுமாறு கோசம் எழுப்பினர்அப்பகுதியில் கட்டுக்கோப்பிற்கு கொண்டுவரும் பொருட்டு கைது செய்தவர்களை விடுவித்துள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக