யாழ். மாவட்டத்திலே கடந்த 2009 ஆம் ஆண்டினை விட 2015 ஆம் ஆண்டு இம்முறை அதிகமான வருமானங்கள் கொண்ட விவசாய பயிராக கோவா பயிர்ச்செய்கை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து 2010 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை 495.5 ஹெக்டயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட இப்பயிர்ச்செய்கை 150.03 மெற்றிக்தொன் உற்பத்திகள் யாழ்.மாவட்டத்தில் கிடைத்துள்ளதாக யாழ.; மாவட்ட விவசாய புள்ளிவிபரத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அவற்றின் அடிப்படையில் படிப்படியாக அரசாங்கத்தினால் விவசாயிகளுக்கான சலுகை அடிப்படையிலான திட்டங்கள்,மற்றும் மானியத் திட்டங்கள் என்பன முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கோப்பாய்,அச்செழு, புன்னாலைக்கட்டுவான், சுன்னாகம், மருதனார் மடம்,கரவெட்டி, உரும்பிராய், ஊரெழு,நிலாவரை ஆகிய பகுதிகளில் தற்போது சிறு ஏக்கர்களாக 1654.3 ஹெக்டயர் நிலப்பரப்பில் இவ் கோவா உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக விவசாய புள்ளிவிபரத்தரவுகள் குறிப்பிடுகின்றன.அவற்றில் தற்போது அறுவடைகளும் மும்முரமாக இடம்பெற்று வருவதுடன் அவ் உற்பத்திகளை உள்ளுர்,மற்றும் வெளியூர் சந்தைகளுக்கும் எற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
கோவா உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யும் வியாபாரிகள் ஒரு கிலோ கோவா 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகின்றன. என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.அதன் அடிப்படையில் யாழ். மாவட்டத்தின் உள்ளுர் சந்தையின் நிலவரத்தின்படி ஒரு கிலோ கோவா 60 ரூபாவிலிருந்து 70 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக