வேற்று கிரகவாசிகள் ஆயிரகணக்கான ஆண்டுகளாக நமது கிரகத்திற்கு வருவதாக கனடா நாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை மந்திரி பால் ஹெல்யர் தெரிவித்துள்ளார்.
வேற்றுகிரக வாசிகள் தொடர்பான சந்தேகங்கள் நீடித்து வரும் நிலையில், இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் என சேத் ஷோஸ்டாக் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
மேலும், வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது என்றும், ஆனால் நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம் தான் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் கனடா நாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை மந்திரி பால் ஹெல்யர் கூறுகையில், உலக அரசுகள் வேற்று கிரகவாசிகளை ரகசிய மறைவிடத்தில் வைத்து கண்காணித்து வருகிறார்கள்.
வேற்று கிரகவாசிகளின் வாழ்க்கையை மனித இனத்திடம் இருந்து மறைக்கிறார்கள்.
குறைந்தது 4 வகையான வேற்று கிரகவாசிகள் மற்றும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் பூமிக்கு வந்து இருக்கலாம்.
பல செய்தி ஊடகங்கள் இந்த விடயங்களை தொடுவது இல்லை. சிலர் வெகுஜன பார்வை கிடைக்கும் என நம்பும் செய்திகளையே தேடுகிறார்கள்.
மிஸ்டர் ஜனாதிபதி, மிஸ்டர் பிரதமர் எங்களுக்கு உண்மை வேண்டும். நமக்கு இப்போது அது தேவை ஏனெனில் அது நமது வாழ்க்கையை பாதிக்கும் என்று கூறியுள்ளார்.
வேடிக்கையான இந்த கூற்றுகள் குறித்து ஹெல்யர் கேள்வி எழுப்புவது இது முதன்முறையல்ல. இவர் 2005 ஆம் ஆண்டு முதலே வேற்று கிரகவாசிகள் குறித்து பேச ஆரம்பித்தார்.
பால் ஹெல்யர் (91), கனடா நாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை மந்திரியாக 1963 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக